TN Online Testசமச்சீர் கல்விப் பயிற்சி

பத்தாம் வகுப்பு தமிழ் வினாத்தாள் March 2026

வினாத்தாள் குறியீடு 9201 100 மதிப்பெண்கள் 180 நிமிடங்கள்

March 2026 பொதுத் தேர்வின் முழு வினாத்தாள் அச்சிட்டபடியே: ஒவ்வொரு வினாவும் தமிழ், ஆங்கிலத்தில். PDF ஐப் பதிவிறக்குங்கள், அல்லது பகுதி I ஐ இலவச ஆன்லைன் தேர்வாக எழுதுங்கள்.

தமிழ் / தமிழ்March 2026 · March 2026

பகுதி – I

குறிப்பு : (i) அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும். (ii) கொடுக்கப்பட்ட நான்கு மாற்று விடைகளில் மிகவும் ஏற்புடைய விடையைத் தேர்ந்தெடுத்துக் குறியீட்டுடன் விடையினையும் சேர்த்து எழுதவும். 15×1=15
1.
"இருவர் உரையாடுவது போன்ற ஓசை" என்பது ________.
(அ) அகவலோசை
(ஆ) துள்ளலோசை
(இ) தூங்கலோசை
(ஈ) செப்பலோசை
(a)
(b)
(c)
(d)
விடையைக் காட்டு ▾ (ஈ) / (d) · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →
1 mark
2.
இரவீந்திரநாத தாகூர் ________ மொழியில் எழுதிய கவிதைத் தொகுப்பான கீதாஞ்சலியை ________ மொழியில், மொழிபெயர்த்த பிறகுதான் அவருக்கு நோபல் பரிசு கிடைத்தது.
(அ) ஆங்கில, வங்காள
(ஆ) வங்காள, ஆங்கில
(இ) வங்காள, தெலுங்கு
(ஈ) தெலுங்கு, ஆங்கில
(a)
(b)
(c)
(d)
விடையைக் காட்டு ▾ (ஆ) / (b) · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →
1 mark
3.
உலகமே வறுமையுற்றாலும் கொடுப்பவன் என்றும் பொருள்களின் இருப்பைக் கூட அறியாமல் கொடுப்பவன் என்றும் பாராட்டப்படுவோர் யாவர் ?
(அ) உதியன் ; சேரலாதன்
(ஆ) அதியன் ; பெருஞ்சாத்தன்
(இ) பேகன் ; கிள்ளிவளவன்
(ஈ) நெடுஞ்செழியன் ; திருமுடிக்காரி
(a)
(b)
(c)
(d)
விடையைக் காட்டு ▾ (ஆ) / (b) · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →
1 mark
4.
அறிஞருக்கு நூல், அறிஞரது நூல் ஆகிய சொற்றொடர்களில் பொருளை வேறுபடுத்தக் காரணமாக அமைந்தது -
(அ) வேற்றுமை உருபு
(ஆ) எழுவாய்
(இ) உவம உருபு
(ஈ) உரிச்சொல்
(a)
(b)
(c)
(d)
விடையைக் காட்டு ▾ (அ) / (a) · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →
1 mark
5.
காலக்கணிதம் கவிதையில் இடம்பெற்ற தொடர் எது ?
(அ) இகழ்ந்தால் என்மனம் இறந்து விடாது
(ஆ) என்மனம் இகழ்ந்தால் இறந்து விடாது
(இ) இகழ்ந்தால் இறந்து விடாது என்மனம்
(ஈ) என்மனம் இறந்து விடாது இகழ்ந்தால்
(a)
(b)
(c)
(d)
விடையைக் காட்டு ▾ (அ) / (a) · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →
1 mark
6.
செய்தி (1) : ஒவ்வோர் ஆண்டும் சூன் 15 -ஐ உலகக் காற்று நாளாகக் கொண்டாடி வருகிறோம்.
செய்தி (2) : காற்றாலை மின் உற்பத்தியில் இந்தியாவில் தமிழ்நாடு இரண்டாமிடம் என்பது எனக்குப் பெருமையே.
செய்தி (3) : இந்தியாவிற்குத் தேவையான மழை அளவில் எழுபது விழுக்காடு மழையைத் தென்மேற்குப் பருவக்காற்றாகக் கொடுக்கின்றேன்.
(அ) செய்தி (1) மட்டும் சரி
(ஆ) செய்தி (1), (2) ஆகியன சரி
(இ) செய்தி (3) மட்டும் சரி
(ஈ) செய்தி (1), (3) ஆகியன சரி
(a)
(b)
(c)
(d)
விடையைக் காட்டு ▾ (ஈ) / (d) · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →
1 mark
7.
கொளுத்தும் வெயில் சட்டெனத் தணிந்தது;
வானம் இருண்டது; வாடைக் காற்று வீசியது.
பொருத்தமான தலைப்பைத் தேர்க.
