TN Online TestSamacheer Kalvi practice

12th Standard Accountancy Question Paper May 2022

Paper code 5957 90 marks 180 minutes

The complete May 2022 public exam paper exactly as printed: every question in Tamil and English. Download the PDF, or take Part I as a free online test.

கணக்குப்பதிவியல் / Accountancyமே 2022 · May 2022

பகுதி – I / PART – I

குறிப்பு : (i) அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும். (ii) கொடுக்கப்பட்டுள்ள மாற்று விடைகளில் மிகவும் ஏற்புடைய விடையைத் தேர்ந்தெடுத்துக் குறியீட்டுடன் விடையினையும் சேர்த்து எழுதவும்.
Note : (i) Answer all the questions. (ii) Choose the most appropriate answer from the given four alternatives and write the option code and the corresponding answer.
1.
ஒரு கூட்டாளி ஒவ்வொரு மாத இறுதியிலும் ஒரு குறிப்பிட்ட தொகையை வழக்கமாக எடுத்துக்கொள்ளும் போது அந்த எடுப்புகள் மீது கணக்கிடப்படும் வட்டிக்குரிய மாதங்கள் சராசரியாக :
(அ) 12 மாதங்கள்
(ஆ) 5.5 மாதங்கள்
(இ) 6.5 மாதங்கள்
(ஈ) 6 மாதங்கள்
When a partner withdraws regularly a fixed sum of money at the end of every month, period for which interest is to be calculated on the drawings on an average is __________.
(a) 12 months
(b) 5.5 months
(c) 6.5 months
(d) 6 months
Show answer ▾ (ஆ) / (b) 5.5 months · Solved one-mark questions →
1 mark
2.
ஒரு இனம் மற்றொரு இனத்தோடு பெற்றிருக்கும் தொடர்பினை கணிதவியல் முறையில் கூறுவது :
(அ) மாதிரி
(ஆ) முடிவு
(இ) தீர்மானம்
(ஈ) விகிதம்
The mathematical expression that provides a measure of the relationship between two figures is called __________.
(a) Model
(b) Conclusion
(c) Decision
(d) Ratio
Show answer ▾ (ஈ) / (d) Ratio · Solved one-mark questions →
1 mark
3.
வருவாய் மற்றும் செலவினக் கணக்கு தயாரிக்கப்படுவதன் மூலம் கண்டறியப்படுவது :
(அ) உபரி அல்லது பற்றாக்குறை
(ஆ) லாபம் அல்லது நட்டம்
(இ) நிதி நிலை
(ஈ) ரொக்கம் மற்றும் வங்கி இருப்பு
Income and Expenditure Account is prepared to find out :
(a) surplus or deficit
(b) profit or loss
(c) financial position
(d) cash and bank balance
Show answer ▾ (அ) / (a) surplus or deficit · Solved one-mark questions →
1 mark
4.
கூட்டாளி சேர்ப்பு தொடர்பாக பின்வரும் கூற்றுகளில் எது உண்மையானதல்ல ?
(அ) கூட்டாண்மை நிறுவனமானது புதிய ஒப்பந்தத்தின் கீழ் மறு கட்டமைக்கப்படும்.
(ஆ) பொதுவாக கூட்டாளிகளின் பரஸ்பர உரிமைகள் மாறும்.
(இ) ஏற்கனவே உள்ள ஒப்பந்தமானது முடிவுக்கு கொண்டு வரப்படாது.
(ஈ) முந்தைய ஆண்டுகளின் இலாபம் மற்றும் நட்டங்கள் பழைய கூட்டாளிகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட வேண்டும்.
Which of the following statements is not true in relation to admission of a partner ?
(a) The firm is reconstituted under a new agreement
(b) Generally mutual rights of the partners change
(c) The existing agreement does not come to an end
(d) The profits and losses of the previous years are distributed to the old partners
Show answer ▾ (இ) / (c) The existing agreement does not come to an end · Solved one-mark questions →
1 mark
5.
பயனரின் தேவைக்கேற்ப தயாரிக்கப்படும் கணக்கியல் அறிக்கையானது :
(அ) இருப்பாய்வு
(ஆ) வழக்கமான கணக்கியல் அறிக்கை
(இ) இருப்பு நிலைக்குறிப்பு
(ஈ) குறிப்பிட்ட நோக்க அறிக்கை
Accounting report prepared according to the requirements of the user is __________.
(a) Trial balance
(b) Routine accounting report
(c) Balance sheet
(d) Special purpose report
Show answer ▾ (ஈ) / (d) Special purpose report · Solved one-mark questions →
1 mark
6.
பின்வரும் வாக்கியங்களில் எது தவறானது ?
(அ) காப்பு முதல் நிறுமத்தை கலைக்கும் போது செலுத்துமாறு அழைப்பு விடுக்கப்படுகிறது.
(ஆ) வெளியிடப்பட்ட பங்குமுதல் அங்கீகரிக்கப்பட்ட பங்குமுதலை விட ஒருபோதும் அதிகமாக இருக்கக்கூடாது.
(இ) செலுத்தப்பட்ட பங்குமுதல், அழைக்கப்பட்ட பங்கு முதலின் ஒரு பகுதி ஆகும்.
(ஈ) பங்குகள் குறை ஒப்பமாக இருக்கும் நிலையில் வெளியிடப்பட்ட பங்கு முதல் ஒப்பிய பங்குமுதலை விட குறைவாக இருக்கும்.
Which of the following statement is false ?
(a) Reserve capital can be called at the time of winding up.
(b) Issued capital can never be more than the authorised capital.
(c) Paid up capital is part of called up capital.
(d) In case of under subscription, issued capital will be less than the subscribed capital.
Show answer ▾ (ஈ) / (d) In case of under subscription, issued capital will be less than the subscribed capital. · Solved one-mark questions →
1 mark
7.
நிறுமக் கலைப்பின் போது மட்டுமே அழைக்கப்படக்கூடிய பங்கு முதலின் ஒரு பகுதி __________ என அழைக்கப்படும்.
(அ) முதலினக் காப்பு
(ஆ) அங்கீகரிக்கப்பட்ட முதல்
(இ) காப்பு முதல்
(ஈ) அழைக்கப்பட்ட முதல்
That part of share capital which can be called up only on the winding up of a company is called :
(a) Capital reserve
(b) Authorised capital
(c) Reserve capital
(d) Called up capital
Show answer ▾ (இ) / (c) Reserve capital · Solved one-mark questions →
1 mark
8.
நிலை அறிக்கை ஒரு :
(அ) ரொக்க நடவடிக்கைகளின் தொகுப்பு
(ஆ) வருமானம் மற்றும் செலவுகள் அறிக்கை
(இ) கடன் நடவடிக்கைகளின் தொகுப்பு
(ஈ) சொத்துகள் மற்றும் பொறுப்புகள் அறிக்கை
Statement of affairs is a __________.
(a) summary of cash transactions
(b) statement of income and expenditure
(c) summary of credit transactions
(d) statement of assets and liabilities
Show answer ▾ (ஈ) / (d) statement of assets and liabilities · Solved one-mark questions →
1 mark
9.
ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காக பெற்ற நன்கொடை :
(அ) வருவாயின செலவு
(ஆ) வருவாயின வரவு
(இ) முதலினச் செலவு
(ஈ) முதலின வரவு
