TN Online TestSamacheer Kalvi practice

10th Standard Social Science Question Paper March 2024

Paper code 7736 100 marks 180 minutes

The complete March 2024 public exam paper exactly as printed: every question in Tamil and English. Download the PDF, or take Part I as a free online test.

சமூக அறிவியல் / Social ScienceMarch 2024 · March 2024

பகுதி – I / PART – I

குறிப்பு : (i) அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும். (ii) கொடுக்கப்பட்ட நான்கு மாற்று விடைகளில் மிகவும் ஏற்புடைய விடையினை தேர்ந்தெடுத்துக் குறியீட்டுடன் விடையினையும் சேர்த்து எழுதவும்.
Note : (i) Answer all the questions. (ii) Choose the most appropriate answer from the given four alternatives and write the option code and the corresponding answer.
1.
ஜெர்மனியோடு மியூனிச் உடன்படிக்கையில் கையெழுத்திட்ட பிரிட்டன் பிரதமர் யார் ?
(அ) சேம்பர்லின்
(ஆ) வின்ஸ்டன் சர்ச்சில்
(இ) லாயிட் ஜார்ஜ்
(ஈ) ஸ்டேன்லி பால்டுவின்
Which Prime Minister of Britain signed the Munich Pact with Germany ?
(a) Chamberlain
(b) Winston Churchill
(c) Lloyd George
(d) Stanley Baldwin
Show answer ▾ (அ) / (a) Chamberlain · Solved one-mark questions →
1 mark
2.
மார்ன் போர் எதற்காக நினைவு கூறப்படுகிறது ?
(அ) ஆகாயப் போர்முறை
(ஆ) பதுங்குக் குழிப் போர்முறை
(இ) நீர்மூழ்கிக் கப்பல் போர்முறை
(ஈ) கடற்படைப் போர்முறை
What is the Battle of Marne remembered for ?
(a) air warfare
(b) trench warfare
(c) submarine warfare
(d) ship warfare
Show answer ▾ (ஆ) / (b) trench warfare · Solved one-mark questions →
1 mark
3.
விதவை மறுமணச் சங்கத்தை ஏற்படுத்தியவர் ________.
(அ) மகாதேவ் கோவிந்த் ரானடே
(ஆ) தேவேந்திரநாத் தாகூர்
(இ) ஜோதிபா புலே
(ஈ) அய்யன்காளி
________ was the founder of Widow Remarriage Association.
(a) Mahadev Govind Ranade
(b) Devendranath Tagore
(c) Jyotiba Phule
(d) Ayyankali
Show answer ▾ (அ) / (a) Mahadev Govind Ranade · Solved one-mark questions →
1 mark
4.
எந்த ஆண்டு வார்சா ஒப்பந்தம் கலைக்கப்பட்டது ?
(அ) 1979
(ஆ) 1989
(இ) 1990
(ஈ) 1991
In which year the Warsaw Pact was dissolved ?
(a) 1979
(b) 1989
(c) 1990
(d) 1991
Show answer ▾ (ஈ) / (d) 1991 · Solved one-mark questions →
1 mark
5.
ஜப்பானியக் கப்பற்படை அமெரிக்க கப்பற்படையால் எங்கே தோற்கடிக்கப்பட்டது ?
(அ) க்வாடல்கெனால் போர்
(ஆ) மிட்வே போர்
(இ) லெனின்கிரேடு போர்
(ஈ) எல் அலாமெய்ன் போர்
Where was the Japanese Navy defeated by the American (US) Navy ?
(a) Battle of Guadalcanal
(b) Battle of Midway
(c) Battle of Leningrad
(d) Battle of El Alamein
Show answer ▾ (ஆ) / (b) Battle of Midway · Solved one-mark questions →
1 mark
6.
ஆறுகளின் மூலம் உருவாகும் மண் :
(அ) செம்மண்
(ஆ) கரிசல் மண்
(இ) பாலைமண்
(ஈ) வண்டல்மண்
The soils formed by the rivers are :
(a) Red soil
(b) Black soil
(c) Desert soil
(d) Alluvial soil
Show answer ▾ (ஈ) / (d) Alluvial soil · Solved one-mark questions →
1 mark
7.
பழவேற்காடு ஏரி ________ மாநிலங்களுக்கிடையே அமைந்துள்ளது.
