TN Online TestSamacheer Kalvi practice

History and Culture of India — Practice Set 8

Answer the questions and press Submit. You will see your score, the correct answers and an explanation for each question.

🎯 In the exam: History, Culture of India and Indian National Movement carries 10 questions (15 marks). This syllabus unit also covers Indian National Movement.
Time left00:00

Your result

All questions · Answered / Not answered / Marked
Q1Class 8 · Understanding Secularism
Right to freedom of religion is related to
சமயச் சுதந்திர உரிமை எதனுடன் தொடர்புடையது?
Q2Class 6 · Human Evolution
Consider the following statements about early hunter-gatherers:
1. Each group consisted of 30 to 40 people.
2. They stayed permanently in one place.
3. They wore hides of animals, barks of trees and leaves.
Which of the statements given above is/are correct?
தொடக்க கால வேட்டையாடிகள் பற்றிய கீழ்க்காணும் கூற்றுகளைக் கவனி:
1. ஒவ்வொரு குழுவிலும் 30 முதல் 40 பேர் இருந்தார்கள்.
2. அவர்கள் ஓரிடத்திலேயே நிலையாகத் தங்கினார்கள்.
3. விலங்குகளின் தோல்கள், மரப்பட்டைகள், இலைகள் ஆகியவற்றை ஆடைகளாக அணிந்தார்கள்.
இவற்றில் சரியானது எது/எவை?
Q3Class 7 · Vijayanagar and Bahmani Kingdoms
Which was the most common animal depicted on the pillars of the Vijayanagara style?
விஜயநகரக் கட்டடத் தூண்களில் பெரும்பாலும் காணப்படும் விலங்கு எது?
Q4Class 7 · Emergence of New Kingdoms in South India: Later Cholas and Pandyas
Arrange the following events of Pandya history in chronological order.
1. Rajasimha II, defeated by Parantaka I, fled the country.
2. Arikesari Maravarman ascended the throne.
3. Sadaiyavarman Sundarapandyan began his rule.
4. Jatila Parantaka Nedunjadayan began his rule.
பாண்டிய வரலாற்றின் கீழ்க்காணும் நிகழ்வுகளைக் காலவரிசைப்படுத்துக.
1. முதலாம் பராந்தகனிடம் தோல்வியடைந்த இரண்டாம் ராஜசிம்மன் நாட்டைவிட்டு வெளியேறினார்.
2. அரிகேசரி மாறவர்மன் அரியணை ஏறினார்.
3. சடையவர்மன் சுந்தரபாண்டியன் ஆட்சியைத் தொடங்கினார்.
4. ஜடில பராந்தக நெடுஞ்சடையன் ஆட்சிப் பொறுப்பேற்றார்.
Q5Class 6 · The Post-Mauryan India
______ was the last ruler of Kanva dynasty.
______ கன்வ வம்சத்தின் கடைசி அரசராவார்.
Q6Class 6 · Understanding Diversity
Geographical features and climatic conditions determine the ______ activities of a region.
ஒரு பகுதியின் ______ நடவடிக்கைகளை அப்பகுதியின் நிலவியல் கூறுகளும் காலநிலைகளும் பெரிதும் தீர்மானிக்கின்றன.
Q7
The 22 languages recognised by the Constitution of India are listed in which Schedule?
இந்திய அரசியலமைப்பு அங்கீகரித்துள்ள 22 மொழிகள் எந்த அட்டவணையில் இடம்பெற்றுள்ளன?
Q8Class 7 · The Delhi Sultanate
State true or false and choose the correct option:
1. Qutb-ud-din Aibak died of mysterious fever.
2. Razia was an able and brave fighter.
3. The Turkish nobles chose Iltutmish, son of Aibak, as Sultan after the death of Aibak.
4. Firoz Shah Tughluq refused to accept an invitation from a Bahmani prince to intervene in the affairs of the Deccan.
Which statements are true?
