பிரிவு – 1 / SECTION – 1
பகுதி – II (உயிரி-விலங்கியல்) (மதிப்பெண்கள் : 35). குறிப்பு : (i) அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும். (ii) கொடுக்கப்பட்டுள்ள மாற்று விடைகளில் மிகவும் ஏற்புடைய விடையைத் தேர்ந்தெடுத்துக் குறியீட்டுடன் விடையினையும் சேர்த்து எழுதவும்.
PART – II (BIO-ZOOLOGY) (Marks : 35). Note : (i) Answer all the questions. (ii) Choose the most appropriate answer from the given four alternatives and write the option code and the corresponding answer.
1.
பொருத்துக.
(1) தாமிரம் வெளிவிடு IUD (i) LNG-20
(2) ஹார்மோன் வெளிவிடு IUD (ii) லிப்பஸ் வளைய IUD
(3) மருந்தில்லா IUD (iii) சாஹெலி
(4) மாத்திரைகள் (iv) Multiload-375
(1) தாமிரம் வெளிவிடு IUD (i) LNG-20
(2) ஹார்மோன் வெளிவிடு IUD (ii) லிப்பஸ் வளைய IUD
(3) மருந்தில்லா IUD (iii) சாஹெலி
(4) மாத்திரைகள் (iv) Multiload-375
(அ) (1) - (iv), (2) - (i), (3) - (ii), (4) - (iii)
(ஆ) (1) - (iv), (2) - (ii), (3) - (i), (4) - (iii)
(இ) (1) - (iv), (2) - (i), (3) - (iii), (4) - (ii)
(ஈ) (1) - (i), (2) - (iv), (3) - (ii), (4) - (iii)
Match the following :
(1) Copper releasing IUD (i) LNG-20
(2) Hormone releasing IUD (ii) Lippes loop IUD
(3) Non-medicated IUD (iii) Saheli
(4) Mini pills (iv) Multiload-375
(1) Copper releasing IUD (i) LNG-20
(2) Hormone releasing IUD (ii) Lippes loop IUD
(3) Non-medicated IUD (iii) Saheli
(4) Mini pills (iv) Multiload-375
(a) (1) - (iv), (2) - (i), (3) - (ii), (4) - (iii)
(b) (1) - (iv), (2) - (ii), (3) - (i), (4) - (iii)
(c) (1) - (iv), (2) - (i), (3) - (iii), (4) - (ii)
(d) (1) - (i), (2) - (iv), (3) - (ii), (4) - (iii)
Show answer ▾
(அ) / (a) (1) - (iv), (2) - (i), (3) - (ii), (4) - (iii) · Solved one-mark questions →1 mark
2.
எ.கோலை -யை விட சாக்கரோமைஸஸ் சர்விஸியே மறுசேர்க்கை இன்டர்ஃபெரான்களை உற்பத்தி செய்வதில் சிறந்தது. ஏன் ?
(அ) உயிரிய நொதிகலனில் எ.கோலையை பயன்படுத்த முடியாது
(ஆ) புரதங்கள் உற்பத்திக்கு பிளாஸ்மிட்டுகள் எ.கோலை -யில் இல்லை
(இ) புரதங்களை சர்க்கரையேற்றம் அடைய வைக்கத் தேவையான இயங்கு தளம் எ.கோலை -யில் இல்லை
(ஈ) புரதங்களை உற்பத்தி செய்வதற்குத் தேவையான எ.கோலை எளிதில் கிடைப்பதில்லை
Why Saccharomyces cerevisiae is more suitable for production of recombinant interferons than E.coli ?
(a) E.coli cannot be used in biofermentor.
(b) E.coli does not have suitable plasmid for the production of proteins.
(c) E.coli does not have the machinery for glycosylation of proteins.
(d) E.coli is not easily available for the production of proteins.
Show answer ▾
(இ) / (c) E.coli does not have the machinery for glycosylation of proteins. · Solved one-mark questions →1 mark
3.
கீழ்வருவனவற்றுள், கருக்கோளமாக்கத்தைப் பற்றிய உண்மையான கூற்று எது ?
(அ) கருவுற்ற முட்டையிலிருந்து பல செல் நிலை உருவாதல்
(ஆ) மூல இனச்செல் அடுக்குகளிலிருந்து குறிப்பிட்ட உறுப்புகள் தோன்றுதல்
(இ) ஓரடுக்கு கருக்கோளம், மூவடுக்கு கருக்கோளமாக மாறும் நிகழ்ச்சி
(ஈ) கருக்கோளம் கருப்பையின் சுவருடன் ஒட்டிக் கொள்ளுதல்
Which one of the following is true to gastrulation ?
