TN Online TestSamacheer Kalvi practice

12th Standard Bio-Zoology Question Paper Supplementary July 2022

Paper code 6327 35 marks 180 minutes

The complete Supplementary July 2022 public exam paper exactly as printed: every question in Tamil and English. Download the PDF, or take Part I as a free online test.

உயிரியல் – விலங்கியல் / Bio-Zoologyதுணைத் தேர்வு ஜூலை 2022 · Supplementary July 2022

பிரிவு – 1 / SECTION – 1

பகுதி – II (உயிரி-விலங்கியல்) (மதிப்பெண்கள் : 35). குறிப்பு : (i) அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும். (ii) கொடுக்கப்பட்டுள்ள மாற்று விடைகளில் மிகவும் ஏற்புடைய விடையைத் தேர்ந்தெடுத்துக் குறியீட்டுடன் விடையினையும் சேர்த்து எழுதவும்.
PART – II (BIO-ZOOLOGY) (Marks : 35). Note : (i) Answer all the questions. (ii) Choose the most appropriate answer from the given four alternatives and write the option code and the corresponding answer.
1.
உயிரியப் பல்வகைத்தன்மை என்ற வார்த்தையை அறிமுகப்படுத்தியவர் யார்?
(அ) எட்வேர்டு வில்சன்
(ஆ) வால்டர் ரோசன்
(இ) நார்மன் மியர்ஸ்
(ஈ) ஆலிஸ் நார்மன்
The term 'Biodiversity' was introduced by ________.
(a) Edward Wilson
(b) Walter Rosen
(c) Norman Myers
(d) Alice Norman
Show answer ▾ (ஆ) / (b) Walter Rosen · Solved one-mark questions →
1 mark
2.
சரியாகப் பொருந்தும் இணையைத் தேர்ந்தெடுக்கவும்.
(அ) ஹெராயின் - உளவியல் மருந்து
(ஆ) பென்சோடைஅசபைன் - வலி நீக்கி
(இ) லைசர்ஜிக் அமிலம் டைஎத்திலமைடு - போதை மருந்து
(ஈ) ஆம்ஃபிடமைன்கள் - கிளர்வூட்டி
Choose the correctly matched pair:
(a) Heroin - Psychotropic
(b) Benzodiazepine - Pain Killer
(c) LSD - Narcotic
(d) Amphetamines - Stimulant
Show answer ▾ (ஈ) / (d) Amphetamines - Stimulant · Solved one-mark questions →
1 mark
3.
________ ELISA முதன்மையாகப் பயன்படுகிறது.
(அ) திடீர் மாற்றங்களைக் கண்டறிய
(ஆ) நோய்க் கிருமிகளைக் கண்டறிய
(இ) விரும்பத்தக்க பண்புகளையுடைய விலங்குகளைத் தேர்வு செய்ய
(ஈ) விரும்பத்தக்க பண்புகளையுடைய தாவரங்களைத் தேர்வு செய்ய
ELISA is a molecular tool used for ________.
(a) Detection of mutations
(b) Detection of Pathogens
(c) Selection of animals having desired traits
(d) Selection of plants having desired traits
Show answer ▾ (ஆ) / (b) Detection of Pathogens · Solved one-mark questions →
1 mark
4.
ஆண்ட்ரோஜன் இணைவுப்புரதத்தை உற்பத்தி செய்பவை:
(அ) லீடிக் செல்கள்
(ஆ) ஹைபோதலாமஸ்
(இ) செர்டோலி செல்கள்
(ஈ) பிட்யூட்டரி சுரப்பி
The Androgen Binding Protein (ABP) is produced by:
(a) Leydig cells
(b) Hypothalamus
(c) Sertoli cells
(d) Pituitary gland
Show answer ▾ (இ) / (c) Sertoli cells · Solved one-mark questions →
1 mark
5.
புரதச் சேர்க்கை நிகழ்ச்சி மைய செயல்திட்டத்தின் சரியான வரிசையைக் கண்டறிக.
(அ) படியெடுத்தல், மொழிபெயர்த்தல், இரட்டிப்பாதல்
(ஆ) படியெடுத்தல், இரட்டிப்பாதல், மொழிபெயர்த்தல்
(இ) நகலாக்கம், மொழிபெயர்த்தல், படியெடுத்தல்
(ஈ) இரட்டிப்பாதல், படியெடுத்தல், மொழிபெயர்த்தல்
Which of the following is the correct sequence of event with reference to the Central Dogma of Protein Synthesis?
(a) Transcription, Translation, Replication
(b) Transcription, Replication, Translation
(c) Duplication, Translation, Transcription
(d) Replication, Transcription, Translation
Show answer ▾ (ஈ) / (d) Replication, Transcription, Translation · Solved one-mark questions →
1 mark
6.
"இயற்கைத் தேர்வு வழி சிற்றினத் தோற்றம்" என்ற நூலை வெளியிட்டவர்:
(அ) சார்லஸ் டார்வின்
(ஆ) லாமார்க்
(இ) வீஸ்மான்
(ஈ) ஹியூகோ டி விரிஸ்
The book "Origin of species by natural selection" was published by ________.
(a) Charles Darwin
(b) Lamark
(c) Weismann
(d) Hugo de Vries
Show answer ▾ (அ) / (a) Charles Darwin · Solved one-mark questions →
1 mark
7.
இரண்டு பெற்றோர்களின் இரத்தவகையும் AB யாக இருக்கும் பொழுது சந்ததிகளின் இரத்தவகை என்னவாக இருக்க முடியும்?
(அ) A, B மற்றும் AB
(ஆ) AB மட்டும்
(இ) A, B, AB மற்றும் O
(ஈ) A மற்றும் B மட்டும்
What can be the blood group of offspring when both parents have AB blood group?
(a) A, B and AB
(b) AB only
(c) A, B, AB and O
(d) A and B only
Show answer ▾ (அ) / (a) A, B and AB · Solved one-mark questions →
1 mark
8.
சுற்றுச்சூழல் வேளாண்மை மற்றும் இயற்கை வேளாண்மையினை பரப்பிய வேளாண் அறிவியலாளர் ________.
(அ) கோ. நம்மாழ்வார்
(ஆ) டாக்டர் சுல்தான் அகமது இஸ்மாயில்
(இ) டாக்டர் எம்.எஸ். சுவாமிநாதன்
(ஈ) N. கிருஷ்ணமூர்த்தி
The agricultural scientist, environmental activist, celebrated for his work on spreading organic farming is ________.
(a) G. Nammalvar
(b) Dr. Sultan Ahmed Ismail
(c) Dr. M.S. Swaminathan
(d) N. Krishnamurthy
Show answer ▾ (அ) / (a) G. Nammalvar · Solved one-mark questions →
1 mark

