TN Online TestSamacheer Kalvi practice

12th Standard Accountancy Question Paper Supplementary June 2026

Paper code 9457 90 marks 180 minutes

The complete Supplementary June 2026 public exam paper exactly as printed: every question in Tamil and English. Download the PDF, or take Part I as a free online test.

கணக்குப்பதிவியல் / Accountancyதுணைத் தேர்வு ஜூன் 2026 · Supplementary June 2026

பகுதி – I / PART – I

குறிப்பு : (i) அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும். (ii) கொடுக்கப்பட்டுள்ள நான்கு மாற்று விடைகளில் மிகவும் ஏற்புடைய விடையைத் தேர்ந்தெடுத்துக் குறியீட்டுடன் விடையினையும் சேர்த்து எழுதவும்.
Note : (i) Answer all the questions. (ii) Choose the most appropriate answer from the given four alternatives and write the option code and the corresponding answer.
1.
நிலை அறிக்கை ஒரு :
(அ) வருமானம் மற்றும் செலவுகள் அறிக்கை
(ஆ) சொத்துகள் மற்றும் பொறுப்புகள் அறிக்கை
(இ) ரொக்க நடவடிக்கைகளின் தொகுப்பு
(ஈ) கடன் நடவடிக்கைகளின் தொகுப்பு
Statement of affairs is a :
(a) Statement of income and expenditure
(b) Statement of assets and liabilities
(c) Summary of Cash transactions
(d) Summary of Credit transactions
Show answer ▾ (ஆ) / (b) Statement of assets and liabilities · Solved one-mark questions →
1 mark
2.
நடப்பாண்டில் பெறவேண்டிய சந்தா இன்னும் பெறாதது :
(அ) ஒரு சொத்து
(ஆ) ஒரு பொறுப்பு
(இ) ஒரு செலவு
(ஈ) தவிர்க்கப்பட வேண்டிய ஒன்று
Subscription due but not received for the current year is :
(a) An asset
(b) A liability
(c) An expense
(d) An item to be ignored
Show answer ▾ (அ) / (a) An asset · Solved one-mark questions →
1 mark
3.
குழுக்கள், பேரேடுகள் மற்றும் சான்றாவண வகைகளை Tally -யின் எந்த துணைப் பட்டியல் காண்பிக்கும் ?
(அ) சரக்கிருப்பு சான்றாவணங்கள்
(ஆ) கணக்கியல் சான்றாவணங்கள்
(இ) நிறுவன தகவல்
(ஈ) கணக்கு தகவல்
Which submenu displays groups, ledgers and voucher types in Tally ?
(a) Inventory vouchers
(b) Accounting vouchers
(c) Company Info
(d) Account Info
Show answer ▾ (ஈ) / (d) Account Info · Solved one-mark questions →
1 mark
4.
Tally -யின் நுழைவாயிலிலிருந்து இருப்பாய்வை பார்வையிட எந்த விருப்பத் தேர்வு பயன்படும் ?
(அ) Gateway of Tally → Reports → Trial Balance
(ஆ) Gateway of Tally → Trial Balance
(இ) Gateway of Tally → Reports → Display → Trial Balance
(ஈ) இவைகளில் ஏதுமில்லை
Which of the following options is used to view Trial Balance from Gateway of Tally ?
(a) Gateway of Tally → Reports → Trial Balance
(b) Gateway of Tally → Trial Balance
(c) Gateway of Tally → Reports → Display → Trial Balance
(d) None of these
Show answer ▾ (இ) / (c) Gateway of Tally → Reports → Display → Trial Balance · Solved one-mark questions →
1 mark
5.
பெறுதல்கள் மற்றும் செலுத்தல்கள் கணக்கில் பதிவு செய்யப்படும் பெறுதல்கள் மற்றும் செலுத்தல்கள் :
(அ) வருவாயினத் தன்மை மட்டும் உடையது
(ஆ) முதலினத் தன்மை மட்டும் உடையது
(இ) வருவாயினம் மற்றும் முதலினத் தன்மை உடையது
(ஈ) மேற்கண்ட எதுவுமில்லை
Receipts and payments account records receipts and payments of :
(a) Revenue nature only
(b) Capital nature only
(c) Both revenue and capital nature
(d) None of the above
Show answer ▾ (இ) / (c) Both revenue and capital nature · Solved one-mark questions →
1 mark
6.
ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காக பெற்ற நன்கொடை :
(அ) வருவாயின வரவு
(ஆ) முதலின வரவு
(இ) வருவாயினச் செலவு
(ஈ) முதலினச் செலவு
Donations received for a specific purpose is :
(a) Revenue receipt
(b) Capital receipt
(c) Revenue expenditure
(d) Capital expenditure
Show answer ▾ (ஆ) / (b) Capital receipt · Solved one-mark questions →
1 mark
7.
சரக்கிருப்பு மற்றும் முன்கூட்டிச் செலுத்திய செலவுகள் நீங்கலாக உள்ள நடப்புச் சொத்துகள் அழைக்கப்படுவது :
(அ) காப்புகள்
(ஆ) புலனாகும் சொத்துகள்
(இ) நிதி
(ஈ) விரைவு சொத்துகள்
Current assets excluding inventory and prepaid expenses is called :
(a) Reserves
(b) Tangible assets
(c) Funds
(d) Quick assets
Show answer ▾ (ஈ) / (d) Quick assets · Solved one-mark questions →
1 mark
8.
ஒரு நிறுமத்தின் நீர்மைத்தன்மையை சோதிக்க கீழ்க்கண்ட எந்த விகிதங்கள் பயன்படுகிறது ?
(i) விரைவு விகிதம்
(ii) புற அக பொறுப்புகள் விகிதம்
(iii) நிகர இலாப விகிதம்
(iv) நடப்பு விகிதம்
கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீட்டைப் பயன்படுத்தி சரியான விடையை தேர்ந்தெடுக்கவும் :
(அ) (i) மற்றும் (ii)
(ஆ) (ii) மற்றும் (iii)
(இ) (ii) மற்றும் (iv)
(ஈ) (i) மற்றும் (iv)
To test the liquidity of a concern which of the following ratios are useful ?
(i) Quick ratio
(ii) Debt-equity ratio
(iii) Net profit ratio
(iv) Current ratio
Select the correct answer using the codes given below.
(a) (i) and (ii)
(b) (ii) and (iii)
(c) (ii) and (iv)
(d) (i) and (iv)
Show answer ▾ (ஈ) / (d) (i) and (iv) · Solved one-mark questions →
1 mark
9.
கூட்டாண்மை ஒப்பாவணம் இல்லாத நிலையில் நிறுவனத்தின் இலாபம் கூட்டாளிகளுக்கிடையே பகிர்ந்தளிக்கப்படுவது :
(அ) சமமான விகிதத்தில்
(ஆ) முதல் விகிதத்தில்
(இ) இரண்டும் (அ) மற்றும் (ஆ)
(ஈ) மேற்கூறிய எதுவுமில்லை
In the absence of a partnership deed, profits of the firm will be shared by the partners in :
(a) Equal ratio
(b) Capital ratio
(c) Both (a) and (b)
(d) None of the above
Show answer ▾ (அ) / (a) Equal ratio · Solved one-mark questions →
1 mark
10.
பொருந்தாத ஒன்றைத் தேர்ந்தெடுக்கவும் :
(அ) கூட்டாளிகள் இலாபம் மற்றும் நட்டத்தை சமமாகப் பகிர்ந்து கொள்ள வேண்டும்
(ஆ) கூட்டாளிகள் முதல் மீது வட்டி ஆண்டுக்கு 7% அனுமதிக்க வேண்டும்
(இ) கூட்டாளிகளுக்கு சம்பளம் அல்லது ஊதியம் அனுமதிக்கப்பட மாட்டாது
(ஈ) கூட்டாளிகளிடமிருந்து பெற்ற கடன் மீதான வட்டி ஆண்டுக்கு 6% அனுமதிக்க வேண்டும்
Pick the odd one out :
(a) Partners, share profits and losses equally
(b) Interest on partner's capital is allowed at 7% p.a
(c) No salary or remuneration is allowed to partners
(d) Interest on loan from partners is allowed at 6% p.a
Show answer ▾ (ஆ) / (b) Interest on partner's capital is allowed at 7% p.a · Solved one-mark questions →
1 mark
11.
இருப்புநிலைக் குறிப்பு, வணிக நிறுவனத்தின் நிதிநிலை பற்றிய ________ தகவல்களை வழங்குகிறது.
