பகுதி – I / PART – I
Show answer ▾
(ஆ) / (b) Securities premium account · Solved one-mark questions →Show answer ▾
(அ) / (a) Self generated goodwill · Solved one-mark questions →Show answer ▾
(அ) / (a) 2 : 1 · Solved one-mark questions →Show answer ▾
(ஈ) / (d) Nominal A/c · Solved one-mark questions →Show answer ▾
(ஆ) / (b) Additional capital introduced · Solved one-mark questions →Show answer ▾
(அ) / (a) 5 : 3 · Solved one-mark questions →Show answer ▾
(அ) / (a) Goodwill under Annuity method = Average profit × Present value annuity factor · Solved one-mark questions →Show answer ▾
(அ) / (a) Sale of old sports materials - Capital receipt · Solved one-mark questions →Show answer ▾
(ஈ) / (d) 110% · Solved one-mark questions →Show answer ▾
(ஈ) / (d) ₹ 8,000 and ₹ 4,000 · Solved one-mark questions →Show answer ▾
(இ) / (c) ₹ 64,000 · Solved one-mark questions →Show answer ▾
(ஈ) / (d) Old profit sharing ratio · Solved one-mark questions →Show answer ▾
(ஆ) / (b) Total debtors account · Solved one-mark questions →Show answer ▾
(அ) / (a) Surplus or deficit · Solved one-mark questions →Show answer ▾
(ஈ) / (d) (i) and (iv) · Solved one-mark questions →Show answer ▾
(ஆ) / (b) An Asset · Solved one-mark questions →Show answer ▾
(இ) / (c) Standard costing · Solved one-mark questions →Show answer ▾
(இ) / (c) Reserve capital · Solved one-mark questions →Show answer ▾
(இ) / (c) Ctrl+Q · Solved one-mark questions →Show answer ▾
(ஆ) / (b) Contra voucher · Solved one-mark questions →பகுதி – II / PART – II
பின்வரும் தகவல்களிலிருந்து 2018, டிசம்பர் 31 ஆம் நாளைய முதல் கண்டறியவும்.
| விவரம் | ₹ |
|---|---|
| 2018, ஜனவரி 1 அன்று முதல் | 1,00,000 |
| உரிமையாளர் தனது சொந்த பயனுக்காக சரக்கு எடுத்தது | 30,000 |
| அவ்வாண்டில் கொண்டு வந்த கூடுதல் முதல் | 15,000 |
| அவ்வாண்டில் இலாபம் | 60,000 |
From the following details, calculate the Capital as on 31st December 2018.
| Particulars | ₹ |
|---|---|
| Capital as on 1st January, 2018 | 1,00,000 |
| Goods withdrawn for personal use by the owner | 30,000 |
| Additional Capital introduced during the year | 15,000 |
| Profit for the year | 60,000 |
பின்வரும் தகவல்களிலிருந்து மொத்த இலாபம் கணக்கிடவும்.
விற்பனை மூலம் பெற்ற வருவாய் ₹ 1,00,000. விற்பனை மூலம் பெற்ற வருவாய்க்கான அடக்கவிலை ₹ 80,000 மற்றும் கொள்முதல் ₹ 62,500.
Calculate Gross profit ratio from the following.
Revenue from operations ₹ 1,00,000. Cost of revenue from operations ₹ 80,000 and Purchases ₹ 62,500.
பகுதி – III / PART – III
பின்வரும் விவரங்களிலிருந்து 2018, மார்ச் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய வருவாய் மற்றும் செலவினக் கணக்கில் பற்று வைக்கப்பட வேண்டிய அச்சு மற்றும் எழுதுபொருள் செலவைக் கணக்கிட்டு அவை 2018, மார்ச் 31 ஆம் நாளைய இருப்புநிலைக் குறிப்பில் எவ்வாறு தோன்றும் என்பதையும் குறிப்பிடவும்.
