TN Online TestSamacheer Kalvi practice

12th Standard Bio-Botany Question Paper May 2022

Paper code 5927 35 marks 180 minutes

The complete May 2022 public exam paper exactly as printed: every question in Tamil and English. Download the PDF, or take Part I as a free online test.

உயிரியல் – தாவரவியல் / Bio-Botanyமே 2022 · May 2022

பிரிவு – 1 / SECTION – 1

பகுதி – I (உயிரி-தாவரவியல்) (மதிப்பெண்கள் : 35). குறிப்பு : (i) அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும். (ii) கொடுக்கப்பட்டுள்ள மாற்று விடைகளில் மிகவும் ஏற்புடைய விடையைத் தேர்ந்தெடுத்துக் குறியீட்டுடன் விடையினையும் சேர்த்து எழுதவும்.
PART – I (BIO-BOTANY) (Marks : 35). Note : (i) Answer all the questions. (ii) Choose the most appropriate answer from the given four alternatives and write the option code and the corresponding answer.
1.
DNA -வை ஈகோரி துண்டிக்குமிடம் :
(அ) GAATTC
(ஆ) AGGGTT
(இ) TATAGC
(ஈ) GTATATC
EcoRI cleaves DNA at :
(a) GAATTC
(b) AGGGTT
(c) TATAGC
(d) GTATATC
Show answer ▾ (அ) / (a) GAATTC · Solved one-mark questions →
1 mark
2.
பெடாஜெனிசிஸ் (Pedogenesis) என்பது எதனுடன் தொடர்புடையது ?
(அ) உயிரித் தொகை
(ஆ) தொல்லுயிரி படிவம்
(இ) மண்
(ஈ) நீர்
Pedogenesis refers to :
(a) Population
(b) Fossils
(c) Soil
(d) Water
Show answer ▾ (இ) / (c) Soil · Solved one-mark questions →
1 mark
3.
டெக்டோனா கிராண்டிஸ் என்பது ________ குடும்பத்தின் தாவரம்.
(அ) டிப்டீரோகார்பேசி
(ஆ) லேமியேசி
(இ) எபினேசி
(ஈ) பேபேசி
Tectona grandis is coming under the family :
(a) Dipterocarpaceae
(b) Lamiaceae
(c) Ebenaceae
(d) Fabaceae
Show answer ▾ (ஆ) / (b) Lamiaceae · Solved one-mark questions →
1 mark
4.
காடுகள் அழிக்கப்படுதல் எனப்படுவது :
(அ) குளங்களில் வளரும் தாவரங்கள் மற்றும் மரங்கள்
(ஆ) காடுகளற்ற பகுதிகளில் வளரும் தாவரங்கள் மற்றும் மரங்கள்
(இ) தாவரங்கள் மற்றும் மரங்கள் ஆகியவற்றை அகற்றுதல்
(ஈ) காடுகள் அழிந்த பகுதிகளில் வளரும் தாவரங்கள் மற்றும் மரங்கள்
Deforestation means :
(a) growing plants and trees in a pond.
(b) growing plants and trees in an area where there is no forest.
(c) removal of plants and trees.
(d) growing plants and trees in an area where the forest is removed.
Show answer ▾ (இ) / (c) removal of plants and trees. · Solved one-mark questions →
1 mark
5.
எத்திடியம் புரோமைடு எந்த தொழில்நுட்பமுறையில் பயன்படுத்தப்படுகிறது ?
(அ) பாலிமரேஸ் சங்கிலித்தொடர்வினை
(ஆ) சதர்ன் ஒற்றியெடுப்பு தொழில்நுட்பமுறை
(இ) அகரோஸ் இழும மின்னாற் பிரிப்பு
(ஈ) வெஸ்டர்ன் ஒற்றியெடுப்பு தொழில்நுட்பமுறை
In which techniques Ethidium Bromide is used ?
(a) Polymerase Chain Reaction
(b) Southern Blotting Techniques
(c) Agarose Gel Electrophoresis
(d) Western Blotting Techniques
Show answer ▾ (இ) / (c) Agarose Gel Electrophoresis · Solved one-mark questions →
1 mark
6.
மூடுவிதைத் தாவரங்களில் ஆண் கேமிட்டகத் தாவரத்தின் முதல் செல் :
(அ) உட்கரு
(ஆ) நுண் வித்து
(இ) முதல்நிலை கருவூண்திசு
(ஈ) பெருவித்து
The first cell of male gametophyte in angiosperm is :
(a) Nucleus
(b) Microspore
(c) Primary Endosperm Nucleus
(d) Megaspore
Show answer ▾ (ஆ) / (b) Microspore · Solved one-mark questions →
1 mark
7.
ஓங்குதன்மை மறைத்தலின் விகிதமானது :
(அ) 9 : 3 : 4
(ஆ) 9 : 3 : 3 : 1
(இ) 9 : 6 : 1
(ஈ) 12 : 3 : 1
The Dominant Epistasis ratio is :
(a) 9 : 3 : 4
(b) 9 : 3 : 3 : 1
(c) 9 : 6 : 1
(d) 12 : 3 : 1
Show answer ▾ (ஈ) / (d) 12 : 3 : 1 · Solved one-mark questions →
1 mark
8.
ஒரே ரகத் தாவரங்களுக்கிடையே கலப்பு செய்வது ________ என அழைக்கப்படுகிறது.
(அ) ஒரே ரகத்திற்குள் கலப்பு
(ஆ) சிற்றினங்களுக்கிடையே கலப்பு
(இ) பேரினங்களுக்கிடையே கலப்பு
(ஈ) ரகங்களுக்கு இடையே கலப்பு
Crosses between the plants of the same variety are called ________.
(a) intravarietal
(b) interspecific
(c) intergeneric
(d) intervarietal
Show answer ▾ (அ) / (a) intravarietal · Solved one-mark questions →
1 mark