Donation received for a specific purpose is __________.
(a) Revenue expenditure
(b) Revenue receipt
(c) Capital expenditure
(d) Capital receipt
Show answer ▾ (ஈ) / (d) Capital receipt · Solved one-mark questions →
1 mark
10.
கூட்டாண்மை ஒப்பாவணம் இல்லாத நிலையில் நிறுவனத்தின் இலாபம் கூட்டாளிகளிடையே பகிர்ந்தளிக்கப்படுவது :
(அ) சமமான விகிதத்தில்
(ஆ) முதல் விகிதத்தில்
(இ) (அ) மற்றும் (ஆ)
(ஈ) மேற்கூறிய எதுவுமில்லை
In the absence of a partnership deed, profits of the firm will be shared by the partners in :
(a) Equal ratio
(b) Capital ratio
(c) Both (a) and (b)
(d) None of these
Show answer ▾ (அ) / (a) Equal ratio · Solved one-mark questions →
1 mark
11.
பொறுப்புகளைக் காட்டிலும் மிகுதியாக உள்ள சொத்துக்கள் __________.
(அ) முதல்
(ஆ) நட்டம்
(இ) இலாபம்
(ஈ) ரொக்கம்
The excess of assets over liabilities is __________.
(a) capital
(b) loss
(c) profit
(d) cash
Show answer ▾ (அ) / (a) capital · Solved one-mark questions →
1 mark
12.
ஒரு நிறுவனத்தின் கடந்த ஐந்து ஆண்டுகளின் இலாபங்கள் பின்வருமாறு : 2014 : ₹ 4,000 ; 2015 : ₹ 3,000 ; 2016 : ₹ 5,000 ; 2017 : ₹ 4,500 மற்றும் 2018 : ₹ 3,500. 5 ஆண்டுகளின் சராசரி இலாபம் __________.
(அ) ₹ 6,000
(ஆ) ₹ 12,000
(இ) ₹ 4,000
(ஈ) ₹ 5,000
The following are the profits of a firm in the last five years : 2014 : ₹ 4,000 ; 2015 : ₹ 3,000 ; 2016 : ₹ 5,000 ; 2017 : ₹ 4,500 and 2018 : ₹ 3,500. The average profits of five years is __________.
(a) ₹ 6,000
(b) ₹ 12,000
(c) ₹ 4,000
(d) ₹ 5,000
Show answer ▾ (இ) / (c) ₹ 4,000 · Solved one-mark questions →
1 mark
13.
முகமதிப்பை விட அதிகமாக பெற்ற தொகை வரவு வைக்கப்படும் கணக்கு :
(அ) பங்கு முதல் கணக்கு
(ஆ) பத்திர முனைமக் கணக்கு
(இ) பங்கு ஒறுப்பிழப்புக் கணக்கு
(ஈ) அழைப்பு முன்பணக் கணக்கு
The amount received over and above the par value is credited to __________.
(a) Share capital account
(b) Securities premium account
(c) Forfeited shares account
(d) Calls in advance account
Show answer ▾ (ஆ) / (b) Securities premium account · Solved one-mark questions →
1 mark
14.
நிதி நிலை அறிக்கைகள் வெளிக்காட்டாதது :
(அ) குறுகிய கால தகவல்கள்
(ஆ) பணம் சாரா தகவல்கள்
(இ) நீண்ட கால தகவல்கள்
(ஈ) கடந்த கால தகவல்கள்
The financial statements do not exhibit :
(a) Short-term data
(b) Non-monetary data
(c) Long-term data
(d) Past data
Show answer ▾ (ஆ) / (b) Non-monetary data · Solved one-mark questions →
1 mark
15.
அறைகலன் கடனுக்கு வாங்கியது Tally-ல் எந்த வகை சான்றாவணத்தில் பதியப்படும் ?
(அ) கொள்முதல் சான்றாவணம்
(ஆ) பெறுதல்கள் சான்றாவணம்
(இ) செலுத்தல்கள் சான்றாவணம்
(ஈ) குறிப்பேடு சான்றாவணம்
In which voucher type credit purchase of furniture is recorded in Tally ?
(a) Purchase voucher
(b) Receipt voucher
(c) Payment voucher
(d) Journal voucher
Show answer ▾ (ஈ) / (d) Journal voucher · Solved one-mark questions →
1 mark
16.
கீழ்வருவனவற்றில் எது சரியானது ?
(அ) உயர் இலாபம் = சராசரி இலாபம் − சாதாரண இலாபம்
(ஆ) உயர் இலாபம் = மொத்த இலாபம் / ஆண்டுகளின் எண்ணிக்கை
(இ) உயர் இலாபம் = சராசரி இலாபம் × கொள்முதல் ஆண்டுகள்
(ஈ) உயர் இலாபம் = கூட்டு இலாபம் / ஆண்டுகளின் எண்ணிக்கை
Which of the following is true ?
(a) Super profit = Average profit − Normal profit
(b) Super profit = Total profit / number of years
(c) Super profit = Average profit × years of purchase
(d) Super profit = Weighted profit / number of years
Show answer ▾ (அ) / (a) Super profit = Average profit − Normal profit · Solved one-mark questions →
1 mark
17.
சரக்கிருப்பு மற்றும் முன்கூட்டிச் செலுத்திய செலவுகள் நீங்கலாக உள்ள நடப்புச் சொத்துக்கள் :
(அ) நிதி
(ஆ) காப்புகள்
(இ) விரைவு சொத்துக்கள்
(ஈ) புலனாகும் சொத்து
Current assets excluding inventory and prepaid expenses is called :
(a) Funds
(b) Reserves
(c) Quick assets
(d) Tangible assets
Show answer ▾ (இ) / (c) Quick assets · Solved one-mark questions →
1 mark
18.
மறுமதிப்பீட்டு கணக்கு ஒரு __________.
(அ) ஆள்சார் கணக்கு
(ஆ) சொத்து கணக்கு
(இ) ஆள்சாரா கணக்கு
(ஈ) பெயரளவு கணக்கு
Revaluation Account is a __________.
(a) Personal Account
(b) Real Account
(c) Impersonal Account
(d) Nominal Account
Show answer ▾ (ஈ) / (d) Nominal Account · Solved one-mark questions →
1 mark
19.
பின்வரும் வாக்கியங்களில் எது சரியானதல்ல ?
(அ) போக்குப் பகுப்பாய்வு என்பது ஓராண்டில் தொகைகளில் ஏற்படும் மாற்றங்களை ஆய்வு செய்தலைக் குறிப்பதாகும்.
(ஆ) குறிப்புகள் மற்றும் பட்டியல்கள் நிதிநிலை அறிக்கைகளின் பகுதி ஆகின்றன.
(இ) பொது அளவு அறிக்கை சில பொது அடிப்படைகளைக் கொண்டு பல்வேறு இனங்களின் தொடர்பினைக் காட்டுவதாகும். பொது அளவு அடிப்படையின் சதவிகிதமாக காட்டப்படுகின்றன.
(ஈ) நிதி நிலை அறிக்கை பகுப்பாய்வின் கருவிகளில் பொது அளவு அறிக்கை உள்ளடங்கும்.
Which of the following statements is not true ?
(a) Trend analysis refers to the study of movement of figures for one year.
(b) Notes and schedules also form a part of financial statements.
(c) The common-size statements show the relationship of various items with some common base, expressed as percentage of the common base.
(d) The tools of financial statement analysis include common-size statement.
Show answer ▾ (அ) / (a) Trend analysis refers to the study of movement of figures for one year. · Solved one-mark questions →
1 mark
20.
மறுமதிப்பீட்டின் போது பொறுப்புகளின் அதிகரிப்பு தருவது :
(அ) நட்டம்
(ஆ) இலாபம்
(இ) ஆதாயம்
(ஈ) மேற்கண்ட ஏதுமில்லை
On revaluation, the increase in liabilities leads to :
(a) Loss
(b) Profit
(c) Gain
(d) None of these
Show answer ▾ (அ) / (a) Loss · Solved one-mark questions →
1 mark

