TN Online TestSamacheer Kalvi practice

12th Standard Home Science Question Paper March 2023

Paper code 6666 70 marks 180 minutes

The complete March 2023 public exam paper exactly as printed: every question in Tamil and English. Download the PDF, or take Part I as a free online test.

மனையியல் / Home Scienceமார்ச் 2023 · March 2023

பகுதி – I / PART – I

குறிப்பு : (i) அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும். (ii) கொடுக்கப்பட்டுள்ள மாற்று விடைகளில் மிகவும் ஏற்புடைய விடையைத் தேர்ந்தெடுத்துக் குறியீட்டுடன் விடையினையும் சேர்த்து எழுதவும்.
Note : (i) Answer all the questions. (ii) Choose the most appropriate answer from the given four alternatives and write the option code and the corresponding answer.
1.
_____ என்பது அசாதாரண நிலையில் சிறுநீரில் இரத்தம் வெளியேறுவது ஆகும்.
(அ) ஹீமட்டூரியா
(ஆ) ஆலிக்யூரியா
(இ) அனுரியா
(ஈ) புரோட்டீனுரியா
_____ is the abnormal presence of blood in the urine.
(a) Hematuria
(b) Oliguria
(c) Anuria
(d) Proteinuria
Show answer ▾ (அ) / (a) Hematuria · Solved one-mark questions →
1 mark
2.
_____ அதிக நார்ச்சத்து கொண்டது.
(அ) ஆரஞ்சு பழம்
(ஆ) மாம்பழம்
(இ) திராட்சை பழம்
(ஈ) கொய்யாப்பழம்
_____ has a high fibre content.
(a) Orange
(b) Mango
(c) Grapes
(d) Guava
Show answer ▾ (ஈ) / (d) Guava · Solved one-mark questions →
1 mark
3.
ஒருவருக்கு காய்ச்சல் ஏற்படும்போது அதிக கலோரி கொண்ட உணவு பரிந்துரைக்கப்படுகிறது. அதற்கான காரணமானது உடல் வெப்பநிலை ஒவ்வொரு செல்சியஸ் (degree Celsius) அதிகரிக்கும் போதும் _____ அடிப்படை வளர்சிதை மாற்றத்தின் விகிதம் அதிகரிக்கிறது.
(அ) 10%
(ஆ) 13%
(இ) 1%
(ஈ) 7%
When a person suffers from fever a high calorie diet is prescribed. Because the Basal Metabolic Rate is increased by _____ for every degree Celsius rise in body temperature.
(a) 10%
(b) 13%
(c) 1%
(d) 7%
Show answer ▾ (ஆ) / (b) 13% · Solved one-mark questions →
1 mark
4.
நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட ஆண்டு __________.
(அ) 1996
(ஆ) 1987
(இ) 1976
(ஈ) 1986
Consumer Protection Act came into force in the year __________.
(a) 1996
(b) 1987
(c) 1976
(d) 1986
1 mark
5.
உணவை தேர்ந்தெடுப்பது பின்வரும் _____ ஐ சார்ந்தது.
(அ) பண வசதி
(ஆ) ஊட்டச்சத்து தேவைகள்
(இ) விருப்பு வெறுப்புகள்
(ஈ) மேற்கூறிய அனைத்தும்
Selection of food depends on :
(a) Availability of money
(b) Nutritional requirements
(c) Likes and dislikes
(d) All of the above
Show answer ▾ (ஈ) / (d) All of the above · Solved one-mark questions →
1 mark
6.
பாலியஸ்டர் குறிக்கப்படும் விதம் :
(அ) மரக்கூழ் அசிடேட்
(ஆ) டூபான்ட்
(இ) அக்ரிலிக்
(ஈ) வொர்க்ஹோஸ்
Polyester is referred to as :
(a) cellulose acetate
(b) dupont
(c) acrylic
(d) work hose
Show answer ▾ (ஈ) / (d) work hose · Solved one-mark questions →
1 mark
7.
மனிதனின் 'நெருங்கிய தோழன்' என்று அழைக்கப்படுவது _____ ஆகும்.
(அ) பருத்தி
(ஆ) பட்டு
(இ) நைலான்
(ஈ) கம்பளி
_____ is called as Man's best friend.
(a) Cotton
(b) Silk
(c) Nylon
(d) Wool
Show answer ▾ (ஈ) / (d) Wool · Solved one-mark questions →
1 mark
8.
பொருளின் பகுதிப் பொருட்களை இலவசமாக அளித்து சேவைக்கான பணத்தை நுகர்வோரிடமிருந்து பெறுவது _____ ஆகும்.
(அ) ஐ.எஸ்.ஐ
(ஆ) பொறுப்புறுதி
(இ) ஐ.எஸ்.ஓ
(ஈ) உத்திரவாதம்
_____ provides free spare parts but service charges are collected from the customer.
(a) ISI
(b) Warranty
(c) ISO
(d) Guarantee
Show answer ▾ (ஆ) / (b) Warranty · Solved one-mark questions →
1 mark
9.
_____ என்பது ஜப்பானிய முறை மலர் அலங்காரம் ஆகும்.
(அ) நவீன அமைப்பு
(ஆ) பாரம்பரிய முறை
(இ) மிதக்கும் அமைப்பு
(ஈ) இக்கிபானா அமைப்பு
_____ is the Japanese art of flower arrangement.
(a) The modern style
(b) The traditional style
(c) Floating arrangement
(d) Ikebana style
Show answer ▾ (ஈ) / (d) Ikebana style · Solved one-mark questions →
1 mark
10.
வீட்டில் சமையலறையை _____ மூலையில் வைப்பது சிறந்தது.
(அ) வடக்கு
(ஆ) கிழக்கு
(இ) தெற்கு
(ஈ) மேற்கு
The best location for kitchen will be _____ corner of the house.
(a) North
(b) East
(c) South
(d) West
Show answer ▾ (ஆ) / (b) East · Solved one-mark questions →
1 mark
11.
நிரந்தர பதிவு சான்றிதழ் _____ லிருந்து பெறப்படுகிறது.
(அ) NSIC
(ஆ) SSI
(இ) SIDCO
(ஈ) DIC
Permanent Registration Certificate is obtained from :
(a) NSIC
(b) SSI
(c) SIDCO
(d) DIC
Show answer ▾ (ஈ) / (d) DIC · Solved one-mark questions →
1 mark
12.
பகல் நேர பராமரிப்பு என்பது _____ குழந்தைகளுக்கு அளிக்கப்படும் பராமரிப்பாகும்.
(அ) அப்பா இல்லாதபோது
(ஆ) பெற்றோர் இல்லாதபோது
(இ) அம்மா இல்லாதபோது
(ஈ) மேற்கூறிய அனைத்தும்
Day care means care provided to children _____.
(a) In the absence of father
(b) In the absence of parents
(c) In the absence of mother
(d) All the above
Show answer ▾ (ஆ) / (b) In the absence of parents · Solved one-mark questions →
1 mark
13.
தொழில் முனைவோரால் ஆய்வு செய்யும் நிறைவு மேலாண்மை செயல்பாடு _____.
(அ) திட்டமிடுதல்
(ஆ) ஒருங்கிணைத்தல்
(இ) இயக்குதல்
(ஈ) கட்டுப்படுத்துதல்
The last management function to be studied by entrepreneurs _____.
(a) Planning
(b) Organizing
(c) Directing
(d) Controlling
Show answer ▾ (ஈ) / (d) Controlling · Solved one-mark questions →
1 mark
14.
குறுக்காக குவியலிடுதல் மூலம் __________ கிடைக்கும்.
(அ) எளிதாக கண்டுபிடித்தல்
(ஆ) தண்ணீர் ஓட்டம்
(இ) நல்ல வெளிச்சம்
(ஈ) காற்றோட்டம்
Cross stacking during storage helps in :
(a) Easy identification
(b) Water flow
(c) Good ventilation
(d) Air circulation
1 mark
15.
_____ உலக நீர் தினமாகக் கொண்டாடப்படுகிறது.
(அ) 12 ஆகஸ்ட்
(ஆ) 2 மார்ச்
(இ) 22 மார்ச்
(ஈ) 22 செப்டம்பர்
_____ is celebrated as World Water day.
(a) 12 August
(b) 2 March
(c) 22 March
(d) 22 September
Show answer ▾ (இ) / (c) 22 March · Solved one-mark questions →
1 mark

