TN Online Testசமச்சீர் கல்விப் பயிற்சி

12ஆம் வகுப்பு தமிழ் வினாத்தாள் March 2024

வினாத்தாள் குறியீடு 7401 90 மதிப்பெண்கள் 180 நிமிடங்கள்

March 2024 பொதுத் தேர்வின் முழு வினாத்தாள் அச்சிட்டபடியே: ஒவ்வொரு வினாவும் தமிழ், ஆங்கிலத்தில். PDF ஐப் பதிவிறக்குங்கள், அல்லது பகுதி I ஐ இலவச ஆன்லைன் தேர்வாக எழுதுங்கள்.

தமிழ் / தமிழ்March 2024 · March 2024

பகுதி – I

அனைத்து வினாக்களுக்கும் விடை தருக. 14×1=14
1.
"மின்னேர் தனியாழி வெங்கதிரொன்று ஏனையது
தன்னேர் இலாத தமிழ் !"
- இவ்வடிகளில் பயின்று வந்துள்ள தொடைநயம்.
(அ) அடிஎதுகை, சீர்மோனை
(ஆ) அடிமோனை, அடிஎதுகை
(இ) சீர்எதுகை, அடிமோனை
(ஈ) சீர்மோனை, சீர்எதுகை
(a)
(b)
(c)
(d)
விடையைக் காட்டு ▾ (அ) / (a) · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →
1 mark
2.
பொருத்தி விடை தேர்க.
(1) குரங்குகள் - (i) கன்றுகளைத் தவிர்த்தன
(2) விலங்குகள் - (ii) மரங்களிலிருந்து வீழ்ந்தன
(3) பறவைகள் - (iii) குளிரால் நடுங்கின
(4) பசுக்கள் - (iv) மேய்ச்சலை மறந்தன
(அ) (1)-(iii), (2)-(ii), (3)-(i), (4)-(iv)
(ஆ) (1)-(i), (2)-(iii), (3)-(iv), (4)-(ii)
(இ) (1)-(ii), (2)-(i), (3)-(iii), (4)-(iv)
(ஈ) (1)-(iii), (2)-(iv), (3)-(ii), (4)-(i)
(a)
(b)
(c)
(d)
விடையைக் காட்டு ▾ (ஈ) / (d) · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →
1 mark
3.
‘பலர் துஞ்சவும் தான் துஞ்சான்’ – விழித்திருந்தவரும் அவரைப் பாடியவரும் :
(அ) கணைக்கால் இரும்பொறையை, கபிலர்
(ஆ) சோழன் நெடுங்கிள்ளியை, பாணர்
(இ) கரிகாலனை, உருத்திரங்கண்ணனார்
(ஈ) சோழன் நலங்கிள்ளியை, கோவூர்கிழார்
1 mark
4.
'விளியறி ஞமலி' – இதில் குறிப்பிடப்படும் விலங்கு :
(அ) நாய்
(ஆ) எருது
(இ) யாளி
(ஈ) குதிரை
(a)
(b)
(c)
(d)
விடையைக் காட்டு ▾ (அ) / (a) · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →
1 mark
5.
சுவடியோடு பொருந்தாத ஒன்றைத் தேர்வு செய்க.
(அ) கடுக்காய்
(ஆ) வசம்பு
(இ) மாவிலைக்கரி
(ஈ) மணத்தக்காளியிலைச் சாறு
(a)
(b)
(c)
(d)
விடையைக் காட்டு ▾ (அ) / (a) · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →
1 mark
6.
சென்னை வெறும் நகரம் மட்டுமல்ல, அது நம்பிக்கை மையம். காரணம் :
(அ) மென்பொருள், வன்பொருள், வாகன உற்பத்தியில் பங்கு
(ஆ) மென்பொருள் ஏற்றுமதியில் முன்னிலை
(இ) நேரடி, மறைமுக வேலைவாய்ப்புகளின் களம்
(ஈ) (அ), (ஆ), (இ) அனைத்தும்
(a)
(b)
(c)
(d)
விடையைக் காட்டு ▾ (ஈ) / (d) · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →
1 mark
7.
சரியானவற்றைப் பொருத்தித் தேர்க.
(1) காதை - (i) கந்தபுராணம்
(2) சருக்கம் - (ii) சீவகசிந்தாமணி
(3) இலம்பகம் - (iii) சூளாமணி
(4) படலம் - (iv) சிலப்பதிகாரம்
