TN Online TestSamacheer Kalvi practice

10th Standard Social Science Question Paper April 2023

Paper code 6836 100 marks 180 minutes

The complete April 2023 public exam paper exactly as printed: every question in Tamil and English. Download the PDF, or take Part I as a free online test.

சமூக அறிவியல் / Social ScienceApril 2023 · April 2023

பகுதி – I / PART – I

குறிப்பு : (i) அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும். (ii) கொடுக்கப்பட்ட மாற்று விடைகளில் மிகவும் ஏற்புடைய விடையினை தேர்ந்தெடுத்துக் குறியீட்டுடன் விடையினையும் சேர்த்து எழுதவும்.
Note : (i) Answer all the questions. (ii) Choose the most appropriate answer from the given four alternatives and write the option code and the corresponding answer.
1.
உலகத்தின் எந்தப் பகுதி டாலர் அரசியல் ஏகாதிபத்தியத்தை விரும்பவில்லை ?
(அ) ஐரோப்பா
(ஆ) இலத்தீன் அமெரிக்கா
(இ) இந்தியா
(ஈ) சீனா
Which part of the world disliked Dollar Imperialism ?
(a) Europe
(b) Latin America
(c) India
(d) China
Show answer ▾ (ஆ) / (b) Latin America · Solved one-mark questions →
1 mark
2.
சீனாவில் மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாடு எப்போது நடைபெற்றது ?
(அ) செப்டம்பர் 1959
(ஆ) செப்டம்பர் 1949
(இ) செப்டம்பர் 1954
(ஈ) செப்டம்பர் 1944
When was People's Political Consultative Conference held in China ?
(a) September 1959
(b) September 1949
(c) September 1954
(d) September 1944
Show answer ▾ (ஆ) / (b) September 1949 · Solved one-mark questions →
1 mark
3.
கிழக்கிந்திய கம்பெனியின் நாடுபிடிக்கும் ஆசையை எதிர்த்து நின்ற முதல் பாளையக்காரர் யார் ?
(அ) மருது சகோதரர்கள்
(ஆ) பூலித்தேவர்
(இ) வேலுநாச்சியார்
(ஈ) வீரபாண்டிய கட்டபொம்மன்
Who was the first Palayakkarars to resist the East India Company's Policy of territorial aggrandizement ?
(a) Marudhu brothers
(b) Puli Thevar
(c) Velunachiyar
(d) Veerapandya Kattabomman
Show answer ▾ (ஆ) / (b) Puli Thevar · Solved one-mark questions →
1 mark
4.
இந்திய தேசிய காங்கிரசின் எந்த அமர்வில் ஒத்துழையாமை இயக்கத்துக்கு அனுமதி வழங்கப்பட்டது ?
(அ) பம்பாய்
(ஆ) மதராஸ்
(இ) கல்கத்தா
(ஈ) நாக்பூர்
In which session of Indian National Congress was Non-cooperation Movement approved ?
(a) Bombay
(b) Madras
(c) Calcutta
(d) Nagpur
Show answer ▾ (இ) / (c) Calcutta · Solved one-mark questions →
1 mark
5.
பன்னாட்டுச் சங்கம் உருவாக்கப்படுவதில் முன்முயற்சி எடுத்தவர் யார் ?
(அ) ரூஸ்வெல்ட்
(ஆ) சேம்பர்லின்
(இ) உட்ரோ வில்சன்
(ஈ) பால்டுவின்
Who initiated the formation of League of Nations ?
(a) Roosevelt
(b) Chamberlain
(c) Woodrow Wilson
(d) Baldwin
Show answer ▾ (இ) / (c) Woodrow Wilson · Solved one-mark questions →
1 mark
6.
ஆந்த்ரசைட் நிலக்கரி ________ கார்பன் அளவை கொண்டுள்ளது.
(அ) 80% - 95%
(ஆ) 70% -க்கு மேல்
(இ) 60% - 70%
(ஈ) 50% -க்கும் குறைவு
The Anthracite coal has ________ of carbon.
(a) 80 to 95%
(b) Above 70%
(c) 60 to 70%
(d) Below 50%
Show answer ▾ (அ) / (a) 80 to 95% · Solved one-mark questions →
1 mark
7.
தமிழ்நாட்டில் உள்ள மிக உயரமான சிகரம் ________.
(அ) ஆனைமுடி
(ஆ) தொட்டபெட்டா
(இ) மகேந்திரகிரி
