TN Online Testசமச்சீர் கல்விப் பயிற்சி

அருமை உடைய செயல்: ஒரு மதிப்பெண் ஆன்லைன் தேர்வு (12ஆம் வகுப்பு தமிழ்)

இந்தப் பாடத்தைப் பகிரவும்: Telegram

எத்தனை வினாக்கள் வேண்டும் என்பதைத் தேர்ந்தெடுத்து, நேர வரம்பை அமைத்துத் தொடங்குங்கள். இறுதியில் உங்கள் மதிப்பெண்ணுடன், ஒவ்வொரு வினாவுக்கும் சரியான விடையும் விளக்கமும் கிடைக்கும். இலவசம், தமிழிலும் ஆங்கிலத்திலும் — 35 வினாக்கள் உள்ளன.

உங்கள் தேர்வை அமைக்கவும்

மீதமுள்ள நேரம்00:00
Q1
திரைப்படத்தில் கதையும் சொல்லலாம் என்பதை முதன்முதலில் நிகழ்த்திக் காட்டியவர் –
Q2
'மனித குலத்திற்குத் தேவை போரல்ல; நல்லுணர்வும் அன்பும்தான்' என்பதை மையக்கருவாகக் கொண்ட சார்லி சாப்ளினின் திரைப்படம் –
Q3
மாசித் திங்களில் நிகழும் விழாவாக மயிலைப் பதிகம் சுட்டுவது –
Q4
"உள்ளொன்று வைத்துப் புறம்பொன்று பேசுவார்" – இத்தொடர் உணர்த்தும் பண்பு –
Q5
"வாளால் அறுத்துச் சுடினும்..." – இவ்வடியின் மூலம் குலசேகராழ்வார் வெளிப்படுத்துவது –
Q6
"ஒட்டுப் போடாத ஆகாயம் போல – இந்த உலகமும் ஒன்றேதான்..." – இக்கவிதையில் பயின்றுவருவது –
Q7
'ஐம்பெருங்காப்பியம்' என்னும் சொற்றொடரை நூல் உரையில் குறிப்பிட்டவர் –
Q8
சரியானவற்றைப் பொருத்தித் தேர்க.
அ) காதை – 1) கந்தபுராணம்
ஆ) சருக்கம் – 2) சீவகசிந்தாமணி
இ) இலம்பகம் – 3) சூளாமணி
ஈ) படலம் – 4) சிலப்பதிகாரம்
Q9
லூமியர் சகோதரர்கள் 1895ஆம் ஆண்டு டிசம்பர் 28ஆம் நாள் 'கிராண்ட் கபே' விடுதியில் துண்டுப்படங்களைத் திரையிட்ட நகரம் –
Q10
வ.உ.சி.யின் அழைப்பை ஏற்று ரூ.100 சம்பளத்தில் சுதேசிக் கப்பல் நிறுவனத்தின் நிருவாகப் பொறுப்பை ஏற்றவர் –
Q11
நாடகத்தை 'ஒற்றைக்கோணக் கலை' (single dimension art) எனக் கூறுவதற்குக் காரணம் –
Q12
பொருத்துக.
அ) Fade out – 1) அழிப்பு
ஆ) Fade in – 2) கலவை / கூட்டு
இ) Mix – 3) காட்சி மறைவு
ஈ) Wipe – 4) காட்சி உதயம்
Q13
காட்சிகளை மாற்றி மாற்றி வைப்பதன் மூலம் வெவ்வேறு பொருளை உணர்த்துவதை எவ்வாறு அழைப்பர்?
Q14
புன்னகைக்கிற மனிதன் – நீட்டப்பட்ட கைத்துப்பாக்கி – பதற்றமாகும் மனிதன் என்ற வரிசையில் காட்சிகளை அமைத்தால் உருவாகும் பிம்பம் –
Q15
டூபான் (Dupont) என்ற பிரெஞ்சுக்காரரிடமிருந்து 2500 ரூபாய்க்கு ஒரு புரொஜக்டரையும் சில துண்டுப்படங்களையும் வாங்கியவர் –
Q16
சாமிக்கண்ணு வின்சென்ட் பற்றிய கூற்றுகளை ஆராய்க.
1. திருச்சியில் ஒரு கூடாரத்தில் படங்காட்டத் தொடங்கினார்.
2. 1909இல் மதராஸ் திரும்பி எஸ்பிளனேட்டில் கூடாரம் போட்டுச் சலனப்படங்களைத் திரையிட்டார்.
3. எஸ்பிளனேட் என்பது இன்றைய மயிலாப்பூர் ஆகும்.
Q17
1977இல் உலகின் முக்கிய விருதுபெற்ற திரைப்படங்கள் ஆறு நாள்கள் திரையிடப்பட்ட கர்நாடக மாநிலச் சிற்றூர் –
Q18
'திரைமொழி' பாடம் யாருடைய கட்டுரையை முதன்மையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது?
Q19
'Multiplex Complex' என்னும் ஆங்கிலச் சொல்லுக்கு இணையான கலைச்சொல் –
Q20
மூன்று ஆண்டு உழைப்பில் சார்லி சாப்ளின் வெளியிட்ட திரைப்படம் –
Q21
தெய்வமணிமாலை இடம்பெற்றுள்ள திருவருட்பாவின் திருமுறை –
Q22
தெய்வமணிமாலைப் பாடலின் பாவகை –
Q23
நூலையும் ஆசிரியரையும் பொருத்துக.
அ) பெருமாள் திருமொழி – 1) சு. தியடோர் பாஸ்கரன்
ஆ) திருமயிலாப்பூர் பதிகம் – 2) குலசேகராழ்வார்
இ) சிதம்பர ஸ்மரண – 3) பாலச்சந்திரன் சுள்ளிக்காடு
ஈ) தமிழ் சினிமாவின் முகங்கள் – 4) திருஞானசம்பந்தர்
Q24
'பேசுவார்' என்னும் பகுபதத்தில் 'வ்' என்பது –
Q25
'மலரடி', 'வளர்தலம்' ஆகிய சொற்களுக்குரிய இலக்கணக் குறிப்பு முறையே –
Q26
கூற்றுகளை ஆராய்க.
1. பெருமாள் திருமொழி நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தில் ஐந்தாம் திருமொழியாக உள்ளது.
2. பெருமாள் திருமொழியில் 105 பாடல்கள் உள்ளன.
3. குலசேகராழ்வாரின் காலம் பன்னிரண்டாம் நூற்றாண்டு.
Q27
குலசேகராழ்வார் உய்யவந்த பெருமாளை அன்னையாக உருவகித்துப் பாடும் வித்துவக்கோடு அமைந்துள்ள மாவட்டம் –
Q28
பொருத்துக.
அ) மலிவிழா – 1) ஆரவார விழா
ஆ) கலிவிழா – 2) இளமை பொருந்திய பெண்கள்
இ) மடநல்லார் – 3) விழாக்கள் நிறைந்த
ஈ) ஒலிவிழா – 4) எழுச்சி தரும் விழா
Q29
'பூம்பாவாய்' என்னும் சொல்லைப் பிரித்து எழுதுக.
Q30
கூற்றுகளை ஆராய்க.
1. பன்னிரு திருமுறைகளில் முதல் மூன்று திருமுறைகள் திருஞானசம்பந்தர் பாடியவை.
2. திருமயிலாப்பூர் பதிகம் மூன்றாம் திருமுறையில் உள்ளது.
3. இப்பாடல்களைத் தொகுத்தவர் நம்பியாண்டார் நம்பி.
Q31
சின்னையா கணேசனுக்குச் 'சிவாஜி கணேசன்' என்று பெயரிட்டவர் –
Q32
சிவாஜி கணேசனை உலகப் பிரசித்தி பெற்ற நடிகராக மாற்றிய திரைப்படம் –
Q33
தொல்காப்பியர் கூறும் உவமை தோன்றும் நான்கு அடிப்படைகளுள் 'துகில்போலும் அருவி' எதன் அடிப்படையில் அமைந்தது?
Q34
விருத்தம் என்னும் ஒரே வகைச் செய்யுளில் அமைந்த காப்பியங்கள் –
Q35
குறுங்காவியத்தையும் ஆசிரியரையும் பொருத்துக.
அ) பாஞ்சாலி சபதம் – 1) கவிமணி
ஆ) மாங்கனி – 2) புலவர் குழந்தை
இ) இராவண காவியம் – 3) பாரதியார்
ஈ) மருமக்கள் வழி மான்மியம் – 4) கண்ணதாசன்

