TN Online TestSamacheer Kalvi practice

12th Standard History Question Paper Supplementary June 2024

Paper code 7942 90 marks 180 minutes

The complete Supplementary June 2024 public exam paper exactly as printed: every question in Tamil and English. Download the PDF, or take Part I as a free online test.

வரலாறு / Historyதுணைத் தேர்வு ஜூன் 2024 · Supplementary June 2024

பகுதி - I / PART - I

குறிப்பு : (i) அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும். (ii) கொடுக்கப்பட்டுள்ள நான்கு மாற்று விடைகளில் மிகவும் ஏற்புடைய விடையைத் தேர்ந்தெடுத்துக் குறியீட்டுடன் விடையினையும் சேர்த்து எழுதவும்.
Note : (i) Answer all the questions. (ii) Choose the most appropriate answer from the given four alternatives and write the option code and the corresponding answer.
1.
கல்கத்தாவில் அனுசீலன் சமிதியை நிறுவியவர் :
(அ) புலின் பிஹாரி தாஸ்
(ஆ) ஹேமசந்திர கானுங்கோ
(இ) ஜதிந்திரநாத் பானர்ஜி மற்றும் பரிந்தர் குமார் கோஷ்
(ஈ) குதிரம் போஷ் மற்றும் பிரஃபுல்லா சாக்கி
Anushilan Samity of Calcutta was founded by :
(a) Pulin Behari Das
(b) Hemachandra Kanungo
(c) Jatindernath Banerjee and Barindar Kumar Ghose
(d) Khudiram Bose and Prafulla Chaki
Show answer ▾ (இ) / (c) Jatindernath Banerjee and Barindar Kumar Ghose · Solved one-mark questions →
1 mark
2.
கூற்று : ஜின்னாவை "இந்து - முஸ்லீம் ஒற்றுமையின் தூதர்" என்று சரோஜினி அம்மையார் அழைத்தார். காரணம் : லக்னோ ஒப்பந்தத்தின் தலைமைச் சிற்பி ஜின்னா ஆவார்.
(அ) கூற்று சரி. ஆனால் காரணம் கூற்றிற்கான விளக்கமல்ல.
(ஆ) கூற்று சரி. காரணம் கூற்றிற்கான விளக்கமாகும்.
(இ) கூற்று தவறு. காரணம் சரி.
(ஈ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறு.
Assertion (A) : Sarojini Ammaiyar called Jinnah 'The Ambassador of Hindu-Muslim Unity'. Reason (R) : Jinnah was the Chief Architect of the Lucknow pact.
(a) (A) is correct but (R) does not explain (A).
(b) (A) is correct and (R) explains (A).
(c) (A) is wrong and (R) is correct.
(d) Both (A) and (R) are wrong.
Show answer ▾ (ஆ) / (b) (A) is correct and (R) explains (A). · Solved one-mark questions →
1 mark
3.
இந்தியாவின் மூவர்ணக் கொடி எப்போது ஏற்றப்பட்டது ?
(அ) டிசம்பர் 31, 1929
(ஆ) மார்ச் 12, 1930
(இ) ஜனவரி 26, 1930
(ஈ) ஜனவரி 26, 1931
When was the tri-colour flag of freedom hoisted ?
(a) December 31, 1929
(b) March 12, 1930
(c) January 26, 1930
(d) January 26, 1931
Show answer ▾ (அ) / (a) December 31, 1929 · Solved one-mark questions →
1 mark
4.
இருநாடு கொள்கையை முதன்முதலில் கொண்டுவந்தவர் __________.
(அ) இராஜாஜி
(ஆ) ராம்சே மெக்டொனால்டு
(இ) முகமது இக்பால்
(ஈ) சர் வாசிர் ஹசன்
The Two Nation Theory first came from __________.
(a) Rajaji
(b) Ramsay MacDonald
(c) Mohammad Iqbal
(d) Sir Wazir Hasan
Show answer ▾ (ஈ) / (d) Sir Wazir Hasan · Solved one-mark questions →
1 mark
5.
இந்திய தேசிய இராணுவப்படை வீரர்கள் சார்பாக நீதிமன்றத்தில் வாதாடியவர் யார் ?
(அ) ஜவஹர்லால் நேரு
(ஆ) மோதிலால் நேரு
(இ) இராஜாஜி
(ஈ) சுபாஷ் சந்திர போஸ்
Who appeared in court in defence of the INA soldiers ?
(a) Jawaharlal Nehru
(b) Motilal Nehru
(c) Rajaji
(d) Subhash Chandra Bose
Show answer ▾ (அ) / (a) Jawaharlal Nehru · Solved one-mark questions →
1 mark
6.
