பகுதி – I / PART – I
குறிப்பு : (i) அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும். (ii) கொடுக்கப்பட்டுள்ள நான்கு மாற்று விடைகளில் மிகவும் ஏற்புடைய விடையைத் தேர்ந்தெடுத்துக் குறியீட்டுடன் விடையினையும் சேர்த்து எழுதவும்.
Note : (i) Answer all the questions. (ii) Choose the most appropriate answer from the given four alternatives and write the option code and the corresponding answer.
1.
சுபாஷ் சந்திர போஸ் எந்த ஆண்டு காங்கிரஸிலிருந்து நீக்கப்பட்டார் ?
(அ) 1940
(ஆ) 1938
(இ) 1942
(ஈ) 1939
When was Subash Chandra Bose removed from the Congress ?
(a) 1940
(b) 1938
(c) 1942
(d) 1939
Show answer ▾
(ஈ) / (d) 1939 · Solved one-mark questions →1 mark
2.
பொருத்துக.
(1) இந்தோனேஷியா - (i) ஜவஹர்லால் நேரு
(2) எகிப்து - (ii) டிட்டோ
(3) யூகோஸ்லேவியா - (iii) கமால் அப்துல் நாசர்
(4) இந்தியா - (iv) சுகர்னோ
(அ) (1)-(ii), (2)-(i), (3)-(iv), (4)-(iii)
(ஆ) (1)-(iii), (2)-(iv), (3)-(i), (4)-(ii)
(இ) (1)-(iv), (2)-(iii), (3)-(i), (4)-(ii)
(ஈ) (1)-(iv), (2)-(iii), (3)-(ii), (4)-(i)
Match the following :
(1) Indonesia - (i) Jawaharlal Nehru
(2) Egypt - (ii) Tito
(3) Yugoslavia - (iii) Gamal Abdul Nasser
(4) India - (iv) Sukarno
(a) (1)-(ii), (2)-(i), (3)-(iv), (4)-(iii)
(b) (1)-(iii), (2)-(iv), (3)-(i), (4)-(ii)
(c) (1)-(iv), (2)-(iii), (3)-(i), (4)-(ii)
(d) (1)-(iv), (2)-(iii), (3)-(ii), (4)-(i)
Show answer ▾
(ஈ) / (d) (1)-(iv), (2)-(iii), (3)-(ii), (4)-(i) · Solved one-mark questions →1 mark
3.
இரு நாடு கொள்கையை முதன்முதலில் கொண்டு வந்தவர் :
(அ) முகமது இக்பால்
(ஆ) இராஜாஜி
(இ) சர் வாசிர் ஹசன்
(ஈ) ராம்சே மெக்டொனால்டு
The "Two Nation Theory" first came from :
(a) Mohammad Iqbal
(b) Rajaji
(c) Sir Wazir Hasan
(d) Ramsay MacDonald
Show answer ▾
(இ) / (c) Sir Wazir Hasan · Solved one-mark questions →1 mark
4.
பாஸ்டில் சிறை தகர்ப்பு __________ இல் நடந்தது.
(அ) 1789, நவம்பர் 11
(ஆ) 1789, ஜூன் 5
(இ) 1789, மே 1
(ஈ) 1789, ஜூலை 14
The storming of the Bastille happened on __________.
(a) November 11, 1789
(b) June 5, 1789
(c) May 1, 1789
(d) July 14, 1789
Show answer ▾
(ஈ) / (d) July 14, 1789 · Solved one-mark questions →1 mark
5.
கீழ்க்காண்பனவற்றுள் எந்நாடு மையநாடுகள் சக்தியில் அங்கம் வகிக்கவில்லை ?
(அ) துருக்கி
(ஆ) பல்கேரியா
(இ) மாண்டிநீக்ரோ
(ஈ) ஆஸ்திரிய - ஹங்கேரி
Which one of the following was not part of Central Powers ?
(a) Turkey
(b) Bulgaria
(c) Montenegro
(d) Austria - Hungary
Show answer ▾
(இ) / (c) Montenegro · Solved one-mark questions →1 mark
6.