(அ) மேற்கு வங்காளம் மற்றும் ஒடிசா
(ஆ) கர்நாடகா மற்றும் கேரளா
(இ) ஒடிசா மற்றும் ஆந்திரப்பிரதேசம்
(ஈ) தமிழ்நாடு மற்றும் ஆந்திரப்பிரதேசம்
Pulicat Lake is located between the States of ________.
(a) West Bengal and Odisha
(b) Karnataka and Kerala
(c) Odisha and Andhra Pradesh
(d) Tamil Nadu and Andhra Pradesh
Show answer ▾ (ஈ) / (d) Tamil Nadu and Andhra Pradesh · Solved one-mark questions →
1 mark
8.
பின்னடையும் பருவக்காற்று ________ லிருந்து ஈரப்பதத்தை எடுத்துக் கொள்கிறது.
(அ) அரபிக் கடல்
(ஆ) வங்கக் கடல்
(இ) இந்தியப் பெருங்கடல்
(ஈ) தைமூர்க் கடல்
Retreating monsoon wind picks up moisture from :
(a) Arabian Sea
(b) Bay of Bengal
(c) Indian Ocean
(d) Timor Sea
Show answer ▾ (ஆ) / (b) Bay of Bengal · Solved one-mark questions →
1 mark
9.
இந்தியாவின் முதல் மக்கள்தொகை கணக்கெடுப்பு ________ ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்டது.
(அ) 1991
(ஆ) 1881
(இ) 1872
(ஈ) 2011
In India the first census was carried out in the year ________.
(a) 1991
(b) 1881
(c) 1872
(d) 2011
Show answer ▾ (இ) / (c) 1872 · Solved one-mark questions →
1 mark
10.
பருவக்காற்று காடுகள் ________ எனவும் அழைக்கப்படுகின்றன.
(அ) அயன மண்டல பசுமை மாறாக் காடுகள்
(ஆ) இலையுதிர்க் காடுகள்
(இ) மாங்குரோவ் காடுகள்
(ஈ) மலைக் காடுகள்
The monsoon forests are otherwise called as ________.
(a) Tropical evergreen forest
(b) Deciduous forest
(c) Mangrove forest
(d) Mountain forest
Show answer ▾ (ஆ) / (b) Deciduous forest · Solved one-mark questions →
1 mark
11.
எந்த இரு நாடுகளுக்கிடையே பஞ்சசீல ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது ?
(அ) இந்தியா மற்றும் நேபாளம்
(ஆ) இந்தியா மற்றும் பாகிஸ்தான்
(இ) இந்தியா மற்றும் சீனா
(ஈ) இந்தியா மற்றும் ஸ்ரீலங்கா
The Panchasheel Treaty has been signed between :
(a) India and Nepal
(b) India and Pakistan
(c) India and China
(d) India and Sri Lanka
Show answer ▾ (இ) / (c) India and China · Solved one-mark questions →
1 mark
12.
மாநில அமைச்சரவையின் தலைவர் :
(அ) முதலமைச்சர்
(ஆ) ஆளுநர்
(இ) சபாநாயகர்
(ஈ) பிரதம அமைச்சர்
The State Council of Ministers is headed by :
(a) The Chief Minister
(b) The Governor
(c) The Speaker
(d) The Prime Minister
Show answer ▾ (அ) / (a) The Chief Minister · Solved one-mark questions →
1 mark
13.
காட் (GATT) -இன் முதல் சுற்று நடைபெற்ற இடம் :
(அ) டோக்கியோ
(ஆ) உருகுவே
(இ) டார்குவே
(ஈ) ஜெனீவா
GATT's first round held in :
(a) Tokyo
(b) Uruguay
(c) Torquay
(d) Geneva
Show answer ▾ (ஈ) / (d) Geneva · Solved one-mark questions →
1 mark
14.
இந்தியாவில், உலகளாவிய பொது வழங்கல் முறையை ஏற்றுக் கொண்ட ஒரே மாநிலம் ________.
(அ) கேரளா
(ஆ) ஆந்திரப்பிரதேசம்
(இ) தமிழ்நாடு
(ஈ) கர்நாடகா
________ is the only State in India to adopt universal Public Distribution System (PDS).
(a) Kerala
(b) Andhra Pradesh
(c) Tamil Nadu
(d) Karnataka
Show answer ▾ (இ) / (c) Tamil Nadu · Solved one-mark questions →
1 mark

