TN Online TestSamacheer Kalvi practice

General Tamil — Practice Set 27

Part A is General Tamil, as in the real exam; Parts B and C are shown in English (switch on Tamil + English to see both). 200 questions, 3 hours, 1.5 marks each, no negative marking. Press Start when you are ready. The timer runs until you submit.

🎯 In the exam: Tamil Eligibility-cum-Scoring Test carries 100 questions (150 marks).
Time left00:00

Your result

Q1Class 9 · வாழிய நிலனே
தவிர்தலின்றிக் காவல் செய்யும் பாதுகாவலர் ஆயிரம் பேர் உள்ளது ______
Q2Class 10 · நிலா முற்றம்
'கலைஞர் பகுத்தறிவுக் கொள்கை பரப்பும் சிந்தனையாளர்; பழுமரக்கனிப் பயன்கொள்ளும் பேச்சாளர்' எனப் பாராட்டியவர் யார்?
Q3Class 7 · ஓதுவது ஒழியேல்
'தேயிலைத் தோட்டப் பாட்டு' என்னும் நூலில் இடம்பெறும் 'பாரத மக்களின் பரிதாபச் சிந்து' பாடலை இயற்றியவர் ______.
Q4Class 6 · கண்ணெனத் தகும்
குழந்தைகள் பள்ளியில் ஏற்றத்தாழ்வின்றிப் படிக்கக் காமராசர் ______ அறிமுகப்படுத்தினார்.
Q5Class 7 · நயத்தகு நாகரிகம்
இயல்பு வழக்கின் வகைகளுள் இடம்பெறாதது எது?
Q6Class 10 · கூட்டாஞ்சோறு
காலில் அணியும் அணிகலனைக் குறிப்பது ______
Q7Class 8 · ஈடில்லா இயற்கை
நெடுமை + தேர் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ______.
Q8Class 10 · விதை நெல்
தமிழினத்தை ஒன்றுபடுத்தும் இலக்கியமாக ம.பொ.சி. கருதியது ______
Q9Class 8 · ஈடில்லா இயற்கை
மலர்களிலிருந்து வரும் ______ வண்டுகளை ஈர்க்கும்.
Q10
அடைப்புக்குள் உள்ள சொல்லைத் தகுந்த இடத்தில் சேர்த்த தொடர் எது? (ஏனெனில்)
Q11
'கடிநகர்' என்பதன் பொருள் யாது?
Q12Class 8 · குன்றென நிமிர்ந்துநில்
'நோயும் மருந்தும்' என்னும் பாடப்பகுதி இடம்பெற்றுள்ள நூல் எது?
Q13
எழுத்து வழக்குத் தொடரைத் தேர்ந்தெடு: 'அவன் எங்கிட்ட ஒண்ணும் சொல்லல'
Q14Class 10 · மணற்கேணி
மாட்டைப் பார்த்து 'என் அம்மை வந்தாள்' என்று கூறுவது எத்தகைய வழுவமைதி?
Q15Class 7 · நயத்தகு நாகரிகம்
மாரி + ஒன்று என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ______.
Q16
'செழியன் வந்தது' – இத்தொடரில் அமைந்துள்ள வழு எது?
Q17Class 7 · நாடு அதை நாடு
'காணலள்' (காண் + அல் + அள்) என்னும் சொல்லில் 'அல்' என்பது ______.
Q18Class 7 · நாடு அதை நாடு
பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் பிறந்த நாள் ______.
Q19Class 6 · பாடறிந்து ஒழுகுதல்
நன்றியறிதல் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ______.
Q20Class 7 · மானுடம் வெல்லும்
விடுதலைப் போராட்டத்தின்போது காயிதே மில்லத் ______ இயக்கத்தில் கலந்துகொண்டார்.
Q21
நாவின் நுனி மேல் அண்ணத்தின் மையப்பகுதியை உரசுவதால் தோன்றும் எழுத்து
Q22
வடகிழக்குப் பருவமழைக் காலத்தில் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க மாவட்ட நிர்வாகம் சில அறிவுரைகளை வழங்கியுள்ளது. மழை பெய்யும்போது மரங்களின் அடியிலும் மின்கம்பங்களின் அருகிலும் நிற்கக் கூடாது. அறுந்து கிடக்கும் மின்கம்பிகளைத் தொடாமல், உடனே மின்வாரியத்துக்குத் தெரிவிக்க வேண்டும். காய்ச்சிய குடிநீரையே பருக வேண்டும். கைப்பேசிகளை முழுமையாக மின்னேற்றம் செய்து வைத்துக்கொள்வதும், கைவிளக்கு, மெழுகுவர்த்தி போன்றவற்றைக் கையிருப்பில் வைத்திருப்பதும் நல்லது. ஆறுகளிலும் ஏரிகளிலும் வெள்ளம் பெருக்கெடுக்கும்போது அவற்றில் இறங்கிக் குளிக்கவோ மீன் பிடிக்கவோ கூடாது. தாழ்வான பகுதிகளில் வசிப்போர் முன்னெச்சரிக்கை அறிவிப்பு வந்தவுடன் அருகிலுள்ள நிவாரண முகாம்களுக்குச் செல்ல வேண்டும்.

