TN Online TestSamacheer Kalvi practice

12th Standard Accountancy Question Paper March 2023

Paper code 6657 90 marks 180 minutes

The complete March 2023 public exam paper exactly as printed: every question in Tamil and English. Download the PDF, or take Part I as a free online test.

கணக்குப்பதிவியல் / Accountancyமார்ச் 2023 · March 2023

பகுதி – I / PART – I

குறிப்பு : (i) அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும். (ii) கொடுக்கப்பட்டுள்ள மாற்று விடைகளில் மிகவும் ஏற்புடைய விடையைத் தேர்ந்தெடுத்துக் குறியீட்டுடன் விடையினையும் சேர்த்து எழுதவும்.
Note : (i) Answer all the questions. (ii) Choose the most appropriate answer from the given four alternatives and write the option code and the corresponding answer.
1.
A, B மற்றும் C என்ற கூட்டாளிகள் 4 : 2 : 3 என்ற விகிதத்தில் இலாப நட்டத்தை பகிர்ந்து வந்தனர். தற்போது 'A' விலகுகிறார். B மற்றும் C -யின் புதிய இலாபப் பகிர்வு விகிதம் :
(அ) 2 : 3
(ஆ) 4 : 2
(இ) 2 : 1
(ஈ) 3 : 2
A, B, C are partners sharing profits and losses in the ratio of 4 : 2 : 3. 'A' retires. The new profit sharing ratio between B and C will be :
(a) 2 : 3
(b) 4 : 2
(c) 2 : 1
(d) 3 : 2
Show answer ▾ (அ) / (a) 2 : 3 · Solved one-mark questions →
1 mark
2.
கூட்டாளிகளிடமிருந்து நிறுவனம் கடன்கள் பெற்றிருந்தால், அக்கடன்களுக்கு, இந்திய கூட்டாண்மைச் சட்டம், 1932 -ன் படி வழங்கப்படும் வட்டி வீதம் :
(அ) ஆண்டுக்கு 5%
(ஆ) ஆண்டுக்கு 8%
(இ) ஆண்டுக்கு 6%
(ஈ) ஆண்டுக்கு 12%
As per the Indian Partnership Act, 1932, the rate of interest allowed on loans advanced by partners is :
(a) 5% per annum
(b) 8% per annum
(c) 6% per annum
(d) 12% per annum
Show answer ▾ (இ) / (c) 6% per annum · Solved one-mark questions →
1 mark
3.
உரிமையாளரின் சொத்துகள் ₹ 5,00,000 மற்றும் பொறுப்புகள் ₹ 2,00,000 எனில் அவருடைய முதல்தொகை :
(அ) ₹ 7,00,000
(ஆ) ₹ 5,00,000
(இ) ₹ 3,00,000
(ஈ) ₹ 2,00,000
The amount of Capital of the proprietor, if his Assets are ₹ 5,00,000 and Liabilities are ₹ 2,00,000 :
(a) ₹ 7,00,000
(b) ₹ 5,00,000
(c) ₹ 3,00,000
(d) ₹ 2,00,000
Show answer ▾ (இ) / (c) ₹ 3,00,000 · Solved one-mark questions →
1 mark
4.
நிதி என்னும் சொல் குறிப்பிடுவது :
(அ) நிலைச் சொத்துகள்
(ஆ) நடப்புப் பொறுப்புகள்
(இ) நீண்டகாலச் சொத்துகள்
(ஈ) நடைமுறை முதல்
The term "fund" refers to :
(a) Fixed Assets
(b) Current Liabilities
(c) Non-current Assets
(d) Working Capital
Show answer ▾ (ஈ) / (d) Working Capital · Solved one-mark questions →
1 mark
5.
பின்வரும் வாக்கியங்களில் எது சரியானது ?
(அ) நற்பெயர் ஒரு கற்பனைச் சொத்து
(ஆ) நற்பெயர் ஒரு புலனாகாச் சொத்து
(இ) நற்பெயரினை வாங்க முடியாது
(ஈ) நற்பெயர் ஒரு நடப்புச் சொத்து
Which of the following statement is true ?
(a) Goodwill is a fictitious asset
(b) Goodwill is an intangible asset
(c) Goodwill cannot be acquired
(d) Goodwill is a current asset
Show answer ▾ (ஆ) / (b) Goodwill is an intangible asset · Solved one-mark questions →
1 mark
6.
ஒரு பொது அளவு இருப்புநிலைக் குறிப்பில், நீண்டகாலச் சொத்துகளின் சதவீதம் 85 எனில், நடப்புச் சொத்துகளின் சதவீதம் எவ்வளவு ?
(அ) 15
(ஆ) 185
(இ) 100
(ஈ) 115
In a Common-size Balance Sheet, if the percentage of non-current Asset is 85, what would be the percentage of Current Assets ?
(a) 15
(b) 185
(c) 100
(d) 115
Show answer ▾ (அ) / (a) 15 · Solved one-mark questions →
1 mark
7.
விற்பனை மூலம் பெற்ற வருவாய்க்கான அடக்க விலை ₹ 3,00,000; அவ்வாண்டின் தொடக்கச் சரக்கிருப்பு ₹ 60,000; அவ்வாண்டின் இறுதிச் சரக்கிருப்பு ₹ 40,000 எனில், சரக்கிருப்பு சுழற்சி விகிதம் :
(அ) 6 மடங்கு
(ஆ) 2 மடங்கு
(இ) 8 மடங்கு
(ஈ) 3 மடங்கு
Cost of Revenue from operations ₹ 3,00,000; Inventory in the beginning of the year ₹ 60,000; Inventory at the close of the year ₹ 40,000. Inventory turnover ratio is :
(a) 6 times
(b) 2 times
(c) 8 times
(d) 3 times
Show answer ▾ (அ) / (a) 6 times · Solved one-mark questions →
1 mark
8.
ஒறுப்பிழப்பு செய்த பங்குகளை, மறுவெளியீடு செய்த பிறகு, பங்கு ஒறுப்பிழப்புக் கணக்கின் இருப்பு மாற்றப்படுவது :
(அ) பத்திர முனைமக் கணக்கிற்கு
(ஆ) பொதுக் காப்பு கணக்கிற்கு
(இ) உபரி கணக்கிற்கு
(ஈ) முதலினக் காப்பு கணக்கிற்கு
After the Forfeited shares are Reissued, the balance in the Forfeited shares account should be transferred to :
(a) Securities Premium account
(b) General Reserve account
(c) Surplus account
(d) Capital Reserve account
Show answer ▾ (ஈ) / (d) Capital Reserve account · Solved one-mark questions →
1 mark
9.
F11 சாவியின் பயன்பாடு :
(அ) நிறுவன கட்டமைப்பு
(ஆ) நிறுவனப் பண்புக்கூறுகள்
(இ) சட்டம் மற்றும் வரிவிதிப்பு பண்புக்கூறுகள்
(ஈ) கணக்கியல் சான்றாவணங்கள்
Function key F11 is used for :
(a) Company Configuration
(b) Company Features
(c) Statutory and Taxation features
(d) Accounting Vouchers
Show answer ▾ (ஆ) / (b) Company Features · Solved one-mark questions →
1 mark
10.
கூட்டாளி விலகலின்போது பொது காப்பு மாற்றப்படுவது :
