TN Online TestSamacheer Kalvi practice

12th Standard History Question Paper March 2024

Paper code 7442 90 marks 180 minutes

The complete March 2024 public exam paper exactly as printed: every question in Tamil and English. Download the PDF, or take Part I as a free online test.

வரலாறு / Historyமார்ச் 2024 · March 2024

பகுதி - I / PART - I

குறிப்பு : (i) அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும். (ii) கொடுக்கப்பட்டுள்ள நான்கு மாற்று விடைகளில் மிகவும் ஏற்புடைய விடையைத் தேர்ந்தெடுத்துக் குறியீட்டுடன் விடையினையும் சேர்த்து எழுதவும்.
Note : (i) Answer all the questions. (ii) Choose the most appropriate answer from the given four alternatives and write the option code and the corresponding answer.
1.
சுப்பிரமணிய பாரதி குறித்த பின்வரும் எந்த கூற்று சரியானது அல்ல?
(அ) பாரதியின் குருமணி (ஆசிரியர்) சுவாமி விவேகானந்தராவார்.
(ஆ) சுதேசமித்திரன் இதழின் துணை ஆசிரியராக இருந்தார்.
(இ) பெண்களுக்கான "சக்ரவர்த்தினி" என்ற இதழின் ஆசிரியராக இருந்தார்.
(ஈ) திலகரின் Tenets of New Party என்ற நூலை தமிழில் மொழிபெயர்த்தார்.
Which of the following statement is not true about Subramania Bharati?
(a) Bharati's Gurumani was Swami Vivekananda.
(b) Bharati was the sub-editor of Swadesamitran.
(c) He was the editor of a Woman's magazine by name 'Chakravarthini'.
(d) He translated Tilak's Tenets of the New Party into Tamil.
Show answer ▾ (அ) / (a) Bharati's Gurumani was Swami Vivekananda. · Solved one-mark questions →
1 mark
2.
பின்வரும் அமைப்புகள் தொடங்கப்பட்ட சரியான காலவரிசையைத் தேர்வு செய்க. (i) கிழக்கிந்திய கழகம் (ii) சென்னை மகாஜன சங்கம் (iii) சென்னை வாசிகள் சங்கம் (iv) இந்தியச் சங்கம்
(அ) (iii), (iv), (i), (ii)
(ஆ) (ii), (i), (iii), (iv)
(இ) (iii), (iv), (ii), (i)
(ஈ) (ii), (iii), (i), (iv)
Which is the correct chronological sequence of the following associations? (i) East India Association (ii) Madras Mahajana Sabha (iii) Madras Native Association (iv) India Society
(a) (iii), (iv), (i), (ii)
(b) (ii), (i), (iii), (iv)
(c) (iii), (iv), (ii), (i)
(d) (ii), (iii), (i), (iv)
Show answer ▾ (அ) / (a) (iii), (iv), (i), (ii) · Solved one-mark questions →
1 mark
3.
கூற்று: துருக்கிய வெற்றிகளும் கான்ஸ்டான்டிநோபிளின் வீழ்ச்சியும் கிழக்கு பகுதிக்கு ஒரு கடல் வழித்தடத்தை கண்டுபிடிக்க ஊக்கமாக இருந்தது. காரணம்: கிழக்கில் இருந்து கிடைக்கும் பொருட்களின் தேவைகள் அதிகரித்ததால் கடல் வழி வாணிபத்தை கட்டுப்படுத்த ஐரோப்பிய நாடுகள் விரும்பின.
(அ) கூற்று சரி, காரணம் தவறு.