பகுதி – II / PART – II

குறிப்பு : எவையேனும் ஏழு வினாக்களுக்கு விடையளிக்கவும். வினா எண் 30-க்கு கட்டாயமாக விடையளிக்கவும்.
Note : Answer any seven questions. Question No. 30 is compulsory.
21.
நிலை அறிக்கை என்றால் என்ன ?
What is statement of affairs ?
2 marks
22.
உயில் கொடை என்றால் என்ன ?
What is legacy ?
2 marks
23.
கவிதா என்பவர் ஒரு கூட்டாண்மை நிறுவனத்தின் கூட்டாளி. அவர் வழக்கமாக ஒவ்வொரு மாதமும் ₹ 2,500 எடுத்துக் கொள்கிறார். எடுப்புகள் மீது வட்டி ஆண்டுக்கு 4% கணக்கிடப்பட வேண்டும். அவர் ஒவ்வொரு மாத தொடக்கத்தில் எடுத்திருந்தால் எடுப்புகள் மீது வட்டி சராசரி கால முறையைப் பயன்படுத்தி கணக்கிடவும்.
Kavitha is a partner in a firm. She withdraws ₹ 2,500 p.m. regularly. Interest on drawings is charged @ 4% p.a., calculate the interest on drawings using average period, if she draws at the beginning of every month.
2 marks
24.
உயர் இலாபம் என்றால் என்ன ?
What is super profit ?
2 marks
25.
தியாக விகிதம் என்றால் என்ன ?
What is sacrificing ratio ?
2 marks
26.
கூட்டாளி விலகல் என்றால் என்ன ?
What is meant by retirement of a partner ?
2 marks
27.
அப்துல் வரையறு நிறுமம் ₹ 10 மதிப்புள்ள 50,000 நேர்மைப் பங்குகளை ₹ 3 முனைமத்தில் வெளியிட்டது. அனைத்து தொகையும் விண்ணப்பத்துடன் செலுத்தப்பட்டது. குறிப்பேட்டு பதிவுகளைத் தரவும்.
Abdul Ltd, issues 50,000 equity shares of ₹ 10 each payable fully on application. Pass journal entries if shares are issued at a premium of ₹ 3 per share.
2 marks
28.

கீழ்கண்ட தகவல்களிலிருந்து விரைவு விகிதத்தைக் கணக்கிடவும்.

மொத்த நடப்பு பொறுப்புகள் ₹ 2,40,000; மொத்த நடப்பு சொத்துகள் ₹ 4,50,000; சரக்கிருப்பு ₹ 70,000; முன் கூட்டிச் செலுத்திய செலவுகள் ₹ 20,000.

Calculate quick ratio from the following details :

Total current liabilities ₹ 2,40,000; Total current assets ₹ 4,50,000; inventories ₹ 70,000; prepaid expenses ₹ 20,000.