பிரிவு – 2 / SECTION – 2

குறிப்பு : ஏதேனும் நான்கு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்கவும்.
Note : Answer any four of the following questions.
9.
இனச்செல் உருவாக்கம் - வரையறுக்கவும்.
Define gametogenesis.
2 marks
10.
கருக்கொலை / சிசுக்கொலை - வேறுபடுத்துக.
Differentiate foeticide and infanticide.
2 marks
11.
மரபணுக் குறியீடு என்றால் என்ன ?
What is a genetic code ?
2 marks
12.
சூப்பர் பக் - வரையறுக்கவும்.
Define the term ‘Super bug’.
2 marks
13.
உடல்செல் மரபணு சிகிச்சை மற்றும் இனச்செல் மரபணு சிகிச்சை - வேறுபடுத்துக.
Differentiate between Somatic cell gene therapy and Germline gene therapy.
2 marks
14.
பிறப்பு வீதம் / இறப்பு வீதம் - வேறுபடுத்துக.
Differentiate Natality and Mortality.
2 marks

பிரிவு – 3 / SECTION – 3

குறிப்பு : கீழ்க்காணும் வினாக்களில் ஏதேனும் மூன்று வினாக்களுக்கு விடையளிக்கவும். வினா எண் 19 -க்கு கட்டாயமாக விடையளிக்கவும்.
Note : Answer any three of the following questions. Question No. 19 is compulsory.
15.
விந்து செல்லின் அமைப்பைப் படம் வரைந்து பாகம் குறிக்கவும்.
Draw a neat labelled diagram of Human Sperm.
3 marks
16.
உயிரியத் தீர்வு என்றால் என்ன ? உயிரியத் தீர்வில் பங்கேற்கும் ஏதேனும் ஒரு நுண்ணுயிரியின் பெயரை எழுதுக.
What is Bioremediation ? Name any one microorganism involved in Bioremediation.
3 marks
17.
மண்ணின் தோற்றம் என்றால் என்ன ? மண்ணின் பணிகள் ஏதேனும் இரண்டினை எழுதுக.
What is Pedogenesis ? Mention any two of its functions.
3 marks
18.
தான் தோன்றல் கோட்பாட்டினை எழுதுக.
State the theory of spontaneous generation.
3 marks
19.
மாசுபடுத்திகளின் வகைகள் யாவை ?
Classify the pollutants.
3 marks

பிரிவு – 4 / SECTION – 4

குறிப்பு : பின்வரும் வினாக்களுக்கு விடையளிக்கவும்.
Note : Answer the following questions.
20.
(அ)குரோமோசோம் தொகுப்பு வரைபடம் என்றால் என்ன ? அதன் பயன்களை எழுதுக.
(a)What is Karyotyping ? Write the applications of Karyotyping.
அல்லது / OR
(ஆ)மருத்துவக் கழிவு என்றால் என்ன ? அதன் மேலாண்மை மற்றும் கழிவகற்றம் பற்றி எழுதுக.
(b)What are called Medical wastes ? Write a note on its management and the methods of disposal.
5 marks
21.
(அ)மனித மரபணு திட்டத்தின் இலக்குகள் யாவை ?
(a)Write the goals of Human Genome Project (HGP).
அல்லது / OR
(ஆ)தடுப்பு மருந்துகள் என்றால் என்ன ? அதன் வகைகளை விளக்குக.
(b)What is a Vaccine ? Explain its types.
5 marks
⬇️ Download PDF All Bio-Zoology papers