TN Online TestSamacheer Kalvi practice

10th Standard Social Science Question Paper March 2025

Paper code 8526 100 marks 180 minutes

The complete March 2025 public exam paper exactly as printed: every question in Tamil and English. Download the PDF, or take Part I as a free online test.

சமூக அறிவியல் / Social ScienceMarch 2025 · March 2025

பகுதி – I / PART – I

குறிப்பு : (i) அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும். (ii) கொடுக்கப்பட்ட நான்கு மாற்று விடைகளில் மிகவும் ஏற்புடைய விடையினை தேர்ந்தெடுத்துக் குறியீட்டுடன் விடையினையும் சேர்த்து எழுதவும்.
Note : (i) Answer all the questions. (ii) Choose the most appropriate answer from the given four alternatives and write the option code and the corresponding answer.
1.
பத்தொன்பதாம் நூற்றாண்டு முடிவடையுந்தருவாயில் கிழக்கு ஆசியாவில் உதயமான வலிமை வாய்ந்த நாடு எது ?
(அ) சீனா
(ஆ) ஜப்பான்
(இ) கொரியா
(ஈ) மங்கோலியா
Which country emerged as the strongest in East Asia towards the close of nineteenth century ?
(a) China
(b) Japan
(c) Korea
(d) Mongolia
Show answer ▾ (ஆ) / (b) Japan · Solved one-mark questions →
1 mark
2.
இத்தாலி யாருடன் லேட்ரன் உடன்படிக்கையைச் செய்து கொண்டது ?
(அ) ஜெர்மனி
(ஆ) ரஷ்யா
(இ) போப்
(ஈ) ஸ்பெயின்
With whom of the following was the Lateran Treaty signed by Italy ?
(a) Germany
(b) Russia
(c) Pope
(d) Spain
Show answer ▾ (இ) / (c) Pope · Solved one-mark questions →
1 mark
3.
வடக்கு மற்றும் தெற்கு வியட்நாம் எந்த ஆண்டு ஒன்று சேர்க்கப்பட்டது ?
(அ) 1975
(ஆ) 1976
(இ) 1973
(ஈ) 1974
When was North and South Vietnam united ?
(a) 1975
(b) 1976
(c) 1973
(d) 1974
Show answer ▾ (ஆ) / (b) 1976 · Solved one-mark questions →
1 mark
4.
கூற்று : ஜோதிபா புலே ஆதரவற்றோருக்கான விடுதிகளையும், விதவைகளுக்கான காப்பகங்களையும் திறந்தார்.
காரணம் : ஜோதிபா புலே குழந்தைத் திருமணத்தை எதிர்த்தார். விதவை மறுமணத்தை ஆதரித்தார்.
(அ) கூற்று சரி. ஆனால் காரணம் கூற்றுக்குப் பொருத்தமானதாக இல்லை.
(ஆ) கூற்று சரி. காரணம் கூற்றுக்குப் பொருத்தமானதாக உள்ளது.
(இ) இரண்டுமே தவறு.
(ஈ) காரணம் சரி. ஆனால் கூற்று பொருத்தமற்றதாக உள்ளது.
Assertion : Jyotiba Phule opened orphanages and homes for widows.
Reason : Jyotiba Phule opposed child marriage and supported widow remarriage.
(a) Assertion is correct but Reason is not apt to the Assertion.
(b) Assertion is correct and the Reason is apt to the Assertion.
(c) Both are wrong.
(d) Reason is correct but Assertion is irrelevant.
Show answer ▾ (ஆ) / (b) Assertion is correct and the Reason is apt to the Assertion. · Solved one-mark questions →
1 mark
5.
சோட்டா நாக்பூர் குத்தகைச் சட்டம் எந்த பின்னணியில் நிறைவேற்றப்பட்டது ?
(அ) கோல் கிளர்ச்சி
(ஆ) இண்டிகோ கிளர்ச்சி
(இ) முண்டா கிளர்ச்சி
(ஈ) தக்காண கலவரங்கள்
What was the context in which the Chotanagpur Tenancy Act was passed ?
(a) Kol Revolt
(b) Indigo Revolt
(c) Munda Rebellion
(d) Deccan Riots
Show answer ▾ (இ) / (c) Munda Rebellion · Solved one-mark questions →
1 mark
6.
இந்தியாவின் காலநிலை ________ ஆக பெயரிடப்பட்டுள்ளது.
(அ) அயனமண்டல ஈரக் காலநிலை
(ஆ) நிலநடுக்கோட்டுக் காலநிலை