(ஈ) சேர்வராயன்
The highest peak in Tamil Nadu is ________.
(a) Anaimudi
(b) Doddabetta
(c) Mahendragiri
(d) Servarayan
Show answer ▾ (ஆ) / (b) Doddabetta · Solved one-mark questions →
1 mark
8.
தமிழ்நாட்டிலுள்ள பெரிய மற்றும் சிறிய துறைமுகங்களின் எண்ணிக்கை :
(அ) 3 மற்றும் 15
(ஆ) 4 மற்றும் 16
(இ) 3 மற்றும் 16
(ஈ) 4 மற்றும் 15
Number of major and minor ports in Tamil Nadu.
(a) 3 and 15
(b) 4 and 16
(c) 3 and 16
(d) 4 and 15
Show answer ▾ (அ) / (a) 3 and 15 · Solved one-mark questions →
1 mark
9.
பழைய வண்டல் படிவுகளால் உருவான சமவெளி ________.
(அ) பாபர்
(ஆ) தராய்
(இ) பாங்கர்
(ஈ) காதர்
________ plains are formed by the older alluvium.
(a) Bhabar
(b) Tarai
(c) Bhangar
(d) Khadar
Show answer ▾ (இ) / (c) Bhangar · Solved one-mark questions →
1 mark
10.
கம்பு ________ -ஐ பூர்விகமாகக் கொண்ட பயிராகும்.
(அ) ஆசியா
(ஆ) இந்தியா
(இ) ஆப்பிரிக்கா
(ஈ) ரஷ்யா
Bajra is an indigenous crop of ________.
(a) Asia
(b) India
(c) Africa
(d) Russia
Show answer ▾ (இ) / (c) Africa · Solved one-mark questions →
1 mark
11.
கீழ்க்காணும் எந்த விதியின் அடிப்படையில் குடியரசு தலைவர் நிதி நெருக்கடி நிலையினை அறிவிக்கிறார் ?
(அ) சட்டப்பிரிவு 352
(ஆ) சட்டப்பிரிவு 360
(இ) சட்டப்பிரிவு 356
(ஈ) சட்டப்பிரிவு 365
Under which Article the President is vested with the power to proclaim Financial Emergency ?
(a) Article 352
(b) Article 360
(c) Article 356
(d) Article 365
Show answer ▾ (ஆ) / (b) Article 360 · Solved one-mark questions →
1 mark
12.
பின்வருவனவற்றைக் காலவரிசைப்படுத்தி கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளிலிருந்து சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்.
(i) பஞ்சசீலம்
(ii) சீனாவின் அணு வெடிப்புச் சோதனை
(iii) 20 ஆண்டுகள் ஒப்பந்தம்
(iv) இந்தியாவின் முதல் அணு வெடிப்புச் சோதனை
(அ) (i), (iii), (iv), (ii)
(ஆ) (i), (ii), (iii), (iv)
(இ) (i), (ii), (iv), (iii)
(ஈ) (i), (iii), (ii), (iv)
Arrange the following in the correct chronological order and choose the correct answer from the code given below.
(i) Panchasheel
(ii) China's Nuclear test
(iii) Twenty year Treaty
(iv) First Nuclear test of India
(a) (i), (iii), (iv), (ii)
(b) (i), (ii), (iii), (iv)
(c) (i), (ii), (iv), (iii)
(d) (i), (iii), (ii), (iv)
Show answer ▾ (ஆ) / (b) (i), (ii), (iii), (iv) · Solved one-mark questions →
1 mark
13.
________ இந்தியாவில் தோன்றியதால் உணவு தானிய உற்பத்தியில் தன்னிறைவு பெற வழி வகுத்தது.
(அ) நீலப் புரட்சி
(ஆ) வெள்ளைப் புரட்சி
(இ) பசுமைப் புரட்சி
(ஈ) சாம்பல் புரட்சி
________ revolution was born in India paving way for self-sufficiency in food grains production.
(a) Blue Revolution
(b) White Revolution
(c) Green Revolution
(d) Grey Revolution
Show answer ▾ (இ) / (c) Green Revolution · Solved one-mark questions →
1 mark
14.
பின்வருவனவற்றுள் தோல் தொழிற்சாலைகள் இல்லாதது எது ?
(அ) ராணிப்பேட்டை
(ஆ) தர்மபுரி
(இ) ஆம்பூர்
(ஈ) வாணியம்பாடி
Which one of the following is not having leather factories ?
(a) Ranipet
(b) Dharmapuri
(c) Ambur
(d) Vaniyambadi
Show answer ▾ (ஆ) / (b) Dharmapuri · Solved one-mark questions →
1 mark

