TN Online TestSamacheer Kalvi practice

12th Standard Bio-Zoology Question Paper Supplementary September 2020

Paper code 4177 35 marks 180 minutes

The complete Supplementary September 2020 public exam paper exactly as printed: every question in Tamil and English. Download the PDF, or take Part I as a free online test.

உயிரியல் – விலங்கியல் / Bio-Zoologyதுணைத் தேர்வு செப்டம்பர் 2020 · Supplementary September 2020

பிரிவு – I / SECTION – I

பகுதி – II (உயிரி-விலங்கியல்) (மதிப்பெண்கள் : 35). குறிப்பு : (i) அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும். (ii) கொடுக்கப்பட்டுள்ள மாற்று விடைகளில் மிகவும் ஏற்புடைய விடையைத் தேர்ந்தெடுத்துக் குறியீட்டுடன் விடையினையும் சேர்த்து எழுதவும்.
PART – II (BIO-ZOOLOGY) (Marks : 35). Note : (i) Answer all the questions. (ii) Choose the most appropriate answer from the given four alternatives and write the option code and the corresponding answer.
1.
பெண்களில் காணப்படும் ஸ்கீன்ஸ் சுரப்பி இதற்கு ஒப்பானது :
(அ) ஆண்களின் பல்போயுரித்ரல் சுரப்பி
(ஆ) ஆண்களின் கௌப்பர் சுரப்பி
(இ) ஆண்களின் புரோஸ்டேட் சுரப்பி
(ஈ) ஆண்குறி முன்முனை சுரப்பி
The Skene's glands of female are homologous to :
(a) Bulbourethral glands of the male
(b) Cowper's gland of male
(c) Prostate gland of male
(d) Glans penis of male
Show answer ▾ (இ) / (c) Prostate gland of male · Solved one-mark questions →
1 mark
2.
ஆன்ட்ரோஜன் இணைவுப் புரதத்தின் வேலை :
(அ) விந்துக்களை வெளித்தள்ளுதல்
(ஆ) ஸ்பெர்மியோஜெனிசிஸ் செயல்
(இ) இன்ஹிபின் உற்பத்தியை தூண்டுதல்
(ஈ) FSH வெளிவருவதை தடை செய்தல்
The function of androgen binding protein is :
(a) Ejaculation of sperms
(b) Process of spermiogenesis
(c) Stimulates the synthesis of inhibin
(d) Inhibiting the release of FSH
Show answer ▾ (ஆ) / (b) Process of spermiogenesis · Solved one-mark questions →
1 mark
3.
கீழ்வருவனவற்றுள் ஹார்மோன் கருத்தடை மாத்திரைகளின் செயல்கள் பற்றிய தவறான கூற்று எது ?
(அ) விந்து செல்லாக்கத்தை தடை செய்தல்
(ஆ) அண்டசெல் விடுபடுதலை தடை செய்தல்
(இ) கருப்பை வாய் கோழையின் தன்மை மாற்றத்தால் விந்துசெல் நுழையும் பாதை மற்றும் விந்து செல் நகர்வதை பலவீனப்படுத்துகின்றது
(ஈ) கருப்பை உட்கோழைப்படலத்தில் ஏற்படும் மாற்றம் கருப்பதிவிற்கு எதிரான சூழலை ஏற்படுத்துகின்றது
Select the incorrect action of hormonal contraceptive pills from the following :
(a) Inhibition of spermiogenesis
(b) Inhibition of ovulation
(c) Changes in cervical mucus impairing its ability to allow passage and transport of sperms
(d) Alteration in uterine endometrium to make it unsuitable for implantation
Show answer ▾ (அ) / (a) Inhibition of spermiogenesis · Solved one-mark questions →
1 mark
4.
ஜீன் (A: ஜீனிலிருந்து மீண்டும் ஜீனுக்கே திரும்பும் அம்புக்குறி) —B→ mRNA —C→ நொதி மேலே உள்ள படகருத்துருவில் A, B மற்றும் C ஆகியவற்றை கண்டறிக.
(அ) A - படியெடுத்தல், B - மொழிபெயர்த்தல், C - இரட்டிப்படைதல்
(ஆ) A - மொழிபெயர்த்தல், B - படியெடுத்தல், C - இரட்டிப்படைதல்
