TN Online TestSamacheer Kalvi practice

TNPSC Group 4 Full Mock Test 2

Part A is General Tamil, as in the real exam; Parts B and C are shown in English (switch on Tamil + English to see both). 200 questions, 3 hours, 1.5 marks each, no negative marking. Press Start when you are ready. The timer runs until you submit.

🎯 In the exam: Part A: 100 questions (150 marks) · Part B: 75 questions (112.5 marks) · Part C: 25 questions (37.5 marks) · Total 200 questions, 300 marks
Time left00:00

Your result

Part A · General Tamil

Q1Class 7 · நயத்தகு நாகரிகம்
நூலையும் ஆசிரியரையும் பொருத்துக:
அ) குற்றாலக் குறவஞ்சி - 1. நம்மாழ்வார்
ஆ) திருப்புகழ் - 2. அண்ணாமலையார்
இ) காவடிச்சிந்து - 3. திரிகூடராசப்பக் கவிராயர்
ஈ) திருவாய்மொழி - 4. அருணகிரிநாதர்
Q2Class 8 · ஈடில்லா இயற்கை
மரத்தின் உடையாகக் குறிப்பிடப்படுவது ______ ஆகும்.
Q3Class 7 · அமுதத் தமிழ்
அடிகளின் இறுதியில் வரும் சொற்கள் ஒத்த ஓசையிலோ ஒரே எழுத்திலோ முடிவது ______.
Q4
சொற்களை ஒழுங்குபடுத்திச் சரியான சொற்றொடரைத் தேர்ந்தெடு:
ஓடியது, மேடுபள்ளம், ஆற்று, பாராமல், வெள்ளம்
Q5
'கவிஞாயிறு' என்னும் அடைமொழி பெற்றவர் யார்?
Q6Class 10 · பெருவழி
உலகமே வறுமையுற்றாலும் கொடுப்பவன் என்றும், பொருள்களின் இருப்பைக் கூட அறியாமல் கொடுப்பவன் என்றும் பாராட்டப்படுவோர் யாவர்?
Q7
ஒற்றுப் பிழையற்ற தொடரைத் தேர்ந்தெடு
Q8
அறிவிப்பு
ஊராட்சி மன்றம் சார்பில் 'பசுமை ஊர்' மரம் நடும் இயக்கம் ஜூலை 15 முதல் 30 வரை நடைபெறும். விருப்பமுள்ள குடும்பத்தினர் ஊராட்சி அலுவலகத்தில் பெயரைப் பதிவு செய்து, ஒரு குடும்பத்துக்கு இரண்டு மரக்கன்றுகள் வீதம் இலவசமாகப் பெற்றுக்கொள்ளலாம். பதிவு செய்ய வரும்போது குடும்ப அட்டையின் நகலைக் கொண்டுவர வேண்டும். நட்ட கன்றுகளை மூன்று ஆண்டுகள் பேணி வளர்க்கும் குடும்பங்களுக்குப் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும். கன்றுகளைச் சாலையோரங்களிலோ மின்கம்பிகளுக்கு அடியிலோ நடக்கூடாது. இயக்கத்தின் தொடக்க நாளன்று ஊராட்சிப் பள்ளி வளாகத்தில் மாணவர்கள் கன்றுகளை நடுவார்கள்.
– ஊராட்சி மன்ற அலுவலகம்

