TN Online TestSamacheer Kalvi practice

12th Standard Accountancy Question Paper Supplementary June 2023

Paper code 7057 90 marks 180 minutes

The complete Supplementary June 2023 public exam paper exactly as printed: every question in Tamil and English. Download the PDF, or take Part I as a free online test.

கணக்குப்பதிவியல் / Accountancyதுணைத் தேர்வு ஜூன் 2023 · Supplementary June 2023

பகுதி – I / PART – I

குறிப்பு : (i) அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும். (ii) கொடுக்கப்பட்டுள்ள மாற்று விடைகளில் மிகவும் ஏற்புடைய விடையைத் தேர்ந்தெடுத்துக் குறியீட்டுடன் விடையினையும் சேர்த்து எழுதவும்.
Note : (i) Answer all the questions. (ii) Choose the most appropriate answer from the given four alternatives and write the option code and the corresponding answer.
1.
கூட்டாண்மை ஒப்பந்தம் இல்லாதபோது கூட்டாளிகள் பெறத் தகுதியுடையது :
(அ) சம்பளம்
(ஆ) கழிவு
(இ) கடன் மீது வட்டி
(ஈ) முதல் மீது வட்டி
In the absence of Partnership agreement, partners are entitled to get :
(a) Salary
(b) Commission
(c) Interest on Loan
(d) Interest on Capital
Show answer ▾ (இ) / (c) Interest on Loan · Solved one-mark questions →
1 mark
2.
வருவாய் மற்றும் செலவினக் கணக்கு தயாரிக்கப்படுவதன் மூலம் கண்டறியப்படுவது :
(அ) இலாபம் அல்லது நட்டம்
(ஆ) ரொக்கம் மற்றும் வங்கி இருப்பு
(இ) உபரி அல்லது பற்றாக்குறை
(ஈ) நிதிநிலை
Income and Expenditure Account is prepared to find out :
(a) Profit or Loss
(b) Cash and Bank balance
(c) Surplus or Deficit
(d) Financial position
Show answer ▾ (இ) / (c) Surplus or Deficit · Solved one-mark questions →
1 mark
3.
கூட்டாளியின் புதிய இலாபப் பகிர்வை விட பழைய இலாபப் பகிர்வு அதிகமாக இருந்தால், அவ்வேறுபாடு ________ என அழைக்கப்படுகிறது.
(அ) முதல் விகிதம்
(ஆ) தியாக விகிதம்
(இ) ஆதாய விகிதம்
(ஈ) புதிய விகிதம்
If the old profit sharing ratio is more than the new profit sharing ratio of a partner, the difference is called as :
(a) Capital ratio
(b) Sacrificing ratio
(c) Gaining ratio
(d) New ratio
Show answer ▾ (ஆ) / (b) Sacrificing ratio · Solved one-mark questions →
1 mark
4.
ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காக பெற்ற நன்கொடை :
(அ) வருவாயின வரவு
(ஆ) முதலின வரவு
(இ) வருவாயினச் செலவு
(ஈ) முதலினச் செலவு
Donation received for a specific purpose is :
(a) Revenue receipt
(b) Capital receipt
(c) Revenue expenditure
(d) Capital expenditure
Show answer ▾ (ஆ) / (b) Capital receipt · Solved one-mark questions →
1 mark
5.
தொடக்க நிலை அறிக்கை வழக்கமாக தயாரிக்கப்படுவது :
(அ) அவ்வாண்டின் தொடக்க முதல் கண்டறிய
(ஆ) அவ்வாண்டின் இறுதி முதல் கண்டறிய
(இ) அவ்வாண்டின் இலாபம் கண்டறிய
(ஈ) அவ்வாண்டின் நட்டம் கண்டறிய
Opening statement of affairs is usually prepared to find out the :
(a) Capital in the beginning of the year.
(b) Capital at the end of the year.
(c) Profit made during the year.
(d) Loss occurred during the year.
Show answer ▾ (அ) / (a) Capital in the beginning of the year. · Solved one-mark questions →
1 mark
6.
நிதி நிலை அறிக்கைகள் வெளிக்காட்டாதது :
(அ) பணம் சாரா தகவல்கள்
(ஆ) கடந்த கால தகவல்கள்
(இ) குறுகிய கால தகவல்கள்
(ஈ) நீண்ட கால தகவல்கள்
The financial statements do not exhibit :
(a) Non-monetary data
(b) Past data
(c) Short term data
(d) Long term data
Show answer ▾ (அ) / (a) Non-monetary data · Solved one-mark questions →
1 mark
7.
நடப்பு விகிதம் காட்டுவது :
(அ) குறுகிய காலக் கடன் தீர்க்கும் திறன்
(ஆ) மேலாண்மைத் திறன்
(இ) இலாபம் ஈட்டும் திறன்
(ஈ) நீண்ட காலக் கடன் தீர்க்கும் திறன்
Current ratio indicates :
(a) Ability to meet short term obligations
(b) Efficiency of management
(c) Profitability
(d) Ability to meet long term obligations
Show answer ▾ (அ) / (a) Ability to meet short term obligations · Solved one-mark questions →
1 mark
8.
கூட்டாளி விலகலின்போது பொதுக்காப்பு மாற்றப்படுவது :
(அ) அனைத்து கூட்டாளிகளின் முதல் கணக்கிற்கு
(ஆ) மறுமதிப்பீட்டுக் கணக்கிற்கு
(இ) தொடரும் கூட்டாளிகளின் முதல் கணக்கிற்கு
(ஈ) நினைவுக் குறிப்பு மறுமதிப்பீட்டுக் கணக்கிற்கு
On retirement of a partner, general reserve is transferred to the :
(a) Capital account of all the partners
(b) Revaluation account
(c) Capital account of the continuing partners
(d) Memorandum Revaluation account
Show answer ▾ (அ) / (a) Capital account of all the partners · Solved one-mark questions →
1 mark
9.
சொத்துகளை வாங்கி பங்குகள் வெளியிடும்போது வரவு வைக்கப்படும் கணக்கு :
(அ) விற்பனையாளர் கணக்கு
(ஆ) பற்பல சொத்துகள் கணக்கு
(இ) பங்கு முதல் கணக்கு
(ஈ) வங்கி கணக்கு
When shares are issued for purchase of assets, the account to be credited is :
(a) Vendor's account
(b) Sundry assets account
(c) Share capital account
(d) Bank account
Show answer ▾ (இ) / (c) Share capital account · Solved one-mark questions →
1 mark