(ஆ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி, மேலும் காரணம் கூற்றை விளக்குகிறது.
(இ) கூற்று தவறு, காரணம் சரி.
(ஈ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி, ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை.
Assertion (A): The Turkish conquests and the fall of Constantinople provided stimulus to find a sea route to the East. Reason (R): As the demands for the products from the East increased, the European states wanted to control sea-borne trade.
(a) (A) is correct but (R) is wrong
(b) Both (A) and (R) are correct, (R) explains (A)
(c) (A) is wrong but (R) is correct
(d) Both (A) and (R) are correct, (R) does not explain (A)
Show answer ▾ (ஆ) / (b) Both (A) and (R) are correct, (R) explains (A) · Solved one-mark questions →
1 mark
4.
இந்திய தேசிய காங்கிரஸின் முதல் தலைவர்:
(அ) A.O. ஹியூம்
(ஆ) சுரேந்திரநாத் பானர்ஜி
(இ) W.C. பானர்ஜி
(ஈ) பத்ருதீன் தியாப்ஜி
The first President of the Indian National Congress was:
(a) A.O. Hume
(b) Surendranath Banerjee
(c) W.C. Banerjee
(d) Badruddin Tyabji
Show answer ▾ (இ) / (c) W.C. Banerjee · Solved one-mark questions →
1 mark
5.
உலகின் முதல் ஹைட்ரஜன் அணுகுண்டை அமெரிக்கா வெடித்து பரிசோதனை செய்த ஆண்டு எது?
(அ) 1954
(ஆ) 1951
(இ) 1955
(ஈ) 1952
When did the United States successfully detonate the World's first Hydrogen bomb?
(a) 1954
(b) 1951
(c) 1955
(d) 1952
Show answer ▾ (ஈ) / (d) 1952 · Solved one-mark questions →
1 mark
6.
நிதி ஆயோக் எனும் அமைப்பு எப்பொழுது உருவாக்கப்பட்டது?
(அ) 2017
(ஆ) 2015
(இ) 2018
(ஈ) 2016
When was NITI Aayog established?
(a) 2017
(b) 2015
(c) 2018
(d) 2016
Show answer ▾ (ஆ) / (b) 2015 · Solved one-mark questions →
1 mark
7.
லண்டன் பிரிவிக் கவுன்சிலில் இடம் பெற்ற முதல் இந்தியர் __________.
(அ) சையது அமீர் அலி
(ஆ) ரஹமத்துல்லா சயானி
(இ) பத்ருதீன் தியாப்ஜி
(ஈ) சர் சையது அகமது கான்
__________ was the first Indian to find a place in London Privy Council.
(a) Syed Ameer Ali
(b) Rahmatullah Sayani
(c) Badruddin Tyabji
(d) Sir Syed Ahmed Khan
Show answer ▾ (அ) / (a) Syed Ameer Ali · Solved one-mark questions →
1 mark
8.
சூயஸ் கால்வாய் செங்கடலை __________ உடன் இணைக்கிறது.
(அ) மத்திய தரைக்கடல்
(ஆ) ஏடன் வளைகுடா
(இ) அரபிக் கடல்
(ஈ) காம்பே வளைகுடா
Suez Canal connects the Red Sea with the __________.
(a) Mediterranean Sea
(b) Gulf of Aden
(c) Arabian Sea
(d) Gulf of Khambat
Show answer ▾ (அ) / (a) Mediterranean Sea · Solved one-mark questions →
1 mark
9.