பகுதி – II / PART – II

குறிப்பு : எவையேனும் 10 வினாக்களுக்கு விடையளிக்கவும். வினா எண் 28 -க்கு கட்டாயமாக விடையளிக்கவும்.
Note : Answer any 10 questions. Question No. 28 is compulsory.
15.
ஹிட்லர் ஜெர்மனி மக்களின் ஆதரவை எவ்வாறு பெற்றார் ?
How did Hitler get the support from the people of Germany ?
2 marks
16.
முசோலினியின் ரோமாபுரி நோக்கிய அணி வகுப்பின் விளைவுகள் யாவை ?
What was the result of Mussolini's march to Rome ?
2 marks
17.
இராமலிங்க சுவாமிகளின் சீர்திருத்தங்கள் குறித்து குறிப்பு வரைக.
Write a note on reforms of Ramalinga Adigal.
2 marks
18.
லக்னோ ஒப்பந்தத்தின் முக்கிய அம்சங்களை தொகுத்து வழங்கவும்.
Summarise the essence of Lucknow Pact.
2 marks
19.
பதுங்கு குழி போர் முறை குறித்து நீங்கள் அறிந்ததென்ன ?
What do you know of Trench Warfare ?
2 marks
20.
பேரிடர் அபாய நேர்வு – வரையறுக்கவும்.
Define : Disaster Risk Reduction.
2 marks
21.
பன்னாட்டு வணிகம் – வரையறுக்கவும்.
Define "International trade".
2 marks
22.
கோயம்புத்தூர் ஏன் தமிழ்நாட்டின் 'மான்செஸ்டர்' என அழைக்கப்படுகிறது ?
Why is Coimbatore called the Manchester of Tamil Nadu ?
2 marks
23.
இயற்கை எரிவாயு என்றால் என்ன ?
What is natural gas ?
2 marks
24.
வெப்ப குறைவு விகிதம் என்றால் என்ன ?
What is meant by normal lapse rate ?
2 marks
25.
இந்தியாவின் செம்மொழிகள் யாவை ?
What are the classical languages in India ?
2 marks
26.
பிரிக்ஸ் (BRICS) உறுப்பு நாடுகளின் பெயர்களைக் குறிப்பிடுக.
Mention the member countries of BRICS.
2 marks
27.
மொத்த உள்நாட்டு உற்பத்தி என்றால் என்ன ?
What is meant by Gross Domestic Product ?
2 marks
28.
விகித வரி விதிப்பு முறை என்றால் என்ன ?
What is Proportionate tax ?
2 marks

பகுதி – III / PART – III

குறிப்பு : எவையேனும் 10 வினாக்களுக்கு விடையளிக்கவும். வினா எண் 42 -க்கு கட்டாயமாக விடையளிக்கவும். (பார்வையற்ற மாணவர்கள் காலக்கோடு மற்றும் வரைபடத்தில் முறையே நிகழ்வுகளையும் இடங்களையும் குறிப்பிட்டு காட்டுவதற்கு பதிலாக அவற்றைப் பற்றிய குறிப்புகள் மட்டும் எழுத வேண்டும்.)
Note : Answer any 10 questions. Question No. 42 is compulsory. (Blind candidates have to write only notes for the questions related to Timeline chart and map.)
29.

கோடிட்ட இடங்களை நிரப்புக.

  1. டானென்பர்க் போரில் ________ பேரிழப்புகளுக்கு உள்ளானது.
  2. சாத்தனூர் அணை ________ ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது.
  3. ________ தமிழ்நாட்டின் மாநில விலங்கு ஆகும்.
  4. இந்திய அரசியலமைப்பு ________ அரசாங்கத்தை வழங்குகிறது.
  5. ________ ஆம் ஆண்டில் தேசிய உணவு பாதுகாப்புச் சட்டம் இந்திய நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்டது.

Fill in the blanks.

  1. In the battle of Tannenberg, ________ suffered heavy losses.
  2. Sathanur dam is constructed across the river ________.
  3. ________ is the Tamil Nadu state animal.
  4. The Constitution of India envisages a ________ government.
  5. In the year ________, National Food Security Act was passed by the Indian Parliament.
5 marks
30.
இரண்டாம் உலகப் போரின் விளைவுகளை ஆய்வு செய்க.
Analyse the effects of World War II.
5 marks
31.
வேலூரில் 1806 -ல் வெடித்த புரட்சியின் கூறுகளை விளக்குக.
Account for the outbreak of Vellore Revolt in 1806.
5 marks
32.

(அ) வேறுபடுத்துக.

  1. மேற்கு தொடர்ச்சி மலைகள் மற்றும் கிழக்கு தொடர்ச்சி மலைகள்
  2. உலோகம் மற்றும் அலோக கனிமங்கள்

(ஆ) காரணம் கூறுக.
கிழக்கு தொடர்ச்சி மலைகள் தொடர்ச்சியற்று காணப்படுகிறது.

(a) Distinguish between :

  1. Western Ghats and Eastern Ghats.
  2. Metallic and Non metallic minerals

(b) Give reasons for the following :
Eastern Ghats are not a continuous range.

