பிரிவு – 1 / SECTION – 1
பகுதி – II (உயிரி-விலங்கியல்) (மதிப்பெண்கள் : 35). குறிப்பு : (i) அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும். (ii) கொடுக்கப்பட்டுள்ள மாற்று விடைகளில் மிகவும் ஏற்புடைய விடையைத் தேர்ந்தெடுத்துக் குறியீட்டுடன் விடையினையும் சேர்த்து எழுதவும்.
PART – II (BIO-ZOOLOGY) (Marks : 35). Note : (i) Answer all the questions. (ii) Choose the most appropriate answer from the given four alternatives and write the option code and the corresponding answer.
1.
ELISA முதன்மையாக பயன்படுவது :
(அ) விரும்பத்தக்க பண்புகளையுடைய விலங்குகளைத் தேர்வு செய்ய
(ஆ) திடீர் மாற்றங்களைக் கண்டறிய
(இ) விரும்பத்தக்க பண்புகளையுடைய தாவரங்களைத் தேர்வு செய்ய
(ஈ) நோய்க் கிருமிகளைக் கண்டறிய
ELISA is mainly used for :
(a) Selecting animals having desired traits
(b) Detection of mutations
(c) Selecting plants having desired traits
(d) Detection of pathogens
Show answer ▾
(ஈ) / (d) Detection of pathogens · Solved one-mark questions →1 mark
2.
தூது RNA மூலக்கூறு எம்முறையில் உருவாக்கப்படுகிறது ?
(அ) நகலாக்கம்
(ஆ) இரட்டிப்பாதல்
(இ) மொழிபெயர்த்தல்
(ஈ) படியெடுத்தல்
mRNA molecule is produced by :
(a) Duplication
(b) Replication
(c) Translation
(d) Transcription
Show answer ▾
(ஈ) / (d) Transcription · Solved one-mark questions →1 mark
3.
கீழ்க்கண்டவற்றில் எந்த ஒன்று ஹியூகோ டி விரிஸின் பங்களிப்பு ?
(அ) முயன்று பெற்ற பண்பு மரபுப் பண்பாதல் கோட்பாடு
(ஆ) திடீர் மாற்றத் தேர்வுக் கோட்பாடு
(இ) வளர்கரு பிளாசக் கோட்பாடு
(ஈ) இயற்கைத் தேர்வுக் கோட்பாடு
Which of the following was the contribution of Hugo de Vries ?
(a) Theory of inheritance of acquired characters
(b) Theory of mutation
(c) Germplasm theory
(d) Theory of natural selection
Show answer ▾
(ஆ) / (b) Theory of mutation · Solved one-mark questions →1 mark
4.
வெப்பநிலையில் ஏற்படும் மாறுபாடுகளைத் தாங்கி வாழும் விலங்குகள் __________ என அழைக்கப்படுகின்றன.
(அ) எண்டோதெர்ம்கள்
(ஆ) எக்டோதெர்ம்கள்
(இ) ஸ்டீனோதெர்ம்கள்
(ஈ) மிகைவெப்ப வேறுபாட்டு உயிரிகள்
Organisms which can survive a wide range of temperature are called :
(a) Endotherms
(b) Ectotherms
(c) Stenotherms
(d) Eurytherms
Show answer ▾
(ஈ) / (d) Eurytherms · Solved one-mark questions →1 mark
5.
கழிவுநீர் சுத்திகரிப்பில், முதல்நிலை சுத்திகரிப்பு :
(அ) குளோரினைப் பயன்படுத்தி நுண்ணுயிரிகளை வெளியேற்றுதல்
(ஆ) திடக்கழிவுப் பொருட்களை நீக்குவது
(இ) காற்றற்ற சுவாசத்தின் மூலம் கசடுகளை செரிமானம் அடையச் செய்தல்
(ஈ) நீரில் அதிக அளவில் காற்றேற்றம் செய்தல்
The primary treatment of waste water treatment is :
(a) Removal of microbes by the application of chlorine
(b) Physical removal of solid particles
(c) Anaerobic digestion of sludge
(d) Large aeration of the water
Show answer ▾
(ஆ) / (b) Physical removal of solid particles · Solved one-mark questions →1 mark
6.
ஒரு ஏரியில் உள்ள குளிர்ச்சியான மற்றும் தெளிவான நீர் குறைந்த உயிரிகளையே கொண்டிருக்கும். இந்த நிலை __________ என அழைக்கப்படுகிறது.
(அ) இடை உணவூட்ட நிலை
(ஆ) மிகை உணவூட்ட நிலை
(இ) துரித மிகை உணவூட்ட நிலை
(ஈ) குறை உணவூட்ட நிலை
In a lake, the water is cold and clear, supporting little life. This stage is called as :
(a) Mesotrophic
(b) Eutrophic
(c) Accelerated eutrophic
(d) Oligotrophic
Show answer ▾
(ஈ) / (d) Oligotrophic · Solved one-mark questions →1 mark
7.
