TN Online Testசமச்சீர் கல்விப் பயிற்சி

பத்தாம் வகுப்பு தமிழ் April 2023: ஆன்லைன் பயிற்சித் தேர்வு

April 2023 வினாத்தாளின் 15 வினாக்களுக்கு நேர வரம்புடனோ இல்லாமலோ விடையளியுங்கள். சமர்ப்பித்ததும் மதிப்பெண், சரியான விடைகள் மற்றும் விளக்கங்கள் தெரியும்.

உங்கள் தேர்வை அமைக்கவும்

விடையுடன் வினாத்தாள்
மீதமுள்ள நேரம்00:00
Q1
'காய்ந்த இலையும் காய்ந்த தோகையும்' நிலத்துக்கு நல்ல உரங்கள்.
- இத்தொடரில் அடிக்கோடிட்ட பகுதி குறிப்பிடுவது.
Q2
கோசல நாட்டில் கொடை இல்லாத காரணம் என்ன ?
Q3
சரியான அகர வரிசையைத் தேர்ந்தெடுக்கவும்.
Q4
"பூக்கையைக் குவித்துப் பூவே புரிவொடு காக்க" என்று ________ வேண்டினார்.
Q5
பாரத ஸ்டேட் வங்கியின் உரையாடு மென்பொருள் ________.
Q6
அருந்துணை என்பதைப் பிரித்தால் ________.
Q7
தேர்ப்பாகன் - இத்தொடரில் அமைந்துள்ள தொகையைத் தெரிவு செய்க.
Q8
உலகமே வறுமையுற்றாலும் கொடுப்பவன் என்றும்
பொருள்களின் இருப்பைக் கூட அறியாமல் கொடுப்பவன்
என்றும் பாராட்டப்படுவோர்.
Q9
"நாற்றிசையும் செல்லாத நாடில்லை"
"ஐந்துசால்பு ஊன்றிய தூண்"
- இந்தச் செய்யுள் அடிகளில் இடம்பெற்றுள்ள எண்ணுப்பெயர்களையும் அவற்றிற்கான தமிழ் எண்களையும் தேர்க.
Q10
"கத்துங் குயிலோசை - சற்றே வந்து
காதிற் படவேணும்" - பாரதியார்
- இப்பாடலடியில் இடம்பெற்றுள்ள வழுவமைதி.
Q11
பாடி மகிழ்ந்தனர் - எவ்வகைத் தொடர் என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
Q12
"பகர்வனர் திரிதிரு நகரவீதியும்;
பட்டினும் மயிரினும் பருத்தி நூலினும்
கட்டு நுண்வினைக் காருகர் இருக்கையும்;
தூசும் துகிரும் ஆரமும் அகிலும்"
இவ்வடிகள் இடம்பெற்ற நூல் எது ?
Q13
"பகர்வனர் திரிதிரு நகரவீதியும்;
பட்டினும் மயிரினும் பருத்தி நூலினும்
கட்டு நுண்வினைக் காருகர் இருக்கையும்;
தூசும் துகிரும் ஆரமும் அகிலும்"
பாடலில் அமைந்த மோனையை எடுத்து எழுதுக.
Q14
"பகர்வனர் திரிதிரு நகரவீதியும்;
பட்டினும் மயிரினும் பருத்தி நூலினும்
கட்டு நுண்வினைக் காருகர் இருக்கையும்;
தூசும் துகிரும் ஆரமும் அகிலும்"
காருகர் - பொருள் தருக.
Q15
"பகர்வனர் திரிதிரு நகரவீதியும்;
பட்டினும் மயிரினும் பருத்தி நூலினும்
கட்டு நுண்வினைக் காருகர் இருக்கையும்;
தூசும் துகிரும் ஆரமும் அகிலும்"
இப்பாடலில் குறிப்பிடப்படும் நறுமணப் பொருள்கள் :