குரோமோசோம் அடிப்படையிலான பாரம்பரியம் - பாடக் குறிப்புகள்
பாரம்பரியத்திற்கான குரோமோசோம் கோட்பாடு
மெண்டலின் (1865) பட்டாணி ஆய்வு 1900 வரை அங்கீகரிக்கப்படவில்லை; பின்னர் டி வெரிஸ், காரன்ஸ், ஷெர்மாக் ஆகியோர் தனித்தனியாக மறுஆய்வு செய்தனர். மெண்டலிய காரணிகள் (மரபணுக்கள்) குரோமோசோமில் குறிப்பிட்ட இடத்தைப் பெற்று பண்புகளைக் கடத்துகின்றன என்பதே இக்கோட்பாடு.
| அறிவியலாளர் | ஆண்டு | பங்களிப்பு |
|---|---|---|
| வில்ஹெல்ம் ராக்ஸ் | 1883 | குரோமோசோம்களே பாரம்பரியத்தைக் கடத்துகின்றன |
| மோன்ட்கோமெரி | 1901 | குரோமோசோம்கள் தனித்த இணைகள்; குன்றல் பகுப்பில் மட்டும் இணை சேர்கின்றன |
| T. போவேரி | 1902 | குரோமோசோம்கள் மரபியல் தீர்மானிகளைக் கொண்டுள்ளன |
| W.S. சட்டன் | 1902 | குரோமோசோம்களுக்கும் மெண்டலிய காரணிகளுக்கும் ஒற்றுமை |
| சட்டன் மற்றும் போவேரி | 1903 | குரோமோசோம் கோட்பாடு |
பிணைப்பு
- பேட்சன் மற்றும் புன்னெட் (1906), இனிப்பு பட்டாணி (Lathyrus odoratus): ஊதா மலர் நீண்ட மகரந்தம் (PL/PL) x சிவப்பு மலர் வட்ட மகரந்தம் (pl/pl); சோதனைக் கலப்பில் 1:1:1:1 கிடைக்கவில்லை.
- அருகமைந்த மரபணுக்கள் பிணைப்புற்றவை; ஒரே குரோமோசோமில் தொலைவில் உள்ளவை பிணைப்புறாத அல்லது சின்டெனி மரபணுக்கள். RF 50% க்கு மேல் பிணைப்புறாதவை, 50% க்குக் கீழ் பிணைப்புற்றவை.
- இணைப்பு (சிஸ், AB/ab): 7:1:1:7; விலகல் (ட்ரான்ஸ், Ab/aB): 1:7:7:1.
- முழுமையான பிணைப்பு: ஆண் ட்ரோசோஃபிலா, C.B. பிரிட்ஜஸ் (1919). முழுமையற்ற பிணைப்பு: மக்காச்சோளம், ஹட்சின்சன்.
- பிணைப்புத் தொகுதிகள் = ஒருமடிய எண்ணிக்கை: மியூகர் 2, ட்ரோசோஃபிலா 4, இனிப்பு பட்டாணி 7, நியூரோஸ்போரா 7, மக்காச்சோளம் 10.
குறுக்கேற்றம்
- ஒத்திசைவு குரோமோசோம்களின் சகோதரி அல்லாத குரோமாட்டிடுகளுக்கிடையே துண்டுப் பரிமாற்றம்; மார்கன் (1912) பெயரிட்டார்; புரோஃபேஸ் I இன் பாக்கிடீன் நிலையில் நிகழ்கிறது.
- நிலைகள்: இணை சேர்தல் (சைகோட்டீன்; மையம் தொடங்கி, நுனி தொடங்கி, இயைபிலா), நான்கமை உருவாதல், குறுக்கேற்றம் (கயாஸ்மா), முடிவுறுதல்.
- முக்கியத்துவம்: புதிய மரபணுச் சேர்க்கைகள், மரபணுக்களின் நேர்க்கோட்டு அமைவு, மரபு வரைபடம், பயிர்ப்பெருக்கம்.
மரபணு வரைபடம்
- RF = மொத்த மறுகூட்டிணைவிகள் / மொத்த வழித்தோன்றல்கள் x 100.
- ஆல்ஃபிரட் H. ஸ்டர்டிவண்ட் (1913) முதன்முதலில் உருவாக்கினார்; பிணைப்பு வரைபடம் எனவும் அழைக்கப்படுகிறது.
- 1 வரைபட அலகு = 1% குறுக்கேற்றம் = 1 சென்டிமார்கன்; 100 cM = 1 மார்கன்.
பல்கூட்டு அல்லீல்கள்
- ஒரே அமைவிடத்தில் மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட அல்லீல் வகைகள்; அவற்றுக்குள் குறுக்கேற்றம் இல்லை; ஒரே பண்பைக் கட்டுப்படுத்துகின்றன; இயல்பான வகை ஓங்கு தன்மையுடையது.
- நிகோட்டியானாவில் தன்மலடாதல்: ஈஸ்ட் (1925); S1, S2, S3, S4, S5. S1S2 x S2S3 இல் S2 மகரந்தம் திறனற்றது, S3 மகரந்தம் கருவுறச் செய்கிறது.