(அ) தொடரும் கூட்டாளிகளின் முதல் கணக்கிற்கு
(ஆ) அனைத்து கூட்டாளிகளின் முதல் கணக்கிற்கு
(இ) நினைவுக் குறிப்பு மறுமதிப்பீட்டு கணக்கிற்கு
(ஈ) மறுமதிப்பீட்டுக் கணக்கிற்கு
On retirement of a partner, General Reserve is transferred to the :
(a) Capital account of the continuing partners
(b) Capital account of all the partners
(c) Memorandum Revaluation account
(d) Revaluation account
Show answer ▾ (ஆ) / (b) Capital account of all the partners · Solved one-mark questions →
1 mark
11.
ஒரு மன்றத்தில் உள்ள 300 உறுப்பினர்கள் ஆண்டு சந்தாவாக ₹ 100 செலுத்துகின்றனர். நடப்பாண்டில் கூடியுள்ள சந்தா இன்னமும் பெறப்படாதது ₹ 200. முன்கூட்டி பெற்ற சந்தா ₹ 300. வருவாய் மற்றும் செலவினக் கணக்கில் காட்டப்பட வேண்டிய சந்தா தொகையினைக் கண்டறியவும்.
(அ) ₹ 29,900
(ஆ) ₹ 30,000
(இ) ₹ 30,100
(ஈ) ₹ 30,700
There are 300 members in a club each paying ₹ 100 as annual subscription. Subscription due but not received for the Current Year is ₹ 200. Subscription received in advance is ₹ 300. Find out the amount of subscription to be shown in the Income and Expenditure account.
(a) ₹ 29,900
(b) ₹ 30,000
(c) ₹ 30,100
(d) ₹ 30,700
Show answer ▾ (ஆ) / (b) ₹ 30,000 · Solved one-mark questions →
1 mark
12.
புற அக பொறுப்புகள் விகிதம் அளவிடுவது :
(அ) இலாபம் ஈட்டும் திறன்
(ஆ) குறுகிய காலக் கடன் தீர்க்கும் திறன்
(இ) செயல்திறன்
(ஈ) நீண்ட காலக் கடன் தீர்க்கும் திறன்
Debt Equity ratio is a measure of :
(a) Profitability
(b) Short term solvency
(c) Efficiency
(d) Long term solvency
Show answer ▾ (ஈ) / (d) Long term solvency · Solved one-mark questions →
1 mark
13.
எதிர்ப்பதிவு சான்றாவணம் எதற்காகப் பயன்படுத்தப்படுகிறது ?
(அ) அறிக்கைகள்
(ஆ) தலைமைப் பதிவு
(இ) சொத்துகள் கடனுக்கு வாங்கியது
(ஈ) அலுவலக பயன்பாட்டிற்காக வங்கியில் இருந்து எடுத்த ரொக்கம்
Contra Voucher is used for :
(a) Reports
(b) Master entry
(c) Credit purchase of assets
(d) Withdrawal of cash from bank for office use
Show answer ▾ (ஈ) / (d) Withdrawal of cash from bank for office use · Solved one-mark questions →
1 mark
14.
மறுமதிப்பீட்டில் சொத்துகளின் மதிப்பு உயர்வது :
(அ) நட்டம்
(ஆ) செலவு
(இ) ஆதாயம்
(ஈ) இவற்றுள் எதுவுமில்லை
On Revaluation, the increase in the value of assets leads to :
(a) Loss
(b) Expense
(c) Gain
(d) None of these
Show answer ▾ (இ) / (c) Gain · Solved one-mark questions →
1 mark
15.
முதலைக் காட்டிலும் மிகுதியாக உள்ள சொத்துகள் :
(அ) பொறுப்புகள்
(ஆ) நட்டம்
(இ) இலாபம்
(ஈ) ரொக்கம்
The Excess of Assets over Capital is :
(a) Liabilities
(b) Loss
(c) Profit
(d) Cash
Show answer ▾ (அ) / (a) Liabilities · Solved one-mark questions →
1 mark
16.
பின்வருவனவற்றுள் வேறுபட்ட ஒன்றைத் தேர்ந்தெடுக்கவும் :
(அ) தணிக்கைக் கட்டணம்
(ஆ) மின் கட்டணம்
(இ) ஆயுள் உறுப்பினர் கட்டணம்
(ஈ) தொலைபேசிக் கட்டணம்
Find the odd one out from the following.
(a) Audit fees
(b) Electricity charges
(c) Life membership fees
(d) Telephone charges
Show answer ▾ (இ) / (c) Life membership fees · Solved one-mark questions →
1 mark
17.
விலகும் கூட்டாளிக்குரிய தீர்வுத்தொகை உடனடியாக செலுத்தாதபோது, அது மாற்றப்படும் கணக்கு :
(அ) விலகும் கூட்டாளியின் கடன் க/கு
(ஆ) வங்கி க/கு
(இ) பிற கூட்டாளிகளின் முதல் க/கு
(ஈ) விலகும் கூட்டாளியின் முதல் க/கு
If the final amount due to a retiring partner is not paid immediately, it is transferred to :
(a) Retiring partner's Loan A/c
(b) Bank A/c
(c) Other partners' Capital A/c
(d) Retiring partner's Capital A/c
Show answer ▾ (அ) / (a) Retiring partner's Loan A/c · Solved one-mark questions →
1 mark
18.
கூட்டாளி சேர்ப்பின் போது புதிய கூட்டாளி நற்பெயருக்காகக் கொண்டு வரும் தொகை யாருடைய முதல் கணக்கில் வரவு வைக்கப்பட வேண்டும் ?
(அ) புதிய கூட்டாளி
(ஆ) அனைத்து கூட்டாளிகள்
(இ) தியாகம் செய்த கூட்டாளிகள்
(ஈ) பழைய கூட்டாளிகள்
At the time of admission, the goodwill brought by the new partner may be credited to the Capital accounts of :
(a) the new partner
(b) all the partners
(c) the sacrificing partners
(d) the old partners
Show answer ▾ (இ) / (c) the sacrificing partners · Solved one-mark questions →
1 mark
19.
பின்வருவனவற்றில் எது இலாப நட்டப் பகிர்வு கணக்கில் காட்டப்படும் ?
(அ) கூட்டாளியின் ஊதியம்
(ஆ) அலுவலகச் செலவுகள்
(இ) வங்கிக்கடன் மீதான வட்டி
(ஈ) பணியாளர் ஊதியம்
Which of the following is shown in Profit and Loss Appropriation account ?
(a) Partner's salary
(b) Office expenses
(c) Interest on bank loan
(d) Salary of staff
Show answer ▾ (அ) / (a) Partner's salary · Solved one-mark questions →
1 mark
20.
சராசரி இலாபம் ₹ 50,000 மற்றும் சாதாரண இலாபம் ₹ 40,000 -ஆக இருக்கும்போது, உயர் இலாபம் :
(அ) ₹ 10,000
(ஆ) ₹ 25,000
(இ) ₹ 15,000
(ஈ) ₹ 5,000
When the average profit is ₹ 50,000 and the normal profit is ₹ 40,000, Super Profit is :
(a) ₹ 10,000
(b) ₹ 25,000
(c) ₹ 15,000
(d) ₹ 5,000
Show answer ▾ (அ) / (a) ₹ 10,000 · Solved one-mark questions →
1 mark

