TN Online Testசமச்சீர் கல்விப் பயிற்சி

எல்லா உயிரும் தொழும்: ஒரு மதிப்பெண் ஆன்லைன் தேர்வு (12ஆம் வகுப்பு தமிழ்)

இந்தப் பாடத்தைப் பகிரவும்: Telegram

எத்தனை வினாக்கள் வேண்டும் என்பதைத் தேர்ந்தெடுத்து, நேர வரம்பை அமைத்துத் தொடங்குங்கள். இறுதியில் உங்கள் மதிப்பெண்ணுடன், ஒவ்வொரு வினாவுக்கும் சரியான விடையும் விளக்கமும் கிடைக்கும். இலவசம், தமிழிலும் ஆங்கிலத்திலும் — 33 வினாக்கள் உள்ளன.

உங்கள் தேர்வை அமைக்கவும்

மீதமுள்ள நேரம்00:00
Q1
'பில்கிரிம்ஸ் புராகிரஸ்' (Pilgrim's Progress) என்னும் ஆங்கில நூலின் தழுவல் நூல் எது?
Q2
'கிறித்துவக் கம்பர்' என்று அழைக்கப்படுபவர் யார்?
Q3
புறநானூற்றை முதன்முதலாக அச்சில் பதிப்பித்தவர் ______
Q4
சோழநாட்டில் இறக்குமதிப் பொருள்களுக்குச் சுங்கம் வசூலித்த செய்தியைக் கூறும் நூல் எது?
Q5
பின்வருவனவற்றுள் தொன்மத்திற்குப் பொருந்தாத ஒன்றைத் தேர்க.
Q6
தொன்மத்தைப் பற்றிய கூற்றுகளுள் தவறான ஒன்றைத் தேர்க.
Q7
'சாபவிமோசனம்', 'அகலிகை' கதைகளில் தொன்மங்களைப் பயன்படுத்தியவர்
Q8
பண்புக்குறியீடுகளைக் கதைமாந்தர்களோடு பொருத்துக.
அ) அறம் – 1) கர்ணன்
ஆ) வலிமை – 2) மனுநீதிச்சோழன்
இ) நீதி – 3) பீமன்
ஈ) வள்ளல் – 4) தருமன்
Q9
'இலக்கியத்தில் மேலாண்மை' என்னும் உரைநடைப் பகுதியின் ஆசிரியர் –
Q10
வெ. இறையன்பு பற்றிய கூற்றுகளுள் சரியானவை எவை?
1. இ.ஆ.ப. தேர்வுக்குத் தமிழை விருப்பப் பாடமாகப் படித்து வெற்றி பெற்றவர்.
2. இவரது 'வாய்க்கால் மீன்கள்' கவிதை நூல் 1995இல் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலுக்கான பரிசைப் பெற்றது.
3. 'திசை எட்டும்' மொழிபெயர்ப்பு இதழின் ஆசிரியராக உள்ளார்.
Q11
சீன உருவகக் கதையில் சிறந்த நீச்சல் வீரன் வெள்ளத்தில் நீந்த முடியாமல் தத்தளித்ததற்குக் காரணம் –
Q12
'வையகம் முழுவதும் வறிஞன் ஓம்பும் ஓர் செய் எனக் காத்து இனிதுஅரசு செய்கின்றான்' – இவ்வடிகள் இடம்பெறும் நூல்
Q13
பொருத்துக.
அ) ஞாலம் கருதினும் கைகூடும் – 1) நாலடியார்
ஆ) இன்சொல் விளைநிலனா – 2) நல்வழி
இ) கல்லாரே யாயினும் கற்றாரைச் சேர்ந்தொழுகின் – 3) திருக்குறள்
ஈ) ஆன முதலில் அதிகம் செலவானால் – 4) அறநெறிச்சாரம்
Q14
பாண்டிய நாட்டுத் தூதுக்குழு ஒன்று அகஸ்டஸ் சீசரைச் சந்தித்ததைப் பற்றித் தெரிவிப்பவர் –
Q15
ஹிராக்ளிடஸ் பற்றிய கூற்றுகளைக் கருதுக.
1. இவர் கிரேக்க நாட்டவர்.
2. 126 ஒற்றை வரிகளில் எழுதிய 'துளிகள்' (fragments) நூலால் உலகப்புகழ் பெற்றார்.
3. 'இரண்டு முறை ஒருவன் ஒரே நதியில் இறங்க முடியாது' என்பது இவரது கோட்பாடு.
Q16
'இரட்சணிய யாத்திரிகம்' காப்பியத்தின் பருவங்களுள் இடம்பெறாதது –
Q17
பாடப்பகுதியாக இடம்பெற்றுள்ள இயேசுவின் இறுதிக்கால நிகழ்ச்சிகள், இரட்சணிய யாத்திரிகத்தின் எப்பகுதியைச் சேர்ந்தவை?
Q18
பாடப்பகுதியில் உள்ள இரட்சணிய யாத்திரிகப் பாடல்களின் பாவகை –
Q19
சொல்லைப் பொருளோடு பொருத்துக.
அ) கூவல் – 1) உலகம்
ஆ) உததி – 2) தண்டனை
இ) ஆக்கினை – 3) கடல்
ஈ) மேதினி – 4) கிணறு
Q20
'ஓர்மின்' என்னும் சொல்லின் இலக்கணக்குறிப்பு –
Q21
'பழித்தனர்' – பகுபத உறுப்பிலக்கணத்தில் 'அன்' என்பது –
Q22
இரட்சணிய யாத்திரிகம் பற்றிய கூற்றுகளுள் சரியானவை எவை?
1. திருநெல்வேலியிலிருந்து வெளிவந்த 'நற்போதகம்' மாத இதழில் பதின்மூன்று ஆண்டுகள் தொடராக வெளிவந்தது.
2. 1894ஆம் ஆண்டு மே திங்களில் முதல் பதிப்பாக வெளியிடப்பட்டது.
3. இது 3766 பாடல்களைக் கொண்ட உருவகக் காப்பியம்.
Q23
'உண்டால் அம்ம இவ்வுலகம்' எனத் தொடங்கும் புறநானூற்றுப் பாடலின் திணையும் துறையும் –
Q24
'நோன்தாள்' என்னும் சொல்லின் பொருள் –
Q25
'தமக்கென முயலா நோன்தாள்' – இத்தொடரில் 'முயலா' என்பதன் இலக்கணக்குறிப்பு –
Q26
கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி பற்றிய கூற்றுகளுள் சரியானவை எவை?
1. இவர் சோழ மன்னர் மரபைச் சேர்ந்தவர்.
2. கடற்பயணம் ஒன்றில் இறந்துபோனமையால் இப்பெயர் பெற்றார்.
3. இவரது பாடல்கள் புறநானூற்றில் ஒன்றும் பரிபாடலில் ஒன்றும் இடம்பெற்றுள்ளன.
Q27
'கோடை மழை' சிறுகதையின் ஆசிரியர் –
Q28
சாந்தா தத் பற்றிய கூற்றுகளுள் தவறானது எது?
Q29
தொல்காப்பியர் குறிப்பிடும் வனப்புகளுள் தொன்மத்தோடு தொடர்புடையது –
Q30
இந்தியத் தொன்மக் கதைமாந்தரைக் கிரேக்கத் தொன்ம ஒப்புமையோடு பொருத்துக.
அ) இந்திரன் – 1) மினர்வா
ஆ) சூரியன் – 2) சீயஸ்பிடர்
இ) சரஸ்வதி – 3) மார்ஸ்
ஈ) கார்த்திகேயன் – 4) சோல்
Q31
தொன்மங்களைப் பயன்படுத்திய படைப்பாளரையும் படைப்பையும் பொருத்துக.
அ) கு. அழகிரிசாமி – 1) அரவான்
ஆ) ஜெயமோகன் – 2) சாபவிமோசனம்
இ) எஸ். இராமகிருஷ்ணன் – 3) விட்டகுறை
ஈ) புதுமைப்பித்தன் – 4) பத்மவியூகம்
Q32
'கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி எல்லா உயிரும் தொழும்' – இக்குறள் இடம்பெறும் அதிகாரம்
Q33
சிந்துவெளி நாகரிகம் பற்றித் தமிழில் முதன்முதலில் 'மொஹெஞ்சொ-தரோ அல்லது சிந்துவெளி நாகரிகம்' என்ற நூலை இயற்றியவர் –

