TN Online TestSamacheer Kalvi practice

12th Standard Accountancy Question Paper March 2025

Paper code 8357 90 marks 180 minutes

The complete March 2025 public exam paper exactly as printed: every question in Tamil and English. Download the PDF, or take Part I as a free online test.

கணக்குப்பதிவியல் / Accountancyமார்ச் 2025 · March 2025

பகுதி – I / PART – I

குறிப்பு : (i) அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும். (ii) கொடுக்கப்பட்டுள்ள நான்கு மாற்று விடைகளில் மிகவும் ஏற்புடைய விடையைத் தேர்ந்தெடுத்துக் குறியீட்டுடன் விடையினையும் சேர்த்து எழுதவும்.
Note : (i) Answer all the questions. (ii) Choose the most appropriate answer from the given four alternatives and write the option code and the corresponding answer.
1.
பொருந்தாத ஒன்றை தேர்ந்தெடுக்கவும்.
(அ) மறுமதிப்பீட்டு இலாபம்
(ஆ) முதலீட்டு மாறுபடும் நிதி
(இ) புதிய கூட்டாளி கொண்டு வந்த நற்பெயர்
(ஈ) பகிர்ந்தளிக்கப்படாத நட்டம்
Select the odd one out.
(a) Revaluation Profit
(b) Investment fluctuation fund
(c) Goodwill brought by new partner
(d) Accumulated Loss
Show answer ▾ (இ) / (c) Goodwill brought by new partner · Solved one-mark questions →
1 mark
2.
கூட்டாளிகளிடமிருந்து நிறுவனம் கடன்கள் பெற்றிருந்தால், அக்கடன்களுக்கு இந்திய கூட்டாண்மைச் சட்டம், 1932 -ன் படி வழங்கப்படும் வட்டி வீதம் :
(அ) ஆண்டுக்கு 6%
(ஆ) ஆண்டுக்கு 12%
(இ) ஆண்டுக்கு 8%
(ஈ) ஆண்டுக்கு 5%
As per the Indian Partnership Act, 1932, the rate of interest allowed on loans advanced by Partners is :
(a) 6% per annum
(b) 12% per annum
(c) 8% per annum
(d) 5% per annum
Show answer ▾ (அ) / (a) 6% per annum · Solved one-mark questions →
1 mark
3.
கடனாளிகள் இறுதி இருப்பு ₹ 20,000, பெற்ற ரொக்கம் ₹ 1,40,000, கடன் விற்பனை ₹ 1,20,000. கடனாளிகள் தொடக்க இருப்பு :
(அ) ₹ 20,000
(ஆ) ₹ 30,000
(இ) ₹ 40,000
(ஈ) ₹ 1,30,000
Closing balance of debtors ₹ 20,000, Cash received ₹ 1,40,000, Credit sales ₹ 1,20,000. Opening balance of debtors :
(a) ₹ 20,000
(b) ₹ 30,000
(c) ₹ 40,000
(d) ₹ 1,30,000
Show answer ▾ (இ) / (c) ₹ 40,000 · Solved one-mark questions →
1 mark
4.
A, B மற்றும் C என்ற கூட்டாளிகள் 4 : 2 : 3 என்ற விகிதத்தில் இலாப நட்டத்தை பகிர்ந்து வந்தனர். தற்போது C விலகுகிறார். A மற்றும் B -யின் புதிய இலாபப் பகிர்வு விகிதம் :
(அ) 3 : 4
(ஆ) 2 : 1
(இ) 4 : 3
(ஈ) 1 : 2
A, B and C are partners sharing profits in the ratio of 4 : 2 : 3. C retires. The new profit sharing ratio between A and B will be :
(a) 3 : 4
(b) 2 : 1
(c) 4 : 3
(d) 1 : 2
Show answer ▾ (ஆ) / (b) 2 : 1 · Solved one-mark questions →
1 mark
5.
விற்பனை மூலம் பெற்ற வருவாய் ₹ 4,00,000, விற்பனை மூலம் பெற்ற வருவாய்க்கான அடக்கவிலை ₹ 1,50,000, நிர்வாகச் செலவுகள் ₹ 50,000, விற்பனைச் செலவுகள் ₹ 8,500 எனில், நிகர இலாபம் :
(அ) ₹ 1,91,500
(ஆ) ₹ 4,00,000
(இ) ₹ 2,00,000
(ஈ) ₹ 1,50,000
Revenue from operations ₹ 4,00,000, Cost of revenue from operations ₹ 1,50,000, Administration expenses ₹ 50,000 and Selling expenses ₹ 8,500. The Net Profit is :
(a) ₹ 1,91,500
(b) ₹ 4,00,000
(c) ₹ 2,00,000
(d) ₹ 1,50,000
Show answer ▾ (அ) / (a) ₹ 1,91,500 · Solved one-mark questions →
1 mark
6.
எதிர்ப்பதிவு சான்றாவணம் எதற்காகப் பயன்படுத்தப்படுகிறது ?
(அ) சொத்துகள் கடனுக்கு வாங்கியது
(ஆ) தலைமைப் பதிவு
(இ) அலுவலக பயன்பாட்டிற்காக வங்கியில் இருந்து எடுத்த ரொக்கம்
(ஈ) அறிக்கைகள்
Contra Voucher is used for :
(a) Credit purchase of assets
(b) Master entry
(c) Withdrawal of cash from bank for office use
(d) Reports
Show answer ▾ (இ) / (c) Withdrawal of cash from bank for office use · Solved one-mark questions →
1 mark
7.
சொத்துகளை வாங்கி பங்குகள் வெளியிடும் போது, வரவு வைக்கப்படும் கணக்கு :
(அ) விற்பனையாளர் க/கு
(ஆ) பற்பல சொத்துகள் க/கு
(இ) பங்கு முதல் க/கு
(ஈ) வங்கி க/கு
When shares are issued for purchase of assets, the amount should be credited to :
(a) Vendor's A/c
(b) Sundry Assets A/c
(c) Share Capital A/c
(d) Bank A/c
Show answer ▾ (இ) / (c) Share Capital A/c · Solved one-mark questions →
1 mark
8.
விலகும் கூட்டாளிக்குரிய தீர்வுத்தொகை உடனடியாக செலுத்தாத போது, அது மாற்றப்படும் கணக்கு :
(அ) விலகும் கூட்டாளியின் கடன் க/கு
(ஆ) வங்கி க/கு
(இ) பிற கூட்டாளிகளின் முதல் க/கு
(ஈ) விலகும் கூட்டாளியின் முதல் க/கு
If the final amount due to a retiring partner is not paid immediately, it is transferred to :
(a) Retiring Partner's Loan A/c
(b) Bank A/c
(c) Other Partner's Capital A/c
(d) Retiring Partner's Capital A/c
Show answer ▾ (அ) / (a) Retiring Partner's Loan A/c · Solved one-mark questions →
1 mark
9.
ஒரே வகை நிறுவனங்களின் சராசரி இலாப விகிதமாக கருதப்படுவது :
(அ) சாதாரண இலாப விகிதம்
(ஆ) எதிர்நோக்கும் இலாப விகிதம்
(இ) சராசரி இலாபம்
(ஈ) இவைகளில் ஏதுமில்லை
The average Rate of Return of similar concern is considered as :
(a) Normal Rate of Return
(b) Expected Rate of Return
(c) Average Profit
(d) None of these
Show answer ▾ (அ) / (a) Normal Rate of Return · Solved one-mark questions →
1 mark
10.
Tally -ல் எது முன்கூட்டியே வரையறுக்கப்படாத குழு ?
(அ) விற்பனை க/கு
(ஆ) அனாமத்து க/கு
(இ) முதலீடுகள் க/கு
(ஈ) கொடுபட வேண்டிய செலவு க/கு
Which is not the default group in Tally ?
(a) Sales Account
(b) Suspense Account
(c) Investments Account
(d) Outstanding Expenses Account
Show answer ▾ (ஈ) / (d) Outstanding Expenses Account · Solved one-mark questions →
1 mark
11.
பட்டியல் ஒன்றை, பட்டியல் இரண்டுடன் பொருத்தி கொடுக்கப்பட்டுள்ள குறியீட்டைப் பயன்படுத்தி சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்.
