TN Online TestSamacheer Kalvi practice

TNPSC Group 2 General Tamil September 2024: MCQs with Answers

100 MCQs 300 marks 180 minutes Paper code CCSE-II
Share this chapter: Telegram

The 100 one-mark questions from the September 2024 TNPSC Group 2 General Tamil public exam, in paper order, with the correct option marked and a short explanation.

Answer key at a glance

Take online test →
Q101
நிழல்போலத் தொடர்ந்தான் – இது எவ்வகை உவமை?
  • A. வினை உவமை
  • B. பயன் உவமை
  • C. வடிவ உவமை
  • D. உரு உவமைCorrect
Explanation. தேர்வாணையத்தின் தற்காலிக விடைக்குறிப்பு இதனை உரு உவமை எனக் குறிக்கிறது. நிழல் பிரியாமல் உடன்வரும் தன்மையை உவமையாக்கிக் காட்டுகிறது.
Chapter: Grammar
Q102
பின்வரும் உவமையின் பொருத்தமான பொருளைத் தெரிவு செய்க.
எடுப்பார் கைப்பிள்ளை
  • A. எதையும் கேட்காதவர்
  • B. எடுத்து வளர்ப்பவரின் பிள்ளை
  • C. யார் எதைச் சொன்னாலும் கேட்டு நடப்பவர்Correct
  • D. எடுத்து வளர்ப்பவரின் சொல்லைக் கேட்பவர்
Explanation. யார் தூக்கினாலும் அவர் பக்கம் செல்லும் குழந்தையைப் போல, யார் எதைச் சொன்னாலும் தானே சிந்திக்காமல் அதன்படி நடப்பவரை 'எடுப்பார் கைப்பிள்ளை' என்பர்.
Chapter: Reading Comprehension
Q103
'அப்துல் நேற்று வருவித்தான்'. எவ்வகை வாக்கியம் என்பதை கண்டறிக.
  • A. எதிர்மறைவினை
  • B. பிறவினைCorrect
  • C. தன்வினை
  • D. உடன்பாட்டுவினை
Explanation. 'வருவித்தான்' என்பது பிறரை வரச் செய்ததைக் குறிக்கும்; எழுவாய் பிறரைக் கொண்டு வினையை நிகழ்த்துவதால் இது பிறவினை வாக்கியம்.
Chapter: Writing Skill
Q104
மாணாக்கர்களே! உங்களுக்குச் சீருடை இல்லையோ? என்ன வகை வினா என்பதைக் கண்டறிக.
  • A. ஏவல்வினா
  • B. ஐயவினா
  • C. கொளல்வினா
  • D. கொடைவினாCorrect
Explanation. சீருடை இல்லாதவர்களுக்குக் கொடுக்கும் நோக்கத்துடன் கேட்கப்படுவதால் இது கொடைவினா ஆகும்.
Chapter: Grammar
Q105
பின்வரும் விடைக்கேற்ற வினாவினை தேர்ந்தெடுத்து எழுதுக.
பரிவாதினி என்னும் வீணை பல்லவ மன்னன் மகேந்திரவர்மன் காலத்தில் இருந்ததாகக் கூறப்படுகிறது.
  • A. பரிவாதினி என்னும் வீணை மகேந்திரவர்மன் காலத்தில் இருந்ததாகக் கூறப்படுகிறதா?
  • B. பரிவாதினி என்னும் வீணை பல்லவ மன்னன் மகேந்திரவர்மன் காலத்தில் இருந்ததா?
  • C. பல்லவ மன்னன் மகேந்திரவர்மன் காலத்தில் வீணை இருந்ததா?
  • D. பல்லவ மன்னன் மகேந்திரவர்மன் காலத்தில் இருந்ததாகக் கூறப்படும் வீணை எது?Correct
Explanation. விடையில் உள்ள புதிய செய்தி 'பரிவாதினி' என்ற வீணையின் பெயர்; அதைக் கேட்கும் வினா 'கூறப்படும் வீணை எது?' என்பதே.
Chapter: Writing Skill
Q106
பின்வரும் சொல்லின் இலக்கணக் குறிப்பு – 'உணர்த்தினென்'.
  • A. இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்கத் தொகை
  • B. தன்மை பன்மை வினைமுற்று
  • C. தன்மை ஒருமை வினைமுற்றுCorrect
  • D. பண்புத்தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித் தொகை
Explanation. 'என்' விகுதி தன்மை ஒருமையைக் குறிக்கும்; 'உணர்த்தினென்' என்பது 'நான் உணர்த்தினேன்' என்னும் பொருளுடைய தன்மை ஒருமை வினைமுற்று.
Chapter: Grammar
Q107
முறையான தொடர் அமைப்பினைக் குறிப்பிடுக.
  • A. தமிழர்களின் வீரவிளையாட்டு தொன்மையான ஏறுதழுவுதல்
  • B. தமிழர்களின் வீரவிளையாட்டு ஏறுதழுவுதல் தொன்மையான
  • C. தொன்மையான வீரவிளையாட்டு தமிழர்களின் ஏறுதழுவுதல்
  • D. தமிழர்களின் தொன்மையான வீரவிளையாட்டு ஏறுதழுவுதல்Correct
Explanation. உடைமை (தமிழர்களின்), பண்பு (தொன்மையான), பெயர் (வீரவிளையாட்டு), பின் எழுவாய் விளக்கம் (ஏறுதழுவுதல்) என்ற முறையில் அமைந்த தொடரே பொருள் தெளிவாக உள்ளது.
Chapter: Writing Skill
Q108
சொற்களை ஒழுங்குபடுத்தி சரியான குறள் வடிவம் உள்ள தொடரைக் கண்டெழுதுக.
  • A. யாழ்கோடு அன்ன கொளல் கணைகொடிது வினைபடு பாலால் செவ்விது ஆங்கு
  • B. கணைகொடிது செவ்விது ஆங்கு வினைபடுயாழ்கோடு அன்ன பாலால் கொளல்
  • C. செவ்விது ஆங்கு அன்ன கணைகொடிது யாழ்கோடு, வினைபடு பாலால் கொளல்
  • D. கணைகொடிது யாழ்கோடு செவ்விது ஆங்கு அன்ன வினைபடு பாலால் கொளல்Correct
Explanation. திருக்குறள்: 'கணைகொடிது யாழ்கோடு செவ்விது ஆங்கன்ன வினைபடு பாலால் கொளல்'. அம்பு நேராக இருந்தும் கொடியது, யாழ் வளைந்திருந்தும் இனியது; அதுபோல ஒருவரை அவர் செயலால் அறிய வேண்டும்.
Chapter: Literature, Tamil Scholars and Tamil Service
Q109
அகர வரிசைப்படுத்தி எழுதியவற்றை தேர்க.
தூய்மை, திருவிளக்கு, தவப்பெருஞ்சுடர், தீவினை, துன்பங்கள், தாய்போல்
  • A. தவப்பெருஞ்சுடர், தாய்போல், திருவிளக்கு, தீவினை, துன்பங்கள், தூய்மைCorrect
  • B. தவப்பெருஞ்சுடர், திருவிளக்கு, தாய்போல், தீவினை, துன்பங்கள், தூய்மை
  • C. தாய்போல், தவப்பெருஞ்சுடர், தீவினை, திருவிளக்கு, துன்பங்கள், தூய்மை
  • D. தூய்மை, துன்பங்கள், திருவிளக்கு, தீவினை, தாய்போல், தவப்பெருஞ்சுடர்
Explanation. த, தா, தி, தீ, து, தூ என்ற உயிர்மெய் வரிசைப்படி தவப்பெருஞ்சுடர், தாய்போல், திருவிளக்கு, தீவினை, துன்பங்கள், தூய்மை என அமையும்.
Chapter: Writing Skill
Q110
வேர்ச்சொல் கண்டறிக.
நைந்தான்
  • A. நஞ்சு
  • B. நைந்துCorrect
  • C. நஞ்சன்
  • D. ஐந்து
Explanation. தற்காலிக விடைக்குறிப்பு 'நைந்து' எனக் குறிக்கிறது. 'நைந்தான்' என்பதன் வேர் 'நை' (நைதல்); விடைகளில் அதற்கு மிக நெருக்கமானது 'நைந்து'.
குறிப்பு: TNPSC இறுதி விடைக்குறிப்பில் இந்த வினாவுக்கு அனைவருக்கும் மதிப்பெண் வழங்கப்பட்டது.
