TNPSC குரூப் 4 பாடத்திட்டம் 2026
TNPSC அறிவிப்பு எண் 11/2026-இன் முழு அதிகாரப்பூர்வப் பாடத்திட்டம்: பகுதி அ (தமிழ்), பகுதி ஆ (பொது அறிவு), பகுதி இ (திறனறிவு, காரணவியல்) ஆகியவற்றின் ஒவ்வொரு அலகும் – வினாக்கள், மதிப்பெண்கள், அனைத்துப் பாடப்பகுதிகள், பயிற்சி இணைப்புடன்.
| பகுதி | பாடம் | வினாக்கள் | மதிப்பெண் |
|---|---|---|---|
| அ | தமிழ் தகுதி மற்றும் மதிப்பீட்டுத் தேர்வு | 100 | 150 |
| ஆ | பொது அறிவு | 75 | 112.5 |
| இ | திறனறிவும் மனக்கணக்கு நுண்ணறிவும் | 25 | 37.5 |
| மொத்தம் | 200 | 300 |
ஒரே OMR தாள், 3 மணி நேரம், எதிர்மறை மதிப்பெண் இல்லை. பகுதி அ-வில் குறைந்தது 40% (150-க்கு 60 மதிப்பெண், அதாவது 40 வினாக்கள்) பெற்றால் மட்டுமே பகுதி ஆ, இ மதிப்பீடு செய்யப்படும். பகுதி அ தமிழில் மட்டும்; பகுதி ஆ, இ தமிழ், ஆங்கிலம் இரண்டிலும்.
பகுதி அ: தமிழ் தகுதி மற்றும் மதிப்பீட்டுத் தேர்வு (பத்தாம் வகுப்புத் தரம், 100 வினாக்கள்)
தமிழில் மட்டும் வினாக்கள். குறைந்தது 40% (150-க்கு 60 மதிப்பெண்) பெற வேண்டும்; இல்லையெனில் பகுதி ஆ, இ மதிப்பீடு செய்யப்படாது.
அலகு I: இலக்கணம் (Grammar) 25 வினாக்கள் (37.5 மதிப்பெண்)
- பிரித்து எழுதுதல்
- சேர்த்து எழுதுதல்
- சந்திப்பிழை
- குறில், நெடில் வேறுபாடு
- லகர, ளகர, ழகர வேறுபாடு
- னகர, ணகர வேறுபாடு
- ரகர, றகர வேறுபாடு
- இனவெழுத்துகள் அறிதல்
- சுட்டு எழுத்துகள்
- வினா எழுத்துகள்
- ஒருமைப் பன்மை அறிதல்
- வேர்ச்சொல் அறிதல்
- வேர்ச்சொல்லில் இருந்து வினைமுற்று, வினையெச்சம், வினையாலணையும் பெயர், பெயரெச்சம் வகை அறிதல்
- அயற்சொல் – தமிழ்ச்சொல்
- எதிர்ச்சொல்
- வினைச்சொல்
- எழுத்துப் பிழை, ஒற்றுப்பிழை அறிதல்
- இரண்டு வினைச் சொற்களின் வேறுபாடு அறிதல்
அலகு II: சொல்லகராதி (Vocabulary) 15 வினாக்கள் (22.5 மதிப்பெண்)
- எதிர்ச்சொல்லை எடுத்தெழுதுதல்
- ஓரெழுத்து ஒரு மொழி, உரிய பொருளைக் கண்டறிதல்
- ஒருபொருள் தரும் பல சொற்கள்
- பொருந்தா சொல்லைக் கண்டறிதல்
- அகர வரிசைப்படி சொற்களைச் சீர்செய்தல்
- ஒருபொருள் பன்மொழி
- இருபொருள் குறிக்கும் சொற்கள்
- பேச்சு வழக்கு, எழுத்து வழக்கு
- சொல்லும் பொருளும் அறிதல்
- ஒரு சொல்லிற்கு இணையான வேறு சொல் அறிதல்
- கோடிட்ட இடத்தில் சரியான சொல்லைத் தேர்ந்தெடுத்து எழுதுதல் – (எ.கா.) பள்ளிக்குச் சென்று கல்வி பயிலுதல் சிறப்பு (பயிலுதல், எழுதுதல்); வானில் முகில் தோன்றினால் மழை பொழியும் (முகில், நட்சத்திரம்)