பட்டியல் - I — பட்டியல் - II
(1) நடப்பு விகிதம் — (i) நீர்மைத் தன்மை
(2) நிகர இலாப விகிதம் — (ii) செயல்திறன்
(3) புற அக பொறுப்புகள் விகிதம் — (iii) நீண்டகால கடன் தீர்க்கும் திறன்
(4) சரக்கிருப்பு சுழற்சி விகிதம் — (iv) இலாபத் தன்மை
(அ) (1)-(iv), (2)-(iii), (3)-(ii), (4)-(i)
(ஆ) (1)-(i), (2)-(iv), (3)-(iii), (4)-(ii)
(இ) (1)-(i), (2)-(ii), (3)-(iii), (4)-(iv)
(ஈ) (1)-(iii), (2)-(ii), (3)-(iv), (4)-(i)
Match List-I with List-II and select the correct answer using the codes given below.
List-I — List-II
(1) Current Ratio — (i) Liquidity
(2) Net Profit Ratio — (ii) Efficiency
(3) Debt-Equity Ratio — (iii) Long-term Solvency
(4) Inventory Turnover Ratio — (iv) Profitability
(a) (1)-(iv), (2)-(iii), (3)-(ii), (4)-(i)
(b) (1)-(i), (2)-(iv), (3)-(iii), (4)-(ii)
(c) (1)-(i), (2)-(ii), (3)-(iii), (4)-(iv)
(d) (1)-(iii), (2)-(ii), (3)-(iv), (4)-(i)
Show answer ▾ (ஆ) / (b) (1)-(i), (2)-(iv), (3)-(iii), (4)-(ii) · Solved one-mark questions →
1 mark
12.
ஒறுப்பிழப்பு செய்யும் போது பங்கு முதல் கணக்கு எதில் பற்று வைக்கப்படுகிறது ?
(அ) அழைக்கப்பட்ட தொகை
(ஆ) முகமதிப்பு
(இ) செலுத்தப்பட்ட தொகை
(ஈ) பெயரளவு மதிப்பு
At the time of forfeiture, share capital account is debited with :
(a) Called up amount
(b) Face value
(c) Paid up amount
(d) Nominal value
Show answer ▾ (அ) / (a) Called up amount · Solved one-mark questions →
1 mark
13.
பொருந்தாத ஒன்றை தெரிவு செய்க.
(அ) முதல் மீது வட்டி - பிரிவு 13(இ)
(ஆ) கூட்டாளிகளின் ஊதியம் - பிரிவு 13(அ)
(இ) எடுப்பு மீது வட்டி - பிரிவு 13(ஈ)
(ஈ) இலாபப் பகிர்வு விகிதம் - பிரிவு 13(ஆ)
Choose the incorrect pair.
(a) Interest on Capital - Sec 13(c)
(b) Remuneration to Partners - Sec 13(a)
(c) Interest on Drawings - Sec 13(d)
(d) Profit Sharing Ratio - Sec 13(b)
Show answer ▾ (இ) / (c) Interest on Drawings - Sec 13(d) · Solved one-mark questions →
1 mark
14.
வருவாய் மற்றும் செலவினக் கணக்கு ஒரு :
(அ) பிரதிநிதித்துவ ஆள்சார் கணக்கு
(ஆ) சொத்து கணக்கு
(இ) ஆள்சார் கணக்கு
(ஈ) பெயரளவுக் கணக்கு
Income and Expenditure account is a :
(a) Representative Personal A/c
(b) Real A/c
(c) Personal A/c
(d) Nominal A/c
Show answer ▾ (ஈ) / (d) Nominal A/c · Solved one-mark questions →
1 mark
15.
பொறுப்புகளைக் காட்டிலும் மிகுதியாக உள்ள சொத்துகள் :
(அ) நட்டம்
(ஆ) ரொக்கம்
(இ) இலாபம்
(ஈ) முதல்
The excess of Assets over Liabilities is :
(a) Loss
(b) Cash
(c) Profit
(d) Capital
Show answer ▾ (ஈ) / (d) Capital · Solved one-mark questions →
1 mark
16.
பின்வருவனவற்றில் எது நிதி ஓட்டப் பகுப்பாய்வின் பயன்பாடு அல்ல ?
(அ) நிறுவனத்தின் நிதியியல் திட்டமிடுதல்
(ஆ) நிறுவனத்தின் நீர்மைத் தன்மை மற்றும் கடன் தீர்க்கும் திறன்
(இ) நிறுவனத்தின் நிதித்திட்ட பட்டியல் தயாரித்தல்
(ஈ) நிறுவனத்தின் கடன் பெறும் தன்மையை மதிப்பிடுவது
Which one of the following is not a function of Fund Flow analysis ?
(a) financial planning of a business concern
(b) liquidity and solvency of a business concern
(c) preparation of budgets of a business concern
(d) credit worthiness of a business concern
Show answer ▾ (ஆ) / (b) liquidity and solvency of a business concern · Solved one-mark questions →
1 mark
17.
கூட்டாளி சேர்ப்பின் போது புதிய கூட்டாளி நற்பெயருக்காக கொண்டு வரும் தொகை, யாருடைய முதல் கணக்கில் வரவு வைக்கப்பட வேண்டும் ?
(அ) புதிய கூட்டாளி
(ஆ) பழைய கூட்டாளிகள்
(இ) தியாகம் செய்த கூட்டாளிகள்
(ஈ) அனைத்து கூட்டாளிகள்
At the time of admission, the Goodwill brought by the new partner may be credited to the Capital accounts of whom ?
(a) The new partner
(b) The old partners
(c) The Sacrificing partners
(d) All the partners
Show answer ▾ (இ) / (c) The Sacrificing partners · Solved one-mark questions →
1 mark
18.
கீழ்வருவனவற்றில் எது சரியானது ?
(அ) உயர் இலாபம் = சராசரி இலாபம் − சாதாரண இலாபம்
(ஆ) உயர் இலாபம் = மொத்த இலாபம்/ஆண்டுகளின் எண்ணிக்கை
(இ) உயர் இலாபம் = சராசரி இலாபம் × கொள்முதல் ஆண்டுகள்
(ஈ) உயர் இலாபம் = கூட்டு இலாபம்/ஆண்டுகளின் எண்ணிக்கை
Which of the following is true ?
(a) Super Profit = Average Profit − Normal Profit.
(b) Super Profit = Total Profit/Number of years.
(c) Super Profit = Average Profit × Years of Purchase.
(d) Super Profit = Weighted Profit/Number of years.
Show answer ▾ (அ) / (a) Super Profit = Average Profit − Normal Profit. · Solved one-mark questions →
1 mark
19.
பின்வருவனவற்றில் எது நிதிநிலைப் பகுப்பாய்வின் ஒரு கருவி அல்ல ?
(அ) போக்குப் பகுப்பாய்வு
(ஆ) நிர்ணயிக்கப்பட்ட அடக்கவிலையியல்
(இ) ஒப்பீட்டு அறிக்கை
(ஈ) பொது அளவு அறிக்கை
Which of the following is not a tool of Financial Statement analysis ?
(a) Trend analysis
(b) Standard costing
(c) Comparative statement
(d) Common size statement
Show answer ▾ (ஆ) / (b) Standard costing · Solved one-mark questions →
1 mark
20.
ஒரு மன்றத்தில் உள்ள 500 உறுப்பினர்கள், ஆண்டு சந்தாவாக தலா ₹ 100 செலுத்துகின்றனர். நடப்பாண்டில் கூடியுள்ள சந்தா இன்னும் பெறப்படாதது ₹ 200; முன்கூட்டிப் பெற்ற சந்தா ₹ 300, வருவாய் மற்றும் செலவினக் கணக்கில் காட்டப்பட வேண்டிய சந்தா தொகையினைக் கண்டறியவும்.
(அ) ₹ 49,900
(ஆ) ₹ 50,000
(இ) ₹ 49,800
(ஈ) ₹ 50,200
There are 500 members in a Club each paying ₹ 100 as Annual Subscription. Subscription due but not received for the Current year is ₹ 200; Subscription received in advance is ₹ 300. Find out the amount of Subscription to be shown in the Income and Expenditure account.
(a) ₹ 49,900
(b) ₹ 50,000
(c) ₹ 49,800
(d) ₹ 50,200
Show answer ▾ (ஆ) / (b) ₹ 50,000 · Solved one-mark questions →
1 mark