Chapter: Grammar
Q111
'படி' என்னும் வேர்ச்சொல்லின் தன்மை ஒருமை எதிர்காலம் காட்டும் வினைமுற்றை எழுதுக.
  • A. படிக்கிறேன்
  • B. படித்தேன்
  • C. படிப்போம்
  • D. படிப்பேன்Correct
Explanation. 'ப்' எதிர்கால இடைநிலையும் 'ஏன்' தன்மை ஒருமை விகுதியும் பெற்ற 'படிப்பேன்' தன்மை ஒருமை எதிர்கால வினைமுற்று. 'படிப்போம்' தன்மை பன்மை.
Chapter: Grammar
Q112
சரியான பொருள் தரும் ஓரெழுத்து ஒரு மொழியைத் தேர்க.
  • A. தே – தேடுதல்
  • B. மீ – வான்Correct
  • C. ஏ – ஏற்றம்
  • D. நா – நான்
Explanation. 'மீ' என்னும் ஓரெழுத்து ஒருமொழிக்கு வான், மேல் என்பது பொருள். 'தே' என்பது தெய்வம், 'நா' என்பது நாக்கு.
Chapter: Vocabulary
Q113
ஓரெழுத்து ஒருமொழிக்குரிய சரியான பொருளை அறிந்து விடையைத் தெரிவு செய்க.
(a) பை – 1. உண்
(b) மே – 2. புல்
(c) வை – 3. அன்பு
(d) து – 4. இளமை
  • A. 1 3 4 2
  • B. 3 4 1 2
  • C. 1 2 3 4
  • D. 4 3 2 1Correct
Explanation. பை – இளமை, மே – அன்பு, வை – புல், து – உண் என்பதால் 4, 3, 2, 1 என்பதே சரி.
Chapter: Vocabulary
Q114
பின்வரும் ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லை தெரிவு செய்க.
'Renaissance'
  • A. மீட்டுருவாக்கம்
  • B. மறுசுழற்சி
  • C. மறுமலர்ச்சிCorrect
  • D. மீள்சிந்தனை
Explanation. Renaissance என்பதற்கு இணையான கலைச்சொல் 'மறுமலர்ச்சி'. மறுசுழற்சி என்பது Recycling.
Chapter: Technical Terms
Q115
பிழையான இணையைக் கண்டறிக.
  • A. கல்லில் நார் உரித்தல் – ஆராய்ந்து பாராமல்Correct
  • B. ஆயிரங்காலத்துப் பயிர் – நீண்ட காலமாக இருப்பு
  • C. கானல்நீர் – இல்லாத ஒன்று
  • D. கம்பி நீட்டுதல் – விரைந்து வெளியேறுதல்
Explanation. 'கல்லில் நார் உரித்தல்' என்பது இயலாத செயலைச் செய்ய முயல்வதைக் குறிக்கும்; 'ஆராய்ந்து பாராமல்' என்பது அதன் பொருள் அன்று. எனவே அவ்விணையே பிழை.
Chapter: Reading Comprehension
Q116
சந்திப்பிழையற்றத் தொடரைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
  • A. கடற்கரையில் உப்பு காய்ச்சுதல் நடைபெறுகிறது; மலைப் பகுதிகளில் மலை பயிர்களும் நில பகுதிகளில் உழவுத் தொழிலும் நடைபெறுகின்றன.
  • B. கடற்கரையில் உப்புக் காய்ச்சுதல் நடைபெறுகிறது; மலை பகுதிகளில் மலை பயிர்களும் நில பகுதிகளில் உழவுத் தொழிலும் நடைபெறுகின்றன.
  • C. கடற்கரையில் உப்பு காய்ச்சுதல் நடைபெறுகிறது; மலைப் பகுதியில் மலைப் பயிர்களும் நிலப் பகுதிகளில் உழவு தொழிலும் நடைபெறுகின்றன.
  • D. கடற்கரையில் உப்புக் காய்ச்சுதல் நடைபெறுகிறது; மலைப் பகுதிகளில் மலைப் பயிர்களும் நிலப் பகுதிகளில் உழவுத் தொழிலும் நடைபெறுகின்றன.Correct
Explanation. உப்புக் காய்ச்சுதல், மலைப் பகுதி, மலைப் பயிர், நிலப் பகுதி, உழவுத் தொழில் என எல்லா இடங்களிலும் வலிமிகுந்து வரும் தொடரே சந்திப்பிழையற்றது.
Chapter: Writing Skill
Q117
தவறான இணையைக் கண்டறிக.
  • A. முரணி – உடன்பட்டுCorrect
  • B. பன்னகம் – பாம்பு
  • C. நகம் – மலை
  • D. கெந்தம் – பற்கள்
Explanation. 'முரணி' என்பது மாறுபட்டு, எதிர்த்து என்னும் பொருளுடையது; 'உடன்பட்டு' என்பது எதிர்ப்பொருள். ஆகவே அவ்விணை தவறு.
Chapter: Vocabulary
Q118
பொருத்துக :
(a) முல்லைப்பாட்டு – 1. நறுந்தொகை
(b) பட்டினப்பாலை – 2. வேளாண்வேதம்
(c) நாலடியார் – 3. வஞ்சி நெடும்பாட்டு
(d) வெற்றிவேற்கை – 4. நெஞ்சாற்றுப்படை
  • A. 2 3 4 1
  • B. 4 3 2 1Correct
  • C. 3 4 1 2
  • D. 2 1 4 3
Explanation. முல்லைப்பாட்டு – நெஞ்சாற்றுப்படை, பட்டினப்பாலை – வஞ்சி நெடும்பாட்டு, நாலடியார் – வேளாண்வேதம், வெற்றிவேற்கை – நறுந்தொகை எனப் பிற பெயர்கள் வழங்கப்படுகின்றன.
Chapter: Literature, Tamil Scholars and Tamil Service
Q119
பொருத்துக :
(a) தமிழ்த்தூதர் – 1. திருஞானசம்பந்தர்
(b) பாலறாவாயன் – 2. அப்பாதுரையார்
(c) பன்மொழிப் புலவர் – 3. சேதுப்பிள்ளை ரா.பி.
(d) சொல்லின் செல்வர் – 4. தனிநாயகம் அடிகள்
  • A. 4 1 2 3Correct
  • B. 1 2 3 4
  • C. 4 3 2 1
  • D. 3 4 1 2
Explanation. தமிழ்த்தூதர் – தனிநாயகம் அடிகள், பாலறாவாயன் – திருஞானசம்பந்தர், பன்மொழிப் புலவர் – கா. அப்பாதுரையார், சொல்லின் செல்வர் – ரா.பி. சேதுப்பிள்ளை.
Chapter: Literature, Tamil Scholars and Tamil Service
Q120
ஐம்பெருங்காப்பியம் என்னும் சொற்றொடரைத் தம் உரையில் குறிப்பிட்டவர்
  • A. சிவஞான முனிவர்
  • B. மயிலைநாதர்Correct
  • C. ஆறுமுகநாவலர்
  • D. இளம்பூரணர்
Explanation. நன்னூலுக்கு உரை எழுதிய மயிலைநாதர் தம் உரையில் 'ஐம்பெருங்காப்பியம்' என்னும் தொடரை முதன்முதலில் குறிப்பிட்டுள்ளார்.
Chapter: Literature, Tamil Scholars and Tamil Service
Q121
"திராவிடம்" என்னும் சொல்லை முதன்முதலில் குறிப்பிட்டவர்
  • A. ஹீராஸ் பாதிரியார்
  • B. அகத்தியலிங்கம்
  • C. குமரிலபட்டர்Correct
  • D. ஹோக்கன்
Explanation. 'திராவிடம்' என்னும் சொல்லை முதன்முதலில் பயன்படுத்தியவர் குமரிலபட்டர் எனத் தமிழ்ப் பாடநூல்கள் குறிப்பிடுகின்றன.
Chapter: Literature, Tamil Scholars and Tamil Service
Q122
நாயக்கர் கால சிற்பக் கலைக்கு எடுத்துக்காட்டாக திகழ்வது
  • A. தஞ்சை பெரிய கோயில்
  • B. இராமேசுவரம் பெருங்கோயில்Correct
  • C. திருச்சி திருவரங்கக் கோயில்
  • D. காஞ்சி பெரிய கோயில்
Explanation. நீண்ட பிரகாரங்களும் தூண் சிற்பங்களும் கொண்ட இராமேசுவரம் கோயில் நாயக்கர் காலச் சிற்பக் கலைக்குச் சான்றாக விளங்குகிறது. தஞ்சை பெரிய கோயில் சோழர் காலத்தது.