பகுதி – II / PART – II

குறிப்பு : எவையேனும் 10 வினாக்களுக்கு விடையளிக்கவும். வினா எண் 28 -க்கு கட்டாயமாக விடையளிக்கவும்.
Note : Answer any 10 questions. Question No. 28 is compulsory.
15.
முத்துத் துறைமுக நிகழ்வைப் பற்றி எழுதுக.
Write about the Pearl Harbour incident.
2 marks
16.
திருநெல்வேலி எழுச்சி பற்றி ஒரு குறிப்பு வரைக.
Write a note on the Tirunelveli Uprising.
2 marks
17.
"டாலர் ஏகாதிபத்தியம்" – வரையறுக்கவும்.
Define "Dollar Imperialism".
2 marks
18.
பெரியாரை ஒரு பெண்ணியவாதியாக மதிப்பிடுக.
Estimate Periyar as a feminist.
2 marks
19.
பிரம்ம சமாஜத்தால் ஒழிக்கப்பட்ட சமூகத் தீமைகளைப் பட்டியலிடுக.
List out the Social evils eradicated by Brahmo Samaj.
2 marks
20.
கரிசல் மண்ணின் ஏதேனும் இரண்டு பண்புகளைக் கூறுக.
State any two characteristics of black cotton soil.
2 marks
21.
கடற்கரைச் சமவெளி எவ்வாறு உருவாகிறது ?
How is coastal plain formed ?
2 marks
22.
தமிழ்நாட்டின் வேளாண் பருவக் காலங்களை எழுதுக.
Write the cropping seasons of Tamil Nadu.
2 marks
23.
'பருவமழை வெடிப்பு' என்றால் என்ன ?
What is 'burst of monsoon' ?
2 marks
24.
மாங்கனீசின் பயன்களைக் குறிப்பிடுக.
State the uses of Manganese.
2 marks
25.
இந்தியக் குடியரசுத் தலைவர் எவ்வாறு தேர்ந்தெடுக்கப்படுகிறார் ?
How is President of India elected ?
2 marks
26.
இந்தியாவின் அண்டை நாடுகளின் பெயர்களை எழுதுக.
Name the neighbouring countries of India.
2 marks
27.
உலகமயமாக்கலின் நேர்மறையான தாக்கங்கள் எவையேனும் இரண்டினை எழுதுக.
Write any two positive impacts of Globalization.
2 marks
28.
சென்னை "ஆசியாவின் டெட்ராய்ட்" என்று அழைக்கப்படுவது ஏன் ?
Why is Chennai called "Detroit of Asia" ?
2 marks

பகுதி – III / PART – III

குறிப்பு : எவையேனும் 10 வினாக்களுக்கு விடையளிக்கவும். வினா எண் 42 -க்கு கட்டாயமாக விடையளிக்கவும். (மாற்றுத்திறனாளி மாணவர்கள் காலக்கோடு மற்றும் வரைபடத்தில் நிகழ்வுகளையும் இடங்களையும் குறிப்பிட்டு காட்டுவதற்கு பதிலாக அவற்றைப் பற்றிய குறிப்புகள் மட்டும் எழுத வேண்டும்.)
Note : Answer any 10 questions. Question No. 42 is compulsory. (Differently abled candidates have to write only notes for the questions related to Time-line chart and map.)
29.

கோடிட்ட இடங்களை நிரப்புக.

  1. இந்தியாவின் முதல் பெண் சட்டமன்ற உறுப்பினர் ________ ஆவார்.
  2. கிழக்குத் தொடர்ச்சி மலையின் தென் பகுதியில் உள்ள உயரமான சிகரம் ________ ஆகும்.
  3. மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் ________ ஆண்டுகளாகும்.
  4. நாசிச ஜெர்மனியின் ரகசியக் காவல்படை ________ என அழைக்கப்பட்டது.
  5. இந்தியாவில் ________ துறை முதன்மைத் துறையாகும்.

Fill in the blanks.

  1. The first Woman Legislator in India was ________.
  2. ________ is the highest peak in the Southern part of the Eastern Ghats.
  3. The members of the Rajya Sabha are elected for a term of ________ years.
  4. The Secret State Police in Nazi Germany was known as ________.
  5. ________ sector is the primary sector in India.
5 marks
30.
பன்னாட்டுச் சங்கத்தின் பணிகளை மதிப்பிடுக.
Estimate the work done by the League of Nations.
5 marks
31.
இந்தியாவின் பிரிவினைக்குப் பின்னால் இருந்த காரணங்களை விவாதிக்கவும்.
Discuss the reasons behind the Partition of India.
5 marks
32.

(அ) வேறுபடுத்துக.

  1. வேளாண் சார்ந்த மற்றும் கனிமம் சார்ந்த தொழிலகங்கள்
  2. உள்நாட்டு வணிகம் மற்றும் பன்னாட்டு வணிகம்

(ஆ) காரணம் கூறுக.
வட இந்திய ஆறுகள் வற்றாத ஆறுகள்.

(a) Distinguish between :

  1. Agro-based industry and mineral-based industry
  2. Internal trade and International trade

(b) Give Reason :
North Indian Rivers are perennial.