(அ) உயிர்ப்பின் ஏக்கம்
(ஆ) நீரின் சிலிர்ப்பு
(இ) மொட்டின் வருகை
(ஈ) காற்றின் பாடல்
(a)
(b)
(c)
(d)
விடையைக் காட்டு ▾ (ஈ) / (d) · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →
1 mark
8.
'வா' என்ற வேர்ச்சொல்லின் விளித்தொடரைத் தேர்க.
(அ) குழந்தை வந்தது
(ஆ) வந்த குழந்தை
(இ) வந்து நின்றது
(ஈ) குழந்தையே வா!
(a)
(b)
(c)
(d)
விடையைக் காட்டு ▾ (ஈ) / (d) · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →
1 mark
9.
நச்சிலைவேல் கோக்கோதை நாடு, நல்யானைக் கோக்கிள்ளி நாடு - இத்தொடர்களில் குறிப்பிடப்படுகின்ற நாடுகள் முறையே,
(அ) பாண்டிய நாடு, சேர நாடு
(ஆ) சோழ நாடு, சேர நாடு
(இ) சேர நாடு, சோழ நாடு
(ஈ) சோழ நாடு, பாண்டிய நாடு
(a)
(b)
(c)
(d)
விடையைக் காட்டு ▾ (இ) / (c) · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →
1 mark
10.
"கேட்டவர் மகிழப் பாடிய பாடல் இது" - தொடரில் இடம்பெற்றுள்ள தொழிற்பெயரும் வினையாலணையும் பெயரும் முறையே -
(அ) பாடிய ; கேட்டவர்
(ஆ) பாடல் ; பாடிய
(இ) கேட்டவர் ; பாடிய
(ஈ) பாடல் ; கேட்டவர்
(a)
(b)
(c)
(d)
விடையைக் காட்டு ▾ (ஈ) / (d) · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →
1 mark
11.
புதன்கிழமையை ஒன்றாம் தேதியாகக் கொண்ட நாள்காட்டியில் அடுத்த வார செவ்வாய்க்கிழமையைத் தமிழெண்ணில் தேர்க.
(அ) ௧
(ஆ) ௮
(இ) ௫
(ஈ) ௭
(a)
(b)
(c)
(d)
விடையைக் காட்டு ▾ (ஈ) / (d) · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →
1 mark
12.
"விருந்தினனாக ஒருவன் வந்து எதிரின்
வியத்தல் நன்மொழி இனிது உரைத்தல்
திருந்துற நோக்கல் வருக என உரைத்தல்
எழுதல் முன் மகிழ்வன செப்பல்"
இப்பாடல் இடம்பெற்ற நூலைத் தேர்க.
(அ) கம்பராமாயணம்
(ஆ) காசிக்காண்டம்
(இ) தேம்பாவணி
(ஈ) முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ்
(a)
(b)
(c)
(d)
விடையைக் காட்டு ▾ (ஆ) / (b) · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →
1 mark
13.
"விருந்தினனாக ஒருவன் வந்து எதிரின்
வியத்தல் நன்மொழி இனிது உரைத்தல்
திருந்துற நோக்கல் வருக என உரைத்தல்
எழுதல் முன் மகிழ்வன செப்பல்"
பாடலின் ஆசிரியரைத் தேர்க.
(அ) பரஞ்சோதி முனிவர்
(ஆ) இளங்கோவடிகள்
(இ) அதிவீரராம பாண்டியர்
(ஈ) கம்பர்
(a)
(b)
(c)
(d)
விடையைக் காட்டு ▾ (இ) / (c) · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →
1 mark
14.
"விருந்தினனாக ஒருவன் வந்து எதிரின்
வியத்தல் நன்மொழி இனிது உரைத்தல்
திருந்துற நோக்கல் வருக என உரைத்தல்
எழுதல் முன் மகிழ்வன செப்பல்"
'செப்பல்' என்ற சொல்லின் பொருள் :
(அ) வருதல்
(ஆ) வியத்தல்
(இ) எழுதல்
(ஈ) கூறுதல்
(a)
(b)
(c)
(d)
விடையைக் காட்டு ▾ (ஈ) / (d) · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →
1 mark
15.
"விருந்தினனாக ஒருவன் வந்து எதிரின்
வியத்தல் நன்மொழி இனிது உரைத்தல்
திருந்துற நோக்கல் வருக என உரைத்தல்
எழுதல் முன் மகிழ்வன செப்பல்"
சீர் எதுகைச் சொற்களைத் தேர்க.
(அ) ஒருவன் - எதிரின்
(ஆ) திருந்துற - வருக
(இ) விருந்தினனாக - வியத்தல்
(ஈ) உரைத்தல் - செப்பல்
(a)
(b)
(c)
(d)
விடையைக் காட்டு ▾ (ஆ) / (b) · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →
1 mark