பெயரைப் பதிவு செய்ய வருவோர் கொண்டுவர வேண்டியது எது?
Q9Class 7 · அணிநிழல் காடு
வாழை, கன்று ______.
Q10Class 9 · வாழிய நிலனே
ஜப்பானியர்கள் ஒற்றர்படையில் இருந்த வீரர்களை நீர்மூழ்கிக் கப்பல் மூலம் இந்தியாவின் எந்தப் பகுதிகளுக்கு அனுப்பினர்?
Q11Class 7 · அமுதத் தமிழ்
பொருந்தாத சொல்லைத் தேர்ந்தெடுக்க (குற்றியலுகர அடிப்படையில்).
Q12
படிவங்களில் வரும் Office seal என்பதன் சரியான தமிழாக்கம் எது?
Q13Class 6 · கண்ணெனத் தகும்
அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் தளங்களையும் அங்குள்ள பிரிவுகளையும் பொருத்துக.
அ. தரைத்தளம் - 1. தமிழ் நூல்கள்
ஆ. முதல் தளம் - 2. அரசு கீழ்த்திசைச் சுவடிகள் நூலகம்
இ. இரண்டாம் தளம் - 3. பிரெய்லி நூல்கள்
ஈ. ஏழாம் தளம் - 4. குழந்தைகள் பிரிவு
Q14
பொருத்தமான இணைப்புச் சொல்லைத் தேர்ந்தெடு: மழை கொட்டியது; ______ அவன் பள்ளிக்குச் சென்றான்.
Q15Class 8 · கல்வி கரையில
இன்றைய கல்வி ______ நுழைவதற்குக் கருவியாகக் கொள்ளப்பட்டு வருகிறது.
Q16
பொருத்தமான சொல்லால் நிரப்புக: பூ ______ வீசும்.
Q17Class 9 · வாழிய நிலனே
"கொடியனார் செய்கோலமும் வைகல்தோறும் ஆயிரம்" - இதில் "கொடியனார்" என்பதன் இலக்கணக் குறிப்பு -
Q18Class 9 · கசடற மொழிதல்
'ஓடப் பார்த்தேன்' என்னும் தொடரில் 'பார்' என்னும் துணைவினை தரும் பொருள் யாது?
Q19Class 8 · அறத்தால் வருவதே இன்பம்
உள் + இருக்கும் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ______.
Q20Class 10 · விதை நெல்
ஆநிரை கவர்தலைக் குறிக்கும் புறத்திணை எது?
Q21Class 7 · ஓதுவது ஒழியேல்
திருக்குறளார் வீ. முனிசாமி எழுதாத நூல் எது?
Q22
'அவ்வீடு' என்னும் சொல்லில் அமைந்துள்ள சுட்டு
Q23
Mobile phone என்பதற்கு இணையான தமிழ்ச்சொல் எது?
Q24Class 9 · கலை பல வளர்த்தல்
தி. ஜானகிராமன் 1979இல் சாகித்திய அகாதெமி விருது பெற்ற சிறுகதைத் தொகுப்பு எது?
Q25Class 7 · நயத்தகு நாகரிகம்
அஃறிணைப் பெயர்களின் இறுதியில் நிற்கும் மகர எழுத்துக்குப் பதிலாக னகரம் வருவது ______ ஆகும்.
Q26Class 7 · அமுதத் தமிழ்
'ஆளுக்கு ஒரு வேலை' என்னும் விரிவானப் பகுதி எவ்வடிவில் அமைந்துள்ளது?
Q27Class 6 · பாடறிந்து ஒழுகுதல்
ஆசாரக்கோவை குறித்த கூற்றுகளுள் சரியானவற்றைத் தேர்ந்தெடுக்க.
1. இதன் ஆசிரியர் பிறந்த ஊர் வண்கயத்தூர்.
2. இது பதினெண்மேற்கணக்கு நூல்களுள் ஒன்று.
3. இந்நூல் நூறு வெண்பாக்களைக் கொண்டது.
Q28
வல்லினம் மிக வேண்டிய இடத்தில் மிகாமல் பிழையாக எழுதப்பட்ட தொடர் எது?
Q29
மயங்கொலிப் பிழை இல்லாத தொடரைத் தேர்ந்தெடு
Q30Class 7 · அணிநிழல் காடு
பொருத்துக:
அ) எரா - 1. திசைகாட்டும் கருவி
ஆ) பருமல் - 2. அடிமரம்
இ) மீகாமன் - 3. குறுக்கு மரம்
ஈ) காந்த ஊசி - 4. கப்பலைச் செலுத்துபவர்
Q31
துறை அடிப்படையில் பொருந்தாத கலைச்சொல்லைக் கண்டறிக
Q32
பொருத்துக:
(அ) Irrigation – 1. வனவியல்
(ஆ) Cultivation – 2. மண்புழு வளர்ப்பியல்
(இ) Forestry – 3. நீர்ப்பாசனம்
(ஈ) Vermiculture – 4. பயிரிடுதல்
Q33Class 6 · கூடித் தொழில் செய்
நாடு + என்ற என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ______.
Q34Class 7 · நாடு அதை நாடு
நன்னூலின்படி தமிழிலுள்ள ஓரெழுத்து ஒருமொழிகளின் எண்ணிக்கை ______.
Q35Class 8 · ஈடில்லா இயற்கை
காடர்களின் கதைகளைத் தொகுத்த மனிஷ் சாண்டி, மாதுரி ரமேஷ் ஆகியோரின் நூலை 'யானையோடு பேசுதல்' என்னும் தலைப்பில் தமிழாக்கம் செய்தவர் யார்?
Q36
பொருத்துக:
அ. Library – 1. பட்டம்
ஆ. E-Book – 2. நூலகம்
இ. Degree – 3. ஒழுக்கம்
ஈ. Discipline – 4. மின்நூல்
Q37Class 7 · மானுடம் வெல்லும்
பாவண்ணன் பல நூல்களைத் தமிழில் மொழிபெயர்த்தது ______ மொழியிலிருந்து.
Q38Class 8 · தமிழ் இன்பம்
எழுத்துகளின் பிறப்பு பற்றிய கூற்றுகளில் சரியானவை எவை?
1. மெல்லின மெய் எழுத்துகள் ஆறும் மூக்கை இடமாகக் கொண்டு பிறக்கின்றன.
2. இடையின மெய் எழுத்துகள் ஆறும் மார்பை இடமாகக் கொண்டு பிறக்கின்றன.
3. ர், ழ் ஆகிய இருமெய்களும் மேல்வாயை நாக்கின் நுனி வருடுவதால் பிறக்கின்றன.
Q39Class 6 · தமிழ்த்தேன்
'மா' என்னும் சொல்லின் பொருள் ______.
Q40
Transplantation என்ற கலைச்சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல் எது?
Q41
பழமொழியை நிறைவு செய்க: சித்திரமும் கைப்பழக்கம்; செந்தமிழும் ______
Q42Class 9 · அமுதென்று பேர்
'எந்தக் காலமும் நிலையாய் இருப்பதும் தமிழே' - இதில் 'காலமும்' என்பதன் இலக்கணக்குறிப்பு -
Q43Class 7 · கலைவண்ணம்
பின்வருவனவற்றுள் முதல்நிலை திரிந்த தொழிற்பெயர் ______.
Q44
'கேட்டினும் உண்டுஓர் உறுதி கிளைஞரை
நீட்டி அளப்பதோர் கோல்' – நண்பர்களை அளக்கும் அளவுகோலாகக் கூறப்படுவது எது?
Q45Class 6 · இன்னுயிர் காப்போம்
இனிமை + உயிர் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ______.
Q46
பழமொழியை நிறைவு செய்க: அளவுக்கு மிஞ்சினால் ______
Q47
'சாதலின் இன்னாதது இல்லை இனிதுஅதூஉம்
ஈதல் இயையாக் கடை' – சாதலும் இனிது எனக் கூறப்படும் நிலை எது?
Q48
இன்னா நாற்பது நூலின் பாடல்கள் எவற்றைப் பற்றிக் கூறுகின்றன?
Q49
'வான்நோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன்
கோல்நோக்கி வாழும் குடி' – குடிமக்கள் எதை நோக்கி வாழ்வர்?
Q50Class 8 · ஈடில்லா இயற்கை
றகரத்தை அடுத்து வரும் னகரம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Q51
'நிறுத்தக்குறி' என்னும் கலைச்சொல்லுக்கு உரிய ஆங்கிலச் சொல் எது?
Q52
வனவியல் என்ற தமிழ்க் கலைச்சொல்லுக்கு உரிய ஆங்கிலச் சொல் எது?
Q53
தமிழுக்குக் கருவூலமாய் அமைந்துள்ளதாகப் பாடநூல் குறிப்பிடும் பெருஞ்சித்திரனாரின் படைப்பு எது?
Q54
'கல்' என்னும் தன்வினைக்குரிய பிறவினை எது?
Q55Class 8 · அறத்தால் வருவதே இன்பம்
பின்வருவனவற்றுள் அயோத்திதாசர் பதிப்பித்த நூல் எது?
Q56Class 10 · நிலா முற்றம்
இலக்கணத்தில் 'திணை' என்னும் சொல் குறிப்பது எது?
