TN Online TestSamacheer Kalvi practice

General Tamil — Practice Set 1

Part A is General Tamil, as in the real exam; Parts B and C are shown in English (switch on Tamil + English to see both). 200 questions, 3 hours, 1.5 marks each, no negative marking. Press Start when you are ready. The timer runs until you submit.

🎯 In the exam: Tamil Eligibility-cum-Scoring Test carries 100 questions (150 marks).
Time left00:00

Your result

Q1Class 7 · மானுடம் வெல்லும்
'தமிழக அரசியல் வானில் கவ்வியிருந்த காரிருளை அகற்ற வந்த ஒளிக்கதிராகக் காயிதே மில்லத் முகமது இஸ்மாயில் அவர்கள் திகழ்கிறார்' என்று கூறியவர் ______.
Q2Class 8 · ஈடில்லா இயற்கை
பொருத்துக (இயற்கையைப் போற்றுவோம்):
அ. திகிரி - 1. இமயமலை
ஆ. மேரு - 2. அச்சம் தரும் கடல்
இ. நாமநீர் - 3. கருணை
ஈ. அளி - 4. ஆணைச்சக்கரம்
Q3Class 9 · வாழிய நிலனே
விண்வெளித்துறைத் தமிழர்கள் குறித்த கூற்றுகளை ஆராய்க.
1. அரியலூரில் பிறந்த வளர்மதி, 2015இல் தமிழ்நாடு அரசின் அப்துல் கலாம் விருதைப் பெற்ற முதல் அறிவியல் அறிஞர்.
2. விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த வீரமுத்துவேல் சந்திரயான்-3 திட்ட இயக்குநராக நியமிக்கப்பட்டார்.
3. மயில்சாமி அண்ணாதுரை மங்கள்யான் திட்டத்தின் திட்ட இயக்குநராக இருந்தார்.
Q4Class 6 · இயற்கை இன்பம்
பரந்து விரிந்து இருப்பதால் கடலுக்குப் ______ என்று பெயர்.
Q5
தமிழறிஞர் தெ.பொ. மீனாட்சி சுந்தரனார் பெற்ற இந்திய அரசின் விருது எது?
Q6Class 7 · மானுடம் வெல்லும்
இவை + இல்லாது என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ______.
Q7Class 7 · அமுதத் தமிழ்
'ஆளுக்கு ஒரு வேலை' கதையில் சொலவடையைக் கூறியவருடன் பொருத்துக:
அ) குடல் கூழுக்கு அழுவுதாம், கொண்டை பூவுக்கு அழுவுதாம் - 1. ஆமை
ஆ) ஆயிரம் கலம் நெல்லுக்கு ஒரு அந்துப்பூச்சி போதும் - 2. மாடு
இ) இருப்பவனுக்குப் புளியேப்பம், இல்லாதவனுக்குப் பசியேப்பம் - 3. எறும்பு
ஈ) அதிர அடிச்சா உதிர விளையும் - 4. தேனீ
Q8Class 8 · அறத்தால் வருவதே இன்பம்
ஏவுதல் கருத்தாவுக்கான எடுத்துக்காட்டு எது?
Q9Class 9 · உயிருக்கு வேர்
பின்வருவனவற்றுள் இறந்தகால இடைநிலை அல்லாதது எது?
Q10Class 6 · தமிழ்த்தேன்
'செம்பயிர்' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ______.
Q11
'விலங்கொடு மக்கள் அனையர் இலங்குநூல்
கற்றாரோடு ஏனை யவர்' – இக்குறளின் கருத்து யாது?
Q12
'மேரியும் கனகாவும் பேருந்தில் ஏறினர்.' – இது எவ்வகைச் சொற்றொடர்?
Q13Class 9 · என்தலைக் கடனே