- பொருத்தமான பொருளைத் தெரிவு செய்தல் – (எ.கா.) ஊடகம் – தகவல் தொடர்புச் சாதனம் (செய்தி, தகவல் தொடர்புச் சாதனம்); சமூகம் – மக்கள் குழு (மக்கள் குழு, கூட்டம்)
- ஊர்ப் பெயர்களின் மரூஉவை எழுதுக – (எ.கா.) புதுச்சேரி – புதுவை, மன்னார்குடி – மன்னை, மயிலாப்பூர் – மயிலை
- பிழை திருத்துக – (எ.கா.) ஒரு – ஓர்
- பேச்சு வழக்குச் சொற்களுக்கு இணையான தூய தமிழ்ச் சொற்களை இணைத்தல் – (எ.கா.) வெத்தில – வெற்றிலை, நாக்காலி – நாற்காலி
- பேச்சு வழக்குத் தொடர்களிலுள்ள பிழை திருத்தம் – (எ.கா.) நேத்து மழ பேஞ்சுது – நேற்று மழை பெய்தது
- சொற்களை இணைத்துப் புதிய சொல் உருவாக்குதல்: மற்றும், அல்லது, ஆல், பிறகு, வரை, இதுவுமல்ல, இருப்பினும், எனினும், இதனால்
- அடைப்புக்குள் உள்ள சொல்லைத் தகுந்த இடத்தில் சேர்த்தல் – (எனவே, ஏனெனில், ஆகையால், அதுபோல, அதனால், வரை, பின்பு) – (எ.கா.) நான் காட்டிற்குச் சென்றேன். அதனால் புலியைப் பார்த்தேன் – மாலைநேரம் முடியும் வரை விளையாடுவேன். தேர்வு முடிந்த பின்பு சுற்றுலா செல்லலாம்
- பொருள் தரும் ஓர் எழுத்து – (எ.கா.) ஆ – பசு, ஈ – கொடு, தை – மாதம், தீ – நெருப்பு
- பல பொருள் தரும் ஒரு சொல்லைக் கூறுக – (எ.கா.) கமலம், கஞ்சம், முளரி, பங்கயம் இச்சொற்கள் தாமரையைக் குறிக்கும்
அலகு III: எழுதும் திறன் (Writing skill) 15 வினாக்கள் (22.5 மதிப்பெண்)
- சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடர் அமைத்தல்
- தொடர் வகைகள்
- செய்வினை, செயப்பாட்டு வினை
- தன்வினை, பிறவினை
- ஒருமைப் பன்மை பிழையறிந்து சரியான தொடரறிதல்
- திணை மரபு – உயர்திணை: அம்மா வந்தது – அம்மா வந்தாள்; அஃறிணை: மாடுகள் நனைந்தது – மாடுகள் நனைந்தன
- பால் மரபு – ஆண்பால்: அவன் வந்தது – அவன் வந்தான்; பெண்பால்: அவள் வந்தது – அவள் வந்தாள்; பலர் பால்: அவர்கள் வந்தார்கள் – அவர்கள் வந்தனர்; ஒன்றன் பால்: அது வந்தன – அது வந்தது; பலவின் பால்: பறவைகள் பறந்தனர் – பறவைகள் பறந்தன
- காலம்: நேற்று மழை பெய்யும் – நேற்று மழை பெய்தது; நேற்று வருவேன் – நேற்று வந்தேன்
- இளமைப் பெயர்: பசு – கன்று; ஆடு – குட்டி
- ஒலிமரபு: நாய் கத்தியது – நாய் குரைத்தது
- வினைமரபு: கூடைமுடை, சோறு உண்
- தொகை மரபு: மக்கள் கூட்டம் – ஆட்டு மந்தை