(அ) ஒரு காலக்கட்டத்திற்கு மேலான
(ஆ) ஒரு குறிப்பிட்ட நாளுக்குரிய
(இ) ஒரு குறிப்பிட்ட காலத்திற்கான
(ஈ) குறிப்பிட்ட கணக்காண்டிற்குரிய
Balance sheet provides information about the financial position of a business concern :
(a) Over a period of time
(b) As on a particular date
(c) For a period of time
(d) For the accounting period
Show answer ▾ (ஆ) / (b) As on a particular date · Solved one-mark questions →
1 mark
12.
பயனரின் தேவைக்கேற்ப தயாரிக்கப்படும் கணக்கியல் அறிக்கையானது :
(அ) வழக்கமான கணக்கியல் அறிக்கை
(ஆ) குறிப்பிட்ட நோக்க அறிக்கை
(இ) இருப்பாய்வு
(ஈ) இருப்புநிலைக் குறிப்பு
Accounting report prepared according to the requirements of the user is :
(a) Routine accounting report
(b) Special purpose report
(c) Trial balance
(d) Balance sheet
Show answer ▾ (ஆ) / (b) Special purpose report · Solved one-mark questions →
1 mark
13.
பின்வரும் வாக்கியங்களில் எது சரியானது ?
(அ) நற்பெயர் ஒரு புலனாகாச் சொத்து
(ஆ) நற்பெயர் ஒரு நடப்புச் சொத்து
(இ) நற்பெயர் ஒரு கற்பனைச் சொத்து
(ஈ) நற்பெயரினை வாங்க முடியாது
Which of the following statements is true ?
(a) Goodwill is an intangible asset
(b) Goodwill is a current asset
(c) Goodwill is a fictitious asset
(d) Goodwill cannot be acquired
Show answer ▾ (அ) / (a) Goodwill is an intangible asset · Solved one-mark questions →
1 mark
14.
2024 -ல் கணக்கேட்டின்படி இலாபம் ₹ 35,000; இலாபத்தில் சேர்ந்துள்ள திரும்பத் திரும்ப நிகழா வருமானம் ₹ 1,000 மற்றும் 2024 ஆம் ஆண்டில் ஏற்பட்ட அசாதாரண நட்டம் ₹ 2,000 எனில், சரிக்கட்டப்பட்ட இலாபம் :
(அ) ₹ 36,000
(ஆ) ₹ 35,000
(இ) ₹ 38,000
(ஈ) ₹ 34,000
Book profit of 2024 is ₹ 35,000; non-recurring income included in the profit is ₹ 1,000 and abnormal loss charged in the year 2024 was ₹ 2,000, then the adjusted profit is :
(a) ₹ 36,000
(b) ₹ 35,000
(c) ₹ 38,000
(d) ₹ 34,000
Show answer ▾ (அ) / (a) ₹ 36,000 · Solved one-mark questions →
1 mark
15.
ஒறுப்பிழப்புச் செய்த பங்குகளை மறு வெளியீடு செய்த பிறகு, பங்கு ஒறுப்பிழப்புக் கணக்கின் இருப்பு மாற்றப்படுவது :
(அ) பொதுக் காப்பு கணக்கிற்கு
(ஆ) முதலினக் காப்பு கணக்கிற்கு
(இ) பத்திர முனைமக் கணக்கிற்கு
(ஈ) உபரி கணக்கிற்கு
After the forfeited shares are reissued, the balance in the forfeited shares account should be transferred to :
(a) General Reserve a/c
(b) Capital Reserve a/c
(c) Securities Premium a/c
(d) Surplus a/c
Show answer ▾ (ஆ) / (b) Capital Reserve a/c · Solved one-mark questions →
1 mark
16.
x, y மற்றும் z என்ற கூட்டாளிகள் 2 : 2 : 1 என்ற விகிதத்தில் இலாப நட்டத்தை பகிர்ந்து வந்தனர். y -ன் விலகலின் போது நிறுவனத்தின் நற்பெயர் ₹ 30,000 என மதிப்பிடப்பட்டது. கூட்டாளி y -க்கு ஈடு செய்வதற்கு x மற்றும் z -யின் பங்களிப்பைக் கண்டறியவும்.
(அ) ₹ 20,000 மற்றும் ₹ 10,000
(ஆ) ₹ 8,000 மற்றும் ₹ 4,000
(இ) ₹ 10,000 மற்றும் ₹ 20,000
(ஈ) ₹ 15,000 மற்றும் ₹ 15,000
x, y and z are partners sharing profits in the ratio of 2 : 2 : 1. On retirement of y, goodwill of the firm was valued as ₹ 30,000. Find the contribution of x and z to compensate y.
(a) ₹ 20,000 and ₹ 10,000
(b) ₹ 8,000 and ₹ 4,000
(c) ₹ 10,000 and ₹ 20,000
(d) ₹ 15,000 and ₹ 15,000
Show answer ▾ (ஆ) / (b) ₹ 8,000 and ₹ 4,000 · Solved one-mark questions →
1 mark
17.
P, Q மற்றும் R என்ற கூட்டாளிகள் இலாப நட்டங்களை சமமாகப் பகிர்ந்து வந்தனர். 2023, ஏப்ரல் 1 அன்று P இறந்துவிட்டார். 2022 -இல் இலாபம் ₹ 36,000 என்ற அடிப்படையில் 2023 ஆம் ஆண்டுக்குரிய இலாபத்தில் P -யின் பங்கினைக் கண்டறியவும்.
(அ) ₹ 1,000
(ஆ) ₹ 3,000
(இ) ₹ 12,000
(ஈ) ₹ 36,000
P, Q and R were partners sharing profits and losses equally. P died on 1st April 2023. Find out the share of P in the profit of 2023 based on the profit of 2022 which showed ₹ 36,000.
(a) ₹ 1,000
(b) ₹ 3,000
(c) ₹ 12,000
(d) ₹ 36,000
Show answer ▾ (ஆ) / (b) ₹ 3,000 · Solved one-mark questions →
1 mark
18.
சரியான குறியீட்டைப் பயன்படுத்தி பொருத்தமான இணையை தேர்ந்தெடுக்கவும் :
(1) குறை ஒப்பம் — (i) முன்கூட்டிச் செலுத்திய அழைப்பு பணம்
(2) மிகை ஒப்பம் — (ii) வெளியிட்ட பங்குகளை விட அதிகமாக ஒப்பப்பட்டது
(3) அழைப்பு நிலுவை — (iii) வெளியிட்ட பங்குகளை விட குறைவாக ஒப்பப்பட்டது
(4) அழைப்பு முன்பணம் — (iv) செலுத்தப் பெறாத அழைப்பு பணம்
(அ) (1)-(i), (2)-(ii), (3)-(iii), (4)-(iv)
(ஆ) (1)-(iv), (2)-(iii), (3)-(ii), (4)-(i)
(இ) (1)-(iii), (2)-(ii), (3)-(iv), (4)-(i)
(ஈ) (1)-(iii), (2)-(iv), (3)-(i), (4)-(ii)
Match the pair and identify the correct option :
(1) Under subscription — (i) Amount prepaid for calls
(2) Over subscription — (ii) Subscription above the offered shares
(3) Calls in arrear — (iii) Subscription below the offered shares
(4) Calls in advance — (iv) Amount unpaid on calls
(a) (1)-(i), (2)-(ii), (3)-(iii), (4)-(iv)
(b) (1)-(iv), (2)-(iii), (3)-(ii), (4)-(i)
(c) (1)-(iii), (2)-(ii), (3)-(iv), (4)-(i)
(d) (1)-(iii), (2)-(iv), (3)-(i), (4)-(ii)
Show answer ▾ (இ) / (c) (1)-(iii), (2)-(ii), (3)-(iv), (4)-(i) · Solved one-mark questions →
1 mark
19.
கூட்டாளி சேர்ப்பின்போது சொத்துகள் மற்றும் பொறுப்புகளை மறுமதிப்பீடு செய்யும் போது ஏற்படும் இலாபம் அல்லது நட்டம் யாருடைய முதல் கணக்கிற்கு மாற்றப்படுகிறது ?
(அ) பழைய கூட்டாளிகள்
(ஆ) புதிய கூட்டாளி
(இ) அனைத்து கூட்டாளிகள்
(ஈ) தியாகம் செய்த கூட்டாளிகள்
The profit or loss on revaluation of assets and liabilities is transferred to the capital account of :
(a) The old partners
(b) The new partner
(c) All the partners
(d) The sacrificing partners
Show answer ▾ (அ) / (a) The old partners · Solved one-mark questions →
1 mark
20.
J மற்றும் K இலாப நட்டங்களை 5 : 3 என்ற விகிதத்தில் பகிர்ந்து கொள்கின்றனர். அவர்கள் S என்பவரை 1/5 இலாப பங்கிற்கு கூட்டாளியாக சேர்த்துக் கொண்டனர். தியாக விகிதத்தை கணக்கிடவும்.
(அ) 1 : 3
(ஆ) 3 : 1
(இ) 5 : 3
(ஈ) 3 : 5
J and K are sharing profits and losses in the ratio of 5 : 3. They admit S as a partner giving him 1/5 share of profits. Find out the sacrificing ratio.
(a) 1 : 3
(b) 3 : 1
(c) 5 : 3
(d) 3 : 5
Show answer ▾ (இ) / (c) 5 : 3 · Solved one-mark questions →
1 mark