பகுதி – II

பிரிவு – 1 (வினா 16–21): எவையேனும் நான்கு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்கவும். 21-ஆவது வினாவிற்குக் கட்டாயமாக விடையளிக்கவும். 4×2=8

பிரிவு – 2 (வினா 22–28): எவையேனும் ஐந்து வினாக்களுக்கு மட்டும் விடையளிக்கவும். 5×2=10

16.
கரப்பிடும்பை இல்லார் – இத்தொடரின் பொருள் கூறுக.
2 marks
17.
விடைகளுக்கேற்ற வினாக்கள் அமைக்கவும்.
(அ) முன்பின் அறியாத புதியவர்களுக்கே விருந்தினர் என்று பெயர்.
(ஆ) ஒரு நாட்டின் நாட்டுவளம், சொல்வளத்தை உருவாக்குகின்றது.
2 marks
18.
மென்மையான மேகங்கள், துணிச்சலும், கருணையும் கொண்டு வானில் செய்யும் நிகழ்வுகளை எழுதுக.
2 marks
19.
செங்கீரை ஆடுதலில் எந்தெந்த அணிகலன்கள் சூட்டப்படுவதாக முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ் குறிப்பிடுகிறது ?
2 marks
20.
வறுமையிலும் படிப்பின்மீது நாட்டம் கொண்டவர் ம.பொ.சி. என்பதற்குச் சான்று தருக.
2 marks
21.
‘உலகு’ – என முடியும் திருக்குறளை எழுதுக.
2 marks
22.
பொருத்தமான நிறுத்தக் குறியிடுக.
சேரர்களின் பட்டப்பெயர்களில் கொல்லி வெற்பன் மலையமான் போன்றவை குறிப்பிடத்தக்கவை கொல்லி மலையை வென்றவன் கொல்லி வெற்பன் எனவும் பிற மலைப்பகுதிகளை வென்றவர்கள் மலையமான் எனவும் பெயர் சூட்டிக்கொண்டனர் இதற்குச் சங்க இலக்கியத்தில் சான்றுகள் உள்ளன
2 marks
23.
தொழிற்பெயர்களின் பொருளைப் புரிந்து கொண்டு தொடர்களை முழுமை செய்க.
(அ) காட்டு விலங்குகளைச் ________ தடை செய்யப்பட்டுள்ளது.
(ஆ) செய்த தவறுகளைச் ________ திருந்த உதவுகிறது.
(சுட்டல், சுடுதல்)
2 marks
24.
பகுபத உறுப்பிலக்கணம் தருக.
அமர்ந்தான்
2 marks
25.
கட்டுரை படித்த – இச்சொற்களுக்கு இடையில் வேற்றுமை உருபைப் பயன்படுத்தித் தொடரை விரித்து எழுதுக.
2 marks
26.
பொதுவியல் திணை பற்றிக் குறிப்பெழுதுக.
2 marks
27.
கலைச்சொற்கள் தருக.
(அ) Happiness   (ஆ) Storyteller