2 marks
29.
தானியங்கும் கணக்கியல் முறை என்றால் என்ன ?
What is automated accounting system ?
2 marks
30.

பின்வரும் விவரங்களிலிருந்து தருண் கோ நிறுமத்தின் ஒப்பீட்டு வருமான அறிக்கையை தயார் செய்யவும்.

விவரம்2016 - 17
₹
2017 - 18
₹
விற்பனை மூலம் பெற்ற வருவாய்1,00,0001,25,000
இதர வருமானங்கள்25,00020,000
செலவுகள்75,00060,000

From the following particulars, prepare comparative income statement of Tharun Co. Ltd.

Particulars2016 - 17
₹
2017 - 18
₹
Revenue from operations1,00,0001,25,000
Other income25,00020,000
Expenses75,00060,000
2 marks

பகுதி – III / PART – III

குறிப்பு : எவையேனும் ஏழு வினாக்களுக்கு விடையளிக்கவும். வினா எண் 40-க்கு கட்டாயமாக விடையளிக்கவும்.
Note : Answer any seven questions. Question No. 40 is compulsory.
31.

பின்வரும் விவரங்களிலிருந்து அவ்வாண்டில் மேற்கொண்ட மொத்த விற்பனையை கண்டறியவும்.

விவரம்₹
2018 ஜனவரி 1 அன்று கடனாளிகள்1,30,000
அவ்வாண்டில் கடனாளிகளிடமிருந்து ரொக்கம் பெற்றது4,20,000
விற்பனைத் திருப்பம்35,000
வாராக் கடன்15,000
2018 டிசம்பர் 31 அன்று கடனாளிகள்2,00,000
ரொக்க விற்பனை4,60,000

From the following details find out total sales made during the year.

Particulars₹
Debtors on 1st January 20181,30,000
Cash received from debtors during the year4,20,000
Sales returns35,000
Bad debts15,000
Debtors on 31st December 20182,00,000
Cash sales4,60,000
3 marks
32.

ஆகாஷ், பாலா, சந்துரு மற்றும் டேனியல் ஒரு நிறுவனத்தின் கூட்டாளிகள். கூட்டாண்மை ஒப்பாவணம் இல்லாதபோது பின்வருவனவற்றை எவ்வாறு மேற்கொள்வீர்கள் ?

(i) ஆகாஷ் அதிக முதல் வழங்கியுள்ளார். அவர் முதல்மீது வட்டி ஆண்டுக்கு 10% கோருகிறார்.

(ii) ஆகாஷ் இலாபத்தினை முதல் விகிதத்தில் பகிர்ந்தளிக்க வேண்டும் என்கிறார். ஆனால் பிற கூட்டாளிகள் அதனை ஒப்புக்கொள்ளவில்லை.

(iii) சந்துருவால் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட கடன் ₹ 50,000. அவர் கடன் மீது வட்டி ஆண்டுக்கு 12% வேண்டுமென்று கோருகிறார்.

Akash, Bala, Chandru and Daniel are partners in a firm. There is no partnership deed. How will you deal with the following ?

(i) Akash has contributed maximum capital. He demands interest on capital at 10% per annum.

(ii) Akash demands the profit to be shared in the capital ratio. But, others do not agree.

(iii) Loan advanced by Chandru to the firm is ₹ 50,000. He demands interest on loan @ 12% per annum.

3 marks
33.

ஒரு நிறுவனத்தின் கடந்த நான்கு ஆண்டுகளின் இலாபங்கள் மற்றும் நட்டங்கள் பின்வருமாறு :

2015 : ₹ 15,000 ; 2016 : ₹ 17,000 ; 2017 : ₹ 6,000 (நட்டம்) ; 2018 : ₹ 14,000

4 ஆண்டுகளின் சராசரி இலாபத்தில் 5 ஆண்டுகள் கொள்முதல் என்ற அடிப்படையில் நற்பெயரின் மதிப்பைக் கணக்கிடவும்.

The profits and losses of a firm for the last four years were as follows :

2015 : ₹ 15,000 ; 2016 : ₹ 17,000 ; 2017 : ₹ 6,000 (Loss) ; 2018 : ₹ 14,000

You are required to calculate the amount of goodwill on the basis of 5 years purchase of average profits of the last 4 years.

3 marks
34.
கூட்டாளி சேர்க்கும் போது மேற்கொள்ள வேண்டிய சரிகட்டுதல்கள் யாவை ?
What are the adjustments required at the time of admission of a partner ?
3 marks
35.
தியாக விகிதத்திற்கும் ஆதாய விகிதத்திற்கும் உள்ள வேறுபாடுகள் யாவை ?
Distinguish between sacrificing ratio and gaining ratio.
3 marks
36.

ராஜன் நிறுமம் ₹ 6,00,000 மதிப்புள்ள இயந்திரத்தை ஜெகன் நிறுவனத்திடம் இருந்து வாங்கியது. அது பங்கொன்று ₹ 10 மதிப்புள்ள முற்றிலும் செலுத்தப்பட்ட நேர்மைப் பங்குகளை அவர்களுக்கு செலுத்த வேண்டிய தொகைக்காக வழங்கியது. கீழ்க்கண்ட நிலைகளில் பதிய வேண்டிய குறிப்பேட்டுப் பதிவுகளைத் தரவும்.

(i) பங்குகளை முகமதிப்பில் வெளியிட்டால்

(ii) பங்குகளை 50% முனைமத்தில் வெளியிட்டால்

Rajan Ltd. purchased machinery of ₹ 6,00,000 from Jagan Traders. It issued equity shares of ₹ 10 each fully paid in satisfaction of their claim. What entries will be made if such issue is made ?

(i) shares issued at par.

(ii) at a premium of 50%.

3 marks
37.

மரியா மற்றும் கலா நிறுமத்தின் பின்வரும் தகவல்களிலிருந்து 2019 மார்ச் 31 -ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய பொது அளவு வருமான அறிக்கையைத் தயார் செய்யவும்.