- நிறுத்தல் குறியீடுகள்: கால்புள்ளி, அரைப் புள்ளி, முக்கால் புள்ளி, முற்றுப் புள்ளி, வியப்புக் குறி, வினாக்குறி அமையும் இடங்கள்
அலகு IV: கலைச் சொற்கள் (Technical terms) 10 வினாக்கள் (15 மதிப்பெண்)
- பல்துறை சார்ந்த கலைச் சொற்களை – அதாவது அறிவியல், கல்வி, மருத்துவம், மேலாண்மை, சட்டம், புவியியல், தொழில்நுட்பம், ஊடகம், தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்துறை சார்ந்த கலைச் சொல்லுக்கு – நேரான தமிழ்ச் சொற்களை அறிந்திருக்க வேண்டும்
- உதாரணம்: search engine – தேடு பொறி, வலசை – Migration, ஒவ்வாமை – Allergy, மரபணு – Gene, கடல் மைல் – Nautical Mile
அலகு V: வாசித்தல் – புரிந்து கொள்ளும் திறன் (Reading comprehension) 15 வினாக்கள் (22.5 மதிப்பெண்)
- கொடுக்கப்பட்ட பத்தியிலிருந்து கேட்கப்பட்ட வினாக்களுக்குச் சரியான விடையைத் தேர்ந்தெடுத்தல்
- செய்தித்தாள், தலையங்கம், முகப்புச் செய்திகள், அரசு சார்ந்த செய்திகள், கட்டுரைகள் – இவற்றை வாசித்தல் – புரிந்து கொள்ளும் திறன்
- உவமைத் தொடரின் பொருளறிதல்
- மரபுத் தொடரின் பொருளறிதல்
- பழமொழிகள் பொருளறிதல்
- ஆவண உள்ளடக்கங்களைப் புரிந்து கொள்ளும் திறன்
அலகு VI: எளிய மொழி பெயர்ப்பு (Simple translation) 5 வினாக்கள் (7.5 மதிப்பெண்)
- ஆங்கிலம் மற்றும் பிறமொழிச் சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொற்கள் அறிதல்
- பயன்பாட்டில் உள்ள ஆங்கிலச் சொற்களை மொழிபெயர்த்தல் (சான்று: pendrive, printer, computer, keyboard)
- ஆவணங்களின் தலைப்பு, கோப்புகள், கடிதங்கள், மனுக்கள் – மொழிபெயர்ப்பு புரிந்து கொள்ளுதல்
அலகு VII: இலக்கியம், தமிழ் அறிஞர்களும் தமிழ்த்தொண்டும் (Literature, Tamil scholars and Tamil service) 15 வினாக்கள் (22.5 மதிப்பெண்)
- ஒழுக்கமுடைமை
- பொறையுடைமை
- ஊக்கமுடைமை
- விருந்தோம்பல்
- அறன் வலியுறுத்தல்
- ஈகை
- பெரியாரைத் துணைக்கோடல்
- வினை செயல்வகை
- அவையஞ்சாமை
- கண்ணோட்டம்
- அன்புடைமை
- கல்வி
- நடுநிலைமை
- கூடா ஒழுக்கம்
- கல்லாமை
- செங்கோன்மை
- பண்புடைமை
- நட்பாராய்தல்
- புறங்கூறாமை
- அருளுடைமை
- மேற்கோள்கள்
- நாலடியார்
- நான்மணிக்கடிகை
- பழமொழி நானூறு
- முதுமொழிக்காஞ்சி
- திரிகடுகம்
- இன்னாநாற்பது
- சிறுபஞ்சமூலம்
- ஏலாதி
- அவ்வையார் பாடல்கள்
- தமிழின் தொன்மை, சிறப்பு, திராவிட மொழிகள் தொடர்பான செய்திகள்
- உ.வே.சாமிநாத ஐயர்
- தெ.பொ.மீனாட்சி சுந்தரம்
- சி.இலக்குவனார்