கிளாஸ்நாஸ்ட் குறிப்பது :
(அ) சோவியத் ஐக்கிய பாராளுமன்றம் மறுகட்டமைப்புச் செய்யப்படுவதை
(ஆ) ஒளிவு மறைவற்ற வெளிப்படைத்தன்மையை
(இ) பொதுவுடைமைத் தத்துவத்திற்குப் புத்துயிர் அளிப்பதை
(ஈ) சோவியத் கம்யூனிச கட்சியை ஜனநாயகப்படுத்தப்படுவதை
Glasnost denotes __________.
(a) restructuring of the Soviet Federal Assembly
(b) transparency and openness
(c) reinventing Communism
(d) democratisation of Communist Party of Soviet Union
Show answer ▾
(ஆ) / (b) transparency and openness · Solved one-mark questions →1 mark
7.
பிராங்கோ - பிரஷ்யப் போர் உருவாகக் காரணமாக விளங்கியது __________ ஆகும்.
(அ) பிரேக் உடன்படிக்கை
(ஆ) காஸ்டெய்ன் மாநாடு
(இ) அல்சேஸ், லொரைன் பகுதிகளைக் கட்டுப்படுத்துவதில் எழுந்த சர்ச்சை
(ஈ) எம்ஸ் தந்தி
The Franco - Prussian war was triggered by :
(a) The treaty of Prague
(b) Convention of Gastein
(c) Dispute over the control of Alsace-Lorraine
(d) Ems telegram
Show answer ▾
(ஈ) / (d) Ems telegram · Solved one-mark questions →1 mark
8.
அகில இந்திய தொழிற்சங்க காங்கிரஸின் முதல் தலைவர் யார் ?
(அ) லாலா லஜபதிராய்
(ஆ) பி.பி. வாடியா
(இ) சி.ஆர். தாஸ்
(ஈ) ஜவஹர்லால் நேரு
Who was the First President of the All-India Trade Union Congress ?
(a) Lala Lajpat Rai
(b) B.P. Wadia
(c) C.R. Das
(d) Jawaharlal Nehru
Show answer ▾
(அ) / (a) Lala Lajpat Rai · Solved one-mark questions →1 mark
9.
கூற்று : ஆங்கில அரசாங்கம் தடையற்ற வணிகக் கொள்கையைப் பின்பற்றியது.
காரணம் : இங்கிலாந்தின் தடையற்ற வணிகக் கொள்கையினால் இந்தியா நன்மையை பெற்றது.
(அ) கூற்று சரி, காரணம் தவறு.
(ஆ) கூற்று சரி, ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை.
(இ) கூற்று, காரணம் இரண்டும் தவறு.
(ஈ) கூற்று சரி, காரணம் கூற்றை விளக்குகிறது.
Assertion (A) : The British Government pursued a policy of Free Trade (or) Laissez faire.
Reason (R) : India had comparative advantage from England's Free Trade Policy.
(a) (A) is correct and (R) is incorrect.
(b) (A) is correct but (R) does not explain (A).
(c) Both (A) and (R) are wrong.
(d) (A) is correct and (R) explains (A).
Show answer ▾
(அ) / (a) (A) is correct and (R) is incorrect. · Solved one-mark questions →1 mark
10.
பின்வருவனவற்றுள் எந்த ஒன்று சரியாகப் பொருந்தியுள்ளது ?
(அ) மிண்டோ பிரபு - பல்கலைகழகச் சட்டம், 1904
(ஆ) பங்கிம் சந்திர சாட்டர்ஜி - ஆனந்த மடம்
(இ) தீவிர தேசியவாத மையம் - சென்னை
(ஈ) G. சுப்ரமணியம் - விடிவெள்ளிக் கழகம்
Which one of the following is correctly paired ?
(a) Lord Minto - The University Act of 1904
(b) Bankim Chandra Chatterjee - Anand math
(c) Epicentre of militant Nationalism - Madras
(d) G. Subramaniam - Dawn Society
Show answer ▾
(ஆ) / (b) Bankim Chandra Chatterjee - Anand math · Solved one-mark questions →1 mark
11.
