TN Online Testசமச்சீர் கல்விப் பயிற்சி

12ஆம் வகுப்பு உயிரியல் – விலங்கியல் வினாத்தாள் மே 2022

வினாத்தாள் குறியீடு 5927 35 மதிப்பெண்கள் 180 நிமிடங்கள்

மே 2022 பொதுத் தேர்வின் முழு வினாத்தாள் அச்சிட்டபடியே: ஒவ்வொரு வினாவும் தமிழ், ஆங்கிலத்தில். PDF ஐப் பதிவிறக்குங்கள், அல்லது பகுதி I ஐ இலவச ஆன்லைன் தேர்வாக எழுதுங்கள்.

உயிரியல் – விலங்கியல் / Bio-Zoologyமே 2022 · May 2022

பிரிவு – 1 / SECTION – 1

பகுதி – II (உயிரி-விலங்கியல்) (மதிப்பெண்கள் : 35). குறிப்பு : (i) அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும். (ii) கொடுக்கப்பட்டுள்ள மாற்று விடைகளில் மிகவும் ஏற்புடைய விடையைத் தேர்ந்தெடுத்துக் குறியீட்டுடன் விடையினையும் சேர்த்து எழுதவும்.
PART – II (BIO-ZOOLOGY) (Marks : 35). Note : (i) Answer all the questions. (ii) Choose the most appropriate answer from the given four alternatives and write the option code and the corresponding answer.
1.
தூது RNA மூலக்கூறு எம்முறையில் உருவாக்கப்படுகிறது ?
(அ) நகலாக்கம்
(ஆ) இரட்டிப்பாதல்
(இ) மொழி பெயர்த்தல்
(ஈ) படியெடுத்தல்
A mRNA molecule is produced by :
(a) Duplication
(b) Replication
(c) Translation
(d) Transcription
விடையைக் காட்டு ▾ (ஈ) / (d) Transcription · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →
1 mark
2.
சைக்ளோஸ்போரின் -A என்ற நோய்த்தடுப்பாற்றல் ஒடுக்கு மருந்து எதிலிருந்து உற்பத்தி செய்யப்படுகின்றது ?
(அ) பெனிசிலியம் நொடேட்டம்
(ஆ) அஸ்பர்ஜில்லஸ் நைஜர்
(இ) டிரைகோடெர்மா பாலிஸ்போரம்
(ஈ) மொனாஸ்கஸ் பர்பூரியஸ்
Cyclosporin-A is an immunosuppressive drug produced from :
(a) Penicillium notatum
(b) Aspergillus niger
(c) Trichoderma polysporum
(d) Monascus purpureus
விடையைக் காட்டு ▾ (இ) / (c) Trichoderma polysporum · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →
1 mark
3.
எந்தக் காலம் 'மீன்களின் காலம்' என அழைக்கப்படுகிறது ?
(அ) டிவோனியன்
(ஆ) பெர்மியன்
(இ) ஆர்டோவிசியன்
(ஈ) டிரையாசிக்
Which period was called as "Age of fishes" ?
(a) Devonian
(b) Permian
(c) Ordovician
(d) Triassic
விடையைக் காட்டு ▾ (அ) / (a) Devonian · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →
1 mark
4.
சிற்றினங்களுக்கிடையே போட்டி காரணமாக ஏற்படுவது :
(அ) தொந்தரவு வாழ்க்கை
(ஆ) உயிரின மறைவு
(இ) கூட்டுயிரி வாழ்க்கை
(ஈ) திடீர் மாற்றம்
Competition between species leads to :
(a) Amensalism
(b) Extinction
(c) Symbiosis
(d) Mutation
விடையைக் காட்டு ▾ (ஆ) / (b) Extinction · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →
1 mark
5.
வாழிட சீரழிவினால் மிகக்கடுமையான பாதிப்புகளுக்கு உள்ளாகி அழியும் நிலையில் உள்ள விலங்கினம் எது ?
(அ) இருவாழ்விகள்
(ஆ) பாலூட்டிகள்
(இ) முட்தோலிகள்
(ஈ) பறவைகள்
Which one of the following are at high risk extinction due to habitat destruction ?
(a) Amphibians
(b) Mammals
(c) Echinoderms
(d) Birds
விடையைக் காட்டு ▾ (அ) / (a) Amphibians · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →
1 mark
6.
கீழ்க்கண்ட எந்த புறத்தோற்ற சந்ததி பெற்றோர்களின் மரபு வகையான IᴬIᴼ × IᴬIᴮ களுக்கிடையே பிறக்க சாத்தியமில்லை ?
(அ) A
(ஆ) AB
(இ) B
(ஈ) O
Which of the following phenotypes is not possible in the progeny of the parental genotypic combination IᴬIᴼ × IᴬIᴮ ?
(a) A
(b) AB
(c) B
(d) O
விடையைக் காட்டு ▾ (ஈ) / (d) O · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →
1 mark
7.
பாலிமரேஸ் சங்கிலி வினை வெப்பநிலை மாறுபாட்டால் 3 தனித்தனி நிலைகளில் தொடர்கின்றது. அதன் வரிசை :
(அ) இணைப்பு இழைபதப்படுத்துதல், உற்பத்தி, இயல்பு திரிபு
(ஆ) இயல்பு திரிபு, இணைப்பு இழைபதப்படுத்துதல், உற்பத்தி
(இ) இயல்பு திரிபு, உற்பத்தி, இணைப்பு இழைபதப்படுத்துதல்
(ஈ) உற்பத்தி, இணைப்பு இழைபதப்படுத்துதல், இயல்பு திரிபு
PCR proceeds in three distinct steps governed by temperature, they are in order of :
(a) Annealing, Synthesis, Denaturation
(b) Denaturation, Annealing, Synthesis
(c) Denaturation, Synthesis, Annealing
(d) Synthesis, Annealing, Denaturation
விடையைக் காட்டு ▾ (ஆ) / (b) Denaturation, Annealing, Synthesis · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →
1 mark
8.
முதிர்ந்த விந்து செல்கள் சேகரிக்கப்படும் இடம் :
(அ) விந்தக மேல் சுருள் குழல்
(ஆ) விந்தக நுண் குழல்கள்
(இ) விந்துப்பை
(ஈ) விந்து நாளம்
The matured sperms are stored in the ________.
(a) Epididymis
(b) Seminiferous tubules
(c) Seminal vesicle
(d) Vas deferens
விடையைக் காட்டு ▾ (அ) / (a) Epididymis · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →
1 mark