- தேவநேய பாவாணர்
- அகரமுதலி
- பாவலரேறு பெருஞ்சித்திரனார்
- ஜி.யு.போப்
- வீரமாமுனிவர்
- பாவேந்தர்
- டி.கே.சிதம்பரனாதர்
- தவத்திரு குன்றக்குடி அடிகளார்
- கண்ணதாசன்
- காயிதே மில்லத்
- தாரா பாரதி
- வேலுநாச்சியார்
- பட்டுக்கோட்டைக் கல்யாணசுந்தரம்
- முடியரசன்
- தமிழ் ஒளி
- உருத்திரங்கண்ணனார்
- கி.வா.ஜகந்நாதர்
- நாமக்கல் கவிஞர்
- அலகு VII-க்கான பாடத்திட்டம் பத்தாம் வகுப்பு வரையிலான (upto SSLC Standard) பாடப் புத்தகங்களை அடிப்படையாகக் கொண்டது.
பகுதி ஆ: பொது அறிவு (பத்தாம் வகுப்புத் தரம், 75 கேள்விகள்)
தமிழ், ஆங்கிலம் இரண்டிலும் வினாக்கள்.
அலகு I: பொது அறிவியல் (General Science) 5 வினாக்கள் (7.5 மதிப்பெண்)
- பேரண்டத்தின் இயல்பு
- இயற்பியல் அளவுகளின் அளவீடுகள்
- இயக்கவியலில் பொது அறிவியல் விதிகள் – விசை, அழுத்தம் மற்றும் ஆற்றல்
- அன்றாட வாழ்வில் இயந்திரவியல், மின்னியல், காந்தவியல், ஒளி, ஒலி, வெப்பம் மற்றும் அணுக்கரு இயற்பியலின் அடிப்படை கோட்பாடுகளும் அதன் பயன்பாடுகளும்
- தனிமங்களும் சேர்மங்களும், அமிலங்கள், காரங்கள், உப்புகள், பெட்ரோலிய பொருட்கள், உரங்கள், பூச்சிக்கொல்லிகள், உலோகவியல் மற்றும் உணவில் கலப்படம்
- உயிரியலின் முக்கிய கோட்பாடுகள், உயிரினங்களின் வகைப்பாடு, பரிணாமம், மரபியல், உடலியல், ஊட்டச்சத்து, உடல்நலம் மற்றும் சுகாதாரம். மனித நோய்கள்
- சுற்றுப்புறச் சூழல் அறிவியல்
- அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் அண்மைக்கால கண்டுபிடிப்புகள்
- நடப்பு நிகழ்வுகள்
அலகு II: புவியியல் (Geography) 5 வினாக்கள் (7.5 மதிப்பெண்)
- புவி அமைவிடம்
- இயற்கை அமைவுகள்
- பருவமழை, மழைப்பொழிவு, வானிலை மற்றும் காலநிலை
- நீர் வளங்கள் – ஆறுகள்
- மண், கனிம வளங்கள் மற்றும் இயற்கை வளங்கள்
- காடு மற்றும் வன உயிரினங்கள்
- வேளாண் முறைகள்
- போக்குவரத்து – தகவல் தொடர்பு
- தமிழ்நாடு மற்றும் இந்தியாவில் மக்கள் தொகை அடர்த்தி மற்றும் பரவல்
- பேரிடர் – பேரிடர் மேலாண்மை
- சுற்றுச்சூழல் – பருவநிலை மாற்றம்
- புவியியல் அடையாளங்கள்
- நடப்பு நிகழ்வுகள்
அலகு III: இந்தியாவின் வரலாறு, பண்பாடு மற்றும் இந்திய தேசிய இயக்கம் (History, Culture of India and Indian National Movement) 10 வினாக்கள் (15 மதிப்பெண்)
- சிந்து சமவெளி நாகரிகம்
- குப்தர்கள், தில்லி சுல்தான்கள், முகலாயர்கள் மற்றும் மராத்தியர்கள்