(a) Formation of multicellular structure from Zygote
(b) Formation of specific organs from germ layers
(c) Formation of three germ layer embryo from single layer embryo
(d) Attachment of blastocyst to the uterine wall
Show answer ▾
(இ) / (c) Formation of three germ layer embryo from single layer embryo · Solved one-mark questions →1 mark
4.
கீழ்வரும் நிலை நிறைவுற்றால், உருவமொத்த இரட்டையர்கள் உருவாக்கப்படுகிறார்கள் :
(அ) இரண்டு விந்து செல்கள், ஒரு அண்ட செல்லை கருவுறச் செய்கின்றன
(ஆ) இரண்டு விந்து செல்கள், இரண்டு அண்டங்களைக் கருவுறச் செய்கின்றன
(இ) ஒரு விந்து செல், இரண்டு அண்டங்களைக் கருவுறச் செய்கின்றன
(ஈ) ஒரு விந்து செல், ஒரு அண்ட செல்லை கருவுறச் செய்கிறது
Identical twins are produced when the following condition is satisfied :
(a) Two sperms are fertilizing one egg
(b) Two sperms are fertilizing two eggs
(c) One sperm is fertilizing two eggs
(d) One sperm is fertilizing one egg
Show answer ▾
(ஈ) / (d) One sperm is fertilizing one egg · Solved one-mark questions →1 mark
5.
ELISA முதன்மையாக இதற்குப் பயன்படுகிறது.
(அ) விரும்பத்தக்க பண்புகளையுடைய தாவரங்களைத் தேர்வு செய்ய
(ஆ) திடீர் மாற்றங்களைக் கண்டறிய
(இ) நோய்க் கிருமிகளைக் கண்டறிய
(ஈ) விரும்பத்தக்க பண்புகளையுடைய விலங்குகளைத் தேர்வு செய்ய
ELISA is mainly used for :
(a) Selecting plants having desired traits
(b) Detection of mutations
(c) Detection of pathogens
(d) Selecting animals having desired traits
Show answer ▾
(இ) / (c) Detection of pathogens · Solved one-mark questions →1 mark
6.
கூற்று (கூ) : மரபணு மாற்றப்பட்ட Bt - பருத்தி, நோய் எதிர்ப்புத் தன்மை கொண்ட வகை.
காரணம் (கா) : cry - நச்சு, இத்தாவரத்தில் உற்பத்தி செய்யப்படுவதால், தனித்து வாழும் பூஞ்சைகளுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபடுகிறது.
(அ) (கூ) மற்றும் (கா) ஆகியவை உண்மையானவை; ஆனால் (கா), (கூ) -யை விளக்கவில்லை
(ஆ) (கூ) தவறு; (கா) சரி
(இ) (கூ) மற்றும் (கா) ஆகியவை தவறானவை
(ஈ) (கூ) உண்மை ஆனால் (கா) தவறு
Assertion (A) : Genetically engineered Bt-cotton is disease resistant type.
Reason (R) : Cry-toxin produced in the plant has specific activities against free living fungi.
(a) Both (A) and (R) are true, but (R) does not explain (A)
(b) (A) is wrong ; (R) is correct
(c) Both (A) and (R) are wrong
(d) (A) is true but (R) is wrong
1 mark
7.
வாழிட சீரழிவினால் மிக கடுமையான பாதிப்புகளுக்கு உள்ளாகி, அழியும் நிலையில் உள்ள விலங்கினம் எது ?
(அ) முட்தோலிகள்
(ஆ) பாலூட்டிகள்
(இ) பறவைகள்
(ஈ) இரு வாழ்விகள்
Which one of the following are at high risk of extinction due to habitat destruction ?
(a) Echinoderms
(b) Mammals
(c) Birds
(d) Amphibians
Show answer ▾
(ஈ) / (d) Amphibians · Solved one-mark questions →1 mark
8.