பகுதி – II / PART – II

குறிப்பு : எவையேனும் ஏழு வினாக்களுக்கு விடையளிக்கவும். வினா எண் 30 -க்கு கட்டாயமாக விடையளிக்கவும்.
Note : Answer any seven questions. Question No. 30 is compulsory.
21.

கீழ்காணும் விவரங்களிலிருந்து இலாபம் அல்லது நட்டம் கண்டறியவும்.

விவரம்₹
ஆண்டின் தொடக்க முதல் (ஏப்ரல் 1, 2024)2,50,000
ஆண்டின் இறுதி முதல் (மார்ச் 31, 2025)4,25,000
அவ்வாண்டில் கொண்டு வந்த கூடுதல் முதல்60,000
அவ்வாண்டில் எடுப்புகள்35,000

From the following particulars ascertain profit or loss.

Particulars₹
Capital at the beginning of the year (1st April 2024)2,50,000
Capital at the end of the year (31st March 2025)4,25,000
Additional capital introduced during the year60,000
Drawings during the year35,000
2 marks
22.
உயில் கொடை என்றால் என்ன ?
What is legacy ?
2 marks
23.
கவி மற்றும் ரவி இருவரும் கூட்டாளிகள். கவி ஒவ்வொரு காலாண்டின் இறுதியிலும் ₹ 2,500 எடுத்துக் கொண்டார். எடுப்புகள் மீதான வட்டி ஆண்டுக்கு 6%. 2024 மார்ச் 31 -ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டிற்குரிய எடுப்புகள் மீது வட்டி சராசரி கால முறையைப் பயன்படுத்தி கணக்கிடவும்.
Kavi and Ravi are partners. Kavi draws ₹ 2,500 at the end of each quarter. Interest on drawings is chargeable at 6% p.a. Calculate interest on drawings for the year ending 31st March 2024 using average period.
2 marks
24.
சராசரி இலாபம் ₹ 30,000 ஆக இருக்கும்போது 3 ஆண்டுகள் கொள்முதல் என்ற அடிப்படையில் நற்பெயரின் மதிப்பைக் கணக்கிடவும்.
Calculate the value of Goodwill at 3 years purchase of average profit when average profit is ₹ 30,000.
2 marks
25.
கலா, மாலா மற்றும் நீலா என்ற கூட்டாளிகள் தங்கள் இலாபங்களை 2 : 2 : 1 என்ற விகிதத்தில் பகிர்ந்து வந்தனர். கலா என்பவர் கூட்டாண்மையை விட்டு விலகுகிறார். மாலா மற்றும் நீலாவுக்கும் இடையேயுள்ள புதிய இலாபப் பகிர்வு விகிதம் 3 : 2. ஆதாய விகிதத்தைக் கணக்கிடவும்.
Kala, Mala and Neela are partners sharing profits in the ratio of 2 : 2 : 1. Kala retires and the new profit sharing ratio between Mala and Neela is 3 : 2. Calculate the gaining ratio.
2 marks
26.
அழைப்பு நிலுவை என்பதன் பொருள் என்ன ?
What is meant by calls in Arrear ?
2 marks
27.
நிதிநிலை அறிக்கை பகுப்பாய்வின் கருவிகளைப் பட்டியலிடவும்.
List the tools of financial statement analysis.
2 marks
28.