சரியா, தவறா எனக் கண்டறிந்து விடையைத் தேர்ந்தெடுக்கவும்:
1. குத்புதீன் இனங்காண முடியாத காய்ச்சலால் மரணமடைந்தார்.
2. ரஸ்ஸியா திறமை மிக்க, மனவலிமை கொண்ட போர்வீரர்.
3. ஐபக்கின் மறைவுக்குப் பின்னர் அவருடைய மகன் இல்துமிஷைத் துருக்கியப் பிரபுக்கள் சுல்தானாகத் தேர்வு செய்தனர்.
4. தக்காண விசயங்களில் தலையிடக் கோரி பாமினி இளவரசர் விடுத்த அழைப்பை ஏற்றுக்கொள்ள பிரோஷ் ஷா மறுத்துவிட்டார்.
இவற்றுள் சரியானவை எவை?
Q9Class 7 · The Delhi Sultanate
Quwwat-ul-Islam Masjid in Delhi was built by _______.
டெல்லியிலுள்ள குவ்வத்–உல்–இஸ்லாம் மசூதியை _______ கட்டினார்.
Q10Class 6 · The Age of Empires: Guptas and Vardhanas
Match the members of the Navaratna in Vikramaditya's court with their fields:
a. Varahamihira
b. Amarasimha
c. Dhanvantri
d. Sanku
1. Physician
2. Architect
3. Astronomer
4. Lexicographer
விக்கிரமாதித்யரின் அவையிலிருந்த நவரத்தினங்களை அவர்களின் துறையுடன் பொருத்துக:
அ. வராகமிகிரர்
ஆ. அமர சிம்ஹர்
இ. தன்வந்திரி
ஈ. சன்கு
1. மருத்துவர்
2. கட்டடக் கலை நிபுணர்
3. வானியல் அறிஞர்
4. அகராதியியல் ஆசிரியர்
Q11Class 6 · Indus Civilisation
Arrange the following in chronological order:
1. The Archaeological Survey of India was started with Alexander Cunningham.
2. Engineers found burnt bricks while laying the Lahore-Karachi railway.
3. Sir John Marshall linked Harappa and Mohenjo-Daro as one civilisation.
4. The Harappan culture started declining.
பின்வருவனவற்றைக் காலவரிசைப்படி அமைக்கவும்:
1. அலெக்ஸாண்டர் கன்னிங்ஹாம் உதவியுடன் இந்தியத் தொல்லியல் துறை நிறுவப்பட்டது.
2. லாகூர் - கராச்சி இரயில் பாதை அமைக்கும்போது சுட்ட செங்கற்கள் கண்டறியப்பட்டன.
3. ஹரப்பாவும் மொகஞ்சதாரோவும் ஒரே நாகரிகம் என ஜான் மார்ஷல் முடிவு செய்தார்.
4. ஹரப்பா நாகரிகம் சரியத் தொடங்கியது.
Q12Class 6 · The Age of Empires: Guptas and Vardhanas
The gold coins issued by Gupta kings indicate ______.
குப்த அரசர்கள் வெளியிட்ட தங்க நாணயங்கள் சுட்டிக் காட்டுவது ______.
Q13Class 8 · Understanding Secularism
Fill in the blank: Secularism is a part of democracy which grants _________________.
கோடிட்ட இடத்தை நிரப்புக: சமயச்சார்பின்மை ஜனநாயகத்தின் ஒரு பகுதி. அது __________ அளிக்கிறது.
Q14Class 9 · State and Society in Medieval India
Assertion (A): India was an integral part of maritime trade, extending from China in the east to Africa in the west.
Reason (R): Geographical location of India in the middle of the Indian Ocean.
கூற்று (கூ): கிழக்கே சீனா முதல் மேற்கே ஆப்பிரிக்கா வரை நீண்டிருந்த கடல் வணிகத்தின் ஒருங்கிணைந்த பகுதியாக இந்தியா இருந்தது.
காரணம் (கா): இந்தியாவின் நிலவியல் அமைப்பு இந்தியப் பெருங்கடலின் மையத்தில் அமைந்துள்ளது.