'பெரியார் விதைத்த விதைகள்' என்னும் 'தெரியுமா?' பகுதியில் இடம்பெறாதது எது?
Q14Class 6 · இன்னுயிர் காப்போம்
ஒருவர் செய்யக் கூடாதது ______.
Q15
'சாதலின் இன்னாதது இல்லை இனிதுஅதூஉம்
ஈதல் இயையாக் கடை' – சாதலும் இனிது எனக் கூறப்படும் நிலை எது?
Q16Class 8 · கல்வி கரையில
கூற்று: வியங்கோள் வினைமுற்று இருதிணை, ஐம்பால், மூவிடங்களுக்கும் பொதுவாய் வரும்.
காரணம்: வியங்கோள் வினைமுற்றில் ஒருமை, பன்மை வேறுபாடு உண்டு.
Q17Class 8 · கல்வி கரையில
நம்மை ______ பொறுத்துக் கொள்ள வேண்டும்.
Q18Class 10 · உயிரின் ஓசை
பரிபாடல் அடியில் 'விசும்பில், இசையில்' ஆகிய சொற்கள் குறிப்பவை எவை?
Q19Class 6 · பாடறிந்து ஒழுகுதல்
கிடைக்கும் பொருள்களின் ______க் கூட்டிப் புதிய பொருளாக மாற்றுவது சிறந்த வணிகம்.
Q20Class 9 · என்தலைக் கடனே
குடிப்பிறந்தார் என்றும் தவறாமல் போற்றுவதாகக் குடிமை அதிகாரம் குறிப்பிடும் மூன்று பண்புகள் யாவை?
Q21Class 9 · உள்ளத்தின் சீர்
கூற்றுகளை ஆராய்க. 1. சிந்துவெளி அகழாய்வில் கிடைத்த கல் முத்திரை ஏறு தழுவுதலைக் குறிப்பதாக ஐராவதம் மகாதேவன் தெரிவித்துள்ளார். 2. ஏறு தழுவுதல் ஆயிரம் ஆண்டுக்காலத் தொன்மை உடையது. 3. தமிழ்நாட்டு ஏறு தழுவுதலில் காளையை அடக்குபவர்கள் எந்த ஆயுதத்தையும் பயன்படுத்தக் கூடாது.
Q22Class 9 · கசடற மொழிதல்
மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் பெயரில் வழங்கி வந்த திருமண நிதி உதவித் திட்டம் 2022-2023ஆம் ஆண்டு முதல் எவ்வாறு பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது?
Q23Class 6 · புதுமைகள் செய்யும் தேசமிது
'நூலாடை - மேலாடை', 'எதிரொலிக்க - இசையமைக்க' என்னும் சொல் இணைகளில் அமைந்துள்ள நயம் ______.
Q24Class 7 · ஓதுவது ஒழியேல்
கூற்று: தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் மண்ணுளிப் பாம்புபோல் துன்புற்று வாழ்ந்தனர்.
காரணம்: அவர்களிடம் கல்வி, ஒழுக்கம், நாகரிகம் ஆகியவை இல்லாமல் இருந்தன.
Q25
பொருத்தமான உவமையைத் தேர்ந்தெடு: இளமையில் கற்ற பாடல்கள் ______ இன்றும் என் நினைவில் நிற்கின்றன.
Q26Class 9 · கசடற மொழிதல்
கல்வி இல்லாப் பெண்கள் எவ்வகை நிலத்திற்கு ஒப்பானவர்கள்?
Q27Class 6 · புதுமைகள் செய்யும் தேசமிது
காந்தியடிகளும் தமிழும் பற்றிய கூற்றுகளில் சரியானவை எவை?
1. தென்னாப்பிரிக்காவில் வாழ்ந்த காலத்தில் தமிழ் கற்கத் தொடங்கினார்.
2. ஜி.யு.போப் எழுதிய தமிழ்க்கையேடு அவரைக் கவர்ந்தது.
3. அவரைப் பெரிதும் கவர்ந்த நூல் கம்பராமாயணம்.
Q28
'விடு' என்னும் வினை துணைவினையாக வந்துள்ள தொடர் எது?
Q29
அதியமானுக்கும் யாருக்கும் இடையே நிகழவிருந்த போரை ஔவையார் தடுத்தார்?