விவரம்மரியா நிறுமம்
₹
கலா நிறுமம்
₹
விற்பனை மூலம் பெற்ற வருவாய்1,00,0002,00,000
இதர வருமானம்10,00030,000
செலவுகள்70,0001,20,000

From the following particulars of Maria Ltd. and Kala Ltd., prepare common-size income statement for the year ended 31st March 2019.

ParticularsMaria Ltd.
₹
Kala Ltd.
₹
Revenue from operations1,00,0002,00,000
Other income10,00030,000
Expenses70,0001,20,000
3 marks
38.

பின்வரும் தகவல்களிலிருந்து புற அக பொறுப்புகள் விகிதத்தை கணக்கிடவும்.

31.03.2018 அன்றைய இருப்பு நிலைக் குறிப்பு (வருவிய)

விவரம்₹
I. பங்கு மூலதனம் மற்றும் பொறுப்புகள்
1. பங்குதாரர் நிதி
(அ) பங்கு முதல்
நேர்மைப் பங்குகள்1,00,000
(ஆ) காப்புகள் மற்றும் மிகுதி60,000
2. நீண்டகாலப் பொறுப்புகள் :
நீண்டகால கடன்கள் (கடனீட்டுப் பத்திரங்கள்)
80,000
3. நடப்புப் பொறுப்புகள் :
(அ) கணக்குகள் மூலம் செலுத்த வேண்டியவைகள்50,000
(ஆ) இதர நடப்புப் பொறுப்புகள் கொடுபட வேண்டிய செலவுகள்30,000
மொத்தம்3,20,000

From the following information calculate debt equity ratio.

Balance Sheet (Extract) as on 31.03.2018

Particulars₹
I. Equity and Liabilities
1. Shareholder's Funds
(a) Share capital
Equity share capital1,00,000
(b) Reserves and surplus60,000
2. Non-Current liabilities :
Long-term borrowings (Debentures)
80,000
3. Current liabilities :
(a) Trade payables50,000
(b) Other current liabilities
Outstanding expenses
30,000
Total3,20,000
3 marks
39.
கணக்கியல் சான்றாவணம் குறித்து சிறு குறிப்பு வரைக.
Write a brief note on Accounting Vouchers.
3 marks
40.

பின்வரும் விவரங்கள் மார்த்தாண்டம் பெண்கள் பண்பாட்டு மன்றத்தின் இறுதிக் கணக்குகளில் எவ்வாறு தோன்றும் எனக் காட்டவும்.

₹
1.4.2018 அன்று விளையாட்டுப் பொருள்கள் இருப்பு32,000
அவ்வாண்டில் வாங்கிய விளையாட்டுப் பொருள்கள்1,68,000
அவ்வாண்டில் பழைய விளையாட்டுப் பொருள்கள் விற்றது1,000
31.3.2019 அன்று விளையாட்டுப் பொருள்கள் இருப்பு20,000

How will the following appear in the final accounts of Marthandam Women Cultural Association ?

₹
Stock of sports materials on 1.4.201832,000
Sports materials purchased during the year1,68,000
Sale of old sports materials during the year1,000
Stock of sports materials on 31.3.201920,000
3 marks

பகுதி – IV / PART – IV

குறிப்பு : அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்.
Note : Answer all the questions.
41.
(அ)

பின்வரும் விவரங்களிலிருந்து மொத்தக் கொள்முதலைக் கணக்கிடவும்.

விவரம்₹
2017 ஏப்ரல் 1 அன்று பற்பல கடனீந்தோர்75,000
2017 ஏப்ரல் 1 அன்று செலுத்தற்குரிய மாற்றுச்சீட்டு60,000
கடனீந்தோருக்கு செலுத்திய ரொக்கம்3,70,000
செலுத்தற்குரிய மாற்றுச்சீட்டுக்கு செலுத்தியது1,00,000
கொள்முதல் திருப்பம்15,000
ரொக்க கொள்முதல்3,20,000
2018 மார்ச் 31 அன்று கடனீந்தோர்50,000
2018 மார்ச் 31 அன்று செலுத்தற்குரிய மாற்றுச்சீட்டு80,000
(a)

From the following particulars calculate total purchases.

Particulars₹
Sundry creditors on 1st April, 201775,000
Bills payable on 1st April, 201760,000
Paid cash to creditors3,70,000
Paid for bills payable1,00,000
Purchases returns15,000
Cash purchases3,20,000
Creditors on 31st March, 201850,000
Bills payable on 31st March, 201880,000
அல்லது / OR
(ஆ)

அருணன் நிறுமத்தின் 31.03.2019 -ஆம் நாளைய பின்வரும் இருப்பு நிலைக் குறிப்பிலிருந்து :

(i) புற அக பொறுப்புகள் விகிதம்

(ii) உரிமையாளர் விகிதம் மற்றும்

(iii) முதல் உந்துதிறன் விகிதம் கணக்கிடவும்.

விவரம்₹
I பங்கு மூலதனம் மற்றும் பொறுப்புகள்
1. பங்குதாரர் நிதி
(அ) பங்கு முதல்
நேர்மைப் பங்கு முதல்1,50,000
8% முன்னுரிமைப் பங்கு முதல்2,00,000
(ஆ) காப்புகள் மற்றும் மிகுதி1,50,000
2. நீண்டகாலப் பொறுப்புகள்
நீண்ட காலக் கடன்கள் (9% கடனீட்டு பத்திரங்கள்)4,00,000
3. நடப்புப் பொறுப்புகள்
(அ) வங்கியிலிருந்து பெற்ற குறுகிய கால கடன்கள்25,000
(ஆ) கணக்குகள் மூலம் செலுத்த வேண்டியவைகள்75,000
மொத்தம்10,00,000
II. சொத்துகள்
1. நீண்டகாலச் சொத்துகள்
நிலைச் சொத்துகள்
7,50,000
2. நடப்புச் சொத்துகள்
(அ) சரக்கிருப்பு1,20,000
(ஆ) கணக்குகள் மூலம் பெற வேண்டியவைகள்1,00,000
(இ) ரொக்கம் மற்றும் ரொக்கத்திற்கு சமமானவைகள்27,500
(ஈ) இதர நடப்பு சொத்துகள் :
செலவுகளை முன்கூட்டிச் செலுத்தியது
2,500
மொத்தம்10,00,000
(b)