இந்திய அரசாங்கம் __________ வகையான மேம்பாட்டிற்காக உறுதி பூண்டுள்ளது.
(அ) முதலாளித்துவ
(ஆ) சமதர்ம
(இ) தெய்வீக
(ஈ) தொழிற்சாலை
Government of India was committed to a __________ pattern of development.
(a) Capitalistic
(b) Socialistic
(c) Theocratic
(d) Industrial
Show answer ▾ (ஆ) / (b) Socialistic · Solved one-mark questions →
1 mark
7.
கூற்று : கலிலியோ கலிலி தேவாலய விரோத போக்குக்காக கிறித்துவ திருச்சபையால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். காரணம் : சூரியனை மையமாக வைத்து கோள்கள் சுற்றுகின்றன என்ற கோபர் நிகஸின் சூரிய மையக் கோட்பாட்டை அவர் ஏற்றார்.
(அ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது.
(ஆ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை.
(இ) கூற்று சரி, காரணம் தவறு.
(ஈ) கூற்று தவறு, காரணம் சரி.
Assertion (A) : Galileo Galilei was tried by the Church for heresy. Reason (R) : He accepted the views of Copernicus' Heliocentric theory.
(a) Both (A) and (R) are correct. (R) explains (A).
(b) Both (A) and (R) are correct but (R) does not explain (A).
(c) (A) is correct but (R) is wrong.
(d) (A) is wrong but (R) is correct.
Show answer ▾ (அ) / (a) Both (A) and (R) are correct. (R) explains (A). · Solved one-mark questions →
1 mark
8.
மார்க்சும், ஏங்கல்சும் தங்களின் கம்யூனிஸ்ட் மேனிபெஸ்டோ என்ற நூலை __________ ஆம் ஆண்டில் வெளியிட்டனர்.
(அ) 1842
(ஆ) 1848
(இ) 1867
(ஈ) 1871
Marx and Engels published the Communist Manifesto in __________.
(a) 1842
(b) 1848
(c) 1867
(d) 1871
Show answer ▾ (ஆ) / (b) 1848 · Solved one-mark questions →
1 mark
9.
முசோலினி ஆசிரியராகப் பணியாற்றிய பத்திரிக்கையின் பெயர் யாது ?
(அ) அவந்தி
(ஆ) ப்ராவ்தா
(இ) மார்க்ஸிஸ்ட்
(ஈ) மெய்ன் காம்ப்
What was the name of Journal Mussolini edited ?
(a) Avanti
(b) Pravda
(c) Marxist
(d) Mein Kampf
Show answer ▾ (அ) / (a) Avanti · Solved one-mark questions →
1 mark
10.
பேர்ல் துறைமுகத்தை ஜப்பான் தாக்குவதற்குத் திட்டம் வகுத்தவர் __________ ஆவார்.
(அ) யாமமோடோ
(ஆ) ஸ்கூஸ்னிக்
(இ) இரண்டாம் கெய்சர் வில்லியம்
(ஈ) ஹிரோஹிடோ
Japanese attack on Pearl Harbour was planned by __________.
(a) Yamamoto
(b) Schuschnigg
(c) Kaiser William II
(d) Hirohito
Show answer ▾ (அ) / (a) Yamamoto · Solved one-mark questions →
1 mark
11.
"மூன்றாம் உலகம்" எனும் பதத்தை உருவாக்கியவர் __________ ஆவார்.
(அ) ஆல்பிரட் சாவே
(ஆ) மார்ஷல்
(இ) மோலோடோவ்
(ஈ) ஹாரி ட்ரூமன்
The term "Third World" was coined by __________.
(a) Alfred Sauvy
(b) Marshall
(c) Molotov
(d) Harry Truman
Show answer ▾ (அ) / (a) Alfred Sauvy · Solved one-mark questions →
1 mark
12.
டாக்டர் பி.ஆர். அம்பேத்காரை எந்த தொகுதியிலிருந்து தேர்ந்தெடுப்பதை காங்கிரஸ் உறுதி செய்தது ?
(அ) அமேதி
(ஆ) பம்பாய்
(இ) நாக்பூர்
(ஈ) மகவ்
The Congress ensured the election of Dr. B.R. Ambedkar from a seat in __________.
(a) Amethi
(b) Bombay
(c) Nagpur
(d) Mhow
Show answer ▾ (ஆ) / (b) Bombay · Solved one-mark questions →
1 mark
13.
பாஸ்டன் தேநீர் விருந்து நிகழ்வு __________ இல் நடைபெற்றது.
(அ) 1775
(ஆ) 1773
(இ) 1784
(ஈ) 1799
Boston Tea Party incident took place in the year __________.
(a) 1775
(b) 1773
(c) 1784
(d) 1799
Show answer ▾ (ஆ) / (b) 1773 · Solved one-mark questions →
1 mark
14.