10.
சம்பளக் கணக்கு பின்வரும் எந்த தலைப்பின் கீழ் வரும் ?
(அ) நேரடி வருமானங்கள்
(ஆ) நேரடி செலவினங்கள்
(இ) மறைமுக வருமானங்கள்
(ஈ) மறைமுக செலவினங்கள்
Salary account comes under which of the following head ?
(a) Direct Incomes
(b) Direct Expenses
(c) Indirect Incomes
(d) Indirect Expenses
Show answer ▾ (ஈ) / (d) Indirect Expenses · Solved one-mark questions →
1 mark
11.
கடன் விற்பனைத் தொகை கணக்கிட தயாரிக்கப்படுவது :
(அ) மொத்தக் கடனாளிகள் கணக்கு
(ஆ) மொத்தக் கடனீந்தோர் கணக்கு
(இ) பெறுதற்குரிய மாற்றுச் சீட்டுக் கணக்கு
(ஈ) செலுத்தற்குரிய மாற்றுச் சீட்டுக் கணக்கு
The amount of credit sales can be computed from :
(a) Total Debtors Account
(b) Total Creditors Account
(c) Bills Receivable Account
(d) Bills Payable Account
Show answer ▾ (அ) / (a) Total Debtors Account · Solved one-mark questions →
1 mark
12.
ஜேம்ஸ் மற்றும் கமல் இலாப நட்டங்களை 5 : 3 என்ற விகிதத்தில் பகிர்ந்து கொள்கின்றனர். அவர்கள், சுனில் என்பவரை 1/5 இலாப பங்கிற்கு கூட்டாளியாக சேர்த்துக் கொண்டனர். தியாக விகிதத்தைக் கணக்கிடவும் :
(அ) 1 : 3
(ஆ) 3 : 1
(இ) 5 : 3
(ஈ) 3 : 5
James and Kamal are sharing profits and losses in the ratio of 5 : 3. They admit Sunil as a partner giving him 1/5 share of profits. Find out the sacrificing ratio.
(a) 1 : 3
(b) 3 : 1
(c) 5 : 3
(d) 3 : 5
Show answer ▾ (இ) / (c) 5 : 3 · Solved one-mark questions →
1 mark
13.
ஒரு கூட்டாளி ஒவ்வொரு மாத நடுவிலும் ஒரு குறிப்பிட்ட தொகையை வழக்கமாக எடுத்துக் கொள்ளும்போது அந்த எடுப்புகள் மீது கணக்கிடப்படும் வட்டிக்குரிய மாதங்கள் சராசரியாக :
(அ) 5.5 மாதங்கள்
(ஆ) 6 மாதங்கள்
(இ) 12 மாதங்கள்
(ஈ) 6.5 மாதங்கள்
When a partner withdraws regularly a fixed sum of money at the middle of every month, the period for which interest is to be calculated on the drawings on an average is :
(a) 5.5 months
(b) 6 months
(c) 12 months
(d) 6.5 months
Show answer ▾ (ஆ) / (b) 6 months · Solved one-mark questions →
1 mark
14.
உயர் இலாபம் பின்வரும் இரண்டிற்கும் இடையேயான வேறுபாடாகும் :
(அ) பயன்படுத்தப்பட்ட முதல் மற்றும் சராசரி இலாபம்
(ஆ) சொத்துகள் மற்றும் பொறுப்புகள்
(இ) சராசரி இலாபம் மற்றும் சாதாரண இலாபம்
(ஈ) நடப்பு ஆண்டின் இலாபம் மற்றும் சராசரி இலாபம்
Super Profit is the difference between :
(a) Capital employed and average profit
(b) Assets and Liabilities
(c) Average profit and normal profit
(d) Current year's profit and average profit
Show answer ▾ (இ) / (c) Average profit and normal profit · Solved one-mark questions →
1 mark
15.
முக மதிப்பை விட அதிகமாக பெற்ற தொகை, வரவு வைக்கப்படும் கணக்கு :
(அ) பத்திர முனைமக் கணக்கு
(ஆ) அழைப்பு முன்பணக் கணக்கு
(இ) பங்கு முதல் கணக்கு
(ஈ) பங்கு ஒறுப்பிழப்புக் கணக்கு
The amount received over and above the par value is credited to :
(a) Securities premium account
(b) Calls in advance account
(c) Share capital account
(d) Forfeited shares account
Show answer ▾ (அ) / (a) Securities premium account · Solved one-mark questions →
1 mark
16.
ஒரு இனம் மற்றொரு இனத்தோடு பெற்றிருக்கும் தொடர்பினைக் கணிதவியல் முறையில் கூறுவது :
(அ) முடிவு
(ஆ) விகிதம்
(இ) மாதிரி
(ஈ) தீர்மானம்
The mathematical expression that provides a measure of the relationship between two figures is called as :
(a) Conclusion
(b) Ratio
(c) Model
(d) Decision
Show answer ▾ (ஆ) / (b) Ratio · Solved one-mark questions →
1 mark
17.
பின்வருவனவற்றில் எது நிதிநிலைப் பகுப்பாய்வின் ஒரு கருவி அல்ல ?
(அ) போக்குப் பகுப்பாய்வு
(ஆ) பொது அளவு அறிக்கை
(இ) ஒப்பீட்டு அறிக்கை
(ஈ) நிர்ணயிக்கப்பட்ட அடக்கவிலையியல்
Which of the following is not a tool of financial statement analysis ?
(a) Trend Analysis
(b) Common Size Statement
(c) Comparative Statement
(d) Standard Costing
Show answer ▾ (ஈ) / (d) Standard Costing · Solved one-mark questions →
1 mark
18.
நடப்புப் பொறுப்பு ₹40,000; நடப்புச் சொத்து ₹1,00,000; சரக்கிருப்பு ₹20,000 எனில் விரைவு விகிதம் :
(அ) 1 : 1
(ஆ) 2.5 : 1
(இ) 2 : 1
(ஈ) 1 : 2
Current liabilities ₹40,000; Current assets ₹1,00,000; Inventory ₹20,000. Quick ratio is :
(a) 1 : 1
(b) 2.5 : 1
(c) 2 : 1
(d) 1 : 2
Show answer ▾ (இ) / (c) 2 : 1 · Solved one-mark questions →
1 mark
19.
மறுமதிப்பீட்டின்போது பொறுப்புகளின் அதிகரிப்பு தருவது :
(அ) ஆதாயம்
(ஆ) நட்டம்
(இ) இலாபம்
(ஈ) உயர் இலாபம்
On revaluation, the increase in liabilities leads to :
(a) Gain
(b) Loss
(c) Profit
(d) Super Profit
Show answer ▾ (ஆ) / (b) Loss · Solved one-mark questions →
1 mark
20.
Tally-ல் எது முன்கூட்டியே வரையறுக்கப்படாத குழு?
(அ) அனாமத்து கணக்கு
(ஆ) கொடுபட வேண்டிய செலவுகள் கணக்கு
(இ) விற்பனை கணக்கு
(ஈ) முதலீடுகள்
Which is not the default group in Tally ?
(a) Suspense Account
(b) Outstanding Expenses Account
(c) Sales Account
(d) Investments
Show answer ▾ (ஆ) / (b) Outstanding Expenses Account · Solved one-mark questions →
1 mark