| எழுதுபொருள்களுக்காக கொடுத்த தொகை (2017-2018) | ₹ 1,500 |
| எழுதுபொருள்கள் இருப்பு (ஏப்ரல் 1, 2017) | ₹ 300 |
| எழுதுபொருள்கள் இருப்பு (மார்ச் 31, 2018) | ₹ 200 |
From the following details calculate the printing and stationery to be debited to Income and Expenditure Account for the year ending 31st March, 2018 and also show how it will appear in the Balance Sheet as on 31st March, 2018.
| Amount paid for Stationery during 2017-2018 | ₹ 1,500 |
| Stock of Stationery on 1st April, 2017 | ₹ 300 |
| Stock of Stationery on 31st March, 2018 | ₹ 200 |
குமார் என்பவர் ஒரு கூட்டாண்மை நிறுவனத்தின் கூட்டாளி. கூட்டாண்மை ஒப்பாவணத்தின்படி எடுப்புகள் மீது வட்டி ஆண்டுக்கு 6% கணக்கிடப்பட வேண்டும். டிசம்பர் 31 ஆம் நாளோடு முடிவடையும் 2018 ஆம் ஆண்டில் அவருடைய எடுப்புகள் பின்வருமாறு :
| நாள் | ₹ |
|---|---|
| மார்ச் 1 | 4,000 |
| ஜூன் 1 | 4,000 |
| செப்டம்பர் 1 | 4,000 |
| டிசம்பர் 1 | 4,000 |
எடுப்புகள் மீது வட்டி கணக்கிடவும்.
Kumar is a partner in a partnership firm. As per the Partnership deed, interest on drawings is charged at 6% per annum. During the year ended 31st December, 2018 he withdrew as follows :
| Date | ₹ |
|---|---|
| March 1 | 4,000 |
| June 1 | 4,000 |
| September 1 | 4,000 |
| December 1 | 4,000 |
Calculate the amount of interest on drawings.
பின்வரும் தகவல்களிலிருந்து மூலதனமாக்கல் முறையில் நற்பெயரின் மதிப்பைக் காணவும்.
(அ) சராசரி இலாபம் ₹ 20,000
(ஆ) சாதாரண இலாப விகிதம் 10%
(இ) பயன்படுத்தப்பட்ட முதல் ₹ 1,50,000
From the following information, find out the value of Goodwill by Capitalisation method.
(a) Average profit ₹ 20,000
(b) Normal rate of return 10%
(c) Capital employed ₹ 1,50,000
இராஜேஷ் மற்றும் இரமேஷ் எனும் கூட்டாளிகள் 3 : 2 என்ற விகிதத்தில் இலாப நட்டத்தினைப் பகிர்ந்து வந்தனர். இராமன் என்பவரை புதிய கூட்டாளியாக சேர்த்துக் கொண்டனர். அவர்களது புதிய இலாப விகிதம் 5 : 3 : 2. பின்வரும் மறுமதிப்பீடுகள் செய்யப்பட்டன. மறுமதிப்பீட்டுக் கணக்கு தயாரிக்கவும்.
(அ) கட்டடத்தின் மதிப்பு ₹ 15,000 உயர்த்தப்பட்டது.
(ஆ) இயந்திரத்தின் மதிப்பு ₹ 4,000 குறைக்கப்பட்டது.
(இ) வாரா ஐயக்கடன் ஒதுக்கு ₹ 1,000 உருவாக்கப்பட்டது.
Rajesh and Ramesh are partners sharing profits and losses in the ratio of 3 : 2. Raman is admitted as a new partner and the new profit sharing ratio is decided as 5 : 3 : 2. The following revaluations are made. Prepare Revaluation account.
(a) The value of building is increased by ₹ 15,000
(b) The value of the machinery is decreased by ₹ 4,000
(c) Provision for doubtful debt is made for ₹ 1,000
ராஜா நிறுமத்தின் பின்வரும் தகவல்களிலிருந்து 2017, மார்ச் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய பொது அளவு வருமான அறிக்கையைத் தயார் செய்யவும்.
| விவரம் | 2016 - 2017 ₹ |
|---|---|
| விற்பனை மூலம் பெற்ற வருவாய் | 4,50,000 |
| இதர வருமானம் | 67,500 |
| செலவுகள் | 1,35,000 |
Prepare Common-size income statement for the following particulars of Raja Ltd., for the year ended 31st March, 2017.