Q57
'பெயக்கண்டும் நஞ்சுஉண்டு அமைவர் நயத்தக்க
நாகரிகம் வேண்டு பவர்' – யாவரும் விரும்பும் நாகரிகம் உடையவர் என்ன செய்வர்?
Q58Class 8 · ஈடில்லா இயற்கை
புகழாலும் பழியாலும் அறியப்படுவது ______.
Q59
துறை அடிப்படையில் பொருந்தாத கலைச்சொல்லைக் கண்டறிக
Q60Class 6 · பாடறிந்து ஒழுகுதல்
'கண்ணுறங்கு' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ______.
Q61Class 10 · நிலா முற்றம்
'அன்பின் ஐந்திணை' எனப்படுவன எவை?
Q62Class 8 · தமிழ் இன்பம்
பெரிய கப்பல்கள் ______ மீது செல்லும்.
Q63Class 10 · அமுதஊற்று
'நடவாமை', 'கொல்லாமை' ஆகியவை எவ்வகைத் தொழிற்பெயர்கள்?
Q64Class 8 · ஈடில்லா இயற்கை
பொருத்துக (வெட்டுக்கிளியும் சருகுமானும்):
அ. கூரன் - 1. சிறுத்தை
ஆ. பித்தக்கண்ணு - 2. பச்சை நிற வாயாடி
இ. வெட்டுக்கிளி - 3. பெண் சருகுமான்
ஈ. மரத்தடியில் தங்கியது - 4. புனுகுப்பூனை
Q65
'பாடிய', 'பாடி' – இவற்றின் வேறுபாடு எது?
Q66Class 10 · பெருவழி
'அலகிடுதல்' என்பது யாது?
Q67Class 8 · வையம்புகழ் வணிகம்
'பாடல் இலக்கியாவால் பாடப்பட்டது.' என்பது ______.
Q68
பிழையற்ற சொல்லைத் தேர்ந்தெடு
Q69
'யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்' என்று பாடியவர் யார்?
Q70Class 6 · இயற்கை இன்பம்
'தட்பவெப்பம்' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ______.
Q71Class 6 · புதுமைகள் செய்யும் தேசமிது
'தோரணமேடை' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ______.
Q72Class 6 · இயற்கை இன்பம்
பரந்து விரிந்து இருப்பதால் கடலுக்குப் ______ என்று பெயர்.
Q73
பேச்சு வழக்குத் தொடருக்கு இணையான எழுத்து வழக்குத் தொடரைத் தேர்ந்தெடு: 'நேத்து மழ பேஞ்சுது'
Q74Class 9 · உயிருக்கு வேர்
பொருத்துக. அ) கண்மாய் - 1) உவர்மண் நிலத்தில் தோண்டப்படும் நீர்நிலை ஆ) ஊருணி - 2) கோட்டையின் புறத்தே அகழ்ந்தமைக்கப்பட்ட நீர் அரண் இ) கூவல் - 3) பாண்டி மண்டலத்தில் ஏரிக்கு வழங்கப்படும் பெயர் ஈ) அகழி - 4) மக்கள் பருகுநீர் உள்ள நீர்நிலை
Q75
காலத்தை வெளிப்படையாகக் காட்டாது செய்பவரை மட்டும் காட்டும் குறிப்பு வினைமுற்றுக்கு, 'இடம்' அடிப்படையிலான எடுத்துக்காட்டு எது?
Q76Class 7 · கலைவண்ணம்
போர் இல்லாத உலகில் ______ நிலவும்.
Q77Class 7 · ஒப்புரவு ஒழுகு
இரட்டைக்கிளவி, அடுக்குத்தொடர் குறித்த கூற்றுகளைக் கவனி:
1. இரட்டைக்கிளவியின் சொற்களைப் பிரித்தால் பொருள் தராது.
2. அடுக்குத்தொடரில் சொற்கள் இணைந்து நிற்கும்.
3. அடுக்குத்தொடர் விரைவு, வெகுளி, உவகை, அச்சம், அவலம் ஆகிய பொருள்களில் வரும்.
சரியான கூற்றுகள் எவை?
Q78Class 8 · வையம்புகழ் வணிகம்
வீட்டு உபயோகப் பொருள்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் நிறைந்த மாவட்டம் ______.
Q79Class 9 · கலை பல வளர்த்தல்
'பொதுவர்கள் பொலிஉறப் போர்அடித்திடும்' நிலப்பகுதி -
Q80
பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடு: கழை
Q81Class 8 · தமிழ் இன்பம்
கூற்று (A): 'ஆழிக்கு இணை' பாடலில் இரட்டுறமொழிதல் அணி அமைந்துள்ளது.
காரணம் (R): அப்பாடலின் சொற்றொடர்களின் பொருள் தமிழ், கடல் ஆகிய இரண்டுக்கும் பொருந்தும் வகையில் அமைந்துள்ளது.
Q82Class 8 · ஈடில்லா இயற்கை
உடல் நலத்துக்காக நாள்தோறும் செய்ய வேண்டியவையாக மருத்துவர் கூறுவனவற்றுள் சரியானவை எவை?
1. நாற்பத்தைந்து நிமிடத்தில் மூன்று கி.மீ. நடைப்பயணம்
2. பதினைந்து நிமிடம் யோகா, தியானம், மூச்சுப்பயிற்சி
3. ஐந்து மணிநேரத் தூக்கம்
4. மூன்று லிட்டர் தண்ணீர் அருந்துதல்
Q83
'கத்துங் குயிலோசை – சற்றே வந்து காதிற் படவேணும்' என்னும் பாரதியார் பாடலடியில் அமைந்துள்ளது எது?
Q84Class 7 · நயத்தகு நாகரிகம்
பழமொழி நானூறு குறித்த கூற்றுகளைக் கவனி:
1. இது பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று.
2. இது நானூறு பாடல்களைக் கொண்டது.
3. இதன் ஆசிரியர் சைவ சமயத்தைச் சேர்ந்தவர் எனக் கடவுள் வாழ்த்தின் மூலம் அறியமுடிகிறது.
சரியான கூற்றுகள் எவை?
Q85
கோடிட்ட இடத்தில் சரியான சொல்லைத் தேர்ந்தெடு:
கல்வி இல்லாத பெண்கள் புல் மட்டுமே விளையும் ______ போன்றவர்கள் என்கிறார் பாரதிதாசன்.
Q86
பொருத்துக:
(அ) Momentum – 1. அழுத்தம்
(ஆ) Acceleration – 2. உந்தம்
(இ) Frequency – 3. அதிர்வெண்
(ஈ) Pressure – 4. முடுக்கம்
Q87Class 7 · நயத்தகு நாகரிகம்
'நீருலையில்' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ______.
Q88Class 6 · இன்னுயிர் காப்போம்
இடுகுறிச் சிறப்புப்பெயரைத் தேர்ந்தெடுக்க.
Q89Class 9 · அமுதென்று பேர்
'ஆறாம் திணை' எனப் புலம்பெயர்ந்த தமிழர்களின் வாழ்நிலமாக அ. முத்துலிங்கம் குறிப்பிடுவது எது?
Q90Class 6 · பாடறிந்து ஒழுகுதல்
பொருத்துக.
அ) நந்தவனம் - 1. உலகம்
ஆ) பண் - 2. பதித்து
இ) பார் - 3. பூஞ்சோலை
ஈ) இழைத்து - 4. இசை
Q91Class 7 · ஒப்புரவு ஒழுகு
அறம் + கதிர் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ______.
Q92
ஆட்சிமொழி விவாதத்தில், பழமையான மொழிகளுள் ஒன்றையே ஆட்சிமொழியாக்க வேண்டுமெனில் அது எம்மொழி என்று காயிதே மில்லத் குறிப்பிட்டார்?
Q93
Climate என்ற கலைச்சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல் எது?
Q94Class 9 · அமுதென்று பேர்
ஒற்றளபெடையில் அளபெடுக்காத எழுத்து எது?
Q95Class 9 · உள்ளத்தின் சீர்
'அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை இகழ்வார்ப் பொறுத்தல் தலை' - இக்குறளில் பயின்று வரும் அணி -
Q96Class 9 · உயிருக்கு வேர்
நீர் நிலைகளோடு தொடர்பில்லாதது எது?
Q97
கமலம், கஞ்சம், முளரி, பங்கயம் – இச்சொற்கள் குறிக்கும் மலர் எது?
Q98Class 6 · புதுமைகள் செய்யும் தேசமிது
மெத்தை வீடு என்று குறிப்பிடப்படுவது ______.
Q99Class 6 · இன்னுயிர் காப்போம்
நேர்மையான வாழ்வை வாழ்பவர் ______.
Q100
பாரதிதாசனின் 'இன்பத்தமிழ்' பாடல் இடம்பெற்றுள்ள நூல் எது?