Q30Class 8 · குழலினிது யாழினிது
'சிறிய கடிதம்' - இத்தொடரில் 'சிறிய' என்பது ______.
Q31Class 8 · அறத்தால் வருவதே இன்பம்
'நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும் பண்புடை யாளர் தொடர்பு' - இக்குறளில் உவமேயம் ______.
Q32Class 9 · அமுதென்று பேர்
கனடாவில் முதல்முறையாகப் பெயர் சூட்டப்பட்டு, 'தமிழர்களுக்குச் சொந்தமான வீதி' எனப் போற்றப்படும் சாலை எது?
Q33Class 9 · கலை பல வளர்த்தல்
பொருத்துக (இலக்கணக் குறிப்பு).
அ) முதிரையும் சாமையும் வரகும் - 1) சொல்லிசை அளபெடை
ஆ) இன்னிளங்குருளை - 2) பெயரெச்சம்
இ) மன்னிய - 3) எண்ணும்மை
ஈ) வெரீஇ - 4) பண்புத்தொகை
Q34
கோடிட்ட இடத்தில் சரியான தொகை மரபுச் சொல்லைத் தேர்ந்தெடு:
திருவிழாவில் மக்கள் ______ அலைமோதியது.
Q35Class 8 · ஈடில்லா இயற்கை
'தமிழர் மருத்துவம்' நேர்காணலில் மாணவர்களின் வினாக்களுக்கு விடையளிக்கும் சித்த மருத்துவர் யார்?
Q36Class 9 · உயிருக்கு வேர்
சோழர் காலக் குமிழித்தூம்பு குறித்த கூற்றுகளை ஆராய்க. 1. குமிழித்தூம்பின் மேலே உள்ள நீரோடித் துளையிலிருந்து நீர் வெளியேறும். 2. கீழே உள்ள சேறோடித் துளையிலிருந்து நீர் சுழன்று சேற்றுடன் வெளியேறும். 3. குமிழித்தூம்பு இருந்ததால் ஏரியை அடிக்கடி தூர் வார வேண்டியிருந்தது.
Q37Class 8 · கல்வி கரையில
என் நண்பர் பெரும் புலவராக இருந்தபோதும் ______ இன்றி வாழ்ந்தார்.
Q38
பேச்சு வழக்கு – எழுத்து வழக்கு இணைகளில் பொருந்தாத இணையைக் கண்டறிக.
Q39Class 6 · எல்லாரும் இன்புற
பொருத்துக.
(அ) பெயர்ச்சொல் - 1. சால
(ஆ) வினைச்சொல் - 2. உம்
(இ) இடைச்சொல் - 3. எழுது
(ஈ) உரிச்சொல் - 4. பாரதி
Q40Class 6 · கண்ணெனத் தகும்
'அருளை - மருளை', 'அருத்துவதும் - பொருத்துவதும்' ஆகிய சொற்களில் அமைந்துள்ள தொடை ______.
Q41Class 8 · தமிழ் இன்பம்
பெரிய கப்பல்கள் ______ மீது செல்லும்.
Q42
பிழையற்ற தொடரைத் தேர்ந்தெடு.
Q43Class 7 · அமுதத் தமிழ்
பொருந்தாத சொல்லைத் தேர்ந்தெடுக்க (குற்றியலுகர அடிப்படையில்).
Q44Class 9 · கசடற மொழிதல்
'வை' என்பது துணைவினையாக வந்துள்ள தொடர் எது?
Q45
பரிதிமாற் கலைஞரின் 'தனிப்பாசுரத் தொகை' என்னும் நூலை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் யார்?
Q46Class 9 · உள்ளத்தின் சீர்
'இரண்டு கிலோ கொடு' - இதில் வந்துள்ள ஆகுபெயர் -
Q47
பிழையற்ற தொடரைத் தேர்ந்தெடு.
Q48
கண்ணதாசனின் 'மலைப்பொழிவு' பகுதி இடம்பெற்றுள்ள நூல் எது?
Q49
'மொழி' என்னும் சொல்லோடு இணைந்து பொருளுள்ள புதிய சொல்லை உருவாக்கும் சொல் எது?
Q50
உவமைத் தொடரின் பொருள் தருக: கிணற்றுத் தவளை போல