உணவு தயாரிக்கப்பட்டு உண்ணும்போது எந்தவிதமான தீங்கும் ஏற்படுத்தாது என்பதற்கான உத்தரவாதமே உணவுப் பாதுகாப்பு.
தீங்கு விளைவிக்கக்கூடிய பொருட்கள் நீக்கப்பட்ட அல்லது குறைக்கப்பட்ட நிலை, அரசு பரிந்துரைத்த சுகாதாரமான முறையில் உணவு தயாரிக்கப்படும் நிலை ஆகியவற்றால் இது நிர்ணயிக்கப்படுகிறது.
உணவைத் தேர்ந்தெடுத்தல்
உணவு வகை, அளவுகளை நிர்ணயிக்க தினசரி உணவு வழிகாட்டி உதவுகிறது.
கிடைக்கக்கூடிய நிதி / பணவசதி: அதிக வருமானம் உள்ளவர்களுக்குத் தேர்வு அதிகம்.
ஊட்டச்சத்து தேவைகள்: வயது, செயல்பாடு, ஆரோக்கிய நிலை, பாலினம், கர்ப்பகாலம், பாலூட்டும் காலம்.
விளம்பரங்கள்: தொலைக்காட்சி, வானொலி, பத்திரிகை, செய்தித்தாள், சுவரொட்டிகள்; பிரபலமான நபர்களின் ஒப்புதல்.
விருப்பு மற்றும் வெறுப்புகள்: நிறம், வாசனை, தோற்றம், தன்மை.
உணவுகளை சேமிக்கும் முறைகள்
சேமிப்பு முறை
வெப்பநிலை
பயன்
உலர்ந்த சேமிப்பு
20 முதல் 25 C
தானியங்கள், பருப்பு வகைகள், சர்க்கரை, மசாலாப் பொருட்கள், டப்பா உணவுகள், எண்ணெய்
குளிர் பதனப்படுத்தும் சேமிப்பு
0 முதல் 10 C
3-5 நாட்கள்; மூடி வைக்க வேண்டும்
குளிர் சேமிப்பு (குளிர்ச்சி மிகுந்த அறை)
0 முதல் -5 C
நொதிகளின் செயல்பாடு தடுப்பு; காய்கறி, பழங்கள் ஒரு மாதம்
நச்சு: முன்பே உருவான பாக்டீரியா நச்சுகள், விஷ இரசாயனங்கள், இயற்கை நச்சுகள்.
சால்மோனெல்லா: இரைப்பை குடல் அழற்சி; 12-26 மணி நேரத்தில் அறிகுறிகள்; 6-8 நாட்களில் குணம்; இறைச்சி, பால், மீன், முட்டை.
ஸ்டெஃபிலோகாக்கஸ் ஆரியஸ்: புற நச்சுகள்; ஓரிரு நாட்கள்; கிரீம், கஸ்டர்டு, கோழி இறைச்சி.
பாட்டுலிசம்: க்ளாஸ்ட்ரீடியம் பாட்டுலினம்; கண் விழி புடைத்தல்; 4-8 நாட்களில் சுவாச அல்லது இருதய செயலிழப்பால் இறப்பு; டப்பா உணவுகள்.
HACCP படிகள்
ஆபத்துக்கள் குறித்து பகுப்பாய்வு செய்தல்
முக்கியமான கட்டுப்பாட்டு நிலைகளை அடையாளம் காணுதல்
முக்கியமான வரம்புகளுடன் தடுப்பு நடவடிக்கைகள்
கண்காணிப்பு நடைமுறைகள்
சரியான செயல்கள்
சரிபார்ப்பு நடைமுறைகள்
பயனுள்ள பதிவுகளை வைத்திருத்தல்
பாதுகாப்பான உணவிற்கான ஐந்து குறிப்புகள்
சுத்தமாக வைத்துக்கொள்; சமைக்கப்படாத மற்றும் சமைத்த உணவை பிரித்து வை; முழுமையாக சமை (சூப்புகள் 70 C); பாதுகாப்பான வெப்பநிலை (2 மணி நேரத்திற்கு மேல் அறை வெப்பநிலையில் கூடாது, 5 Cக்கு குறைவாக, 60 Cக்கு அதிகமாக); பாதுகாப்பான நீர் மற்றும் மூலப் பொருட்கள்.