பின்வருவோரில் கான்பூர் சதி வழக்கில் கைது செய்யப்பட்டவர் யார் ?
(அ) எஸ்.ஏ. டாங்கே
(ஆ) எம்.என். ராய்
(இ) ராம் பிரசாத் பிஸ்மில்
(ஈ) பகத் சிங்
Who among the following was arrested in the Kanpur conspiracy case ?
(a) S.A. Dange
(b) M.N. Roy
(c) Ram Prasad Bismil
(d) Bhagat Singh
Show answer ▾
(அ) / (a) S.A. Dange · Solved one-mark questions →1 mark
12.
தொழிற்புரட்சி முதன்முதலாக எங்கு தோன்றியது ?
(அ) பிரான்சு
(ஆ) அமெரிக்கா
(இ) ஜெர்மனி
(ஈ) இங்கிலாந்து
The Industrial Revolution started first in :
(a) France
(b) America
(c) Germany
(d) England
Show answer ▾
(ஈ) / (d) England · Solved one-mark questions →1 mark
13.
பின்வரும் நிகழ்வுகளின் சரியான வரிசையைத் தேர்வு செய்க.
(i) இந்திய தேசிய இராணுவம் மீதான விசாரணை
(ii) நேரடி நடவடிக்கை நாள்
(iii) ஆகஸ்ட் கொடை
(iv) தனிநபர் சத்தியாகிரகம்
(அ) (iii), (iv), (i), (ii)
(ஆ) (i), (ii), (iii), (iv)
(இ) (i), (iii), (iv), (ii)
(ஈ) (iii), (i), (ii), (iv)
Which is the correct sequence of the following events ?
(i) I.N.A. Trial
(ii) Direct Action Day
(iii) August offer
(iv) Individual Sathyagraha
(a) (iii), (iv), (i), (ii)
(b) (i), (ii), (iii), (iv)
(c) (i), (iii), (iv), (ii)
(d) (iii), (i), (ii), (iv)
Show answer ▾
(அ) / (a) (iii), (iv), (i), (ii) · Solved one-mark questions →1 mark
14.
“சுயராஜ்யம் எனது பிறப்புரிமை, அதை அடைந்தே தீருவேன்” - எனக் கூறியவர் :
(அ) சுபாஷ் சந்திர போஸ்
(ஆ) பால கங்காதர திலகர்
(இ) பாரதியார்
(ஈ) தாதாபாய் நௌரோஜி
"Swaraj is my birth right and I shall have it" was said by :
(a) Subash Chandra Bose
(b) Bala Gangadhar Tilak
(c) Bharathi
(d) Dadabhai Naoroji
Show answer ▾
(ஆ) / (b) Bala Gangadhar Tilak · Solved one-mark questions →1 mark
15.
அரசமைப்பு நிர்ணயச் சபையில் குறிக்கோள் தீர்மானங்களைக் கொண்டு வந்தவர் :
(அ) வல்லபாய் படேல்
(ஆ) இராஜேந்திர பிரசாத்
(இ) மௌலானா அபுல் கலாம் ஆசாத்
(ஈ) ஜவஹர்லால் நேரு
The objectives Resolution before the Constituent Assembly was placed by :
(a) Vallabh bhai Patel
(b) Rajendra Prasad
(c) Maulana Abul Kalam Azad
(d) Jawaharlal Nehru
Show answer ▾
(ஈ) / (d) Jawaharlal Nehru · Solved one-mark questions →1 mark
16.
1923 -இல் மோதிலால் நேரு மற்றும் சி.ஆர். தாஸ்-ஆல் தோற்றுவிக்கப்பட்ட கட்சியின் பெயர் என்ன ?
(அ) சுதந்திரா கட்சி
(ஆ) சுயராஜ்ய கட்சி
(இ) கம்யூனிஸ்ட் கட்சி
(ஈ) கதார் கட்சி
What was the name of the Party formed by Motilal Nehru and C.R. Das in 1923 ?