(அ) (1)-(iii), (2)-(iv), (3)-(ii), (4)-(i)
(ஆ) (1)-(iv), (2)-(iii), (3)-(ii), (4)-(i)
(இ) (1)-(iv), (2)-(iii), (3)-(i), (4)-(ii)
(ஈ) (1)-(iii), (2)-(iv), (3)-(i), (4)-(ii)
(a)
(b)
(c)
(d)
விடையைக் காட்டு ▾ (ஆ) / (b) · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →
1 mark
8.
ஏழ் ஆண்டு இயற்றி ஓர் ஈராறு ஆண்டில் சூழ்கழல் மன்னற்குக் காட்டல் ...
- தொடர்களில் வெளிப்படும் செய்திகள்.
(1) மாதவி ஏழு ஆண்டுகள் வரை நாட்டியம் பயின்றாள்
(2) ஈராறு வயதில் அரங்கேற்றம் செய்ய விரும்பினாள்
(அ) (1) தவறு; (2) தவறு
(ஆ) (1) சரி; (2) தவறு
(இ) (1) சரி; (2) சரி
(ஈ) (1) தவறு; (2) சரி
(a)
(b)
(c)
(d)
விடையைக் காட்டு ▾ (இ) / (c) · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →
1 mark
9.
எளியது, அரியது என்பன :
(அ) சிறுமை பல செய்வது - பகைவர் தொடர்பு
(ஆ) தீயினத்தின் துணை - நல்லினத்தின் துணை
(இ) மெய்ப்பொருள் காண்பது - உருவுகண்டு எள்ளாதது
(ஈ) சொல்வது - சொல்லியபடி செய்வது
(a)
(b)
(c)
(d)
விடையைக் காட்டு ▾ (ஈ) / (d) · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →
1 mark
10.
'உண்டு பிறந்து வளர்ந்த இடந்தனில்'
- இத்தொடரில் இடம் பெற்றுள்ள பெயரெச்சம்.
(அ) வளர்ந்த
(ஆ) உண்டு
(இ) இடந்தனில்
(ஈ) பிறந்து
(a)
(b)
(c)
(d)
விடையைக் காட்டு ▾ (அ) / (a) · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →
1 mark
11.
ச.த. சற்குணரின் உரையைக் கேட்டுத் தூண்டப்பெற்ற மயிலை சீனி. வேங்கடசாமி எழுதிய நூல் :
(அ) சமணமும் தமிழும்
(ஆ) பௌத்தமும் தமிழும்
(இ) கிறித்தவமும் தமிழும்
(ஈ) இசுலாமும் தமிழும்
(a)
(b)
(c)
(d)
விடையைக் காட்டு ▾ (இ) / (c) · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →
1 mark
12.
மறைத்துச் சொல்லவும் மிகுத்துச் சொல்லவும் அழுத்திச் சொல்லவும் பயன்படும் இலக்கிய உத்தி :
(அ) அங்கதம்
(ஆ) குறியீடு
(இ) தொன்மம்
(ஈ) படிமம்
(a)
(b)
(c)
(d)
விடையைக் காட்டு ▾ (ஆ) / (b) · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →
1 mark
13.
பிழையான தொடரைக் கண்டறிக.
(அ) காளையில் பூத்த மல்லிகை மனம் வீசியது.
(ஆ) காளைகளைப் பூட்டி வயலை உழுதனர்.
(இ) நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கின.
(ஈ) மலைமீது ஏறிக் கல்வெட்டுகளைக் கண்டறிந்தனர்.
(a)
(b)
(c)
(d)
விடையைக் காட்டு ▾ (அ) / (a) · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →
1 mark
14.
தோப்பில் முகமது மீரானுக்குச் சாகித்திய அகாதெமி விருது பெற்றுத் தந்த நூல் :
(அ) கூனன் தோப்பு
(ஆ) துறைமுகம்
(இ) சாய்வு நாற்காலி
(ஈ) ஒரு குட்டித் தீவின் வரைபடம்
(a)
(b)
(c)
(d)
விடையைக் காட்டு ▾ (இ) / (c) · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →
1 mark