இந்தப் பாடத்திற்கு மேலும்

புத்தகப் பயிற்சி வினாக்கள்8 பாடநூல் வினாக்கள் · விடையுடன் கூடுதல் வினாக்கள்25 கூடுதல் வினாக்கள் · விடையுடன் புத்தகப் பயிற்சித் தேர்வுபாடநூல் தொகுப்பில் உங்களைச் சோதியுங்கள் கூடுதல் வினாத் தேர்வுகூடுதல் தொகுப்பில் உங்களைச் சோதியுங்கள் படிப்புக் குறிப்புகள்கருத்துகளும் முறைகளும் சூத்திரத் தாள்அனைத்து முக்கிய சூத்திரங்கள்

எல்லா உயிரும் தொழும் — இந்தத் தேர்வைப் பற்றி

இந்த இலவச ஆன்லைன் பயிற்சித் தேர்வு 12ஆம் வகுப்பு தமிழ் (சமச்சீர் கல்வி) பாடத்திட்டத்தின் எல்லா உயிரும் தொழும் பகுதியை உள்ளடக்கியது. வினாக்களின் எண்ணிக்கையையும் விரும்பினால் நேர வரம்பையும் தேர்ந்தெடுத்து, விடையளித்துச் சமர்ப்பியுங்கள்; சரியான விடைகளும் விளக்கமும் இறுதியில் காட்டப்படும். இந்தத் தொகுப்பின் அனைத்து வினாக்களுக்குமான முழுத் தீர்வுகளுக்கு விடையுடன் கூடிய வினாக்கள் பக்கத்தைப் பாருங்கள்.

தமிழ் பாடத்தின் மற்ற பாடங்கள்

அனைத்தையும் பார்க்க
1 உயிரினும் ஓம்பப் படும் 2 பெய்யெனப் பெய்யும் மழை 3 சுற்றத்தார் கண்ணே உள 4 செல்வத்துள் எல்லாம் தலை 5 அருமை உடைய செயல்