Q15Class 7 · New Religious Ideas and Movements
The Tirumurai, the basic Tamil Saivite sacred canon, has 12 books. Which work forms its 12th book?
சைவப் புனித நூலான திருமுறை 12 நூல்களைக் கொண்டது. அதன் 12ஆவது திருமுறை எது?
Q16Class 6 · Indus Civilisation
Lothal in Gujarat is situated between
குஜராத்திலுள்ள லோத்தல் எவற்றுக்கு இடையே அமைந்துள்ளது?
Q17Class 6 · Great Thinkers and New Faiths
Where did Buddha deliver his first sermon?
புத்தர் தனது முதல் போதனை உரையை எங்கு நிகழ்த்தினார்?
Q18Class 7 · Rise of Marathas and Peshwas
Which of the following statements about revenue collection under the Peshwas is/are correct?
1. Contracts for revenue collection were auctioned annually.
2. The winning collector paid one-third to one-half of the anticipated revenue in advance.
3. Revenue records were never checked by the Peshwa's office.
பேஷ்வாக்களின் கீழ் வருவாய் வசூல் பற்றிய கூற்றுகளில் சரியானது எது/எவை?
1. வருவாய் வசூலுக்கான ஒப்பந்தங்கள் வருடமொருமுறை ஏலம் விடப்பட்டன.
2. ஏலத்தில் வென்றவர் எதிர்பார்க்கப்படும் வசூல் தொகையில் மூன்றில் ஒரு பகுதி முதல் சரிபாதி வரை முதலில் செலுத்த வேண்டும்.
3. வருவாய் ஆவணங்களைப் பேஷ்வா அலுவலகம் ஒருபோதும் சரிபார்க்கவில்லை.
Q19Class 6 · From Chiefdoms to Empires
Assertion (A): Ashoka is considered as one of India's greatest rulers.
Reason (R): He ruled according to the principle of Dhamma.
கூற்று: அசோகர் இந்தியாவின் மாபெரும் பேரரசர் எனக் கருதப்படுகிறார்.
காரணம்: தர்மத்தின் கொள்கையின்படி அவர் ஆட்சி புரிந்தார்.
Q20Class 6 · Vedic Culture in North India and Megalithic Culture in South India
Vedic culture was ______ in nature.
வேதப்பண்பாடு ______ இயல்பைக் கொண்டிருந்தது.
Q21Class 6 · From Chiefdoms to Empires
Yakshas, whose statues belong to the indigenous art of the Mauryan period, were deities connected with ______.
மௌரியர் கால உள்ளூர் கலையில் சிலைகளாக வடிக்கப்பட்ட யக்ஷன் எவற்றோடு தொடர்புடைய கடவுள் ஆவார்?
Q22Class 8 · Understanding Secularism
Consider the following statements:
1. Ashoka was the first great emperor to announce, as early as the 3rd century BCE, that the state would not prosecute any religious sect.
2. In his 12th Rock Edict, Ashoka appealed only for tolerance and not for respect towards other sects.
3. Akbar propagated Din-i-Illahi and Sulh-e-Kul for religious toleration.
Which of the statements given above is/are correct?
பின்வரும் கூற்றுகளைக் கருதுக:
1. அரசு எந்த ஒரு மதத்தைச் சார்ந்த பிரிவினருக்கும் எதிராகக் குற்றம் சாட்டாது என்று கி.மு. மூன்றாம் நூற்றாண்டிலேயே அறிவித்த முதல் பேரரசர் அசோகர் ஆவார்.
2. தனது 12வது பாறை அரசாணையில் அசோகர் சகிப்புத்தன்மைக்கு மட்டுமே வேண்டுகோள் விடுத்தார்; மரியாதைக்கு அல்ல.
3. சமயசகிப்புத் தன்மைக்காக அக்பர் தீன்-இலாஹி, சுல்-இ-குல் ஆகியவற்றைப் பரப்பினார்.
மேற்கண்டவற்றுள் சரியானது எது/எவை?