பகுதி – II / PART – II

குறிப்பு : ஏதேனும் ஆறு வினாக்களுக்கு விடையளிக்கவும். வினா எண் 24 –க்கு கட்டாயம் விடையளிக்கவும்.
Note : Answer any six questions. Question number 24 is Compulsory.
16.
காய்ச்சலை ஏற்படுத்தும் ஏதேனும் இரண்டு வெளிப்புற காரணிகளைப் பட்டியலிடுக.
List any two exogenous agents that cause fever.
2 marks
17.
கட்டுகட்டுதல் என்றால் என்ன ?
What is meant by packaging ?
2 marks
18.
உணவுக் கலப்படம் என்றால் என்ன ?
What is food adulteration ?
2 marks
19.
நைலானின் சில பயன்களைக் கூறுக.
Give some uses of nylon fabrics.
2 marks
20.
பல்வேறு வகை கோடுகள் பற்றி எழுதுக.
Write about the various types of lines.
2 marks
21.
மலர் அலங்காரத்திற்கு பயன்படும் பொருட்கள் யாவை ?
What are the materials used in flower arrangement ?
2 marks
22.
முன்பள்ளி கட்டிட அமைப்பின் தேவைகள் யாவை ?
What are the components of Pre-school site ?
2 marks
23.
தொழில் முனைவு – வரையறுக்கவும்.
Define Entrepreneurship.
2 marks
24.
நில நிரப்புதல் கழிவு நீக்கம் முறையில் உள்ள ஏதேனும் இரண்டு குறைபாடுகளை எழுதுக.
Write any two disadvantages of Landfill waste disposal method.
2 marks