கீழே கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகளைப் பொருத்தி சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்: (1) மாண்டெஸ்கியூ - (i) ஜேகோபியர்கள் (2) வால்டேர் - (ii) ஆங்கிலேய நாட்டுத் தத்துவவாதி (3) பயங்கர ஆட்சி - (iii) பதினான்காம் லூயியின் காலம் (4) ஜான் லாக் - (iv) சட்டங்களின் சாரம்
(அ) (1)-(iv), (2)-(i), (3)-(ii), (4)-(iii)
(ஆ) (1)-(i), (2)-(iii), (3)-(iv), (4)-(ii)
(இ) (1)-(i), (2)-(iv), (3)-(iii), (4)-(ii)
(ஈ) (1)-(iv), (2)-(iii), (3)-(i), (4)-(ii)
Match and choose the correct answer from the code given below: (1) Montesquieu - (i) Jacobins (2) Voltaire - (ii) English Philosopher (3) Reign of Terror - (iii) The Age of Louis XIV (4) John Locke - (iv) The Spirit of Laws
(a) (1)-(iv), (2)-(i), (3)-(ii), (4)-(iii)
(b) (1)-(i), (2)-(iii), (3)-(iv), (4)-(ii)
(c) (1)-(i), (2)-(iv), (3)-(iii), (4)-(ii)
(d) (1)-(iv), (2)-(iii), (3)-(i), (4)-(ii)
Show answer ▾ (ஈ) / (d) (1)-(iv), (2)-(iii), (3)-(i), (4)-(ii) · Solved one-mark questions →
1 mark
10.
மொழிவாரி அடிப்படையில் அமைக்கப்பட்ட முதல் மாநிலம்:
(அ) ஆந்திரா
(ஆ) காஷ்மீர்
(இ) ஒரிஸா
(ஈ) அஸ்ஸாம்
The first State formed on linguistic basis was:
(a) Andhra
(b) Kashmir
(c) Orissa
(d) Assam
Show answer ▾ (அ) / (a) Andhra · Solved one-mark questions →
1 mark
11.
வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின்போது பம்பாயில் இரகசிய வானொலி நிலையத்தை நடத்தியவர்:
(அ) ஆசப் அலி
(ஆ) உஷா மேத்தா
(இ) கேப்டன் லட்சுமி
(ஈ) பிரீத்தி வதேதார்
Who ran Clandestine radio operations at Bombay during the Quit India Movement?
(a) Asaf Ali
(b) Usha Mehta
(c) Captain Lakshmi
(d) Preeti Waddadar
Show answer ▾ (ஆ) / (b) Usha Mehta · Solved one-mark questions →
1 mark
12.
கீழே குறிப்பிடப்பட்டுள்ள தலைவர்களில் சுயராஜ்ய கட்சியுடன் தொடர்பில்லாத தலைவர் யார்?
(அ) மோதிலால் நேரு
(ஆ) இராஜாஜி
(இ) சத்தியமூர்த்தி
(ஈ) சித்தரஞ்சன் தாஸ்
Which of the undermentioned personality is unrelated to Swaraj Party?
(a) Motilal Nehru
(b) Rajaji
(c) Sathyamurthi
(d) Chittaranjan Das
Show answer ▾ (ஆ) / (b) Rajaji · Solved one-mark questions →
1 mark
13.
ஒத்துழையாமை இயக்கம் உள்ளடக்கியவை: (i) பள்ளி மற்றும் கல்லூரிகளைப் புறக்கணித்தல் (ii) அரசு வழங்கிய பட்டங்களைத் திருப்பியளித்தல் (iii) உண்ணாவிரதங்கள் கடைப்பிடிப்பதை எதிர்த்தல் (iv) அரசுக்கு எதிரான சதிவேலைகளில் ஈடுபடுதல்
(அ) (i) மற்றும் (iv)
(ஆ) (i) மற்றும் (ii)
(இ) (iii) மற்றும் (iv)
(ஈ) (ii) மற்றும் (iii)
Non-cooperation movement included: (i) boycott of government schools and colleges. (ii) return of government conferred titles. (iii) observing protest fasts. (iv) conducting underground movements.