மாறுபட்ட ஒன்றைத் தேர்வு செய்க.
(அ) வில்லியம் ஜோன்ஸ்
(ஆ) சார்லஸ் வில்கின்ஸ்
(இ) மாக்ஸ் முல்லர்
(ஈ) அரவிந்த கோஷ்
Find the odd one.
(a) William Jones
(b) Charles Wilkins
(c) Max Muller
(d) Aurobindo Ghose
Show answer ▾ (ஈ) / (d) Aurobindo Ghose · Solved one-mark questions →
1 mark
15.
கான்பூர் சதிவழக்குக் குறித்த பின்வரும் எந்தக் கூற்றுகள் சரியானவை ? (i) சணல் மற்றும் பருத்தித் தொழிற்சாலைகளில் தொழிற்சங்கங்கள் தோன்றின. (ii) இவ்வழக்கில் கம்யூனிஸ்ட்களும் தொழிற்சங்கவாதிகளும் குற்றஞ்சாட்டப்பட்டனர். (iii) இவ்வழக்கு நீதிபதி H.E. ஹோம்ஸ் என்பவரின் முன்பாக விசாரணைக்கு வந்தது. (iv) விசாரணை மற்றும் சிறைத் தண்டனையானது இந்தியாவில் காங்கிரஸ் நடவடிக்கைகளில் விழிப்புணர்வை ஏற்படுத்தியது.
(அ) (i), (ii) மற்றும் (iii)
(ஆ) (i), (iii) மற்றும் (iv)
(இ) (ii), (iii) மற்றும் (iv)
(ஈ) (i), (ii) மற்றும் (iv)
Which of the following statements about the Kanpur Conspiracy Case, are true ? (i) Trade Unions emerged in the Jute and Cotton Textile Industries. (ii) The Communists and Trade Unionists were charged. (iii) The Case came before Session Judge H.E. Holmes. (iv) The trial and the imprisonment led to some awareness of the Congress activities in India.
(a) (i), (ii) and (iii)
(b) (i), (iii) and (iv)
(c) (ii), (iii) and (iv)
(d) (i), (ii) and (iv)
Show answer ▾ (அ) / (a) (i), (ii) and (iii) · Solved one-mark questions →
1 mark
16.
சோவியத் யூனியன் __________ இல் சிதறுண்டது.
(அ) நவம்பர் 17, 1991
(ஆ) டிசம்பர் 8, 1991
(இ) மே 1, 1991
(ஈ) அக்டோபர் 17, 1991
Soviet Union disintegrated on __________.
(a) November 17, 1991
(b) December 8, 1991
(c) May 1, 1991
(d) October 17, 1991
Show answer ▾ (ஆ) / (b) December 8, 1991 · Solved one-mark questions →
1 mark
17.
"An Inquiry into the Nature and Causes of the wealth of Nations" என்ற நூலை எழுதியவர் __________ ஆவார்.
(அ) ஆடம் ஸ்மித்
(ஆ) தாமஸ் பைன்
(இ) குஸ்னே
(ஈ) கார்ல் மார்க்ஸ்
"An Inquiry into the Nature and Causes of the wealth of Nations" was authored by __________.
(a) Adam Smith
(b) Thomas Paine
(c) Quesnay
(d) Karl Marx
Show answer ▾ (அ) / (a) Adam Smith · Solved one-mark questions →
1 mark
18.
நவீன செயல்முறை அறிவியலின் தந்தை எனக் கருதப்படுபவர் யார் ?
(அ) அரிஸ்டாட்டில்
(ஆ) பிளாட்டோ
(இ) ரோஜர் பேக்கன்
(ஈ) லாண்ட்ஸ்டெய்னர்
Who is considered the father of Modern Experimental Science ?
(a) Aristotle
(b) Plato
(c) Roger Bacon
(d) Landsteiner
Show answer ▾ (இ) / (c) Roger Bacon · Solved one-mark questions →
1 mark
19.
முதலாவது பருத்தி தொழிற்சாலை பம்பாயில் தொடங்கப்பட்ட ஆண்டு :
(அ) 1852
(ஆ) 1854
(இ) 1861
(ஈ) 1865
The first Cotton Mill in Bombay was started in :
(a) 1852
(b) 1854
(c) 1861
(d) 1865
Show answer ▾ (ஆ) / (b) 1854 · Solved one-mark questions →
1 mark
20.
இந்திய தேசிய இராணுவத்தின் பெண்கள் படைப்பிரிவின் பெயர் __________ ஆகும்.
(அ) சுபாஷ் படைப்பிரிவு
(ஆ) கஸ்தூர்பா படைப்பிரிவு
(இ) கேப்டன் லட்சுமி படைப்பிரிவு
(ஈ) ஜான்சி ராணி படைப்பிரிவு
Name the Regiment of Indian National Army consisting of Women Soldiers.
(a) Subhash Regiment
(b) Kasturba Regiment
(c) Captain Lakshmi Regiment
(d) Rani of Jhansi Regiment
Show answer ▾ (ஈ) / (d) Rani of Jhansi Regiment · Solved one-mark questions →
1 mark