இந்தப் பாடத்திற்கு மேலும்

புத்தகப் பயிற்சி வினாக்கள்8 பாடநூல் வினாக்கள் · விடையுடன் கூடுதல் வினாக்கள்27 கூடுதல் வினாக்கள் · விடையுடன் புத்தகப் பயிற்சித் தேர்வுபாடநூல் தொகுப்பில் உங்களைச் சோதியுங்கள் கூடுதல் வினாத் தேர்வுகூடுதல் தொகுப்பில் உங்களைச் சோதியுங்கள் படிப்புக் குறிப்புகள்கருத்துகளும் முறைகளும் சூத்திரத் தாள்அனைத்து முக்கிய சூத்திரங்கள்

அருமை உடைய செயல் — இந்தத் தேர்வைப் பற்றி

இந்த இலவச ஆன்லைன் பயிற்சித் தேர்வு 12ஆம் வகுப்பு தமிழ் (சமச்சீர் கல்வி) பாடத்திட்டத்தின் அருமை உடைய செயல் பகுதியை உள்ளடக்கியது. வினாக்களின் எண்ணிக்கையையும் விரும்பினால் நேர வரம்பையும் தேர்ந்தெடுத்து, விடையளித்துச் சமர்ப்பியுங்கள்; சரியான விடைகளும் விளக்கமும் இறுதியில் காட்டப்படும். இந்தத் தொகுப்பின் அனைத்து வினாக்களுக்குமான முழுத் தீர்வுகளுக்கு விடையுடன் கூடிய வினாக்கள் பக்கத்தைப் பாருங்கள்.

தமிழ் பாடத்தின் மற்ற பாடங்கள்

அனைத்தையும் பார்க்க
1 உயிரினும் ஓம்பப் படும் 2 பெய்யெனப் பெய்யும் மழை 3 சுற்றத்தார் கண்ணே உள 4 செல்வத்துள் எல்லாம் தலை 6 எல்லா உயிரும் தொழும்