பகுதி – II / PART – II

குறிப்பு : எவையேனும் ஏழு வினாக்களுக்கு விடையளிக்கவும். வினா எண் 30 -க்கு கட்டாயமாக விடையளிக்கவும்.
Note : Answer any seven questions. Question No. 30 is Compulsory.
21.
இரட்டைப்பதிவு முறை பின்பற்றாதபோது சிறிய அளவிலான தனி வணிகர் பொதுவாக பராமரித்து வரும் கணக்குகளைத் தருக.
State the accounts generally maintained by a small sized sole trader when double entry accounting system is not followed.
2 marks
22.
இலாப நோக்கமற்ற அமைப்பின் வருவாயின செலவுகள் ஏதேனும் நான்கினைத் தரவும்.
Give four examples for revenue expenditure of not-for-profit organisation.
2 marks
23.
கூட்டாண்மை நிறுவனத்தின் நற்பெயரை மதிப்பிடும் ஏதேனும் இரண்டு சூழ்நிலைகளைத் தரவும்.
State any two circumstances under which goodwill of a partnership firm is valued.
2 marks
24.
இறந்த கூட்டாளிக்கு செலுத்த வேண்டிய தொகையினை அவருடைய நிறைவேற்றாளர் கணக்கிற்கு மாற்றுவதற்குரிய குறிப்பேட்டுப் பதிவினைத் தரவும்.
Give the journal entry to be passed to transfer the amount due to the deceased partner to the executor of the deceased partner.
2 marks
25.
மிகை ஒப்பம் என்றால் என்ன ?
What is over-subscription ?
2 marks
26.
விரைவு விகிதம் என்றால் என்ன ?
What is Quick Ratio ?
2 marks
27.
ஏதேனும் ஐந்து கணக்கியல் அறிக்கைகளைக் கூறுக.
State any five accounting reports.
2 marks
28.

பின்வரும் தகவல்களிலிருந்து இலாபம் அல்லது நட்டம் கண்டறியவும்.