- தென் இந்திய வரலாறு
- தேசிய மறுமலர்ச்சி
- ஆங்கிலேயர் ஆட்சிக்கு எதிரான தொடக்ககால எழுச்சிகள்
- இந்திய தேசிய காங்கிரஸ்
- தலைவர்கள் உருவாதல் – பி.ஆர்.அம்பேத்கர், பகத்சிங், பாரதியார், வ.உ.சிதம்பரனார், தந்தை பெரியார், ஜவஹர்லால் நேரு, ரவீந்திரநாத் தாகூர், காமராசர், மகாத்மா காந்தி, மௌலானா அபுல் கலாம் ஆசாத், இராஜாஜி, சுபாஷ் சந்திர போஸ், முத்துலெட்சுமி அம்மையார், மூவலூர் இராமாமிர்தம் மற்றும் பல தேசத் தலைவர்கள்
- தமிழ்நாட்டு விடுதலைப் போராட்டத்தின் பல்வேறு முறைகள் மற்றும் இயக்கங்கள்
- இந்தியப் பண்பாட்டின் இயல்புகள்
- வேற்றுமையில் ஒற்றுமை – இனம், மொழி, வழக்காறு
- இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு
அலகு IV: இந்திய ஆட்சியியல் (Indian Polity) 15 வினாக்கள் (22.5 மதிப்பெண்)
- இந்திய அரசியலமைப்பு
- அரசியலமைப்பின் முகவுரை
- அரசியலமைப்பின் முக்கிய கூறுகள்
- ஒன்றியம், மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசங்கள்
- குடியுரிமை, அடிப்படை உரிமைகள், அடிப்படைக் கடமைகள், அரசின் நெறிமுறைக் கோட்பாடுகள்
- ஒன்றிய நிர்வாகம், ஒன்றிய நாடாளுமன்றம்
- மாநில நிர்வாகம், மாநில சட்டமன்றம்
- உள்ளாட்சி அமைப்புகள், பஞ்சாயத்து ராஜ்
- கூட்டாட்சியின் அடிப்படைத் தன்மைகள்: மத்திய – மாநில உறவுகள்
- தேர்தல்
- இந்திய நீதி அமைப்புகள் – சட்டத்தின் ஆட்சி
- பொது வாழ்வில் ஊழல் – ஊழல் தடுப்பு நடவடிக்கைகள் – லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா
- தகவல் அறியும் உரிமை
- பெண்களுக்கு அதிகாரமளித்தல்
- நுகர்வோர் பாதுகாப்பு அமைப்புகள்
- மனித உரிமைகள் சாசனம்
- தமிழ்நாடு மற்றும் இந்தியாவின் அரசியல் கட்சிகளும் மற்றும் ஆட்சியியல் முறைகளும்
- நடப்பு நிகழ்வுகள்
அலகு V: இந்தியப் பொருளாதாரம் மற்றும் தமிழ்நாட்டில் வளர்ச்சி நிர்வாகம் (Indian Economy and Development Administration in Tamil Nadu) 20 வினாக்கள் (30 மதிப்பெண்)
- இந்தியப் பொருளாதாரத்தின் இயல்புகள்
- ஐந்தாண்டு திட்ட மாதிரிகள் – ஒரு மதிப்பீடு
- திட்டக்குழு மற்றும் நிதி ஆயோக்
- வருவாய் ஆதாரங்கள்
- இந்திய ரிசர்வ் வங்கி
- நிதி ஆணையம்
- மத்திய மாநில அரசுகளுக்கிடையேயான நிதிப் பகிர்வு
- சரக்கு மற்றும் சேவை வரி
- பொருளாதார போக்குகள் – வேலைவாய்ப்பு உருவாக்கம், நிலச் சீர்திருத்தங்கள் மற்றும் வேளாண்மை
- வேளாண்மையில் அறிவியல் தொழில்நுட்பத்தின் பயன்பாடு