| Particulars | 2016 - 2017 ₹ |
|---|---|
| Revenue from operations | 4,50,000 |
| Other income | 67,500 |
| Expenses | 1,35,000 |
பின்வரும் தகவல்களிலிருந்து புற அக பொறுப்புகள் விகிதம் கணக்கிடவும் :
31.03.2018 அன்றைய இருப்புநிலைக் குறிப்பு (வருவிய)
| விவரம் | ₹ |
|---|---|
| I. பங்கு மூலதனம் மற்றும் பொறுப்புகள் | |
| 1. பங்குதாரர் நிதி | |
| (அ) பங்கு முதல் நேர்மைப் பங்கு முதல் | 1,00,000 |
| (ஆ) காப்புகள் மற்றும் மிகுதி | 60,000 |
| 2. நீண்ட காலப் பொறுப்புகள் நீண்ட காலக் கடன்கள் (கடனீட்டுப் பத்திரங்கள்) | 80,000 |
| 3. நடப்புப் பொறுப்புகள் | |
| (அ) கணக்குகள் மூலம் செலுத்த வேண்டியவைகள் | 50,000 |
| (ஆ) இதர நடப்புப் பொறுப்புகள் : கொடுபட வேண்டிய செலவுகள் | 30,000 |
| மொத்தம் | 3,20,000 |
From the following information, calculate debt-equity ratio :
Balance sheet (Extract) as on 31.03.2018
| Particulars | ₹ |
|---|---|
| I. EQUITY AND LIABILITIES | |
| 1. Shareholders' funds | |
| (a) Share capital Equity Share Capital | 1,00,000 |
| (b) Reserves and Surplus | 60,000 |
| 2. Non-current liabilities Long-term borrowings (Debentures) | 80,000 |
| 3. Current Liabilities | |
| (a) Trade payables | 50,000 |
| (b) Other current liabilities Outstanding expenses | 30,000 |
| Total | 3,20,000 |
Tally -ல் கீழ்க்காண்பனவற்றைப் பார்வையிடுவதற்கான நுழைவாயிலை எழுதுக.
- இலாப நட்டக் கணக்கு
- இருப்பு நிலைக் குறிப்பு
- நாளேடு
Write the Gateway of Tally to view the following.
- Profit and Loss A/c
- Balance Sheet
- Day Book
பகுதி – IV / PART – IV
2017 ஏப்ரல் 1 அன்று கணேஷ் ₹ 75,000 முதலுடன் தன்னுடைய தொழிலைத் தொடங்கினார். அவர் முறையான கணக்கேடுகளைப் பராமரிக்கவில்லை. 31.3.2018 ஆம் நாளைய அவருடைய ஏடுகளின் விவரங்கள் பின்வருமாறு.
| விவரம் | ₹ | விவரம் | ₹ |
|---|---|---|---|
| ரொக்கம் | 5,000 | கடனாளிகள் | 16,000 |
| சரக்கிருப்பு | 18,000 | கடனீந்தோர் | 9,000 |
| பெறுதற்குரிய மாற்றுச் சீட்டு | 7,000 | வங்கி ரொக்கம் | 24,000 |
| அறைகலன் | 3,000 | செலுத்தற்குரிய மாற்றுச் சீட்டு | 6,000 |
| நிலம் மற்றும் கட்டடங்கள் | 30,000 |
அவ்வாண்டில் தன்னுடைய சொந்தப் பயனுக்காக அவர் ₹ 15,000 எடுத்துக் கொண்டார். அவ்வாண்டில் அவர் கொண்டு வந்த கூடுதல் முதல் ₹ 20,000. அவருடைய இலாபம் அல்லது நட்டத்தைக் கண்டறியவும்.
On 1st April 2017, Ganesh started his business with a capital of ₹ 75,000. He did not maintain proper books of accounts. Following particulars are available from his books as on 31.3.2018.
| Particulars | ₹ | Particulars | ₹ |
|---|---|---|---|
| Cash | 5,000 | Debtors | 16,000 |
| Stock of goods | 18,000 | Creditors | 9,000 |
| Bills Receivable | 7,000 | Cash at Bank | 24,000 |
| Furniture | 3,000 | Bills Payable | 6,000 |
| Land and Buildings | 30,000 |
During the year he withdrew ₹ 15,000 for his personal use. He introduced further capital of ₹ 20,000 during the year. Calculate his profit or loss.