(இ) அயனமண்டல பருவக்காற்றுக் காலநிலை
(ஈ) மித அயனமண்டலக் காலநிலை
Climate of India is labelled as ________.
(a) Tropical Humid
(b) Equatorial Climate
(c) Tropical Monsoon Climate
(d) Temperate Climate
Show answer ▾ (இ) / (c) Tropical Monsoon Climate · Solved one-mark questions →
1 mark
7.
________ என்பது ஒரு வாணிபப் பயிர்.
(அ) பருத்தி
(ஆ) கோதுமை
(இ) அரிசி
(ஈ) மக்காச் சோளம்
________ is a cash crop.
(a) Cotton
(b) Wheat
(c) Rice
(d) Maize
Show answer ▾ (அ) / (a) Cotton · Solved one-mark questions →
1 mark
8.
இந்தியாவின் முதல் அணுமின் நிலையம் நிறுவப்பட்ட மாநிலம் :
(அ) குஜராத்
(ஆ) இராஜஸ்தான்
(இ) மகராஷ்டிரம்
(ஈ) தமிழ்நாடு
The first Nuclear Power Station was commissioned in :
(a) Gujarat
(b) Rajasthan
(c) Maharashtra
(d) Tamil Nadu
Show answer ▾ (இ) / (c) Maharashtra · Solved one-mark questions →
1 mark
9.
மக்கள் தொகையின் பல்வேறு அம்சங்கள் பற்றிய அறிவியல் பூர்வமான படிப்பு ________
(அ) வரைபடவியல்
(ஆ) மக்களியல்
(இ) மானுடவியல்
(ஈ) கல்வெட்டியல்
The Scientific study of different aspects of population is called :
(a) Cartography
(b) Demography
(c) Anthropology
(d) Epigraphy
Show answer ▾ (ஆ) / (b) Demography · Solved one-mark questions →
1 mark
10.
தமிழ்நாட்டு மக்களின் இரண்டாவது முக்கிய உணவுப்பயிர் :
(அ) பருப்பு வகைகள்
(ஆ) சிறுதானியங்கள்
(இ) எண்ணெய் வித்துக்கள்
(ஈ) நெல்
Second staple food of the people of Tamil Nadu is :
(a) Pulses
(b) Millets
(c) Oil seeds
(d) Rice
Show answer ▾ (ஆ) / (b) Millets · Solved one-mark questions →
1 mark
11.
கீழ்க்காணும் மாநிலங்களில் எந்த ஒன்று ஈரவை சட்ட மன்றத்தைப் பெற்றிருக்கவில்லை ?
(அ) ஆந்திரப் பிரதேசம்
(ஆ) தெலுங்கானா
(இ) தமிழ்நாடு
(ஈ) உத்திரப் பிரதேசம்
Which of the following States does not possess a bicameral Legislature ?
(a) Andhra Pradesh
(b) Telangana
(c) Tamil Nadu
(d) Uttar Pradesh
Show answer ▾ (இ) / (c) Tamil Nadu · Solved one-mark questions →
1 mark
12.
ஒபெக் (OPEC) என்பது :
(அ) சர்வதேச காப்பீட்டு நிறுவனம்
(ஆ) ஒரு சர்வதேச விளையாட்டுக் கழகம்
(இ) எண்ணெய் ஏற்றுமதி நிறுவனங்களின் அமைப்பு
(ஈ) ஒரு சர்வதேச நிறுவனம்
OPEC is :
(a) An International Insurance Company
(b) An International Sports Club
(c) An Organization of Petroleum Exporting Countries
(d) An International Company
Show answer ▾ (இ) / (c) An Organization of Petroleum Exporting Countries · Solved one-mark questions →
1 mark
13.
________ முறையில் ஒவ்வொரு இடைநிலை பண்டத்தின் மதிப்பை கூட்டும்போது. இறுதி பண்டத்தின் மதிப்பை கணக்கிடலாம்.
(அ) செலவு முறை
(ஆ) மதிப்பு கூட்டு முறை
(இ) வருமான முறை
(ஈ) நாட்டு வருமானம்
In ________ approach, the value added by each intermediate good is summed to estimate the value of the final good.
(a) Expenditure approach
(b) Value added approach
(c) Income approach
(d) National Income
Show answer ▾ (ஆ) / (b) Value added approach · Solved one-mark questions →
1 mark
14.
இந்தியா எப்போது டங்கல் திட்டத்தில் கையெழுத்திட்டது ?
(அ) 1984
(ஆ) 1976
(இ) 1950
(ஈ) 1994
India signed the Dunkel Proposal in :
(a) 1984
(b) 1976
(c) 1950
(d) 1994
Show answer ▾ (ஈ) / (d) 1994 · Solved one-mark questions →
1 mark