டி.என்.ஏ. சர்க்கரைகளுக்கும், ஆர்.என்.ஏ. சர்க்கரைகளுக்கும் இடையே உள்ள வேறுபாடு :
(அ) டி-ஆக்ஸிரிபோஸ் சர்க்கரையில் ஒரு ஆக்ஸிஜன் அணு அதிகமாக இருப்பது
(ஆ) ரிபோஸ் சர்க்கரையில் ஒரு ஆக்ஸிஜன் அணு குறைவாக இருப்பது
(இ) ரிபோஸ் சர்க்கரையில் இரு ஆக்ஸிஜன் அணுக்கள் குறைவாக இருப்பது
(ஈ) டி-ஆக்ஸிரிபோஸ் சர்க்கரையில் ஒரு ஆக்ஸிஜன் அணு குறைவாக இருப்பது
The difference between DNA sugars and RNA sugars is :
(a) One oxygen atom excess in deoxyribose sugars
(b) One oxygen atom less in ribose sugars
(c) Two oxygen atoms less in ribose sugars
(d) One oxygen atom less in deoxyribose sugars
Show answer ▾
(ஈ) / (d) One oxygen atom less in deoxyribose sugars · Solved one-mark questions →1 mark
பிரிவு – 2 / SECTION – 2
குறிப்பு : ஏதேனும் நான்கு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்கவும்.
Note : Answer any four of the following questions.
9.
அண்டம் விடுபடுதல் என்றால் என்ன ? இது மாதவிடாய் சுழற்சியின் எத்தனையாவது நாளில் நடைபெறும் ?
What is Ovulation ? In which day of menstrual cycle it takes place ?
2 marks
10.
டவுண் சின்ட்ரோம் நோய் உண்டாவதற்கான காரணம் யாது ?
Write the cause of Down's Syndrome.
2 marks
11.
ஓபரான்கள் என்பது என்ன ? எ.கோலையில் எத்தனை ஓபரான் குழுக்கள் உள்ளன ?
What are Operons ? How many operon groups are present in E.coli ?
2 marks
12.
செயலாக்க நோய்த்தடைக்காப்பு மற்றும் மந்தமான நோய்த்தடைக்காப்பு ஆகியவற்றிற்கிடையேயுள்ள வேறுபாடுகள் இரண்டினை எழுதுக.
Write any two differences between active and passive Immunity.
2 marks
13.
“தொழில்துறை ஆல்கஹால்” என்று குறிப்பிடப்படுவது எது ? ஏன் ?
Which is referred to as Industrial alcohol ? Why ?
2 marks
14.
மனித தண்டு செல்களின் முக்கியமான பயன்பாடு என்ன ?
What is the most important application of human stem cells ?
2 marks
பிரிவு – 3 / SECTION – 3
குறிப்பு : கீழ்க்காணும் வினாக்களில் ஏதேனும் மூன்று வினாக்களுக்கு விடையளிக்கவும். அதில் வினா எண் 19 -க்கு கட்டாயமாக விடையளிக்கவும்.
Note : Answer any three of the following questions. Question number 19 is compulsory.
15.
நிர்பந்த அனிச்சை செயல் என்றால் என்ன ?
What is known as "Let-Down" reflex ?
3 marks
16.
பனிக்குடந்துளைப்பு பற்றி குறிப்பு வரைக.
Write a note on "Amniocentesis".
3 marks
17.
தைமஸ் சுரப்பி சுரக்கும் ஹார்மோனின் பெயர் என்ன ? அந்த ஹார்மோனின் பணிகள் இரண்டினை எழுதுக.
Name the hormone secreted by Thymus gland and mention two functions of that hormone.
3 marks
18.
மரபணு வங்கிகள் பற்றிக் குறிப்பு வரைக.
Write about gene banks.
3 marks
19.
தாத்தாவின் உடலில் உள்ள ஒரு பண்பு மகள் வழியாக பேரனுக்குச் செல்கிறது. இந்த வகை மரபுக்கடத்தலுக்கு வரைபடம் (flowchart) தருக.
A character present in grandfather goes to grandson through daughter. Draw flowchart for this pattern of Inheritance.
3 marks
பிரிவு – 4 / SECTION – 4
குறிப்பு : பின்வரும் வினாக்களுக்கு விடையளிக்கவும்.
Note : Answer the following questions :
20.
(அ)மனித மரபணு திட்டத்தின் (HGP) வழிமுறைகளை பற்றி எழுதுக.
(a)Write about the methodologies of HGP.
அல்லது / OR
(ஆ)மனிதனின் பரிணாம வளர்ச்சிப்பாதையை விளக்குக.
(b)Explain the evolutionary path of Man.
5 marks
21.
(அ)
சிறு குறிப்பு வரைக :
- இனக்கூட்டத்தின் அடர்த்தி
- பிறப்பு வீதம் மற்றும் இறப்பு வீதம்
(a)
Write short notes on :
- Population Density
- Natality and Mortality
அல்லது / OR
(ஆ)விவசாயத்துறையில் வேதிப்பொருட்களை பயன்படுத்துவதால் ஏற்படும் விளைவுகளை எழுதுக.
(b)Write about the effects of chemicals used in the field of Agriculture.
5 marks