பகுதி – II / PART – II

குறிப்பு : எவையேனும் ஏழு வினாக்களுக்கு விடையளிக்கவும். வினா எண் 30 -க்கு கட்டாயமாக விடையளிக்கவும்.
Note : Answer any seven questions. Question No. 30 is compulsory.
21.
கூட்டாண்மை ஒப்பாவணம் என்றால் என்ன ?
What is a Partnership deed ?
2 marks
22.
முழுமை பெறா பதிவேடுகளின் இயல்புகளில் எவையேனும் இரண்டினைத் தரவும்.
Give any two features of incomplete records.
2 marks
23.
ஆயுள் உறுப்பினர் கட்டணம் - சிறு குறிப்பு வரைக.
Write a short note on life membership fees.
2 marks
24.

ஒரு நிறுவனத்தில் கடந்த நான்கு ஆண்டுகளின் இலாபங்கள் மற்றும் நட்டங்கள் பின்வருமாறு :

2015 - ₹ 15,000; 2016 - ₹ 17,000; 2017 - ₹ 6,000 (நட்டம்); 2018 - ₹ 14,000.

4 ஆண்டுகள் சராசரி இலாபத்தில் 5 ஆண்டுகள் கொள்முதல் என்ற அடிப்படையில் நற்பெயரின் மதிப்பைக் கணக்கிடவும்.

The Profits and Losses of a firm for the last four years were as follows.

2015 - ₹ 15,000; 2016 - ₹ 17,000; 2017 - ₹ 6,000 (Loss); 2018 - ₹ 14,000.

You are required to calculate the amount of goodwill on the basis of 5 years purchase of average profits of the last 4 years.