Q23Class 6 · Understanding Diversity
As per the 2011 Census table in the lesson, which language is spoken by the second largest share of India's population after Hindi?
2011 கணக்கெடுப்பின்படி இந்தியாவில் பேசப்படும் முதல் ஐந்து மொழிகள் அட்டவணையில், இந்திக்கு அடுத்து அதிக மக்கள் பேசும் மொழி எது?
Q24Class 6 · The Post-Mauryan India
Match the following:
(a) Patanjali - 1. Kalinga
(b) Agnimitra - 2. Indo-Greek
(c) Kharavela - 3. Malavikagnimitra
(d) Demetrius - 4. Second grammarian
பொருத்துக:
(அ) பதஞ்சலி - 1. கலிங்கம்
(ஆ) அக்னிமித்திரர் - 2. இந்தோ–கிரேக்கர்
(இ) அரசர் காரவேலர் - 3. மாளவிகாக்னிமித்ரம்
(ஈ) டெமிட்ரியஸ் - 4. இரண்டாம் சமஸ்கிருத இலக்கண ஆசிரியர்
Q25Class 6 · Human Evolution
Keeping a stone at the bottom and sharpening it with another stone is called
ஒரு கல்லினை அடியில் வைத்துக் கூர்மையான மற்றொரு கல்லினால் அதனைத் தட்டிச் செதுக்குதல் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Q26Class 6 · From Chiefdoms to Empires
Who was the last emperor of the Mauryan dynasty?
மௌரிய வம்சத்தின் கடைசி அரசர் யார்?
Q27Class 6 · Great Thinkers and New Faiths
Statement: A common man could not understand upanishads.
Reason: Upanishads were highly philosophical.
கூற்று: ஒரு சாதாரண மனிதரால் உபநிடதங்களைப் புரிந்து கொள்ள இயலாது.
காரணம்: உபநிடதங்கள் மிகவும் தத்துவம் சார்ந்தவை.
Q28Class 7 · Sources of Medieval India
Which of the following statements is/are correct?
1. Inscriptions, monuments and coins are primary sources.
2. Travelogues, biographies and autobiographies are secondary sources.
3. The accounts of chroniclers give rich information on the life of the common people.
கீழ்க்காணும் கூற்றுகளில் சரியானது/சரியானவை எது/எவை?
1. பொறிப்புகள், நினைவுச் சின்னங்கள், நாணயங்கள் ஆகியவை முதல்நிலைச் சான்றுகள்.
2. பயணக்குறிப்புகள், வாழ்க்கை வரலாற்று நூல்கள், சுயசரிதைகள் இரண்டாம் நிலைச் சான்றுகள்.
3. வரலாற்றுத் தொகுப்பாளர்களின் பதிவுகள் சாதாரண மக்களின் வாழ்க்கை பற்றி மிகுதியான செய்திகளைத் தருகின்றன.
Q29Class 7 · Rise of Marathas and Peshwas
Under Peshwa Balaji Bajirao, the large guns of the Maratha army were fired and maintained mostly by
பேஷ்வா பாலாஜி பாஜிராவ் காலத்தில் மராத்தியப் படையின் பெரிய பீரங்கிகளை இயக்கி பராமரித்தவர்கள் பெரும்பாலும் யார்?
Q30
Arrange the following languages in the chronological order in which the Government of India declared them classical languages:
1. Malayalam
2. Sanskrit
3. Tamil
4. Kannada
இந்திய அரசு பின்வரும் மொழிகளைச் செம்மொழிகளாக அறிவித்த காலவரிசைப்படி அமைக்கவும்:
1. மலையாளம்
2. சமஸ்கிருதம்
3. தமிழ்
4. கன்னடம்
Q31Class 7 · Emergence of New Kingdoms in South India: Later Cholas and Pandyas
Those who were engaged in the horse trade during the Pandya period were called
பாண்டியர் காலத்தில் குதிரை வணிகத்தில் ஈடுபட்டவர்கள் எவ்வாறு அழைக்கப்பட்டனர்?