(a) (i) and (iv)
(b) (i) and (ii)
(c) (iii) and (iv)
(d) (ii) and (iii)
Show answer ▾ (ஆ) / (b) (i) and (ii) · Solved one-mark questions →
1 mark
14.
நெப்போலியன் முதன்முறை நாடு கடத்தப்பட்டு சிறை வைக்கப்பட்ட இடம் __________.
(அ) கார்சிகா
(ஆ) எல்பா
(இ) வாட்டர்லூ
(ஈ) செயின்ட் ஹெலனா
Napoleon was exiled first time to __________.
(a) Corsica
(b) Elba
(c) Waterloo
(d) St. Helena
Show answer ▾ (ஆ) / (b) Elba · Solved one-mark questions →
1 mark
15.
அமெரிக்க ஐக்கிய நாட்டின் படைகளை ஆகஸ்ட் 1942-இல் பசிபிக் பகுதியில் தலைமையேற்று வழிநடத்தியவர்:
(அ) ஜெனரல் டி கால்
(ஆ) மெக் ஆர்தர்
(இ) ஜார்ஜ் மார்ஷல்
(ஈ) ஐசன்ஹோவர்
In August 1942, US Forces in the Pacific were commanded by:
(a) General de Gaulle
(b) MacArthur
(c) George Marshall
(d) Eisenhower
Show answer ▾ (ஆ) / (b) MacArthur · Solved one-mark questions →
1 mark
16.
"Indian Unrest" என்ற புத்தகத்தின் ஆசிரியர்:
(அ) திலகர்
(ஆ) லாலா லஜபதிராய்
(இ) அன்னி பெசண்ட்
(ஈ) வேலண்டைன் சிரோல்
The Author of the book 'Indian Unrest' was:
(a) Tilak
(b) Lala Lajpat Rai
(c) Annie Besant
(d) Valentine Chirol
Show answer ▾ (ஈ) / (d) Valentine Chirol · Solved one-mark questions →
1 mark
17.
'அரசின் தடையற்ற' (Laissez Faire) என்னும் பதத்தை உருவாக்கியவர் __________ ஆவார்.
(அ) ஃபிஷர்
(ஆ) ஜான் A. ஹாப்சன்
(இ) டெ கௌர்னே
(ஈ) கார்ல் மார்க்ஸ்
Laissez Faire is a word coined by __________.
(a) Fischer
(b) John A. Hobson
(c) de Gournay
(d) Karl Marx
Show answer ▾ (இ) / (c) de Gournay · Solved one-mark questions →
1 mark
18.
முதலாவது பயணிகள் இரயில் 1853-இல் எந்த இடங்களுக்கு இடையே ஓடியது?
(அ) பம்பாய் - தானே
(ஆ) மதராஸ் - அரக்கோணம்
(இ) கொல்கத்தா - ஹூக்ளி
(ஈ) பம்பாய் - பூனா
The first Passenger train ran in 1853 between:
(a) Bombay - Thane
(b) Madras - Arakkonam
(c) Kolkata - Hoogly
(d) Bombay - Pune
Show answer ▾ (அ) / (a) Bombay - Thane · Solved one-mark questions →
1 mark
19.
தென்னிந்தியாவில் தன்னாட்சி இயக்கம் யாரால் துவங்கப்பட்டது?
(அ) பி.பி. வாடியா
(ஆ) திலகர்
(இ) எச்.எஸ். ஆல்காட்
(ஈ) அன்னி பெசண்ட்
The Home Rule Movement in South India was started by:
(a) B.P. Wadia
(b) Tilak
(c) H.S. Olcott
(d) Annie Besant
Show answer ▾ (ஈ) / (d) Annie Besant · Solved one-mark questions →
1 mark
20.
1951-ஆம் ஆண்டில் இந்தியாவில் எத்தனை பொதுத்துறை நிறுவனங்கள் செயல்பட்டன?
(அ) 6
(ஆ) 5
(இ) 225
(ஈ) 7
How many public sector enterprises were functioning in India in 1951?
(a) 6
(b) 5
(c) 225
(d) 7
Show answer ▾ (ஆ) / (b) 5 · Solved one-mark questions →
1 mark