2 marks
25.
புதிய கூட்டாளி சேர்க்கையின்போது பகிர்ந்து தரா இலாபங்கள் மற்றும் நட்டங்கள் எவ்வாறு கூட்டாளிகளுக்கு பகிர்ந்தளிக்கப்படுகிறது?
How are accumulated profits and losses distributed among the partners at the time of admission of a new partner ?
2 marks
26.
நிதி நிலை அறிக்கை பகுப்பாய்வின் கருவிகளைப் பட்டியலிடவும்.
List the tools of financial statement analysis.
2 marks
27.
ரோஸி, ரதி மற்றும் இராணி என்ற கூட்டாளிகள் தங்கள் இலாபங்கள் மற்றும் நட்டங்களை சமமாகப் பகிர்ந்து வந்தனர். 1.1.2018 அன்று ரதி கூட்டாண்மையிலிருந்து விலகினார். அந்நாளைய இருப்பு நிலைக் குறிப்பின் சொத்துகள் பக்கத்தில் ₹ 45,000 பகிர்ந்து தரா நட்டம் எனக் காட்டியது. பகிர்ந்து தரா நட்டத்தைப் பகிர்ந்தளிப்பதற்கான குறிப்பேட்டுப் பதிவைத் தரவும்.
Rosi, Rathi and Rani are partners of a firm sharing profits and losses equally. Rathi retired from the partnership on 1.1.2018. On that date their balance sheet showed accumulated loss of ₹ 45,000 on the asset side of the balance sheet. Give the journal entry to distribute the accumulated loss.
2 marks
28.

மொத்த இலாப விகிதத்தைக் கணக்கிடவும். மொத்த இலாபம் ₹ 3,00,000; விற்பனை மூலம் பெற்ற வருவாய் ₹ 5,00,000.

Calculate Gross Profit ratio.

Gross Profit ₹ 3,00,000; Revenue from Operations ₹ 5,00,000.

2 marks
29.
கணக்கியல் அறிக்கைகள் என்றால் என்ன ?
What are accounting reports ?
2 marks
30.
சாதாரண இலாப விகிதம் என்றால் என்ன ?
What is normal rate of return ?
2 marks

பகுதி – III / PART – III

குறிப்பு : எவையேனும் ஏழு வினாக்களுக்கு விடையளிக்கவும். வினா எண் 40 -க்கு கட்டாயமாக விடையளிக்கவும்.
Note : Answer any seven questions. Question No. 40 is compulsory.
31.

பின்வரும் தகவல்களிலிருந்து 2018, டிசம்பர் 31ஆம் நாளைய முதல் கண்டறியவும்.

விவரம்₹
2018 ஜனவரி 1 அன்று முதல்1,00,000
உரிமையாளர் தனது சொந்த பயனுக்காக சரக்கு எடுத்தது30,000
அவ்வாண்டில் கொண்டு வந்த கூடுதல் முதல்15,000
அவ்வாண்டின் இலாபம்60,000

From the following details, calculate the capital as on 31st December 2018.

Particulars₹
Capital as on 1st January 20181,00,000
Goods withdrawn for personal use by the owner30,000
Additional capital introduced during the year15,000
Profit for the year60,000
3 marks
32.

A, B, C மற்றும் D ஆகியோர் ஒரு கூட்டாண்மை நிறுவனத்தின் கூட்டாளிகள். நிறுவனத்தில் கூட்டாண்மை ஒப்பாவணம் ஏதுமில்லை. பின்வருவனவற்றை எவ்வாறு மேற்கொள்வீர் ?

  1. A அதிக முதல் வழங்கியுள்ளார், அவர் முதல் மீது வட்டி ஆண்டுக்கு 12% கோருகிறார்.
  2. C யிடமிருந்து நிறுவனம் பெற்ற கடன் ₹ 10,000. அவர் கடன் மீது வட்டி ஆண்டுக்கு 9% கோருகிறார். A மற்றும் B அதனை ஒப்புக் கொள்ளவில்லை.
  3. A இலாபத்தினை முதல் விகிதத்தில் பகிர்வு செய்யப்பட வேண்டும் என்கிறார். ஆனால் B, C மற்றும் D அதனை ஒப்புக் கொள்ளவில்லை.

A, B, C and D are partners in a firm. There is no partnership deed. How will you deal with the following ?

  1. A has contributed maximum capital. He demands interest on capital at 12% per annum.
  2. Loan advanced by C to the firm is ₹ 10,000. He demands interest on loan @ 9% per annum. A and B do not agree with this.
  3. A demands the profits to be shared in the capital ratio. But B, C and D do not agree.
3 marks
33.

பின்வரும் விவரங்களிலிருந்து உயர் இலாபத்தில் 3 ஆண்டுகள் கொள்முதல் என்ற அடிப்படையில் நற்பெயர் மதிப்பைக் காண்க.

  1. பயன்படுத்தப்பட்ட முதல் ₹ 2,00,000
  2. சாதாரண இலாப விகிதம் 15%
  3. வியாபாரத்தின் சராசரி இலாபம் ₹ 42,000

From the following information, calculate the value of goodwill based on 3 years purchase of super profit.

  1. Capital employed ₹ 2,00,000
  2. Normal rate of return 15%
  3. Average profit of the business ₹ 42,000
3 marks
34.
கூட்டாண்மை ஒப்பாவணத்தின் உள்ளடக்கங்கள் ஏதேனும் ஆறினைத் தரவும்.
State any six contents of a partnership deed.
3 marks
35.