From the following Balance Sheet of Arunan Ltd. as on 31.03.2019. Calculate

(i) Debt-equity ratio

(ii) Proprietary ratio and

(iii) Capital gearing ratio

Particulars₹
I. Equity and Liabilities
1. Shareholder's funds
(a) Share capital
Equity share capital1,50,000
8% preference share capital2,00,000
(b) Reserves and surplus1,50,000
2. Non-current liabilities
Long-term borrowings (9% Debentures)4,00,000
3. Current liabilities
(a) Short-term borrowings from banks25,000
(b) Trade payables75,000
Total10,00,000
II. Assets
1. Non-current assets
Fixed Assets
7,50,000
2. Current assets
(a) Inventories1,20,000
(b) Trade receivables1,00,000
(c) Cash and cash equivalents27,500
(d) Other current assets
Expenses paid in advance
2,500
Total10,00,000
5 marks
42.
(அ)

தமிழ் கல்வியியல் மன்றத்தின் கீழ்க்காணும் தகவல்களிலிருந்து 2019 மார்ச் 31-ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய பெறுதல்கள் மற்றும் செலுத்தல்கள் கணக்கினைத் தயார் செய்யவும்.

விவரம்₹விவரம்₹
தொடக்க ரொக்க இருப்பு (1.4.2018)18,000கட்டடம் வாங்கியது2,10,000
வாடகை செலுத்தியது6,000பணியாளர் சம்பளம்55,000
உதவித் தொகை அளித்தது15,200சந்தா பெற்றது2,65,000
நுழைவுக் கட்டணம் பெற்றது18,500
(a)

From the following particulars of Tamil Educational Society, prepare Receipts and Payments accounts for the year ended 31st March, 2019.

Particulars₹Particulars₹
Opening cash balance as on 1.4.201818,000Building purchased2,10,000
Rent paid6,000Staff salary55,000
Scholarship given15,200Subscription received2,65,000
Entrance fees received18,500
அல்லது / OR
(ஆ)

ஆகாஷ், முகேஷ் மற்றும் சஞ்சய் என்ற கூட்டாளிகள் 3 : 2 : 1 என்ற விகிதத்தில் இலாபங்கள் மற்றும் நட்டங்களைப் பகிர்ந்து வந்தனர். 2017 மார்ச் 31 அன்று அவர்களுடைய இருப்பு நிலைக் குறிப்பு பின்வருமாறு :

பொறுப்புகள்₹₹சொத்துகள்₹
முதல் கணக்குகள் :கட்டடம்1,10,000
ஆகாஷ்40,000வாகனம்30,000
முகேஷ்60,000சரக்கிருப்பு26,000
சஞ்சய்30,0001,30,000கடனாளிகள்25,000
இலாபநட்ட பகிர்வு க/கு12,000கைரொக்கம்15,000
பொதுக் காப்பு24,000
தொழிலாளர் ஈட்டுநிதி18,000
செலுத்தற்குரிய மாற்றுச்சீட்டு22,000
2,06,0002,06,000

பகிர்ந்து தரா இலாபம், பொதுக் காப்பு மற்றும் தொழிலாளர் ஈட்டுநிதி போன்றவற்றை பகிர்ந்தளிப்பதற்கான குறிப்பேட்டு பதிவுகள் தருக. மேலும் கூட்டாளிகளின் முதல் கணக்கை தயாரிக்கவும்.

(b)

Akash, Mugesh and Sanjay are partners in a firm sharing profits and losses in the ratio of 3 : 2 : 1. Their balance sheet as on 31st March, 2017 is as follows :

Liabilities₹₹Assets₹
Capital accounts :Buildings1,10,000
Akash40,000Vehicle30,000
Mugesh60,000Stock in trade26,000
Sanjay30,0001,30,000Debtors25,000
Profit and Loss appropriation A/c12,000Cash in hand15,000
General reserve24,000
Workmen compensation fund18,000
Bills payable22,000
2,06,0002,06,000

Pass journal entry to transfer accumulated profit general reserve and workmen compensation fund and prepare the capital account of the partners.

5 marks
43.
(அ)

பின்வரும் விவரங்களில் இருந்து உயர் இலாபத்தில் 3 ஆண்டுகள் கொள்முதல் என்ற அடிப்படையில் நற்பெயரின் மதிப்பை கணக்கிடவும்.

(i) பயன்படுத்தப்பட்ட முதல் : ₹ 2,00,000

(ii) சாதாரண இலாப விகிதம் : 15%

(iii) வியாபாரத்தின் சராசரி இலாபம் : ₹ 42,000

(a)

From the following information, calculate the value of goodwill based on 3 years purchase of super profit.

(i) Capital employed : ₹ 2,00,000

(ii) Normal rate of return : 15%

(iii) Average profit of the business : ₹ 42,000

அல்லது / OR
(ஆ)ஜாய் நிறுமம் ₹ 10 மதிப்புள்ள 10,000 நேர்மைப் பங்குகளை விண்ணப்பத்தின் போது ₹ 5, ஒதுக்கீட்டின் போது ₹ 3, முதலாம் மற்றும் இறுதி அழைப்பின் போது ₹ 2 செலுத்தும் வகையில் வெளியிடப்பட்டது. 9,000 பங்குகளை வாங்க பொது மக்கள் விண்ணப்பித்துள்ளனர். இயக்குநர்கள் 9,000 பங்குகளையும் ஒதுக்கீடு செய்து அதற்கான தொகையையும் பெற்றுக் கொண்டனர். தேவையான குறிப்பேட்டுப் பதிவுகளை தரவும்.
(b)Joy company issued 10,000 equity shares at ₹ 10 per share payable ₹ 5 on application, ₹ 3 on allotment and ₹ 2 on first and final call. The public subscribed for 9,000 shares. The directors allotted all the 9,000 shares and duly received the money. Pass the necessary journal entries.
5 marks
44.
(அ)

பின்வரும் மலர் நிறுமத்தின் 2016 மார்ச் 31 மற்றும் 2017 மார்ச் 31 -ஆம் நாளைய ஒப்பீட்டு இருப்பு நிலைக் குறிப்பினைத் தயார் செய்யவும்.