பகுதி – II / PART – II

குறிப்பு : எவையேனும் ஏழு வினாக்களுக்கு விடையளிக்கவும். வினா எண் 30 -க்கு கட்டாயமாக விடையளிக்கவும்.
Note : Answer any seven questions. Question No. 30 is compulsory.
21.

பின்வரும் விவரங்களிலிருந்து விடுபட்ட தகவலைக் காணவும்.

விவரங்கள்₹
2023 ஏப்ரல் 1 அன்று முதல்40,000
2024 மார்ச் 31 அன்று முதல்50,000
அவ்வாண்டில் கொண்டுவந்த கூடுதல் முதல்7,000
அவ்வாண்டின் இலாபம்8,000
அவ்வாண்டின் எடுப்புகள்?

From the following details, calculate the missing figure.

Particulars₹
Capital as on 1st April 202340,000
Capital as on 31st March 202450,000
Additional Capital introduced during the year7,000
Profit for the year8,000
Drawings during the year?
2 marks
22.
கூட்டாண்மை ஒப்பாவணம் என்றால் என்ன ?
What is a Partnership Deed ?
2 marks
23.
நிதிநிலை அறிக்கைகள் யாவை ?
What are Financial Statements ?
2 marks
24.

பின்வரும் விவரங்களிலிருந்து மொத்த இலாப விகிதம் கணக்கிடவும்.

விற்பனையிலிருந்து பெற்ற வருவாய்₹ 2,00,000
விற்பனையிலிருந்து பெற்ற வருவாய்க்கான அடக்க விலை₹ 1,60,000
கொள்முதல்₹ 1,25,000

Calculate Gross Profit ratio from the following :

Revenue from operations₹ 2,00,000
Cost of Revenue from operations₹ 1,60,000
Purchases₹ 1,25,000
2 marks
25.
கணக்கியல் அறிக்கைகள் என்றால் என்ன ?
What are Accounting Reports ?
2 marks
26.
வாங்கப்பட்ட நற்பெயர் என்றால் என்ன ?
What is acquired Goodwill ?
2 marks
27.
ஆனந்த் மற்றும் சுமன் என்ற கூட்டாளிகள், இலாப நட்டங்களை 3 : 2 என்ற விகிதத்தில் பகிர்ந்து வருகின்றனர். அவர்கள் சரண் என்பவரை 1/5 பங்கிற்கு கூட்டாளியாகச் சேர்த்தனர். அவர் அப்பங்கு முழுவதையும் ஆனந்திடமிருந்து பெற்றுக் கொண்டார். புதிய இலாப பகிர்வு விகிதம் மற்றும் தியாக விகிதத்தை கணக்கிடவும்.
Ananth and Suman are partners sharing profits and losses in the ratio of 3 : 2. They admit Saran for 1/5 share, which he acquires entirely from Ananth. Find out the new Profit Sharing ratio and Sacrificing ratio.
2 marks
28.
கூட்டாளி விலகல் என்றால் என்ன ?
What is meant by retirement of a partner ?
2 marks
29.
மிகை ஒப்பம் என்றால் என்ன ?
What is Over Subscription ?
2 marks
30.
இலாப நோக்கற்ற அமைப்பில் ரொக்கம் சாரா நடவடிக்கைகளுக்கு 2 எடுத்துக்காட்டுகள் தருக.
Give two examples for Non cash items of Not-for-Profit organisation.
2 marks

பகுதி – III / PART – III

குறிப்பு : எவையேனும் ஏழு வினாக்களுக்கு விடையளிக்கவும். வினா எண் 40 -க்கு கட்டாயமாக விடையளிக்கவும்.
Note : Answer any seven questions. Question No. 40 is compulsory.
31.
முழுமைபெறா பதிவேடுகளின் குறைபாடுகள் யாவை ?
What are the limitations of incomplete records ?
3 marks
32.

காரைக்குடி விளையாட்டு மன்றத்தின் 2024 மார்ச் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டிற்குரிய இறுதி கணக்குகளில் பின்வருவன எவ்வாறு தோன்றும் எனக் காட்டவும்.