Part B · General Science

Q101
The world's first oil well was drilled in Pennsylvania, USA in 1859. Where was the second oil well drilled, in 1867?
உலகின் முதல் பெட்ரோலிய எண்ணெய்க் கிணறு 1859இல் அமெரிக்காவின் பென்சில்வேனியாவில் தோண்டப்பட்டது. 1867இல் இரண்டாவது எண்ணெய்க் கிணறு எங்கு தோண்டப்பட்டது?
Q102Class 8 · Atomic Structure
A proton can be defined as ______.
புரோட்டானை ______ என வரையறுக்கலாம்.
Q103Class 9 · Periodic Classification of Elements
Mendeleev left a gap below silicon for Eka Silicon and predicted its properties; germanium was later found to fit it. Which pair of predicted and actual values matches Table 12.4?
மெண்டலீவ் சிலிகானுக்குக் கீழே எகா சிலிகானுக்காக இடம் விட்டு அதன் பண்புகளை முன்னறிவித்தார்; பின்னர் கண்டுபிடிக்கப்பட்ட ஜெர்மானியம் அதில் பொருந்தியது. அட்டவணை 12.4 உடன் பொருந்தும் முன்னறிவிப்பு, உண்மைப் பண்பு இணை எது?
Q104Class 7 · Polymer Chemistry
Complete the analogy:
Nylon : melts on heating :: Silk : ________
ஒப்புமை தருக:
நைலான் : வெப்பத்தால் உருகும் :: பட்டு : ________
Q105Class 9 · Measurement
Assertion (A): A spring balance can be used to find the weight of an object. Reason (R): A spring balance works by Hooke's law, by which the addition of weight produces a proportional increase in the length of the spring.
கூற்று (A): சுருள் வில் தராசு பொருளின் எடையைக் கணக்கிடப் பயன்படுகிறது. காரணம் (R): சுருள்வில்லில் கொடுக்கப்படும் விசையானது நிலையான புள்ளியிலிருந்து சுருள்வில் விரிவடையும் தொலைவிற்கு நேர் தகவில் அமையும் என்ற ஹூக்ஸ் விதிப்படி சுருள் வில் தராசு இயங்குகிறது.

Part B · Geography of India and Tamil Nadu

Q106Class 8 · Weather and Climate
Assertion (A): Mountain climbers use bottled oxygen when they ascend very high peaks.
Reason (R): With decreasing air pressure, the availability of oxygen to breathe also decreases.
கூற்று (A): மலையேறுபவர்கள் உயர்ந்த சிகரங்களில் ஏறும்பொழுது ஆக்சிஜனை உருளையில் அடைத்து எடுத்துச் செல்கின்றனர்.
காரணம் (R): காற்றின் அழுத்தம் குறைவதனால் சுவாசிப்பதற்கான ஆக்சிஜனின் அளவும் குறைகிறது.
Q107Class 8 · Weather and Climate
The earth receives energy from _______.
புவி பெறும் ஆற்றல் _______
Q108Class 9 · Disaster Management: Responding to Disasters
According to the Pew Research Centre analysis of 198 countries in 2015, which country tops the world in riots?
2015இல் பியூ ஆராய்ச்சி மையம் 198 நாடுகளில் நடத்திய ஆய்வின்படி கலவரத்தில் முதலிடத்தில் உள்ள நாடு எது?
Q109Class 10 · India - Population, Transport, Communication and Trade
National Waterway 1 extends between
தேசிய நீர்வழிப்போக்குவரத்து எண்.1 எந்த இடங்களுக்கு இடையே உள்ளது?
Q110Class 7 · Resources
Electricity produced from coal is called ____________.
நிலக்கரியிலிருந்து உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் ____________

Part B · History and Culture of India

Q111Class 9 · Ancient Civilisations
The large breed of Harappan cattle, often represented on their seals, is called
சிந்துவெளி முத்திரைகளில் பரவலாகக் காணப்படும், பெரிய வகை ஹரப்பா மாடு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Q112Class 6 · Great Thinkers and New Faiths
Which faith arose in Persia in the Sixth Century BC (BCE), the same period as Jainism and Buddhism in India?
இந்தியாவில் சமணமும் பௌத்தமும் தோன்றிய கி.மு. ஆறாம் நூற்றாண்டில் பாரசீகத்தில் தோன்றிய சமயம் எது?
Q113Class 6 · From Chiefdoms to Empires
Which of the following factors contributed to the rise of the Magadhan Empire?
1) Strategic location
2) Thick forest supplied timber and elephant
3) Control over sea
4) Availability of rich deposits of iron ores
கீழ்க்கண்டவைகளில் எது மகதப் பேரரசின் எழுச்சிக்குக் காரணமாயிற்று?
1. முக்கியத்துவம் வாய்ந்த அமைவிடம்
2. அடர்ந்த காடுகள் மரங்களையும், யானைகளையும் வழங்கின
3. கடலின் மீதான ஆதிக்கம்
4. வளமான இரும்புத் தாது கிடைத்தமையால்
Q114Class 9 · Ancient Civilisations
_______ was the master archive keeper of Chou state, according to traditions.
சௌ அரசின் தலைமை ஆவணக்காப்பாளர் _______ ஆவார்.
Q115Class 6 · From Chiefdoms to Empires
Yakshas, whose statues belong to the indigenous art of the Mauryan period, were deities connected with ______.
மௌரியர் கால உள்ளூர் கலையில் சிலைகளாக வடிக்கப்பட்ட யக்ஷன் எவற்றோடு தொடர்புடைய கடவுள் ஆவார்?

Part B · Indian National Movement

Q116Class 8 · People’s Revolt
Match the centres of the 1857 revolt with the British officials who suppressed it:
1. Delhi - A. Henry Lawrence
2. Lucknow - B. William Taylor
3. Jhansi and Gwalior - C. John Nicholson
4. Bihar - D. General Hugh Rose
1857 புரட்சி நடைபெற்ற இடங்களை அதை அடக்கிய ஆங்கிலேய அதிகாரிகளுடன் பொருத்துக:
1. டெல்லி - A. ஹென்றி லாரன்ஸ்
2. லக்னோ - B. வில்லியம் டைலர்
3. ஜான்சி & குவாலியர் - C. ஜான் நிக்கல்சன்
4. பீகார் - D. ஜெனரல் ஹக்ரோஸ்
Q117Class 8 · Development of Education in India
Who emphasised the importance of education in the Purananuru poem (183)?
புறநானூற்றுப் பாடலில் (183) கல்வியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியவர் யார்?
Q118Class 8 · Advent of the Europeans
Match the European companies with the year of their formation:
1. The Dutch - A. 1664
2. The British - B. 1602
3. The Danish - C. 1600
4. The French - D. 1616
ஐரோப்பிய நிறுவனங்களை அவை தொடங்கப்பட்ட ஆண்டுடன் பொருத்துக:
1. டச்சுக்காரர்கள் - A. 1664
2. ஆங்கிலேயர்கள் - B. 1602
3. டேனியர்கள் - C. 1600
4. பிரெஞ்சுக்காரர்கள் - D. 1616
Q119
Arrange the following Congress sessions in chronological order:
I. Session at Makkis Garden, Madras, presided over by Badruddin Tyabji
II. Special session at Calcutta that approved Non-Cooperation
III. Madras session that declared complete independence as its goal
IV. Lahore session that adopted Poorna Swaraj under Jawaharlal Nehru
பின்வரும் காங்கிரஸ் மாநாடுகளைக் காலவரிசைப்படுத்துக:
I. பத்ருதீன் தியாப்ஜி தலைமையில் சென்னை மக்கீஸ் தோட்டத்தில் நடந்த மாநாடு
II. ஒத்துழையாமையை ஏற்ற கல்கத்தா சிறப்பு மாநாடு
III. முழு விடுதலையை இலக்காக அறிவித்த சென்னை மாநாடு
IV. ஜவஹர்லால் நேரு தலைமையில் பூரண சுயராஜ்ஜியத்தை ஏற்ற லாகூர் மாநாடு
Q120Class 8 · Advent of the Europeans
_______, the King of Denmark, issued a charter to create the Danish East India Company.
_______ என்ற டென்மார்க் மன்னர், டேனிஷ் கிழக்கிந்திய நிறுவனத்தை உருவாக்க ஒரு பட்டயத்தை வெளியிட்டார்.