பகுதி - II / PART - II

குறிப்பு : ஏதேனும் ஏழு வினாக்களுக்கு விடையளிக்கவும். வினா எண் 30 -க்கு கட்டாயம் விடையளிக்கவும்.
Note : Answer any seven questions. Question No. 30 is compulsory.
21.
இல்பர்ட் மசோதாவின் முக்கியத்துவத்தை விவாதிக்கவும்.
Discuss the importance of Ilbert Bill.
2 marks
22.
கிலாஃபத் இயக்கம் துவங்குவதற்கான பின்னணி என்னவாக இருந்தது ?
What was the background for the launch of the Khilafat Movement ?
2 marks
23.
மிதவாத தேசியவாதிகளின் 'இறைஞ்சுதல் கொள்கை' (The Mendicant Policy) என்றால் என்ன ?
What was called the Mendicant Policy of the Moderates ?
2 marks
24.
இந்தியா வந்த வேல்ஸ் இளவரசர் எவ்வாறு வரவேற்கப்பட்டார் ?
How was the prince of Wales received in India ?
2 marks
25.
சர் சையது அகமது கான் பிரிட்டிஷ் அரசினை ஏன் ஆதரித்தார் ?
Why did Sir Syed Ahmad Khan support British ?
2 marks
26.
இணைப்புறுதி ஆவணம் பற்றி நீவிர் அறிவது யாது ?
What do you know of 'Instrument of Accession' ?
2 marks
27.
பூமிதான இயக்கம் பற்றி எழுதுக.
Write about the Bhoodan Movement.
2 marks
28.
பண்டைய ஆட்சி முறையின் மூன்று எஸ்டேட்டுகளை விவாதிக்கவும்.
Discuss the three Estates of the Ancient Regime.
2 marks
29.
நிகிலிசம் என்றால் என்ன ?
What is Nihilism ?
2 marks
30.
வரலாற்றில் ஜோன் ஆஃப் ஆர்க் மங்கை நினைவு கூறப்படுவது ஏன் ?
Why is Joan of Arc remembered in History ?
2 marks