- தொழில் வளர்ச்சி
- ஊரக நலன்சார் திட்டங்கள்
- சமூகப் பிரச்சனைகள் – மக்கள்தொகை, கல்வி, நலவாழ்வு, வேலை வாய்ப்பு, வறுமை
- சமூகநீதியும் சமூக நல்லிணக்கமும் சமூகப் பொருளாதார மேம்பாட்டின் மூலாதாரங்கள்
- தமிழ்நாட்டின் கல்வி மற்றும் நலவாழ்வு முறைமைகள்
- தமிழ்நாட்டின் புவியியல் கூறுகளும் பொருளாதார வளர்ச்சியில் அவற்றின் தாக்கமும்
- நலன்சார் அரசுத் திட்டங்கள்
- தற்போதைய சமூக பொருளாதார பிரச்சனைகள்
- நடப்பு நிகழ்வுகள்
அலகு VI: தமிழ்நாட்டின் வரலாறு, பண்பாடு, மரபு மற்றும் சமூக – அரசியல் இயக்கங்கள் (History, Culture, Heritage and Socio-Political Movements of Tamil Nadu) 20 வினாக்கள் (30 மதிப்பெண்)
- தமிழ் சமுதாய வரலாறு அது தொடர்பான தொல்லியல் கண்டுபிடிப்புகள்
- சங்க காலம் முதல் இக்காலம் வரையிலான தமிழ் இலக்கியம்
- திருக்குறள் – மதச்சார்பற்ற தனித்தன்மையுள்ள இலக்கியம்
- அன்றாட வாழ்வியலோடு தொடர்புத் தன்மை
- மானுடத்தின் மீதான திருக்குறளின் தாக்கம்
- திருக்குறளும் மாறாத விழுமியங்களும்
- சமூக அரசியல் பொருளாதார நிகழ்வுகளில் திருக்குறளின் பொருத்தப்பாடு
- திருக்குறளின் தத்துவக் கோட்பாடுகள்
- விடுதலைப் போராட்டத்தில் தமிழ்நாட்டின் பங்கு
- ஆங்கிலேயருக்கு எதிரான தொடக்க கால கிளர்ச்சிகள்
- விடுதலைப் போராட்டத்தில் பெண்களின் பங்கு
- தமிழ்நாட்டின் பல்வேறு சீர்திருத்தவாதிகள், சீர்திருத்த இயக்கங்கள் மற்றும் மாற்றங்கள்
பகுதி இ: திறனறிவும் மனக்கணக்கு நுண்ணறிவும் (பத்தாம் வகுப்புத் தரம், 25 கேள்விகள்)
தமிழ், ஆங்கிலம் இரண்டிலும் வினாக்கள்.
அலகு I: திறனறிவு (Aptitude) 15 வினாக்கள் (22.5 மதிப்பெண்)
- சுருக்குதல்
- விழுக்காடு
- மீப்பெரு பொதுக் காரணி (HCF)
- மீச்சிறு பொது மடங்கு (LCM)
- விகிதம் மற்றும் விகிதாச்சாரம்
- தனிவட்டி
- கூட்டு வட்டி
- பரப்பு
- கொள்ளளவு
- காலம் மற்றும் வேலை
அலகு II: காரணவியல் (Reasoning) 10 வினாக்கள் (15 மதிப்பெண்)
- தருக்கக் காரணவியல்
- புதிர்கள்
- பகடை
- காட்சிக் காரணவியல்
- எண் எழுத்துக் காரணவியல்
- எண் வரிசை
பகுதி அ: பொது ஆங்கிலம் (பத்தாம் வகுப்புத் தரம், 100 வினாக்கள்) – மாற்றுத்திறனாளிகளுக்கு மட்டும்
தமிழ்த் தேர்விலிருந்து விலக்கு பெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு மட்டும். ஆங்கிலத்தில் மட்டும் வினாக்கள்; தகுதி பெற 40% (60 மதிப்பெண்) தேவை.