(a) Swatantra Party
(b) Swaraj Party
(c) Communist Party
(d) Ghadar Party
Show answer ▾
(ஆ) / (b) Swaraj Party · Solved one-mark questions →1 mark
17.
ஜப்பானிய கடற்படையை அமெரிக்க ஐக்கிய நாட்டின் கடற்படை தோற்கடித்தமை __________ போரிலாகும்.
(அ) எல் அலாமின்
(ஆ) பிரிட்டன்
(இ) மிட்வே
(ஈ) குவாடல்கனல்
The US navy defeated the Japanese navy in the Battle of :
(a) El Alamein
(b) Britain
(c) Midway
(d) Guadalcanal
Show answer ▾
(இ) / (c) Midway · Solved one-mark questions →1 mark
18.
பின்வரும் எந்த ஒன்று சரியாகப் பொருந்தவில்லை ?
(அ) சுயமரியாதை இயக்கம் - ஈ.வெ.ரா. பெரியார்
(ஆ) பஞ்சாப் துணை ஆளுநர் - ரெஜினால்டு டையர்
(இ) சத்தியாகிரக சபை - ரௌலட் சட்டம்
(ஈ) தலித்-பகுஜன் இயக்கம் - டாக்டர். அம்பேத்கர்
Which of the following is not correctly paired ?
(a) Self Respect Movement - Periyar E.V.R
(b) Lt. Governor of Punjab - Reginald Dyer
(c) Sathyagraha Sabha - Rowlatt Act
(d) Dalit-Bahujan Movement - Dr. Ambedkar
Show answer ▾
(ஆ) / (b) Lt. Governor of Punjab - Reginald Dyer · Solved one-mark questions →1 mark
19.
கீழ்க்கண்டவற்றில் எது லியானர்டோ டாவின்சியின் ஓவியம் இல்லை ?
(அ) மோனலிசா
(ஆ) வர்ஜின் ஆஃப் தி ராக்ஸ்
(இ) மடோனாவும் குழந்தையும்
(ஈ) இறுதி விருந்து
Which one of the following was not the work of Leonardo da Vinci ?
(a) Mona Lisa
(b) Virgin of the Rocks
(c) Madonna and Child
(d) Last Supper
Show answer ▾
(இ) / (c) Madonna and Child · Solved one-mark questions →1 mark
20.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புச் சட்டம் எந்த ஆண்டு நிறைவேற்றப்பட்டது ?
(அ) 2007
(ஆ) 2005
(இ) 2008
(ஈ) 2006
In which year Mahatma Gandhi National Rural Employment Guarantee Act was passed ?
(a) 2007
(b) 2005
(c) 2008
(d) 2006
Show answer ▾
(ஆ) / (b) 2005 · Solved one-mark questions →1 mark
பகுதி – II / PART – II
குறிப்பு : ஏதேனும் ஏழு வினாக்களுக்கு விடையளிக்கவும். வினா எண் 30 -க்கு கட்டாயம் விடையளிக்கவும்.
Note : Answer any seven questions. Question No. 30 is compulsory.
21.
இந்திய தேசிய காங்கிரசுக்கு முன்னர் தொடங்கப்பட்ட அமைப்புகளின் பட்டியலை தயார் செய்க.
Make a list of the important political associations formed in India prior to the Indian National Congress.
2 marks
22.
தீவிர தேசியவாதம் 1908 -க்குப் பின்னர் ஏன் குறைந்தது ?
Why did militant nationalism decline by 1908 ?
2 marks
23.
பகிஷ்கிரித் ஹிதகர்னி சபா குறித்து எழுதுக.
Write about Bahishkrit Hitakarini Sabha.
2 marks
24.
கேப்டன் மோகன்சிங் எவ்வாறு இந்திய தேசிய இராணுவத்தை ஏற்படுத்தினார் ?
How did Captain Mohan Singh organise the INA ?
2 marks
25.
இணைப்புறுதி ஆவணம் பற்றி எழுதுக.
Write about instrument of Accession.
2 marks
26.
நாடு விடுதலை அடைந்த போது இந்தியப் பொருளாதாரத்தின் நிலை என்ன ?