பகுதி - II / PART - II

குறிப்பு : ஏதேனும் ஏழு வினாக்களுக்கு விடையளிக்கவும். வினா எண் 30 -க்கு கட்டாயம் விடையளிக்கவும்.
Note : Answer any seven questions. Question No. 30 is compulsory.
21.
இண்டிகோ கலகம் குறித்து குறிப்பு வரைக.
Write a note on Indigo Revolt.
2 marks
22.
தேசியம் என்றால் என்ன ?
What is Nationalism ?
2 marks
23.
தேசியவாதிகளால் ரௌலட் சட்டம் ஏன் எதிர்க்கப்பட்டது ?
Why was the Rowlatt Act opposed by the Nationalists ?
2 marks
24.
தனித் தொகுதி முறையினை பற்றி சிறு குறிப்பு எழுதுக.
Write a short note on separate Electorate.
2 marks
25.
இரவலர் சட்டங்கள் பற்றி விரிவாக எழுதுக.
Explain Poor Laws.
2 marks
26.
லாகூர் தீர்மானத்தின் முக்கியத்துவம் என்ன ?
What is the importance of Lahore Resolution ?
2 marks
27.
நட்சத்திர சேம்பர் உருவாக்கப்பட்டதன் நோக்கம் என்ன ? அது ஏன் அவ்வாறு அழைக்கப்பட்டது ?
What purpose did the Star Chamber serve and why was it called so ?
2 marks
28.
பாஸ்டன் தேநீர் விருந்து குறித்து நீங்கள் அறிந்ததென்ன ?
What do you know about the Boston Tea Party ?
2 marks
29.
பிரிட்டிஷ் இந்தியாவில் தீவிர தேசியவாதிகளின் மையமாக விளங்கிய தலைவர்களைக் கண்டறிக.
Identify the leaders of the epicenters of militant nationalism in British India.
2 marks
30.
'நீண்ட பயணம்' - குறிப்பு வரைக.
Write a short note on 'Long March'.
2 marks

பகுதி - III / PART - III

குறிப்பு : ஏதேனும் ஏழு வினாக்களுக்கு விடையளிக்கவும். அவற்றில் வினா எண் 40 -க்கு கட்டாயமாக விடையளிக்கவும்.
Note : Answer any seven questions. Question No. 40 is compulsory.
31.
டாடா இரும்பு எஃகு நிறுவனம் (TISCO) பற்றி குறிப்பு எழுதுக.
Write a short note on 'TISCO'.
3 marks
32.
பஞ்சசீலக் கொள்கையின் ஐந்து கோட்பாடுகளை விளக்குக.
Explain the five principles of Panch Sheel.
3 marks
33.
குத்தகை சீர்திருத்தங்களின் நோக்கங்கள் யாவை ?
What are the main objectives of the Tenancy reforms ?
3 marks
34.
மிக ஆபத்தான U-படகுகள் மற்றும் Q -கப்பல்கள் பற்றி நீவிர் அறிந்தது என்ன ?
What do you know of the fearsome U-boats and Q-ships ?
3 marks
35.
நேட்டோவைப் போல் ஏன் சீட்டோ (SEATO) பிரபலமடையவில்லை ?
Why SEATO was not so popular as NATO ?
3 marks
36.
வ.உ. சிதம்பரத்தின் சுதேசி இயக்க முயற்சிகள் குறித்து எழுதுக.
Write about the Swadeshi venture of V.O.C.
3 marks
37.
பூனா ஒப்பந்தத்தின் முக்கியத்துவம் யாது ?
What is the importance of Poona Pact ?
3 marks
38.
அமெரிக்கப் புரட்சியின் முக்கியத்துவத்தை பகுப்பாய்வு செய்க.
Analyse the significance of American Revolution.
3 marks
39.
1492 -ல் கொலம்பஸ் மேற்கொண்ட பயணம் பற்றி சிறு குறிப்பு வரைக.
Write a short note on 'The Voyage of Columbus in 1492'.
3 marks
40.
வங்கப் பிரிவினை பற்றி சிறு குறிப்பு வரைக.
Write a short note on 'Partition of Bengal'.
3 marks