வெற்றி மற்றும் இரஞ்சித் இருவரும் கூட்டாளிகள். அவர்கள் 3 : 2 எனும் விகிதத்தில் இலாபம் மற்றும் நட்டங்களை பகிர்ந்து வந்தனர். அவர்களது 31.12.2017 நாளன்றைய இருப்புநிலைக் குறிப்பு பின்வருமாறு இருந்தது.
| பொறுப்புகள் | ₹ | ₹ | சொத்துகள் | ₹ |
|---|---|---|---|---|
| முதல் கணக்குகள் : | அறைகலன் | 25,000 | ||
| வெற்றி | 30,000 | சரக்கிருப்பு | 20,000 | |
| இரஞ்சித் | 20,000 | 50,000 | கடனாளிகள் | 10,000 |
| காப்பு நிதி | 5,000 | கைரொக்கம் | 35,000 | |
| பற்பல கடனீந்தோர் | 45,000 | இலாப-நட்ட க/கு (நட்டம்) | 10,000 | |
| 1,00,000 | 1,00,000 |
பின்வரும் சரிக்கட்டுதல்களில் 01.01.2018 அன்று சூரியா என்பவர் நிறுவனத்தின் புதிய கூட்டாளியாகச் சேர்கிறார்.
- சூரியா \( \frac{1}{4} \) இலாபப் பங்கிற்காக ₹ 10,000 முதல் கொண்டு வருகிறார்.
- சரக்கிருப்பு 10% குறைத்து மதிப்பிடப்படுகிறது.
- கடனாளிகள் ₹ 7,500 என மதிப்பிடப்படுகிறது.
- அறைகலன் மதிப்பு ₹ 40,000 என மாற்றி அமைக்கப்படுகிறது.
- கொடுபட வேண்டிய கூலி ₹ 4,500 இதுவரை பதிவு செய்யப்படவில்லை.
புதிய கூட்டாளி சேர்க்கைக்குப் பின் நிறுவனத்தின் மறுமதிப்பீடு கணக்கு, கூட்டாளிகளின் முதல் கணக்கு மற்றும் இருப்புநிலைக் குறிப்பு தயார் செய்யவும்.
Vetri and Ranjit are partners, sharing profits and losses in the ratio of 3 : 2. Their balance sheet as on 31st December 2017 is as under.
| Liabilities | ₹ | ₹ | Assets | ₹ |
|---|---|---|---|---|
| Capital Accounts : | Furniture | 25,000 | ||
| Vetri | 30,000 | Stock | 20,000 | |
| Ranjit | 20,000 | 50,000 | Debtors | 10,000 |
| Reserve fund | 5,000 | Cash in hand | 35,000 | |
| Sundry Creditors | 45,000 | Profit and Loss A/c (Loss) | 10,000 | |
| 1,00,000 | 1,00,000 |
On 01.01.2018, they admit Suriya into their firm as a partner on the following arrangements.
- Suriya brings ₹ 10,000 as capital for \( \frac{1}{4} \) share of profit.
- Stock to be depreciated by 10%.
- Debtors to be revalued at ₹ 7,500.
- Furniture to be revalued at ₹ 40,000.
- There is an outstanding wages of ₹ 4,500 not yet recorded.
Prepare Revaluation account, Partners' Capital account and the Balance Sheet of the firm after admission.