விவரம்₹
2021 ஜனவரி 1 அன்று, முதல்2,60,000
2021 டிசம்பர் 31 அன்று, முதல்3,60,000
அவ்வாண்டில் கொண்டு வந்த கூடுதல் முதல்20,000
அவ்வாண்டில் எடுப்புகள்50,000

From the following particulars ascertain profit or loss.

Particulars₹
Capital as on 1st January 20212,60,000
Capital as on 31st December 20213,60,000
Additional Capital introduced during the year20,000
Drawings made during the year50,000
2 marks
29.
ராம் மற்றும் ஷியாம் இருவரும் கூட்டாளிகள். ராம் ஒவ்வொரு அரையாண்டின் தொடக்கத்திலும் ₹ 12,000 எடுத்துக் கொண்டார். எடுப்புகள் மீதான வட்டி ஆண்டுக்கு 10%. 2021 டிசம்பர் 31 -ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய எடுப்புகள் மீதான வட்டியினை சராசரி காலமுறையைப் பயன்படுத்திக் கணக்கிடவும்.
Ram and Shyam are partners. Ram withdraws ₹ 12,000 at the beginning of each half year. Interest on drawings is chargeable @10% p.a. Calculate interest on drawings for the year ending 31st December 2021 using average period method.
2 marks
30.
அருள் வணிக நிறுவனத்தின் நற்பெயர் ₹ 1,20,000. சராசரி இலாபம் ₹ 40,000. கொள்முதல் ஆண்டுகளின் எண்ணிக்கையைக் கணக்கிடவும்.
Value of the goodwill of Arul Enterprises is ₹ 1,20,000, Average profit is ₹ 40,000. Calculate the number of years of purchase.
2 marks

பகுதி – III / PART – III

குறிப்பு : எவையேனும் ஏழு வினாக்களுக்கு விடையளிக்கவும். வினா எண் 40 -க்கு கட்டாயமாக விடையளிக்கவும்.
Note : Answer any seven questions. Question number 40 is Compulsory.
31.
இரட்டைப்பதிவு முறை மற்றும் முழுமைபெறா பதிவேடுகளுக்கு இடையே உள்ள வேறுபாடுகள் யாவை ?
What are the differences between double entry system and incomplete records ?
3 marks
32.

இலாப நோக்கமற்ற அமைப்பில் கீழ்க்காணும் செலவுகள், முதலினமா அல்லது வருவாயினமா என வகைப்படுத்துக.

  1. மதிப்பூதியம்
  2. விளையாட்டு உபகரணம் வாங்குதல்
  3. நூலகத்திற்கு புத்தகங்கள் வாங்குதல்

Classify the following expenditure of not-for-profit organisation as Capital or Revenue.

  1. Honorarium
  2. Purchase of sports equipment
  3. Purchase of books for library
3 marks
33.
அந்தோணி மற்றும் அக்பர் என்ற இரு கூட்டாளிகள் தங்கள் இலாபம் மற்றும் நட்டங்களை 3 : 2 என்ற விகிதத்தில் பகிர்ந்து வந்தனர். 2018 ஜனவரி 1 அன்று அவர்களின் முதல் கணக்குகளின் இருப்புகள், அந்தோணி ₹ 60,000 மற்றும் அக்பர் ₹ 40,000 ஆகும். 2018 ஏப்ரல் 1 அன்று அந்தோணி கூடுதல் முதலாக ₹ 10,000 கொண்டு வந்தார். அவ்வாண்டில் அக்பர் ₹ 5,000 கூடுதல் முதல் கொண்டு வந்தார். 2018 டிசம்பர் 31 -ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய முதல் மீது வட்டி ஆண்டுக்கு 6% எனக் கணக்கிடவும்.
Antony and Akbar were partners who shared profits and losses in the ratio of 3 : 2. Balance in their Capital account on 1st January 2018 was, Antony ₹ 60,000 and Akbar ₹ 40,000. On 1st April 2018 Antony introduced additional capital of ₹ 10,000. Akbar introduced additional capital of ₹ 5,000 during the year. Calculate interest on capital at 6% p.a. for the year ending 31st December 2018.
3 marks
34.
நற்பெயரைத் தீர்மானிக்கும் ஏதேனும் ஆறு காரணிகளைத் தரவும்.
State any six factors determining Goodwill.
3 marks
35.

சாம் மற்றும் ஜோஸ் என்னும் கூட்டாளிகள் 3 : 2 என்னும் விகிதத்தில் இலாபம் மற்றும் நட்டங்களைப் பகிர்ந்து வந்தனர். 2018 ஏப்ரல் 1 அன்று ஜோயல் என்பவரை கூட்டாளியாக சேர்த்துக் கொண்டனர். ஜோயல் கூட்டாண்மையில் சேர்ந்த அன்று நிறுவன ஏடுகளில் நற்பெயர் ₹ 20,000 ஆக இருந்தது. மாறுபடும் முதல் முறையில் கணக்குகள் பராமரிக்கப்படுவதாகக் கருதி கூட்டாளிகளின் பின்வரும் முடிவுகளின்படி குறிப்பேட்டுப் பதிவுகளைத் தரவும்.

(அ) ஏட்டில் உள்ள நற்பெயர் தொகை முழுவதையும் போக்கெழுதுவது.

(ஆ) ஏட்டில் உள்ள நற்பெயரில் ₹ 10,000 -ஐ போக்கெழுதுவது.

Sam and Jose are partners in a firm sharing profits and losses in the ratio of 3 : 2. On 1st April 2018, they admitted Joel as a partner. On the date of Joel's admission, goodwill appeared in the books of the firm as ₹ 20,000. Assuming that the accounts are maintained on Fluctuating Capital method, pass the necessary journal entries if the partners decided to :

(a) Write off the entire amount of existing goodwill.