பகுதி - III / PART - III

குறிப்பு : ஏதேனும் ஏழு வினாக்களுக்கு விடையளிக்கவும். அவற்றில் வினா எண் 40 -க்கு கட்டாயம் விடையளிக்கவும்.
Note : Answer any seven questions. Question No. 40 is compulsory.
31.
மெக்காலேயின் 'இந்தியக் கல்வி குறித்த குறிப்புகளை' ஆய்க.
Analyse Macaulay's 'Minutes on Indian Education'.
3 marks
32.
இந்திய சுதந்திரப் போராட்டத்தின் ஒரு முக்கியமான அத்தியாயமாக கதார் இயக்கம் கருதப்படுவது ஏன் ?
Why is Ghadar Movement considered an important episode in India's Freedom Struggle ?
3 marks
33.
தென்னிந்தியாவில் தொழிற்சங்கங்களின் வளர்ச்சிக்காகச் சிங்காரவேலர் ஆற்றிய பங்களிப்புக் குறித்து எழுதுக.
Write about the contribution of Singaravelar to the promotion of Trade Unionism in South India.
3 marks
34.
வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கேற்காத அமைப்புகளின் பெயர்களை எழுதுக.
Name the organisations which did not participate in the Quit India Movement.
3 marks
35.
இந்திய வேளாண்மையின் பின்தங்கிய நிலைக்கான காரணங்கள் யாவை ?
What were the reasons for agricultural backwardness in India ?
3 marks
36.
"செப்டம்பர் படுகொலைகள்" எதனால் ஏற்பட்டது ?
What caused the "September Massacres" ?
3 marks
37.
அகழிப் போர் எவ்வாறு நடத்தப்பட்டது ?
How was Trench Warfare fought ?
3 marks
38.
ஐ.நா. சபையின் சாசனம் முடிவாக ஏற்றுக் கொள்ளப்பட்டதன் பல்வேறு கட்டங்கள் குறித்து எழுதுக.
Write about the different stages in the final adoption of UN Charter.
3 marks
39.
பிரான்ஸ் தும்மினால், ஐரோப்பாவிற்கு ஜலதோஷம் – தெளிவுபடுத்துக.
When France Sneezes, Europe catches a Cold - Elucidate.
3 marks
40.
சீனாவில் நிகழ்ந்த பாக்ஸர் கிளர்ச்சி பற்றிய குறிப்புகளைத் தருக.
Attempt an account of Boxer Rebellion in China.
3 marks