அலகு I: இலக்கணம் (Grammar) 25 வினாக்கள் (37.5 மதிப்பெண்)
- Parts of speech
- Concord
- Tense
- Active voice and passive voice
- Types of sentences – statement, interrogative, imperative, exclamatory
- Transformation of statements into imperatives, interrogatives into statements, assertives into negatives, exclamatory sentences into statements, imperatives into inquisitive interrogatives, imperatives into appreciative statements
- Verbs – main verbs and auxiliary verbs, regular and irregular verbs
- Infinitives, gerunds, participles
- Question tags
- Sentence patterns
- Types of sentences – simple, compound and complex
- Phrases and clauses
- Degrees of comparison – positive, comparative and superlative
- Direct into indirect and indirect into direct
- Synthesis of sentences
- Punctuation
அலகு II: சொல்லகராதி (Vocabulary) 15 வினாக்கள் (22.5 மதிப்பெண்)
- Synonyms, antonyms
- Homonyms, homophones
- Collocations
- Idioms and phrases, phrasal verbs
- Spelling of words, correct usage of words
- One word substitution
- Word creation
- Singular and plural (including zero plural)
- Derivatives
- Abbreviations
- British and American English
- Compound words
- Figures of speech
அலகு III: எழுதும் திறன் (Writing skills) 10 வினாக்கள் (15 மதிப்பெண்)
- Letter writing (formal and informal) – types of letters (multiple choice question)
- Jumbled sentences
- Finding out the right order of sentences
- Making queries (multiple choice question)
- Inferences
- Blanks
- Substitutions
அலகு IV: கலைச் சொற்கள் (Technical terms) 10 வினாக்கள் (15 மதிப்பெண்)
- Administrative terms
- Department related terms
- General and official terms
- Official correspondence (only basics)
அலகு V: வாசித்துப் புரிதல் (Reading comprehension) 20 வினாக்கள் (30 மதிப்பெண்)
- Unseen passages – newspaper, headlines, editorials, government related news
- Question types – strong question, weak question
- Match the following
- Sentence completion
- Ascertainment of facts (multiple choice question)
- Choose the best response
அலகு VI: மொழிபெயர்ப்பு (Translation) 5 வினாக்கள் (7.5 மதிப்பெண்)
- Word translation
- Sentence translation
- Tense related translation tasks
- Tense / voice related tasks
அலகு VII: இலக்கியப் படைப்புகள் (பத்தாம் வகுப்புத் தரம்) (Literary works (SSLC Standard)) 15 வினாக்கள் (22.5 மதிப்பெண்)
- Figures of speech
- Appreciation and analysis of poetry
- Lines of significance
- I Dream of Spices – Raj Arumugam
- The Crocodile – Lewis Carroll
- Teamwork – Edgar Albert Guest
- From a Railway Carriage – Robert Louis Balfour Stevenson
- A Tragic Story – William Makepeace Thackeray
- Sea Fever – John Masefield
- Courage – Edgar Albert Guest
- The Age of Chivalry – George Krokos
- Wandering Singers – Sarojini Naidu
- The Listeners – Walter de la Mare
- Your Space – David Bates
- Special Hero – Christine M. Kerschan