பகுதி – II

பிரிவு – 1 (வினா 15 – 18) : எவையேனும் மூன்றனுக்கு விடை தருக. 3×2=6
பிரிவு – 2 (வினா 19 – 21) : எவையேனும் இரண்டனுக்கு விடை தருக. 2×2=4
பிரிவு – 3 (வினா 22 – 30) : எவையேனும் ஏழனுக்கு விடை தருக. 7×2=14
15.
ஞாலத்தின் பெரியது எது ?
2 marks
16.
நெடுநல்வாடை – பெயர்க்காரணம் தருக.
2 marks
17.
வசனம், கவிதை – வேறுபாடு தருக.
2 marks
18.
முகம் முகவரியற்றுப் போனதற்கு சுகந்தி சுப்பிரமணியன் கூறும் காரணத்தை எழுதுக.
2 marks
19.
புக்கில், தன்மனை – சிறு குறிப்பு எழுதுக.
2 marks
20.
முறை வைப்பு என்றால் என்ன ?
2 marks
21.
கீழ்த்திசைச் சுவடிகள் நூலகம் குறித்து எழுதுக.
2 marks
22.
தமிழில் பிழையின்றி எழுதுவதற்கு மேற்கொள்ள வேண்டிய முயற்சிகள் யாவை ?
2 marks
23.
வல்லின மெய்களை இட்டும் நீக்கியும் எழுதுக.
மாணவர்கள் பெற்றோர்களை தமது நண்பர்களாக பாவித்து நட்புக் கொள்ள வேண்டும். தமது இன்ப துன்பங்களை பெற்றோர்களுடன் பகிர்ந்துக் கொள்ள வேண்டும்.
2 marks
24.
தொடரில் உள்ள பிழைகளை நீக்கி எழுதுக.
ரங்கன் வெங்கலப் பாத்திரக்கடை வைத்திருக்கிறார்.
2 marks
25.
பேச்சு வழக்கை எழுத்து வழக்காக மாற்றுக.
நிலத்தக் கௌறணும்டா அப்பதான் வகுறு நிறையும்.
2 marks
26.
பொருள் வேறுபாடு அறிந்து தொடர் அமைக்கவும்.
தின்மை – திண்மை
2 marks
27.
ஏதேனும் ஒன்றனுக்குப் பகுபத உறுப்பிலக்கணம் தருக.
(அ) செய்த     (ஆ) கலங்கி
2 marks
28.
கலைச் சொல்லாக்கம் தருக.
(அ) Stapler     (ஆ) Teller

குறிப்பு : செவி மாற்றுத்திறனாளர்களுக்கான மாற்று வினா.
பின்வரும் உவமைத் தொடரைச் சொற்றொடரில் அமைத்திடுக.
அச்சாணி இல்லாத தேர் போல
2 marks
29.
ஏதேனும் ஒன்றனுக்குப் புணர்ச்சி விதி தருக.
(அ) உரனுடை     (ஆ) தலைக்கோல்
2 marks
30.
சொல்லைப் பிரித்தும் சேர்த்தும் தொடரமைக்கவும்.
(அ) கோவில்     (ஆ) தாமரை
2 marks