விவரம்₹
2023 ஏப்ரல் 1 அன்று தொடர் விளையாட்டுப் போட்டி நிதி90,000
2023 ஏப்ரல் 1 அன்று தொடர் விளையாட்டுப் போட்டி நிதி முதலீடு90,000
தொடர் விளையாட்டுப் போட்டி நிதி முதலீடு மீதான வட்டி பெற்றது9,000
தொடர் விளையாட்டுப் போட்டி நிதிக்கான நன்கொடை10,000
தொடர் விளையாட்டுப் போட்டி செலவுகள்60,000

How will the following appear in the Final accounts of Karaikudi Sports Club for the year ending 31st March 2024 ?

Particulars₹
Tournament fund on 1st April 202390,000
Tournament fund investment on 1st April 202390,000
Interest received on tournament fund investment9,000
Donation to tournament fund10,000
Tournament expenses60,000
3 marks
33.

ஜான் என்பவர் ஒரு கூட்டாண்மை நிறுவனத்தின் கூட்டாளி, கூட்டாண்மை ஒப்பாவணத்தின்படி எடுப்புகள் மீது வட்டி 12% ஆண்டிற்கு கணக்கிடப்படுகிறது. 2023 டிசம்பர் 31 -ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டில் அவருடைய எடுப்புகள் பின்வருமாறு :

நாள்₹
மார்ச் 16,000
ஜூன் 14,000
செப்டம்பர் 15,000
டிசம்பர் 12,000

பெருக்குத் தொகை முறையைப் பயன்படுத்தி எடுப்புகள் மீதான வட்டி கணக்கிடவும்.

John is a partner in a Partnership firm. As per the Partnership Deed, interest on drawings is charged @ 12% p.a. During the year ended 31st Dec. 2023, he drew as follows.

Date₹
March 16,000
June 14,000
September 15,000
December 12,000

Calculate the amount of interest on drawings by using Product method.

3 marks
34.

பின்வரும் விவரங்களிலிருந்து, கடந்த 4 ஆண்டுகள் சராசரி இலாபத்தில் 3 ஆண்டுகள் கொள்முதல் என்ற அடிப்படையில் நற்பெயர் மதிப்பைக் கணக்கிடவும்.

ஆண்டுமுடிவுதொகை
2020இலாபம்5,000
2021இலாபம்8,000
2022இலாபம்6,000
2023நட்டம்3,000

From the following information, calculate the value of Goodwill on the basis of 3 years purchase of average profits of last four years.

YearResultAmount
2020Profit5,000
2021Profit8,000
2022Profit6,000
2023Loss3,000
3 marks
35.

கயல்விழி, மான்விழி மற்றும் குழலி ஆகிய கூட்டாளிகள் இலாப-நட்டங்களை 5 : 3 : 2 என்ற விகிதத்தில் பகிர்ந்து வருகின்றனர். 2023 ஏப்ரல் 1 அன்று வான்மதி புதிய கூட்டாளியாகச் சேர்த்தபின் அவர்களின் இலாப விகிதம் 4 : 3 : 2 : 1 என முடிவு செய்யப்பட்டது. பின்வரும் சரிக்கட்டுதல்கள் செய்யப்பட வேண்டும்.

(அ) வளாகத்தின் மதிப்பு ₹ 60,000 அதிகரிக்கப்பட்டது
(ஆ) சரக்கிருப்பு மீது ₹ 5,000, அறைகலன் மீது ₹ 2,000, இயந்திரம் மீது ₹ 2,500 தேய்மானம் நீக்கப்பட வேண்டும்
(இ) கொடுபட வேண்டிய பொறுப்பு ₹ 1,000 உருவாக்கப்பட வேண்டும்

குறிப்பேட்டுப் பதிவுகள் தருக.

Kayalvizhi, Maanvizhi and Kuzhali are partners, sharing profits and losses in the ratio of 5 : 3 : 2. As from 1st April 2023, Vanmathi is admitted into the Partnership and the new profit sharing ratio is decided as 4 : 3 : 2 : 1. The following adjustments are to be made.

(a) Increase the value of Premises by ₹ 60,000.
(b) Depreciate stock by ₹ 5,000, furniture by ₹ 2,000 and machinery by ₹ 2,500.
(c) Provide for an outstanding liability of ₹ 1,000.

Pass Journal entries.

3 marks
36.
தியாக விகிதத்திற்கும் ஆதாய விகிதத்திற்கும் இடையே உள்ள வேறுபாடுகள் யாவை ?
Distinguish between Sacrificing ratio and Gaining ratio.
3 marks
37.
நிவேதா வரையறு நிறுமம் ₹ 10 மதிப்பிலான ₹ 8 அழைக்கப்பட்ட 100 பங்குகளை ஒறுப்பிழப்பு செய்தது. இதில் மயூரி பங்கு ஒன்றுக்கு ₹ 6 விண்ணப்பம் மற்றும் ஒதுக்கீட்டிற்கான தொகையினைச் செலுத்தி இருந்தார். அவற்றில் 75 பங்குகள் பங்கு ஒன்றிற்கு ₹ 7 பெற்றுக்கொண்டு ₹ 8 வீதம் செலுத்தப்பட்ட பங்குகளாக சௌமியா என்பவருக்கு மறுவெளியீடு செய்யப்பட்டது. ஒறுப்பிழப்பு மற்றும் மறுவெளியீட்டிற்கான குறிப்பேட்டுப் பதிவுகளைத் தரவும்.

Nivetha Ltd., forfeited 100 shares of ₹ 10 each, ₹ 8 called up, on which Mayuri had paid application and allotment money of ₹ 6 per share. Of these, 75 shares were re-issued to Sowmiya by receiving ₹ 7 per share paid up as ₹ 8 per share.

Pass Journal entries for Forfeiture and Re-issue.

3 marks
38.

பரணி நிறுமத்தின் பின்வரும் தகவல்களிலிருந்து, ஒப்பீட்டு வருமான அறிக்கையைத் தயாரிக்கவும்.

விவரம்2022 - 23
₹
2023 - 24
₹
விற்பனை மூலம் பெற்ற வருவாய்30,00045,000
இதர வருமானம்4,0006,000
செலவுகள்10,00015,000
வருமான வரி30%30%

From the following particulars, prepare comparative Income Statement of Barani Ltd.

Particulars2022 - 23
₹
2023 - 24
₹
Revenue from Operations30,00045,000
Other Income4,0006,000
Expenses10,00015,000
Income Tax30%30%
3 marks
39.

கீழ்கண்ட தகவல்களிலிருந்து நடப்பு விகிதத்தைக் கணக்கிடவும்.

விவரம்₹
குறுகிய கால முதலீடுகள்40,000
சரக்கிருப்பு2,00,000
வணிகத்தின் கடனாளிகள்1,20,000
பெறுதற்குரிய மாற்றுச்சீட்டுகள்80,000
ரொக்கம் மற்றும் ரொக்கத்திற்குச் சமமானவைகள்10,000
நிலைச் சொத்துகள்5,00,000
வணிகத்தின் கடனீந்தோர்80,000
செலுத்தற்குரிய மாற்றுச் சீட்டுகள்50,000
கொடுபட வேண்டிய செலவுகள்20,000
நீண்டகால பொறுப்புகள்3,00,000

Calculate the current ratio from the following information.