- மக்காச்சோளம் ஒருபால் மலர்த் தாவரம்: நுனி மஞ்சரி டாசல் (கதிர் குஞ்சம்), பக்க மஞ்சரி கதிர். ba பட்டிழையையும் கதிரையும் நீக்குகிறது; ts டாசலைப் பெண் மலராக்குகிறது. இவை ஜிப்ரலின் உற்பத்திக் குறைபாட்டால் ஏற்படுகின்றன.
| மரபணுவகையம் | பாலினம் |
|---|---|
| ba/ba ts/ts | வளர்ச்சியுறா பெண் தாவரம் |
| ba/ba ts+/ts+ | ஆண் தாவரம் |
| ba+/ba+ ts+/ts+ | ஒருபால் மலர்களைப் பெற்ற தாவரம் |
| ba+/ba+ ts/ts | இயல்பான பெண் தாவரம் |
சடுதிமாற்றம்
- ஹியூகோ டிவ்ரிஸ் (1901), Oenothera lamarckiana; சடுதிமாற்றக் கோட்பாடு.
- புள்ளி சடுதிமாற்றம்: ஒத்த பதிலீடு (A → G, T → C), வேறுபட்ட பதிலீடு (A → T, C → G), இடைசெருகல், நீக்கம். மரபுச்செய்தி பெயர்வில் விளைவு: அமைதியான, தவறுதலாகப் பொருள்படும், பொருளுணர்த்தாத (UAA, UAG, UGA), கட்ட நகர்வு.
- இயற்பிய சடுதிமாற்றிகள்: வெப்பநிலை, அயனியாக்கும் கதிர்வீச்சுகள் (X, காமா, ஆல்ஃபா, பீட்டா, காஸ்மிக்), அயனியாக்காத UV கதிர்கள்.
- சார்பதி சொனோரா: சொனோரா 64 காமா கதிர்கள் மூலம் (M.S. சுவாமிநாதன்). ஆமணக்கு அருணா: வெப்ப நியூட்ரான்கள், 270 நாட்களுக்குப் பதில் 120 நாட்கள்.
- வேதிய சடுதிமாற்றிகள்: கடுகு வாயு, நைட்ரஸ் அமிலம், EMS, MMS, ஃபார்மால்டிஹைடு, இயோசின். இணை சடுதிமாற்றிகள்: அஸ்கார்பிக் அமிலம், காஃபீன்.
குரோமோசோம் சடுதிமாற்றங்கள்
- மெய்யிலா மடியம்: டிரைசோமி 2n+1 (பிளாக்ஸ்லீ 1910, Datura stramonium), டெட்ராசோமி 2n+2, பென்டாசோமி 2n+3, மானோசோமி 2n-1, இரட்டை மானோசோமி 2n-1-1, நல்லிசோமி 2n-2.
- மெய்மடியம்: ஒற்றைமடியம் (x), ஒருமடியம் (n), இருமடியம், பன்மடியம்.
- தன்மும்மடியம்: விதையற்ற வாழை, பீட்ரூட், தர்பூசணி. தன்நான்மடியம்: ரை, திராட்சை, குதிரை மசால், நிலக்கடலை, உருளைக்கிழங்கு, காஃபி.
- அயல்பன்மடியம்: ராப்பனோபிராஸிகா (கார்பெசென்கோ 1927, 2n = 4x = 36); ட்ரிட்டிகேல் (2n = 6x = 42). கோல்ச்சிசின் குரோமோசோம்களை இரட்டிப்பாக்குகிறது.
- அமைப்புப் பிறழ்ச்சிகள்: நீக்கம், இரட்டிப்பாதல் (பிரிட்ஜஸ் 1919), தலைகீழ்த் திருப்பம் (ஸ்டர்டிவண்ட் 1926; பாராசென்ட்ரிக், பெரிசென்ட்ரிக்), இடம்பெயர்தல் (எளிய, நகர்வு, பரிமாற்ற).
இந்தப் பாடத்திற்கு மேலும்
புத்தகப் பயிற்சி வினாக்கள்7 பாடநூல் வினாக்கள் · விடையுடன்
கூடுதல் வினாக்கள்25 கூடுதல் வினாக்கள் · விடையுடன்
பயிற்சித் தேர்வுஊடாடும் · உடனடி மதிப்பெண்
புத்தகப் பயிற்சித் தேர்வுபாடநூல் தொகுப்பில் உங்களைச் சோதியுங்கள்
கூடுதல் வினாத் தேர்வுகூடுதல் தொகுப்பில் உங்களைச் சோதியுங்கள்
சூத்திரத் தாள்அனைத்து முக்கிய சூத்திரங்கள்
உயிரியல் – தாவரவியல் பாடத்தின் மற்ற பாடங்கள்
அனைத்தையும் பார்க்க
1 தாவரங்களில் பாலிலா இனப்பெருக்கம் மற்றும் பாலினப்பெருக்கம்
2 பாரம்பரிய மரபியல்
4 உயிரிதொழில்நுட்பவியல் நெறிமுறைகளும் செயல்முறைகளும்
5 தாவரத் திசு வளர்ப்பு
6 சூழ்நிலையியல் கோட்பாடுகள்
7 சூழல்மண்டலம்
8 சுற்றுச்சூழல் பிரச்சினைகள்
9 பயிர் பெருக்கம்
10 பொருளாதாரப் பயனுள்ள தாவரங்களும் தொழில்முனைவுத் தாவரவியலும்