Part B · Indian Polity

Q121Class 7 · State Government
Consider the following statements and state true or false.
a. MLAs are together responsible for the working of the government.
b. All the MLAs of other political parties who do not belong to the ruling party are called opposition.
c. MLAs are not the representatives of people.
கீழ்க்காணும் வாக்கியங்கள் சரியா தவறா என்பதை ஆராய்க.
அ) அரசு செயல்படுவதற்குச் சட்டமன்ற உறுப்பினர்கள் பொறுப்புடையவர்கள் ஆவார்கள்.
ஆ) ஆளுங்கட்சி சட்டமன்ற உறுப்பினர்களைச் சாராத அனைத்து அரசியல் கட்சியைச் சார்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் என்று அழைக்கப்படுவர்.
இ) சட்டமன்ற உறுப்பினர்கள் மக்களுடைய பிரதிநிதிகள் அல்ல.
Q122Class 9 · Human Rights
Every State Human Rights Commission is established under which section of the Protection of Human Rights Act, 1993?
மனித உரிமைகள் பாதுகாப்புச் சட்டம், 1993இன் எந்தப் பிரிவின்படி ஒவ்வொரு மாநிலத்திலும் மாநில மனித உரிமைகள் ஆணையம் அமைக்கப்படுகிறது?
Q123Class 9 · Human Rights
Find the odd one out with regard to the six freedoms under the Right to Freedom.
சுதந்திர உரிமையின் கீழ் உள்ள ஆறு சுதந்திரங்களைப் பொறுத்து பொருந்தாததைக் கண்டறிக.
Q124Class 6 · Democracy
The definition of democracy, 'Government of the people, by the people, for the people', was given by ________
'மக்களால் மக்களுக்காக மக்களே நடத்தும் ஆட்சி மக்களாட்சி' என மக்களாட்சிக்கான வரையறையை வகுத்தவர் ________
Q125Class 7 · Media and Democracy
__________ have made the world smaller and closer.
உலகத்தினை சிறியதாகவும், மிக அருகாமையிலும் கொண்டு வந்தது __________.
Q126
Under the Lokpal and Lokayuktas Act, 2013, the Lokpal consists of a Chairperson and Members not exceeding
லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா சட்டம், 2013இன்படி லோக்பால் அமைப்பில் ஒரு தலைவரும், எத்தனைக்கு மிகாத உறுப்பினர்களும் இருப்பர்?
Q127Class 9 · Forms of Government
In the presidential form of government described in the lesson, the President is elected by an electoral college for a fixed tenure of ______ years.
பாடத்தில் விவரிக்கப்பட்டுள்ள அதிபர் மக்களாட்சி முறையில், அதிபர் வாக்காளர் மன்றத்தினால் ______ ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்ந்தெடுக்கப்படுகிறார்.
Q128Class 9 · Forms of Government
Consider the following statements about the unitary form of government:
1. It is suitable for small countries.
2. It is less expensive.
3. Amendments to the constitution are difficult.
Which of the statements given above is/are correct?
ஒற்றை ஆட்சி முறை குறித்த பின்வரும் கூற்றுகளைக் கவனி:
1. இது சிறு நாடுகளுக்குப் பொருத்தமானது.
2. இது குறைந்த செலவுடையது.
3. இதில் அரசியலமைப்புத் திருத்தங்களை மேற்கொள்வது கடினம்.
மேற்கண்ட கூற்றுகளில் சரியானது/சரியானவை எது/எவை?
Q129Class 8 · Citizens and Citizenship
A person married to a citizen of India can apply for citizenship by registration after being ordinarily resident in India for
இந்தியக் குடிமகனைத் திருமணம் செய்த ஒருவர் பதிவின் மூலம் குடியுரிமைக்கு விண்ணப்பிக்கும் முன் இந்தியாவில் எத்தனை ஆண்டுகள் வசித்திருக்க வேண்டும்?
Q130Class 6 · Local Bodies - Rural and Urban
The tenure of the local body representative is __________ years.
உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவிக்காலம் ________ ஆண்டுகள்.
Q131Class 6 · National Symbols
Our National tree is the ___________
இந்தியாவின் தேசிய மரம்
Q132Class 7 · Equality
Who said, "Equality does not mean identity of treatment, the sameness of reward"?
"சமத்துவம் என்பது சமமாக நடத்துவது மட்டுமல்ல, வெகுமதி அளிப்பதிலும் சமத்துவம் இருப்பதாகும்" என்று கூறியவர் யார்?
Q133Class 7 · State Government
Which of the following statements about the Governor is/are correct?
1. He is the chancellor of Government universities in the state.
2. All bills become law only after his assent.
3. He is the real executive head of the state administration.
ஆளுநர் பற்றிய கீழ்க்காணும் கூற்றுகளில் சரியானது எது/எவை?
1. மாநிலத்திலுள்ள அரசுப் பல்கலைக் கழகங்களின் வேந்தர் அவர்.
2. மசோதாக்கள் அனைத்தும் அவரின் ஒப்புதலுக்குப் பின்னரே சட்டமாகின்றன.
3. மாநில நிருவாகத்துறையின் உண்மையான தலைவர் அவர்.
Q134Class 9 · Local Self Government
In which year did Lord Ripon's Resolution revive local self government in British India?
ரிப்பன் பிரபுவின் தீர்மானம் எந்த ஆண்டு உள்ளாட்சி அமைப்புகளுக்குப் புத்துயிர் அளித்தது?
Q135Class 8 · How the State Government Works
To become a Judge of a High Court, a person must have at least how many years of experience as an advocate in one or more High Courts?
உயர் நீதிமன்ற நீதிபதியாக ஒருவர் உயர் நீதிமன்றங்களில் வழக்கறிஞராகக் குறைந்தது எத்தனை ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்?

Part B · Indian Economy

Q136Class 12 · Fiscal Economics
Revenue receipts of the government do NOT include ___________.
அரசின் வருவாய் வரவு (Revenue Receipts) கணக்கில் சேராதது
Q137Class 6 · Economics - An Introduction
The percentage of population in the cities of Tamil Nadu is ______.
தமிழ்நாட்டில் ______ சதவீத மக்கள் நகரங்களில் வாழ்கின்றனர்.
Q138Class 7 · Tax and its Importance
Which component is described in the lesson as crucial in the smooth running of country affairs, ensuring that tax money is used to benefit citizens?
அரசு வசூலிக்கும் வரிப்பணம் நாட்டின் நலனுக்காகச் சரியான முறையில் பயன்படுத்தப்படுவதை உறுதி செய்வதாக வரியின் முக்கியத்துவத்தில் குறிப்பிடப்படுவது
Q139Class 9 · Migration
Find the odd one out with respect to the number of emigrants recorded in the 2015 Tamil Nadu study.
2015 தமிழ்நாடு ஆய்வில் பதிவான வெளிக்குடியேற்ற எண்ணிக்கையின் அடிப்படையில் பொருந்தாததைக் கண்டறிக.
Q140Class 12 · Monetary Economics
____________ is a decrease in the rate of inflation.
பணவீக்க விகிதம் தொடர்ந்து குறைந்து செல்வது எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Q141Class 6 · Economics - An Introduction
On what basis are industries classified, according to the lesson?
பாடத்தின்படி தொழில்கள் எவற்றின் அடிப்படையில் வகைப்படுத்தப்படுகின்றன?
Q142Class 10 · Gross Domestic Product and its Growth: an Introduction
GNP equals
GNP யின் சமம்
Q143Class 8 · Money, Savings and Investments
Which of the following are contingent functions of money?
1. Basis of credit
2. Measure of value
3. Measurement and distribution of national income
4. Transfer of value
பின்வருவனவற்றில் பணத்தின் இதர பணிகள் எவை?
1. கடன் அடிப்படையில் இயக்கப்படுதல்
2. மதிப்பின் அளவுகோல்
3. நாட்டு வருவாயின் அளவீடு மற்றும் விநியோகம்
4. மாற்று மதிப்பு
Q144Class 7 · Tax and its Importance
Value Added Tax (VAT) was first introduced in India in the State of
இந்தியாவில் மதிப்பு கூட்டு வரி (VAT) முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்ட மாநிலம்
Q145
The Finance Commission recommends the principles on which States in need of assistance receive grants-in-aid of their revenues from the Union under Article
உதவி தேவைப்படும் மாநிலங்கள் மத்திய அரசிடமிருந்து வருவாய் மானியம் பெறுவதற்கான கொள்கைகளை நிதிக்குழு பரிந்துரைப்பது எந்தப் பிரிவின் கீழ்?
Q146Class 9 · Money and Credit
Which of the following is NOT mentioned in the lesson as an issue with informal financial institutions?
முறைசாரா நிதி நிறுவனங்களின் சிக்கலாகப் பாடத்தில் குறிப்பிடப்படாதது எது?
Q147Class 12 · Economics of Development and Planning
The basic philosophy behind long-term planning is to bring ___________ changes in the economy.
நீண்ட காலத் திட்டமிடலின் அடிப்படைக் கருத்து நாட்டின் ________ மாற்றமாகும்.