5 marks
33.
அடிப்படை உரிமைகளைக் குறிப்பிடுக.
Point out the Fundamental Rights.
5 marks
34.
இமயமலையின் உட்பிரிவுகளையும், இந்தியாவிற்கு அதன் முக்கியத்துவம் பற்றியும் விவரிக்கவும்.
Explain the divisions of Northern Mountains (Himalayas) and its importance to India.
5 marks
35.
நகரமயமாக்கம் என்றால் என்ன ? அதன் சிக்கல்களை விவரிக்கவும்.
What is Urbanization ? Explain its problems.
5 marks
36.
இந்தியாவில் உள்ள பருத்தி நெசவாலைகளின் பரவல் பற்றி எழுதுக.
Write about the distribution of cotton textile industries in India.
5 marks
37.
1857 -ஆம் ஆண்டின் பெரும் புரட்சிக்கான காரணங்கள் குறித்து ஆராயவும்.
Discuss the causes of the Revolt of 1857.
5 marks
38.
வெளியுறவுக் கொள்கையை நிர்ணயிக்கும் அடிப்படைக் காரணிகள் எவை ?
Discuss the basic determinants of India's Foreign Policy.
5 marks
39.
மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) கணக்கிடும் முறைகள் யாவை ? அவைகளை விவரிக்கவும்.
What are the methods of calculating Gross Domestic Product (GDP) ? Explain them.
5 marks
40.
கருப்பு பணம் என்றால் என்ன ? அதற்கான காரணங்களை எழுதுக.
What is black money ? Write the causes of black money.
5 marks
41.

கீழ்க்காண்பனவற்றிற்கு காலக்கோடு வரைக.

1920 முதல் 1940 வரையிலான ஆண்டுகட்கு உட்பட்ட முக்கிய நிகழ்வுகள் ஏதேனும் ஐந்தினை காலக்கோட்டில் எழுதுக.

Draw a Time-line for the following :

Write any five important events between 1920 and 1940.

5 marks
42.

உலக வரைபடத்தில் பின்வரும் இடங்களைக் குறிக்கவும்.

  1. கிரீஸ்
  2. துருக்கி
  3. ஹிரோஷிமா
  4. மாஸ்கோ
  5. சான்பிரான்சிஸ்கோ

Mark the following places on the map of World.

  1. Greece
  2. Turkey
  3. Hiroshima
  4. Moscow
  5. San Francisco
5 marks

பகுதி – IV / PART – IV

குறிப்பு : பின்வரும் வினாக்களுக்கு விடையளிக்கவும். (மாற்றுத்திறனாளி மாணவர்கள் வரைபட தொடர்புடைய வினாக்களுக்கு குறிப்புகள் மட்டும் எழுதவும்.)
Note : Answer the following questions. (Differently abled candidates have to write only notes for the questions related to map.)
43.
(அ)முதல் உலகப்போருக்கான முக்கியக் காரணங்களை விவரிக்கவும்.
(a)Explain the main causes of the First World War.
அல்லது / OR
(ஆ)கிழக்கிந்திய கம்பெனியாரை எதிர்த்து வீரபாண்டிய கட்டபொம்மன் நடத்திய வீரதீரப் போர்கள் பற்றி ஒரு கட்டுரை வரைக.
(b)Attempt an essay of the heroic fights of Veerapandya Kattabomman, conducted against the East India Company.
8 marks
44.
(அ)

கொடுக்கப்பட்டுள்ள இந்திய வரைபடத்தில் கீழ்க்காணும் இடங்களைக் குறிக்கவும்.

  1. சோட்டா நாகபுரி பீடபூமி
  2. காரகோரம்
  3. மலைக் காடுகள்
  4. அதிக மழை பெறும் பகுதி
  5. பாலை மண்
  6. ஹிராகுட் அணை
  7. அகத்தியர் மலை உயிர்கோளப் பெட்டகம்
  8. பருத்தி விளையும் பகுதி
(a)

Mark the following places on the given outline map of India.

  1. Chota Nagpur plateau
  2. Karakoram
  3. Mountain forests
  4. Area of heavy rainfall
  5. Desert soil
  6. Hirakud dam
  7. Agasthiyamalai Biosphere Reserve
  8. Area of cultivation of cotton
அல்லது / OR
(ஆ)

கொடுக்கப்பட்டுள்ள தமிழ்நாடு வரைபடத்தில் கீழ்க்காணும் இடங்களைக் குறிக்கவும்.

  1. வைகை ஆறு
  2. கேரளா
  3. தேயிலை விளையும் பகுதி
  4. சோழமண்டல கடற்கரை
  5. காகித தொழிலகம்
  6. துறைமுகம் (ஏதேனும் ஒன்று)
  7. சென்னை
  8. மன்னார் வளைகுடா
(b)

Mark the following places on the given outline map of Tamil Nadu.

  1. Vaigai river
  2. Kerala
  3. Tea growing area
  4. Coromandel coast
  5. Paper Industry
  6. Sea Port (Any one)
  7. Chennai
  8. Gulf of Mannar
8 marks
⬇️ Download PDF All Social Science papers