Particulars₹
Current Investments40,000
Inventories2,00,000
Trade Debtors1,20,000
Bills Receivable80,000
Cash and Cash equivalents10,000
Fixed Assets5,00,000
Trade Creditors80,000
Bills Payable50,000
Expenses Payable20,000
Non-Current Liability3,00,000
3 marks
40.
Tally.ERP 9 -ல் இலாப நட்டக் கணக்கை எவ்வாறு பார்வையிடுவது என்பதை விளக்கவும்.
Explain how to view Profit and Loss statement in Tally.ERP 9
3 marks

பகுதி – IV / PART – IV

குறிப்பு : அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்.
Note : Answer all the questions.
41.
(அ)

டேவிட் முறையான கணக்கேடுகளைப் பராமரிக்கவில்லை. அவருடைய ஏடுகளிலிருந்து தரப்பட்டுள்ள விவரங்கள் பின்வருமாறு :

விவரம்1.4.2023
₹
31.3.2024
₹
ரொக்கம்43,00029,000
சரக்கிருப்பு1,20,0001,30,000
பற்பல கடனாளிகள்84,0001,10,000
பற்பல கடனீந்தோர்1,05,0001,02,000
கடன்25,00020,000
வணிக வளாகம்2,50,0002,50,000
அறைகலன்33,00045,000

அவ்வாண்டில் அவர் கூடுதல் முதலாக ₹ 45,000 கொண்டு வந்தார். தன்னுடைய வியாபாரத்திலிருந்து சொந்த பயனுக்காக ₹ 2,500 ஒவ்வொரு மாதமும் எடுத்துக் கொண்டார். மேற்கண்ட விவரங்களிலிருந்து இலாப-நட்ட அறிக்கையை தயார் செய்யவும்.

(a)

David does not keep proper books of accounts. Following details are given from his records.

Particulars1.4.2023
₹
31.3.2024
₹
Cash43,00029,000
Stock of Goods1,20,0001,30,000
Sundry Debtors84,0001,10,000
Sundry Creditors1,05,0001,02,000
Loan25,00020,000
Business Premises2,50,0002,50,000
Furniture33,00045,000

During the year he introduced further Capital of ₹ 45,000 and withdrew ₹ 2,500 per month from the business for his personal use. Prepare statement of Profit or Loss with the above information.

அல்லது / OR
(ஆ)

மேரி தன்னுடைய ஏடுகளை இரட்டைப்பதிவு முறையில் பராமரிப்பதில்லை. பின்வரும் விவரங்களிலிருந்து 2023 மார்ச் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டிற்குரிய வியாபார மற்றும் இலாப-நட்ட கணக்கு மற்றும் அந்நாளைய இருப்புநிலைக் குறிப்பு தயாரிக்கவும்.

ரொக்க ஏடு

ப
விவரம்
₹விவரம்வ
₹
இருப்பு கீ/கொ1,20,000கொள்முதல்1,50,000
விற்பனை3,60,000கடனீந்தோர்2,50,000
கடனாளிகள்3,40,000கூலி70,000
பற்பல செலவுகள்1,27,000
இருப்பு கீ/இ2,23,000
8,20,0008,20,000

பிற தகவல்கள் :

விவரம்1.4.202231.3.2023
சரக்கிருப்பு1,10,0001,80,000
பற்பல கடனாளிகள்1,30,000?
பற்பல கடனீந்தோர்1,60,00090,000
அறைகலனும், பொருத்துகைகளும்80,00080,000

கூடுதல் தகவல்கள் :

₹
கடன் கொள்முதல்1,80,000
கடன் விற்பனை2,90,000
தொடக்க முதல்2,80,000

அறைகலன் மற்றும் பொருத்துகைகள் மீது ஆண்டுக்கு 10% தேய்மானம் நீக்கவும்.

(b)

Mary does not keep her books under double entry system. From the following details prepare Trading and Profit and Loss account for the year ending 31st March 2023 and a Balance Sheet as on that date.

Cash Book

Dr.
Particulars
₹ParticularsCr.
₹
To Balance b/d1,20,000By Purchases1,50,000
To Sales3,60,000By Creditors2,50,000
To Debtors3,40,000By Wages70,000
By Sundry Expenses1,27,000
By Balance c/d2,23,000
8,20,0008,20,000

Other information :

Particulars1st April 202231st March 2023
Stock of Goods1,10,0001,80,000
Sundry Debtors1,30,000?
Sundry Creditors1,60,00090,000
Furniture and Fittings80,00080,000

Additional Information :

₹
Credit Purchases1,80,000
Credit Sales2,90,000
Opening Capital2,80,000

Depreciate Furniture and Fittings by 10% p.a.

5 marks
42.
(அ)

கீழ்காணும் தென்காசி திருவள்ளுவர் மன்றத்தின் பெறுதல்கள் மற்றும் செலுத்துதல்கள் கணக்கிலிருந்து 2022 மார்ச் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய வருவாய் மற்றும் செலவினக் கணக்கைத் தயார் செய்யவும்.

பெறுதல்கள்₹செலுத்துதல்கள்₹
தொடக்க இருப்பு
கை ரொக்கம்
14,000சம்பளம்20,000
வட்டி பெற்றது5,000வாடகை24,000
சந்தா55,000பயணச் செலவுகள்2,000
உயில்கொடை48,000அச்சு மற்றும் எழுதுபொருள்6,000
நுழைவு கட்டணம்7,000முதலீடுகள் செய்தது50,000
அறைகலன் விற்றது
(ஏட்டு மதிப்பு ₹ 17,000)
16,000விளையாட்டு உபகரணங்கள் வாங்கியது33,000
இருப்பு கீ/இ
கை ரொக்கம்
10,000
1,45,0001,45,000
(a)

From the following Receipts and Payments account of Tenkasi Thiruvalluvar Manram, prepare Income and Expenditure account for the year ended 31st March 2022.

Receipts₹Payments₹
To Balance b/d
Cash in hand
14,000By Salaries20,000
To Interest received5,000By Rent24,000
To Subscription55,000By Travelling Expenses2,000
To Legacies48,000By Printing and Stationery6,000
To Entrance Fees7,000By Investments made50,000
To Sale of Furniture
(Book Value ₹ 17,000)
16,000By Sports equipments purchased33,000
By Balance c/d
Cash in hand
10,000
1,45,0001,45,000
அல்லது / OR
(ஆ)

பின்வரும் மலர் நிறுமத்தின் 2021 மார்ச் 31 மற்றும் 2022 மார்ச் 31 ஆம் நாளைய ஒப்பீட்டு இருப்புநிலைக் குறிப்பினைத் தயார் செய்யவும்.