(இ) A - இரட்டிப்படைதல், B - மொழிபெயர்த்தல், C - படியெடுத்தல்
(ஈ) A - இரட்டிப்படைதல், B - படியெடுத்தல், C - மொழிபெயர்த்தல்
Gene (A: an arrow from the gene back to itself) —B→ mRNA —C→ Enzyme Find out A, B and C in the above pictorial representation.
(a) A - Transcription, B - Translation, C - Replication
(b) A - Translation, B - Transcription, C - Replication
(c) A - Replication, B - Translation, C - Transcription
(d) A - Replication, B - Transcription, C - Translation
Show answer ▾ (ஈ) / (d) A - Replication, B - Transcription, C - Translation · Solved one-mark questions →
1 mark
5.
காற்றற்ற கசடு செரிப்பானில் உற்பத்தி செய்யப்படும் வாயுக்கள் :
(அ) மீத்தேன், ஆக்சிஜன் மற்றும் ஹைட்ரஜன் சல்பைடு
(ஆ) ஹைட்ரஜன் சல்பைடு, மீத்தேன் மற்றும் சல்பர் டை ஆக்சைடு
(இ) ஹைட்ரஜன் சல்பைடு, நைட்ரஜன் மற்றும் மீத்தேன்
(ஈ) மீத்தேன், ஹைட்ரஜன் சல்பைடு மற்றும் கார்பன் டை ஆக்சைடு
The gases produced in anaerobic sludge digesters are :
(a) Methane, oxygen and hydrogen sulphide
(b) Hydrogen sulphide, methane and sulphur dioxide
(c) Hydrogen sulphide, nitrogen and methane
(d) Methane, hydrogen sulphide and carbon dioxide
Show answer ▾ (ஈ) / (d) Methane, hydrogen sulphide and carbon dioxide · Solved one-mark questions →
1 mark
6.
செம்மறி ஆடுகளில், மடி செல்கள் மட்டுமே முழுமைத்திறன் கொண்டவை எனில், எதிர்கால தலைமுறைகளில் எது விளைவாக அமையும் ?
(அ) எதிர்கால தலைமுறை விலங்குகள் மலட்டுத்தன்மையுடையனவாக இருக்கும்.
(ஆ) எதிர்கால தலைமுறை விலங்குகள் நோய்த்தாக்குதல் அடையாத விலங்குகளாகக் காணப்படும்.
(இ) ஆண் விலங்குகளை உற்பத்தி செய்ய இயலாது.
(ஈ) எதிர்கால தலைமுறை விலங்குகள் குறைந்த வாழ்நாட்கள் கொண்டவையாக இருக்கும்.
If the udder cells of sheep are the only totipotent cells means, what will be the consequence of future generations ?
(a) Future generations may be sterile animals
(b) Future generation animals may be disease free
(c) Males can not be produced
(d) Future generation animals will be short lived
Show answer ▾ (இ) / (c) Males can not be produced · Solved one-mark questions →
1 mark
7.
சில விலங்குகள் கோடைக்காலங்களில் செயலற்று காணப்படுவது. இது எதற்கான உதாரணம் ?
(அ) உடல் அமைப்பு சார்ந்த தகவமைப்புகள்
(ஆ) நடத்தை சார்ந்த தகவமைப்புகள்
(இ) உடற்செயலியல் சார்ந்த தகவமைப்புகள்
(ஈ) உளவியல் சார்ந்த தகவமைப்புகள்
Some animals become inactive during summer. It is an example for :
(a) Structural adaptation
(b) Behavioural adaptation
(c) Physiological adaptation
(d) Psychological adaptation
Show answer ▾ (இ) / (c) Physiological adaptation · Solved one-mark questions →
1 mark
8.
சிற்றினங்களுக்கிடையே போட்டி காரணமாக ஏற்படுவது :
(அ) உயிரின மறைவு
(ஆ) திடீர் மாற்றம்
(இ) தொந்தரவு வாழ்க்கை
(ஈ) கூட்டுயிரி வாழ்க்கை
Competition between species leads to :
(a) Extinction
(b) Mutation
(c) Amensalism
(d) Symbiosis
Show answer ▾ (அ) / (a) Extinction · Solved one-mark questions →
1 mark