Give an account of the condition of the Indian Economy at the time of Independence.
2 marks
27.
கிறித்தவ சீர்திருத்த இயக்கத்துக்கு எராஸ்மஸ் எவ்வாறு வழியமைத்தார் ?
How did Erasmus pave the way for Christian Reformation ?
2 marks
28.
ஜட்லாந்துப் போரின் முக்கியத்துவம் பற்றி எடுத்தியம்புக.
Point out the importance of Battle of Jutland.
2 marks
29.
பேர்ல் துறைமுகத்தை ஜப்பான் தாக்கியதன் முக்கியத்துவத்தை முன்னிலைப்படுத்தி எழுதுக.
Highlight the importance of Japan's attack on Pearl Harbour.
2 marks
30.
‘மூன்றாம் உலக நாடுகள்’ பற்றி சுருக்கமாக எழுதவும்.
Write a short note about ‘Third World Countries’.
2 marks
பகுதி – III / PART – III
குறிப்பு : ஏதேனும் ஏழு வினாக்களுக்கு விடையளிக்கவும். அவற்றில் வினா எண் 40 -க்கு கட்டாயமாக விடையளிக்கவும்.
Note : Answer any seven questions. Question No. 40 is compulsory.
31.
இந்திய நிர்வாகச் செலவின விவரங்களைக் கூறுக.
What were the items which constituted Home Charges ?
3 marks
32.
கலெக்டர் ஆஷ் ஏன் வாஞ்சிநாதனால் கொல்லப்பட்டார் ?
Why was Collector Ashe killed by Vanchinathan ?
3 marks
33.
சென்னை தொழிற்சங்கத்தின் முக்கியத்துவம் என்ன ?
What was the significance of the Madras Labour Union ?
3 marks
34.
சிட்டகாங் ஆயுதப்படைத் தாக்குதலை நடத்த சூரியாசென் எவ்வாறு திட்டமிட்டார் ?
How did Surya Sen organise the Chittagong Armoury Raid ?
3 marks
35.
1921 -இல் நடைபெற்ற மலபார் கலகத்தைப் பற்றிய காந்தியடிகளின் கருத்து என்ன ?
How did Gandhi view the Malabar Rebellion of 1921 ?
3 marks
36.
1909 -ஆம் ஆண்டின் மின்டோ-மார்லி சீர்திருத்தங்களின் முக்கியத்துவத்தைக் கூறுக.
State the importance of Minto-Morley reforms of 1909.
3 marks
37.
தொழிற்புரட்சியின் இரண்டாம் கட்டத்தில் ஜெர்மனியில் நடந்தது என்ன ?
What happened in Germany during the second phase of Industrial Revolution ?
3 marks
38.
தனது தொழிற்சாலையில் பணியிலிருந்த ஊழியர்களின் முன்னேற்றத்திற்கு இராபர்ட் ஓவன் மேற்கொண்ட முன்னோடி தன்மையிலான நடவடிக்கைகள் யாவை ?
What was the pioneering work done by Robert Owen in improving the condition of workers in his factories ?
3 marks
39.
சூயஸ் கால்வாய் சிக்கல் குறித்து சுருக்கமாக எழுதுக.
Give a short account of Suez Canal Crisis.
3 marks
40.
வேதாரண்யம் உப்பு சத்தியாகிரகம் பற்றிய ஏதேனும் மூன்று முக்கிய குறிப்புகளைத் தருக.
Write any three important points about Vedaranyam Salt Satyagraha.
3 marks
பகுதி – IV / PART – IV
குறிப்பு : அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்.
Note : Answer all the questions.
41.
(அ)பிரிட்டிஷ் இந்தியாவில் தேசிய உணர்வு தோன்றக் காரணமான சமூகப்-பொருளாதாரக் காரணிகளை ஆய்க.
(a)Examine the Socio-Economic causes for the rise of nationalism in British India.
அல்லது / OR
(ஆ)திலகர் மற்றும் அன்னிபெசன்ட் ஆகியோரின் கீழ் துவங்கப்பட்ட தன்னாட்சி இயக்கங்களின் செயல்பாடுகளை விளக்குக.
