TN Online TestSamacheer Kalvi practice

12th Standard Bio-Botany Question Paper Supplementary June 2023

Paper code 7027 35 marks 180 minutes

The complete Supplementary June 2023 public exam paper exactly as printed: every question in Tamil and English. Download the PDF, or take Part I as a free online test.

உயிரியல் – தாவரவியல் / Bio-Botanyதுணைத் தேர்வு ஜூன் 2023 · Supplementary June 2023

பிரிவு – 1 / SECTION – 1

பகுதி – I (உயிரி-தாவரவியல்) (மதிப்பெண்கள் : 35). குறிப்பு : (i) அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும். (ii) கொடுக்கப்பட்டுள்ள மாற்று விடைகளில் மிகவும் ஏற்புடைய விடையைத் தேர்ந்தெடுத்துக் குறியீட்டுடன் விடையினையும் சேர்த்து எழுதவும்.
PART – I (BIO-BOTANY) (Marks : 35). Note : (i) Answer all the questions. (ii) Choose the most appropriate answer from the given four alternatives and write the option code and the corresponding answer.
1.
நன்னீர் குளச் சூழலில் வாழும் வேரூன்றிய தற்சார்பு ஜீவிகள் :
(அ) அல்லி (நிம்ஃபெயா) மற்றும் டைஃபா
(ஆ) செரட்டோபில்லம் மற்றும் யூட்ரிக்குலேரியா
(இ) உல்ஃபியா மற்றும் பிஸ்டியா
(ஈ) அசோலா மற்றும் லெம்னா
In a fresh water environment like pond, rooted autotrophs are :
(a) Nymphaea and Typha
(b) Ceratophyllum and Utricularia
(c) Wolffia and Pistia
(d) Azolla and Lemna
Show answer ▾ (அ) / (a) Nymphaea and Typha · Solved one-mark questions →
1 mark
2.
மரபுசாராப் பாரம்பரியம் வரிசையில் காணப்படும் மரபணுக்களைக் கொண்டது :
(அ) மைட்டோகாண்ட்ரியா மற்றும் பசுங்கணிகங்கள்
(ஆ) எண்டோபிளாச வலைப்பின்னல் மற்றும் மைட்டோகாண்ட்ரியா
(இ) ரிபோசோம்கள் மற்றும் பசுங்கணிகங்கள்
(ஈ) லைசோசோம்கள் மற்றும் ரிபோசோம்கள்
Extra nuclear inheritance is a consequence of presence of genes in :
(a) Mitochondria and chloroplasts
(b) Endoplasmic reticulum and mitochondria
(c) Ribosomes and chloroplasts
(d) Lysosomes and ribosomes
Show answer ▾ (அ) / (a) Mitochondria and chloroplasts · Solved one-mark questions →
1 mark
3.
விதையில் சூல்காம்பினால் ஏற்படும் தழும்பு :
(அ) விதை உள்ளுறை
(ஆ) முளைவேர்
(இ) விதையிலை மேல்தண்டு
(ஈ) விதைத்தழும்பு
The scar left by Funiculus in the seed is :
(a) tegmen
(b) radicle
(c) epicotyl
(d) hilum
Show answer ▾ (ஈ) / (d) hilum · Solved one-mark questions →
1 mark
4.
கீழ்கண்டவற்றுள் எது படிம சுழற்சியல்ல ?
(அ) நைட்ரஜன் சுழற்சி
(ஆ) பாஸ்பரஸ் சுழற்சி
(இ) சல்பர் சுழற்சி
(ஈ) கால்சியம் சுழற்சி
Which of the following is not a Sedimentary cycle ?
(a) Nitrogen cycle
(b) Phosphorous cycle
(c) Sulphur cycle
(d) Calcium cycle
Show answer ▾ (அ) / (a) Nitrogen cycle · Solved one-mark questions →
1 mark
5.
சரியான இணையைக் கண்டறிக.
(அ) இரப்பர் - ஷோரியா ரொபஸ்டா
(ஆ) சாயம் - லாசோனியா இனெர்மிஸ்
(இ) கட்டை - சைப்ரஸ் பாப்பைரஸ்
(ஈ) மரக்கூழ் - ஹீவியா பிரேசிலியன்ஸிஸ்
Find out the correctly matched pair :
(a) Rubber - Shorea robusta
(b) Dye - Lawsonia inermis
(c) Timber - Cyperus papyrus
(d) Pulp - Hevea brasiliensis
Show answer ▾ (ஆ) / (b) Dye - Lawsonia inermis · Solved one-mark questions →
1 mark
6.
pBR 322-ல், pBR என்பது :
(அ) பிளாஸ்மிட் பாக்டீரிய மறுகூட்டிணைவு
(ஆ) பிளாஸ்மிட் பாக்டீரிய பெருக்கம்
(இ) பிளாஸ்மிட் பொலிவர் மற்றும் ரோட்ரிகஸ்
(ஈ) பிளாஸ்மிட் பால்டிமோர் மற்றும் ரோட்ரிகஸ்
In pBR 322, pBR stands for :
(a) Plasmid Bacterial Recombination
(b) Plasmid Bacterial Replication
(c) Plasmid Boliver and Rodriguez
(d) Plasmid Baltimore and Rodriguez
Show answer ▾ (இ) / (c) Plasmid Boliver and Rodriguez · Solved one-mark questions →
1 mark
7.
கர்நாடகாவின் சிர்சி என்னும் இடத்தில் சூழலைப் பாதுகாக்கும் மக்களின் இயக்கம் :
(அ) சிப்கோ இயக்கம்
(ஆ) அமிர்தா தேவி பிஷ்வாஸ் இயக்கம்
(இ) அப்பிக்கோ இயக்கம்
(ஈ) மேற்கண்ட எதுவுமில்லை
People's Movement for the protection of environment in Sirsi of Karnataka is :
(a) Chipko Movement
(b) Amirtha Devi Bishwas Movement
(c) Appiko Movement
(d) None of the above
Show answer ▾ (இ) / (c) Appiko Movement · Solved one-mark questions →
1 mark
8.
குட்டை மரபணு உடையக் கோதுமை :
(அ) பால் 1
(ஆ) அடோமிடா 1
(இ) நோரின் 10
(ஈ) பெலிடா 2
Dwarfing gene of Wheat is :
(a) Pal 1
(b) Atomita 1
(c) Norin 10
(d) Pelita 2
Show answer ▾ (இ) / (c) Norin 10 · Solved one-mark questions →
1 mark

