TN Online Testசமச்சீர் கல்விப் பயிற்சி

வளர்சிதை மாற்ற மரபு வழிக் கோளாறுகள்: ஒரு மதிப்பெண் ஆன்லைன் தேர்வு (12ஆம் வகுப்பு உயிர் வேதியியல்)

இந்தப் பாடத்தைப் பகிரவும்: Telegram

எத்தனை வினாக்கள் வேண்டும் என்பதைத் தேர்ந்தெடுத்து, நேர வரம்பை அமைத்துத் தொடங்குங்கள். இறுதியில் உங்கள் மதிப்பெண்ணுடன், ஒவ்வொரு வினாவுக்கும் சரியான விடையும் விளக்கமும் கிடைக்கும். இலவசம், தமிழிலும் ஆங்கிலத்திலும் — 33 வினாக்கள் உள்ளன.

உங்கள் தேர்வை அமைக்கவும்

மீதமுள்ள நேரம்00:00
Q1
கீழ்க்கண்டவற்றில் எந்த நொதி குறைபாடு காரணமாக காலக்டோசீமியா உருவாகிறது?
Q2
கல்லீரல் செயலிழப்பு மற்றும் மனவளர்ச்சி குறைபாடு போன்றவை எதன் அறிகுறிகள்?
Q3
குளுக்கோஸ் 6-பாஸ்படேஸ் குறைபாடு உருவாக்குவது
Q4
கல்லீரலில் குளுக்கோஸ் 6-பாஸ்படேஸ் குறைவால் உருவாவது
Q5
கீழ்க்கண்டவற்றில் எது வான்-கிரீக்ஸ் நோயின் அறிகுறியல்ல?
Q6
இரத்த உறைதல் செயல்முறையில் எத்தனை காரணிகள் ஈடுபடுகின்றன?
Q7
ஹீமோபீலியா A வை உருவாக்கும் காரணி
Q8
இரத்த உறைதல் காரணி IV என்பது
Q9
அல்பினிசம் பின்வரும் குறைபாட்டால் ஏற்படுகிறது
Q10
கண்களில் மட்டும் ஏற்படும் நிறமிக் குறைபாடு பின்வருமாறு அழைக்கப்படுகிறது
Q11
அல்காப்டோனூரியாவோடு தொடர்புடைய அமினோ அமிலங்கள் __________
Q12
ஹெக்ஸோஅமினிடேஸ் A குறைபாட்டினால் சேகரமாவது
Q13
முதன் முதலில் கண்டறியப்பட்ட வளர்சிதை மாற்ற மரபு வழி கோளாறு
Q14
பெரும்பாலான வளர்சிதை மாற்ற மரபு வழி கோளாறுகள் ஆட்டோசோமல் ஒடுங்கு மரபு வழி நிலையைப் பெற்றுள்ளன. இதன் பொருள் __________
Q15
ஒரு மரபணு ஒரு நொதிக் கொள்கை இவரால் முன்மொழியப்பட்டது
Q16
ஹோமோஜெனிடிசிக் அமில ஆக்சிடேஸ் குறைபாட்டால் உருவாவது
Q17
ஒரு குழந்தையின் சிறுநீரானது காற்றில் படும்போது கருமை நிறமாக மாறுகிறது. இதிலிருந்து நீ யூகித்தறியும் சாத்தியமான குறைபாடு எது?
Q18
__________ உறைதலானது வலைபோல செயல்பட்டு இரத்த வெளியேறுதலைத் தடுக்கிறது.
Q19
1908ஆம் ஆண்டு 'வளர்சிதை மாற்ற மரபு வழி கோளாறுகள்' என்ற வார்த்தையை அறிமுகப்படுத்தியவர் யார்?
Q20
பின்வரும் கருத்துகளை அவை முன்வைக்கப்பட்ட காலவரிசைப்படி அமைக்கவும்:
1. ஒரு மரபணு ஒரு பாலிபெப்டைடு
2. வளர்சிதை மாற்ற மரபு வழி கோளாறுகள்
3. ஒரு மரபணு ஒரு நொதி
Q21
கோளாறின் வகையை அதன் எடுத்துக்காட்டுடன் பொருத்துக:
a. லைசோசோமல் சேமிப்பு நோய்கள் - 1. வில்சன் நோய்
b. யூரியா சுழற்சி நோய்கள் - 2. மெத்தில் மலோனிக் அசிடிமியா
c. கரிம அசிடிமியா - 3. டே-சாக்ஸ் நோய்
d. உலோக வளர்சிதை மாற்ற நோய்கள் - 4. சிட்ருலினீமியா
Q22
வகை III காலக்டோசீமியா எந்த நொதியின் குறைபாட்டால் ஏற்படுகிறது?
Q23
காலக்டோசீமியாவில் கண்புரை ஏற்படக் காரணம்
Q24
வான்-கிரீக்ஸ் நோயாளியின் கல்லீரலில் குளுக்கோஸ்-6-பாஸ்படேஸ் காணப்படவில்லை என 1952இல் கண்டறிந்தவர்கள் யார்?
Q25
கூற்று (A): வான்-கிரீக்ஸ் நோயில் கல்லீரல் செல்களினுள் குளுக்கோஸ்-6-பாஸ்பேட் அதிகரிக்கிறது.
காரணம் (R): பாஸ்பரிலேற்றமடைந்த சர்க்கரையான குளுக்கோஸ்-6-பாஸ்பேட் பிளாஸ்மா சவ்வின் வழியே புகுந்து செல்ல இயலாது.
Q26
கிருஸ்துமஸ் நோய் எனவும் அழைக்கப்படும் ஹீமோபிலியா B எந்தக் காரணியின் செயல்பாட்டுக் குறைபாட்டால் ஏற்படுகிறது?
Q27
இரத்த உறைதல் காரணி XIII என்பது
Q28
ஏறத்தாழ எத்தனை ஆண்களில் ஒருவர் காரணி VIII குறைபாட்டுடன் (ஹீமோபிலியா A) பிறக்கின்றனர்?
Q29
தைரோசினிலிருந்து DOPA வை உருவாக்கும் தைரோசினேஸ் நொதி எந்த உலோகத்தைக் கொண்டுள்ளது?
Q30
அல்பினிசத்தின் வகையை அதன் குறைபாடு அல்லது பண்புடன் பொருத்துக:
a. OCA1 - 1. SLC45A2 புரதத்தில் ஏற்படும் குறைபாடு
b. OCA2 - 2. TYRP1 மரபணுவில் ஏற்படும் குறைபாடு
c. OCA3 - 3. தைரோசினேஸ் குறைபாடு
d. OCA4 - 4. ஆப்பிரிக்க சந்ததியினர் மற்றும் அமெரிக்க பூர்வகுடிகளில் பொதுவானது
Q31
மெலானின் தொகுப்பின் பொதுவான விளைபொருளான, பழுப்பு நிறம் கொண்டது
Q32
அல்காப்டோனூரியாவின் சிறப்புப் பண்பான ஆக்ரோனோசிஸ் (ochronosis) என்பது
Q33
GM1 கேங்லியோசைடை GM2 ஆக மாற்றும் நொதி எது?