பூம்புகார் இலக்கிய மன்றத்தின் கீழ்க்காணும் தகவல்களிலிருந்து 2019, மார்ச் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய பெறுதல்கள் மற்றும் செலுத்தல்கள் கணக்கினைத் தயார் செய்யவும்.
| விவரம் | ₹ | விவரம் | ₹ |
|---|---|---|---|
| தொடக்க ரொக்க இருப்பு (1.4.2018) | 5,000 | சந்தா பெற்றது | 20,000 |
| வங்கி மேல்வரைப் பற்று (1.4.2018) | 4,000 | பழுதுபார்த்தல் மற்றும் புதுப்பித்தல் | 2,500 |
| அச்சு மற்றும் எழுதுபொருள் | 1,500 | போக்குவரத்துச் செலவுகள் | 2,750 |
| வட்டி செலுத்தியது | 3,250 | புத்தகங்கள் வாங்கியது | 10,000 |
| முதலீடுகள் விற்றது | 1,000 | காப்பீட்டு முனைமம் செலுத்தியது | 4,000 |
| சிற்றுண்டி வாங்கியது | 1,500 | பல்வகை வரவுகள் | 750 |
| கொடுபட வேண்டிய சம்பளம் | 2,000 | அரசிடமிருந்து பெற்ற மானியம் | 6,000 |
| அறக்கொடை நிதி பெற்றது | 2,000 | சிற்றுண்டி விற்றது | 1,500 |
| ஒளியூட்டுக் கட்டணம் | 1,300 | கட்டடம் மீதான தேய்மானம் | 2,000 |
| வங்கி ரொக்கம் (31.03.2019) | 2,000 |
From the following particulars of Poompuhar Literary Association, prepare Receipts and Payments account for the year ended 31st March, 2019.
| Particulars | ₹ | Particulars | ₹ |
|---|---|---|---|
| Opening cash in hand as on 1.4.2018 | 5,000 | Subscription received | 20,000 |
| Bank overdraft as on 1.4.2018 | 4,000 | Repairs and renewals | 2,500 |
| Printing and Stationery | 1,500 | Conveyance paid | 2,750 |
| Interest paid | 3,250 | Books purchased | 10,000 |
| Sale of investments | 1,000 | Insurance premium paid | 4,000 |
| Purchase of refreshments | 1,500 | Sundry receipts | 750 |
| Outstanding Salary | 2,000 | Government grants received | 6,000 |
| Endowment fund receipts | 2,000 | Sale of refreshments | 1,500 |
| Lighting charges | 1,300 | Depreciation on buildings | 2,000 |
| Cash at bank on 31.03.2019 | 2,000 |
பின்வரும் தகவல்களிலிருந்து மன்னன் மற்றும் சேவகன் எனும் கூட்டாளிகளின் முதல் கணக்குகளை அவர்களின் முதல் மாறுபடும் முதலாக இருக்கும்போது தயாரிக்கவும்.
| விவரம் | மன்னன் (₹) | சேவகன் (₹) |
|---|---|---|
| 2018, ஜனவரி 1 அன்று முதல் (வரவிருப்பு) | 2,00,000 | 1,75,000 |
| 2018 ஆம் ஆண்டில் எடுப்புகள் | 40,000 | 35,000 |
| எடுப்புகள் மீதான வட்டி | 1,000 | 500 |
| 2018 ஆம் ஆண்டின் இலாபப் பங்கு | 21,000 | 16,500 |
| முதல் மீது வட்டி | 12,000 | 10,500 |
| ஊதியம் | 18,000 | - |
| கழிவு | - | 2,500 |
From the following information, prepare Capital accounts of partners Mannan and Sevagan, when their capitals are fluctuating.
| Particulars | Mannan ₹ | Sevagan ₹ |
|---|---|---|
| Capital on 1st January 2018 (Cr. Balance) | 2,00,000 | 1,75,000 |
| Drawings during 2018 | 40,000 | 35,000 |
| Interest on Drawings | 1,000 | 500 |
| Share of profit for 2018 | 21,000 | 16,500 |
| Interest on Capital | 12,000 | 10,500 |
| Salary | 18,000 | - |
| Commission | - | 2,500 |
ரோஜா, நீலா மற்றும் கனகா என்ற கூட்டாளிகள் 4 : 3 : 3 என்ற விகிதத்தில் இலாபம் மற்றும் நட்டங்களைப் பகிர்ந்து வந்தனர். 2017 ஏப்ரல் 1 அன்று ரோஜா என்பவர் கூட்டாண்மையிலிருந்து விலகினார். அவருடைய விலகலின்போது கீழ்க்கண்ட சரிக்கட்டுதல்கள் செய்வதற்கு ஒப்புக்கொள்ளப்பட்டன.