Part B · Development Administration in Tamil Nadu

Q148
The Justice Party government established the Staff Selection Board for the selection of government officials in
அரசு அதிகாரிகளைத் தேர்வு செய்வதற்காக நீதிக்கட்சி அரசு பணியாளர் தேர்வு வாரியத்தை அமைத்த ஆண்டு
Q149Class 9 · Employment in India and Tamil Nadu
Which of these workers belongs to the unorganised sector?
பின்வருவோருள் ஒழுங்கமைக்கப்படாத துறையைச் சேர்ந்தவர் யார்?
Q150Class 8 · Rural Life and Society
Who led the Pabna Peasant Uprising in the Yusufshahi Pargana of Bengal?
வங்காளத்தின் பாப்னாவில் உள்ள யூசுப்சாகி பர்கானாவில் பாப்னா கலகத்தை ஆரம்பித்தவர் யார்?
Q151
The main aim of the Naan Mudhalvan scheme, launched by the Chief Minister of Tamil Nadu on 1 March 2022, is
1 மார்ச் 2022 அன்று தமிழ்நாடு முதலமைச்சரால் தொடங்கப்பட்ட நான் முதல்வன் திட்டத்தின் முதன்மை நோக்கம்
Q152Class 8 · Status of Women in India through the ages
Who advocated orthodox Hindu opinion against the abolition of sati?
சதி ஒழிப்புக்கு எதிராகப் பழமையான இந்து கருத்துகளை வெளியிட்டவர்கள் யார்?
Q153
Which district of Tamil Nadu has reported the highest literacy rate?
தமிழ்நாட்டில் மிக அதிக எழுத்தறிவு விகிதம் கொண்ட மாவட்டம் எது?
Q154Class 8 · Status of Women in India through the ages
The Madras Devadasi Act, which gave Devadasis the legal right to marry, was enacted on
தேவதாசிகளுக்குத் திருமணம் செய்துகொள்ளும் உரிமையை வழங்கிய மதராஸ் தேவதாசி சட்டம் நிறைவேற்றப்பட்ட நாள்
Q155Class 8 · Rural Life and Society
Arrange the following peasant revolts in chronological order:
1. Pabna Revolt
2. Santhal Rebellion
3. Moplah Rebellion
4. Indigo Revolt
பின்வரும் விவசாயிகள் புரட்சிகளைக் காலவரிசைப்படி அமைக்கவும்:
1. பாப்னா கலகம்
2. சந்தால் கலகம்
3. மாப்ளா கிளர்ச்சி
4. இண்டிகோ கலகம்