பிரிவு – II / SECTION – II

ஏதேனும் நான்கு வினாக்களுக்கு விடையளிக்கவும்.
Answer any four of the following questions.
9.
மனித விந்து செல்லின் அமைப்பைப் படம் வரைந்து பாகங்களைக் குறிக்கவும்.
Draw and label the parts of human sperm cell.
2 marks
10.
படியெடுத்தல் என்றால் என்ன ?
Define – Transcription.
2 marks
11.
எச்ச உறுப்புகள் என்பது என்ன ? ஒரு எடுத்துக்காட்டு தருக.
What are vestigial organs ? Give an example.
2 marks
12.
வீட்டுப்பயன்பாட்டு பொருள் உற்பத்தியில் பயன்தரும் நுண்ணுயிரிகளின் பெயர்களை எழுதுக.
Name some microbes used in the production of household food products.
2 marks
13.
ஓரிடத் தன்மை – வரையறுக்கவும்.
Define – Endemism.
2 marks
14.
சென்னையின் பல பகுதிகளில் காகங்கள் குறைந்து, புறாக்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. இது எவ்வகை வாழிட இழப்பு ? அதை வரையறுக்கவும்.
In many parts of Chennai, number of dove increases rather than crow. What type of habitat loss it is ? Define.
2 marks

பிரிவு – III / SECTION – III

ஏதேனும் மூன்று வினாக்களுக்கு விடையளிக்கவும். அவற்றில் வினா எண் 19 -க்கு கட்டாயமாக விடையளிக்கவும்.
Answer any three of the following questions. Q.No. 19 is Compulsory.
15.
இடம் மாறிய கர்ப்பம் என்பது என்ன ? இதன் விளைவினை எழுதுக.
What is Ectopic Pregnancy ? Write its consequence.
3 marks
16.
வாடகைத் தாய்மை என்றால் என்ன ?
What is meant by Surrogacy ?
3 marks
17.
லாமார்க்கின் “பெறப்பட்ட பண்புகள் மரபு கடத்தல் கோட்பாடு” பற்றி எழுதுக.
Write the Lamark's theory of Inheritance of acquired characters.
3 marks
18.
மறுசேர்க்கை இன்டர்ஃபெரான் உற்பத்திக்கு எ.கோலையை விட சிறந்த உயிரினம் ஈஸ்ட். காரணம் கூறுக.
Yeast is more suitable for production of recombinant interferons than E. Coli. Give reasons.
3 marks
19.
ஒரு கூட்டத்தை நெறிப்படுத்துதலில் காணப்படும் அகக்காரணிகள் மற்றும் புறக்காரணிகளை பட்டியலிடுக.
List out intrinsic factors and extrinsic factors in population regulation.
3 marks

பிரிவு – IV / SECTION – IV

கீழ்க்காணும் வினாக்களுக்கு விடையளிக்கவும்.
Answer the following questions.
20.
(அ)பல்கூட்டு அல்லீல்கள் என்றால் என்ன ? தக்க எடுத்துகாட்டுடன் மனித இனத்தில் காணப்படும் பல்கூட்டு அல்லீல்களின் பாரம்பரிய பண்பை விவரிக்கவும்.
(a)What are Multiple Alleles ? Describe their inheritance in Human with example.
அல்லது / OR
(ஆ)திடீர் மாற்றம் பற்றிய ஆய்வுகள் மூலம் மரபணுவிற்கும், டி.என்.ஏ-விற்கும் உள்ள தொடர்பு நன்கு புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறது. இக்கூற்றினை நியாயப்படுத்துக.
(b)The relationship between genes and DNA are best understood by mutation studies. Justify this statement.
5 marks
21.
(அ)நோய் தடைக்கண்காணிப்புத்திறன் திறம்பட இருக்கும் போது புற்றுநோய் தோன்றாது. இக்கூற்றை நியாயப்படுத்துக.
(a)If immunological surveillance is effective, cancer should not occur. Justify.
அல்லது / OR
(ஆ)நாம் நீர் ஆதாரங்களை மாசுபடுத்திக் கொண்டிருக்கிறோம். அவ்வாறு மாசடைவதினால் உயிரினங்கள் மீது ஏற்படும் விளைவுகள் யாவை ?
(b)We are polluting water resources. What will be the consequences of water pollution on organisms ?
5 marks
⬇️ Download PDF All Bio-Zoology papers