பகுதி – II / PART – II

குறிப்பு : எவையேனும் பத்து வினாக்களுக்கு விடையளிக்கவும். வினா எண் 28 -க்கு கட்டாயமாக விடையளிக்கவும்.
Note : Answer any Ten questions. Question No. 28 is compulsory.
15.
சீன-ஜப்பானியப் போரின் முக்கியத்துவத்தை நீ எவ்வாறு மதிப்பீடு செய்வாய் ?
How do you assess the importance of Sino-Japanese war ?
2 marks
16.
பொருளாதாரப் பெருமந்தம் இந்திய வேளாண்மையின் மீது எத்தகையத் தாக்கத்தை ஏற்படுத்தியது ?
How did Great Depression impact on the Indian agriculture ?
2 marks
17.
பாளையக்காரர்களின் கடமைகள் யாவை ?
What were the duties of the Palayakkarars ?
2 marks
18.
வாரிசு இழப்புக் கொள்கையின் அடிப்படையில் பிரிட்டிஷ் அரசில் இணைத்துக் கொள்ளப்பட்ட பகுதிகளை பட்டியலிடவும்.
Name the territories annexed by the British, under the Doctrine of Lapse.
2 marks
19.
இந்தியாவின் விடுதலைப் போராட்டத்தில் அன்னிபெசன்டின் பங்களிப்பு யாது ?
What is the contribution of Annie Besant towards India's Freedom Struggle ?
2 marks
20.
தக்காண பீடபூமி – சிறு குறிப்பு வரைக.
Write a short note on Deccan Plateau.
2 marks
21.
இந்தியாவின் நான்கு பருவக் காலங்களைக் குறிப்பிடுக.
Name the four distinct Seasons of India.
2 marks
22.
இந்தியாவின் வேளாண்மை முறைகளைக் குறிப்பிடுக.
State the types of agriculture practices in India.
2 marks
23.
தமிழ்நாட்டின் முக்கிய தீவுகளைக் குறிப்பிடுக.
Mention the major islands of Tamil Nadu.
2 marks
24.
தமிழ்நாட்டின் முக்கிய பல்நோக்கு திட்டங்களின் பெயர்களை எழுதுக.
Name the important multipurpose projects of Tamil Nadu.
2 marks
25.
உயர் நீதிமன்றத்தின் தனக்கே உரிய நீதிவரையறை அதிகாரங்கள் யாவை ?
What is the original Jurisdiction of the High Court ?
2 marks
26.
அணிசேரா இயக்கத்தின் நிறுவனத் தலைவர்கள் யாவர் ?
Name the architects of the Non-Aligned Movement.
2 marks
27.
FAO -வின் படி உணவு பாதுகாப்பை வரையறு.
Define food security according to FAO.
2 marks
28.
ஸ்டார்ட் அப் இந்தியா திட்டம் குறித்து நீவிர் அறிவது யாது ?
What do you know about 'Startup India Scheme' ?
2 marks