Part B · History, Culture and Social Movements of Tamil Nadu

Q156
The Madras Devadasis (Prevention of Dedication) Act, which gave devadasis the legal right to marry, was enacted in
தேவதாசிகளுக்குத் திருமணம் செய்துகொள்ளச் சட்டப்பூர்வ உரிமை வழங்கிய மதராஸ் (அர்ப்பணிப்பைத் தடுத்தல்) தேவதாசி சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு
Q157Class 10 · Social Transformation in Tamil Nadu
Choose the correct statement:
(i) Thirukkural was one of the earliest Tamil literary texts to be published in 1812.
(ii) Maraimalai Adigal collected and edited different palm leaf manuscripts of the Tamil grammars and literature.
(iii) Robert Caldwell established the close affinity between the Dravidian languages in contrast with Sanskrit and also established the antiquity of Tamil.
(iv) Thiru.Vi. Kalyanasundaram was an early pioneer in Trade union movement.
சரியான கூற்றைத் தெரிவு செய்யவும்:
(i) தொடக்ககால தமிழ் இலக்கிய நூல்களில் ஒன்றான திருக்குறள் 1812இல் வெளியிடப்பட்டது.
(ii) பனையோலைகளில் எழுதப்பெற்ற பல்வேறு தமிழ் இலக்கண இலக்கிய கையெழுத்துப் பிரதிகளை மறைமலையடிகள் சேகரித்துத் தொகுத்தார்.
(iii) இராபர்ட் கால்டுவெல் திராவிட மொழிகளுக்கும் சமஸ்கிருதத்திற்கும் இடையில் இல்லாத ஒப்புமை திராவிட மொழிகளுக்கிடையே நெருக்கமாக நிலவுவதை நிரூபித்தார். தமிழின் தொன்மையையும் நிரூபித்தார்.
(iv) திரு.வி. கல்யாணசுந்தரம் தொழில் சங்க இயக்கத்தின் தொடக்ககால முன்னோடியாக இருந்தார்.
Q158
The Samarasa Vedha Sanmarga Sangam founded by Ramalinga Adigal in 1865 was later renamed as
1865இல் இராமலிங்க அடிகள் நிறுவிய சமரச வேத சன்மார்க்க சங்கம் பின்னர் எவ்வாறு பெயர் மாற்றம் செய்யப்பட்டது?
Q159
At Keezhadi, the ancient Sangam Age town was excavated in a large coconut garden known as
கீழடியில் சங்க காலத்து நகரம் அகழாய்வு செய்யப்பட்ட பரந்த தென்னந்தோப்பு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Q160Class 10 · Early Revolts against British Rule in Tamil Nadu
Choose the correct statement:\ni) Under Colonel Campbell, the English Army went along with Mahfuzkhan's army.\nii) After Muthu Vadugar's death in Kalaiyar Kovil battle, Marudhu Brothers assisted Velunachiyar in restoring the throne to her.\niii) Gopala Nayak spearheaded the famous Dindigul League.\niv) In May 1799 Cornwallis ordered the advance of Company armies to Tirunelveli.
சரியான கூற்றைத் தேர்வு செய்யவும்:
(i) கர்னல் கேம்ப்பெல் தலைமையின் கீழ் ஆங்கிலேயப் படைகள் மாபூஸ்கானின் படைகளோடு இணைந்து சென்றன.
(ii) காளையார்கோவில் போரில் முத்துவடுகநாதர் கொல்லப்பட்டப் பின் வேலுநாச்சியார் மீண்டும் அரியணையைப் பெறுவதற்கு மருது சகோதரர்கள் துணைபுரிந்தனர்.
(iii) திண்டுக்கல் கூட்டமைப்புக்கு கோபால நாயக்கர் தலைமையேற்று வழிநடத்தினார்.
(iv) காரன்வாலிஸ் மே 1799இல் கம்பெனிப் படைகளை திருநெல்வேலி நோக்கிச் செல்ல உத்தரவிட்டார்.
Q161Class 6 · Society and Culture in Ancient Tamizhagam: The Sangam Age
Land revenue was called ______.
நில வரி ______ என அழைக்கப்பட்டது.
Q162Class 7 · Art and Architecture of Tamil Nadu
Which of the following is not one of the Pancha Pandava Rathas?
பின்வருவனவற்றுள் பஞ்ச பாண்டவ இரதங்களில் இடம்பெறாதது எது?
Q163Class 10 · Early Revolts against British Rule in Tamil Nadu
Before his conversion to Islam, Yusuf Khan (Khan Sahib) was known as _______.
மதமாற்றத்திற்கு முன்பு யூசுப்கான் (கான்சாகிப்) _______ என்று அழைக்கப்பட்டார்.
Q164Class 7 · Art and Architecture of Tamil Nadu
Sittanavasal, known for its early Pandya fresco paintings, was a residential cave of
முற்காலப் பாண்டியர் ஓவியங்களுக்குப் புகழ்பெற்ற சித்தன்னவாசல் யாருடைய வாழிடக் குகையாகும்?
Q165Class 6 · Society and Culture in Ancient Tamizhagam: The Sangam Age
The rule of Pandyas was followed by ______.
பாண்டியர் ஆட்சிக்குப் பின் ஆட்சிக்கு வந்தோர் ______ ஆவர்.
Q166Class 9 · Early Tamil Society and Culture
The shifting cultivation adopted by people living in the forest in the Sangam Age was called
சங்க காலத்தில் வனப்பகுதிகளில் இடம்விட்டு இடம் மாறிச் சாகுபடி செய்யும் முறை எவ்வாறு அழைக்கப்பட்டது?
Q167Class 7 · Jainism, Buddhism and Ajivika Philosophy in Tamil Nadu
The image of __________ is considered to be the tallest Jain image in Tamil Nadu.
தமிழ் நாட்டிலுள்ள சமணச் சிலைகளில் மிக உயரமாகக் கருதப்படும் சிலை __________ ஆகும்.
Q168
Kural: 'உறுபொருளும் உல்கு பொருளும்தன் ஒன்னார்த்
தெறுபொருளும் வேந்தன் பொருள்.'
In this kural on the sources of state revenue, what does 'உல்கு பொருள்' refer to?
'உறுபொருளும் உல்கு பொருளும்தன் ஒன்னார்த்
தெறுபொருளும் வேந்தன் பொருள்.'
- அரசின் வருவாய் பற்றிய இக்குறளில் 'உல்கு பொருள்' என்பது எதைக் குறிக்கிறது?
Q169Class 7 · Art and Architecture of Tamil Nadu
In which year were the Mamallapuram monuments and temples notified as a UNESCO World Heritage site?
மாமல்லபுரத்திலுள்ள நினைவுச் சின்னங்களும் கோவில்களும் யுனெஸ்கோவால் எப்போது அங்கீகரிக்கப்பட்டது?
Q170Class 6 · Ancient Cities of Tamilagam
Find out the correct statement.
சரியான தொடரைக் கண்டறிக.
Q171
Bharathidasan was given the Sahitya Akademi award for his play
பாரதிதாசனுக்குச் சாகித்திய அகாதெமி விருது பெற்றுத்தந்த நாடக நூல் எது?
Q172Class 10 · Freedom Struggle in Tamil Nadu
O.K.S.R. Kumaraswamy, who fell dead holding the national flag aloft in 1932, is hailed as _______.
1932இல் தேசியக் கொடியை உயர்த்திப் பிடித்தவாறே விழுந்து இறந்த O.K.S.R. குமாரசாமி எவ்வாறு புகழப்படுகிறார்?
Q173
Kural: 'யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இலன்.'
What is the meaning of this kural?
'யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இலன்.'
- இக்குறளின் பொருள் யாது?
Q174
A touchstone bearing the name 'Perumpatankal', probably used by a goldsmith to test the purity of gold, has been found at Khuan Luk Pat in
பொன்னின் தரத்தைச் சோதிக்கப் பொற்கொல்லர் பயன்படுத்திய 'பெரும்பதன்கல்' என்ற பெயர் பொறித்த உரைகல் குவான் லுக் பாட் என்ற இடத்தில் கிடைத்தது. அந்த இடம் எந்த நாட்டில் உள்ளது?
Q175
Influenced by which Theosophist organiser did Iyothee Thassar go to Sri Lanka in 1898 and embrace Buddhism?
எந்தப் பிரம்மஞான சபைத் தலைவரின் தாக்கத்தால் அயோத்திதாசர் 1898இல் இலங்கை சென்று பௌத்தத்தைத் தழுவினார்?

