TN Online Testசமச்சீர் கல்விப் பயிற்சி

நிகழ்தகவு பரவல்கள்: ஒரு மதிப்பெண் ஆன்லைன் தேர்வு (12ஆம் வகுப்பு வணிகக் கணிதம் மற்றும் புள்ளியியல்)

இந்தப் பாடத்தைப் பகிரவும்: Telegram

எத்தனை வினாக்கள் வேண்டும் என்பதைத் தேர்ந்தெடுத்து, நேர வரம்பை அமைத்துத் தொடங்குங்கள். இறுதியில் உங்கள் மதிப்பெண்ணுடன், ஒவ்வொரு வினாவுக்கும் சரியான விடையும் விளக்கமும் கிடைக்கும். இலவசம், தமிழிலும் ஆங்கிலத்திலும் — 34 வினாக்கள் உள்ளன.

உங்கள் தேர்வை அமைக்கவும்

மீதமுள்ள நேரம்00:00
Q1
இயல்நிலைப் பரவலைக் கண்டுபிடித்தவர்
Q2
\( X \sim N(9, 81) \) எனில் திட்ட இயல்நிலைப் பரவலின் மாறி \( Z \) என்பது
Q3
\( Z \) என்பது திட்ட இயல்நிலை மாறி எனில், \( Z = -0.5 \) லிருந்து \( Z = -3.0 \) வரை அமையும் உருப்படிகளின் விகிதமானது (\( P(0 < Z < 0.5) = 0.1915 \), \( P(0 < Z < 3) = 0.49865 \) எனக் கொடுக்கப்பட்டுள்ளது)
Q4
\( X \sim N(\mu, \sigma^2) \), இயல்நிலை பரவலின் வளைவு மாற்றுப்புள்ளியில் மீப்பெரு நிகழ்தகவானது
Q5
சராசரியும் மாறுபாட்டளவையும் சமமாக இருக்கும் நிகழ்தகவுப் பரவலானது
Q6
பொம்மைகள் தயாரிக்கும் நிறுவனம் சராசரியாக 1% குறைபாடுள்ள தயாரிப்புகளை அளிக்கின்றது. கூறெடுத்தலில் 100 பொம்மைக்கு 3 பொம்மைகள் குறைபாடுள்ளவைகளாக இருப்பதற்கான நிகழ்தகவின் மதிப்பானது (\( e^{-1} = 0.3679 \) எனக் கொள்க)
Q7
\( f(x) = \left(\dfrac{1}{\sqrt{72\pi}}\right) e^{-\frac{(x-10)^2}{72}}, \; -\infty < x < \infty \) என்ற இயல்நிலை பரவலின் பண்பளவைகளானது
Q8
ஒரு உற்பத்தியாளர் தயாரிக்கும் மின் விசை மாற்றுக்குமிழ்களில் (Switches) 2 சதவீத தயாரிப்புகள் குறைபாடுள்ளவை என்று அறியப்படுகிறது. ஒரு பேழையில் இருக்கும் 50 மின்விசை மாற்றுக்குமிழ்களில் அதிகபட்சமாக 2 குறைபாடுகள் இருப்பதற்கான நிகழ்தகவானது
Q9
ஒவ்வொரு சோதனையிலும் வெற்றி என்பது தோல்விக்கான வாய்ப்பைப் போல் இருமடங்கு எனில் அடுத்து வரும் 6 முயற்சிகளில் குறைந்தபட்சம் நான்கு முறை வெற்றி பெறுவதற்கான வாய்ப்பானது
Q10
ஈருறுப்புப் பரவலின் பண்பளவைகளான \( B(n, p) \)-க்கு சராசரியின் மதிப்பு 4 மற்றும் மாறுபாடு \( \dfrac{4}{3} \) எனில் \( P(X \ge 5) \) இன் மதிப்பானது
Q11
சராசரியாக ஒரு தேர்வில் 40% மாணவர்கள் தோல்வி அடைகின்றனர். ஒரு குழுவிலுள்ள 6 மாணவர்களில் குறைந்தபட்சம் 4 நபர் வெற்றி அடைவதற்கான நிகழ்தகவானது
Q12
ஒரு குறிப்பிட்ட வழித்தடத்தில் செல்லும் விமானத்தில் பயணிக்கும் 40 சதவீத பயணிகள் தங்களுடன் எந்த ஒரு உடைமைகளையும் எடுத்துச் செல்வதில்லை. அவ்வழித்தடத்தில் செல்லும் விமானங்கள் 15 இருக்கைகள் கொண்டது எனில், உடைமைகள் இல்லாமல் பயணிக்கும் பயணிகளின் சராசரி எண்ணிக்கையானது
Q13