(b) Write off ₹ 10,000 of the existing goodwill.

3 marks
36.
அழைப்பு முன்பணம் குறித்து சுருக்கமாக எழுதவும்.
Write a brief note on calls in advance.
3 marks
37.

குமார் நிறுமத்தின் பின்வரும் விவரங்களிலிருந்து 2018 மார்ச் 31 -ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய பொது அளவு வருமான அறிக்கையை தயார் செய்யவும்.

விவரம்2017-18
₹
விற்பனை மூலம் பெற்ற வருவாய்5,00,000
இதர வருமானம்20,000
செலவுகள்3,00,000

From the following particulars of Kumar Ltd., prepare a Common-size income statement for the year ended 31st March 2018.

Particulars2017-18
₹
Revenue from operations5,00,000
Other income20,000
Expenses3,00,000
3 marks
38.
விவின், ஹரி மற்றும் ஜாய் என்ற கூட்டாளிகள் சம விகிதத்தில் இலாபம் மற்றும் நட்டத்தினைப் பகிர்ந்து வருகின்றனர். 31-3-2017 அன்று ஹரி விலகினார். அவர் விலகிய நாளில், நிறுவனத்தின் ஏடுகளில் பொதுகாப்பு ₹ 60,000 காட்டியது. பொதுக்காப்பை மாற்றுவதற்கான குறிப்பேட்டுப் பதிவைத் தரவும்.
Vivin, Hari and Joy are partners sharing profits and losses equally. On 31-3-2017 Hari retired. On the date of retirement, the books of the firm showed a general reserve of ₹ 60,000. Pass the journal entries to transfer the general reserve.
3 marks
39.
Tally ERP 9 -ல் பொதுவாக பயன்படுத்தப்படும் சான்றாவணங்களின் வகைகளைக் குறிப்பிடவும்.
Mention the commonly used Voucher types in Tally ERP 9.
3 marks
40.
சரக்கிருப்பு மற்றும் முன்கூட்டி செலுத்திய செலவுகள் நீர்மைச் சொத்தாகக் கருதப்படுவதில்லை. காரணம் கூறவும்.
Inventory and Prepaid expenses are not considered as Liquid Assets - State reasons.
3 marks

பகுதி – IV / PART – IV

குறிப்பு : அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்.
Note : Answer all the questions.
41.
(அ)

2018, ஏப்ரல் 1 அன்று சுபா தன்னுடைய தொழிலை ₹ 1,20,000 முதலுடன் தொடங்கினார். அவர் முறையான கணக்கேடுகளை பராமரிக்கவில்லை. 2019, மார்ச் 31 அன்று அவருடைய ஏடுகளிலிருந்து பெறப்பட்ட விவரங்கள் பின்வருமாறு :

விவரம்₹விவரம்₹
வங்கி மேல்வரைப்பற்று50,000சரக்கிருப்பு1,60,000
கடனாளிகள்1,80,000கடனீந்தோர்90,000
பெறுவதற்குரிய மாற்றுச்சீட்டு70,000செலுத்தற்குரிய மாற்றுச்சீட்டு2,40,000
கணினி30,000கை ரொக்கம்60,000
இயந்திரம்3,00,000

அவ்வாண்டில் அவர் தன்னுடைய சொந்த பயனுக்காக ₹ 30,000 எடுத்துக் கொண்டார். அவ்வாண்டில் அவர் கொண்டு வந்த கூடுதல் முதல் ₹ 40,000. அவருடைய இலாபம் அல்லது நட்டம் கண்டறியவும்.

(a)

On 1st April 2018 Subha started her business with a capital of ₹ 1,20,000. She did not maintain proper books of accounts. Following particulars are obtained from her books as on 31.3.2019.

Particulars₹Particulars₹
Bank overdraft50,000Stock-in-trade1,60,000
Debtors1,80,000Creditors90,000
Bills receivable70,000Bills payable2,40,000
Computer30,000Cash in hand60,000
Machinery3,00,000

During the year she withdrew ₹ 30,000 for her personal use. She introduced further capital of ₹ 40,000 during the year. Calculate her profit or loss.

அல்லது / OR
(ஆ)

இராஜன் மற்றும் செல்வா இருவரும் கூட்டாளிகள். அவர்கள் 3 : 1 விகிதத்தில் இலாபம் மற்றும் நட்டங்களைப் பகிர்ந்து வந்தனர். அவர்களது 31-03-2017 நாளன்றைய இருப்புநிலைக் குறிப்பு பின்வருமாறு இருந்தது.

பொறுப்புகள்₹₹சொத்துகள்₹
முதல் கணக்குகள்கட்டடம்25,000
  இராஜன்30,000அறைகலன்1,000
  செல்வா16,00046,000சரக்கிருப்பு20,000
கடனாளிகள்16,000
பொதுக் காப்பு4,000பெறுவதற்குரிய மாற்றுச்சீட்டு3,000
கடனீந்தோர்37,500வங்கி ரொக்கம்12,500
இலாப நட்ட க/கு (நட்டம்)10,000
87,50087,500

1.4.2017 -இல் பின்வரும் நிபந்தனைகளுடன் கணேசன் என்பவர் புதிய கூட்டாளியாக சேருகிறார்.

  1. கணேசன் \( \frac{1}{5} \) இலாபப்பங்கிற்கென ₹ 10,000 முதல் கொண்டு வருகிறார்.
  2. சரக்கிருப்பு மற்றும் அறைகலன் மதிப்பில் 10% குறைத்து மதிப்பிடப்படுகிறது. கடனாளிகள் மீது 5% ஐயக்கடன் ஒதுக்கு உருவாக்கப்படுகிறது.
  3. கட்டடத்தின் மீது 20% மதிப்பேற்றம் செய்யப்படுகிறது.