ஆஷா நிறுமத்தின் பின்வரும் தகவல்களிலிருந்து நிலைச் சொத்துகள் சுழற்சி விகிதத்தைக் கணக்கிடவும்.

  1. அவ்வாண்டில் விற்பனை மூலம் பெற்ற வருவாய் ₹ 6,00,000.
  2. அவ்வாண்டில் இறுதியில் நிலைச்சொத்துகள் ₹ 60,000.

From the following information of Asha Ltd., calculate fixed assets turnover ratio :

  1. Revenue from operations during the year were ₹ 6,00,000.
  2. Fixed assets at the end of the year was ₹ 60,000.
2 marks
29.
Tally.ERP 9 -ல் குழு என்றால் என்ன ?
What is a group in Tally.ERP 9 ?
2 marks
30.
நடைமுறை முதல் என்றால் என்ன ?
What is working capital ?
2 marks

பகுதி – III / PART – III

குறிப்பு : எவையேனும் ஏழு வினாக்களுக்கு விடையளிக்கவும். வினா எண் 40 -க்கு கட்டாயமாக விடையளிக்கவும்.
Note : Answer any seven questions. Question No. 40 is compulsory.
31.
முழுமைபெறா பதிவேடுகளின் இயல்புகள் யாவை ?
What are the features of incomplete records ?
3 marks
32.

பின்வரும் விவரங்கள் திருப்பூர் விளையாட்டு மன்றத்தின் இறுதிக் கணக்குகளில் எவ்வாறு தோன்றும் எனக் காட்டவும்.

₹
மட்டைகள் மற்றும் பந்துகள் தொடக்க இருப்பு6,000
அவ்வாண்டில் வாங்கிய மட்டைகள் மற்றும் பந்துகள்34,000
பழைய மட்டைகள் மற்றும் பந்துகள் விற்பனை4,000
மட்டைகள் மற்றும் பந்துகள் இறுதி இருப்பு8,000

How will the following items appear in the final accounts of Tirupur Sports Club ?

₹
Opening stocks of bats and balls6,000
Purchase of bats and balls during the year34,000
Sale of old bats and balls4,000
Closing stock of bats and balls8,000
3 marks
33.
கமல் மற்றும் விமல் இருவரும் ஒரு கூட்டாண்மை நிறுவனத்தின் கூட்டாளிகள். கமல் எந்தவொரு கழிவுக்கு முன் உள்ள நிகர இலாபத்தில் 20% கழிவாகப் பெற வேண்டும். விமல், அனைத்து கழிவுக்குப் பின் உள்ள நிகர இலாபத்தில் 20% கழிவாகப் பெற வேண்டும். 2024 டிசம்பர் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டிற்குரிய கழிவு கணக்கிடுவதற்கு முன்னர் உள்ள நிகர இலாபம் ₹ 60,000. கமல் மற்றும் விமலின் கழிவினைக் கண்டுபிடிக்கவும்.
Kamal and Vimal are partners in a firm. Kamal is to get a commission of 20% of net profit before charging any commission. Vimal is to get a Commission of 20% on net profit after charging all Commission. Net profit for the year ended 31st December 2024 before charging any Commission was ₹ 60,000. Find the Commission of Kamal and Vimal.
3 marks
34.

கடந்த 4 ஆண்டுகள் சராசரி இலாபத்தில் 3 ஆண்டுகள் கொள்முதல் என்ற அடிப்படையில் கூட்டு சராசரி இலாபத்தினை பயன்படுத்தி, நற்பெயரின் மதிப்பைக் கணக்கிடவும்.

ஆண்டுஇலாபம்
₹
நிறைகள்
20205,0001
20216,0002
20228,0003
20239,0004

Find out the value of Goodwill at three years purchase of weighted average profit of last four years.

YearProfit
₹
Weight
20205,0001
20216,0002
20228,0003
20239,0004
3 marks
35.

சதிஷ் மற்றும் சுதன் இருவரும் ஒரு கூட்டாண்மை நிறுவனத்தின் கூட்டாளிகள். அவர்கள் 4 : 3 என்ற விகிதத்தில் இலாபம் மற்றும் நட்டங்களைப் பகிர்ந்து வருகின்றனர். 2024 ஏப்ரல் 1 அன்று சசி என்பவரை கூட்டாளியாகச் சேர்த்துக் கொண்டனர். சசி கூட்டாண்மையில் சேர்ந்த அன்று நிறுவன ஏடு நற்பெயர் மதிப்பினை ₹ 70,000 என்று காட்டியது. மாறுபடும் முதல் முறையில் பராமரிக்கப்படுவதாக கருதி தேவையான குறிப்பேட்டுப் பதிவுகளைத் தரவும். கூட்டாளிகள் பின்வரும் முடிவினை எடுத்தனர்.

  1. ஏட்டில் உள்ள நற்பெயர் தொகை முழுவதையும் போக்கெழுதுவது
  2. ஏட்டில் உள்ள நற்பெயரில் ₹ 42,000 மட்டும் போக்கெழுதுவது

Sathish and Sudhan are partners in a firm sharing profits and losses in the ratio of 4 : 3. On 1st April 2024, they admitted Sasi as a partner. On the date of Sasi’s admission, goodwill appeared in the books of the firm at ₹ 70,000. By assuming fluctuating capital account, pass the necessary journal entry if the partners decide to

  1. Write off the entire amount of existing goodwill.
  2. Write off ₹ 42,000 of the existing goodwill.
3 marks
36.
வெளிச் செல்லும் கூட்டாளிக்குச் செலுத்த வேண்டிய தொகையினை எவ்வாறு தீர்வு செய்யலாம் ?
What are the ways in which the final amount due to an outgoing partner can be settled ?
3 marks
37.

ராம் நிறுமம் ₹ 3,00,000 மதிப்புள்ள இயந்திரத்தை ஷியாம் நிறுவனத்திடமிருந்து வாங்கியது. அது பங்கொன்று ₹ 10 மதிப்புள்ள முற்றிலும் செலுத்தப்பட்ட நேர்மைப் பங்குகளை அவர்களுக்கு செலுத்த வேண்டிய தொகைக்காக வழங்கியது. கீழ்க்கண்ட நிலைகளில் பதிய வேண்டிய குறிப்பேட்டுப் பதிவுகளைத் தரவும்.

  1. பங்குகளை முகமதிப்பில் வெளியிட்டால்
  2. பங்குகளை 50% முனைமத்தில் வெளியிட்டால்
Ram Ltd, purchased machinery of ₹ 3,00,000 from Shyam Traders. It issued equity shares of ₹ 10 each fully paid in satisfaction of their claim. What entries will be made if such issue is made (i) at par and (ii) at a premium of 50%.
3 marks
38.

பின்வரும் விவரங்களைக் கொண்டு முல்லை வரையறு நிறுவனத்தின் போக்கு சதவீதங்களைக் கணக்கிடவும்.