பகுதி – III / PART – III

குறிப்பு : எவையேனும் பத்து வினாக்களுக்கு விடையளிக்கவும். வினா எண் 42 -க்கு கட்டாயமாக விடையளிக்கவும். (மாற்றுத் திறனாளி மாணவர்கள் காலக்கோடு மற்றும் வரைபடத்தில் நிகழ்வுகளையும் இடங்களையும் குறிப்பிட்டு காட்டுவதற்கு பதிலாக அவற்றைப் பற்றிய குறிப்புகள் மட்டுமே எழுத வேண்டும்.)
Note : Answer any Ten questions. Question No. 42 is compulsory. (Differently abled candidates have to write only notes for the questions related to Time-line chart and Map.)
29.

கோடிட்ட இடங்களை நிரப்புக.

  1. கட்டபொம்மன் ________ என்ற இடத்தில் தூக்கிலிடப்பட்டார்.
  2. காந்தியடிகளின் அரசியல் குரு ________ ஆவார்.
  3. ________ தமிழ்நாட்டின் மாநில விலங்கு ஆகும்.
  4. இந்திய குடிமக்களுக்கு அடிப்படை கடமைகள் ________ பிரிவின் கீழ் வழங்கப்பட்டுள்ளன.
  5. இரண்டாம் துறையை வேறுவிதமாக ________ துறை என அழைக்கலாம்.

Fill in the blanks.

  1. Kattabomman was hanged to death at ________.
  2. Gandhi regarded ________ as his political guru.
  3. ________ is the Tamil Nadu State animal.
  4. Fundamental duties have been given to the citizen of India under Article ________.
  5. Secondary sector is otherwise called as ________.
5 marks
30.
ஜெர்மனியுடன் தொடர்புடைய வெர்செய்ல்ஸ் உடன்படிக்கையின் சரத்துகளை கோடிட்டுக் காட்டுக.
Highlight the provisions of the Treaty of Versailles relating to Germany.
5 marks
31.
இரண்டாம் உலகப் போரின் விளைவுகளை ஆய்வு செய்க.
Analyze the effects of the World War II.
5 marks
32.

(அ) வேறுபடுத்துக.

  1. வடகிழக்கு பருவக்காற்று மற்றும் தென்மேற்கு பருவக்காற்று
  2. புதுப்பிக்க இயலும் மற்றும் புதுப்பிக்க இயலா வளங்கள்

(ஆ) காரணம் கூறுக.
மலைப் பகுதிகள் சமவெளிகளை விட குளிரானவை.

(a) Distinguish between :

  1. North east monsoon and South west monsoon
  2. Renewable and non-renewable resources

(b) Give reason :
Mountains are cooler than the plains.

5 marks
33.
பெண்களின் மேம்பாட்டிற்கு 19 ஆம் நூற்றாண்டு சீர்திருத்தவாதிகள் ஆற்றிய பணிகள் குறித்து எழுதுக.
Write an essay on the role played by the 19th century reformers towards the cause of women.
5 marks
34.
தீபகற்ப ஆறுகளைப் பற்றி விவரிக்கவும்.
Give an account on the peninsular rivers of India.
5 marks
35.
இந்திய மண் வகைகள் ஏதேனும் ஐந்தினைக் குறிப்பிட்டு, அதன் பண்புகள் மற்றும் பரவல் பற்றி விவரி.
State any five types of soil in India and explain the characteristics and distribution of soil.
5 marks
36.
தமிழ்நாட்டின் பல்வேறு போக்குவரத்து முறைகளை விவரி.
Explain the different modes of transport available in Tamil Nadu.
5 marks
37.
இந்தியப் பிரதம அமைச்சரின் பணிகள் மற்றும் கடமைகள் யாவை ?
What are the duties and functions of Prime Minister of India ?
5 marks
38.
இந்திய அரசியலமைப்பின் சிறப்புக் கூறுகளை விளக்குக.
Explain the salient features of the Constitution of India.
5 marks
39.
நாட்டு வருமானத்தை கணக்கிடுவதற்கு தொடர்புடைய பல்வேறு கருத்துக்களை விவரி.
Explain various terms associated with measuring of National Income.
5 marks
40.
வரி என்றால் என்ன ? அதன் வகைகளை விவரிக்கவும்.
What is tax ? Explain its various types.
5 marks
41.