(b)Narrate the work done by two Home Rule Movements one under Tilak and another under Annie Besant.
5 marks
42.
(அ)தமிழ்நாட்டில் சுதேசி இயக்கத்தின் செயல்பாடுகள் குறித்து எழுதுக.
(a)Write an account of Swadeshi Movement in Tamil Nadu.
அல்லது / OR
(ஆ)பகத்சிங்கின் புரட்சிகர தேசியவாதம் மற்றும் புரட்சிகர நடவடிக்கைகள் எவ்வாறு அவரைத் தூக்கு மேடைக்கு இட்டுச் சென்றது ?
(b)How Bhagat Singh's radical strand of nationalism, and his revolutionary activism led to his hanging ?
5 marks
43.
(அ)வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் போக்கினை விவாதிக்கவும்.
(a)Discuss the course of the Quit India Movement.
அல்லது / OR
(ஆ)1920 முதல் 1956 வரை இந்திய மாநிலங்கள் மறுசீரமைக்கப்பட்டதின் பல்வேறு நிலைகளைக் கண்டறிக.
(b)Trace the different stages in the reorganization of Indian States from 1920 to 1956.
5 marks
44.
(அ)சுதந்திர இந்தியாவில் ஏற்பட்ட கல்வி முன்னேற்றம் குறித்து ஓர் கட்டுரை வரைக.
(a)Write an essay about the educational progress made in Independent India.
அல்லது / OR
(ஆ)இத்தாலி மறுமலர்ச்சிக்கு பிளாரன்ஸ் நகர மக்கள் ஆற்றிய பங்களிப்பை ஆராயவும்.
(b)Analyse the contributions of Florentines to Italian Renaissance.
5 marks
45.
(அ)பாஸ்டில் சிறை தகர்ப்பு முதல் ரோபாஸ்பியர் கொல்லப்பட்டது வரையிலான பிரெஞ்சுப் புரட்சியின் போக்கை வரைக.
(a)Sketch the course of French Revolution from the storming of Bastille to the execution of Robespierre.
அல்லது / OR
(ஆ)இத்தாலிய இணைவு எவ்வாறு சாத்தியமாக்கப்பட்டது ?
(b)How was the unification of Italy achieved ?
5 marks
46.
(அ)
இந்திய தேசிய இயக்கத்துடன் தொடர்புடைய கீழ்கண்ட இடங்களை இந்திய வரைபடத்தில் குறிக்கவும்.
- அமிர்தசரஸ்
- சௌரி சௌரா
- அகமதாபாத்
- தண்டி
- வேதாரண்யம்
(a)
Mark the following places where Indian National Movement took place on the outline map of India.
- Amritsar
- Chauri - Chaura
- Ahmedabad
- Dandi
- Vedaranyam
அல்லது / OR
(ஆ)ஆங்கிலேயர்களின் பிரித்தாளும் கொள்கை இந்திய தேசியத்தில் ஏற்படுத்திய தாக்கம் என்ன ?
(b)How did the Divide and Rule policy of the British impact on Indian nationalism ?
5 marks
47.
(அ)1920 முதல் 1940 வரையிலான இந்திய தேசிய இயக்கத்தின் ஏதேனும் ஐந்து முக்கிய நிகழ்வுகளை காலக்கோடு வரைந்து காட்டுக.
(a)Draw a time line from 1920 - 1940 and mark any five important events of Indian National Movement.
அல்லது / OR
(ஆ)அரபு-இஸ்ரேலிய முரண்பாட்டின் தோற்றத்தை விவாதித்து, தொடர்ந்து ஏற்பட்ட நிகழ்வுகள் எவ்வாறு இரு நாடுகளுக்கிடையே 1967 -இல் பெரும் போர் ஏற்படக் காரணமாயிற்று என்பதை விளக்கவும்.
(b)Discuss the origin of Arab - Israeli conflict and show how subsequent developments caused a major war between the two in 1967 ?
5 marks