TN Online TestSamacheer Kalvi practice

12th Standard Bio-Zoology Question Paper Supplementary June 2025

Paper code 8727 35 marks 180 minutes

The complete Supplementary June 2025 public exam paper exactly as printed: every question in Tamil and English. Download the PDF, or take Part I as a free online test.

உயிரியல் – விலங்கியல் / Bio-Zoologyதுணைத் தேர்வு ஜூன் 2025 · Supplementary June 2025

பிரிவு – 1 / SECTION – 1

பகுதி – II (உயிரி-விலங்கியல்) (மதிப்பெண்கள் : 35). குறிப்பு : (i) அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும். (ii) கொடுக்கப்பட்டுள்ள நான்கு மாற்று விடைகளில் மிகவும் ஏற்புடைய விடையைத் தேர்ந்தெடுத்துக் குறியீட்டுடன் விடையினையும் சேர்த்து எழுதவும்.
PART – II (BIO-ZOOLOGY) (Marks : 35). Note : (i) Answer all the questions. (ii) Choose the most appropriate answer from the given four alternatives and write the option code and the corresponding answer.
1.
எவ்வகைக் கன்னி இனப்பெருக்கத்தில் ஆண் உயிரிகள் மட்டுமே உருவாகின்றன ?
(அ) அர்ரீனோடோக்கி
(ஆ) தெலிடோக்கி
(இ) ஆம்ஃபிடோக்கி
(ஈ) (அ) மற்றும் (ஆ) இரண்டும்
In which type of parthenogenesis are only males produced ?
(a) Arrhenotoky
(b) Thelytoky
(c) Amphitoky
(d) Both (a) and (b)
Show answer ▾ (அ) / (a) Arrhenotoky · Solved one-mark questions →
1 mark
2.
தவறான இணையைக் கண்டுபிடி :
(அ) இரத்தப்போக்கு நிலை - ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்டிரான் குறைதல்
(ஆ) ஃபாலிகுலார் நிலை - ஈஸ்ட்ரோஜன் அதிகரித்தல்
(இ) லூட்டியல் நிலை - FSH அளவு அதிகரித்தல்
(ஈ) அண்டம் விடுபடு நிலை - LH எழுச்சி
Find the wrongly matched pair.
(a) Bleeding phase - fall in oestrogen and progesterone
(b) Follicular phase - rise in oestrogen
(c) Luteal phase - rise in FSH level
(d) Ovulatory phase - LH Surge
Show answer ▾ (இ) / (c) Luteal phase - rise in FSH level · Solved one-mark questions →
1 mark
3.
ஒரு கருத்தடை மாத்திரை அண்டசெல் வெளியீட்டை __________ மூலம் தடுக்கிறது.
(அ) அண்டநாளத்தில் அடைப்பு ஏற்படுத்துதல் மூலம்
(ஆ) FSH மற்றும் LH ஹார்மோன்கள் சுரத்தலை தடுப்பதன் மூலம்
(இ) FSH மற்றும் LH ஹார்மோன்கள் சுரத்தலை தூண்டுவதன் மூலம்
(ஈ) அண்ட செல் விடுபட்டவுடன் அதனை உடனடியாக அழித்துவிடுவதன் மூலம்
A contraceptive pill prevents ovulation by __________.
(a) Blocking the Fallopian tube
(b) Inhibiting the release of FSH and LH
(c) Stimulating the release of FSH and LH
(d) Causing immediate degeneration of released ovum
Show answer ▾ (ஆ) / (b) Inhibiting the release of FSH and LH · Solved one-mark questions →
1 mark
4.
டவுன் சிண்ட்ரோம் எவ்வாறு அழைக்கப்படுகிறது ?
(அ) டிரைசோமி - 21
(ஆ) டிரைசோமி - 13
(இ) டிரைசோமி - 18
(ஈ) மேற்கண்ட எதுவும் இல்லை
Down's syndrome is referred to as __________.
(a) Trisomy - 21
(b) Trisomy - 13
(c) Trisomy - 18
(d) None of the above
Show answer ▾ (அ) / (a) Trisomy - 21 · Solved one-mark questions →
1 mark
5.
கீழ்கண்டவற்றுள் காணப்படும் குறியீடுகளில் “பொருளற்ற குறியீடுகள்” என்று அழைக்கப்படுபவை எது ?
(அ) GUU, GUC மற்றும் UUG
(ஆ) UAA, UAG மற்றும் UGA
(இ) AUG, AUA மற்றும் AUC
(ஈ) AAU, GAU மற்றும் AUG
Which of the following codons are designated as "non-sense" codons ?
(a) GUU, GUC and UUG
(b) UAA, UAG and UGA
(c) AUG, AUA and AUC
(d) AAU, GAU and AUG
Show answer ▾ (ஆ) / (b) UAA, UAG and UGA · Solved one-mark questions →
1 mark
6.
வடிசாலைகளில் எத்தனால் உற்பத்திக்கு பயன்படும் பொதுவான தளப்பொருள் :
(அ) சோயா மாவு
(ஆ) நிலக்கடலை
(இ) கரும்பாலைக் கழிவுகள்
(ஈ) மாவு நிறைந்த தானியங்கள்
The most common substrate used in distilleries for the production of ethanol is __________.
(a) Soyameal
(b) Groundgram
(c) Molasses
(d) Malted cereals
Show answer ▾ (இ) / (c) Molasses · Solved one-mark questions →
1 mark
7.
இன்சுலினின் இரு சங்கிலிகளிலும் எத்தனை அமினோ அமிலங்கள் அமைந்துள்ளன ?
(அ) A சங்கிலியில் 12 மற்றும் B சங்கிலியில் 13 அமினோ அமிலங்கள்
(ஆ) A சங்கிலியில் 21 மற்றும் B சங்கிலியில் 30 அமினோ அமிலங்கள்
(இ) A சங்கிலியில் 20 மற்றும் B சங்கிலியில் 30 அமினோ அமிலங்கள்
(ஈ) A சங்கிலியில் 12 மற்றும் B சங்கிலியில் 20 அமினோ அமிலங்கள்
How many amino acids are arranged in two chains of insulin ?
(a) Chain A has 12 and Chain B has 13 amino acids.
(b) Chain A has 21 and Chain B has 30 amino acids.
(c) Chain A has 20 and Chain B has 30 amino acids.
(d) Chain A has 12 and Chain B has 20 amino acids.
Show answer ▾ (ஆ) / (b) Chain A has 21 and Chain B has 30 amino acids. · Solved one-mark questions →
1 mark
8.
வேட்டையாடுதல் மற்றும் ஒட்டுண்ணி வாழ்க்கை முறை எந்த வகை உயிரினச் சார்பு ?
(அ) (+, +)
(ஆ) (+, 0)
(இ) (-, -)
(ஈ) (+, -)
Predation and parasitism are which type of interactions ?
(a) (+, +)
(b) (+, 0)
(c) (-, -)
(d) (+, -)
Show answer ▾ (ஈ) / (d) (+, -) · Solved one-mark questions →
1 mark