Part C · Aptitude

Q176
A student who scores 30% of the maximum marks fails by 15 marks. Another student who scores 40% gets 35 marks more than the pass mark. What are the maximum marks?
மொத்த மதிப்பெண்களில் 30% பெறும் ஒரு மாணவர் 15 மதிப்பெண்களில் தோல்வி அடைகிறார். 40% பெறும் மற்றொரு மாணவர் தேர்ச்சி மதிப்பெண்ணை விட 35 மதிப்பெண்கள் அதிகம் பெறுகிறார். மொத்த மதிப்பெண்கள் எத்தனை?
Q177
The radius of a cylinder is halved and its height is doubled. What happens to its volume?
ஓர் உருளையின் ஆரம் பாதியாக்கப்பட்டு, உயரம் இருமடங்காக்கப்படுகிறது. அதன் கனஅளவு என்ன ஆகும்?
Q178
At what rate per cent per annum will ₹ 2,500 amount to ₹ 3,025 in 2 years at compound interest?
எந்த ஆண்டு வட்டி வீதத்தில் ₹ 2,500 ஆனது 2 ஆண்டுகளில் கூட்டு வட்டியுடன் ₹ 3,025 ஆகும்?
Q179Class 10 · Mensuration
The ratio of the volumes of a cylinder, a cone and a sphere, if each has the same diameter and same height is
சமமான விட்டம் மற்றும் உயரம் உடைய ஓர் உருளை, ஒரு கூம்பு மற்றும் ஒரு கோளத்தின் கன அளவுகளின் விகிதம்
Q180
15 workers can build a wall in 24 days. In how many days can 20 workers build the same wall?
15 பணியாளர்கள் ஒரு சுவரை 24 நாள்களில் கட்டுவர். அதே சுவரை 20 பணியாளர்கள் எத்தனை நாள்களில் கட்டுவர்?
Q181Class 6 · Ratio and Proportion
The simplified form of the ratio 32 : 24 is
32 : 24 என்ற விகிதத்தின் எளிய வடிவம்
Q182
What principal will amount to ₹ 4,410 in 2 years at 5% per annum compound interest?
ஆண்டுக்கு 5% கூட்டு வட்டி வீதத்தில் 2 ஆண்டுகளில் ₹ 4,410 ஆக உயரும் அசல் எவ்வளவு?
Q183
The LCM of 15, 20 and 25 is
15, 20 மற்றும் 25 இன் மீ.சி.ம.
Q184
45 litres of a mixture contains milk and water in the ratio 7 : 2. If 6 litres of water is added, what is the new ratio of milk to water?
45 லிட்டர் கலவையில் பாலும் நீரும் 7 : 2 என்ற விகிதத்தில் உள்ளன. அதில் 6 லிட்டர் நீர் சேர்த்தால், பால் மற்றும் நீரின் புதிய விகிதம் என்ன?
Q185
The population of a village is 20,000. If it increases at 10% per annum, what will the population be after 2 years?
ஒரு கிராமத்தின் மக்கள்தொகை 20,000. அது ஆண்டுக்கு 10% வீதம் அதிகரித்தால், 2 ஆண்டுகளுக்குப் பிறகு மக்கள்தொகை எவ்வளவு?
Q186Class 8 · Measurements
Find the length of the arc of a sector of radius 14 cm and central angle 90°. \( \left( \pi = \frac{22}{7} \right) \)
14 செ.மீ ஆரமும் 90° மையக்கோணமும் கொண்ட வட்டக்கோணப் பகுதியின் வில்லின் நீளம் காண்க. \( \left( \pi = \frac{22}{7} \right) \)
Q187Class 10 · Mensuration
If two solid hemispheres of same base radius r units are joined together along their bases, then curved surface area of this new solid is
r அலகுகள் ஆரம் உடைய இரு சம அரைக்கோளங்களின் அடிப்பகுதிகள் இணைக்கப்படும் போது உருவாகும் திண்மத்தின் புறப்பரப்பு
Q188Class 8 · Life Mathematics
A suitcase marked at ₹2400 is sold at a 10% discount, and 12% GST is charged on the discounted price. The bill amount is
₹2400 எனக் குறிக்கப்பட்ட ஒரு பயணப் பெட்டி 10% தள்ளுபடியில் விற்கப்படுகிறது. தள்ளுபடி விலையின் மீது 12% GST விதிக்கப்படுகிறது எனில், இரசீது தொகை எவ்வளவு?
Q189
The mean proportional between 0.08 and 0.18 is
0.08 மற்றும் 0.18 இன் இடை விகிதசமம்
Q190
A well of diameter 7 m is dug 10 m deep. The earth taken out is spread evenly over a rectangular field 22 m long and 14 m wide. By how much is the level of the field raised? (Take π = \( \frac{22}{7} \))
விட்டம் 7 m உடைய ஒரு கிணறு 10 m ஆழத்திற்குத் தோண்டப்படுகிறது. வெளியே எடுத்த மண் 22 m நீளம், 14 m அகலம் உடைய ஒரு செவ்வக வயலில் சீராகப் பரப்பப்படுகிறது. வயலின் மட்டம் எவ்வளவு உயரும்? (π = \( \frac{22}{7} \) எனக் கொள்க)

Part C · Reasoning

Q191
Six persons Bala, Selvi, Gopi, Divya, Mani and Anu sit in a row facing north. Gopi sits third from the left end. Anu sits at one of the ends. Divya sits immediately to the left of Anu. Bala sits between Gopi and Divya. Selvi does not sit at an end. Who sits second to the right of Selvi?
பாலா, செல்வி, கோபி, திவ்யா, மணி, அனு ஆகிய ஆறு பேர் வடக்கு நோக்கி ஒரு வரிசையில் அமர்ந்துள்ளனர். கோபி இடது கோடியிலிருந்து மூன்றாவதாக அமர்ந்துள்ளார். அனு ஏதேனும் ஒரு கோடியில் அமர்ந்துள்ளார். திவ்யா அனுவுக்கு உடனடி இடப்புறம் அமர்ந்துள்ளார். பாலா, கோபிக்கும் திவ்யாவுக்கும் இடையே அமர்ந்துள்ளார். செல்வி எந்தக் கோடியிலும் அமரவில்லை. செல்விக்கு வலப்புறம் இரண்டாவதாக அமர்ந்திருப்பவர் யார்?
Q192
DFH : 18 :: KMO : ?
Q193
Find the next term in the series: 10, 15, 12, 17, 14, 19, ?
தொடரில் அடுத்து வரும் எண் எது? 10, 15, 12, 17, 14, 19, ?
Q194
The sum of the present ages of Kumar and Meena is 40 years. Five years ago, Kumar's age was twice Meena's age. What is Kumar's present age?
குமார், மீனா ஆகியோரின் தற்போதைய வயதுகளின் கூடுதல் 40 ஆண்டுகள். ஐந்து ஆண்டுகளுக்கு முன், குமாரின் வயது மீனாவின் வயதைப் போல் இரு மடங்காக இருந்தது. குமாரின் தற்போதைய வயது என்ன?
Q195
Statement: "Wear a helmet while riding a two-wheeler; it can save your life in an accident."
Conclusions: I. Only people who wear helmets ride two-wheelers. II. A helmet helps protect a rider in an accident.
Which conclusion(s) follow?
கூற்று: "இரு சக்கர வாகனம் ஓட்டும்போது தலைக்கவசம் அணியுங்கள்; விபத்தில் அது உங்கள் உயிரைக் காக்கும்."
முடிவுகள்: I. தலைக்கவசம் அணிபவர்கள் மட்டுமே இரு சக்கர வாகனம் ஓட்டுகின்றனர். II. விபத்தில் தலைக்கவசம் ஓட்டுநரைப் பாதுகாக்க உதவுகிறது.
எந்த முடிவு(கள்) பின்பற்றுகிறது?
Q196
The number 1801, written in digital style, is first reflected in a vertical mirror placed on its right. That image is then reflected in water below it. The digits 1, 8 and 0 are symmetric about both a vertical and a horizontal line. Which number is finally seen?
டிஜிட்டல் முறையில் எழுதப்பட்ட 1801 என்ற எண் முதலில் அதன் வலப்புறம் உள்ள செங்குத்துக் கண்ணாடியில் பிரதிபலிக்கப்படுகிறது. அந்தப் பிம்பம் பின்னர் கீழே உள்ள நீரில் பிரதிபலிக்கப்படுகிறது. 1, 8, 0 ஆகிய இலக்கங்கள் செங்குத்து, கிடைமட்ட ஆகிய இரு கோடுகளைப் பொறுத்தும் சமச்சீரானவை. இறுதியாகத் தெரியும் எண் எது?
Q197
In a certain code, DOG = 26 and CAT = 24. What is the value of COW in that code?
ஒரு குறியீட்டில் DOG = 26, CAT = 24 எனில், அதே குறியீட்டில் COW இன் மதிப்பு என்ன?
Q198
Which letter lies exactly midway between G and Q in the English alphabet?
ஆங்கில அகரவரிசையில் G க்கும் Q க்கும் சரியாக நடுவில் உள்ள எழுத்து எது?
Q199
A square sheet of paper is folded once along its middle line, and one hole is punched through both layers. How many holes will the sheet have when it is unfolded?
ஒரு சதுரக் காகிதம் அதன் நடுக்கோட்டில் ஒருமுறை மடிக்கப்பட்டு, இரண்டு அடுக்குகளையும் துளைக்குமாறு ஒரு துளை இடப்படுகிறது. காகிதத்தைப் பிரித்தால் எத்தனை துளைகள் இருக்கும்?
Q200
Find the next term in the series: 2, 5, 10, 17, 26, ?
தொடரில் அடுத்து வரும் எண் எது? 2, 5, 10, 17, 26, ?