குறிப்பு : செவி மாற்றுத் திறனாளர்களுக்கான மாற்று வினா.
விடுபட்ட எழுத்துகளை நிரப்புக.
(அ) கு – தி (சிவப்பு நிறத்தில் இருக்கும்)
(ஆ) அ – கா (தங்கைக்கு மூத்தவள்)
2 marks
28.
இரு சொற்களையும் ஒரே தொடரில் அமைத்து எழுதுக.
(அ) மலை – மாலை   (ஆ) விடு – வீடு
2 marks

பகுதி – III

பிரிவு – 1 (வினா 29–31): எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் சுருக்கமாக விடையளிக்கவும். 2×3=6

பிரிவு – 2 (வினா 32–34): எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்கவும். வினா எண் 34-க்குக் கட்டாயமாக விடையளிக்கவும். 2×3=6

பிரிவு – 3 (வினா 35–37): எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் சுருக்கமாக விடையளிக்கவும். 2×3=6

29.
பலதுறைகளின் வளர்ச்சிக்கு மொழிபெயர்ப்பு எவ்வாறு பயன்படுகிறது ?
3 marks
30.
“தலையைக் கொடுத்தேனும் தலைநகரைக் காப்போம்” இடம் சுட்டிப் பொருள் விளக்குக.
3 marks
31.
உரைப்பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடை தருக.
தொல்காப்பியர், உலகம் என்பது ஐம்பெரும் பூதங்களால் ஆனது என்கிறார். பழங்காலத்தில் கடல்கடந்த பயணங்கள் அனைத்தும் காற்றால் இயக்கப்பட்ட பாய்மரக் கப்பல்களால்தான் நிகழ்ந்தன. காற்றின் ஆற்றலை, ‘வளி மிகின் வலி இல்லை’ என்று ஐயூர் முடவனார் சிறப்பித்துள்ளார். இதுபோன்றே மதுரை இளநாகனார் கடுங்காற்று, மணலைக் கொண்டு வந்து சேர்க்கிறது என்று காற்றின் வேகத்தைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார்.
(அ) உலகம் குறித்துத் தொல்காப்பியர் கூறுவது யாது ?
(ஆ) கடல்கடந்த பயணங்கள் பழங்காலத்தில் எவ்வாறு நிகழ்ந்தன ?
(இ) மதுரை இளநாகனாரின் காற்று பற்றிய கருத்தை எழுதுக.
3 marks
32.
தமிழன்னையை வாழ்த்துவதற்கான காரணங்களாகப் பாவலரேறு சுட்டுவன யாவை ?
3 marks
33.
“தான் எவற்றையெல்லாம் அறியவில்லை” – என்று கருணையன் கூறுகிறார் ?
3 marks
34.
(அ)அடிபிறழாமல் எழுதுக.
‘மாற்றம்’ ….. எனத் தொடங்கி ‘அட்சய பாத்திரம்!’ என முடியும் ‘காலக்கணிதம்’ பாடல்.
அல்லது / OR
(ஆ)அடிபிறழாமல் எழுதுக.
‘அள்ளல் பழனத்(து)’ எனத் தொடங்கும் முத்தொள்ளாயிரம் பாடல்.
3 marks
35.
மார்கழித் திங்கள் அதிகாலை நேரத்தில் மக்கள் நடைப்பயிற்சி மேற்கொண்டனர். சிலர் மிதிவண்டியில் சென்றனர். சாலை ஓரத்தில் இருந்த வீட்டின் மதிலை ஒட்டிச் செங்காந்தள் மலர்கள் பூத்துக் குலுங்கியபடி இருந்தன. அவற்றைப் பார்த்தபடியே வீடு சென்றேன்.
பத்தியைப் படித்துத் தொகைநிலைத் தொடர்களைக் கண்டறிந்து எழுதுக.
3 marks
36.
இன்மையின் இன்னாத தியாதெனின் இன்மையின்
இன்மையே இன்னா தது.
– இக்குறளில் பயின்று வந்துள்ள அணியை விளக்குக.
3 marks
37.
அரியவற்றுள் எல்லாம் அரிதே பெரியாரைப்
பேணித் தமராக் கொளல்.
– இக்குறட்பாவினை அலகிட்டு வாய்பாடு காண்க.
3 marks