அருள் நிறுமத்தின் பின்வரும் தகவல்களிலிருந்து ஒப்பீட்டு வருமான அறிக்கையைத் தயாரிக்கவும்.

விவரம்2015 - 2016
₹
2016 - 2017
₹
விற்பனை மூலம் பெற்ற வருவாய்30,00045,000
இதர வருமானம்4,0006,000
செலவுகள்10,00015,000

From the following particulars prepare comparative income statement of Arul Ltd.

Particulars2015 - 2016
₹
2016 - 2017
₹
Revenue from operations30,00045,000
Other income4,0006,000
Expenses10,00015,000
3 marks
36.
கூட்டாளி சேர்ப்பின் போது மேற்கொள்ள வேண்டிய சரிக்கட்டுதல்கள் யாவை ?
What are the adjustments required at the time of admission of a partner ?
3 marks
37.

கவின், மதன் மற்றும் ரஞ்சித் என்ற கூட்டாளிகள் தங்கள் இலாபம் மற்றும் நட்டங்களை முறையே 4 : 3 : 3 என்ற விகிதத்தில் பகிர்ந்து வந்தனர். 2018, டிசம்பர் 31 அன்று கவின் கூட்டாண்மையை விட்டு விலகுகிறார். அவர் விலகும் நாளில் அவருடைய முதல் கணக்கு ₹ 1,50,000 வரவிருப்பைக் காட்டியது. பின்வரும் நிலைகளில் பதிய வேண்டிய குறிப்பேட்டுப் பதிவுகளைத் தரவும்.

  1. விலகும் கூட்டாளிக்குச் செலுத்த வேண்டிய தொகை உடனடியாக காசோலை மூலம் செலுத்தப்பட்டது.
  2. விலகும் கூட்டாளிக்குச் செலுத்த வேண்டிய தொகை உடனடியாகச் செலுத்தப்படவில்லை.
  3. ₹ 1,00,000 உடனடியாகக் காசோலை மூலம் செலுத்தப்பட்டது. மீதித் தொகை இன்னும் செலுத்தப்பட உள்ளது.

Kavin, Madhan and Ranjith are partners sharing profits and losses in the ratio of 4 : 3 : 3 respectively. Kavin retires from the firm on 31st December, 2018. On the date of retirement, his capital account shows a credit balance of ₹ 1,50,000. Pass journal entries if :

  1. The amount due is paid off immediately by cheque.
  2. The amount due is not paid immediately.
  3. ₹ 1,00,000 is paid and the balance in future by cheque.
3 marks
38.
விகித பகுப்பாய்வின் ஏதேனும் மூன்று நன்மைகளைத் தரவும்.
State any three advantages of ratio analysis.
3 marks
39.

பின்வரும் விவரங்கள் சீர்காழி பாடகர்கள் சங்கத்தின் வருவாய் மற்றும் செலவினக் கணக்கில் எவ்வாறு தோன்றும் எனக் காட்டுக.

₹
1.4.2018 அன்று எழுது பொருட்கள் இருப்பு2,600
அவ்வாண்டில் வாங்கிய எழுது பொருட்கள்6,500
31.3.2019 அன்று எழுது பொருட்கள் இருப்பு2,200

Show how the following items will appear in the Income and Expenditure account of Sirkazhi Singers Association.

₹
Stock of stationery on 1.4.20182,600
Purchase of stationery during the year6,500
Stock of stationery on 31.3.20192,200
3 marks
40.
அனிதா என்பவர் ₹ 10 மதிப்புள்ள 500 நேர்மைப் பங்குகளை வைத்துள்ளார். அவர், விண்ணப்பத்தின் மீது ₹ 3, ஒதுக்கீட்டின் மீது ₹ 5 செலுத்தி உள்ளார். ஆனால், முதலாம் மற்றும் இறுதி அழைப்புத் தொகையான ₹ 2 செலுத்தவில்லை. அழைப்புத் தொகையை செலுத்தத் தவறியதால் இயக்குநர்கள் அப்பங்குகளை ஒறுப்பிழப்பு செய்தனர். ஒறுப்பிழப்பிற்கான குறிப்பேட்டுப் பதிவினைத் தரவும்.
Anitha was holding 500 equity shares of ₹ 10 each. She paid ₹ 3 on application, ₹ 5 on allotment but could not pay the first and final call of ₹ 2. The directors forfeited the shares for non payment of call money. Give journal entry for forfeiture of shares.
3 marks

பகுதி – IV / PART – IV

குறிப்பு : அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்.
Note : Answer all the questions.
41.
(அ)

2019, மார்ச் 31 அன்று தாமஸ் என்பவரின் ஏடுகளிலிருந்து பெறப்பட்ட இருப்புகள் பின்வருமாறு :

விவரம்₹
பற்பல கடனீந்தோர்6,00,000
அறைகலன்80,000
நிலம் மற்றும் கட்டடம்3,00,000
பற்பல கடனாளிகள்3,20,000
செலுத்தற்குரிய மாற்றுச்சீட்டு1,20,000
கை ரொக்கம்20,000
பெறுதற்குரிய மாற்றுச் சீட்டு60,000
சரக்கிருப்பு2,20,000

2019, மார்ச் 31ஆம் நாளைய நிலை அறிக்கை தயாரிக்கவும் மற்றும் அந்நாளைய முதல் கண்டறியவும்.

