TN Online Testசமச்சீர் கல்விப் பயிற்சி

12ஆம் வகுப்பு தமிழ் வினாத்தாள் March 2025

90 மதிப்பெண்கள் 180 நிமிடங்கள்

March 2025 பொதுத் தேர்வின் முழு வினாத்தாள் அச்சிட்டபடியே: ஒவ்வொரு வினாவும் தமிழ், ஆங்கிலத்தில். PDF ஐப் பதிவிறக்குங்கள், அல்லது பகுதி I ஐ இலவச ஆன்லைன் தேர்வாக எழுதுங்கள்.

தமிழ் / தமிழ்March 2025 · March 2025

பகுதி – I

குறிப்பு : அனைத்து வினாக்களுக்கும் விடை தருக. 14×1=14
1.
இலக்கியத்தையும் மொழியையும் ஒருசேரப் பேசுகின்ற இலக்கண நூல்
(அ) தொல்காப்பியம்
(ஆ) யாப்பருங்கலக்காரிகை
(இ) நன்னூல்
(ஈ) தண்டியலங்காரம்
(a)
(b)
(c)
(d)
விடையைக் காட்டு ▾ (அ) / (a) · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →
1 mark
2.
குறிப்புகளில் மறைந்திருக்கும் தமிழறிஞரைக் கண்டுபிடிக்க.
தமிழறிஞர்; முதலிரு எழுத்துகளால் மறைக்கலாம்.
(அ) மறைமலை அடிகள்
(ஆ) தமிழ் ஒளி
(இ) சூடாமணி
(ஈ) கோதை
(a)
(b)
(c)
(d)
விடையைக் காட்டு ▾ (அ) / (a) · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →
1 mark
3.
"உயர்திணை என்மனார் மக்கட் சுட்டே
அஃறிணை என்மனார் அவரல பிறவே" - இந்நூற்பா இடம்பெற்றுள்ள இலக்கண நூல் :
(அ) தொல்காப்பியம்
(ஆ) நன்னூல்
(இ) இலக்கண விளக்கம்
(ஈ) அகத்தியம்
(a)
(b)
(c)
(d)
விடையைக் காட்டு ▾ (அ) / (a) · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →
1 mark
4.
உலகநாடுகள் மாற்று ஆற்றலை நோக்கிச் சென்றால் மட்டுமே புவிவெப்பமயமாதலைக் கட்டுப்படுத்த முடியும் - இத்தொடர் உணர்த்துவது :
(அ) காலநிலை மாறுபடுகிறது
(ஆ) கார்பன் அற்ற ஆற்றல் பயன்பாடே தேவையாகிறது
(இ) புவியின் இயக்கம் வேறுபடுகிறது
(ஈ) பசுமைக்குடில் வாயுக்கள் அதிகமாகிறது
(a)
(b)
(c)
(d)
விடையைக் காட்டு ▾ (ஆ) / (b) · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →
1 mark
5.
பொருத்தி விடை தேர்க.
(1) வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் - (i) சேர்ந்தாரைக் கொல்லி
(2) பயன்தூக்கார் செய்த உதவி - (ii) ஞாலத்தின் மாணப் பெரிது
(3) சினம் - (iii) தெய்வத்துள் வைக்கப்படும்
(4) காலத்தினாற் செய்த நன்றி - (iv) நன்மை கடலின் பெரிது
(அ) (1) - (iv), (2) - (i), (3) - (ii), (4) - (iii)
(ஆ) (1) - (iv), (2) - (iii), (3) - (ii), (4) - (i)
(இ) (1) - (ii), (2) - (iii), (3) - (iv), (4) - (i)
(ஈ) (1) - (iii), (2) - (iv), (3) - (i), (4) - (ii)
(a)
(b)
(c)
(d)
விடையைக் காட்டு ▾ (ஈ) / (d) · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →
1 mark
6.
"எங்கள் தந்தையர் நாடென்ற பேச்சினிலே ஒரு
சக்தி பிறக்குது மூச்சினிலே" - என்னும் பாரதியின் பாடல் வெளிப்படுத்துவது :