Chapter: Literature, Tamil Scholars and Tamil Service
Q123
'தேவதுந்துபி' எந்த ஆட்டத்துக்குரிய இசைக் கருவி?
  • A. மயிலாட்டம்
  • B. ஒயிலாட்டம்
  • C. தேவராட்டம்Correct
  • D. காவடியாட்டம்
Explanation. தேவராட்டத்தின் போது இசைக்கப்படும் முதன்மை இசைக் கருவி தேவதுந்துபி ஆகும்.
Chapter: Literature, Tamil Scholars and Tamil Service
Q124
"புனலிடை மூழ்கிப் பொழிலிடை உலவிப்
பொன்னின் இழையும் துகிலும் பூண்டு
கனிமொழிபேசி நீ களித்திருக்கும் காட்சியினைக்
கண்டு மகிழ்வு பெறும் நிலையிலே
இருந்தேன்", என்று தம்பிக்குக் கடிதம் எழுதியவர் ________
  • A. முத்தமிழறிஞர் கலைஞர்
  • B. பேரறிஞர் அண்ணாCorrect
  • C. மூதறிஞர் இராசாசி
  • D. மு. வரதராசனார்
Explanation. 'தம்பிக்கு' எனத் தொடங்கும் கடிதங்களை எழுதியவர் பேரறிஞர் அண்ணா; இவ்வரிகள் அவரது பொங்கல் கடிதத்தில் இடம்பெறுகின்றன.
Chapter: Literature, Tamil Scholars and Tamil Service
Q125
"குமரிகண்ட நோய்க்குக் குமரி கொடு" இத்தொடரில் 'குமரி' என்னும் மூலிகை
  • A. கறிவேப்பிலை
  • B. குப்பைமேனி
  • C. தூதுவளை
  • D. கற்றாழைCorrect
Explanation. கற்றாழைக்குக் 'குமரி' என்ற பெயரும் உண்டு; இது பெண்களுக்கான நோய்களுக்கு மருந்தாகக் கூறப்படுகிறது.
Chapter: Vocabulary
Q126
பொருத்துக :
(a) அன்னை முத்துலெட்சுமி – 1. தேவதாசி ஒழிப்புச் சட்டம்
(b) மூவலூர் இராமாமிர்தம் – 2. சமூகத் தன்னார்வலர்
(c) பண்டித ரமாபாய் – 3. பெண் கல்வி
(d) மலாலா – 4. புற்றுநோய் மருத்துவமனை
  • A. 1 2 3 4
  • B. 1 3 2 4
  • C. 4 1 2 3Correct
  • D. 3 2 4 1
Explanation. முத்துலெட்சுமி அடையாறு புற்றுநோய் மருத்துவமனையைத் தொடங்கினார்; இராமாமிர்தம் தேவதாசி ஒழிப்புக்குப் போராடினார்; ரமாபாய் சமூகத் தன்னார்வலர்; மலாலா பெண் கல்விக்காகக் குரல் கொடுத்தார்.
Chapter: Literature, Tamil Scholars and Tamil Service
Q127
தமிழ் இலக்கியத்தில் 'ஆலவாய்' என்னும் பெயர் இவ்வூருக்கும் பொருந்தும்.
  • A. நெல்லை
  • B. திருச்சி
  • C. மதுரைCorrect
  • D. காவிரிப்பூம்பட்டினம்
Explanation. மதுரைக்கு ஆலவாய், கூடல், நான்மாடக்கூடல் போன்ற பெயர்கள் இலக்கியங்களில் வழங்குகின்றன.
Chapter: Literature, Tamil Scholars and Tamil Service
Q128
ஆங்கில அரசால், 'வாய்ப்பூட்டுச் சட்டத்தின்' மூலம் மேடைகளில் அரசியல் பேசக்கூடாது என்று தடை விதிக்கப்பட்டவர் யார்?
  • A. பெரியார்
  • B. ம.பொ. சிவஞானம்
  • C. முத்துராமலிங்கனார்Correct
  • D. ப. ஜீவானந்தம்
Explanation. பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் மேடைகளில் அரசியல் பேசக்கூடாது என ஆங்கில அரசு வாய்ப்பூட்டுச் சட்டத்தின் மூலம் தடை விதித்தது.
Chapter: Literature, Tamil Scholars and Tamil Service
Q129
"இன்று நாம் உணர்கின்றோம் தம்பி! எத்தனை இன்னலுக்கிடையிலே தள்ளப்பட்டிருப்பினும், இந்தப் பொங்கற் புது நாளில் மட்டும் நமக்கு ஒரு மகிழ்வு" என்று உரையாற்றியவர்
  • A. பேரறிஞர் அண்ணாCorrect
  • B. ரா.பி. சேதுப்பிள்ளை
  • C. மகாத்மா காந்தியடிகள்
  • D. மு. வரதராசனார்
Explanation. 'தம்பி' என விளித்துப் பொங்கல் திருநாளைப் பற்றி எழுதியது பேரறிஞர் அண்ணாவின் பொங்கல் கடிதத்தின் பகுதி.
Chapter: Literature, Tamil Scholars and Tamil Service
Q130
சென்ரியு மற்றும் லிமரைக்கூ என்ற புதிய வடிவங்களில் தமிழ்க் கவிதைகள் தந்தவர்
  • A. கவிக்கோ அப்துல் ரகுமான்
  • B. கவிவேந்தர் மு. மேத்தா
  • C. கவிஞர் ஈரோடு தமிழன்பன்Correct
  • D. இரவீந்திரநாத் தாகூர்
Explanation. ஈரோடு தமிழன்பன் சென்ரியு, லிமரைக்கூ போன்ற புதிய வடிவங்களில் தமிழ்க் கவிதைகளைப் படைத்தவர்.
Chapter: Literature, Tamil Scholars and Tamil Service
Q131
'பாவலர் மணி' என்னும் பட்டம் பெற்றக் கவிஞர்
  • A. உவமைக் கவிஞர் சுரதா
  • B. பாவேந்தர் பாரதிதாசன்
  • C. கவிஞர் வாணிதாசன்Correct
  • D. கவிஞர் முடியரசன்
Explanation. பாரதிதாசனின் மாணவரான கவிஞர் வாணிதாசன் 'பாவலர் மணி' என்னும் பட்டம் பெற்றவர்.
Chapter: Literature, Tamil Scholars and Tamil Service
Q132
தமிழ்த்தாய் நெருப்பினாலும் வெள்ளத்தினாலும் பாதிக்கப்பட்டாலும் அவளது ஆபரணங்கள் தொலைவில் உள்ள நகரமான பாரீசில் மிகவும் பாதுகாக்கப்பட்டுப் பராமரிக்கப்படுகின்றன என்று ________ குறித்து ________ கூறினார்.
  • A. சங்க இலக்கியம் – குமரிலபட்டர்
  • B. ஆனந்தரங்கர் நாட்குறிப்பு – உ.வே. சாமிநாதர்Correct
  • C. புறநானூறு – பரிதிமாற்கலைஞர்
  • D. நன்னூல் – ஜி.யு. போப்
Explanation. பாரீசு நூலகத்தில் பாதுகாக்கப்படும் தமிழ்ச் சுவடிகளைக் குறித்து உ.வே. சாமிநாதர் கூறியதாகத் தேர்வாணைய விடை குறிக்கிறது; ஆனந்தரங்கர் நாட்குறிப்பின் படிகள் பாரீசில் உள்ளன.
Chapter: Literature, Tamil Scholars and Tamil Service
Q133
ஜெயகாந்தன் இயற்றாத சிறுகதை எது?
  • A. குருபீடம்
  • B. அறம்Correct
  • C. யுகசந்தி
  • D. புதிய வார்ப்புகள்
Explanation. 'அறம்' ஜெயமோகன் எழுதிய சிறுகதைத் தொகுப்பு. குருபீடம், யுகசந்தி, புதிய வார்ப்புகள் ஜெயகாந்தனின் படைப்புகள்.
Chapter: Literature, Tamil Scholars and Tamil Service
Q134
ஆண்மையின் கூர்மை என திருவள்ளுவர் எதனைக் கூறுகிறார்?