விவரம்2016 மார்ச் 31
₹
2017 மார்ச் 31
₹
I. பங்கு மூலதனம் மற்றும் பொறுப்புகள்
1. பங்குதாரர் நிதி
(அ) பங்கு முதல்2,00,0002,50,000
(ஆ) காப்பும் மிகுதியும்50,00050,000
2. நீண்டகாலப் பொறுப்புகள்
நீண்ட காலக் கடன்கள்
30,00060,000
3. நடப்பு பொறுப்புகள்
கணக்குகள் மூலம் செலுத்த வேண்டியவைகள்
20,00060,000
மொத்தம்3,00,0004,20,000
II. சொத்துகள்
1. நீண்டகாலச் சொத்துகள்
(அ) நிலைச் சொத்துகள்1,00,0001,50,000
(ஆ) நீண்டகால முதலீடுகள்50,00075,000
2. நடப்புச் சொத்துகள்
சரக்கிருப்பு75,0001,50,000
ரொக்கம் மற்றும் ரொக்கத்திற்கு சமமானவைகள்75,00045,000
மொத்தம்3,00,0004,20,000
(a)

From the following particulars, prepare comparative balance sheet of Malar Ltd. as on 31st March, 2016 and 31st March, 2017.

Particulars31st March, 2016
₹
31st March, 2017
₹
I. Equity and Liabilities
1. Shareholder's fund
(a) Share capital2,00,0002,50,000
(b) Reserves and surplus50,00050,000
2. Non-current liabilities
Long-term borrowings
30,00060,000
3. Current liabilities
Trade payables
20,00060,000
Total3,00,0004,20,000
II. Assets
1. Non-current assets
(a) Fixed assets1,00,0001,50,000
(b) Non-current investments50,00075,000
2. Current assets
Inventories75,0001,50,000
Cash and cash equivalents75,00045,000
Total3,00,0004,20,000
அல்லது / OR
(ஆ)

ஊட்டி மனமகிழ் மன்றத்தின் பின்வரும் பெறுதல்கள் மற்றும் செலுத்தல்கள் கணக்கிலிருந்து 2018 மார்ச் 31 -ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய வருவாய் மற்றும் செலவினக் கணக்கை தயாரிக்கவும்.

பெறுதல்கள்₹செலுத்தல்கள்₹
தொடக்க இருப்பு :
கை ரொக்கம்
5,000விளையாட்டுப் பொருள்கள் வாங்கியது10,000
வாடகை பெற்றது10,000எழுது பொருளுக்காக செலுத்தியது7,000
முதலீடுகள் விற்றது8,000கணிப்பொறி வாங்கியது25,000
சந்தா பெற்றது54,000சம்பளம்20,000
இறுதி இருப்பு
கை ரொக்கம்
15,000
77,00077,000
(b)

From the following Receipts and Payment Account of Ooty Recreation Club, prepare income and expenditure account for the year ended 31.03.2018.

Receipts₹Payments₹
To opening balance
Cash in hand
5,000By sports materials purchased10,000
To rent received10,000By stationery paid7,000
To sale of investments8,000By computer purchased25,000
To subscription received54,000By salaries20,000
By closing balance
Cash in hand
15,000
77,00077,000
5 marks
45.
(அ)

ஸ்ரீராம் மற்றும் ராஜ் எனும் கூட்டாளிகள் முறையே 2 : 1 எனும் விகிதத்தில் இலாப நட்டங்களை பகிர்ந்து வந்தனர். 1.4.2017 அன்று நெல்சன் என்பவரை புதிய கூட்டாளியாக சேர்த்தனர். கீழ்க்கண்ட சரிக்கட்டுதல்கள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

(i) சரக்கிருப்பு மதிப்பை ₹ 5,000 உயர்த்த வேண்டும்.

(ii) ஏடுகளில் பதிவு பெறாமலுள்ள முதலீடுகள் ₹ 7,000 தற்போது பதிவு செய்தல் வேண்டும்.

(iii) அலுவலக சாதனங்கள் மதிப்பை ₹ 10,000 குறைக்க வேண்டும்.

(iv) கொடுபடாமலுள்ள கூலி ₹ 9,500 -க்கு வகை செய்ய வேண்டும்.

குறிப்பேட்டுப் பதிவுகள் தந்து மறுமதிப்பீட்டுக் கணக்கை தயாரிக்கவும்.

(a)

Sriram and Raj are partners sharing profits and losses in the ratio of 2 : 1. Nelson joins as a partner on 1st April, 2017.

The following adjustments are to be made :

(i) Increase the value of stock by ₹ 5,000.

(ii) Bring into record investment of ₹ 7,000 which had not been recorded in the books of the firm.

(iii) Reduce the value of office equipment by ₹ 10,000.

(iv) A provision would also be made for outstanding wages for ₹ 9,500.

Give journal entries and prepare revaluation account.

அல்லது / OR
(ஆ)

பின்வரும் விவரங்களிலிருந்து மொத்த விற்பனையை கணக்கிடவும்.

விவரம்₹விவரம்₹
2018 ஏப்ரல் 1 அன்று கடனாளிகள்2,50,000பெறுதற்குரிய மாற்றுச் சீட்டு மறுக்கப்பட்டது15,000
2018 ஏப்ரல் 1 அன்று பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு60,000உள் திருப்பம்50,000
கடனாளிகளிடமிருந்து பெற்ற ரொக்கம்7,25,0002019 மார்ச் 31 அன்று பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு90,000
பெறுதற்குரிய மாற்றுச்சீட்டுக்காக ரொக்கம் பெற்றது1,60,0002019 மார்ச் 31 அன்று பற்பல கடனாளிகள்2,40,000
வாராக்கடன்30,000ரொக்க விற்பனை3,15,000
(b)

From the following particulars, calculate total sales.