கீழ்க் காண்பனவற்றிற்கு காலக்கோடு வரைக.

1910 முதல் 1940 வரையிலான ஆண்டுகட்கு உட்பட்ட இந்திய தேசிய இயக்கத்தின் முக்கிய நிகழ்வுகள் ஏதேனும் ஐந்தினை காலக்கோட்டில் எழுதுக.

Draw a Time-line for the following :

Write any five important events of Indian National Movement between 1910 and 1940.

5 marks
42.

உலக வரைபடத்தில் பின்வரும் இடங்களைக் குறிக்கவும்.

  1. இத்தாலி
  2. பசிபிக் பெருங்கடல்
  3. பிரான்ஸ்
  4. செர்பியா
  5. ஜப்பான்

Mark the following places on the map of the World.

  1. Italy
  2. Pacific Ocean
  3. France
  4. Serbia
  5. Japan
5 marks

பகுதி – IV / PART – IV

குறிப்பு : பின்வரும் வினாக்களுக்கு விடையளிக்கவும். (மாற்றுத்திறனாளி மாணவர்கள் வரைபட தொடர்புடைய வினாக்களுக்கு குறிப்புகள் மட்டும் எழுதவும்.)
Note : Answer the following questions. (Differently abled candidates have to write only notes for the questions related to map.)
43.
(அ)காந்திய இயக்கத்தின் ஒரு சிறந்த உதாரணமான சட்ட மறுப்பு இயக்கம் குறித்து விரிவாக ஆராயவும்.
(a)Critically examine the Civil Disobedience Movement as the typical example of Gandhian Movement.
அல்லது / OR
(ஆ)நீதிக்கட்சியின் தோற்றத்திற்கான பின்புலத்தை விளக்கி சமூக நீதிக்கான அதன் பங்களிப்பைச் சுட்டிக் காட்டவும்.
(b)Describe the background for the formation of the Justice Party and point out its contribution to the cause of Social Justice.
8 marks
44.
(அ)

கொடுக்கப்பட்டுள்ள இந்திய வரைபடத்தில் கீழ்காணும் இடங்களைக் குறிக்கவும்.

  1. மேற்கு தொடர்ச்சி மலை
  2. தக்காண பீடபூமி
  3. பன்னா உயிர்க்கோள பெட்டகம்
  4. கங்கை ஆறு
  5. கரிசல் மண் பகுதி
  6. மேட்டூர் அணை
  7. பன்னாட்டு விமான நிலையம் (ஏதேனும் ஒன்று)
  8. பெட்ரோலியம் கிடைக்குமிடம்
(a)

Mark the following places on the given outline map of India.

  1. Western Ghats
  2. Deccan plateau
  3. Panna Biosphere Reserve
  4. River Ganga
  5. Black Soil region
  6. Mettur Dam
  7. International Airport (Any one)
  8. Petroleum region
அல்லது / OR
(ஆ)

கொடுக்கப்பட்டுள்ள தமிழ்நாடு வரைபடத்தில் கீழ்காணும் இடங்களைக் குறிக்கவும்.

  1. காவிரி ஆறு
  2. நீலகிரி
  3. கோடியக்கரை வனவிலங்கு சரணாலயம்
  4. பழவேற்காடு ஏரி
  5. விமான நிலையம் (ஏதேனும் ஒன்று)
  6. கரும்பு விளையும் பகுதி
  7. நிலக்கரி கிடைக்குமிடம் (ஏதேனும் ஒன்று)
  8. இந்தியப் பெருங்கடல்
(b)

Mark the following places on the given outline map of Tamil Nadu.

  1. Cauvery River
  2. Nilgiri
  3. Point Calimere Wildlife Sanctuary
  4. Pulicat Lake
  5. Airport (any one)
  6. Sugarcane growing area
  7. Coal mining area (Any one)
  8. Indian Ocean
8 marks
⬇️ Download PDF All Social Science papers