பகுதி - IV / PART - IV

குறிப்பு : அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்.
Note : Answer all the questions.
41.
(அ)இந்திய நடுத்தர வர்க்கத்தில் மேற்கத்தியக் கல்வியின் தாக்கத்தையும் பின்னர் அது இந்தியச் சமூகத்தைச் சீர்திருத்தவும் மற்றும் மீட்டுருவாக்கம் செய்திடவும் ஆற்றிய பங்கினை விவாதிக்கவும்.
(a)Discuss the impact of Western education on Indian Middle Class, highlighting the latter's role in reforming and regenerating Indian Society.
அல்லது / OR
(ஆ)இராஜாஜி திட்டம் பற்றி ஒரு பத்தி எழுதுக.
(b)Write a paragraph about the Rajaji formula.
5 marks
42.
(அ)டாக்டர் அம்பேத்கரின் கல்விப்பணி குறித்து குறிப்பாக ஒடுக்கப்பட்ட மக்களின் சமூக நீதிக்காக அவரின் செயலூக்கத்தை முதன்மைப்படுத்தி விளக்குக.
(a)Sketch the educational career of Dr. B.R. Ambedkar with particular focus on his activism to secure Social Justice to the depressed classes.
அல்லது / OR
(ஆ)இந்திய விடுதலை இயக்க வரலாற்றில் கப்பற்படை கலகம் ஒரு சிறப்பான அத்தியாயம் என ஏன் கருதப்படுகிறது ?
(b)Why is the Royal Indian Navy Revolt considered a glorious chapter in the history of Indian National Movement ?
5 marks
43.
(அ)இந்திய வெளியுறவுக் கொள்கையின் அடிப்படைக் கோட்பாடுகள் யாவை ? அணிசேரா இயக்கத்தில் ஆப்பிரிக்கா ஆசிய நாடுகளை இணைத்ததில் பிரதமர் நேரு அவர்களின் பங்கினை விளக்குக.
(a)What were the basic principles of India's Foreign Policy ? What was the role of Prime Minister Nehru in organising the Afro-Asian Countries into a Non-Aligned Movement ?
அல்லது / OR
(ஆ)ஊரக மறுசீரமைப்பு தொடர்பாக இந்திய அரசு பின்பற்றிய நடவடிக்கைகளை முன்னிலைப்படுத்துக.
(b)Highlight the measures adopted by the Government of India towards rural reconstruction.
5 marks
44.
(அ)அமெரிக்க விடுதலைப் போருக்கான காரணங்கள், அதன் போக்கு, விளைவுகள் குறித்து விவாதிக்கவும்.
(a)Discuss the causes, course and results of the American War of Independence.
அல்லது / OR
(ஆ)பொருளாதாரப் பெருமந்தத்தின் போது தமிழ்நாட்டில் தொழில்துறை வளர்ச்சி பற்றி எழுதுக.
(b)Write about the Industrial Development in Tamil Nadu during the Depression.
5 marks
45.
(அ)உலகளாவிய பிரச்சனைகளை தீர்ப்பதில் ஐ.நா. சபையின் பங்கு பற்றி எழுதுக.
(a)Write about the role of UNO in resolving Global disputes.
அல்லது / OR
(ஆ)ஒருங்கிணைந்த ஜெர்மனியின் உண்மையான வடிவமைப்பாளர் பிஸ்மார்க்கே என ஏன் சொல்லப்படுகிறது ?
(b)Why is Bismarck considered the true architect of a unified Germany ?
5 marks
46.
(அ)முதல் உலகப்போரின் காரணங்களையும் விளைவுகளையும் கணக்கிடுக.
(a)Enumerate the causes and the consequences of the First World War.
அல்லது / OR
(ஆ)இந்திய தேசிய இயக்கம் நடைபெற்ற கீழ்க்கண்ட இடங்களை இந்திய வரைபடத்தில் குறிக்கவும்.
  1. கல்கத்தா
  2. நாக்பூர்
  3. டெல்லி
  4. தூத்துக்குடி
  5. காஷ்மீர்
(b)Mark the following places where Indian National Movement took place on the outline map of India.
  1. Calcutta
  2. Nagpur
  3. Delhi
  4. Tuticorin
  5. Kashmir
5 marks
47.
(அ)இரண்டாம் உலகப்போர் ஏற்பட ஜெர்மனியும், ஹிட்லரும் எந்த அளவிற்குக் காரணமானவர்கள் என்பதனை ஆய்ந்து கூறுக.
(a)Examine to what extent Germany and Hitler were responsible for the outbreak of Second World War.
அல்லது / OR
(ஆ)1900 முதல் 1930 வரையிலான இந்திய தேசிய இயக்கத்தின் ஏதேனும் ஐந்து நிகழ்வுகளை காலக்கோடு வரைந்து காட்டுக.
(b)Draw a time-line from 1900-1930 and mark any five important events of Indian National Movement.
5 marks
⬇️ Download PDF All History papers