- கட்டடத்தின் மதிப்பில் ₹ 30,000 அதிகரிக்க வேண்டும்.
- சரக்கிருப்பு மதிப்பில் ₹ 5,000 மற்றும் அறைகலன் மதிப்பில் ₹ 12,000 குறைக்க வேண்டும்.
- கொடுபடா பொறுப்புகளுக்கு ₹ 1,000 ஒதுக்கு உருவாக்க வேண்டும்.
குறிப்பேட்டுப் பதிவுகள் தந்து மறுமதிப்பீட்டுக் கணக்கினைத் தயாரிக்கவும்.
Roja, Neela and Kanaga are partners sharing profits and losses in the ratio of 4 : 3 : 3. On 1st April 2017, Roja retires from partnership and on retirement, the following adjustments are agreed upon.
- Increase the value of building by ₹ 30,000.
- Depreciate stock by ₹ 5,000 and furniture by ₹ 12,000.
- Provide an outstanding liability of ₹ 1,000
Pass journal entries and prepare Revaluation account.
பின்வரும் விவரங்களிலிருந்து, உயர் இலாபத்தில் 3 ஆண்டுகள் கொள்முதல் என்ற அடிப்படையில் நற்பெயரின் மதிப்பைக் கணக்கிடவும்.
- பயன்படுத்தப்பட்ட முதல் : ₹ 2,00,000
- சாதாரண இலாப விகிதம் : 15%
- வியாபாரத்தின் சராசரி இலாபம் : ₹ 42,000
From the following information, calculate the value of Goodwill based on 3 years purchase of Super Profit.
- Capital employed : ₹ 2,00,000
- Normal rate of return : 15%
- Average profit of the business : ₹ 42,000
கீழ்க்காணும் கும்பகோணம் கூடைப்பந்து சங்கத்தின் பெறுதல்கள் மற்றும் செலுத்தல்கள் கணக்கிலிருந்து 2018, மார்ச் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய வருவாய் மற்றும் செலவினக் கணக்கைத் தயார் செய்யவும்.
| பெறுதல்கள் | ₹ | ₹ | செலுத்தல்கள் | ₹ | ₹ |
|---|---|---|---|---|---|
| இருப்பு கீ/கொ | மைதான வாடகை செலுத்தியது | 12,000 | |||
| கை ரொக்கம் | 23,000 | அச்சுக் கட்டணம் | 5,000 | ||
| வங்கி ரொக்கம் | 12,000 | 35,000 | வங்கிக் கட்டணம் | 1,000 | |
| அரங்க வாடகை பெற்றது | 6,000 | கட்டடம் மீதான காப்பீடு | 2,000 | ||
| சந்தா பெற்றது | 9,000 | தொடர் விளையாட்டுப் போட்டிச் செலவுகள் | 16,000 | ||
| ஆயுள் உறுப்பினர் கட்டணம் | 7,000 | தணிக்கைக் கட்டணம் | 3,000 | ||
| பாதுகாப்புப் பெட்டக வாடகை பெற்றது | 2,000 | விளையாட்டுப் பொருட்கள் வாங்கியது | 4,000 | ||
| இருப்பு கீ/இ | |||||
| கை ரொக்கம் | 2,000 | ||||
| வங்கி ரொக்கம் | 14,000 | 16,000 | |||
| 59,000 | 59,000 |
From the following Receipts and Payments account, prepare Income and Expenditure account of Kumbakonam Basket Ball Association for the year ended 31st March, 2018.
| Receipts | ₹ | ₹ | Payments | ₹ | ₹ |
|---|---|---|---|---|---|
| To Balance b/d | By Rent of ground paid | 12,000 | |||
| Cash in hand | 23,000 | By Printing charges | 5,000 | ||
| Cash at bank | 12,000 | 35,000 | By Bank charges | 1,000 | |
| To Rent of hall received | 6,000 | By Insurance for building | 2,000 | ||
| To Subscription received | 9,000 | By Tournament expenses | 16,000 | ||
| To Life membership fees | 7,000 | By Audit fees | 3,000 | ||
| To Locker rent received | 2,000 | By Sports materials purchased | 4,000 | ||
| By Balance c/d | |||||
| Cash in hand | 2,000 | ||||
| Cash at bank | 14,000 | 16,000 | |||
| 59,000 | 59,000 |
முத்து நிறுமத்தின் பின்வரும் தகவல்களிலிருந்து ஒப்பீட்டு நிதிநிலை அறிக்கையைத் தயார் செய்யவும்.