பின்வரும் கூற்றில் (கூற்றுகளில்) எவை இயல்நிலைப் பரவல் வளைவரை தொடர்புடையதாக இருக்கும்?
Q14
சராசரி 70 மற்றும் திட்டவிலக்கம் 10 எனக் கொண்ட இயல்நிலைப் பரவலை சமவாய்ப்பு மாறி \( X \) தழுவுகிறது. \( X \) ஆனது 72 மற்றும் 84-க்கு இடையில் உள்ளபோது அதன் நிகழ்தகவானது (\( P(0 < Z < 0.2) = 0.0793 \), \( P(0 < Z < 1.4) = 0.4192 \) எனக் கொள்க)
Q15
புதிதாக தேர்ச்சிபெற்ற பட்டயக் கணக்கரின் ஆரம்பகால வருடாந்திர ஊதியம் இயல்நிலைப் பரவலைப் பின்பற்றுகிறது. இதன் சராசரி ₹1,80,000 மற்றும் திட்டவிலக்கம் ₹10,000 ஆகும். சமவாய்ப்பு முறையில் தேர்ந்தெடுக்கப்படும் புதிதாக தேர்ச்சிபெற்ற பட்டயக் கணக்கர் வருடத்திற்கு ₹1,65,000 லிருந்து ₹1,75,000 வரை ஈட்டுவதற்கு உண்டான நிகழ்தகவானது (\( P(0 < Z < 0.5) = 0.1915 \), \( P(0 < Z < 1.5) = 0.4332 \) எனக் கொள்க)
Q16
புள்ளியியல் வகுப்பில் பயிலும் மாணவர்களின் உயரமானது இயல்நிலை பரவலைப் பின்பற்றி சராசரி 172 செ.மீ மற்றும் மாறுபாடு 25 பெற்றுள்ளது, எனில் 165 செ.மீ மற்றும் 181 செ.மீ-க்கும் இடைப்பட்ட உயரத்தில் இருக்கும் மாணவர்களின் விகிதமானது (\( P(0 < Z < 1.4) = 0.4192 \), \( P(0 < Z < 1.8) = 0.4641 \) எனக் கொள்க)
Q17
புள்ளிவிவர ஆய்வில் தொலைதூரத்தில் இருப்பவர்களின் உரையாடல்களின் நேரமானது இயல்நிலை பரவலைப் பின்பற்றி சராசரி 240 நொடிகளாகவும், திட்ட விலக்கம் 40 நொடிகளாகவும் உள்ளதாக அறியப்படுகிறது எனில், 180 நொடிகளுக்கும் குறைவாக உரையாடல் நேரத்தை முடிப்பவர்களின் விகிதமானது (\( P(0 < Z < 1.5) = 0.4332 \) எனக் கொள்க)
Q18
கேப் நகர மக்கள் தொகையில் 21 சதவீத மக்கள் DSTV எனும் செயற்கைகோள் தொலைக்காட்சி சேவைக்கு சந்தாதாரர்களாக தங்களை இணைத்துக் கொண்டனர். மாதிரிக்கூறாக நான்கு வீடுகளைத் தேர்ந்தெடுக்கும் பட்சத்தில் அனைத்து வீடுகளும் DSTV சேவையினைப் பயன்படுத்துவதற்கான நிகழ்தகவானது
Q19
திட்ட இயல்நிலை அட்டவணையைப் பயன்படுத்துகையில் \( z = 2.18 \)-க்கு வலப்புறம் மற்றும் \( z = -1.75 \)-க்கு இடதுபுறம் அமையும் மதிப்புகளுக்கான நிகழ்தகவுகளின் கூடுதலானது (\( P(0 < Z < 2.18) = 0.4854 \), \( P(0 < Z < 1.75) = 0.4599 \) எனக் கொள்க)
Q20
ஒரு மைத்தரை அச்சு இயந்திரம் (Inkjet Printer) முதல் முறை பழுது ஏற்படுவதற்கான காலஅளவு இயல்நிலைப் பரவலை ஒத்துள்ளது. இதன் சராசரி 1500 மணி நேரம் மற்றும் திட்டவிலக்கம் 200 மணி நேரம் எனில் 1000 மணி நேரத்திற்கு முன்பாக அவ்வியந்திரம் பழுதடைவதற்கான விகிதமானது (\( P(0 < Z < 2.5) = 0.4938 \) எனக் கொள்க)
Q21
புதிதாகப் பிறந்த குழந்தையின் எடையானது இயல்நிலைப் பரவலைப் பின்பற்றி சராசரியாக 3.2 கிலோ மற்றும் திட்டவிலக்கமாக 1.1 கிலோ பெற்றுள்ளது. சமவாய்ப்பு முறையில் தேர்ந்தெடுக்கப்படும் புதிதாகப் பிறந்த ஒரு குழந்தையின் எடை 2.0 கிலோவுக்கும் குறைவாக இருப்பதற்கான நிகழ்தகவானது (\( P(0 < Z < 1.09) = 0.3621 \) எனக் கொள்க)
