உடற்பருமன் மற்றும் குறை எடைக்கான உணவுத்திட்டம் - பாடக் குறிப்புகள்
பாடச் சுருக்கம்
எலும்புகள், தசைகள், உறுப்புகள், உடல்திரவங்கள் மற்றும் கொழுப்புத்திசுக்களின் கூட்டமைப்பே உடல் எடை. நரம்பு, ஊக்குநீர், வேதிவினைகளின் செயல்பாட்டால் உட்கிரகிக்கப்படும் மற்றும் செலவிடப்படும் சக்தி சமநிலையில் வைக்கப்படுகிறது. உட்கொள்ளல் அதிகமானால் எடை அதிகரிப்பு; செலவிடுதல் அதிகமானால் எடை குறைப்பு. உயர்நடுத்தர வகுப்பில் உள்ள 40-50 மில்லியன் இந்தியர்களின் உடல்எடை அதிகமாக உள்ளது.
உடற்பருமன்
- அதிகப்படியான கொழுப்பு சேர்ந்து விரும்பத்தக்க உடல் எடையை விட 20 சதவிகிதம் அதிகரிக்கும் நிலை.
- WHO: உடல் ஆரோக்கியத்தில் குறைபாட்டை ஏற்படுத்தக்கூடிய அசாதாரணமான அல்லது அதிகப்படியான கொழுப்பு படிதல்.
நோய் காரணிகள்
- பரம்பரை: மரபணுக்களின் பங்கு 40-70%.
- உடற்செயல்பாடு: இலகுவான உடல் உழைப்பு; 35 வயதிற்கு மேற்பட்டவர்களிடையே பொதுவானது.
- உணவுப்பழக்கம்: அதிக கலோரி உணவு, வேகமாக உண்ணுதல், இடையில் கொறித்தல்.
- நாளமில்லாசுரப்பிக் காரணிகள்: தைராய்டு குறைசுரப்பு, குஸ்லிங் நோய்க்குறி, கருப்பைக்கட்டிகள்.
- உளவியல் காரணிகள்: தனிமை, வெறுப்பு, மனஅழுத்தம் கொண்டவர்கள் துரித உணவு, நொறுக்குத்தீனியில் ஆறுதல் காண்கின்றனர்.
- தாராளமாக கிடைக்கும் உணவுகள்: கலோரி நிறைந்த, ஊட்டச்சத்து குறைந்த நொறுக்குத்தீனி.
உடல் எடையைக் கணக்கிடுதல்
| அளவுகோல் | மதிப்பு |
|---|---|
| அதிக எடை | சரியான எடையிலிருந்து 10% அதிகம் |
| பருமன் | 20% அதிகம் |
| உடல் நிறை அலகு (BMI) | உடல்எடை (கி.கி) / உயரம்² (மீ) |
| இடுப்புச்சுற்றளவு | ஆண் 94 செ.மீ., பெண் 80 செ.மீ. மற்றும் மேல்: ஆபத்து அதிகம் |
| இயல்பான இடை–இடுப்பு விகிதம் | 0.7 |
| உடல் பருமன் குறியீடு | WHR ஆண் 1.0க்கு மேல், பெண் 0.8க்கு மேல் |
| புரோக்காவின் குறியீடு | சரியான உடல் எடை = உயரம் (செ.மீ) – 100 |
| எடையின் அளவு | BMI |
|---|---|
| எடை குறைவு | 18.5க்கு கீழ் |
| சாதாரண எடை | 18.5 – 24.9 |
| அதிக எடை | 25 – 29.9 |
| உடல் பருமன் தரம் 1 | 30 – 34.9 (சுயமாக நிர்வகிக்கக்கூடியது) |
| உடல் பருமன் தரம் 2 | 35 – 39.9 (மருத்துவம், திட்ட உணவு அவசியம்) |
| உடல் பருமன் தரம் 3 | 40 மற்றும் மேல் (ஆர்த்ரோஸ்கிளிரோசிஸ், உளவியல் பாதிப்பு) |
சிக்கல்கள்
- இதயநோய் மற்றும் பக்கவாதம்.