பத்தியில் 'வெள்ளம் பெருக்கெடுக்கும்போது' என்பதில் 'பெருக்கெடுக்கும்' என்ற சொல்லின் பொருள் யாது?
Q23Class 9 · கலை பல வளர்த்தல்
"வசிபட முதுநீர் புக்கு
மலையெனத் துவரை நன்னீர்" - பாடல் அடிகளில் முதுநீர் என்பது எது?
Q24Class 6 · தமிழ்த்தேன்
ஆய்த எழுத்து இடம்பெறும் இரண்டரை மாத்திரை அளவுள்ள சொல் ______.
Q25
சொற்களை ஒழுங்குபடுத்திச் சரியான சொற்றொடரைத் தேர்ந்தெடு:
இல்லை, ஈடுஇணை, பெருமைக்கு, இலக்கியங்களின், தமிழ்
Q26
ஞகர மெய்யின் இன எழுத்து
Q27Class 8 · கல்வி கரையில
பின்வருவனவற்றுள் இறந்தகால வினைமுற்று ______.
Q28Class 7 · அமுதத் தமிழ்
'தந்துதவும்' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ______.
Q29
மரபுத் தொடரின் பொருள் தருக: கானல்நீர்
Q30
சரியான தமிழாக்கத்தைத் தேர்ந்தெடு:
I request you to set up dustbins in our street.
Q31Class 8 · குழலினிது யாழினிது
முரசு பற்றிய கூற்றுகளில் சரியானவை எவை?
1. படைமுரசு, கொடைமுரசு, மணமுரசு என மூவகை முரசுகள் பழந்தமிழ் நாட்டில் புழக்கத்தில் இருந்தன.
2. தமிழ் மக்களிடம் முப்பத்தாறு வகையான முரசுகள் வழக்கத்தில் இருந்ததாகச் சிலப்பதிகாரம் குறிப்பிடுகிறது.
3. 'மாக்கண் முரசம்' என்று பொருநராற்றுப்படை குறிப்பிடுகிறது.
Q32Class 6 · கண்ணெனத் தகும்
'மன்னனும் மாசறக் கற்றோனும் சீர்தூக்கின்' எனத் தொடங்கி, கற்றோர்க்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு என்று பாடியவர் ______.
Q33Class 8 · குன்றென நிமிர்ந்துநில்
பொருளாதாரப் படிப்பிற்காக அம்பேத்கர் 1920ஆம் ஆண்டு ______ சென்றார்.
Q34
'தோப்புக்கள்' என வல்லினம் மிகுந்து எழுதினால் கிடைக்கும் பொருள்
Q35Class 6 · கண்ணெனத் தகும்
அண்ணா நூற்றாண்டு நூலகம் பற்றிய கூற்றுகளில் சரியானவை எவை?
1. இது சென்னைக் கோட்டூர்புரத்தில் உள்ளது.
2. ஆசியக்கண்டத்திலேயே மிகப் பெரிய நூலகம் இதுவே.
3. இதன் பரப்பளவு எட்டு ஏக்கர்.
Q36Class 7 · கலைவண்ணம்
தொழிற்பெயர் குறித்த கூற்றுகளைக் கவனி:
1. தொழிற்பெயர் எண், இடம், காலம், பால் ஆகியவற்றைக் காட்டாது.
2. தொழிற்பெயர் படர்க்கை இடத்தில் மட்டும் வரும்.