விவரம்2021 மார்ச் 31
₹
2022 மார்ச் 31
₹
I. பங்கு மூலதனம் மற்றும் பொறுப்புகள்
1. பங்குதாரர் நிதி
(அ) பங்கு முதல்2,00,0002,50,000
(ஆ) காப்பும் மிகுதியும்50,00050,000
2. நீண்ட காலப் பொறுப்புகள்
நீண்ட காலக் கடன்கள்
30,00060,000
3. நடப்புப் பொறுப்புகள்
கணக்குகள் மூலம் செலுத்த வேண்டியவைகள்
20,00060,000
மொத்தம்3,00,0004,20,000
II. சொத்துகள்
1. நீண்ட காலச் சொத்துகள்
(அ) நிலைச் சொத்துகள்1,00,0001,50,000
(ஆ) நீண்ட கால முதலீடுகள்50,00075,000
2. நடப்புச் சொத்துகள்
சரக்கிருப்பு
75,0001,50,000
ரொக்கம் மற்றும் ரொக்கத்திற்கு சமமானவைகள்75,00045,000
மொத்தம்3,00,0004,20,000
(b)

From the following particulars, prepare Comparative Balance Sheet of Malar Ltd. as on 31st March 2021 and 31st March 2022.

Particulars31st March 2021
₹
31st March 2022
₹
I. EQUITY AND LIABILITIES
1. Shareholder's fund
(a) Share Capital2,00,0002,50,000
(b) Reserve and Surplus50,00050,000
2. Non-Current liabilities
Long-term borrowings
30,00060,000
3. Current liabilities
Trade Payables
20,00060,000
Total3,00,0004,20,000
II. ASSETS
1. Non-Current Assets
(a) Fixed Assets1,00,0001,50,000
(b) Non-Current Investments50,00075,000
2. Current Assets
Inventories
75,0001,50,000
Cash and Cash equivalents75,00045,000
Total3,00,0004,20,000
5 marks
43.
(அ)

பின்வரும் தகவல்களிலிருந்து வளர்மதி மற்றும் ஆதிரை அவர்களின் முதல், நிலை முதல் எனக் கொண்டு, அவர்களின் முதல் கணக்குகளைத் தயாரிக்கவும்.

விவரம்வளர்மதிஆதிரை
2019 ஏப்ரல் 1 அன்று முதல்70,00050,000
2019 ஏப்ரல் 1 அன்று நடப்பு கணக்கு (வ)25,00015,000
கூடுதல் முதல் கொண்டு வந்தது18,00016,000
2019-2020 -ல் எடுப்புகள்10,0006,000
எடுப்புகள் மீது வட்டி500300
இலாப-பங்கு 2019-202035,00025,800
முதல் மீது வட்டி3,5002,500
சம்பளம்-18,000
கழிவு12,000-
(a)

From the following information, prepare Capital accounts of partners Valarmathi and Aathirai when their capitals are fixed.

ParticularsValarmathiAathirai
Capital on 1st April 201970,00050,000
Current account on 1st April 2019 (Cr)25,00015,000
Additional Capital introduced18,00016,000
Drawings during 2019-202010,0006,000
Interest on Drawings500300
Share of Profit 2019-202035,00025,800
Interest on Capital3,5002,500
Salary-18,000
Commission12,000-
அல்லது / OR
(ஆ)சல்மா மற்றும் லிடியா 2018, ஏப்ரல் 1 அன்று முறையே ₹ 4,00,000 மற்றும் ₹ 3,00,000 முதலாகக் கொண்டு தொழில் தொடங்கினர். கூட்டாண்மை ஒப்பாவணத்தின்படி சல்மா ஆண்டுக்கு ₹ 90,000 ஊதியம் பெற வேண்டும். முதல் மீது வட்டி ஆண்டுக்கு 5% மற்றும் சல்மா ஊதியம் மற்றும் கழிவினை கழித்ததற்கு பின் உள்ள இலாபத்தில் 25% லிடியா கழிவாகப் பெற வேண்டும். இரு கூட்டாளிகளுக்கு இடையேயான இலாபப் பகிர்வு விகிதம் 1 : 1. அவ்வாண்டில் நிறுவனம் ஈட்டிய இலாபம் ₹ 3,65,000. இலாபநட்டப் பகிர்வு கணக்கை தயாரிக்கவும். நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 31 -ல் கணக்கு முடிக்கிறது.
(b)

Salma and Lydia started a business on 1st April 2018 with Capital of ₹ 4,00,000 and ₹ 3,00,000 respectively. According to the Partnership Deed, Salma is to get salary of ₹ 90,000 per annum, Lydia is to get 25% commission on Profit after allowing salary to Salma and interest on capital @ 5% p.a. and after charging such commission. Profit sharing ratio between the two partners is 1 : 1. During the year, the firm earned a profit of ₹ 3,65,000.

Prepare Profit and Loss Appropriation account. The firm closes its accounts on 31st March every year.

5 marks
44.
(அ)

பின்வரும் தகவல்களிலிருந்து உயர் இலாபத்தினை மூலதனமாக்கல் முறையில் நற்பெயரின் மதிப்பைக் கணக்கிடவும்.

  1. சாதாரண இலாப விகிதம் 10%.
  2. கடந்த 4 ஆண்டுகளின் இலாபங்கள் ₹ 30,000, ₹ 40,000, ₹ 50,000 மற்றும் ₹ 45,000.
  3. மேற்குறிப்பிட்ட இலாபம் ₹ 30,000 -ல் திரும்பத் திரும்ப நிகழா வருமானம் ₹ 3,000 சேர்ந்துள்ளது.
  4. சராசரி பயன்படுத்தப்பட்ட முதல் ₹ 3,00,000.
(a)

Find out the value of Goodwill by capitalising Super profits.

  1. Normal Rate of Return 10%.
  2. Profits for the last four years are ₹ 30,000, ₹ 40,000, ₹ 50,000 and ₹ 45,000.
  3. A non-recurring income of ₹ 3,000 is included in the above mentioned profit of ₹ 30,000.
  4. Average capital employed is ₹ 3,00,000.
அல்லது / OR
(ஆ)Tally.ERP 9 -ல் பொதுவாக பயன்படுத்தப்படும் சான்றாவணங்களின் வகைகளை விளக்கவும்.
(b)Explain the commonly used voucher types in Tally.ERP 9
5 marks
45.
(அ)

வீணா மற்றும் பியர்ல் ஒரு நிறுவனத்தின் கூட்டாளிகள் முறையே 2 : 1 எனும் விகிதத்தில் இலாபம் பகிர்ந்து வந்தனர். அவர்களின் 2018 மார்ச் 31 -ஆம் நாளைய இருப்பு நிலைக் குறிப்பு பின்வருமாறு :

பொறுப்புகள்₹₹சொத்துகள்₹
முதல் கணக்குகள்கட்டடம்60,000
வீணா60,000இயந்திரம்30,000
பியர்ல்40,0001,00,000கடனாளிகள்20,000
காப்பு நிதி30,000சரக்கிருப்பு10,000
தொழிலாளர் ஈட்டு நிதி10,000வங்கி ரொக்கம்30,000
பற்பல கடனீந்தோர்10,000
1,50,0001,50,000

1.4.2018 அன்று டெரி என்பவர் பின்வரும் நிபந்தனைக்குட்பட்டு கூட்டாளியாகச் சேர்க்கப்பட்டார்.