பிரிவு – 2 / SECTION – 2

குறிப்பு : கீழ்க்காணும் வினாக்களில் ஏதேனும் நான்கு வினாக்களுக்கு விடையளிக்கவும்.
Note : Answer any four of the following questions.
9.
மெண்டலியத்தை மறு ஆய்வு செய்து கண்டறிந்த ஏதேனும் இரண்டு அறிவியல் அறிஞர்களின் பெயர்களை எழுதுக.
Give any two names of the scientists who rediscovered Mendelism.
2 marks
10.
நறுமணத் தைலங்களில் மல்லிகையின் பங்கினை எழுதுக.
Write the role of Jasmine in perfuming.
2 marks
11.
உயிரிவழித் திருத்தம் என்றால் என்ன ?
What is bio-remediation ?
2 marks
12.

கீழ்கண்ட உயிரினங்களின் எண்ணிக்கையை கொண்டு ஒரு பிரமிட் வரைக.

பருந்து - 50, தாவரங்கள் - 1000, முயல் மற்றும் எலி - 250 + 250, பாம்பு மற்றும் ஓணான் - 100 + 50

Draw a pyramid from following quantities of organisms.

Hawks - 50, Plants - 1000, Rabbit and mouse - 250 + 250, Pythons and lizard - 100 + 50

2 marks
13.
வரையறு - ‘கலப்பின வீரியம்’.
Define - ‘Heterosis’.
2 marks
14.
போலன்கிட் என்றால் என்ன ?
What is Pollenkitt ?
2 marks

பிரிவு – 3 / SECTION – 3

குறிப்பு : கீழ்க்காணும் வினாக்களில் ஏதேனும் மூன்று வினாக்களுக்கு விடையளிக்கவும். வினா எண் 19 -க்கு கட்டாயமாக விடையளிக்கவும்.
Note : Answer any three of the following questions. Question No. 19 is Compulsory.
15.
தவறுதலாகப் பொருள்படும் சடுதிமாற்றம் மற்றும் பொருளுணர்த்தாத சடுதிமாற்றம் - வேறுபடுத்துக.
Differentiate between missense mutation and nonsense mutation.
3 marks
16.
உயிரி பன்ம பாதுகாப்பில் கோவில் காடுகள் எவ்வாறு உதவி புரிகின்றன ?
How do sacred groves help in the conservation of biodiversity ?
3 marks
17.
“கருவுறு” என்றால் என்ன ?
What is Embryoids ?
3 marks
18.
வெப்ப அடுக்கமைவின் வகைகளைக் குறிப்பிடுக.
Mention the types of thermal stratification.
3 marks
19.
டபீட்டத்தின் பணிகளை பட்டியலிடுக.
List out the functions of tapetum.
3 marks

பிரிவு – 4 / SECTION – 4

குறிப்பு : அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்.
Note : Answer all the questions.
20.
(அ)மனிதனால் உருவாக்கப்பட்ட தானியத்தின் பெயரை எழுதுக. இது எவ்வாறு உருவாக்கப்பட்டது ?
(a)Mention the name of man-made Cereal. How it is formed ?
அல்லது / OR
(ஆ)விதை பரவுதலின் நன்மைகள் யாவை ?
(b)What are the advantages of seed dispersal ?
5 marks
21.
(அ)தகுந்த படத்துடன் சூலின் அமைப்பை விவரிக்கவும்.
(a)With suitable diagram explain the structure of an ovule.
அல்லது / OR
(ஆ)பயிர் பெருக்கத்தில் புதிய பண்புக் கூறுகளை உருவாக்கும் புதிய பயிர் பெருக்க தொழில்நுட்ப முறைகளைப் பட்டியலிடுக.
(b)List out the new breeding techniques involved in developing new traits in plant breeding.
5 marks
⬇️ Download PDF All Bio-Botany papers