இந்தப் பாடத்திற்கு மேலும்

புத்தகப் பயிற்சி வினாக்கள்18 பாடநூல் வினாக்கள் · விடையுடன் கூடுதல் வினாக்கள்15 கூடுதல் வினாக்கள் · விடையுடன் புத்தகப் பயிற்சித் தேர்வுபாடநூல் தொகுப்பில் உங்களைச் சோதியுங்கள் கூடுதல் வினாத் தேர்வுகூடுதல் தொகுப்பில் உங்களைச் சோதியுங்கள் படிப்புக் குறிப்புகள்கருத்துகளும் முறைகளும் சூத்திரத் தாள்அனைத்து முக்கிய சூத்திரங்கள்

வளர்சிதை மாற்ற மரபு வழிக் கோளாறுகள் — இந்தத் தேர்வைப் பற்றி

இந்த இலவச ஆன்லைன் பயிற்சித் தேர்வு 12ஆம் வகுப்பு உயிர் வேதியியல் (சமச்சீர் கல்வி) பாடத்திட்டத்தின் வளர்சிதை மாற்ற மரபு வழிக் கோளாறுகள் பகுதியை உள்ளடக்கியது. வினாக்களின் எண்ணிக்கையையும் விரும்பினால் நேர வரம்பையும் தேர்ந்தெடுத்து, விடையளித்துச் சமர்ப்பியுங்கள்; சரியான விடைகளும் விளக்கமும் இறுதியில் காட்டப்படும். இந்தத் தொகுப்பின் அனைத்து வினாக்களுக்குமான முழுத் தீர்வுகளுக்கு விடையுடன் கூடிய வினாக்கள் பக்கத்தைப் பாருங்கள்.

உயிர் வேதியியல் பாடத்தின் மற்ற பாடங்கள்

அனைத்தையும் பார்க்க
1 செல் சவ்வு 2 செரித்தல் 3 கார்போஹைட்ரேட்டுகளின் வளர்சிதை மாற்றம் 4 புரதங்களின் வளர்சிதை மாற்றம் 5 லிப்பிடுகளின் வளர்சிதை மாற்றம் 6 மூலக்கூறு உயிரியல் 8 உயிரியல் ஆக்ஸிஜனேற்றம் 9 நொதி வினைவேக மாற்றம் 10 நோய்த் தடைக்காப்பியல்