Q22
ஒரு குறிப்பிட்ட வங்கியின் கடன் அட்டைதாரர்கள், தங்களது கடன் அட்டையைப் பயன்படுத்தி செலவு செய்யும் மாதாந்திர செலவு இயல்நிலைப் பரவலை ஒத்துள்ளது. சராசரி ₹1,295.00 மற்றும் திட்டவிலக்கம் ₹750.00 எனில், கடன் அட்டைதாரர்கள் தங்களின் கடன் அட்டையின் மூலம் மாதம் ₹1,500-க்கு மேலாக செலவழிக்கும் கடன் அட்டைதாரர்களின் விகிதாச்சாரமானது (\( P(0 < Z < 0.273) = 0.1076 \) எனக் கொள்க)
Q23
\( z \) ஒரு திட்ட இயல்நிலைமாறி என்க. \( z \)-க்கு வலப்புறம் உள்ள பரப்பு 0.8413 எனில், \( z \)-ன் மதிப்பானது (\( P(0 < Z < 1) = 0.3413 \) எனக் கொள்க)
Q24
\( z \)-க்கு இடப்புறம் அமையும் (\( z \) என்பது திட்ட இயல்நிலை பரவலை கொண்டுள்ளது) பரப்பு 0.0793 எனில் \( z \)-ன் மதிப்பானது (\( P(0 < Z < 1.41) = 0.4207 \) எனக் கொள்க)
Q25
\( P(Z > z) = 0.8508 \) எனில் \( z \)-ன் (\( z \) என்பது திட்ட இயல்நிலை பரவலை கொண்டுள்ளது) மதிப்பானது (\( P(0 < Z < 1.04) = 0.3508 \) எனக் கொள்க)
Q26
\( P(Z > z) = 0.5832 \) எனில் \( z \)-ன் (\( z \) என்பது திட்ட இயல்நிலை பரவலை கொண்டுள்ளது) மதிப்பானது (\( P(0 < Z < 0.21) = 0.0832 \) எனக் கொள்க)
Q27
ஈருறுப்புப் பரவலில் வெற்றிக்கான நிகழ்தகவானது தோல்விக்கான நிகழ்தகவைப் போல் இருமடங்கு எனில் நான்கு முயற்சிகளில் பூஜ்ஜிய வெற்றி பெறுவதற்கான நிகழ்தகவு
Q28
"ஓர் ஈருறுப்புப் பரவலின் சராசரி 12, அதனுடைய திட்டவிலக்கம் 4" என்ற கூற்றை ஆராய்க. பின்வருவனவற்றுள் சரியான முடிவு எது?
Q29
பிழையற்ற ஒரு நாணயம் 4 முறை சுண்டப்படுகின்றது. சரியாக 2 தலைகள் கிடைப்பதற்கான நிகழ்தகவு
Q30
\( X \) என்பது சராசரி 2 கொண்ட பாய்சான் பரவலைப் பின்பற்றினால் \( P(X = 2) \)-ன் மதிப்பு (\( e^{-2} = 0.1353 \) எனக் கொள்க)
Q31
பாய்சான் பரவல் ஈருறுப்புப் பரவலின் எல்லையாக இருப்பதற்கான நிபந்தனைகளில் பின்வருவனவற்றுள் எது இல்லை?
Q32
\( X \) என்பது சராசரி 50, திட்டவிலக்கம் 4 கொண்ட இயல்நிலை மாறி எனில் \( P(X > 58) \)-ன் மதிப்பு (\( P(0 < Z < 2) = 0.4772 \) எனக் கொள்க)
Q33
ஈருறுப்புப் பரவல் பற்றிய பின்வரும் கூற்றுகளைக் கருதுக:
1. \( p = q = 0.5 \) என இருக்கும்பொழுது ஈருறுப்புப் பரவல் சமச்சீரானது.
2. \( p > 0.5 \) எனில், ஈருறுப்புப் பரவல் மிகை கோட்ட அளவையாக இருக்கும்.
3. இதன் மாறுபாட்டளவை சராசரியைவிடக் குறைவு.
இவற்றுள் சரியானவை எவை?
Q34
1,000 மாணவர்களின் மதிப்பெண்கள் சராசரி 100, திட்டவிலக்கம் 10 கொண்ட இயல்நிலைப் பரவலைப் பின்பற்றுகின்றன. இயல்நிலை வளைவரையின் பரப்புப் பண்பின்படி 80-க்கும் 120-க்கும் இடையில் மதிப்பெண் பெறும் மாணவர்களின் விகிதம்