பிரிவு – 2 / SECTION – 2

குறிப்பு : ஏதேனும் நான்கு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்கவும்.
Note : Answer any four of the following questions.
9.
கன்னி இனப்பெருக்கம் என்றால் என்ன ? எடுத்துக்காட்டு தருக.
What is parthenogenesis ? Give example.
2 marks
10.
வாடகைத் தாய்மை என்றால் என்ன ?
What is surrogacy ?
2 marks
11.
குறியீட்டு இழையிலிருந்து வார்ப்புரு இழையை வேறுபடுத்துக.
Differentiate template strand from coding strand.
2 marks
12.
லாமார்க்கின் பெறப்பட்ட பண்புக் கோட்பாட்டினை தவறென நிரூபித்தவர் யார் ? எவ்வாறு நிரூபித்தார் ?
Who disproved Lamarck's theory of acquired characters ? How ?
2 marks
13.
யானைக்கால் நோயின் அறிகுறிகளை எழுதுக.
Write the symptoms of filariasis.
2 marks
14.
மரபணு சிகிச்சை என்றால் என்ன ?
What does gene therapy mean ?
2 marks

பிரிவு – 3 / SECTION – 3

குறிப்பு : கீழ்க்காணும் வினாக்களில் ஏதேனும் மூன்று வினாக்களுக்கு விடையளிக்கவும். வினா எண் 19-க்கு கட்டாயமாக விடையளிக்கவும்.
Note : Answer any three of the following questions. Q.No. 19 is compulsory.
15.
கருக்கொலை மற்றும் சிசுக்கொலை வேறுபடுத்துக.
Differentiate foeticide from infanticide.
3 marks
16.
சுயதடைகாப்பு நோய் என்பது திசை மாற்றப்பட்ட தடைகாப்பு துலங்கலாகும் - நியாயப்படுத்துக.
Autoimmune disease is a misdirected immunity response. Justify.
3 marks
17.
உயிர் எதிர்ப்பொருள் எதிர்ப்புத்திறன் எப்பொழுது உருவாகிறது ?
When does antibiotic resistance develop ?
3 marks
18.
இறப்பு வீதத்தை பிறப்பு வீதத்திலிருந்து வேறுபடுத்துக.
Differentiate Natality from Mortality.
3 marks
19.
XY குரோமோசோம் வகை பால் நிர்ணயித்தலில் ஆண் உயிரிகள் ஒரு X குரோமோசோமையும் பெண் உயிரிகள் இரண்டு X குரோமோசோம்களையும் கொண்டுள்ளன. பாலினத்திற்கு இடையேயான இந்த அளவீட்டு வேறுபாட்டை உயிரினம் எப்படி ஈடு செய்கிறது ?
In the XY chromosomal system of sex determination, males have only one ‘X’ chromosome, whereas females have two. How does the organism compensate for this dosage differences between the sexes ?
3 marks

பிரிவு – 4 / SECTION – 4

குறிப்பு : பின்வரும் வினாக்களுக்கு விடையளிக்கவும்.
Note : Answer the following questions.
20.
(அ)மனித அண்ட செல்லின் அமைப்பைப் படத்துடன் விவரிக்கவும்.
(a)Explain the structure of Human Ovum with a neat labelled diagram.
அல்லது / OR
(ஆ)மனித மரபணு திட்டத்தின் சிறப்பியல்புகள் யாவை ?
(b)Write the salient features of Human Genome Project.
5 marks
21.
(அ)இம்யூனோகுளோபுலின் அமைப்பை தகுந்த படத்துடன் விளக்குக.
(a)Explain the structure of immunoglobulin with suitable diagram.
அல்லது / OR
(ஆ)கதிரியக்கக் கழிவு மேலாண்மை குறித்து கட்டுரை வரைக.
(b)Write an essay on radioactive waste management.
5 marks
⬇️ PDF பதிவிறக்கம் அனைத்து உயிரியல் – விலங்கியல் வினாத்தாள்கள்