பகுதி - IV / PART - IV

குறிப்பு : அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்.
Note : Answer all the questions.
41.
(அ)இந்தியாவில் தேசிய விழிப்புணர்வுக்குப் பிரிட்டிஷாரின் அடக்குமுறை மற்றும் இனவெறி கொள்கைகள், எந்த அளவிற்கு காரணமாக இருந்தன ?
(a)To what extent the repressive and racist policy measures of the British were responsible for the national awakening in India ?
அல்லது / OR
(ஆ)திலகர் மற்றும் அன்னிபெசன்ட் ஆகியோரின் கீழ் துவக்கப்பட்ட தன்னாட்சி இயக்கங்களின் செயல்பாடுகளை விளக்குக.
(b)Narrate the work done by two Home Rule Movements, one under Tilak and another under Annie Besant.
5 marks
42.
(அ)இந்திய தேசிய இயக்கத்தில் வ.உ. சிதம்பரத்தின் பங்கினைப் பற்றி எழுதுக.
(a)Write about the role played by V.O. Chidambaram in Indian National Movement.
அல்லது / OR
(ஆ)பிரிட்டிஷ் இந்தியாவில் வகுப்புவாதத்தின் தோற்றம் மற்றும் வளர்ச்சி குறித்து ஆய்வு செய்க.
(b)Trace the origin and growth of Communalism in British India.
5 marks
43.
(அ)ஒத்துழையாமை இயக்கத்தை நடைமுறைப்படுத்தும் சூழலையும் அதன் விளைவுகளையும் விவரிக்கவும்.
(a)Discuss the context of launching of the Non-cooperation Movement and its outcome.
அல்லது / OR
(ஆ)வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் போக்கினை விவாதிக்கவும்.
(b)Discuss the course of the Quit India Movement.
5 marks
44.
(அ)பகத்சிங்கின் புரட்சிகர தேசியவாதம் மற்றும் புரட்சிகர நடவடிக்கைகள் எவ்வாறு அவரைத் தூக்கு மேடைக்கு இட்டுச் சென்றது ?
(a)Discuss Bhagat Singh's radical stand of nationalism, and his revolutionary activism that led to his hanging.
அல்லது / OR
(ஆ)சுதேச அரசுகளை இந்திய ஒன்றியத்துடன் இணைப்பது தொடர்பாக ஏற்பட்ட பிரச்சினைகள் என்ன ? அவற்றை எவ்வாறு திறமையாக படேல் மற்றும் நேரு கையாண்டனர் என்பதையும் விளக்குக.
(b)What were the problems in the merger of princely states with the Indian Union and explain how they were ably handled by Patel and Nehru ?
5 marks
45.
(அ)முதல் இரண்டு ஐந்தாண்டு திட்டங்களின் சாதனைகளை மதிப்பிடுக.
(a)Assess the achievements of the first two Five Year Plans.
அல்லது / OR
(ஆ)இத்தாலிய மறுமலர்ச்சிக்கு பிளாரன்ஸ் நகர மக்கள் ஆற்றிய பங்களிப்பை ஆராயவும்.
(b)Analyse the contributions of Florentines to Italian Renaissance.
5 marks
46.
(அ)அணிசேரா இயக்கத்தின் இலக்குகளையும் நோக்கங்களையும் கோடிட்டுக் காட்டவும்.
(a)Highlight the goals and objectives of the Non-Aligned Movement.
அல்லது / OR
(ஆ)கொடுக்கப்பட்ட இந்திய வரைபடத்தில் இந்திய தேசிய இயக்கம் நடைபெற்ற கீழ்காணும் இடங்களைக் குறிக்கவும்.
  1. தண்டி
  2. பம்பாய்
  3. பூனா
  4. மீரட்
  5. சென்னை
(b)Mark the following places where Indian National Movement took place on the outline map of India.
  1. Dandi
  2. Bombay
  3. Pune
  4. Meerut
  5. Chennai
5 marks
47.
(அ)முதல் உலகப் போரின் காரணங்களையும், விளைவுகளையும் கணக்கிடுக.
(a)Enumerate the causes and the consequences of the First World War.
அல்லது / OR
(ஆ)1930 முதல் 1950 வரையிலான இந்திய தேசிய இயக்கத்தின் ஏதேனும் ஐந்து நிகழ்வுகளை காலக்கோடு வரைந்து காட்டுக.
(b)Draw a timeline from 1930 - 1950 and mark any five important events of Indian National Movement.
5 marks
⬇️ Download PDF All History papers