(a)

Following are the balances in the books of Thomas as on 31st March, 2019.

Particulars₹
Sundry Creditors6,00,000
Furniture80,000
Land and Building3,00,000
Sundry Debtors3,20,000
Bills Payable1,20,000
Cash in hand20,000
Bills receivable60,000
Stock2,20,000

Prepare a statement of affairs as on 31st March 2019 and calculate capital as at that date.

அல்லது / OR
(ஆ)

டெரிக்ஸ்டன் நிறுமத்தின் பின்வரும் இலாப நட்ட அறிக்கையிலிருந்து

  1. மொத்த இலாப விகிதம்
  2. நிகர இலாப விகிதம் கணக்கிடவும்

டெரிக்ஸ்டன் நிறுமத்தின் இலாப நட்ட அறிக்கை

விவரம்₹
I விற்பனையிலிருந்து பெற்ற வருவாய்24,00,000
II இதர வருமானம் :
முதலீடுகளிலிருந்து பெற்ற வருமானம்

70,000
III மொத்த வருவாய் (I+II)24,70,000
IV செலவுகள்
கொள்முதல் செய்த சரக்குகள்
சரக்கிருப்பு மாற்றம்
பணியாளர் நலன்களுக்கான செலவுகள்
இதர செலவுகள்
வரி ஒதுக்கு

18,80,000
–80,000
2,90,000
1,10,000
30,000
மொத்த செலவுகள்22,30,000
V அவ்வாண்டின் இலாபம்2,40,000
(b)

From the following statement of Profit and Loss of Dericston Ltd., calculate

  1. Gross Profit ratio
  2. Net Profit ratio

Statement of Profit and Loss of Dericston Ltd.

Particulars₹
I Revenue from operations24,00,000
II Other Income :
Income from investment

70,000
III Total revenues (I+II)24,70,000
IV Expenses
Purchases of stock-in-trade
Changes in inventories
Employee benefits expenses
Other expenses
Provision for tax

18,80,000
–80,000
2,90,000
1,10,000
30,000
Total expenses22,30,000
V Profit for the year2,40,000
5 marks
42.
(அ)தியாக விகிதத்திற்கும், ஆதாய விகிதத்திற்கும் இடையே உள்ள வேறுபாடுகள் யாவை ?
(a)Distinguish between Sacrificing ratio and Gaining ratio.
அல்லது / OR
(ஆ)

சீனு மற்றும் சிவா இருவரும் கூட்டாளிகள். அவர்கள் தங்கள் இலாபம் மற்றும் நட்டங்களை 5 : 3 என்ற விகிதத்தில் பகிர்ந்து கொள்கின்றனர். சுப்பு என்பவரை புதிய கூட்டாளியாக சேர்க்கும் போது அவர்கள் பின்வரும் முடிவுகள் எடுத்தனர்.

  1. கட்டடம் மதிப்பினை ₹ 40,000 உயர்த்த வேண்டும்.
  2. கணக்கேடுகளில் இதுவரை பதியப்படாத ₹ 10,000 மதிப்புள்ள முதலீடுகளைக் கணக்கில் கொண்டுவர வேண்டும்.
  3. இயந்திரம் மதிப்பு ₹ 14,000 மற்றும் அறைகலன் மதிப்பு ₹ 12,000 குறைக்க வேண்டும்.
  4. பற்பல கடனீந்தோரில் ₹ 16,000 போக்கெழுத வேண்டும்.

மறுமதிப்பீட்டுக் கணக்கினைத் தயார் செய்யவும்.

(b)

Seenu and Siva are partners sharing profits and losses in the ratio of 5 : 3. In the view of Subbu's admission, they decided.

  1. To increase the value of building by ₹ 40,000.
  2. To bring into record investments at ₹ 10,000, which have not so far been brought into account.
  3. To decrease the value of machinery by ₹ 14,000 and furniture by ₹ 12,000.
  4. To write off Sundry Creditors by ₹ 16,000.

Prepare revaluation account.

5 marks
43.
(அ)

கடந்த நான்கு ஆண்டுகள் சராசரி இலாபத்தில் மூன்று ஆண்டுகள் கொள்முதல் என்ற அடிப்படையில் கூட்டு சராசரி இலாபத்தினை பயன்படுத்தி, நற்பெயரின் மதிப்பைக் கணக்கிடவும்.

ஆண்டுஇலாபம்
₹
நிறைகள்
201510,0001
201612,0002
201716,0003
201818,0004
(a)

Find out the value of goodwill at three years purchase of weighted average profit of last four years.