(அ) தாய்வழிச் சமூகமுறை
(ஆ) தனிக்குடும்ப முறை
(இ) தந்தைவழிச் சமூகமுறை
(ஈ) விரிந்த குடும்ப முறை
(a)
(b)
(c)
(d)
விடையைக் காட்டு ▾ (இ) / (c) · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →
1 mark
7.
"காவினெம் கலனே; சுருக்கினெம் கலப்பை"
இத்தொடரில் 'கலன்' உணர்த்தும் பொருள் :
(அ) இசைக்கருவி
(ஆ) போர்க்கருவி
(இ) வேளாண் கருவி
(ஈ) தச்சுக்கருவி
(a)
(b)
(c)
(d)
விடையைக் காட்டு ▾ (அ) / (a) · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →
1 mark
8.
"காலை இளம் வெயில்
நன்றாக மேய
தும்பறுத்துத்
துள்ளிவரும்
புதுவெயில்" - என்ற கவிதையில் பயின்றுவரும் படிமம் :
(அ) மெய்ப்படிமம்
(ஆ) பயன் படிமம்
(இ) உருப்படிமம்
(ஈ) வினைப்படிமம்
(a)
(b)
(c)
(d)
விடையைக் காட்டு ▾ (ஈ) / (d) · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →
1 mark
9.
ஈற்றடி எழுதித் துளிப்பாவை நிறைவு செய்க.
வானம் அழுகிறது.
பூமி சிரிக்கிறது.
(அ) ஒளி
(ஆ) மேகம்
(இ) மின்னல்
(ஈ) மழை
(a)
(b)
(c)
(d)
விடையைக் காட்டு ▾ (ஈ) / (d) · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →
1 mark
10.
மேடையின் மேலிருந்து வேண்டும்போது கீழே இறக்கும் வகையில் அமைக்கப்படும்
(அ) இரு முகத்திரை
(ஆ) கரந்துவரல் திரை
(இ) பொருமுகத்திரை
(ஈ) ஒரு முகத்திரை
(a)
(b)
(c)
(d)
விடையைக் காட்டு ▾ (ஆ) / (b) · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →
1 mark
11.
"மழை மேகத்தைக் கண்ட மயில் போல
நீலவண்ணனைக் கண்ட குந்தி" - இத்தொடரில் வெளிப்படும் மெய்ப்பாடு
(அ) பெருமை
(ஆ) சிரிப்பு
(இ) மகிழ்ச்சி
(ஈ) வியப்பு
(a)
(b)
(c)
(d)
விடையைக் காட்டு ▾ (இ) / (c) · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →
1 mark
12.
காப்பியத்தின் பெரும்பிரிவைக் குறிப்பது
(அ) சருக்கம்
(ஆ) காதை
(இ) இலம்பகம்
(ஈ) காண்டம்
(a)
(b)
(c)
(d)
விடையைக் காட்டு ▾ (ஈ) / (d) · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →
1 mark
13.
பின்வருவனவற்றுள் தொன்மத்திற்குப் பொருந்தா ஒன்றைத் தேர்
(அ) இந்த நாரதரிடம் எச்சரிக்கையாக இரு
(ஆ) கர்ணன் தோற்றான் போ.
(இ) இந்தா போறான் தருமன்.
(ஈ) வயதில் சிறியவர், ஆனாலும் தலைவர்!
(a)
(b)
(c)
(d)
விடையைக் காட்டு ▾ (ஈ) / (d) · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →
1 mark
14.
ஒருவருடைய புகழ், வலிமை, கொடை, அருள் போன்ற நல்லியல்புகளைச் சிறப்பித்துக் கூறுவது
(அ) வாகைத்திணை
(ஆ) பாடாண் திணை
(இ) காஞ்சித்திணை
(ஈ) பொதுவியல் திணை
(a)
(b)
(c)
(d)
விடையைக் காட்டு ▾ (ஆ) / (b) · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →
1 mark