  1. வீணா, பியர்ல் மற்றும் டெரியின் புதிய இலாபப் பகிர்வு விகிதம் 5 : 3 : 2 ஆகும்.
  2. டெரி ₹ 30,000 முதலாக கொண்டு வர வேண்டும்.
  3. சரக்கிருப்பின் மதிப்பை 20% குறைக்க வேண்டும்.
  4. தொழிலாளர் ஈட்டு நிதி மீது எதிர்பார்க்கப்படும் கோருரிமை ₹ 1,000.
  5. பதிவுறா முதலீடுகள் ₹ 11,000 ஏடுகளில் கொண்டுவரப்பட வேண்டும்.
  6. நிறுவனத்தின் நற்பெயர் ₹ 30,000 என மதிப்பிடப்பட்டது. டெரி தன்னுடைய நற்பெயரின் பங்கினை ரொக்கமாக கொண்டு வந்தார். டெரி நற்பெயராகக் கொண்டு வந்த தொகை முழுவதையும் பழைய கூட்டாளிகள் எடுத்துக் கொண்டனர்.

தேவையான பேரேட்டு கணக்குகள் மற்றும் சேர்ப்பிற்கு பின் உள்ள இருப்பு நிலைக் குறிப்பினை தயார் செய்யவும்.

(a)

Veena and Pearl are partners in a firm sharing profits and losses in the ratio of 2 : 1. Their Balance Sheet as on 31st March 2018 is as follows.

Liabilities₹₹Assets₹
Capital accounts :Buildings60,000
Veena60,000Machinery30,000
Pearl40,0001,00,000Debtors20,000
General Reserve30,000Stock10,000
Workmen Compensation Fund10,000Cash at bank30,000
Sundry Creditors10,000
1,50,0001,50,000

Deri is admitted on 1.4.2018 subject to the following conditions :

  1. The new Profit sharing ratio among Veena, Pearl and Deri is 5 : 3 : 2.
  2. Deri has to bring a capital of ₹ 30,000.
  3. Stock to be depreciated by 20%.
  4. Anticipated claim on Workmen Compensation Fund is ₹ 1,000.
  5. Unrecorded investment of ₹ 11,000 has to be brought into books.
  6. The Goodwill of the firm is valued at ₹ 30,000 and Deri brought cash for his share of Goodwill. The existing partners withdraw the entire amount brought by Deri towards Goodwill.

Prepare the necessary ledger accounts and Balance Sheet after admission.

அல்லது / OR
(ஆ)

சரிதா மற்றும் சுபா இருவரும் கூட்டாளிகள். அவர்கள் தங்கள் இலாபம் மற்றும் நட்டங்களை 5 : 3 என்ற விகிதத்தில் பகிர்ந்து வந்தனர். அந்நிறுவனத்தின் 2022 டிசம்பர் 31 ஆம் நாளைய இருப்புநிலைக் குறிப்பு பின்வருமாறு இருந்தது.

பொறுப்புகள்₹₹சொத்துகள்₹₹
முதல் கணக்குகள்கட்டடம்34,000
சரிதா48,000அறைகலன்6,000
சுபா40,00088,000முதலீடுகள்20,000
கடனீந்தோர்37,000கடனாளிகள்40,000
கொடுபட வேண்டிய கூலி8,000கழிக்க : வாராக்கடன் ஒதுக்கு3,00037,000
பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு12,000
சரக்கிருப்பு16,000
வங்கி8,000
1,33,0001,33,000

2022 டிசம்பர் 31 -ல் அறிவுமதி என்பவர் 1/4 இலாபப்பகிர்வு விகிதத்தில் கூட்டாண்மையில் சேருகிறார். அவர் பின்வரும் சரிகட்டுதலுக்குட்பட்டு ₹ 12,000 முதலாக கொண்டு வருகிறார்.

  1. அறைகலன் ₹ 5,000 மற்றும் கட்டடம் ₹ 50,000 ஆகவும் மறுமதிப்பீடு செய்யப்பட வேண்டும்.
  2. வாரா ஐயக்கடன் ஒதுக்கு ₹ 5,500 ஆக உயர்த்த வேண்டும்.
  3. பதிவுறாத ₹ 6,000 மதிப்புள்ள முதலீடு கணக்கில் கொண்டுவரப்பட வேண்டும்.
  4. பதிவுறாத ₹ 2,500 மதிப்புள்ள பொறுப்பு பதிவு செய்யப்பட வேண்டும்.

மறுமதிப்பீட்டுக் கணக்கு மற்றும் கூட்டாளி சேர்க்கைக்கு பின் உள்ள முதல் கணக்கினையும் தயார் செய்யவும்.

(b)

Saritha and Subha are partners, sharing profits and losses in the ratio of 5 : 3. The firm's Balance Sheet as on 31st Dec. 2022 was as follows.

Liabilities₹₹Assets₹₹
Capital accounts :Buildings34,000
Saritha48,000Furniture6,000
Subha40,00088,000Investments20,000
Creditors37,000Debtors40,000
Outstanding Wages8,000Less : Provision for bad debts3,00037,000
Bills receivable12,000
Stock16,000
Bank8,000
1,33,0001,33,000

On 31st December 2022 Arivumathi was admitted into the Partnership for 1/4 share of profit with ₹ 12,000 as Capital subject to the following adjustments.

  1. Furniture is to be re-valued at ₹ 5,000 and building is to be re-valued at ₹ 50,000.
  2. Provision for doubtful debts is to be increased to ₹ 5,500.
  3. An unrecorded investment of ₹ 6,000 is to be brought into account.
  4. An unrecorded liability ₹ 2,500 has to be recorded now.

Prepare Revaluation Account and Capital Account of Partners after admission.

5 marks
46.
(அ)

விஜயா, கவிதா மற்றும் ரோஸ்லின் என்ற கூட்டாளிகள் தங்கள் இலாப நட்டங்களை தங்கள் முதல் விகிதத்தில் பகிர்ந்து வந்தனர். 31.12.2017 ஆம் நாளைய இருப்பு நிலைக் குறிப்பு பின்வருமாறு :

31.12. 2017 ஆம் நாளைய இருப்புநிலைக் குறிப்பு

பொறுப்புகள்₹₹சொத்துகள்₹
முதல் கணக்குகள்பொறி மற்றும் இயந்திரம்45,000
விஜயா30,000சரக்கிருப்பு22,000
கவிதா30,000கடனாளிகள்15,000
ரோஸ்லின்20,00080,000வங்கி ரொக்கம்10,000
பொதுக்காப்பு8,000கை ரொக்கம்4,000
கடனீந்தோர்8,000
96,00096,000

31.3.2018 அன்று ரோஸ்லின் இறந்து விட்டார். ரோஸ்லின் இறப்பின் போது பின்வரும் சரிக்கட்டுதல்கள் செய்யப்பட்டன.