விவரம்₹ ஆயிரங்களில்
2020-212021-222022-23
விற்பனை மூலம் பெற்ற வருவாய்120132156
இதர வருமானம்503865
செலவுகள்100135123

Calculate trend percentages for the following particulars of Mullai Ltd.

Particulars₹ in thousands
2020 - 212021 - 222022 - 23
Revenue from operations120132156
Other income503865
Expenses100135123
3 marks
39.
பின்வரும் தகவல்களிலிருந்து மொத்த இலாப விகிதம் கணக்கிடவும். விற்பனையிலிருந்து பெற்ற வருவாய் ₹ 5,00,000, விற்பனையிலிருந்து பெற்ற வருவாய்க்கான அடக்கவிலை ₹ 4,20,000 மற்றும் கொள்முதல் ₹ 3,60,000.
Calculate gross profit ratio from the following. Revenue from operations ₹ 5,00,000. Cost of revenue from operations ₹ 4,20,000 and purchase ₹ 3,60,000.
3 marks
40.
Tally ERP 9 -ல் இருப்புநிலைக் குறிப்பை மற்றும் நாளேட்டை பார்வையிடுவது எவ்வாறு என்பதை விளக்கவும்.
Explain how to view Balance sheet and Day Book in Tally ERP 9.
3 marks

பகுதி – IV / PART – IV

குறிப்பு : அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்.
Note : Answer all the questions.
41.
(அ)

பின்வரும் விவரங்களிலிருந்து மொத்தக் கடனாளிகள் க/கு, மொத்தக் கடனீந்தோர் க/கு, பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு க/கு மற்றும் செலுத்தற்குரிய மாற்றுச் சீட்டு க/கு தயாரித்து கடன் விற்பனை மற்றும் கடன் கொள்முதல் கணக்கிடவும்.

விவரம்₹விவரம்₹
2023, ஏப்ரல் 1 அன்று இருப்புகள்2024, மார்ச் 31 அன்று இருப்புகள்
பற்பல கடனாளிகள்1,20,000பற்பல கடனாளிகள்1,10,000
பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு15,000பற்பல கடனீந்தோர்75,000
பற்பல கடனீந்தோர்60,000பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு4,000
செலுத்தற்குரிய மாற்றுச்சீட்டு5,000செலுத்தற்குரிய மாற்றுச்சீட்டு10,000
பிற தகவல்கள்
கடனாளிகளிடமிருந்து பெற்ற ரொக்கம்3,00,000செலுத்தற்குரிய மாற்றுச்சீட்டுக்குச் செலுத்தியது15,000
வாடிக்கையாளருக்கு அளித்த தள்ளுபடி12,500பெறுதற்குரிய மாற்றுச்சீட்டுக்காக ரொக்கம் பெற்றது30,000
கடனீந்தோருக்கு அளித்த ரொக்கம்1,60,000பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு மறுக்கப்பட்டது2,000
சரக்களித்தோரால் அளிக்கப்பட்ட தள்ளுபடி5,000வாராக் கடன்8,000
(a)

From the following details you are required to calculate credit sales and credit purchases by preparing total debtors a/c, total creditors a/c, bills receivable a/c and bills payable a/c.

Particulars₹Particulars₹
Balances as on 1st April 2023Balances as on 31st March 2024
Sundry debtors1,20,000Sundry Debtors1,10,000
Bills receivable15,000Sundry Creditors75,000
Sundry Creditors60,000Bills receivable4,000
Bills payable5,000Bills payable10,000
Other information :
Cash received from debtors3,00,000Payments against bills payable15,000
Discount allowed to customers12,500Cash received for bills receivable30,000
Cash paid to creditors1,60,000Bills receivable dishonoured2,000
Discount allowed by Suppliers5,000Bad debts8,000
அல்லது / OR
(ஆ)தேவி நிறுமம், 10,000 ₹ 10 மதிப்புள்ள நேர்மைப் பங்குகளை ₹ 2 முனைமத்தில் 14,000 பங்குகள் விண்ணப்பித்தவர்களுக்கு விகித அளவு அடிப்படையில் ஒதுக்கீடு செய்தது. மிகுதியாகப் பெறப்பட்ட விண்ணப்பத் தொகை ஒதுக்கீட்டுத் தொகையில் சரிக்கட்டப்படும். பங்கொன்றுக்கு விண்ணப்பத்தின் போது ₹ 2, ஒதுக்கீட்டின் போது ₹ 5 (முனைமம் ₹ 2 உட்பட) முதல் அழைப்பின்போது ₹ 3 மற்றும் இறுதி அழைப்பின் போது ₹ 2 செலுத்தப்பட வேண்டும். விமல் என்ற பங்குதாரர் தன்னுடைய 300 பங்குகளுக்கு முதல் மற்றும் இறுதி அழைப்புகளை செலுத்தத் தவறினார். அனைத்துப் பங்குகளும் ஒறுப்பிழப்புச் செய்யப்பட்டன. அவற்றில் 200 பங்குகள் பங்கொன்றுக்கு ₹ 9 வீதம் மறுவெளியீடு செய்யப்பட்டன. தேவையான குறிப்பேட்டுப் பதிவுகளைத் தரவும்.
(b)Devi Ltd, allotted 10,000 equity shares of ₹ 10 each at a premium of ₹ 2 per share to applicants of 14,000 shares on a pro-rata basis. The excess application money will be adjusted towards allotment money. The amount payable was ₹ 2 on application, ₹ 5 on allotment (including premium of ₹ 2 each) and ₹ 3 on first call and ₹ 2 on final call. Vimal, a share holder failed to pay the first call and final call on his 300 shares. All the shares were forfeited and out of them 200 shares were re-issued @ ₹ 9 per share. Pass the necessary journal entries.
5 marks
42.
(அ)

திருவண்ணாமலை பொழுதுபோக்கு மன்றத்தின் கீழ்க்காணும் தகவல்களிலிருந்து 2023, மார்ச் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டிற்குரிய பெறுதல்கள் மற்றும் செலுத்தல்கள் கணக்கினைத் தயார் செய்யவும்.

விவரம்₹விவரம்₹
தொடக்க ரொக்க இருப்பு (1.4.2022)3,000கேளிக்கை வரவுகள்20,000
தொடக்க வங்கி இருப்பு (1.4.2022)12,000சேர்க்கைக் கட்டணம் பெற்றது1,000
அறைகலன் வாங்கியது11,000நகராட்சி வரி22,000
விளையாட்டு உபகரணங்கள் வாங்கியது11,000அறக்கொடை நாடகக் காட்சி செலவுகள்2,000
விளையாட்டு அரங்கத்திற்காக பெற்ற நன்கொடை8,000பில்லியார்ட்ஸ் மேசை வாங்கியது15,000
பழைய டென்னீஸ் பந்துகள் விற்றது1,500புதிய டென்னீஸ் மைதானம் கட்டியது18,000
செய்தித்தாள்கள் வாங்கியது500அறக்கொடை நாடகக் காட்சி வரவுகள்2,500
பயணச் செலவுகள்4,500இறுதி கை ரொக்க இருப்பு8,000
(a)

From the following particulars of Tiruvannamalai Recreation Club, prepare Receipts and Payment account for the year ended 31st March 2023.