பகுதி – IV

குறிப்பு : அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும். 5×5=25
38.
(அ)‘சந்தக் கவிதையில் சிறக்கும் கம்பன்’ என்ற தலைப்பில் இலக்கிய உரை எழுதுக.
அன்பும் பண்பும் கொண்ட தலைவர் அவர்களே! தேர்ந்தெடுத்த பூக்களைப் போன்று வரிசை தொடுத்து அமர்ந்திருக்கும் ஆன்றோர்களே! அறிஞர் பெருமக்களே! வணக்கம். இயற்கை கொலு வீற்றிருக்கும் காட்சியைப் பெரிய கலைநிகழ்வே நடப்பதான தோற்றமாகக் கம்பன் காட்டும் கவி ….. தண்டலை மயில்கள் ஆட ….. இவ்வுரையைத் தொடர்க.
அல்லது / OR
(ஆ)ஒழுக்கமுடைமை அதிகாரத்தில் கூறிய கருத்துகளை வள்ளுவர் வழிநின்று விளக்குக.
5 marks
39.
(அ)மாவட்ட அளவில் நடைபெற்ற ‘பெண்கள் நாட்டின் கண்கள்’ எனும் தலைப்பிலான கட்டுரைப் போட்டியில் வெற்றி பெற்று முதல் பரிசு பெற்ற தோழனை வாழ்த்தி மடல் எழுதுக.
அல்லது / OR
(ஆ)உங்கள் பகுதியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சாலையைச் சீரமைத்தல் வேண்டி மாநகராட்சி ஆணையருக்குக் கடிதம் எழுதுக.
5 marks
40.
காட்சியைக் கண்டு கவினுற எழுதுக.
5 marks
41.
நீலகிரி மாவட்டம், பாரதிதாசன் நகர், எண் 7, பூம்பொழில் தெருவில் வசிக்கும் மதிவேந்தன் என்பவரது மகன் புகழேந்தி மாவட்ட மைய நூலகத்தில் நூலக உறுப்பினராகச் சேர விரும்புகிறார். தேர்வர் தன்னை புகழேந்தியாக எண்ணி கொடுக்கப்பட்ட நூலக உறுப்பினர் படிவத்தை நிரப்புக.
5 marks
42.
(அ)மாணவர் நிலையில் நாம் பின்பற்ற வேண்டிய அறங்கள், அதனால் ஏற்படும் நன்மைகள் ஐந்தினைப் பட்டியலிடுக.
அல்லது / OR
(ஆ)மொழிபெயர்க்க.
The Golden Sun gets up early in the morning and starts its bright rays to fade away the dark. The milky clouds start their wandering. The colourful birds start tweeting their morning melodies in percussion. The cute butterflies dance around the flowers. The flowers' fragrance fills the breeze. The breeze gently blows everywhere and makes everything pleasant.