- Stopping by Woods on a Snowy Evening – Robert Frost
- Leisure – William Henry Davies
- A Poison Tree – William Blake
- The Power of a Smile – Tupac Shakur
- On Killing a Tree – Gieve Patel
- Advice from a Tree – Ilan Shamir
- The Spider and The Fly – Mary Howitt
- Never Trust a Mirror – Erin Hanson
- The River – Ilan Shamir
- Nature the Gentlest Mother – Emily Dickinson
- The Comet – Norman Littleford
- The Star – Jane Taylor
- The Stick-Together Families – Edgar Albert Guest
- Memories of My Dad – Rebecca D. Cook
- Life – Henry Van Dyke
- The Grumble Family – L.M. Montgomery
- The Secret of the Machines – Rudyard Kipling
- The House on Elm Street – Naida Bush
- His First Flight – Liam O'Flaherty
- The Night the Ghost Got In – James Grover Thurber
- Empowered Women Navigating the World
- The Attic – Satyajit Ray
- Tech Bloomers
- The Last Lesson – Alphonse Daudet
- The Dying Detective – Arthur Conan Doyle
- Learning the Game – Sachin Ramesh Tendulkar
- I Can't Climb Trees Anymore – Ruskin Bond
- Old Man River – Dorothy Deming (Drama)
- Seventeen Oranges – Bill Naughton
- Water – The Elixir of Life – Sir C.V. Raman
- From Zero to Infinity – Biography of Srinivasa Ramanujan
- A Birthday Letter – Jawaharlal Nehru
- The Nose Jewel – C. Rajagopalachari
- Hobby – Turns a Successful Career
- Sir Isaac Newton – The Ingenious Scientist – Nathaniel Hawthorne
- My Reminiscence – Rabindranath Tagore
- Sea Turtles – Sheker Dattatri
- When the Trees Walked – Ruskin Bond
- A Visitor from Distant Lands
- Sports Stars – Mithali Dorai Raj
- The Last Stone Carver – Sigrun Srivastav
- Eidgah – Munshi Premchand
- The Wind on Haunted Hill – Ruskin Bond
- A Prayer to the Teacher – Subroto Bagchi
- The Tempest – Tales from Shakespeare
- A Hunter Turned Naturalist – Jim Corbett
- The Cat and the Painkiller (an extract from the Adventures of Tom Sawyer) – Mark Twain
- The syllabus for Unit VII is based on school textbooks (up to SSLC Standard).
- பகுதி அ (தமிழ் தகுதி மற்றும் மதிப்பீட்டுத் தேர்வு) தமிழில் மட்டும். குறைந்தது 40% (150-க்கு 60 மதிப்பெண்) பெற வேண்டும்; இல்லையெனில் பகுதி ஆ, இ மதிப்பீடு செய்யப்படாது.
- தரவரிசைக்கு பகுதி அ, ஆ, இ மூன்றின் மொத்த மதிப்பெண் கணக்கிடப்படும். எதிர்மறை மதிப்பெண் இல்லை.
- பகுதி ஆ, இ வினாக்கள் தமிழ், ஆங்கிலம் இரண்டிலும், பத்தாம் வகுப்புத் தரத்தில் இருக்கும்.
- தமிழிலிருந்து விலக்கு பெற்ற மாற்றுத்திறனாளிகள் மட்டும் பகுதி அ-க்குப் பதிலாகப் பொது ஆங்கிலம் எழுதலாம்; அதிலும் 40% தேவை.
- நடப்பு நிகழ்வுகளுக்குத் தனி அலகு இல்லை: அறிவியல், புவியியல், ஆட்சியியல், பொருளாதாரம் அலகுகளுக்குள் நடப்பு நிகழ்வு வினாக்கள் வரும்.
TNPSC அறிவிப்பு எண் 11/2026 (விளம்பர எண் 747), நாள் 06.10.2026, இணைப்பு III, பாடத்திட்டக் குறியீடு 496. பகுதி அ, ஆ, இ அறிவிப்பின் தமிழ் வடிவத்தில் உள்ளபடியே தரப்பட்டுள்ளன; பொது ஆங்கிலப் பாடத்திட்டம் ஆங்கிலத்தில் மட்டும். ஐயம் ஏற்படின் அறிவிப்பின் ஆங்கில வடிவமே இறுதியானது. அதிகாரப்பூர்வ தளம்: tnpsc.gov.in