பிரிவு – 2 / SECTION – 2

குறிப்பு : கீழ்க்காணும் வினாக்களில் ஏதேனும் நான்கு வினாக்களுக்கு விடையளிக்கவும்.
Note : Answer any four of the following questions.
9.
மெல்லிடோஃபில்லி என்றால் என்ன ?
What is Mellitophily ?
2 marks
10.
நியூக்ளியோடைடு தொடர்வரிசையின் முனை மற்றும் உள்ளாக அமைந்த பாஸ்போடைஎஸ்டர் பிணைப்பைத் துண்டிக்க எந்த நொதிகளைப் பயன்படுத்துவாய் ?
What are the enzymes you can use to cut terminal end and internal phosphodiester bond of nucleotide sequence ?
2 marks
11.
மிர்மிகோஃபில்லி என்றால் என்ன ?
What is myrmecophily ?
2 marks
12.

கீழ்க்கண்ட விவரங்களைக் கொண்டு ஒரு பிரமிட் வரைந்து அது எந்த வகையைச் சார்ந்தது என எழுதுக.

உயிரினங்களின் எண்ணிக்கை கொடுக்கப்பட்டுள்ளது - பருந்து - 50, தாவரங்கள் - 1000, முயல் மற்றும் எலி - 250 + 250, பாம்பு மற்றும் ஓணான் 100 + 50.

Draw a pyramid from following details and name the type of pyramid.

Quantities of organisms are given Hawks-50, Plants-1000, Rabbit and Mouse 250 + 250. Pythons and Lizard 100 + 50 respectively.

2 marks
13.
மண் வளத்தை மேம்படுத்துவதில் நுண்ணுயிரி உட்செலுத்திகள் எவ்வாறு பயன்படுகின்றன ?
How are microbial inoculants used to increase the soil fertility ?
2 marks
14.
இயற்கை வேளாண்மையின் வரையறையைத் தருக.
Give definitions for organic farming.
2 marks

பிரிவு – 3 / SECTION – 3

குறிப்பு : கீழ்க்காணும் வினாக்களில் ஏதேனும் மூன்று வினாக்களுக்கு விடையளிக்கவும். வினா எண் 19-க்கு கட்டாயமாக விடையளிக்கவும்.
Note : Answer any three of the following questions. Q.No. 19 is compulsory.
15.
டபீட்டத்தின் பணிகளைப் பட்டியலிடுக.
List out the functions of tapetum.
3 marks
16.
தவறுதலாகப் பொருள்படும் மற்றும் பொருளுணர்த்தாத சடுதிமாற்றத்திற்கு இடையேயான வேறுபாடு என்ன ?
What is the difference between missense and nonsense mutation ?
3 marks
17.
pBR 322 எனும் வார்த்தையிலிருந்து நீவிர் அறிந்து கொள்வது என்ன ?
What do you know about the word pBR 322 ?
3 marks
18.
கார்பன் கவரப்படுதல் மற்றும் சேகரித்தல் (CCS) என்றால் என்ன ?
What is CCS ?
3 marks
19.
புவி வாழிடம் மற்றும் செயல் வாழிடம் - வேறுபடுத்துக.
Distinguish habitat and niche.
3 marks

பிரிவு – 4 / SECTION – 4

குறிப்பு : அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்.
Note : Answer all the questions.
20.
(அ)கருவுறாக் கனி பற்றி விரிவான தொகுப்பு தருக. அதன் முக்கியத்துவம் பற்றி குறிப்பு சேர்க்க.
(a)Give a detailed account on parthenocarpy, add a note on its significance.
அல்லது / OR
(ஆ)முழுமை பெறா ஓங்குத்தன்மை மற்றும் இணை ஓங்குத்தன்மையை வேறுபடுத்துக.
(b)Differentiate incomplete dominance and co-dominance.
5 marks
21.
(அ)தாவரத்திசு வளர்ப்பின் பயன்பாடுகளை எழுதுக.
(a)Write the applications of plant tissue culture.
அல்லது / OR
(ஆ)நறுமணப் பொருட்களின் அரசன், அரசி யாவை ? அவற்றின் பயன்களை எழுதுக.
(b)What are the King and Queen of spices ? Write their uses.
5 marks
⬇️ Download PDF All Bio-Botany papers