இந்தப் பாடத்திற்கு மேலும்

புத்தகப் பயிற்சி வினாக்கள்27 பாடநூல் வினாக்கள் · விடையுடன் கூடுதல் வினாக்கள்7 கூடுதல் வினாக்கள் · விடையுடன் புத்தகப் பயிற்சித் தேர்வுபாடநூல் தொகுப்பில் உங்களைச் சோதியுங்கள் கூடுதல் வினாத் தேர்வுகூடுதல் தொகுப்பில் உங்களைச் சோதியுங்கள் படிப்புக் குறிப்புகள்கருத்துகளும் முறைகளும் சூத்திரத் தாள்அனைத்து முக்கிய சூத்திரங்கள்

நிகழ்தகவு பரவல்கள் — இந்தத் தேர்வைப் பற்றி

இந்த இலவச ஆன்லைன் பயிற்சித் தேர்வு 12ஆம் வகுப்பு வணிகக் கணிதம் மற்றும் புள்ளியியல் (சமச்சீர் கல்வி) பாடத்திட்டத்தின் நிகழ்தகவு பரவல்கள் பகுதியை உள்ளடக்கியது. வினாக்களின் எண்ணிக்கையையும் விரும்பினால் நேர வரம்பையும் தேர்ந்தெடுத்து, விடையளித்துச் சமர்ப்பியுங்கள்; சரியான விடைகளும் விளக்கமும் இறுதியில் காட்டப்படும். இந்தத் தொகுப்பின் அனைத்து வினாக்களுக்குமான முழுத் தீர்வுகளுக்கு விடையுடன் கூடிய வினாக்கள் பக்கத்தைப் பாருங்கள்.

வணிகக் கணிதம் மற்றும் புள்ளியியல் பாடத்தின் மற்ற பாடங்கள்

அனைத்தையும் பார்க்க
1 அணிகள் மற்றும் அணிக்கோவைகளின் பயன்பாடுகள் 2 தொகை நுண்கணிதம் – I 3 தொகை நுண்கணிதம் – II 4 வகைக்கெழுச் சமன்பாடுகள் 5 எண்ணியல் முறைகள் 6 சமவாய்ப்பு மாறி மற்றும் கணக்கியல் எதிர்பார்த்தல் 8 கூறெடுப்பு முறைகளும் புள்ளியியல் அனுமானித்தலும் 9 பயன்பாட்டுப் புள்ளியியல் 10 செயல்முறைகள் ஆராய்ச்சி