Particulars₹Particulars₹
Opening cash balances as on 1.4.20223,000Receipts from entertainment20,000
Opening bank balances as on 1.4.202212,000Admission fees received1,000
Furniture purchased11,000Municipal taxes22,000
Sports equipment purchased11,000Expenses of charity show2,000
Donation received for pavilion8,000Billiards table purchased15,000
Sale of old tennis balls1,500Construction of new tennis court18,000
Newspapers bought500Receipts from charity show2,500
Travelling expenses4,500Closing balance of cash in hand8,000
அல்லது / OR
(ஆ)

இராஜி மற்றும் விஜி இருவரும் கூட்டாளிகள். அவர்கள் 3 : 1 விகிதத்தில் இலாபம் மற்றும் நட்டங்களை பகிர்ந்து வந்தனர். அவர்களது 31.03.2023 நாளன்றைய இருப்புநிலைக் குறிப்பு பின்வருமாறு இருந்தது.

பொறுப்புகள்₹₹சொத்துகள்₹
முதல் கணக்குகள்கட்டடம்25,000
இராஜி30,000அறைகலன்1,000
விஜி16,00046,000சரக்கிருப்பு20,000
பொதுக் காப்பு4,000கடனாளிகள்16,000
கடனீந்தோர்37,500பெறுதற்குரிய மாற்றுச் சீட்டு3,000
வங்கி ரொக்கம்12,500
இலாப நட்ட க/கு (நட்டம்)10,000
87,50087,500

1.4.2023 -இல் பின்வரும் நிபந்தனைகளுடன் கணேஷ் என்பவர் புதிய கூட்டாளியாக சேருகிறார்.

  1. கணேஷ் 1/5 இலாபப் பங்கிற்கென ₹ 10,000 முதல் கொண்டு வருகிறார்.
  2. சரக்கிருப்பு மற்றும் அறைகலன் மதிப்பில் 10% குறைத்து மதிப்பிடப்படுகிறது. கடனாளிகள் மீது 5% ஐயக்கடன் ஒதுக்கு உருவாக்கப்படுகிறது.
  3. கட்டடத்தின் மீது 20% மதிப்பேற்றம் செய்யப்படுகிறது.
  4. மறுமதிப்பீட்டு இலாபம் ₹ 2,100.

புதிய கூட்டாளி சேர்க்கைக்கு பின் உள்ள கூட்டாளிகளின் முதல் க/கு மற்றும் இருப்பு நிலைக் குறிப்பு தயார் செய்யவும்.

(b)

Raji and Viji are partners sharing profits and losses in the ratio of 3 : 1. Their balance sheet as on 31st March 2023 is as under.

Liabilities₹₹Assets₹
Capital Accounts :Buildings25,000
Raji30,000Furniture1,000
Viji16,00046,000Stock20,000
General Reserve4,000Debtors16,000
Creditors37,500Bills receivable3,000
Cash at bank12,500
Profit and loss account (Loss)10,000
87,50087,500

On 1.4.2023, they admit Ganesh as a new partner on the following arrangements.

  1. Ganesh brings ₹ 10,000 as Capital for 1/5 share of profit.
  2. Stock and furniture is to be reduced by 10%, a reserve of 5% on debtors for doubtful debts is to be created.
  3. Appreciate buildings by 20%.
  4. Revaluation profit ₹ 2,100.

Prepare partner’s Capital account and the balance sheet of the firm after admission.

5 marks
43.
(அ)

பின்வரும் விவரங்களிலிருந்து, உயர் இலாபத்தில் 3 ஆண்டுகள் கொள்முதல் என்ற அடிப்படையில் நற்பெயரின் மதிப்பைக் கணக்கிடவும்.

  1. பயன்படுத்தப்பட்ட முதல் : ₹ 60,000
  2. சாதாரண இலாப விகிதம் : 10%
  3. 5 ஆண்டுகளுக்குரிய நிகர இலாபம் :
    ₹
    202015,000
    202116,000
    202217,500
    202318,500
    202420,000
  4. கூட்டாளிகளுக்கான உழைப்பூதியம் ஆண்டுக்கு ₹ 1,400
(a)

Calculate the value of goodwill at 3 years purchase of super profit from the following information.

  1. Capital employed : ₹ 60,000
  2. Normal rate of profit : 10%
  3. Net profits for 5 years :
    ₹
    202015,000
    202116,000
    202217,500
    202318,500
    202420,000
  4. Fair remuneration to the partner’s ₹ 1,400 p.a.
அல்லது / OR
(ஆ)

A மற்றும் B இருவரும் ஒரு கூட்டாண்மை நிறுவனத்தின் கூட்டாளிகள். அவர்கள் 7 : 5 என்ற விகிதத்தில் இலாபங்கள் மற்றும் நட்டங்களை பகிர்ந்து வந்தனர். 2024, மார்ச் 31 அன்றைய அவர்களின் இருப்புநிலைக் குறிப்பு பின்வருமாறு :

பொறுப்புகள்₹₹சொத்துகள்₹
முதல் கணக்குகள்கட்டடம்80,000
A70,000அறைகலன்20,000
B50,0001,20,000சரக்கிருப்பு25,000
பற்பல கடனீந்தோர்30,000கடனாளிகள்30,000
இலாப நட்ட க/கு24,000வங்கி19,000
1,74,0001,74,000

1.4.2024 -ல் C புதிய கூட்டாளியாக சேருகிறார். அவர் ₹ 30,000 முதலுடன் எதிர்கால இலாபப் பங்கில் 1/3 விகிதத்தில் பின்வரும் சரிக்கட்டலுடன் கூட்டாளியாகிறார்.

  1. சரக்கிருப்பின் மதிப்பு ₹ 5,000 குறைக்கப்பட வேண்டும்.
  2. வாரா ஐயக்கடன் ஒதுக்கு ₹ 3,000 உருவாக்கப்பட வேண்டும்.
  3. கட்டடம் ₹ 20,000 மதிப்பேற்றம் செய்யப்பட வேண்டும்.

மறுமதிப்பீட்டுக் கணக்கு மற்றும் கூட்டாளி சேர்க்கைக்கு பின்பான கூட்டாளி முதல் கணக்கு தயார் செய்யவும்.

(b)

A and B are partners in a firm sharing profits and losses in the ratio of 7 : 5. Their Balance sheet as on 31st March 2024 is as follows.

Liabilities₹₹Assets₹
Capital accounts :Land80,000
A70,000Furniture20,000
B50,0001,20,000Stock25,000
Sundry creditors30,000Debtors30,000
Profit and loss A/c24,000Bank19,000
1,74,0001,74,000

C is admitted as a new partner on 1.4.2024 by introducing a capital of ₹ 30,000 for 1/3 share in the future profit subject to the following adjustments.

  1. Stock to be depreciated by ₹ 5,000.
  2. Provision for doubtful debts to be created for ₹ 3,000.
  3. Land to be appreciated by ₹ 20,000.