5 marks
33.
சட்ட மறுப்பு இயக்கத்தில் தமிழ்நாடு வகித்த பங்கினை விவரிக்கவும்.
Describe the role of Tamil Nadu in the Civil Disobedience Movement.
5 marks
34.
தென்மேற்கு பருவக் காற்று குறித்து எழுதுக.
Write about south west monsoon.
5 marks
35.
இந்திய மண் வகைகள் ஏதேனும் ஐந்தினைக் குறிப்பிட்டு, மண்ணின் பண்புகள் மற்றும் பரவல் பற்றி விவரிக்கவும்.
State any five types of soil in India and explain the characteristics and distribution of soil.
5 marks
36.
இந்தியாவின் சாலைகளை வகைப்படுத்தி விளக்குக.
Classify and explain the roadways in India.
5 marks
37.
இந்திய அரசியலமைப்பின் சிறப்புக் கூறுகளை விளக்குக.
Explain the salient features of the Constitution of India.
5 marks
38.
இந்திய பிரதம அமைச்சரின் பணிகள் மற்றும் கடமைகள் யாவை ?
What are the duties and functions of Prime Minister of India ?
5 marks
39.
பொது விநியோக முறையை விவரிக்கவும்.
Elaborate on the Public Distribution System.
5 marks
40.
MNC வளர்ச்சிக்கான காரணங்களை விவரிக்கவும்.
Explain the reason for the growth of MNC.
5 marks
41.

கீழ்க்காண்பனவற்றிற்கு காலக்கோடு வரைக.

1910 முதல் 1930 வரையிலான ஆண்டுகட்கு உட்பட்ட முக்கிய ஐந்து நிகழ்வுகளை காலக்கோட்டில் எழுதுக.

Draw a Timeline for the following :

Write any five important events between 1910 and 1930.

5 marks
42.

உலக வரைபடத்தில் பின்வரும் இடங்களை குறிக்கவும்.

  1. கிரேட் பிரிட்டன்
  2. பிரான்ஸ்
  3. இத்தாலி
  4. ஜெர்மனி
  5. மொராக்கோ

Mark the following places on the map of world.

  1. Great Britain
  2. France
  3. Italy
  4. Germany
  5. Morocco
5 marks

பகுதி – IV / PART – IV

குறிப்பு : பின்வரும் வினாக்களுக்கு விடையளிக்கவும். (பார்வையற்ற மாணவர்கள் வரைபட தொடர்புடைய வினாக்களுக்கு குறிப்புகள் மட்டும் எழுதவும்.)
Note : Answer the following questions. (Blind candidates have to write only notes for the questions related to map.)
43.
(அ)தீபகற்ப பீடபூமிகள் பற்றி விவரிக்கவும்.
(a)Explain the Peninsular plateaus.
அல்லது / OR
(ஆ)1857 பெருங்கலகம் தோல்வியடைய காரணங்களை ஆராய்க.
(b)Discuss the causes for failure of Revolt of 1857.
8 marks
44.
(அ)

கொடுக்கப்பட்டுள்ள இந்திய வரைபடத்தில் கீழ்க்காணும் இடங்களைக் குறிக்கவும்.

  1. ஆரவல்லி
  2. நர்மதை
  3. தக்காண பீடபூமி
  4. பன்னா உயிர்கோள பெட்டகம்
  5. தார் பாலைவனம்
  6. மேற்கு தொடர்ச்சி மலைகள்
  7. பாரதீப்
  8. கரிசல்மண் பகுதி ஒன்று
(a)

Mark the following places on the given outline map of India.

  1. Aravalli
  2. Narmada
  3. Deccan plateau
  4. Panna Biosphere Reserve
  5. Thar desert
  6. Western Ghats
  7. Paradeep
  8. Black soil region (1)
அல்லது / OR
(ஆ)

கொடுக்கப்பட்டுள்ள தமிழ்நாடு வரைபடத்தில் கீழ்க்காணும் இடங்களைக் குறிக்கவும்.

  1. பாலாறு
  2. வேடந்தாங்கல்
  3. காபி விளையும் பகுதி
  4. முல்லை பெரியார் அணை
  5. பட்டு தொழில் நடைபெறும் இடம்
  6. எண்ணூர்
  7. விமான நிலையம் (ஏதேனும் ஒன்று)
  8. இந்தியப் பெருங்கடல்
(b)

Mark the following places on the given outline map of Tamil Nadu.

  1. River Palar
  2. Vedanthangal
  3. Coffee growing area
  4. Mullai Periyar dam
  5. Silk industry region
  6. Ennore
  7. Airport (Any one)
  8. Indian Ocean
8 marks
⬇️ Download PDF All Social Science papers