Q32Class 6 · Vedic Culture in North India and Megalithic Culture in South India
The Rig Vedic Rajan was addressed as ______.
ரிக்வேதகால ராஜன் ______ என அழைக்கப்பட்டார்.
Q33Class 7 · Emergence of New Kingdoms in South India: Later Cholas and Pandyas
______ was the donor of Velvikudi copper plates.
______ வேள்விக்குடிச் செப்பேடுகளின் கொடையாளி ஆவார்.
Q34Class 6 · From Chiefdoms to Empires
The Mauryan army was monitored by a board of 30 members in six committees. Which of the following was NOT one of these committees?
மௌரியப் படைகளை முப்பது உறுப்பினர்களைக் கொண்ட ஆறு குழுக்கள் நிர்வகித்தன. பின்வருவனவற்றுள் அக்குழுக்களில் ஒன்று அல்லாதது எது?
Q35Class 7 · Rise of Marathas and Peshwas
Which of the following statements about Shivaji's political system is/are correct?
1. It consisted of three circles, with the swaraj at the centre.
2. People of the second circle paid Chauth, one-fourth of the revenue, as protection money.
3. Sardeshmukhi was an extra one-half of the revenue paid as the chieftain's due.
சிவாஜியின் அரசியல் முறை பற்றிய கீழ்க்காணும் கூற்றுகளில் சரியானது எது/எவை?
1. அது மூன்று வட்டங்களைக் கொண்டிருந்தது; சிவாஜி அவற்றின் மையமாக விளங்கினார்.
2. இரண்டாவது வட்ட மக்கள் பாதுகாப்புக் கட்டணமாக வருமானத்தில் நான்கில் ஒரு பங்கை சௌத் வரியாகச் செலுத்தினர்.
3. சர்தேஷ்முகி என்பது அரசருக்கான கட்டணமாக வருமானத்தில் இரண்டில் ஒரு பங்கு.
Q36Class 9 · Intellectual Awakening and Socio-Political Changes
After his enlightenment, Buddha gave his first sermon in a deer park at
மெய்யறிவு பெற்ற பின் புத்தர் தனது முதல் போதனையை நிகழ்த்திய மான் பூங்கா அமைந்த இடம்
Q37Class 6 · From Chiefdoms to Empires
Assertion (A): Ashoka is described as changing from Chandasoka to Dhammasoka.
Reason (R): After the battle of Kalinga, Ashoka became a Buddhist and toured the country instructing people on Dhamma.
கூற்று: அசோகர் சந்த அசோகரிலிருந்து (கொடிய அசோகர்) தம்ம அசோகராக (நீதிமான் அசோகர்) மாறினார்.
காரணம்: கலிங்கப் போருக்குப் பின்னர் அசோகர் பௌத்தரானார்; தர்மத்தைப் பரப்ப நாட்டின் பல பகுதிகளுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.
Q38Class 7 · The Mughal Empire
_________ was a hall at Fatehpur Sikri where scholars of all religions met for a discourse.
பதேபூர் சிக்ரியிலுள்ள _________ அரங்கில் அனைத்து சமய வல்லுநர்களும் கலந்துரையாடினார்கள்.
Q39Class 7 · New Religious Ideas and Movements
Assertion (A): After Guru Gobind Singh, the holy book Guru Granth Sahib came to be considered the guru.
Reason (R): Guru Gobind Singh was the compiler of Guru Granth Sahib.
கூற்று: குரு கோவிந் சிங்கிற்குப் பின்னர் புனித நூலான குரு கிரந்த் சாகிப் குருவாகக் கருதப்பட்டது.
காரணம்: குரு கிரந்த் சாகிப் நூலைத் தொகுத்தவர் குரு கோவிந் சிங்.
Q40Class 7 · Emergence of New Kingdoms in South India: Later Cholas and Pandyas
According to Wassaff, 10,000 horses were imported into Kayal and other ports of India. How many of them were of Jamal-ud-din's own breed?