  • A. வறியவருக்கு உதவுதல்
  • B. பகைவருக்கு உதவுதல்Correct
  • C. நண்பனுக்கு உதவுதல்
  • D. உறவினருக்கு உதவுதல்
Explanation. 'பேராண்மை என்ப தறுகண்ஒன் றுற்றக்கால் ஊராண்மை மற்றதன் எஃகு' என்ற குறளில், பகைவர்க்குத் துன்பம் வந்தபோது உதவுவதே ஆண்மையின் கூர்மை என வள்ளுவர் கூறுகிறார்.
Chapter: Literature, Tamil Scholars and Tamil Service
Q135
ஒழுகல் – இலக்கணக் குறிப்பு தருக.
  • A. தொழிற்பெயர்Correct
  • B. வினையெச்சம்
  • C. வினையாலணையும் பெயர்
  • D. பண்புத்தொகை
Explanation. 'ஒழுகு' என்னும் வினையுடன் 'அல்' விகுதி சேர்ந்து செயலைக் குறிக்கும் பெயராக வருவதால் 'ஒழுகல்' தொழிற்பெயர்.
Chapter: Grammar
Q136
திருக்குறளின் சரியான வரியை கொண்டு நிறைவு செய்க.
'தம்மிற் பெரியார் தமரா ஒழுகுதல்
________?
  • A. வன்மையுள் எல்லாம் தலைCorrect
  • B. கெடுக்குந் தகைமை யவர்
  • C. பேணித் தமராக் கொளல்
  • D. பெற்றியார்ப் பேணிக் கொளல்.
Explanation. முழுக் குறள்: 'தம்மிற் பெரியார் தமரா ஒழுகுதல் வன்மையுள் எல்லாம் தலை' (பெரியாரைத் துணைக்கோடல்). தம்மைவிடப் பெரியோரைச் சுற்றமாகக் கொண்டு நடப்பதே எல்லா வலிமைகளிலும் சிறந்தது.
Chapter: Literature, Tamil Scholars and Tamil Service
Q137
கும்பகர்ணனை எழுப்பும் காட்சியை கண்முன் நிறுத்தும் சந்தம் ________.
  • A. வில்லை மாறி, மாறி, எய்வதால் வரும் ஓசை
  • B. மேகங்கள் ஒன்றோடு ஒன்று உரசும் ஓசை
  • C. உலக்கையால் மாறி, மாறி இடிக்கும் ஒத்த ஓசைCorrect
  • D. மத்தளங்களின் இடி இசை
Explanation. கம்பராமாயணத்தில் கும்பகர்ணனை எழுப்பும் பாடலின் சந்தம், உலக்கையால் மாறி மாறி இடிக்கும் ஒத்த ஓசையைப் போல அமைந்து காட்சியைக் கண்முன் நிறுத்துகிறது.
Chapter: Literature, Tamil Scholars and Tamil Service
Q138
பின்வரும் பாடல் எந்த படிம வகையைச் சார்ந்தது என்பதை கண்டறிந்து சரியானவற்றை எடுத்தெழுதுக.
"யானைதன் வாய்நிறை கொண்ட வலிதேம்பு தடக்கை
குன்றுபுகு பாம்பின் தோன்றும்"
– (அகம் 391 : 11-12)
  • A. வினைப்படிமம்
  • B. மெய்ப்படிமம்Correct
  • C. பயன்படிமம்
  • D. உருப்படிமம்
Explanation. தேர்வாணையத்தின் தற்காலிக விடை இதனை மெய்ப்படிமம் எனக் குறிக்கிறது. யானையின் துதிக்கை குன்றில் நுழையும் பாம்பு போலத் தோன்றும் காட்சி வடிவ ஒப்புமையால் அமைந்தது.
Chapter: Grammar
Q139
கலித்தொகையில் முல்லைத் திணைக்குரிய பாடல்களை இயற்றியவரைத் தெரிவு செய்க.
  • A. நல்லந்துவனார்
  • B. சோழன் நல்லுருத்திரன்Correct
  • C. சேரமான் பெருங்கடுங்கோ
  • D. இளநாகனார்
Explanation. கலித்தொகையில் முல்லைக்கலியைப் பாடியவர் சோழன் நல்லுருத்திரன்; நெய்தற்கலியை நல்லந்துவனாரும், பாலைக்கலியைப் பெருங்கடுங்கோவும் பாடினர்.
Chapter: Literature, Tamil Scholars and Tamil Service
Q140
'சிதவல்' – இச்சொல்லின் பொருள்.
  • A. முரசம்
  • B. ஊன்றுகோல்
  • C. சோம்பல்
  • D. தலைப்பாகைCorrect
Explanation. 'சிதவல்' என்பது தலைப்பாகை (தலையில் அணியும் துணி) எனப் பொருள்படும்.
Chapter: Vocabulary
Q141
சீறாப்புராணம் இவருடைய உதவியால் நிறைவுற்றது
  • A. அப்துல் காதிர்
  • B. வள்ளல் சீதக்காதி
  • C. அப்துல் சமத்
  • D. அபுல்காசிம்Correct
Explanation. உமறுப்புலவர் சீறாப்புராணம் எழுதத் தொடங்கச் சீதக்காதி உதவினார்; அவர் மறைந்த பின் அபுல்காசிம் என்ற வள்ளலின் உதவியால் நூல் நிறைவுற்றது.
Chapter: Literature, Tamil Scholars and Tamil Service
Q142
இரண்டிரண்டு அடிகள் கொண்ட ________ யால் தொடுக்கப்படும் செய்யுள் வகை கண்ணி ஆகும்.
  • A. மோனை
  • B. எதுகைCorrect
  • C. இயைபு
  • D. ஒரூஉ
Explanation. இரண்டிரண்டு அடிகள் எதுகையால் இணைந்து தொடுக்கப்படும் செய்யுள் வடிவம் கண்ணி எனப்படும்.
Chapter: Grammar
Q143
பொருத்துக :
(a) விசும்பு – 1. தந்தம்
(b) துலை – 2. நெருப்பு
(c) கனல் – 3. யானை
(d) களிறு – 4. வானம்
(e) மருப்பு – 5. துலாக்கோல்
  • A. 4 5 2 3 1Correct
  • B. 3 2 1 4 5
  • C. 4 3 2 1 5
  • D. 2 1 5 4 3
Explanation. விசும்பு – வானம், துலை – துலாக்கோல், கனல் – நெருப்பு, களிறு – யானை, மருப்பு – தந்தம்; எனவே 4, 5, 2, 3, 1.
Chapter: Vocabulary
Q144
கீர்த்தனை ________ வகைகளுள் ஒன்றாகும்.
  • A. சங்க இலக்கியம்
  • B. நீதி இலக்கியம்
  • C. பக்தி இலக்கியம்
  • D. சிற்றிலக்கியம்Correct
Explanation. தேர்வாணைய விடைக்குறிப்பின்படி கீர்த்தனை சிற்றிலக்கிய வகைகளுள் ஒன்றாகக் கொள்ளப்படுகிறது.
Chapter: Literature, Tamil Scholars and Tamil Service
Q145
'தெம்மாங்கு' – பிரித்தெழுதுக.
  • A. தென் + பாங்கு
  • B. தென் + மாங்கு
  • C. தேன் + மாங்கு
  • D. தேன் + பாங்குCorrect
Explanation. தேர்வாணையத்தின் தற்காலிக விடை 'தேன் + பாங்கு' எனக் குறிக்கிறது; தேன் போன்ற இனிய பாங்கு உடைய பாடல் என்று பொருள் கொள்ளப்படுகிறது.
Chapter: Grammar
Q146
எள்ளில் தைலம்போல் எங்கும் நிறைபொருளை
உள்ளில் துதித்தே உணர்வடைந்து போற்றீரே !
– இப்பாடலடிகளை இயற்றியவர் ________ சித்தர் ஆவார்.
  • A. குதம்பைச் சித்தர்
  • B. இடைக்காட்டுச் சித்தர்Correct
  • C. பாம்பாட்டிச் சித்தர்
  • D. திருமூலர்
Explanation. 'போற்றீரே' என முடியும் இப்பாடல் இடைக்காட்டுச் சித்தர் பாடியதாகும்.