Prepare revaluation a/c and Capital a/c of partners after admission.

5 marks
44.
(அ)

A, B, C மற்றும் D ஆகியோர் ஒரு நிறுவனத்தின் கூட்டாளிகள். கூட்டாண்மை ஒப்பாவணம் இல்லாத போது பின்வருவனவற்றை எவ்வாறு மேற்கொள்வீர்கள் ?

  1. A என்பவர் அதிக முதல் வழங்கியுள்ளார். அவர் முதல் மீது வட்டி ஆண்டுக்கு 10% கோருகிறார்.
  2. B ஒவ்வொரு மாதமும் ₹ 3,000 எடுத்துக் கொள்கிறார். ஏனைய கூட்டாளிகள் B -விடம் ஆண்டுக்கு 8% எடுப்புகள் மீது வட்டி நிறுவனத்திற்கு அளிக்குமாறு கேட்கிறார்கள். ஆனால் B அதனை ஒப்புக்கொள்ளவில்லை.
  3. A, இலாபத்தினை முதல் விகிதத்தில் பகிர்ந்தளிக்க வேண்டும் என்கிறார். ஆனால் பிற கூட்டாளிகள் அதனை ஒப்புக்கொள்ளவில்லை.
  4. D தனது முழு நேரத்தையும் தொழிலில் செலவிடுவதால் அவர் ஒவ்வொரு மாதமும் ₹ 20,000 ஊதியம் வேண்டுமென்று கோருகிறார்.
  5. C -யால் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட கடன் ₹ 1,00,000. அவர் கடன் மீதான வட்டி ஆண்டுக்கு 12% வேண்டுமென்று கோருகிறார்.
(a)

A, B, C and D are partners in a firm. There is no partnership deed. How will you deal with the following ?

  1. A has contributed maximum capital. He demands interest on capital at 10% p.a.
  2. B has withdrawn ₹ 3,000 per month. Other partners ask B to pay interest on drawings @ 8% p.a. to the firm. But, B did not agree to it.
  3. A demands the profit to be shared in the capital ratio. But, others do not agree.
  4. D demands salary at the rate of ₹ 20,000 per month as he spends full time for the business.
  5. Loan advanced by C to the firm is ₹ 1,00,000. He demands interest on loan @ 12% p.a.
அல்லது / OR
(ஆ)கணினிமயக் கணக்கியல் முறையின் பயன்பாடுகளில் ஏதேனும் ஐந்தினை விளக்கவும்.
(b)Explain any five applications of computerised accounting system.
5 marks
45.
(அ)

சுரேஷ், கணேஷ் மற்றும் மகேஷ் என்ற கூட்டாளிகள் முறையே சமமாக இலாப நட்டங்களைப் பகிர்ந்து வந்தனர். 31.03.2023 -ஆம் நாளைய இருப்புநிலைக் குறிப்பு பின்வருமாறு :

பொறுப்புகள்₹₹சொத்துகள்₹₹
அலுவலக சாதனங்கள்1,40,000
இயந்திரம்2,80,000
முதல் கணக்குகள்பற்பல கடனாளிகள்1,04,000
சுரேஷ்1,60,000கழிக்க : வாரா ஐயக்கடன் ஒதுக்கு4,0001,00,000
கணேஷ்1,20,000சரக்கிருப்பு1,20,000
மகேஷ்2,00,0004,80,000வங்கி ரொக்கம்80,000
பற்பல கடனீந்தோர்2,40,000
7,20,0007,20,000

2023, மார்ச் 31 ஆம் நாளன்று பின்வரும் நிபந்தனைகளுக்குட்பட்டு மகேஷ் கூட்டாண்மையிலிருந்து விலகினார்.

  1. இயந்திரம் ₹ 2,60,000 ஆக மதிப்பிடுவது.
  2. அலுவலக சாதனங்கள் மதிப்பை ₹ 4,000 குறைப்பது.
  3. வாரா ஐயக்கடன் ஒதுக்கு ₹ 6,000 ஆக உயர்த்துவது.
  4. ஏடுகளில் பதிவு பெறாமல் உள்ள முதலீடுகள் ₹ 50,000 பதிவு செய்ய வேண்டும்.

குறிப்பேட்டுப் பதிவுகள் தந்து மறுமதிப்பீட்டுக் கணக்கு தயாரிக்கவும்.

(a)

Suresh, Ganesh and Mahesh are partners in a firm sharing profits and losses equally. Their balance sheet as on 31st March 2023 is as follows :

Liabilities₹₹Assets₹₹
Office equipment1,40,000
Machinery2,80,000
Capital accounts :Sundry Debtors1,04,000
Suresh1,60,000Less : Provisions for doubtful debts4,0001,00,000
Ganesh1,20,000Stock1,20,000
Mahesh2,00,0004,80,000Cash at bank80,000
Sundry Creditors2,40,000
7,20,0007,20,000

Mahesh retired on 31st March 2023 subject to the following conditions.

  1. Machinery is valued at ₹ 2,60,000.
  2. Value of office equipment is brought down by ₹ 4,000.
  3. Provision for doubtful debts should be increased to ₹ 6,000.
  4. Investment of ₹ 50,000 not recorded in the books is to be recorded now.

Pass necessary journal entries and prepare revaluation account.

அல்லது / OR
(ஆ)

ஆகாஷ் நிறுமத்திடமிருந்து பெறப்பட்ட பின்வரும் தகவல்களிலிருந்து (i) சரக்கிருப்பு சுழற்சி விகிதம் (ii) கணக்குகள் மூலம் பெற வேண்டியவைகளின் சுழற்சி விகிதம் (iii) கணக்குகள் மூலம் செலுத்தப்பட வேண்டியவைகளின் சுழற்சி விகிதம் மற்றும் (iv) நிலைச் சொத்துகள் சுழற்சி விகிதம் கணக்கிடவும்.

விவரம்2023 மார்ச் 31
₹
2024 மார்ச் 31
₹
சரக்கிருப்பு70,00050,000
கணக்குகள் மூலம் பெற வேண்டியவைகள்40,00030,000
கணக்குகள் மூலம் செலுத்த வேண்டியவைகள்20,00025,000
நிலைச் சொத்துகள்2,75,0002,50,000

கூடுதல் தகவல்கள் :

  1. அவ்வாண்டில் விற்பனை மூலம் பெற்ற வருவாய் ₹ 5,25,000.
  2. அவ்வாண்டில் கொள்முதல் ₹ 2,25,000
  3. விற்பனை மூலம் பெற்ற வருவாய்க்கான அடக்கவிலை ₹ 3,00,000.

விற்பனை மற்றும் கொள்முதலை கடன் நடவடிக்கைகளாகக் கருதவும்.

(b)

Calculate (i) Inventory turnover ratio (ii) Trade receivable turnover ratio (iii) Trade payable turnover ratio and (iv) Fixed assets turnover ratio from the following information obtained from Akash Ltd.