வாசப் கூற்றுப்படி காயல் உள்ளிட்ட இந்தியத் துறைமுகங்களில் 10,000 குதிரைகள் இறக்குமதியாயின. அவற்றில் ஜமாலுதீன் பொறுப்பில் இனப்பெருக்கம் செய்து வளர்க்கப்பட்ட குதிரைகள் எத்தனை?
Q41Class 7 · Emergence of New Kingdoms in South India: Later Cholas and Pandyas
The royal secretariat of the Pandya kingdom was known as ______.
பாண்டியப் பேரரசின் அரசுச் செயலகம் ______ என அறியப்பட்டது.
Q42Class 6 · South Indian Kingdoms
______ was the author of Aihole Inscription.
அய்கோல் கல்வெட்டின் ஆசிரியர் ______ ஆவார்.
Q43Class 7 · The Delhi Sultanate
Arrange the dynasties of the Delhi Sultanate in chronological order.
1. Tughluq
2. Lodi
3. Mamluk
4. Sayyid
5. Khalji
டெல்லி சுல்தானிய அரச வம்சங்களைக் காலவரிசைப்படி அமைக்கவும்.
1. துக்ளக்
2. லோடி
3. மாம்லுக்
4. சையது
5. கில்ஜி
Q44Class 9 · State and Society in Medieval India
The Deccan Sultanates were conquered by _______.
தக்காண சுல்தானியங்கள் _______ ஆல் கைப்பற்றப்பட்டன.
Q45Class 6 · Great Thinkers and New Faiths
Consider the following statements about the Jain sects:
1. Monks of the Digambara sect wear white robes.
2. Svetambaras believe that women are equally capable of achieving liberation as men.
3. Svetambara monks are permitted to have a Rajoharana, a begging bowl and a book.
Which of the statements given above is/are correct?
சமணப் பிரிவுகள் பற்றிய கீழ்க்காணும் கூற்றுகளைக் கவனி:
1. திகம்பரப் பிரிவைச் சேர்ந்த துறவிகள் வெள்ளை நிற ஆடைகளை அணிகின்றனர்.
2. ஆண்களைப் போலவே பெண்களும் விடுதலை பெற சமமான தகுதிகளைக் கொண்டுள்ளனர் என சுவேதாம்பரர்கள் நம்புகின்றனர்.
3. சுவேதாம்பரத் துறவிகள் ரஜோகரனா, பிச்சைப் பாத்திரம், புத்தகம் ஆகியவற்றை வைத்துக்கொள்ள அனுமதிக்கப்படுகின்றனர்.
இவற்றுள் சரியானது/சரியானவை எது/எவை?
Q46Class 7 · The Delhi Sultanate
The term 'bandagan' used for the special slaves of Muhammad Ghori refers to
முகமது கோரி பேணிய தனிவகை அடிமைகளைக் குறிக்கும் 'பன்டகன்' என்னும் சொல் யாரைக் குறிக்கிறது?
Q47Class 6 · Great Thinkers and New Faiths
All the following statements are true of Siddhartha Gautama except:
சித்தார்த்த கௌதமர் குறித்து கீழே காண்பனவற்றுள் ஒன்றைத் தவிர மற்ற அனைத்தும் சரி.
Q48Class 7 · The Delhi Sultanate
Find out the correct pair.
சரியான இணையைத் தேர்வு செய்க.
Q49Class 7 · New Religious Ideas and Movements
Nammazhwar's fame lies in his 1,102-stanza work called
நம்மாழ்வார் 1,102 பத்திகளைக் கொண்ட எந்த நூலால் புகழ்பெற்றார்?
Q50Class 6 · Understanding Diversity
About what percentage of the epigraphical inscriptions found by the Archaeological Survey of India are from Tamil Nadu?
இந்தியத் தொல்லியல் துறை இதுவரை கண்டுபிடித்த கல்வெட்டுச் சான்றுகளில் ஏறத்தாழ எத்தனை சதவிகிதம் தமிழ்நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டவை?
Next set → ← Back