Chapter: Literature, Tamil Scholars and Tamil Service
Q147
"திருப்பல்லாண்டு" பாடியவர்
  • A. குலசேகராழ்வார்
  • B. ஆண்டாள்
  • C. பெரியாழ்வார்Correct
  • D. திருப்பாணாழ்வார்
Explanation. நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தின் தொடக்கப் பகுதியான திருப்பல்லாண்டைப் பாடியவர் பெரியாழ்வார்.
Chapter: Literature, Tamil Scholars and Tamil Service
Q148
தருமசேனர், அப்பர், வாகீசர் என்னும் பெயர்களைக் கொண்ட சைவ அடியார்.
  • A. திருநாவுக்கரசர்Correct
  • B. சம்பந்தர்
  • C. சுந்தரர்
  • D. மாணிக்கவாசகர்
Explanation. சமணத்தில் இருந்தபோது தருமசேனர் என அழைக்கப்பட்ட திருநாவுக்கரசர், அப்பர், வாகீசர் என்ற பெயர்களாலும் அறியப்படுகிறார்.
Chapter: Literature, Tamil Scholars and Tamil Service
Q149
'தமிழ் மூவாயிரம்' என்றழைக்கப்படும் நூலை இயற்றியவர் யார்?
  • A. நாவுக்கரசர்
  • B. நக்கீரர்
  • C. திருமாளிகைத்தேவர்
  • D. திருமூலர்Correct
Explanation. மூவாயிரம் பாடல்களைக் கொண்ட திருமந்திரம் 'தமிழ் மூவாயிரம்' என அழைக்கப்படுகிறது; அதனை இயற்றியவர் திருமூலர்.
Chapter: Literature, Tamil Scholars and Tamil Service
Q150
'காரிகை கற்றுக் கவிபாடுவதிலும் பேரிகை கொட்டிப் பிழைப்பது மேல்' – இத்தொடர் உணர்த்துவது
  • A. கவிதை எழுதுவது எளிது
  • B. கவிதை எழுதுவது அரிதுCorrect
  • C. கவிதை எழுதக் காரிகைத் தேவையில்லை
  • D. பேரிகை கொட்டினால் பிழைக்கலாம்
Explanation. யாப்பருங்கலக் காரிகையைக் கற்றுக் கவிதை பாடுவதைவிட முரசு கொட்டிப் பிழைப்பது எளிது எனக் கூறி, கவிதை எழுதுவது அரிது என்பதை இத்தொடர் உணர்த்துகிறது.
Chapter: Reading Comprehension
Q151
ஆகுபெயர் பயன்படுத்தப்படாத பழமொழியைத் தேர்வு செய்க.
  • A. ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா?
  • B. நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி
  • C. ஆலும் வேலும் பல்லுக்குறுதி
  • D. நாளும் கிழமையும் நலிந்தோர்க்கில்லைCorrect
Explanation. ஐந்து, ஐம்பது (வயதுகள்), நாலும் இரண்டும் (நாலடியார், திருக்குறள்), ஆலும் வேலும் (அவற்றின் குச்சிகள்) ஆகியவை ஆகுபெயர்கள். 'நாளும் கிழமையும்' நேர்பொருளிலேயே வருவதால் அதில் ஆகுபெயர் இல்லை.
Chapter: Grammar
Q152
"பன்னரும் கோங்கின் நன்னலம் கவற்றி", இவ்வடியில் இடம் பெற்றுள்ள எதுகை வகை
  • A. முற்றெதுகை
  • B. கீழ்க்கதுவாய் எதுகை
  • C. பொழிப்பெதுகைCorrect
  • D. ஒரூஉ எதுகை
Explanation. முதல் சீர் 'பன்னரும்', மூன்றாம் சீர் 'நன்னலம்' இரண்டிலும் இரண்டாம் எழுத்து 'ன்ன' ஒன்றி வருகிறது; 1, 3 ஆம் சீர்களில் வருவது பொழிப்பெதுகை.
Chapter: Grammar
Q153
அழகிய குளிர்ந்த கடம்பவனத்தை விட்டு இறைவன் நீங்கினான். – எவ்வகை வாக்கியம்?
  • A. செயப்பாட்டுவினை
  • B. செய்வினை
  • C. பிறவினை
  • D. தன்வினைCorrect
Explanation. இறைவன் தானே நீங்கிய செயலைக் கூறுவதால், எழுவாயே வினையைச் செய்யும் தன்வினை வாக்கியம்.
Chapter: Writing Skill
Q154
எவ்வகை வாக்கியம் எனக் கண்டறிக.
'நான் திடலில் ஓடினேன்'
  • A. கட்டளை வாக்கியம்
  • B. செய்வினை
  • C. தன்வினைCorrect
  • D. வினையெச்ச வாக்கியம்
Explanation. 'நான் ஓடினேன்' என எழுவாய் தானே வினையைச் செய்வதால் இது தன்வினை வாக்கியம்.
Chapter: Writing Skill
Q155
பின்வரும் தொடர் எவ்வகைத் தொடர் எனக் கண்டறிந்து சரியானவற்றைத் தெரிவு செய்க.
'குமரன் மழையில் நனையாமல் இல்லை'
  • A. செய்தித் தொடர்
  • B. எதிர்மறைத் தொடர்
  • C. பொருள் மாறாமல் எதிர்மறைத் தொடர்Correct
  • D. கட்டளைத் தொடர்
Explanation. 'நனையாமல் இல்லை' என இரு எதிர்மறைகள் சேர்ந்து 'நனைந்தான்' என்ற உடன்பாட்டுப் பொருளையே தருவதால் இது பொருள் மாறா எதிர்மறைத் தொடர்.
Chapter: Writing Skill
Q156
வஞ்சித்தளைக்குரிய சீர் அமைப்பு
  • A. தேமா புளிமாங்காய்
  • B. தேமாங்கனி புளிமாங்காய்Correct
  • C. கருவிளம் கூவிளங்காய்
  • D. கூவிளங்காய் தேமாங்கனி
Explanation. கனிச்சீர் முன் நிரை வருவது ஒன்றிய வஞ்சித்தளை. 'தேமாங்கனி' (கனிச்சீர்) முன் 'புளிமாங்காய்' (நிரையில் தொடங்குவது) வருவதால் இது வஞ்சித்தளை.
Chapter: Grammar
Q157
சொல்லின் வகையைக் கண்டறிக.
'வெண்மை'
  • A. தொழிற்பெயர்
  • B. இரண்டாம் வேற்றுமை
  • C. வண்ணப் பண்புப்பெயர்Correct
  • D. ஆகுபெயர்
Explanation. 'வெண்மை' ஒரு நிறத்தைக் குறிக்கும் 'மை' விகுதி பெற்ற பண்புப்பெயர்; எனவே வண்ணப் பண்புப்பெயர்.
Chapter: Grammar
Q158
வஞ்சி விருத்தம் என்பது
  • A. குறளடி நான்காய் ஒரு பொருள் குறித்து ஒரு செய்யுள் மட்டும் வருவது
  • B. சிந்தடி நான்காய் ஒரு பொருள் மேல் ஒரு செய்யுள் மட்டும் வருவதுCorrect
  • C. குறளடி நான்காய் ஒரு பொருள் மேல் மூன்று செய்யுள்கள் வருவது
  • D. அளவடி பெற்று ஒரு பொருளில் ஒரு செய்யுள் மட்டும் வருவது
Explanation. மூன்று சீர்களைக் கொண்ட சிந்தடி நான்கு அடிகளாய் வருவது வஞ்சி விருத்தம். குறளடி நான்காய் ஒரு பொருள் மேல் மூன்று வருவது வஞ்சித்தாழிசை.
Chapter: Grammar
Q159
பின்வருவனவற்றுள் அகர வரிசைப்படி எழுதப்பட்ட நவமணிகளை தெரிவு செய்க.
  • A. நீலம், கோமேதகம், மாணிக்கம், வைரம், பவளம், வைடூரியம், முத்து, புஷ்பராகம், மரகதம்
  • B. கோமேதகம், நீலம், பவளம், புஷ்பராகம், மரகதம், மாணிக்கம், முத்து, வைடூரியம், வைரம்Correct
  • C. கோமேதகம், நீலம், புஷ்பராகம், பவளம், மரகதம், மாணிக்கம், முத்து, வைரம், வைடூரியம்
  • D. கோமேதகம், நீலம், புஷ்பராகம், பவளம், மரகதம், முத்து, மாணிக்கம், வைரம், வைடூரியம்
Explanation. கோ, நீ, ப, பு, ம, மா, மு, வைடூ, வைர என்ற வரிசைப்படி அமைந்த இரண்டாம் விடையே சரியான அகர வரிசை.