- இரண்டாம்வகை நீரிழிவு: இன்சுலின் எதிர்ப்பு, இன்சுலின் மிகைப்பு.
- பித்தப்பை நோய்: பித்த நீருடன் கொலஸ்ட்ரால் அதிகம் சேர்ந்து பித்தக்கல்.
- புற்றுநோய்: ஆண்களுக்கு பெருங்குடல், மலக்குடல், ப்ரோஸ்டேட்; பெண்களுக்கு மார்பகம், அண்டகம், கருப்பை அகப்படலம், கருப்பைவாய்.
- மலட்டுத்தன்மை, மாதவிடாய் கோளாறுகள், அண்டகக்கட்டி.
- தூக்கத்தில் மூச்சுத்திணறல்: நேராக படுக்கும் நிலையில் மேல்சுவாசப் பாதை குறுகுதல்.
- முதுகுவலி, கீல்வாதம்; தாழ்வுமனப்பான்மை, மனஅழுத்தம்.
உடல்பருமன் மேலாண்மை
- உணவுமுறை மாற்றங்கள்
- உடல்செயல்பாடு
- வாழ்க்கைமுறை மாற்றங்கள்
திட்டஉணவு கோட்பாடுகள்
| ஊட்டச்சத்து | வழிகாட்டுதல் |
|---|---|
| சக்தி | குறைந்த கலோரி, எதிர்மறை சக்தி சமநிலை: இலகுவான முறைக்கு 20, மிதமான முறைக்கு 25 கி.க./கி.கி. சரியான உடல் எடை |
| கார்போஹைட்ரேட் | அதிக கிளைசீமிக் குறியீடு உடைய சுத்திகரிக்கப்பட்ட தானியங்கள், உருளைக்கிழங்கு, இனிப்பூட்டப்பட்ட பானங்கள் குறைக்க; முழுதானியம், பழங்கள், காய்கறிகள் நல்லது |
| புரதம் | 1 கி/கி.கி. உடல் எடை; நிறைவான உணர்வு; பன்றி, பதப்படுத்தப்பட்ட இறைச்சிக்கு மாற்றாக மீன், கோழி |
| கொழுப்பு | கட்டுப்படுத்த வேண்டும்; ஒற்றை, கூட்டு செறிவுறாத கொழுப்பு அமிலங்கள் நிறைந்த தாவர எண்ணெய் |
| வைட்டமின்கள் | பழங்கள், காய்கறிகள் நீரில் கரையும் வைட்டமின் குறைபாட்டைத் தவிர்க்கும் |
| தாதுஉப்புக்கள் | சோடியம் திரவத்தைத் தக்கவைப்பதால் உப்பு கட்டுப்பாடு |
| திரவம் | நீர், கலோரி குறைந்த திரவங்கள் அதிகம்; உணவுக்கு முன் ஒரு குவளை தண்ணீர் |
| நார்ச்சத்து | நிறைவான உணர்வு, செரிமானம் தாமதம், குடல் இயக்கம் சீராகும் |
எடை குறைப்பிற்கு உதவும் சிற்றுண்டிகள்: கைப்பிடி அளவு கொட்டைகள், பழங்களுடன் சர்க்கரை சேர்க்காத தயிர், காய்கறி கலவை, முளை கட்டிய தானியக் கலவை, வறுத்த பூசணி விதைகள், வறுத்த கொண்டைக்கடலை.
உடல்செயல்பாடு
உடற்பயிற்சி இருதயநோய், இன்சுலின் சாராத நீரிழிவு, உடல்பருமன், எலும்பு நுண்துளை, புற்றுநோய் ஆபத்துகளைக் குறைக்கிறது. இரத்தஅழுத்தம், இதய வலி, உடல் கொழுப்பைக் குறைக்கிறது; HDL கொழுப்பு, எலும்பு அடர்த்தி, வாழ்நாளை அதிகரிக்கிறது; இதயத்தைப் பலமாக்குகிறது.