Particulars₹Particulars₹
Debtors on 1st April 20182,50,000Bills receivable dishonoured15,000
Bills receivable on 1st April 201860,000Returns inward50,000
Cash received from debtors7,25,000Bills receivable on 31st March 201990,000
Cash received for bills receivable1,60,000Sundry debtors on 31st March 20192,40,000
Bad debts30,000Cash sales3,15,000
5 marks
46.
(அ)

(i) கயல், மாலா மற்றும் நீலா என்ற கூட்டாளிகள் தங்கள் இலாபங்களை 2 : 2 : 1 என்ற விகிதத்தில் பகிர்ந்து வந்தனர். கயல் என்பவர் கூட்டாண்மையை விட்டு விலகுகிறார். மாலா மற்றும் நீலாவுக்கும் இடையே உள்ள புதிய இலாப பகிர்வு விகிதம் 3 : 2 ஆதாய விகிதத்தை கணக்கிடவும்.

(ii) சுனில், சுமதி மற்றும் சுந்தரி என்ற கூட்டாளிகள் தங்கள் இலாபங்களை 3 : 3 : 4 என்ற விகிதத்தில் பகிர்ந்து வந்தனர். சுந்தரி என்பவர் கூட்டாண்மையை விட்டு விலகுகிறார் மற்றும் அவருடைய பங்கு முழுவதையும் சுனில் எடுத்துக் கொள்கிறார். புதிய இலாப பகிர்வு விகிதம் மற்றும் ஆதாய விகிதத்தைக் கணக்கிடவும்.

(a)

(i) Kayal, Mala and Neela are partners sharing profits in the ratio of 2 : 2 : 1. Kayal retires and the new profit sharing ratio between Mala and Neela is 3 : 2. Calculate the gaining ratio.

(ii) Sunil, Sumathi and Sundari are partners sharing profits in the ratio of 3 : 3 : 4. Sundari retires and her share is taken up entirely by Sunil. Calculate the new profit sharing ratio and gaining ratio.

அல்லது / OR
(ஆ)

யாஸ்மின் மற்றும் சக்தி நிறுமத்தின் பின்வரும் தகவல்களிலிருந்து பொதுஅளவு நிதிநிலை அறிக்கையினைத் தயார் செய்யவும்.

விவரம்யாஸ்மின் நிறுமம்
₹
சக்தி நிறுமம்
₹
I. பங்கு மூலதனம் மற்றும் பொறுப்புகள்
1. பங்குதாரர் நிதி
(அ) பங்கு முதல்2,00,0003,00,000
(ஆ) காப்பும் மிகுதியும்50,00060,000
2. நீண்டகாலப் பொறுப்புகள்
நீண்டகாலக் கடன்கள்
1,50,0001,80,000
3. நடப்புப் பொறுப்புகள்
கணக்குகள் மூலம் செலுத்த வேண்டியவைகள்
1,00,00060,000
மொத்தம்5,00,0006,00,000
II. சொத்துகள்
1. நீண்டகாலச் சொத்துகள்
(அ) நிலைச் சொத்துகள்2,00,0003,00,000
(ஆ) நீண்டகால முதலீடுகள்50,0001,20,000
2. நடப்புச் சொத்துகள்
சரக்கிருப்பு2,00,00090,000
ரொக்கம் மற்றும் ரொக்கத்திற்கு சமமானவைகள்50,00090,000
மொத்தம்5,00,0006,00,000
(b)

Prepare common-size statement of financial position for the following particulars of Yasmin Ltd. and Sakthi Ltd.

ParticularsYasmin Ltd.
₹
Sakthi Ltd.
₹
I. Equity and Liabilities
1. Shareholder's fund
(a) Share capital2,00,0003,00,000
(b) Reserves and surplus50,00060,000
2. Non-current liabilities
Long-term borrowings
1,50,0001,80,000
3. Current liabilities
Trade payables
1,00,00060,000
Total5,00,0006,00,000
II. Assets
1. Non-current assets
(a) Fixed assets2,00,0003,00,000
(b) Non-current investments50,0001,20,000
2. Current assets
Inventories2,00,00090,000
Cash and cash equivalents50,00090,000
Total5,00,0006,00,000
5 marks
47.
(அ)

முகேஷ் நிறுமத்தின் பின்வரும் இலாப நட்ட அறிக்கையிலிருந்து

(i) மொத்த இலாப விகிதம்

(ii) நிகர இலாப விகிதம் கணக்கிடவும்

முகேஷ் நிறுமத்தின் இலாபநட்ட அறிக்கை.

விவரம்தொகை
₹
I. விற்பனை மூலம் பெற்ற வருவாய்2,50,000
II. இதர வருமானம்
முதலீடு மூலம் வருவாய்
20,000
III. மொத்த வருவாய் (I+II)2,70,000
IV. செலவுகள் :
கொள்முதல் செய்த சரக்குகள்90,000
சரக்கிருப்பு மாற்றம்10,000
பணியாளர் நலன்களுக்கான செலவுகள்15,000
இதர செலவுகள்55,000
வரி ஒதுக்கு25,000
மொத்த செலவுகள்1,95,000
V. அவ்வாண்டிற்கான இலாபம்75,000
(a)

From the following statement of profit and loss of Mukesh Ltd. Calculate,

(i) Gross profit ratio

(ii) Net profit ratio

Statement of Profit and Loss

ParticularsAmount
₹
I. Revenue from operations2,50,000
II. Other income :
Income from investment
20,000
III. Total revenues (I + II)2,70,000
IV. Expenses :
Purchase of stock in trade90,000
Changes in inventories10,000
Expenses on Employee benefits15,000
Other expenses55,000
Provision for Tax25,000
Total Expenses1,95,000
V. Profit for the year75,000
அல்லது / OR
(ஆ)கணினிமயக் கணக்கியல் முறையின் பயன்பாடுகளில் ஏதேனும் ஐந்தினை விளக்கவும்.
(b)Explain any five applications of computerised accounting systems.
5 marks
⬇️ Download PDF All Accountancy papers