பகுதி – II

பிரிவு – 1 (வினா 15 – 18) : எவையேனும் மூன்றனுக்கு விடை தருக. 3×2=6
பிரிவு – 2 (வினா 19 – 21) : எவையேனும் இரண்டனுக்கு விடை தருக. 2×2=4
பிரிவு – 3 (வினா 22 – 30) : எவையேனும் ஏழனுக்கு விடை தருக. 7×2=14
15.
வாடைக்காலத்தில் விலங்குகளும் பறவைகளும் எவ்வாறு வருந்தின ?
2 marks
16.
செல்வம் இருப்பதற்கான வழியாக வள்ளுவம் உரைப்பன யாவை ?
2 marks
17.
‘நகரம் பட்டை தீட்டிய வெள்ளை வைரமாகிறது’ – விளக்கம் தருக.
2 marks
18.
“உவா உற வந்து கூடும் உடுபதி, இரவி ஒத்தார்”
– இடஞ்சுட்டிப் பொருள் விளக்கம் தருக.
2 marks
19.
ஆளுக்கொரு மரம் வளர்ப்போம் என்னும் முழக்கத்தொடர் வாயிலாக நீங்கள் வலியுறுத்தும் கருத்துக்களை எழுதுக.
2 marks
20.
பருவத்தே பயிர் செய் – நேர மேலாண்மையோடு பொருத்தி எழுதுக.
2 marks
21.
‘சேய்மைக் காட்சித் துணிப்பு’ என்றால் என்ன ?
2 marks
22.
முடிந்தால் தரலாம், முடித்தால் தரலாம் – இவ்விரு சொற்றொடர்கள் உணர்த்தும் பொருளை அறிந்து தொடர் அமைக்கவும்.
2 marks
23.
உவமைத் தொடரைச் சொற்றொடரில் அமைத்து எழுதுக.
“கிணற்றுத் தவளை போல”
2 marks
24.
மயங்கொலிச் சொற்களை ஒரே தொடரில் அமைத்து எழுதுக.
மணம், மனம்
2 marks
25.
திருவளர்ச்செல்வன், திருவளர் செல்வன் – இவற்றில் சரியான தொடர் எது ? அதற்கான இலக்கண விதி யாது ?
2 marks
26.
பொருத்தமான வேற்றுமை உருபுகளைச் சேர்த்து முறையான தொடர்களாக ஆக்குக.
1. காலை எழுந்து படித்து நமக்கு நன்மை ஏற்படும்.
2. சான்றோர் மதிப்பு கொடுத்து வாழ்வு உயரலாம்.
2 marks
27.
ஏதேனும் ஒரு சொல்லைப் பிரித்தும் சேர்த்தும் தொடரமைக்க.
(அ) வெங்காயம்     (ஆ) அந்தமான்
2 marks
28.
(அ)கலைச்சொல்லாக்கம் தருக.
(அ) Artist     (ஆ) Subscription
அல்லது / OR
(ஆ)செவி மாற்றுத்திறனாளர்களுக்கான மாற்று வினா.
பேச்சு வழக்கை எழுத்து வழக்காக மாற்றுக.
ஊட்டாண்ட வெளையாண்ட கொயந்தையை அப்பா எங்க இஸ்துகினு போனாரு
2 marks
29.
ஏதேனும் ஒன்றனுக்குப் புணர்ச்சி விதி தருக.
(அ) அருங்கானம்     (ஆ) ஏழையென
2 marks
30.
ஏதேனும் ஒன்றனுக்குப் பகுபத உறுப்பிலக்கணம் தருக.
(அ) சாற்றி     (ஆ) தொழுதனர்
2 marks