YearProfit
₹
Weight
201510,0001
201612,0002
201716,0003
201818,0004
அல்லது / OR
(ஆ)சம்பத் நிறுமம் 25,000 நேர்மை பங்குகளை, பங்கு ஒன்று ₹ 10 என பொது மக்களுக்கு வெளியிட்டது. விண்ணப்பத்தின் போது ₹ 3, ஒதுக்கீட்டின் போது ₹ 4, முதலாம் மற்றும் இறுதி அழைப்பின் போது ₹ 3 செலுத்தப்பட வேண்டும். பொது மக்களால் 24,000 பங்குகள் ஒப்பப்பட்டன. இயக்குனர்கள் அனைத்து 24,000 பங்குகளையும் ஒதுக்கீடு செய்தனர். அதற்கான தொகை முழுவதும் முறையாகப் பெறப்பட்டன. தேவையான குறிப்பேட்டுப் பதிவுகளைத் தரவும்.
(b)Sampath Company issued 25,000 equity shares at ₹ 10 per share to public payable ₹ 3 on application, ₹ 4 on allotment, ₹ 3 on first and final call. The public subscribed for 24,000 shares. The directors allotted all the 24,000 shares and received the money duly. Pass necessary journal entries.
5 marks
44.
(அ)

பின்வரும் விவரங்களைக் கொண்டு பாலை வரையறு நிறுமத்தின் போக்கு சதவிகிதங்களைக் கணக்கிடவும்.

விவரம்(ரூபாய் இலட்சங்களில்)
வருடம் 1வருடம் 2வருடம் 3
I பங்கு மூலதனம் மற்றும் பொறுப்புகள்
பங்குதாரர் நிதி
நீண்ட காலப் பொறுப்புகள்
நடப்புப் பொறுப்புகள்

250
100
50

275
125
40

300
100
80
மொத்தம்400440480
II சொத்துக்கள் :
நிலைச் சொத்துக்கள்
நடப்புச் சொத்துக்கள்

300
100

360
80

390
90
மொத்தம்400440480
(a)

Calculate trend percentages from the following particulars of Palai Ltd.

Particulars(₹ In Lakhs)
Year 1Year 2Year 3
I Equity and Liabilities :
Shareholder's Fund
Non-Current liabilities
Current liabilities

250
100
50

275
125
40

300
100
80
Total400440480
II Assets :
Non-Current assets
Current assets

300
100

360
80

390
90
Total400440480
அல்லது / OR
(ஆ)

கீழ்க்காணும் கும்பகோணம் கூடைப்பந்து சங்கத்தின் பெறுதல்கள் மற்றும் செலுத்தல்கள் கணக்கிலிருந்து 2018 மார்ச், 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய வருவாய் மற்றும் செலவினக் கணக்கினைத் தயாரிக்கவும்.

பெறுதல்கள்₹செலுத்தல்கள்₹
இருப்பு கீ/கொ
கைரொக்கம் 23,000
வங்கி ரொக்கம் 12,000


35,000
மைதான வாடகை செலுத்தியது12,000
அரங்க வாடகை பெற்றது6,000அச்சுக் கட்டணம்5,000
சந்தா பெற்றது9,000வங்கிக் கட்டணம்1,000
ஆயுள் உறுப்பினர் கட்டணம்7,000கட்டடம் மீதான காப்பீடு2,000
பாதுகாப்பு பெட்டக வாடகை பெற்றது2,000தொடர் விளையாட்டுப் போட்டிச் செலவுகள்16,000
தணிக்கைக் கட்டணம்3,000
விளையாட்டுப் பொருட்கள் வாங்கியது4,000
இருப்பு கீ/கி
கைரொக்கம் 2,000
வங்கி ரொக்கம் 14,000


16,000
59,00059,000
(b)

From the following receipts and payments a/c of Kumbakonam Basket Ball Association, prepare income and expenditure account for the year ended 31st March 2018.

Receipts₹Payments₹
To Balance b/d
Cash in hand 23,000
Cash at bank 12,000


35,000
By Rent of ground paid12,000
To rent of Hall received6,000By Printing charges5,000
To Subscription received9,000By Bank charges1,000
To Life membership fees7,000By Insurance for Building2,000
To Locker rent received2,000By Tournament expenses16,000
By Audit Fees3,000
By Sports materials purchased4,000
By Balance c/d
Cash in hand 2,000
Cash at bank 14,000


16,000
59,00059,000
5 marks
45.
(அ)

கீழே கொடுக்கப்பட்ட தகவல்களிலிருந்து குறிஞ்சி விளையாட்டு மன்றத்தின் 2018, டிசம்பர் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய பெறுதல்கள் மற்றும் செலுத்தல்கள் கணக்கைத் தயார் செய்யவும்.

விவரம்₹
கை ரொக்கம் (1.1.2018)4,000
சம்பளம் கொடுத்தது3,000
ஆயுள் உறுப்பினர் கட்டணம் பெற்றது10,000
சந்தா பெற்றது15,000
வாடகை பெற்றது2,000
அச்சுக் கட்டணம் செலுத்தியது2,500
பாதுகாப்புப் பெட்டக வாடகை பெற்றது1,000
தொடர் விளையாட்டுப் போட்டி வரவுகள்14,000
தொடர் விளையாட்டுப் போட்டிச் செலவுகள்10,500
முதலீடுகள் வாங்கியது25,000
(a)

From the information given below, prepare Receipts and Payments account of Kurunji Sports Club for the year ended 31st December, 2018.