பிரிவு – 2 / SECTION – 2

குறிப்பு : கீழ்காணும் வினாக்களில் ஏதேனும் நான்கு வினாக்களுக்கு விடையளிக்கவும்.
Note : Answer any four of the following questions.
9.
பருவகால இனச் சேர்க்கையாளர்களை காலமுறையற்ற இனச் சேர்க்கையாளர்களிலிருந்து வேறுபடுத்துக.
Differentiate between seasonal breeders and continuous breeders.
2 marks
10.
  1. “மேயர்-ரோகிடான்ஸ்கி நோய்க் குறைபாடு” என்றால் என்ன ?
  2. தொடக்கத்தில், இத்தொழில்நுட்பமானது வளராத, அடைபட்ட மற்றும் பாதிப்படைந்த அண்டநாளம் கொண்ட பெண்களுக்கு பயன் அளித்தது. தற்போது இத்தொழில்நுட்பம் பல்வேறு காரணிகளால் ஏற்படும் மலட்டுத் தன்மையை நிவர்த்தி செய்ய பயன்படுகிறது. இத்தொழில்நுட்பத்தின் பெயர் என்ன ?
  1. What is meant by "Mayer-Rokitansky Syndrome" ?
  2. Initially, this technique was used to treat women with blocked, damaged, or absent Fallopian tubes. Today, it is used to treat many causes of infertility. What is the name of this technique ?
2 marks
11.
மரபணு குறியீடு ‘உலகம் முழுவதும் ஏற்றுக்கொள்ளத்தக்கது’. - காரணங்கள் கூறு.
Give reasons : Genetic code is 'Universal'.
2 marks
12.
தொன்மையான பூமியில் காணப்பட்ட வாயுக்களை பட்டியலிடுக.
List out the major gases seems to be found in the primitive earth.
2 marks
13.
உயிர் எதிர்ப்பொருள் – வரையறுக்கவும்.
Define Antibiotics.
2 marks
14.
செந்தரவுப் புத்தகம் என்றால் என்ன ?
What is Red data book ?
2 marks