பகுதி – III

பிரிவு – 1 (வினா 31 – 34) : எவையேனும் இரண்டனுக்கு விடை தருக. 2×4=8
பிரிவு – 2 (வினா 35 – 38) : எவையேனும் இரண்டனுக்கு மட்டும் விடை தருக. 2×4=8
பிரிவு – 3 (வினா 39 – 43) : எவையேனும் மூன்றனுக்கு விடை தருக. 3×4=12
31.
‘ஏங்கொலிநீர் ஞாலத்து இருளகற்றும்’
– இடம் சுட்டிப் பொருள் விளக்குக.
4 marks
32.
சடாயுவைத் தந்தையாக ஏற்று, இராமன் ஆற்றிய கடமையை எழுதுக.
4 marks
33.
நாட்டிய அரங்கின் அமைப்பை இளங்கோவடிகள் காட்சிப்படுத்தும் பாங்கு குறித்து உங்கள் கருத்தை எழுதுக.
4 marks
34.
கடையெழு வள்ளல்களையும் அவர்கள் செய்த செயலையும் அட்டவணைப்படுத்துக.
4 marks
35.
பேரிடர் மேலாண்மை ஆணையம் – விளக்குக.
4 marks
36.
மணலில் எழுதியது முதல் தற்காலம் வரை எழுதும் முறையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களைத் தொகுத்துரைக்கவும்.
4 marks
37.
சென்னையின் பண்பாட்டு அடையாளங்களில், இன்றும் நிலைத்து இருப்பனவற்றைக் குறிப்பிடுக.
4 marks
38.
வேளாண் மேலாண்மை குறித்து நீவிர் பரிந்துரைப்பனவற்றை எழுதுக.
4 marks
39.
(அ)சினம்என்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனம்என்னும்
ஏமப் புணையைச் சுடும்.
– இக்குறட்பாவில் பயின்று வரும் அணியை விளக்குக.
அல்லது / OR
(ஆ)உவமை அணியைச் சான்றுடன் விளக்குக.
4 marks
40.
இலக்கிய நயம் பாராட்டுக :
(மையக் கருத்துடன் ஏற்புடைய மூன்று நயங்களை எழுதுக)
முச்சங்கங் கூட்டி
    முதுபுலவர் தமைக் கூட்டி
அச்சங்கத் துள்ளே
    அளப்பரிய பொருள் கூட்டி
சொற்சங்க மாகச்
    சுவைமிகுந்த கவிகூட்டி
அற்புதங்க ளெல்லாம்
    அமைத்த பெருமாட்டி !
– கண்ணதாசன்
4 marks
41.
(அ)வாகைத் திணையைச் சான்று தந்து விளக்குக.
அல்லது / OR
(ஆ)செவியறிவுறூஉ துறையைச் சான்றுடன் விளக்குக.
4 marks
42.
(அ)பின்வரும் பழமொழியை வாழ்க்கை நிகழ்வில் அமைத்து எழுதுக.
குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை.
அல்லது / OR
(ஆ)பின்வரும் பழமொழியை வாழ்க்கை நிகழ்வில் அமைத்து எழுதுக.
ஊழி பெயரினும் தாம் பெயரார்.
4 marks
43.
தமிழாக்கம் தருக.
(1) If you want people to understand you, speak their language.
(2) A new language is a new life.
(3) The limits of my language are the limits of my world.
(4) Knowledge of languages is the doorway to wisdom.