Particulars₹
Cash in hand (1.1.2018)4,000
Salaries Paid3,000
Life membership fees received10,000
Subscription received15,000
Rent received2,000
Paid for Printing charges2,500
Locker rent received1,000
Tournament receipts14,000
Tournament expenses10,500
Investments purchased25,000
அல்லது / OR
(ஆ)வேலவன் நிறுமத்தின் கடன் விற்பனை மூலம் பெற்ற வருவாய் தொகை ₹ 10,00,000. கணக்காண்டின் இறுதியில் இந்நிறுமத்தின் கடனாளிகள் மற்றும் பெறுதற்குரிய மாற்றுச் சீட்டுத் தொகை முறையே ₹ 1,10,000 மற்றும் ₹ 1,40,000. கணக்குகள் மூலம் பெற வேண்டியவைகளின் சுழற்சி விகிதத்தையும், கடன் வசூலிப்புக் காலத்தையும் (மாதங்களில்) கணக்கிடவும்.
(b)The Credit revenue from operations of Velavan Ltd., amounted to ₹ 10,00,000. Its debtors and bills receivables at the end of the accounting period amounted to ₹ 1,10,000 and ₹ 1,40,000 respectively. Calculate trade receivables turnover ratio and also collection period in months.
5 marks
46.
(அ)

டேவிட் முறையான கணக்கேடுகளைப் பராமரிக்கவில்லை. அவருடைய ஏடுகளிலிருந்து தரப்பட்டுள்ள விவரங்கள் பின்வருமாறு.

விவரம்1 - 4 - 201831 - 3 - 2019
ரொக்கம்43,00029,000
சரக்கிருப்பு1,20,0001,30,000
பற்பல கடனாளிகள்84,0001,10,000
பற்பல கடனீந்தோர்1,05,0001,02,000
கடன்25,00020,000
வணிக வளாகம்2,50,0002,50,000
அறைகலன்33,00045,000

அவ்வாண்டில் அவர் கூடுதல் முதலாக ₹ 45,000 கொண்டு வந்தார். தன்னுடைய வியாபாரத்திலிருந்து சொந்த பயனுக்காக ₹ 2,500 ஒவ்வொரு மாதமும் எடுத்துக் கொண்டார். மேற்கண்ட விவரங்களைக் கொண்டு இலாப, நட்ட அறிக்கையை தயார் செய்யவும்.

(a)

David does not keep proper books of accounts. Following details are given from his records.

Particulars1 - 4 - 201831 - 3 - 2019
Cash43,00029,000
Stock of goods1,20,0001,30,000
Sundry debtors84,0001,10,000
Sundry creditors1,05,0001,02,000
Loan25,00020,000
Business Premises2,50,0002,50,000
Furniture33,00045,000

During the year he introduced further capital of ₹ 45,000 and withdrew ₹ 2,500 every month from the business for his personal use. Prepare statement of profit or loss with the above information.

அல்லது / OR
(ஆ)

ஜான் என்பவர் ஒரு கூட்டாண்மை நிறுவனத்தின் கூட்டாளி, அவர் வழக்கமாக ஒவ்வொரு மாதமும் ₹ 1,000 எடுத்துக் கொள்கிறார். எடுப்பு மீது வட்டி ஆண்டுக்கு 5% விதிக்கப்பட வேண்டும். எடுப்பு மீது வட்டி சராசரி காலமுறையைப் பயன்படுத்தி கணக்கிடவும். அவர்,

  1. ஒவ்வொரு மாதத் தொடக்கத்தில் எடுத்திருந்தால்
  2. ஒவ்வொரு மாத நடுவில் எடுத்திருந்தால்
  3. ஒவ்வொரு மாத இறுதியில் எடுத்திருந்தால்
(b)

John is a partner in a firm. He withdraws ₹ 1,000 p.m. regularly. Interest on drawings is charged at 5% p.a. Calculate the Interest on drawings using average period, if he draws

  1. at the beginning of every month
  2. in the middle of every month
  3. at the end of every month.
5 marks
47.
(அ)

பின்வரும் விவரங்களைக் கொண்டு சிவா வரையறு நிறுமத்தின் மார்ச் 31, 2016 மற்றும் மார்ச் 31, 2017-க்கான பொது அளவு வருமான அறிக்கையினை தயாரிக்கவும்.

விவரம்2015 - 16
₹
2016 - 17
₹
விற்பனை மூலம் பெற்ற வருவாய்2,00,0003,00,000
இதர வருமானம்25,00075,000
செலவுகள்2,50,0001,50,000
வருமான வரி %40%40%
(a)

From the following particulars of Siva Ltd., prepare common-size income statement for the year ended 31st March 2016 and 31st March 2017.

Particulars2015 - 16
₹
2016 - 17
₹
Revenue from Operations2,00,0003,00,000
Other Income25,00075,000
Expenses2,50,0001,50,000
Income Tax %40%40%
அல்லது / OR
(ஆ)Tally ERP9-ல் பொதுவாக பயன்படுத்தப்படும் கணக்கியல் சான்றாவணங்களில் எவையேனும் ஐந்தினைக் குறிப்பிட்டு விளக்குக.
(b)Mention and explain any five accounting Vouchers that are commonly used in Tally ERP9.
5 marks
⬇️ Download PDF All Accountancy papers