| விவரம் | 2017, மார்ச் 31 (₹) | 2018, மார்ச் 31 (₹) |
|---|---|---|
| I. பங்கு மூலதனம் மற்றும் பொறுப்புகள் பங்குதாரர் நிதி நீண்டகாலப் பொறுப்புகள் நடப்புப் பொறுப்புகள் | 4,00,000 1,50,000 75,000 | 4,40,000 1,65,000 82,500 |
| மொத்தம் | 6,25,000 | 6,87,500 |
| II. சொத்துகள் நீண்டகால சொத்துகள் நடப்புச் சொத்துகள் | 5,00,000 1,25,000 | 6,00,000 87,500 |
| மொத்தம் | 6,25,000 | 6,87,500 |
From the following particulars, prepare Comparative Statement of financial position of Muthu Ltd.
| Particulars | 31st March, 2017 (₹) | 31st March, 2018 (₹) |
|---|---|---|
| I. EQUITY AND LIABILITIES Shareholders' Fund Non-Current Liabilities Current Liabilities | 4,00,000 1,50,000 75,000 | 4,40,000 1,65,000 82,500 |
| Total | 6,25,000 | 6,87,500 |
| II. ASSETS Non-current assets Current assets | 5,00,000 1,25,000 | 6,00,000 87,500 |
| Total | 6,25,000 | 6,87,500 |
துரை மற்றும் வேலன் 2018, ஏப்ரல் 1 அன்று கூட்டாண்மை ஒப்பந்தத்தில் ஈடுபட்டனர். துரை ₹ 25,000 மற்றும் வேலன் ₹ 30,000 முதலாக கொண்டுவந்தனர். ஒப்பந்தம் பின்வருவனவற்றைக் கொண்டுள்ளது :
- துரை மற்றும் வேலன் இலாப நட்டங்களை 2 : 3 என்ற விகிதத்தில் பகிர வேண்டும்.
- கூட்டாளிகளுக்கு முதல் மீது வட்டி ஆண்டுக்கு 5% தரப்பட வேண்டும்.
- எடுப்புகள் மீதான வட்டி கணக்கிடப்பட வேண்டியது :
துரை ₹ 300 மற்றும் வேலன் ₹ 450. - துரைக்கு ஊதியம் ஆண்டுக்கு ₹ 5,000 வழங்கப்பட வேண்டும் மற்றும்
- வேலனுக்கு தரப்பட வேண்டிய கழிவு ₹ 2,000.
அவ்வாண்டில் வட்டி, ஊதியம் மற்றும் கழிவு போன்றவற்றை சரிக்கட்டுவதற்கு முன் நிறுவனம் ஈட்டிய இலாபம் ₹ 20,000. இலாபநட்டப் பகிர்வு கணக்கைத் தயாரிக்கவும்.
Durai and Velan entered into a partnership agreement on 1st April 2018. Durai contributing ₹ 25,000 and Velan ₹ 30,000 as capital. The agreement provided that :
- Profits and losses to be shared in the ratio 2 : 3 as between Durai and Velan.
- Partners to be entitled to get interest on capital @ 5% p.a.
- Interest on drawings to be charged Durai : ₹ 300 Velan : ₹ 450.
- Durai to receive a salary of ₹ 5,000 for the year, and
- Velan to receive a commission of ₹ 2,000.
During the year, the firm made a profit of ₹ 20,000 before adjustment of interest, salary and commission. Prepare the Profit and Loss appropriation account.
அருணன் நிறுமத்தின் 31.03.2019 ஆம் நாளைய பின்வரும் இருப்புநிலைக் குறிப்பிலிருந்து (i) புற அக பொறுப்புகள் விகிதம் (ii) உரிமையாளர் விகிதம் (iii) முதல் உந்துதிறன் விகிதம் கணக்கிடவும்.