ParticularsAs on 31st March 2023
₹
As on 31st March 2024
₹
Inventory70,00050,000
Trade receivable40,00030,000
Trade payable20,00025,000
Fixed assets2,75,0002,50,000

Additional information :

  1. Revenue from operations for the year ₹ 5,25,000.
  2. Purchases for the year ₹ 2,25,000
  3. Cost of revenue from operations ₹ 3,00,000.

Assume that sales and purchases are for credit.

5 marks
46.
(அ)

பின்வரும் விவரங்களைக் கொண்டு விஷ்ணு வரையறு நிறுமத்தின் மார்ச் 31, 2023 மற்றும் மார்ச் 31, 2024 -க்கான பொது அளவு வருவாய் அறிக்கையினை தயார் செய்யவும்.

விவரம்2022-23
₹
2023-24
₹
விற்பனை மூலம் பெற்ற வருவாய்1,00,0001,50,000
இதர வருமானம்25,00075,000
செலவுகள்1,25,00075,000
வருமான வரி %4040
(a)

From the following particulars of Vishnu Ltd. Prepare common size income statement for the year ended 31st March 2023 and 31st March 2024.

Particulars2022-23
₹
2023-24
₹
Revenue from operations1,00,0001,50,000
Other income25,00075,000
Expenses1,25,00075,000
Income tax %4040
அல்லது / OR
(ஆ)

தங்கள் இலாப நட்டங்களை 3 : 4 என்ற இலாப விகிதத்தில் பகிர்ந்து வரும் பத்மா மற்றும் பத்மினி என்ற கூட்டாளிகளின் பின்வரும் இருப்புநிலைக் குறிப்பிலிருந்து 2024, டிசம்பர் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டிற்குரிய முதல் மீது வட்டி ஆண்டுக்கு 6% கணக்கிடவும்.

2024 டிசம்பர் 31 ஆம் நாளைய இருப்புநிலைக் குறிப்பு

பொறுப்புகள்₹சொத்துகள்₹
முதல் கணக்குகள்பல்வகைச் சொத்துகள்1,60,000
பத்மா60,000
பத்மினி80,000
இலாப நட்ட பகிர்வு க/கு20,000
1,60,0001,60,000

2024, ஜூலை 1 அன்று பத்மா கொண்டு வந்த கூடுதல் முதல் ₹ 12,000 மற்றும் 2024, அக்டோபர் 1 அன்று பத்மினி கொண்டு வந்த கூடுதல் முதல் ₹ 20,000. அவ்வாண்டில் பத்மா மற்றும் பத்மினி எடுப்புகள் முறையே ₹ 10,000 மற்றும் ₹ 14,000. அவ்வாண்டில் ஈட்டிய இலாபம் ₹ 62,000.

(b)

From the following balance sheets of Padma and Padmini who share profits and losses in the ratio of 3 : 4, calculate interest on capital at 6% p.a. for the year ending 31st December 2024.

Balance sheet as on 31st Dec 2024

Liabilities₹Assets₹
Capital accounts :Sundry Assets1,60,000
Padma60,000
Padmini80,000
Profit and Loss appropriation A/c20,000
1,60,0001,60,000

On 1st July 2024, Padma introduced an additional capital of ₹ 12,000 and on 1st October 2024, Padmini introduced ₹ 20,000. Drawings of Padma and Padmini during the year were ₹ 10,000 and ₹ 14,000 respectively. Profit earned during the year was ₹ 62,000.

5 marks
47.
(அ)

ரமணி என்பவர் தன்னுடைய ஏடுகளை இரட்டைப் பதிவு முறையில் பராமரிப்பதில்லை. 2024, டிசம்பர் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டிற்குரிய வியாபார மற்றும் இலாப நட்டக் க/கு மற்றும் அந்நாளைய இருப்புநிலைக் குறிப்பு தயாரிக்கவும்.

விவரம்1.1.2024
₹
31.12.2024
₹
இயந்திரம்30,00030,000
வங்கி ரொக்கம்12,50016,500
பற்பல கடனாளிகள்35,00050,000
சரக்கிருப்பு22,50011,000
பெறுதற்குரிய மாற்றுச் சீட்டு10,00019,000
வங்கிக் கடன்22,50022,500
பற்பல கடனீந்தோர்12,50010,500

கூடுதல் தகவல்கள் :

₹₹
ரொக்க விற்பனை10,000கடன் விற்பனை90,000
ரொக்க கொள்முதல்4,000கடன் கொள்முதல்26,000
கூலி3,000சம்பளம்11,750
விளம்பரம்3,500வங்கி கடன் மீது வட்டி2,250
எடுப்புகள்30,000கூடுதல் முதல்10,500
முதல் (1.1.24)75,000

சரிக்கட்டுதல்கள் :

இயந்திரம் மீது 10% தேய்மானம் நீக்கவும். கடனாளிகள் மீது 1% ஐயக்கடன் ஒதுக்கு உருவாக்கவும்.

(a)

Ramani does not keep his book under double entry system. From the following information prepare Trading and Profit and Loss a/c and Balance Sheet as on 31.12.2024.

Particulars1.1.2024
₹
31.12.2024
₹
Machinery30,00030,000
Cash at bank12,50016,500
Sundry debtors35,00050,000
Stock22,50011,000
Bills receivable10,00019,000
Bank loan22,50022,500
Sundry Creditors12,50010,500

Additional Informations :

₹₹
Cash Sales10,000Credit Sales90,000
Cash purchases4,000Credit purchases26,000
Wages3,000Salaries11,750
Advertisement3,500Interest on bank loan2,250
Drawings30,000Additional Capital10,500
Capital (1.1.24)75,000

Adjustments :

Write off depreciation of 10% on machinery. Create a reserve of 1% on debtors for doubtful debts.

அல்லது / OR
(ஆ)குணா வரையறு நிறுமம் பங்கு ஒன்றின் மதிப்பு ₹ 10 வீதம் 40,000 நேர்மைப் பங்குகளை பொதுமக்களிடம் வெளியிட்டது. விண்ணப்பத்தின் போது ₹ 2, ஒதுக்கீட்டின் போது ₹ 5 மற்றும் முதலாம் மற்றும் இறுதி அழைப்பின் போது ₹ 3 என தொகை செலுத்தப்பட வேண்டும். 50,000 பங்குகளுக்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டன. 40,000 பங்குகளுக்கு விகித அளவு அடிப்படையில் ஒதுக்கீடு செய்யப்பட்டன. கூடுதலாக உள்ள விண்ணப்பத் தொகை ஒதுக்கீட்டிற்கு பயன்படுத்தப்பட்டது. அனைத்து தொகையும் முறையாக பெறப்பட்டன எனக் கொண்டு, குறிப்பேட்டுப் பதிவுகளைத் தரவும்.
(b)Guna Ltd. issued 40,000 equity shares of ₹ 10 each to the public payable ₹ 2 on application, ₹ 5 on allotment and ₹ 3 on first and final call. Applications were received for 50,000 shares. The directors decided to allot 40,000 shares on pro-rata basis and surplus of application money was utilised for allotment. Pass journal entries assuming that the amounts due were received.
5 marks
⬇️ Download PDF All Accountancy papers