பகுதி – III

பிரிவு – 1 (வினா 31 – 34) : எவையேனும் இரண்டனுக்கு விடை தருக. 2×4=8
பிரிவு – 2 (வினா 35 – 38) : எவையேனும் இரண்டனுக்கு மட்டும் விடை தருக. 2×4=8
பிரிவு – 3 (வினா 39 – 43) : எவையேனும் மூன்றனுக்கு விடை தருக. 3×4=12
31.
நீர்நிலைகளிலிருந்து உதடுகள் குவித்து உறிஞ்சுகிறது ஒளிக்கதிர்கள் – இக்கவிதையின் அடி ‘தூங்கும் பனிநீரை வாங்கும் கதிரோனே’ என்னும் நாட்டுப்புறப் பாடலின் தொடர்ச்சியாய் அமைவதைப் பற்றி எழுதுக.
4 marks
32.
குகனோடு ஐவராகி, வீடணனோடு எழுவரான நிகழ்வுகளைச் சுட்டிக்காட்டுக.
4 marks
33.
சிரிப்பு, சினம், வியப்பு, அச்சம் ஆகியவற்றுள் எவையேனும் இரண்டு மெய்ப்பாடுகள் தோன்றுவதற்கான சூழ்நிலையைக் கற்பனையாகப் படைக்க.
4 marks
34.
‘ஈசன்மகன் நின்றனர் ஓர் ஏழையென ஓர்மின்’ இடஞ்சுட்டிப் பொருள் விளக்குக.
4 marks
35.
மழைவெள்ளப் பாதிப்பிலிருந்து காத்துக்கொள்ளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைக் குறிப்பிடுக.
4 marks
36.
தாயும் தந்தையும் பணிக்குச் செல்லும் இன்றைய சூழலில் குடும்ப உறுப்பினர் என்ற முறையில் நீங்கள் குடும்பத்துக்குச் செய்யும் உதவிகள் யாவை ?
4 marks
37.
சென்னையின் புகழுக்குச் சான்றாக நிற்கும் கல்வி நிறுவனங்கள் குறித்து எழுதுக.
4 marks
38.
மயிலை சீனி. வேங்கடசாமி நினைவுச் சிறப்பிதழுக்குச் செய்திகள் உருவாக்கித் தருக.
4 marks
39.
(அ)பொருள் வேற்றுமை அணியைச் சான்றுடன் விளக்குக.
அல்லது / OR
(ஆ)எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார்
திண்ணியர் ஆகப் பெறின்
– இக்குறட்பாவில் பயின்றுவரும் அணியை விளக்குக.
4 marks
40.
இலக்கிய நயம் பாராட்டுக.
(பாடலின் மையக்கருத்தோடு எவையேனும் மூன்று நயங்களையும் எழுதுக.)
பிறப்பினால் எவர்க்கும் – உலகில் பெருமை
வாராதப்பா சிறப்பு வேண்டுமெனில் – நல்ல செய்கை
வேண்டுமப்பா !
நன்மை செய்பவரே உலகம் நாடும் மேற்குலத்தார் !
தின்மை செய்பவரே – அண்டித் தீண்ட ஒண்ணாதார் !
– கவிமணி தேசிக விநாயகம்
4 marks
41.
(அ)பாடாண் திணையைச் சான்று தந்து விளக்குக.
அல்லது / OR
(ஆ)கூதிர்ப்பாசறைத் துறையைச் சான்றுடன் விளக்குக.
4 marks
42.
(அ)பின்வரும் பழமொழியை வாழ்க்கை நிகழ்வில் அமைத்து எழுதுக.
தினை விதைத்தவன் தினை அறுப்பான்.
வினை விதைத்தவன் வினை அறுப்பான்.
அல்லது / OR
(ஆ)பின்வரும் பழமொழியை வாழ்க்கை நிகழ்வில் அமைத்து எழுதுக.
எறும்பு ஊரக் கல்லும் தேயும்.
4 marks
43.
கீழ்க்காணும் பத்தியைப் படித்து பின்வரும் வினாக்களுக்கு விடையளிக்க.
பத்தொன்பதாம் நூற்றாண்டில் தென்னிந்தியப் பகுதியில் ஏற்பட்ட மிகக்கொடிய பஞ்சத்தை தாது வருடப் பஞ்சம் என்று, இன்றும் நினைவுகூர்வர். ஒரு கோடி மக்கள் பஞ்சத்தின் பிடியில் சிக்கி இறந்திருக்கலாம் எனப் பதிவுகள் கூறுகின்றன. இதைக் கண்டு மனம் பொறுக்காத தமிழர் ஒருவர் மனமுவந்து தமது சொத்துகள் அனைத்தையும் கொடையளித்தார். இதனைப் போற்றும் விதமாகக் கோபால கிருஷ்ண பாரதியார், “நீயே புருஷ மேரு” என்ற பாடலை இயற்றி அவரைப் பெருமைப்படுத்தினார். அவர்தான், நீதிபதி மாயூரம் வேதநாயகம். இவர், மொழி பெயர்ப்பாளராகவும் நாவலாசிரியராகவும் பெயர் பெற்றவர், தமிழின் முதல் நாவலான பிரதாப முதலியார் சரித்திரத்தை இயற்றியவர்.
வினாக்கள் :
1. ‘நீயே புருஷ மேரு…’ என்ற பாடலை இயற்றியவர் யார் ?
2. பத்தொன்பதாம் நூற்றாண்டில் தென்னிந்தியாவில் ஏற்பட்ட கொடிய பஞ்சம் எவ்வாறு அழைக்கப்படுகிறது ?
3. தமிழின் முதல் நாவல் எது ?
4. ‘தானம் அளித்தார்’ என்ற தொடருக்கு நிகராகப் பத்தியில் உள்ள தொடரை எழுதுக.
4 marks