முதிர்ந்த விந்து செல்கள் சேகரிக்கப்படும் இடம் :
(அ) விந்தக மேல் சுருள் குழல்
(ஆ) விந்தக நுண் குழல்கள்
(இ) புரோஸ்டேட் சுரப்பி
(ஈ) விந்து நாளம்
The mature sperms are stored in the :
(a) epididymis
(b) seminiferous tubules
(c) prostate gland
(d) vas deferens
Show answer ▾
(அ) / (a) epididymis · Solved one-mark questions →1 mark
8.
ஆண்களில் செயல்படுத்தப்படும் நிரந்தர கருத்தடை முறை :
(அ) குடல்வால் நீக்கம்
(ஆ) விந்து குழல் தடை
(இ) வாய்வழி கருத்தடை மாத்திரைகள்
(ஈ) கருக்குழல் தடை
The permanent birth control method in males is :
(a) Appendictomy
(b) Vasectomy
(c) Oral contraceptives
(d) Tubectomy
Show answer ▾
(ஆ) / (b) Vasectomy · Solved one-mark questions →1 mark
பிரிவு – 2 / SECTION – 2
குறிப்பு : ஏதேனும் நான்கு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்கவும்.
Note : Answer any four of the following questions.
9.
கன்னி இனப்பெருக்கம் என்றால் என்ன ?
What is parthenogenesis ?
2 marks
10.
பனிக்குடத் துளைப்பு என்பது யாது ?
What is amniocentesis ?
2 marks
11.
புரதச் சேர்க்கை மையக்கருத்தை எழுதுக.
Write the central dogma of protein synthesis.
2 marks
12.
தடுப்பு மருந்து எனப்படுவது யாது ?
What is vaccine ?
2 marks
13.
இணை மரபற்றுப் போதல் என்பது யாது ?
What is Co-extinction ?
2 marks
14.
உயிரிய உருப்பெருக்கம் எனக் குறிப்பிடப்படுவது யாது ?
What is referred to as bio-magnification ?
2 marks
பிரிவு – 3 / SECTION – 3
குறிப்பு : கீழ்க்காணும் வினாக்களில் ஏதேனும் மூன்று வினாக்களுக்கு விடையளிக்கவும். வினா எண் 19 -க்கு கட்டாயமாக விடையளிக்கவும்.
Note : Answer any three of the following questions. Question number 19 is compulsory.
15.
திடீர் மாற்றக் கோட்பாட்டின் சிறப்புப் பண்புகளை எழுதுக.
Write the salient features of mutation theory.
3 marks
16.
நுண்ணுயிரிய எரிபொருள் கலன் பற்றி சிறு குறிப்பு எழுதுக.
Write short notes on microbial fuel cell.
3 marks
17.
உடற் செல் மரபணு சிகிச்சையை, இனச் செல் மரபணு சிகிச்சையிலிருந்து வேறுபடுத்துக.
Differentiate somatic cell gene therapy from germ line gene therapy.
3 marks
18.
உயிரிய பல்வகைத் தன்மை இழப்பிற்கான ஏதேனும் ஐந்து காரணங்களைப் பட்டியலிடுக.
List out any five causes of biodiversity loss.
3 marks
19.
ஒரு சாதாரண ஆணுக்கும் (XH Y–), ஹீமோபிலியா கலப்புற்ற பெண்ணுக்கும் (XH Xh) இடையே திருமணம் நடைபெற்றால், F1 மற்றும் F2 முடிவுகள் எவ்வாறு இருக்கும் ? ஓட்ட விளக்கப்படம் வரைக.
If a marriage occurs between normal man (XH Y–) and heterozygous haemophiliac woman (XH Xh), what would be the result of F1 and F2 ? Draw flow chart.
3 marks
பிரிவு – 4 / SECTION – 4
குறிப்பு : பின்வரும் வினாக்களுக்கு விடையளிக்கவும்.
Note : Answer the following questions.
20.
(அ)மனிதனில் கருவுறுதல் செயல்முறையை விளக்கி, பல விந்து செல்களால் கருவுறுதல் எவ்வாறு தடுக்கப்படுகிறது என்பதையும் விளக்குக.
(a)Explain the process of fertilization and prevention of polyspermy in human.
அல்லது / OR
(ஆ)ஜேகோப் மற்றும் மோனாடு வழங்கிய லேக் ஓபரான் மாதிரியை விளக்குக.
(b)Explain the classical model of Lac Operon, proposed by Jacob and Monod.
5 marks
21.
(அ)இம்யுனோகுளோபுலின் அமைப்பை தகுந்த படத்துடன் விளக்குக.
(a)Explain the structure of immunoglobulin with suitable diagram.
அல்லது / OR
(ஆ)மண்ணின் பண்புகள் பற்றி தொகுத்து எழுதுக.
(b)Give an account of the properties of soil.
5 marks