மறுமதிப்பீட்டு கணக்கு, புதிய கூட்டாளி சேர்க்கைக்குப் பின் உள்ள கூட்டாளிகளின் முதல் கணக்கு மற்றும் இருப்பு நிலைக்குறிப்பு தயார் செய்யவும்.

(b)

Rajan and Selva are partners sharing profits and losses in the ratio of 3 : 1. Their Balance Sheet as on 31st March 2017 is as under.

Liabilities₹₹Assets₹
Capital accounts :Building25,000
  Rajan30,000Furniture1,000
  Selva16,00046,000Stock20,000
Debtors16,000
General Reserve4,000Bills Receivable3,000
Creditors37,500Cash at Bank12,500
Profit and Loss account (Loss)10,000
87,50087,500

On 1.4.2017, they admit Ganesan as a new partner on the following arrangements.

  1. Ganesan brings ₹ 10,000 as capital for \( \frac{1}{5} \) share of profit.
  2. Stock and furniture is to be reduced by 10%, a reserve of 5% on debtors for doubtful debts is to be created.
  3. Appreciate buildings by 20%.

Prepare Revaluation account, Partner's capital account and the Balance Sheet of the firm after admission of the new partner.

5 marks
42.
(அ)

பின்வரும் விவரங்களிலிருந்து மொத்த விற்பனையைக் கணக்கிடவும்.

விவரம்₹விவரம்₹
2018, ஏப்ரல் 1 அன்று கடனாளிகள்2,50,000பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு மறுக்கப்பட்டது15,000
2018, ஏப்ரல் 1 அன்று பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு60,000உள் திருப்பம்50,000
கடனாளிகளிடமிருந்து பெற்ற ரொக்கம்7,25,0002019, மார்ச் 31 அன்று பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு90,000
பெறுதற்குரிய மாற்றுச் சீட்டுக்காக ரொக்கம் பெற்றது1,60,0002019, மார்ச் 31 அன்று பற்பல கடனாளிகள்2,40,000
வாராக்கடன்30,000ரொக்க விற்பனை3,15,000
(a)

From the following particulars, calculate total sales.

Particulars₹Particulars₹
Debtors on 1st April 20182,50,000Bills receivable dishonoured15,000
Bills receivable on 1st April 201860,000Returns inward50,000
Cash received from debtors7,25,000Bills receivable on 31st March 201990,000
Cash received for bills receivable1,60,000Sundry debtors on 31st March, 20192,40,000
Bad debts30,000Cash sales3,15,000
அல்லது / OR
(ஆ)கணினிமயக் கணக்கியல் முறையின் பயன்பாடுகளில் ஏதேனும் ஐந்தினை விளக்கவும்.
(b)Explain any five applications of computerised accounting system.
5 marks
43.
(அ)

திருச்சி கல்வியியல் மன்றத்தின் கீழ்க்காணும் தகவல்களிலிருந்து 2018, டிசம்பர் 31 -ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய பெறுதல்கள் மற்றும் செலுத்தல்கள் கணக்கினைச் தயார் செய்யவும்.

விவரம்₹விவரம்₹
தொடக்க ரொக்க இருப்பு (1.1.2018)20,000பாதுகாப்பு பெட்டக வாடகை பெற்றது12,000
முதலீடுகள் செய்தது80,000அறைகலன் விற்றது5,000
மதிப்பூதியம் செலுத்தியது3,000பொதுச் செலவுகள்7,000
நன்கொடை பெற்றது80,000அஞ்சல் செலவுகள்1,000
தணிக்கைக் கட்டணம் செலுத்தியது2,000சந்தா பெற்றது10,000
(a)

From the following particulars of Trichy Educational Society, prepare Receipts and Payments account for the year ended 31st December, 2018.

Particulars₹Particulars₹
Opening cash balance as on (1.1.2018)20,000Locker rent received12,000
Investments made80,000Sale of furniture5,000
Honorarium paid3,000General expenses7,000
Donation received80,000Postage1,000
Audit fees paid2,000Subscription received10,000
அல்லது / OR
(ஆ)

ராஜன் நிறுமம் ₹ 6,00,000 மதிப்புள்ள இயந்திரத்தை ஜெகன் நிறுவனத்திடமிருந்து வாங்கியது. அது பங்கொன்று ₹ 10 மதிப்புள்ள முற்றிலும் செலுத்தப்பட்ட நேர்மைப் பங்குகளை அவர்களுக்கு செலுத்த வேண்டிய தொகைக்காக வழங்கியது. கீழ்க்கண்ட நிலைகளில் பதிய வேண்டிய குறிப்பேட்டுப் பதிவுகளைத் தரவும்.

  1. பங்குகளை முகமதிப்பில் வெளியிட்டால்
  2. பங்குகளை 50% முனைமத்தில் வெளியிட்டால்
(b)

Rajan Ltd., purchased machinery of ₹ 6,00,000 from Jegan Traders. It issued equity shares of ₹ 10 each fully paid in satisfaction of their claim. What entries will be made if such issue is made ?

  1. at par
  2. at a premium of 50%
5 marks
44.
(அ)

கீழ்க்காணும் திருச்சி மனமகிழ் மன்றத்தின் பெறுதல்கள் மற்றும் செலுத்தல்கள் கணக்கிலிருந்து 2018, மார்ச் 31 -ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய வருவாய் மற்றும் செலவினக் கணக்கினைத் தயாரிக்கவும்.