3. விடு என்னும் பகுதி வீடு எனத் திரிவது விகுதி பெற்ற தொழிற்பெயர் ஆகும்.
சரியான கூற்றுகள் எவை?
Q37Class 10 · விதை நெல்
இருநாட்டு அரசர்களும் தும்பைப் பூவைச் சூடிப் போரிடுவதன் காரணம் ______
Q38Class 8 · பாருக்குள்ளே நல்ல நாடு
பொருத்துக:
அ. வேற்றுமை உருபு - 1. மாதிரி
ஆ. விகுதி - 2. மூலம்
இ. உவம உருபு - 3. ஐ
ஈ. சொல்லுருபு - 4. தல்
Q39
பின்வருவனவற்றுள் நாமக்கல் கவிஞர் எழுதிய நூல் எது?
Q40Class 8 · குழலினிது யாழினிது
பொருத்துக:
அ. நடந்து - 1. முற்றெச்சம்
ஆ. பேசிய - 2. குறிப்புப் பெயரெச்சம்
இ. எடுத்தனன் உண்டான் - 3. பெயரெச்சம்
ஈ. பெரிய - 4. வினையெச்சம்
Q41Class 10 · அமுதஊற்று
'எட்டு' என்னும் சொல் தனித்து நின்று எண்ணையும், பிரிந்து நின்று வேறு பொருளையும் தருவதால் அது ______ ஆகும்.
Q42
'படி' என்னும் வேர்ச்சொல்லிலிருந்து உருவான வினையெச்சம் எது?
Q43Class 6 · பாடறிந்து ஒழுகுதல்
ஆசாரக்கோவை குறித்த கூற்றுகளுள் சரியானவற்றைத் தேர்ந்தெடுக்க.
1. இதன் ஆசிரியர் பிறந்த ஊர் வண்கயத்தூர்.
2. இது பதினெண்மேற்கணக்கு நூல்களுள் ஒன்று.
3. இந்நூல் நூறு வெண்பாக்களைக் கொண்டது.
Q44Class 7 · ஓதுவது ஒழியேல்
வடமொழிச் சொல்லைத் தமிழ் எழுத்துகளால் மாற்றி எழுதுவது (எ.கா. இலக்குமி, விடம்) ______ எனப்படும்.
Q45Class 8 · தமிழ் இன்பம்
மக்கள் வாழும் நிலப்பகுதியைக் குறிக்கும் சொல் ______.
Q46
வல்லினம் மிக வேண்டிய இடத்தில் மிகாமல் பிழையாக எழுதப்பட்ட தொடர் எது?
Q47Class 6 · தமிழ்த்தேன்
ஏற்றத் தாழ்வற்ற ______ அமைய வேண்டும்.
Q48Class 6 · இன்னுயிர் காப்போம்
கைலாஷ் சத்யார்த்தி பற்றிய கூற்றுகளில் சரியானது எது?
1. அன்னை தெரசாவிற்கு அடுத்து அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற இந்தியர்.
2. எண்பத்து ஆறாயிரம் குழந்தைத் தொழிலாளர்களை மீட்டுள்ளார்.
3. குழந்தைகள் கல்வி உரிமைக்காக 103 நாடுகளில் 80,000 கி.மீ. நடைப்பயணம் சென்றுள்ளார்.
Q49Class 9 · அமுதென்று பேர்
'இந்திய நாடு மொழிகளின் காட்சிச்சாலையாகத் திகழ்கிறது' என்று குறிப்பிட்டவர் யார்?
Q50Class 8 · வையம்புகழ் வணிகம்
பின்னலாடை நகரமாக ______ விளங்குகிறது.