செவி மாற்றுத்திறனாளர்களுக்கான மாற்று வினா.
கீழ்க்காணும் பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடை தருக.
ஐந்தரை வயதில் திருமணம் செய்து கொடுக்கப்பட்ட பெண் ஒருவர், தன் குடும்பத்தாரிடமே கல்வி கற்றார். கதை கூறுவதில் ஆர்வம் கொண்டிருந்த அவர் தன் கற்பனை ஆற்றலால் தோழியர்களுக்கும் புதிய கதைகளை உருவாக்கிக் கூறினார். அதைக் கண்ட அவரது கணவர் அப்பெண்ணின் படைப்பாற்றலை ஊக்குவிக்கப் பல நாடகங்களுக்கு அழைத்துச் சென்றார். அப்பெண்ணுக்கு நாடகம் எழுத வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டது. ஆனால் ஓரளவு மட்டும் எழுதத் தெரிந்த தன்னால் நாடகம் எப்படி எழுத முடியும் என்று அவர் வருந்திய போது, அவரது தோழி, நாடகத்தை அவர் சொல்லச் சொல்லத் தான் எழுதுவதாகக் கூறி ஊக்கப்படுத்தினார். இப்படித்தான் அப்பெண் தன்னுடைய முதல் நூலான ‘இந்திர மோகனா’ என்ற நாடக நூலை வெளியிட்டார். அவர் தான் ‘நாவல் ராணி’, ‘கதா மோகினி’, ‘ஏக அரசி’ என்றெல்லாம் தம் சமகால எழுத்தாளர்களால் அழைக்கப்பட்ட வை.மு.கோ. (‘வைத்தமாநிதி முடும்பை கோதைநாயகி’) ஆவார்.
வினாக்கள் :
(1) ஐந்தரை வயதில் திருமணம் செய்து கொடுக்கப்பட்ட பெண் யார் ?
(2) வை.மு. கோதைநாயகியின் படைப்பாற்றலை ஊக்குவித்தவர் யார் ?
(3) வை.மு. கோதைநாயகி அவர்கள் எழுதிய முதல் நாடக நூல் எது ?
(4) “கதா மோகினி” என்று அழைக்கப்பட்ட பெண் எழுத்தாளர் யாரிடம் கல்வி கற்றார் ?
4 marks

பகுதி – IV

அனைத்து வினாக்களுக்கும் விடை தருக. 3×6=18
44.
(அ)பண்பின் படிமமாகப் படைக்கப்பட்ட இராமன், பிற உயிர்களுடன் கொண்டிருந்த உறவு நிலையைப் பாடப்பகுதி வழி நிறுவுக.
அல்லது / OR
(ஆ)அறிவுடைமை வாழ்வின் உயர்வுக்குத் துணை நிற்கும் என்பதை வள்ளுவம் வழி நின்று நிறுவுக.
6 marks
45.
(அ)பண்டைக்காலக் கல்வி முறையில் ஆசிரியர் மாணவர்களுக்கிடையே நிகழ்ந்த கற்றல், கற்பித்தல் முறைகளைத் தொகுத்தெழுதுக.
அல்லது / OR
(ஆ)“ஒவ்வொரு நகரத்துக்கும் வரலாறும் வடிவழகும் உண்டு” – நீங்கள் பார்த்த அல்லது வாழ்ந்த ஒரு நகரம் குறித்து இருபக்க அளவில் கட்டுரை எழுதுக.
6 marks
46.
(அ)பொறுப்புணர்ச்சியின்றி இருந்த ஊரைத் தன் பொறுப்புணர்வால் மாற்றிய மருதனின் பண்பு நலத்தை விவரிக்கவும்.
அல்லது / OR
(ஆ)‘சாலை விபத்தில்லாத் தமிழ்நாடு’
– இக்கூற்று நனவாக நாம் செய்ய வேண்டியன யாவை ?
6 marks

பகுதி – V

4+2=6
47.
அடிபிறழாமல் செய்யுள் வடிவில் விடை தருக.
(அ) “அறிவும்” எனத் தொடங்கும் புறநானூற்றுப் பாடலை அடிபிறழாமல் எழுதுக.
(ஆ) ‘பொருள்’ என முடியும் குறளை அடிபிறழாமல் எழுதுக.
6 marks
⬇️ PDF பதிவிறக்கம் அனைத்து தமிழ் வினாத்தாள்கள்