பகுதி – IV

குறிப்பு : அனைத்து வினாக்களுக்கும் விடை தருக. 3×6=18
44.
(அ)தமிழின் சீரிளமைத்திறம் வியந்து கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம் கூறுவனவற்றைத் தொகுத்து எழுதுக.
அல்லது / OR
(ஆ)செய்ந்நன்றியறிதலே அறம் என்பதை வாயுறை வாழ்த்தின் துணைகொண்டு நிறுவுக.
6 marks
45.
(அ)புயல் தாக்கத்தினால் குடியிருப்புகளுக்கு அருகில் அறுந்து கிடக்கும் மின் இணைப்புகளைச் சரிசெய்யக்கோரி உங்கள் ஊர் மின்வாரியப் பொறியாளருக்குக் கடிதம் எழுதுக.
அல்லது / OR
(ஆ)நிருவாக மேலாண்மை குறித்து வெ. இறையன்பு கூறும் கருத்துகளைத் தொகுத்து எழுதுக.
6 marks
46.
(அ)‘கோடை மழை’ கதை வாயிலாக விளக்கப்படும் மனிதநேயப் பண்புகளை விளக்குக.
அல்லது / OR
(ஆ)‘உரிமைத்தாகம்’ கதையில் சகோதரர்கள் இருவரும் ஒன்றிணையாமல் இருந்திருந்தால்…. கதையைத் தொடர்ந்து எழுதி முடிக்க.
6 marks

பகுதி – V

4+2=6
47.
அடிபிறழாமல் செய்யுள் வடிவில் விடை தருக.
(அ) “ஓங்கலிடை வந்து” எனத் தொடங்கும் தண்டியலங்காரப் பாடலை எழுதுக.
(ஆ) ‘வரும்’ என முடியும் குறளை எழுதுக.
6 marks
⬇️ PDF பதிவிறக்கம் அனைத்து தமிழ் வினாத்தாள்கள்