பெறுதல்கள்₹செலுத்தல்கள்₹
தொடக்க இருப்பு
   கைரொக்கம்
11,000அறைகலன் வாங்கியது10,000
வாடகை2,800
பங்காதாயம் பெற்றது27,600செயலர் மதிப்பூதியம்15,000
பழைய செய்தித்தாள்கள் விற்றது3,000தபால் செலவுகள்1,700
உறுப்பினர் சந்தா31,000பொதுச் செலவுகள்4,350
பாதுகாப்பு பெட்டக வாடகை8,000அச்சு மற்றும் எழுதுபொருள்கள்45,000
முதலீடுகள் மீதான வட்டி1,250தணிக்கைக் கட்டணம்5,000
அறைகலன் விற்றது
   (ஏட்டு மதிப்பு ₹ 4,400)
5,000இறுதி இருப்பு கை ரொக்கம்3,000
86,85086,850
(a)

From the following Receipts and Payments account of Trichy Recreation club, prepare Income and Expenditure account for the year ended 31.03.2018.

Receipts₹Payments₹
To opening balance
   cash in hand
11,000By furniture purchased10,000
By Rent2,800
To Dividend received27,600By Secretary's honorarium15,000
To Sale of old newspapers3,000By postage1,700
To Members' subscription31,000By General expenses4,350
To Locker rent8,000By Printing and Stationery45,000
To Interest on investment1,250By Audit fees5,000
To Sale of furniture
   (Book value ₹ 4,400)
5,000By Closing balance
   Cash in hand
3,000
86,85086,850
அல்லது / OR
(ஆ)

கலா நிறுமத்தின் பின்வரும் தகவல்களிலிருந்து ஒப்பீட்டு நிதிநிலை அறிக்கையைத் தயாரிக்கவும்.

விவரம்2017, மார்ச் 31
₹
2018, மார்ச் 31
₹
I. பங்கு மூலதனம் மற்றும் பொறுப்புகள்
  1. பங்குதாரர் நிதி
    (அ) பங்கு முதல்3,00,0003,60,000
    (ஆ) காப்பும் மிகுதியும்50,00050,000
  2. நீண்டகாலப் பொறுப்புகள்
      நீண்டகாலக் கடன்கள்
50,00040,000
  3. நடப்புப் பொறுப்புகள்
      கணக்குகள் மூலம் செலுத்த வேண்டியவைகள்
20,00012,000
மொத்தம்4,20,0004,62,000
II. சொத்துகள்
  1. நீண்டகாலச் சொத்துகள்
    (அ) நிலைச் சொத்துகள்2,50,0002,90,000
    (ஆ) நீண்டகால முதலீடுகள்50,00040,000
  2. நடப்புச் சொத்துகள்
      சரக்கிருப்பு80,0001,00,000
      ரொக்கம் மற்றும் ரொக்கத்திற்குச் சமமானவைகள்40,00032,000
மொத்தம்4,20,0004,62,000
(b)

From the following particulars, prepare comparative statement of financial position of Kala Ltd.

Particulars31st March, 2017
₹
31st March, 2018
₹
I. EQUITY AND LIABILITIES
  1. Shareholders' Fund
    (a) Share Capital3,00,0003,60,000
    (b) Reserves and Surplus50,00050,000
  2. Non-current liabilities
      Long-term borrowings
50,00040,000
  3. Current liabilities
      Trade payables
20,00012,000
Total4,20,0004,62,000
II. ASSETS
  1. Non-current assets
    (a) Fixed assets2,50,0002,90,000
    (b) Non-current investments50,00040,000
  2. Current assets
      Inventories80,0001,00,000
      Cash and Cash equivalents40,00032,000
Total4,20,0004,62,000
5 marks
45.
(அ)

நரேஷ், மணி மற்றும் முத்து ஆகிய கூட்டாளிகள் 2 : 2 : 1 எனும் விகிதத்தில் இலாபம் மற்றும் நட்டங்களைப் பகிர்ந்து வந்தனர். 2019 மார்ச் 31 -ஆம் நாள் நிறுவனத்திலிருந்து முத்து விலகினார். முத்து விலகிய நாளன்று, ஏடுகளில் நற்பெயர் ₹ 40,000 எனக் காட்டியது. அவர்களின் முதல், மாறுபடும் முதல் எனக் கொண்டு, தேவையான குறிப்பேட்டு பதிவுகளைத் தரவும்.

  1. நற்பெயர் முழுவதையும் போக்கெழுத கூட்டாளிகள் முடிவெடுத்தால்
  2. நற்பெயரில் பாதித்தொகையை போக்கெழுத கூட்டாளிகள் முடிவெடுத்தால்
(a)

Naresh, Mani and Muthu are partners in a firm sharing profits and losses in the ratio of 2 : 2 : 1. On 31st March 2019, Muthu retires from the firm. On the date of Muthu's retirement, goodwill appeared in the books of the firm at ₹ 40,000. By assuming fluctuating capital method, pass the necessary journal entries if the partners decide to :

  1. Write off the entire amount of existing goodwill.
  2. Write off half of the amount of existing goodwill.
அல்லது / OR
(ஆ)

பின்வரும் விவரங்களைக் கொண்டு குறிஞ்சி வரையறு நிறுவனத்தின் போக்கு சதவீதங்களைக் கணக்கிடவும்.

விவரம்₹ ஆயிரங்களில்
2015-162016-172017-18
விற்பனை மூலம் பெற்ற வருவாய்120132156
இதர வருமானம்503865
செலவுகள்100135123
(b)

Calculate trend percentages from the following particulars of Kurinji Ltd.