வாழ்க்கை முறை மாற்றம்
- சீரான உணவு நேரம்; உண்ணும்போது படிப்பதோ தொலைக்காட்சி பார்ப்பதோ கூடாது.
- ஆரோக்கிய சிற்றுண்டிகள்; கொறிக்கும் பழக்கம் தவிர்; மெதுவாக மென்று உண்ணுதல்.
- தினசரி உடற்பயிற்சி; மனஅழுத்தத்தை யோகா, தியானம் மூலம் எதிர்கொள்ளுதல்.
- மது, புகைப்பிடித்தல் தவிர்; 6-8 மணிநேர உறக்கம்.
- ஒரு நாளைக்கு 6 முறை சிறு அளவில் உண்ணுதல்; காலை உணவு அரசனைப்போல் (அளவில் அல்ல, தரத்தில்); வாரத்தில் 4-5 முறை உடற்பயிற்சி.
துரித உணவு: ஏற்கனவே தயாரிக்கப்பட்டு, கட்டப்பட்ட ஊட்டச்சத்து குறைந்த உணவுகள் — சிப்ஸ், மிட்டாய், சுவிங்கம், சாக்லேட், குக்கீகள், கேக், மென்பானங்கள், சர்க்கரை, வெண்ணெய், பொறிக்கப்பட்ட துரித உணவு.
குறைந்த உடல் எடை
BMI 18.5க்கு குறைவு அல்லது வயது, உயரத்திற்கு ஏற்ற சராசரி எடையை விட 15 முதல் 20% குறைவு; எதிர்மறை ஆற்றல் இருப்பு.
காரணங்கள்
- மரபணுக்கள்: தாய் மெலிவானவராக இருந்தால் குழந்தை மெலிவாக இருக்க 75% வாய்ப்பு.
- உணவுக்காரணிகள்: உணவுத் தேர்வில் குறைபாடு, சீரற்ற பழக்கம், அறியாமை, வாங்கும் திறமை குறைவு.
- உடல் செயல்பாடு, உளவியல் காரணி: பதற்றமான, அதீத சுறுசுறுப்பான நபர்கள்.
- நோய் நிலைகள்: தொற்று, காய்ச்சல், இரைப்பை குடல் பிரச்சனைகள், தைராய்டுமிகை சுரப்பு, மருந்துகள், காசநோய், நீரிழிவு, புற்றுநோய்.
சிக்கல்கள்
- குறைந்த நோய் எதிர்ப்பு சக்தி.
- மகளிர் தொடர்புடைய பிரச்சனைகள்: மாதவிடாய் சுழற்சி நிற்றல், குழந்தையின்மை, குறைந்த பிறப்பு எடை குழந்தைகள்.
- எலும்பு நுண்துளை.
உணவுத்திட்டத்தின் கொள்கைகள்
| ஊட்டச்சத்து | வழிகாட்டுதல் |
|---|---|
| சக்தி | தினசரி தேவையை விட 500-1000 கி.க. கூடுதல்; வாரம் அரை முதல் ஒரு கிலோ; 30-35 கி.க./கி.கி. |
| கார்போஹைட்ரேட் | எளிதில் ஜீரணிக்கக்கூடியது; நார்ச்சத்து குறைவு; உருளைக்கிழங்கு, கருணைக்கிழங்கு |
| புரதம் | 1.2 கி/கி.கி./தினம்; தாவர, விலங்கு புரதம் |
| கொழுப்பு | சீராக அதிகரிக்க (வயிற்றுப்போக்கு தவிர்க்க); 30% கலோரி செறிவுறா கொழுப்பிலிருந்து |
| வைட்டமின்கள், தாதுஉப்புக்கள் | புதிய பழங்கள், காய்கறிகள்; துணை நிறைவுகள் தேவைப்படாது |
| திரவங்கள் | உணவிற்குப் பின்; மில்க்ஷேக், முட்டைநாக் |
| உடற்பயிற்சி | திறந்தவெளி உடற்பயிற்சி பசியைத் தூண்டும் |