  1. பொறி மற்றும் இயந்திரம் ₹ 54,000 என மதிப்பிடப்பட்டது.
  2. சரக்கிருப்பின் மதிப்பில் ₹ 1,000 குறைக்கப்பட வேண்டும்.
  3. நிறுவனத்தின் நற்பெயர் ₹ 24,000 என மதிப்பிடப்பட்டது.
  4. கடந்த நிதியாண்டின் இறுதியில் இருந்து கூட்டாளி இறந்த நாள் வரை உள்ள இலாபத்தின் பங்கு, கூட்டாளியின் இறப்பிற்கு முன் உள்ள மூன்று முழு ஆண்டுகளின் சராசரி இலாப அடிப்படையிலானது.

2015, 2016 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளுக்கான இலாபம் முறையே ₹ 66,000, ₹ 60,000 மற்றும் ₹ 66,000 ஆகும்.

ரோஸ்லின் இறப்பிற்குப் பின் உடனடியாக தயாரிக்கப்பட வேண்டிய பேரேட்டுக் கணக்குகள் மற்றும் இருப்புநிலைக் குறிப்பினைத் தயாரிக்கவும்.

(a)

Vijaya, Kavitha and Roseline are partners who share profits and losses in their Capital ratio. Their Balance Sheet as on 31.12.2017 is as follows.

Balance Sheet as on 31st December 2017

Liabilities₹₹Assets₹
Capital accountPlant and Machinery45,000
Vijaya30,000Stock22,000
Kavitha30,000Debtors15,000
Roseline20,00080,000Cash at bank10,000
General Reserve8,000Cash in hand4,000
Creditors8,000
96,00096,000

Roseline died on 31.3.2018. On the death of Roseline, the following adjustments are made.

  1. Plant and Machinery is to be valued at ₹ 54,000
  2. Stock is to be depreciated by ₹ 1,000
  3. Goodwill of the firm is valued at ₹ 24,000
  4. Share of profit of Roseline is to be calculated from the closing of the last Financial year to the date of death on the basis of the average of the three completed years' profits before death.

Profit for 2015, 2016 and 2017 were ₹ 66,000, ₹ 60,000 and ₹ 66,000 respectively.

Prepare the necessary ledger accounts and the Balance Sheet immediately after the death of Roseline.

அல்லது / OR
(ஆ)

சிவகாமி நிறுமத்தின் 2019 மார்ச் 31 ஆம் நாளைய இருப்பு நிலைக்குறிப்பு பின்வருமாறு :

விவரம்₹
I. பங்கு மூலதனம் மற்றும் பொறுப்புகள்
1. பங்குதாரர் நிதி
நேர்மைப் பங்கு முதல்
2,00,000
2. நீண்ட காலப் பொறுப்புகள்
நீண்ட கால கடன்கள்
50,000
3. நடப்புப் பொறுப்புகள்
(அ) குறுகிய காலக் கடன்கள்17,000
(ஆ) கணக்குகள் மூலம் செலுத்த வேண்டியவைகள்25,000
(இ) இதர நடப்புப் பொறுப்புகள்
கொடுபட வேண்டிய செலவுகள்
3,000
(ஈ) குறுகிய கால ஒதுக்குகள்5,000
மொத்தம்3,00,000
II. சொத்துகள் :₹
1. நீண்ட கால சொத்துகள்
(அ) நிலைச் சொத்துகள்
புலனாகும் சொத்துகள்
1,50,000
2. நடப்புச் சொத்துகள் :
(அ) சரக்கிருப்பு45,000
(ஆ) கணக்குகள் மூலம் பெற வேண்டியவைகள்70,000
(இ) ரொக்கம் மற்றும் ரொக்கத்திற்குச் சமமானவைகள்30,000
(ஈ) இதர நடப்புச் சொத்துகள்
முன்கூட்டிச் செலுத்திய செலவுகள்
5,000
மொத்தம்3,00,000

கணக்கிடவும் : (i) நடப்பு விகிதம் (ii) நீர்மை விகிதம்

(b)

Following is the balance sheet of Sivakami Ltd., as on 31st March 2019.

Particulars₹
I. EQUITY AND LIABILITIES
1. Shareholders' Funds
Equity Share Capital
2,00,000
2. Non-Current liabilities
Long-term borrowings
50,000
3. Current liabilities
(a) Short-term borrowings17,000
(b) Trade Payables25,000
(c) Other current liabilities
Expenses Payable
3,000
(d) Short-term provisions5,000
Total3,00,000
II. ASSETS₹
1. Non-Current Assets
Fixed Assets
(a) Tangible assets
1,50,000
2. Current Assets
(a) Inventories45,000
(b) Trade receivables70,000
(c) Cash and Cash equivalents30,000
(d) Other Current assets
Prepaid Expenses
5,000
Total3,00,000

Calculate : (i) Current ratio (ii) Quick ratio

5 marks
47.
(அ)

வைரம் வரையறு நிறுமம் ₹ 5,50,000 மதிப்புள்ள அறைகலனை ரவி அறைகலன் வரையறு நிறுவனத்திடமிருந்து வாங்கியது. இதற்குப் பதிலாக ₹ 10 மதிப்புள்ள முழுவதும் செலுத்தப்பட்ட பங்குகளை செலுத்தி நிறைவு செய்தனர். பின்வரும் சூழலுக்கான பதிவுகளைத் தரவும்.

  1. பங்குகளை முகமதிப்பில் வெளியிட்டால்
  2. பங்குகளை 10% முனைமத்தில் வெளியிட்டால்
(a)

Vairam Ltd. purchased furniture worth of ₹ 5,50,000 from Ravi Furniture Ltd. It issued equity shares of ₹ 10 each fully paid in satisfaction of their claim. What entries will be made if such issue is :

  1. at par
  2. at premium of 10%
அல்லது / OR
(ஆ)

சரண்யா வரையறு நிறுமம் பங்கு ஒன்றின் மதிப்பு ₹ 10 வீதம், 20,000 நேர்மைப் பங்குகளை முகமதிப்பில் பொதுமக்களுக்கு வெளியிட்டது. பங்குகளுக்கானத் தொகை கீழ்கண்டவாறு செலுத்தப்பட வேண்டும்.

விண்ணப்பத்தின் போது₹ 3
ஒதுக்கீட்டின் போது₹ 4
முதலாம் மற்றும் இறுதி அழைப்பின் போது₹ 3

30,000 பங்குகளுக்கான தொகை விண்ணப்பத்தின் போது பெறப்பட்டது. கூடுதலான விண்ணப்பத் தொகை திருப்பி, உடனடியாக அனுப்பப்பட்டது. இதற்கான குறிப்பேட்டுப் பதிவுகளைத் தரவும்.

(b)

Saranya Ltd. issued 20,000 equity shares of ₹ 10 each to the public at par. The details of the amount payable on the shares are as follows.

On Application₹ 3 per share
On Allotment₹ 4 per share
On First and Final call₹ 3 per share

Application money was received on 30,000 shares. Excess application money was refunded immediately.

Pass Journal entries to record the above.

5 marks
⬇️ Download PDF All Accountancy papers