பிரிவு – 3 / SECTION – 3

குறிப்பு : எவையேனும் மூன்று வினாக்களுக்கு விடையளிக்கவும். வினா எண் 19 -க்கு கட்டாயமாக விடையளிக்கவும்.
Note : Answer any three of the following questions. Q. No. 19 is compulsory.
15.
குரோமோசோம் தொகுப்பு வரைபடத்தின் பயன்கள் யாவை ?
What are the applications of Karyotyping ?
3 marks
16.
விலங்கு நகலாக்கத்தின் நன்மைகளையும் தீமைகளையும் குறிப்பிடுக.
Mention the advantages and disadvantages of animal cloning.
3 marks
17.
மண் உருவாக்கம் என்றால் என்ன ? மண்ணின் பணிகள் ஏதேனும் மூன்றினை எழுதுக.
What is pedogenesis ? Write any three major functions of soil.
3 marks
18.
கொடுக்கப்பட்டுள்ள படத்தைக் கண்டறிந்து ‘அ’, ‘ஆ’, ‘இ’ மற்றும் ‘ஈ’ எனக் குறியிடப்பட்டுள்ள பாகங்களின் பெயர்களைக் குறிக்க.
கொடுக்கப்பட்டுள்ள படமானது ________ ஆகும்.
Identify the given image and label its parts marked as 'a', 'b', 'c' and 'd'.
The given diagram is ________.
3 marks
19.
உயர்நிலை விலங்கான மனிதனின் கருவளர்ச்சி நிலைகள் அதன் மூதாதை விலங்குகளின் முதிர் உயிரியைப் போல சில கட்டமைப்புகளை பெற்றுள்ளன. என்னென்ன கட்டமைப்புகள் அல்லது பண்புகள், மனிதனின் கருவளர்ச்சி நிலைகளில் மட்டும் காணப்படுகிறது ?
The embryonic stages of a higher animal, such as human possesses some structures that resemble the adult stage of its ancestors.
What are the structures or characters that appear only in the embryonic stages of human ?
3 marks

பிரிவு – 4 / SECTION – 4

குறிப்பு : அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்.
Note : Answer all the questions.
20.
(அ)கீழே கொடுக்கப்பட்டுள்ள வரைபடத்தின் உதவியுடன் கருத்தரித்தல் நிகழ்வுகளை விளக்கும் செயல்வழிப் படத்தை உருவாக்கி அதில் ஹையலூரோனிடேஸ் மற்றும் கார்டிகள் துகள்களின் செயல்பாட்டையும் குறிப்பிடுக.
(a)Create a flow chart illustrating the events of fertilization with the help of given diagram and also specify the functions of hyaluronidase and cortical granules in it.
அல்லது / OR
(ஆ)நியூக்ளியோசோம் உருவாகும் முறையை விவரிக்கவும்.
(b)Explain the formation of a Nucleosome.
5 marks
21.
(அ)ஒரு மனிதர் HIV என்னும் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது. அவர் HIV -யால் பாதிக்கப்பட்டுள்ளாரா இல்லையா என்பதை என்னென்ன சோதனைகள் மூலம் நீ கண்டறிவாய் ?
ஒரு மனிதனுக்கு எய்ட்ஸ் வராமல் தடுக்க நீ கூறும் அறிவுரைகள் யாவை ?
(a)A man is suspected of being infected with HIV. What tests can you use to determine whether he is infected with HIV or not ?
What advice would you give to a man to prevent him from getting AIDS ?
அல்லது / OR
(ஆ)கழிவுநீர் சுத்திகரிப்பு நிலைகளை விளக்குக.
(b)Explain the stages of waste water treatment.
5 marks
⬇️ Download PDF All Bio-Zoology papers