Chapter: Writing Skill
Q160
வினையெச்சம் – கண்டறிக.
  • A. ஓடினான்
  • B. ஓடும்
  • C. ஓடிய
  • D. ஓடிCorrect
Explanation. 'ஓடி' வினையைக் கொண்டு முடியும் வினையெச்சம். 'ஓடிய', 'ஓடும்' பெயரெச்சங்கள்; 'ஓடினான்' வினைமுற்று.
Chapter: Grammar
Q161
வினைமுற்றைத் தேர்வு செய்க.
'வா'
  • A. வந்தனன்
  • B. வந்து
  • C. வந்தான்Correct
  • D. வந்த
Explanation. 'வந்தான்' படர்க்கை ஆண்பால் இறந்தகால வினைமுற்று. 'வந்து' வினையெச்சம், 'வந்த' பெயரெச்சம்.
குறிப்பு: TNPSC இறுதி விடைக்குறிப்பு (A), (C) ஆகியவற்றைச் சரியான விடைகளாக ஏற்கிறது.
Chapter: Grammar
Q162
ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்க.
மாரி, மாறி
  • A. பாதி, பறை
  • B. மேளம், ஒலித்தல்
  • C. மழை, வேறுCorrect
  • D. வீடு, ஒலித்தல்
Explanation. 'மாரி' என்பது மழை; 'மாறி' என்பது வேறுபட்டு, வேறாகி என்னும் பொருளுடையது.
Chapter: Vocabulary
Q163
ஒலி வேறுபாடறிந்து சரியான விடையைத் தெரிவு செய்க :
(a) அளை – 1. இளைத்தல்
(b) களை – 2. நீக்கு
(c) தளை – 3. புற்று
(d) இளை – 4. விலங்கு
  • A. 2 3 1 4
  • B. 4 1 2 3
  • C. 3 2 4 1Correct
  • D. 1 2 3 4
Explanation. அளை – புற்று, களை – நீக்கு, தளை – விலங்கு, இளை – இளைத்தல்; எனவே 3, 2, 4, 1.
Chapter: Vocabulary
Q164
கொடுக்கப்பட்டுள்ள ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லை எழுதுக.
Delegate (டெலிகேட்)
  • A. வடிவமைப்பு
  • B. பேராளர்Correct
  • C. குறும்பெட்டி
  • D. மரபுத்தகவு
Explanation. ஒரு அமைப்பின் சார்பாகக் கலந்துகொள்ளும் Delegate என்பவருக்கு இணையான கலைச்சொல் 'பேராளர்'.
Chapter: Technical Terms
Q165
கொடுக்கப்பட்டுள்ள வேர்ச்சொல்லின் வினையாலணையும் பெயரைக்கண்டு எழுதுக.
'அறை'
  • A. அறைதல்
  • B. அறைந்த
  • C. அறைந்தவர்Correct
  • D. அறையும்
Explanation. வினையைச் செய்தவரைக் குறிக்கும் பெயராக வருவதால் 'அறைந்தவர்' வினையாலணையும் பெயர். 'அறைதல்' தொழிற்பெயர்.
Chapter: Grammar
Q166
இவற்றுள் எது தவறான இணை எதிர்ச்சொல் என்பதைத் தெரிவு செய்க.
  • A. இரவு × பகல்
  • B. அகலாது × போகாதுCorrect
  • C. தண்மை × வெம்மை
  • D. விருப்பு × வெறுப்பு
Explanation. 'அகலாது', 'போகாது' இரண்டும் நீங்காது என்ற ஒரே பொருளுடையவை; எனவே அவை எதிர்ச்சொற்கள் அல்ல.
Chapter: Vocabulary
Q167
சரியாக பிரித்தெழுதப்பட்ட சொல்லை எடுத்தெழுதுக.
அஞ்சிலோதி
  • A. அஞ்சில் + ஓதி
  • B. அம் + சிலோதி
  • C. அம் + சில் + ஓதி
  • D. அம் + சில + ஓதிCorrect
Explanation. அழகிய சில கூந்தலை உடையவள் எனப் பொருள்படும் 'அஞ்சிலோதி' என்பது அம் + சில + ஓதி எனப் பிரியும்.
குறிப்பு: TNPSC இறுதி விடைக்குறிப்பு (C), (D) ஆகியவற்றைச் சரியான விடைகளாக ஏற்கிறது.
Chapter: Grammar
Q168
பின்வரும் சொல்லின் சரியான பிரித்தெழுதும் முறையை எடுத்தெழுதுக.
ஊன்பொதியவிழா
  • A. ஊன் + பொதிய + விழா
  • B. ஊன்பொதிய + விழா
  • C. ஊன் + பொதி + விழா
  • D. ஊன் + பொதி + அவிழாCorrect
Explanation. இங்கு 'விழா' திருவிழா அன்று; 'அவிழா' (அவிழாத) என்பதே. பொதி + அவிழா என்பது புணர்ந்து 'பொதியவிழா' ஆகிறது.
Chapter: Grammar
Q169
எழுத்துவகை அறிந்து பொருத்துக :
(a) இயல் – 1. உயிர் முதல் உயிரீறு
(b) புதிது – 2. உயிர் முதல் மெய்யீறு
(c) ஆணி – 3. மெய்ம்முதல் மெய்யீறு
(d) வரம் – 4. மெய்ம்முதல் உயிரீறு
  • A. 2 4 1 3Correct
  • B. 3 2 1 4
  • C. 1 3 4 2
  • D. 1 4 2 3
Explanation. இயல் (இ…ல்) உயிர் முதல் மெய்யீறு; புதிது (பு…தி) மெய்ம்முதல் உயிரீறு; ஆணி உயிர் முதல் உயிரீறு; வரம் (வ…ம்) மெய்ம்முதல் மெய்யீறு.
Chapter: Grammar
Q170
தமிழ்ச் சொல்லாராய்ச்சியில் உச்சம் தொட்டவர்
  • A. கால்டுவெல்
  • B. தேவநேயப் பாவாணர்Correct
  • C. ம.பொ.சி
  • D. உ.வே.சா
Explanation. தமிழ்ச் சொற்களின் வேர்களை ஆராய்ந்து சொல்லாராய்ச்சியில் உச்சம் தொட்டவர் 'மொழிஞாயிறு' தேவநேயப் பாவாணர்.
Chapter: Literature, Tamil Scholars and Tamil Service
Q171
உ.வே.சா. அவர்கள் தனது வாழ்க்கை வரலாற்றைத் தொடராக எழுதிய இதழ் எது?
  • A. துக்ளக்
  • B. குமுதம்
  • C. கல்கண்டு
  • D. ஆனந்த விகடன்Correct
Explanation. உ.வே.சா. தம் வாழ்க்கை வரலாற்றை 'என் சரித்திரம்' என்ற பெயரில் ஆனந்த விகடன் இதழில் தொடராக எழுதினார்.
Chapter: Literature, Tamil Scholars and Tamil Service
Q172
தமது தமிழ்க் கட்டுரையின் வழியாக தமிழை 'உயர்தனிச் செம்மொழி' என்று பெருமைப்படுத்தியவர்.
  • A. வ.சுப. மாணிக்கனார்
  • B. தேவநேயப் பாவாணர்
  • C. மா. இராசமாணிக்கனார்
  • D. பரிதிமாற் கலைஞர்Correct
Explanation. தமிழ் 'உயர்தனிச் செம்மொழி' என்று முதன்முதலில் நிறுவி எழுதியவர் பரிதிமாற் கலைஞர் (வி.கோ. சூரியநாராயண சாஸ்திரி).
Chapter: Literature, Tamil Scholars and Tamil Service
Q173
வழக்குரைஞராகப் பணியாற்றிய தமிழ்க் கவிஞர்
  • A. சிற்பி
  • B. மு.மேத்தா
  • C. ந. பிச்சமூர்த்திCorrect
  • D. சுரதா
Explanation. புதுக்கவிதையின் முன்னோடியான ந. பிச்சமூர்த்தி தொடக்கத்தில் வழக்குரைஞராகப் பணியாற்றினார்.
