நிகழ்தகவு பரவல்கள் — சூத்திரத் தாள்
நிகழ்தகவு நிறை / அடர்த்தி சார்புகள்
- தனிநிலை pmf நிபந்தனைகள்: \(f(x_i)\geq 0,\qquad \displaystyle\sum_i f(x_i)=1\).
- தொடர்ச்சியான pdf நிபந்தனைகள்: \(f(x)\geq 0,\qquad \displaystyle\int_{-\infty}^{\infty}f(x)\,dx=1\).
- இடைவெளி நிகழ்தகவு: \(P(a\leq X\leq b)=\displaystyle\int_{a}^{b}f(x)\,dx\).
பரவல் சார்பு (cdf)
- வரையறை: \(F(x)=P(X\leq x)\).
- தொடர்ச்சியான: \(F(x)=\displaystyle\int_{-\infty}^{x}f(u)\,du,\qquad f(x)=F'(x)\).
- தனிநிலை: \(F(x)=\displaystyle\sum_{x_i\leq x} f(x_i),\qquad P(X=x_i)=F(x_i)-F(x_i^{-})\).
- \(F(-\infty)=0,\quad F(\infty)=1,\quad F\) குறையாத சார்பு.
எதிர்பார்ப்பு, சராசரி, பரவற்படி
- \(E(X)=\displaystyle\sum_i x_i f(x_i)\) (தனிநிலை), \(E(X)=\displaystyle\int_{-\infty}^{\infty}x f(x)\,dx\) (தொடர்ச்சியான).
- \(E(X^{2})=\displaystyle\sum_i x_i^{2} f(x_i)\) அல்லது \(\displaystyle\int_{-\infty}^{\infty}x^{2} f(x)\,dx\).
- \(\operatorname{Var}(X)=E(X^{2})-[E(X)]^{2},\qquad \sigma=\sqrt{\operatorname{Var}(X)}\).
- \(E(aX+b)=aE(X)+b\).
- \(\operatorname{Var}(aX+b)=a^{2}\operatorname{Var}(X)\).
- \(E(X+Y)=E(X)+E(Y)\).
சிறப்புப் பரவல்கள்
- பெர்னோலி: \(f(x)=p^{x}q^{\,1-x},\ x=0,1\); சராசரி \(p\), பரவற்படி \(pq\) \((q=1-p)\).
- ஈருறுப்பு \(B(n,p)\): \(f(x)=\dbinom{n}{x}p^{x}q^{\,n-x},\ x=0,1,\dots,n\); சராசரி \(\mu=np\), பரவற்படி \(\sigma^{2}=npq\), திட்ட விலக்கம் \(\sqrt{npq}\).
- ஒரு புள்ளி (\(x_0\)): சராசரி \(x_0\), பரவற்படி \(0\).
- இரு புள்ளி (\(x_1,x_2\)), \(p=q=\tfrac{1}{2}\): சராசரி \(\dfrac{x_1+x_2}{2}\), பரவற்படி \(\dfrac{(x_2-x_1)^{2}}{4}\).
More for this chapter