பகுதி – III / PART – III

குறிப்பு : ஏதேனும் ஆறு வினாக்களுக்கு விடையளிக்கவும். அவற்றில் வினா எண் 33 –க்கு கட்டாயம் விடையளிக்கவும்.
Note : Answer any six questions. Question number 33 is Compulsory.
25.
சிர்ரோஸிஸின் அடையாளங்கள் மற்றும் அறிகுறிகளை எழுதுக.
List the signs and symptoms of cirrhosis.
3 marks
26.
சைவ மற்றும் அசைவ குறியீடு – வேறுபடுத்துக.
Differentiate Vegetarian and Non-vegetarian mark.
3 marks
27.
பாட்டுலிசம் – சிறு குறிப்பு வரைக.
Write short notes on Botulism.
3 marks
28.
கறைகளை அகற்றிட வீட்டில் பின்பற்றப்படும் ஏதேனும் மூன்று எளிய வழிமுறைகளை எழுதுக.
Write any three simple stain removal procedures followed at home.
3 marks
29.

கீழ்வரும் நிறப் பொருத்தங்களை விளக்குக.
(அ) தனி நிறப் பொருத்தம்
(ஆ) அருகாமை நிறப் பொருத்தம்
(இ) எதிர் நிறப் பொருத்தம்

Give an account of the following colour schemes.
(a) Monochromatic colour scheme.
(b) Analogous colour scheme.
(c) Complementary colour scheme.

3 marks
30.
நர்சரி பள்ளியில் வலியுறுத்தப்படும் கருத்துக்களை பட்டியலிடுக.
List the emphasis focussed in nursery school.
3 marks
31.
குடிசைத் தொழிலின் பண்புகள் யாவை ?
What are the characteristics of Cottage Industry ?
3 marks
32.
மண்புழு உரம் என்றால் என்ன ? அதன் நன்மைகளை எழுதுக.
What is Vermicomposting ? Write its benefits.
3 marks
33.

பின்வருவனவற்றுள் சமையலறை/மாடித்தோட்டத்தில் வளர்க்கக்கூடிய தாவரத்தைக் கண்டறிந்து அதன் மருத்துவப் பயன்கள் எவையேனும் இரண்டினை எழுதுக.
(அ) புதினா (ஆ) பலாப்பழம் (இ) தேங்காய்

Find the plants that can be grown on Terrace/Kitchen garden and mention any two medical uses of it.
(a) Mint (b) Jack fruit (c) Coconut

3 marks

பகுதி – IV / PART – IV

குறிப்பு : அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்.
Note : Answer all the questions.
34.
(அ)CVD -யின் ஆபத்துக் காரணிகளை எழுதுக.
(a)Write on the risk factors for CVD.
அல்லது / OR
(ஆ)இந்தியாவில் பயன்படுத்தப்படும் கட்டுகட்டுதல் பொருட்களின் வகைகளை விளக்குக.
(b)Explain the types of packaging materials used in India.
5 marks
35.
(அ)கலையின் மூலப்பொருட்களை விளக்குக.
(a)Explain the various elements of art.
அல்லது / OR
(ஆ)பல்வேறு வகையான நேரடி அச்சிடும் முறைகளை விவாதிக்கவும்.
(b)Discuss the different types of Direct printing methods.
5 marks
36.
(அ)முன் பள்ளியில் பராமரிக்கப்பட வேண்டிய பதிவு மற்றும் பதிவேடுகளை விவரிக்கவும்.
(a)List the records and registers to be maintained in a pre-school.
அல்லது / OR
(ஆ)பாரம்பரிய உணவுகள் என்றால் என்ன ? ஏதேனும் மூன்று மாவட்ட பாரம்பரிய உணவுகள் பற்றி விவரிக்கவும்.
(b)What are the traditional foods ? Describe the traditional cuisine in any of the three districts.
5 marks
37.
(அ)HACCP -யின் படிகள் யாவை ?
(a)What are the steps in HACCP ?
அல்லது / OR
(ஆ)பவித்ரா குள்ளமாகவும் மற்றும் குண்டாகவும் இருக்கிறாள். அவள் எவ்வகையான கோடுகள் கொண்ட உடையை தேர்வு செய்து அணிந்தால் உயரத்தை சரி செய்து காட்ட முடியும் ? விளக்குக.
(b)Pavithra is short and obese. What type of lines should she choose in her dress to overcome height ? Explain.
5 marks
38.
(அ)தரையலங்காரம் – வரையறு மற்றும் அதன் வகைகளைப் பட்டியலிடுக. ஏதேனும் ஒரு தரையலங்கார வகையை வரைந்து விவரிக்கவும்.
(a)Define and list out the types of Floor Decoration. Draw and explain any one of them.
அல்லது / OR
(ஆ)இயற்கை உணவு – வரையறுக்கவும். தனிமனிதனின் ஆரோக்கியம் மற்றும் சமுதாயத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சியை மேம்படுத்துவதில் இயற்கை உணவுகள் எவ்வாறு உதவுகிறது ?
(b)Define organic food. How do organic foods help in enhancing the health of an individual and overall development of the community ?
5 marks
⬇️ Download PDF All Home Science papers