குறிப்பு : செவி மாற்றுத் திறனாளர்களுக்கான மாற்று வினா.
உரைப்பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடை தருக.
கண்ணுக்குக் காட்சியையும் சிந்தைக்கு கருத்தினையும் கலைத்திறனோடு தந்து இன்றளவும் தொடர்வன நிகழ்த்துக் கலைகள். தலையில் கரகம் என்னும் குடத்தை வைத்துக்கொண்டு ஆடும் கரகாட்டமும் தோளில் காவடியைச் சுமந்தவாறு ஒய்யாரமாக ஆடும் காவடியாட்டமும் மக்களால் விரும்பப்படும் மரபார்ந்த கலைவடிவங்கள். மயிலாட்டமும், குதிரையாட்டமும், புலியாட்டமும் காண்பதற்கு உற்சாகம் தரக்கூடிய நிகழ்த்துக் கலைகள். இசைக்கேற்ப, துணியை வீசிக் குழுவாக ஆடும் ஒயிலாட்டம் மற்றும் தப்பாட்டம், தேவராட்டம், சேர்வையாட்டம் ஆகியவை கிராமியக் கலைஞர்களால் நிகழ்த்தப்படும் கலைவடிவங்கள். நிகழ்த்துக் கலைகள் உழைப்பாளிகளின் உணர்வு வெளிப்பாடு; வாழ்க்கையைக் காட்டும் கண்ணாடி. இத்தகைய சிறப்புகளைக் கொண்டுள்ள நிகழ்த்துக் கலைகளை நாம் போற்றிப் பாதுகாக்க வேண்டும்.
(i) நிகழ்த்துக் கலைகள் எத்தகைய சிறப்புகளைக் கொண்டவை ?
(ii) கரகமும் காவடியும் எவ்வாறு ஆடப்படுகின்றன ?
(iii) உற்சாகம் தரக்கூடிய நிகழ்த்துக் கலைகள் மூன்றை எழுதுக.
(iv) துணியை வீசிக் குழுவாக ஆடும் ஆட்டம் எது ?
(v) நிகழ்த்துக் கலைகளை ஏன் பாதுகாக்க வேண்டும் ?
5 marks

பகுதி – V

குறிப்பு : அனைத்து வினாக்களுக்கும் விரிவான விடையளிக்கவும். 3×8=24
43.
(அ)இலக்கியச் சான்றுடன் உங்கள் இல்லத்துக்கு வந்த உறவினருக்கு நீங்கள் செய்த விருந்தோம்பலை அழகுற விவரித்து எழுதுக.
அல்லது / OR
(ஆ)காற்று மாசுபாட்டைத் தடுக்கும் வழிமுறைகளை விவரித்து எழுதுக.
8 marks
44.
(அ)இயற்கையோடு இணைந்த வாழ்வினைப் ‘பிரும்மம்’ கதைவழி விவரித்து எழுதுக.
அல்லது / OR
(ஆ)‘புயலிலே ஒரு தோணி’ கதையில் இடம்பெற்றுள்ள வருணனைகளும், அடுக்குத் தொடர்களும், ஒலிக்குறிப்புச் சொற்களும் புயலில், தோணி படும்பாட்டை எவ்வாறு விவரிக்கின்றன ?
8 marks
45.
(அ)‘தமிழ்மொழியின் சிறப்பு’ என்ற தலைப்பில் குறிப்புகளைக் கொண்டு கட்டுரை எழுதுக.
முன்னுரை – தமிழின் தொன்மை – சான்றோர் வளர்த்த தமிழ் – சொல்வளம் மிக்கது – வளர்தமிழ் – முடிவுரை
அல்லது / OR
(ஆ)உங்கள் பகுதியில் நடைபெற்ற கலைத்திருவிழாவிற்குச் சென்று வந்த நிகழ்வைக் குறிப்புகளைக் கொண்டு கட்டுரையாக்குக.
குறிப்புகள் : முன்னுரை – கலைத்திருவிழா நிகழ்விடம் – கலைநிகழ்ச்சிகள் – கவர்ந்த கலைநிகழ்ச்சி – கலைகள் வளர்ப்போம் – முடிவுரை.
8 marks
⬇️ PDF பதிவிறக்கம் அனைத்து தமிழ் வினாத்தாள்கள்