அருணன் நிறுமத்தின் 31.03.2019 ஆம் நாளைய இருப்புநிலைக் குறிப்பு
| விவரம் | ₹ |
|---|---|
| I. பங்கு மூலதனம் மற்றும் பொறுப்புகள் | |
| 1. பங்குதாரர் நிதி | |
| (அ) பங்கு முதல் நேர்மைப் பங்கு முதல் 8% முன்னுரிமைப் பங்கு முதல் | 1,50,000 2,00,000 |
| (ஆ) காப்புகள் மற்றும் மிகுதி | 1,50,000 |
| 2. நீண்டகாலப் பொறுப்புகள் நீண்டகாலக் கடன்கள் (9% கடனீட்டுப் பத்திரங்கள்) | 4,00,000 |
| 3. நடப்புப் பொறுப்புகள் | |
| (அ) வங்கியிலிருந்து பெற்ற குறுகியகாலக் கடன்கள் | 25,000 |
| (ஆ) கணக்குகள் மூலம் செலுத்த வேண்டியவைகள் | 75,000 |
| மொத்தம் | 10,00,000 |
| II. சொத்துகள் : | |
| 1. நீண்டகாலச் சொத்துகள் நிலைச் சொத்துகள் | 7,50,000 |
| 2. நடப்புச் சொத்துகள் | |
| (அ) சரக்கிருப்பு | 1,20,000 |
| (ஆ) கணக்குகள் மூலம் பெற வேண்டியவைகள் | 1,00,000 |
| (இ) ரொக்கம் மற்றும் ரொக்கத்திற்கு சமமானவைகள் | 27,500 |
| (ஈ) இதர நடப்புச் சொத்துகள் செலவுகள் முன்கூட்டிச் செலுத்தியது | 2,500 |
| மொத்தம் | 10,00,000 |
From the following Balance Sheet of Arunan Ltd., as on 31.03.2019, calculate (i) Debt-equity ratio (ii) Proprietary ratio and (iii) Capital gearing ratio.
Balance sheet of Arunan Ltd., as on 31.03.2019
| Particulars | ₹ |
|---|---|
| I. EQUITY AND LIABILITIES | |
| 1. Shareholders' funds | |
| (a) Share Capital Equity Share Capital 8% Preference Share Capital | 1,50,000 2,00,000 |
| (b) Reserves and Surplus | 1,50,000 |
| 2. Non-Current Liabilities Long term borrowings (9% Debentures) | 4,00,000 |
| 3. Current Liabilities | |
| (a) Short-term borrowings from banks | 25,000 |
| (b) Trade payables | 75,000 |
| Total | 10,00,000 |
| II. ASSETS | |
| 1. Non-current Assets Fixed Assets | 7,50,000 |
| 2. Current Assets | |
| (a) Inventories | 1,20,000 |
| (b) Trade receivables | 1,00,000 |
| (c) Cash and cash equivalents | 27,500 |
| (d) Other Current Assets Expenses paid in advance | 2,500 |
| Total | 10,00,000 |
பின்வரும் விவரங்களைக் கொண்டு, முல்லை வரையறு நிறுமத்தின் போக்கு சதவீதங்களைக் கணக்கிடவும்.
| விவரம் | ₹ இலட்சங்களில் | ||
|---|---|---|---|
| 2015-16 | 2016-17 | 2017-18 | |
| விற்பனை மூலம் பெற்ற வருவாய் | 100 | 120 | 160 |
| இதர வருமானம் | 20 | 24 | 20 |
| செலவுகள் | 20 | 14 | 40 |
| வருமான வரி | 30% | 30% | 30% |
From the following information, calculate trend percentage for Mullai Ltd.
| Particulars | ₹ in lakhs | ||
|---|---|---|---|
| 2015-16 | 2016-17 | 2017-18 | |
| Revenue from operations | 100 | 120 | 160 |
| Other income | 20 | 24 | 20 |
| Expenses | 20 | 14 | 40 |
| Income tax | 30% | 30% | 30% |