செய்யுள் — தெய்வமணிமாலை (இராமலிங்க அடிகள்), பெருமாள் திருமொழி (குலசேகராழ்வார்), தேவாரம் (திருஞானசம்பந்தர்)
துணைப்பாடம் (விரிவானம்) — நடிகர் திலகம் (பாலச்சந்திரன் சுள்ளிக்காடு)
இலக்கணம் — படைப்பாக்க உத்திகள்
திரைமொழி
1895 டிசம்பர் 28 மாலை, பாரிஸின் 'கிராண்ட் கபே' விடுதியில் லூமியர் சகோதரர்கள் துண்டுப்படங்களைத் திரையிட்டனர்; அவற்றுள் ஒன்று 'ரயிலின் வருகை'. ரயில் தம்மீது ஏறிவிடும் என அஞ்சி மக்கள் ஓடினர்.
அசையும் உருவங்களைப் படம்பிடிக்கும் கருவியைக் கண்டுபிடித்தவர் தாமஸ் ஆல்வா எடிசன்; அதனுடன் புரொஜக்டரைச் சேர்த்துத் திரைப்படம் என்னும் விந்தையை அளித்தவர்கள் லூமியர் சகோதரர்கள்.
திரைப்படத்தில் கதையும் சொல்லலாம் என்பதை நிகழ்த்திக்காட்டியவர் ஜார்ஜ் மிலி.
திரைப்படம் ஒருவகையில் நாடகத்தின் குழந்தை; நாடகம் ஒற்றைக் கோணத்தில் நேரில் காண்பது என்பதால் அது 'ஒற்றைக்கோணக் கலை'.
காட்சியின் ஆற்றல்: வசனத்துக்கு இரண்டாம் இடம்தான். உணர்ச்சியை முகத்தால் காட்டினாலே போதும் – இதுவே காட்சிமொழி.
உத்தி
பொருள்
காட்சி மறைவு (Fade out)
காட்சி சிறிது சிறிதாக இருள் காட்சியாக மாறுதல்
காட்சி உதயம் (Fade in)
இருளிலிருந்து சிறிது சிறிதாக வெளிச்சமாகி முழுக்காட்சி வெளிப்படுதல்
கலவை / கூட்டு (Mix)
ஒரு காட்சி மறையும்போதே அடுத்த காட்சி தெரியத் தொடங்குதல்
அழிப்பு (Wipe)
பழைய காட்சியை அழித்துக்கொண்டே அடுத்த காட்சி தோன்றுதல்
படத்தொகுப்பு: தேவையற்ற காட்சிகளை நீக்கித் தேவையானவற்றைப் பொருத்தமாகச் சேர்ப்பது. 16 மணிநேரம் எடுத்ததை 2 மணிநேரமாகத் தொகுப்பது படத்தொகுப்பாளரின் பணி.
குலேஷோவ் விளைவு: புன்னகைக்கிற மனிதன் – நீட்டப்பட்ட கைத்துப்பாக்கி – பதற்றமாகும் மனிதன் = கோழை (முதல் வரிசை); பதற்றமாகும் மனிதன் – கைத்துப்பாக்கி – புன்னகைக்கிற மனிதன் = வீரன் (மாற்று வரிசை).
'மாடர்ன் டைம்ஸ்' படத்தில் செம்மறியாடுகளும் தொழிற்சாலைக்குள் நுழையும் மனிதர்களும் அடுத்தடுத்து வருவது, மனிதர்கள் மந்தைகள் ஆவதை உணர்த்துகிறது.
ஒலிக்குறிப்பு: பின்னணி இசையும் சில வேளைகளில் மௌனமும் உணர்வுகளை வெளிப்படுத்துகின்றன.
நல்ல திரைப்படம்: 1977இல் கர்நாடகத்தின் ஹெக்கோடு சிற்றூரில் விருதுபெற்ற உலகப் படங்கள் ஆறு நாள்கள் திரையிடப்பட்டன; அம்மக்களின் கருத்துகள் வல்லுநர் கருத்துகளுக்கு ஈடாக இருந்தன.
சார்லி சாப்ளின்: இலண்டனில் பிறந்தவர்; 'லிட்டில் டிராம்ப்' தோற்றம்; தி கிட், தி கோல்டு ரஷ், தி சர்க்கஸ், சிட்டி லைட்ஸ், மூன்று ஆண்டு உழைப்பில் மாடர்ன் டைம்ஸ்; வாழ்நாள் சாதனையாளர் ஆஸ்கர் விருது. 1940இல் 'தி கிரேட் டிக்டேட்டர்' – ஹென்கோல் பாத்திரம்.
மலையாளக் கவிஞர், நடிகர்; 'சிதம்பர ஸ்மரண' நூலின் பகுதி; தமிழில் கே.வி. சைலஜா – 'சிதம்பர நினைவுகள்'.
சிவாஜியின் இயற்பெயர் சின்னையா கணேசன்; பிறந்த ஊர் விழுப்புரம்; அண்ணாதுரையின் நாடகத்தில் சத்ரபதி சிவாஜியாக நடித்ததைக் கண்ட பெரியார் 'சிவாஜி கணேசன்' எனப் பெயரிட்டார்.
முதல் படம் பராசக்தி; உலகப் புகழ் தந்தது வீரபாண்டிய கட்டபொம்மன். விருதுகள்: ஆசியத் திரைப்பட விழா சிறந்த நடிகர் விருது, கலைமாமணி, பத்மஸ்ரீ, பத்ம பூஷன், செவாலியர், தாதாசாகெப் பால்கே.
படைப்பாக்க உத்திகள்
வினை, பயன், மெய் (வடிவம்), உரு (நிறம்) என்னும் நான்கின் அடிப்படையில் உவமை தோன்றும் (தொல். 1222): புலிபோலப் பாய்ந்தான் – வினை; மழைபோலக் கொடுக்கும் கை – பயன்; துகில்போலும் அருவி – மெய்; தளிர்போலும் மேனி – உரு.
உவமையின் செறிவுமிக்க வடிவமே உருவகம்: தாமரை போலும் முகம் – உவமை; முகத்தாமரை – உருவகம். தீப்போல் சினம் → சினத்தீ (பாரதியார்).
'ஐம்பெருங்காப்பியம்' – மயிலைநாதர் (நன்னூல் உரை); 'பஞ்சகாப்பியம்' – தமிழ்விடுதூது. அறம், பொருள், இன்பம், வீடு நான்கும் பெறுவது பெருங்காப்பியம்; ஒன்றிரண்டு குறைவது சிறுகாப்பியம். காப்பியத்தின் அடிப்படைக் கருத்து பாவிகம் (தண்டியலங்காரம்).