Chapter: Literature, Tamil Scholars and Tamil Service
Q174
பொருத்துக :
(a) காந்தியக் கவிஞர் – 1. சுரதா
(b) உவமைக் கவிஞர் – 2. நாமக்கல் கவிஞர்
(c) மக்கள் கவிஞர் – 3. வாணிதாசன்
(d) கவிஞரேறு – 4. பட்டுக்கோட்டை
  • A. 2 1 4 3Correct
  • B. 4 3 2 1
  • C. 3 4 1 2
  • D. 1 2 3 4
Explanation. காந்தியக் கவிஞர் – நாமக்கல் கவிஞர், உவமைக் கவிஞர் – சுரதா, மக்கள் கவிஞர் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், கவிஞரேறு – வாணிதாசன்.
Chapter: Literature, Tamil Scholars and Tamil Service
Q175
"பிசிராந்தையார்" எனும் நாடக நூலுக்காக சாகித்திய அகாதெமி விருது பெற்றவர்
  • A. பாவேந்தர் பாரதிதாசன்Correct
  • B. கவிஞர் வாணிதாசன்
  • C. கவியரசர் கண்ணதாசன்
  • D. கவிஞர் முடியரசன்
Explanation. பாரதிதாசனின் 'பிசிராந்தையார்' நாடகத்துக்கு 1969 இல் சாகித்திய அகாதெமி விருது வழங்கப்பட்டது.
Chapter: Literature, Tamil Scholars and Tamil Service
Q176
"உணவு, உடை, அடிப்படைத் தேவை – அந்தத் தேவையைப் பூர்த்தி செய்தானதும் முதல் இடம் புத்தகச்சாலைக்குத் தரப்பட வேண்டும்" என்று கூறியவர்
  • A. ஆபிரகாம் லிங்கன்
  • B. அறிஞர் அண்ணாCorrect
  • C. விவேகானந்தர்
  • D. கதே
Explanation. நூலகத்தின் இன்றியமையாமையைப் பற்றிய இக்கருத்தைக் கூறியவர் அறிஞர் அண்ணா.
Chapter: Literature, Tamil Scholars and Tamil Service
Q177
"மாந்தன் தோற்றமும் தமிழர் மரபும்" என்னும் தலைப்பில் உலகத்தமிழ் மாநாட்டில் சொற்பொழிவாற்றியவர்
  • A. பாவலரேறு பெருஞ்சித்திரனார்
  • B. பரிதிமாற் கலைஞர்
  • C. தேவநேயப் பாவாணர்Correct
  • D. சோமசுந்தர பாரதியார்
Explanation. தேவநேயப் பாவாணர் 1981 மதுரை உலகத்தமிழ் மாநாட்டில் 'மாந்தன் தோற்றமும் தமிழர் மரபும்' என்ற தலைப்பில் உரையாற்றினார்.
Chapter: Literature, Tamil Scholars and Tamil Service
Q178
"சோழநாட்டை ஊட்டி வளர்ப்பது காவிரியாறு. அந்நதியின் பெருமையாலேயே சோழவள நாடு சோறுடைத்து என்று கவிகள் புகழ்வாராயினர்" என்று உரை நிகழ்த்தியவர்
  • A. திரு.வி. கலியாண சுந்தரனார்
  • B. பேரறிஞர் அண்ணா
  • C. காமராசர்
  • D. ரா.பி. சேதுப்பிள்ளைCorrect
Explanation. தேர்வாணைய விடைக்குறிப்பின்படி காவிரியின் பெருமையைப் பேசும் இவ்வுரை சொல்லின் செல்வர் ரா.பி. சேதுப்பிள்ளையுடையது.
Chapter: Literature, Tamil Scholars and Tamil Service
Q179
கூற்று 1 : சங்க இலக்கியத்தின் மொத்த அடிகள் 26,350.
கூற்று 2 : உலக இலக்கியங்களுள் முதன்மை பெற்றுள்ளவை சங்க இலக்கியங்கள்.
கூற்று 3 : விரிவாக உருவாக்கப்பட்ட இலக்கியங்கள் உலகின் வேறுமொழிகளிலும் உள்ளன.
  • A. கூற்று 1, 2 சரி, 3 தவறுCorrect
  • B. கூற்று 3, 2 சரி, 1 தவறு
  • C. கூற்று 1, 2 தவறு, 3 சரி
  • D. கூற்று 2, 3 தவறு, 1 சரி
Explanation. தேர்வாணைய விடைப்படி சங்க இலக்கிய அடிகள் 26,350 என்பதும், அவை உலக இலக்கியங்களுள் முதன்மை பெற்றவை என்பதும் சரி; மூன்றாம் கூற்று தவறு எனக் கொள்ளப்படுகிறது.
Chapter: Literature, Tamil Scholars and Tamil Service
Q180
மேடைப்பேச்சு எத்தனை நடைகளை கொண்டமைவதாகக் கூறப்படுகின்றது?
  • A. மூவகை
  • B. ஐவகைCorrect
  • C. நான்கு
  • D. ஏழு
Explanation. தேர்வாணைய விடைக்குறிப்பின்படி மேடைப்பேச்சு ஐவகை நடைகளைக் கொண்டமைவதாகக் கூறப்படுகிறது.
Chapter: Literature, Tamil Scholars and Tamil Service
Q181
தமிழ்ச்சிறுகதையில் 'மணிக் கொடி காலம்' எந்த தலைமுறையைச் சார்ந்தது?
  • A. முதல் தலைமுறைCorrect
  • B. இரண்டாம் தலைமுறை
  • C. மூன்றாம் தலைமுறை
  • D. நான்காம் தலைமுறை
Explanation. புதுமைப்பித்தன், கு.ப.ரா. போன்றோர் எழுதிய மணிக்கொடி இதழ்க் காலம் தமிழ்ச் சிறுகதையின் முதல் தலைமுறையாகக் கருதப்படுகிறது.
Chapter: Literature, Tamil Scholars and Tamil Service
Q182
கரகாட்டத்தின் துணையாட்டமாக ஆடப்படும் ஆட்டம் எது?
  • A. மயிலாட்டம்Correct
  • B. காவடியாட்டம்
  • C. ஒயிலாட்டம்
  • D. தேவராட்டம்
Explanation. மயில் போன்ற உடையணிந்து ஆடும் மயிலாட்டம் கரகாட்டத்தின் துணையாட்டமாக ஆடப்படுகிறது.
Chapter: Literature, Tamil Scholars and Tamil Service
Q183
கீழ்க்கண்டவற்றுள் திரு.வி.க. எழுதாத நூல்
  • A. சைவத்திறவு
  • B. நாயன்மார் வரலாறு
  • C. மனுமுறை கண்ட வாசகம்Correct
  • D. தமிழ்ச்சோலை
Explanation. 'மனுமுறை கண்ட வாசகம்' இராமலிங்க அடிகள் (வள்ளலார்) எழுதிய உரைநடை நூல்; மற்றவை திரு.வி.க.வின் நூல்கள்.
Chapter: Literature, Tamil Scholars and Tamil Service
Q184
'விளக்குகள் பல தந்த ஒளி' என்னும் நூலை இயற்றியவர்
  • A. ஜவஹர்லால் நேரு
  • B. லிலியன் வாட்சன்Correct
  • C. கீட்ஸ்
  • D. வோர்ட்ஸ் வொர்த்
Explanation. 'விளக்குகள் பல தந்த ஒளி' (Light from Many Lamps) என்னும் நூலைத் தொகுத்தவர் லிலியன் வாட்சன்.
Chapter: Literature, Tamil Scholars and Tamil Service
Q185
உலகளாவிய தமிழர்கள் – சிறப்பும் பெருமையும் புலம்பெயர்ந்த தமிழர்கள் பற்றிய முதல் புதினம்
  • A. மண்ணும் மக்களும்
  • B. புயலிலே ஒரு தோணிCorrect
  • C. கடற்புரத்தில்
  • D. தீவுக்கரை
Explanation. ப. சிங்காரம் எழுதிய 'புயலிலே ஒரு தோணி' புலம்பெயர்ந்த தமிழர்களைப் பற்றிய முதல் புதினமாகக் கருதப்படுகிறது.
Chapter: Literature, Tamil Scholars and Tamil Service
Q186
'தமிழ் நாடகக்கலையின் பெர்னாட்ஷா' என்று அறிஞர் அண்ணா யாரால் பாராட்டப் பெற்றார்?