Particulars₹ in Thousands
2015-162016-172017-18
Revenue from operations120132156
Other income503865
Expenses100135123
5 marks
46.
(அ)நிலைமுதல் முறைக்கும் மாறுபடும் முதல் முறைக்கும் இடையேயான வேறுபாடுகளைத் தரவும்.
(a)State the differences between Fixed Capital method and Fluctuating Capital method.
அல்லது / OR
(ஆ)

அருள் நிறுவனத்தின் பின்வரும் விவரங்களிலிருந்து 3 ஆண்டுகள் சராசரி இலாபத்தில் 2 ஆண்டுகள் கொள்முதல் என்ற அடிப்படையில் நற்பெயரின் மதிப்பைக் கணக்கிடவும்.

  1. டிசம்பர் 31 -ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுகளான 2016, 2017 மற்றும் 2018 -ன் இலாபங்கள் முறையே ₹ 46,000, ₹ 44,000 மற்றும் ₹ 50,000.
  2. 2016 -ஆம் ஆண்டின் இலாபத்தில் திரும்பத் திரும்ப நிகழா வருமானம் ₹ 5,000 சேர்ந்துள்ளது.
  3. 2017 -ஆம் ஆண்டின் இறுதிச் சரக்கிருப்பு ₹ 10,000 அதிகமாக மதிப்பிடப்பட்டது.
(b)

From the following information relating to Arul Enterprises, calculate the value of goodwill on the basis of 2 years purchase of the average profits of 3 years.

  1. Profits for the years ending 31st December 2016, 2017 and 2018 were ₹ 46,000, ₹ 44,000 and ₹ 50,000 respectively.
  2. A non-recurring income of ₹ 5,000 is included in the profits of the year 2016.
  3. The closing stock of the year 2017 was overvalued by ₹ 10,000.
5 marks
47.
(அ)புராகிரஸ் வரையறு நிறுமம் 30,000 சாதாரணப் பங்குகளை, பங்கொன்று ₹ 10 வீதம் வெளியிட்டது. விண்ணப்பத்தின்போது ₹ 2, ஒதுக்கீட்டின்போது ₹ 4, முதலாவது அழைப்பின்போது ₹ 2 மற்றும் இரண்டாவது மற்றும் இறுதி அழைப்பின் போது ₹ 2 செலுத்தப்பட வேண்டும். அனைத்து பங்குகளும் ஒப்பப்பட்டன மற்றும் அனைத்து தொகைகளும் முறையாக பெறப்பட்டன. குறிப்பேட்டுப் பதிவுகள் தரவும்.
(a)Progress Ltd., issued 30,000 ordinary shares of ₹ 10 each, payable ₹ 2 on application, ₹ 4 on allotment, ₹ 2 on first call and ₹ 2 on second and final call. All the shares are subscribed and amount was duly received. Pass journal entries.
அல்லது / OR
(ஆ)

மகேஷ் நிறுமத்தின் 2019, மார்ச் 31 -ஆம் நாளைய இருப்புநிலைக் குறிப்பு பின்வருமாறு :

விவரம்₹
I. பங்கு மூலதனம் மற்றும் பொறுப்புகள்
  1. பங்குதாரர் நிதி
      நேர்மைப் பங்குமுதல்
20,00,000
  2. நீண்டகால பொறுப்புகள்
      நீண்டகாலக் கடன்கள்
5,00,000
  3. நடப்புப் பொறுப்புகள்
    (அ) குறுகிய காலக் கடன்கள்1,70,000
    (ஆ) கணக்குகள் மூலம் செலுத்த வேண்டியவைகள்2,50,000
    (இ) இதர நடப்புப் பொறுப்புகள்
        கொடுபட வேண்டிய செலவுகள்
30,000
    (ஈ) குறுகியகால ஒதுக்குகள்50,000
மொத்தம்30,00,000
II. சொத்துகள்
  1. நீண்டகால சொத்துகள்
    (அ) நிலைச் சொத்துகள்
        புலனாகும் சொத்துகள்
15,00,000
  2. நடப்புச் சொத்துகள்
    (அ) சரக்கிருப்பு4,50,000
    (ஆ) கணக்குகள் மூலம் பெறவேண்டியவைகள்7,00,000
    (இ) ரொக்கம் மற்றும் ரொக்கத்திற்குச் சமமானவைகள்3,00,000
    (ஈ) இதர நடப்புச் சொத்துகள்
        முன்கூட்டிச் செலுத்திய செலவுகள்
50,000
மொத்தம்30,00,000

(i) நடப்பு விகிதம் (ii) நீர்மை விகிதம் கணக்கிடவும்

(b)

Following is the Balance Sheet of Magesh Ltd., as on 31st March 2019.

Particulars₹
I. EQUITY AND LIABILITIES
  1. Shareholder's fund
      Equity share capital
20,00,000
  2. Non-current liabilities
      Long term borrowings
5,00,000
  3. Current liabilities
    (a) Short-term borrowings1,70,000
    (b) Trade payable2,50,000
    (c) Other current liabilities
        Expenses payable
30,000
    (d) Short-term Provisions50,000
Total30,00,000
II. ASSETS
  1. Non-current assets
      Fixed assets
    (a) Tangible assets15,00,000
  2. Current assets
    (a) Inventories4,50,000
    (b) Trade receivable7,00,000
    (c) Cash and Cash equivalents3,00,000
    (d) Other current assets
        Prepaid expenses
50,000
Total30,00,000

Calculate : (i) Current ratio (ii) Quick ratio

5 marks
⬇️ Download PDF All Accountancy papers