  • A. திரு.வி. கலியாண சுந்தரனார்
  • B. கலைஞர் கருணாநிதி
  • C. கல்கிCorrect
  • D. மு. வரதராசனார்
Explanation. அண்ணாவின் நாடகப் படைப்புகளைப் பாராட்டி 'தமிழ்நாட்டின் பெர்னாட்ஷா' என்று அழைத்தவர் கல்கி.
Chapter: Literature, Tamil Scholars and Tamil Service
Q187
புறப்பொருள் திணையின் பெயரைத் தாங்கிய நீதிநூல் எது?
  • A. நாலடியார்
  • B. முதுமொழிக்காஞ்சிCorrect
  • C. ஏலாதி
  • D. பழமொழி
Explanation. 'காஞ்சி' என்பது புறப்பொருள் திணைகளுள் ஒன்று; அப்பெயரைத் தாங்கிய பதினெண்கீழ்க்கணக்கு நீதிநூல் முதுமொழிக்காஞ்சி.
Chapter: Literature, Tamil Scholars and Tamil Service
Q188
வெண்குடை – இலக்கணக் குறிப்பு தருக.
  • A. ஆகுபெயர்
  • B. வினைத்தொகை
  • C. தொழிற்பெயர்
  • D. பண்புத்தொகைCorrect
Explanation. வெண்மை + குடை; 'மையாகிய' என்ற பண்பு உருபு மறைந்து வருவதால் 'வெண்குடை' பண்புத்தொகை.
Chapter: Grammar
Q189
திரிகடுகம் என்ற நூலின் ஆசிரியர் ________.
  • A. கணிமேதாவியார்
  • B. கம்பர்
  • C. நல்லாதனார்Correct
  • D. இளங்கோவடிகள்
Explanation. பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றான திரிகடுகத்தை இயற்றியவர் நல்லாதனார். கணிமேதாவியார் ஏலாதி, திணைமாலை நூற்றைம்பது ஆகியவற்றை எழுதினார்.
Chapter: Literature, Tamil Scholars and Tamil Service
Q190
சிருங்கிபேரம் நகரில் வாழும் தலைவன் யார்?
  • A. நந்திவர்மன்
  • B. குகன்Correct
  • C. அப்பூதியடிகள்
  • D. சிபி
Explanation. கம்பராமாயணத்தில் கங்கைக்கரையில் உள்ள சிருங்கிபேரம் நகரின் வேடர் தலைவன் குகன்.
Chapter: Literature, Tamil Scholars and Tamil Service
Q191
'அனகன்' என்ற சொல் யாரைக் குறிப்பதாகும்?
  • A. வீடணன்
  • B. இராமன்Correct
  • C. சுக்ரீவன்
  • D. குகன்
Explanation. 'அனகன்' என்பது பாவம் இல்லாதவன் எனப் பொருள்படும்; கம்பராமாயணத்தில் இச்சொல் இராமனைக் குறிக்கிறது.
Chapter: Literature, Tamil Scholars and Tamil Service
Q192
யாழின் வகைகள் யாவை?
  • A. 4Correct
  • B. 5
  • C. 6
  • D. 7
Explanation. பேரியாழ், மகரயாழ், சகோடயாழ், செங்கோட்டியாழ் என யாழ் நான்கு வகைப்படும்.
Chapter: Literature, Tamil Scholars and Tamil Service
Q193
"குடிமக்கள் காப்பியம்" – எனப்படுவது ________
  • A. சிலப்பதிகாரம்Correct
  • B. மணிமேகலை
  • C. சீவக சிந்தாமணி
  • D. வளையாபதி
Explanation. அரசரை அன்றிக் குடிமக்களான கோவலன், கண்ணகியைத் தலைமாந்தராகக் கொண்டதால் சிலப்பதிகாரம் 'குடிமக்கள் காப்பியம்' எனப்படுகிறது.
Chapter: Literature, Tamil Scholars and Tamil Service
Q194
'போருழந் தெடுத்த ஆரெயில் நெடுங்கொடி
'வாரல்' என்பனபோல் மறித்துக்கை காட்ட'
– இப்பாடலில் பயின்று வரும் அணி
  • A. தீவக அணி
  • B. வஞ்சப்புகழ்ச்சி அணி
  • C. தற்குறிப்பேற்ற அணிCorrect
  • D. உவமையணி
Explanation. காற்றில் இயல்பாக அசையும் கொடி 'வர வேண்டாம்' எனக் கை காட்டுவதாகக் கவிஞர் தம் கருத்தை ஏற்றிக் கூறுவதால் இது தற்குறிப்பேற்ற அணி.
Chapter: Grammar
Q195
உமறுப்புலவர் எழுதிய வேறு நூல்
  • A. திணைமாலை
  • B. முதுமொழிமாலைCorrect
  • C. கார்நாற்பது
  • D. இனியவை நாற்பது
Explanation. சீறாப்புராணம் தவிர உமறுப்புலவர் எழுதிய மற்றொரு நூல் முதுமொழிமாலை. மற்ற மூன்றும் பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள்.
Chapter: Literature, Tamil Scholars and Tamil Service
Q196
பெருமாள் திருமொழியைப் பாடியவர் யார்?
  • A. நம்மாழ்வார்
  • B. பெரியாழ்வார்
  • C. ஆண்டாள்
  • D. குலசேகராழ்வார்Correct
Explanation. நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தில் உள்ள பெருமாள் திருமொழியைப் பாடியவர் குலசேகராழ்வார்.
Chapter: Literature, Tamil Scholars and Tamil Service
Q197
இரட்டுற மொழிதல் அணியின் வேறு பெயர் ________
  • A. உவமை அணி
  • B. சிலேடை அணிCorrect
  • C. உருவக அணி
  • D. தற்குறிப்பேற்ற அணி
Explanation. ஒரு சொல் அல்லது தொடர் இரு பொருள் தருமாறு அமைவது இரட்டுற மொழிதல் அணி; அதன் வேறு பெயர் சிலேடை அணி.
Chapter: Grammar
Q198
மனோன்மணீயத்தில் வரும் கிளைக் கதை எது?
  • A. சிவகாமியின் சரிதம்Correct
  • B. சிவகாமியின் செல்வன்
  • C. சிவகாமியின் வரலாறு
  • D. சிவகாமியின் சபதம்
Explanation. சுந்தரனாரின் மனோன்மணீயம் நாடகத்தில் இடம்பெறும் கிளைக் கதை 'சிவகாமியின் சரிதம்'. 'சிவகாமியின் சபதம்' கல்கியின் புதினம்.
Chapter: Literature, Tamil Scholars and Tamil Service
Q199
இரகசிய வழி என்ற நூலைத் தழுவி சுந்தரனார் மனோன்மணீயம் நாடகத்தை எழுதிய ஆண்டு ________.
  • A. 1891Correct
  • B. 1881
  • C. 1871
  • D. 1901
Explanation. லிட்டன் பிரபுவின் 'இரகசிய வழி' (The Secret Way) என்னும் நூலைத் தழுவிப் பெ. சுந்தரனார் 1891 இல் மனோன்மணீயத்தை எழுதினார்.
Chapter: Literature, Tamil Scholars and Tamil Service
Q200
'உலகம் நிலையற்றது' எனப் பாடிய சித்தர்
  • A. இடைக்காட்டுச் சித்தர்
  • B. குதம்பைச் சித்தர்Correct
  • C. பட்டினத்தார்
  • D. சிவவாக்கியர்
Explanation. தேர்வாணைய விடைக்குறிப்பின்படி உலகம் நிலையற்றது என்ற கருத்தைப் பாடிய சித்தர் குதம்பைச் சித்தர்.
Chapter: Literature, Tamil Scholars and Tamil Service
Take online test → All previous year papers
Disclaimer: TN Online Test is an independent practice website. It is not affiliated with, or endorsed by, the Tamil Nadu Public Service Commission (TNPSC). These questions are reproduced from past TNPSC Group 4 examinations for practice only. The explanations are written by our team. If anything here differs from TNPSC's official answer key, the official key prevails.

About this paper

These are the Part I one-mark multiple-choice questions from the September 2024 TNPSC Group 2 General Tamil public examination conducted by the Tamil Nadu Directorate of Government Examinations. The answers and explanations are prepared by TN Online Test for revision. Each question links to the textbook chapter it comes from, so you can go back to that chapter's notes and MCQs.

Other years

2026 · November 2026 2025 · September 2025