TN Online Testசமச்சீர் கல்விப் பயிற்சி

12ஆம் வகுப்பு தாவரவியல்: முந்தைய ஆண்டு கலப்புத் தேர்வு

அனைத்து 4 வினாத்தாள்களின் (2020–2025) வினாக்களும் ஒரே தேர்வில். ஒவ்வொரு வினாவிலும் அது இடம்பெற்ற வினாத்தாள் காட்டப்படுவதால், எந்த ஆண்டில் என்ன கேட்கப்பட்டது என்பதையும் அறியலாம்.

உங்கள் தேர்வை அமைக்கவும்

அனைத்து முந்தைய ஆண்டு வினாத்தாள்கள்
மீதமுள்ள நேரம்00:00
Q1 மார்ச் 2025
வெளியிலிருந்து இறக்குமதி செய்யப்படும் இரகங்கள் மற்றும் தாவரங்களைப் புதிய சூழலுக்குப் பழக்கப்படுத்துவது :
Q2 மார்ச் 2025
'X' எனும் தாவரம் சிறிய மலர், குன்றிய பூவிதழ், சுழல் இணைப்புடைய மகரந்தப்பை கொண்டுள்ளது. இம்மலரின் மகரந்தச் சேர்க்கைக்கு சாத்தியமான முகவர் எது ?
Q3 மார்ச் 2025
Ti பிளாஸ்மிட் எந்த பாக்டீரியத்தில் காணப்படுகிறது ?
Q4 மார்ச் 2025
டாமெரிண்டஸ் இண்டிகாவின் பிறப்பிடம் :
Q5 மார்ச் 2025
சில தடைக்கட்டு (ரெஸ்ட்ரிக்சன்) நொதிகளினால் DNA -வின் பின்வரும் எந்த ஒரு முன்பின் ஒத்த (பாலியாண்ட்ரோம்) தொடர்வரிசையின் மையத்தில் எளிதாக துண்டிக்கிறது ?
Q6 மார்ச் 2025
புதிய உலகிலிருந்து உருவானதும், வளர்க்கப்பட்டதுமான ஒரே தானியம் :
Q7 மார்ச் 2025
வைரஸ் அற்ற தாவரங்கள் __________ -ல் இருந்து உருவாக்கப்படுகின்றன.
Q8 மார்ச் 2025
"கேமீட்கள் எப்பொழுதும் கலப்புயிர்களாக இருப்பதில்லை" எனும் கூற்று எதனுடன் தொடர்புடையது ?
Q9 மார்ச் 2025
தாவரங்களின் ஒளிச்சேர்க்கைக்கு மட்டுமே பயன்படுத்தப்படும் சூரிய ஒளி அளவு :
Q10 மார்ச் 2025
கீழ்கண்ட எந்த மண்ணின் நீர் தாவரங்களுக்குப் பயன்படுகிறது ?
Q11 மார்ச் 2025
பட்டியல் - I ஐ பட்டியல் - II உடன் பொருத்துக. (1) இருமடியத்துடன் ஒரு இணை குரோமோசோம்கள் அதிகமாக காணப்படுவது - (i) மோனோசோமி (2) இருமடியத்துடன் ஒரு குரோமோசோம் அதிகமாக காணப்படுவது - (ii) டெட்ராசோமி (3) இருமடியத்தில் ஒரு குரோமோசோம் குறைவாக காணப்படுவது - (iii) ட்ரைசோமி (4) இருமடியத்திலிருந்து இரண்டு தனித்தனி குரோமோசோம் குறைவாக காணப்படுவது - (iv) இரட்டை மோனோசோமி
Q12 மார்ச் 2025
சரியாக பொருந்திய இணையைத் தேர்வு செய்க.
Q13 மார்ச் 2025
தொடக்க குறியன் என்பது :
Q14 மார்ச் 2025
பின்வருவனவற்றுள் எது பல்கூட்டு பாரம்பரியத்திற்கு உதாரணமாகும் ?
Q15 மார்ச் 2024
முளைவேர் உறை காணப்படும் தாவரம் :
Q16 மார்ச் 2024
கீழ்க்கண்டவற்றைப் பொருத்துக : (1) முழு ஆக்குத்திறன் - (i) முதிர்ந்த செல் மீண்டும் ஆக்குத் திசுவாக மாறுதல் (2) வேறுபாடிழத்தல் - (ii) செல்களின் உயிரி வேதிய மற்றும் அமைப்பிய மாற்றங்கள் (3) பிரிகூறு - (iii) முழுத் தாவரமாக வளரக் கூடிய உயிருள்ள செல்களின் பண்பு (4) வேறுபாடுறுதல் - (iv) வளர்ப்பு ஊடகத்திற்கு தேர்ந்தெடுத்த தாவரத் திசுவை மாற்றுதல்
Q17 மார்ச் 2024
கீழ்க்கண்டவைகளில் எவை சூழல் மண்டல சேவைகளில் ஒழுங்குபடுத்தும் சேவையல்ல ? (i) மரபணு வளங்கள் (ii) பொழுதுபோக்கு மற்றும் அழகுசார் மதிப்புகள் (iii) ஊடுருவல் எதிர்ப்பு (iv) காலநிலை கட்டுப்பாடு
Q18 மார்ச் 2024
படியெடுத்தலின்போது இன்ட்ரான்களை வெளியேற்றியும், எக்சான்களை பிணைக்கும் செயலாக்கம் __________ எனப்படும்.
Q19 மார்ச் 2024
பெரும்பாலான தாவரங்களில் மகரந்தத்துகள்கள் வெளியேறும் நிலை :
Q20 மார்ச் 2024
கீழ்க்கண்ட கூற்றுகளில் காணப்படும் கோடிட்ட இடங்களை சரியான விடைகளைக் கொண்டு பூர்த்தி செய்க. (i) மண்ணில் காணப்படும் மொத்த நீர் __________. (ii) தாவரங்களுக்குப் பயன்படாத நீர் __________. (iii) தாவரங்களுக்குப் பயன்படும் நீர் __________.
Q21 மார்ச் 2024
கூற்று : மஞ்சள் பல்வேறு புற்றுநோய்களை எதிர்க்கிறது. காரணம் : மஞ்சளில் குர்குமின் என்ற ஆண்டி ஆக்ஸிடெண்ட் உள்ளது.
Q22 மார்ச் 2024
மெண்டலின் காலத்தில் எந்தச் சோதனையில் F₁ சந்ததியின் இரு பெற்றோரின் பண்புகளையும் வெளிப்படுத்தும் ?
Q23 மார்ச் 2024
குட்டை மரபணு உடைய கோதுமை :
Q24 மார்ச் 2024
இருபண்பு சோதனைக் கலப்பு விகிதம் :
Q25 மார்ச் 2024
ரெஸ்ட்ரிக்ஷன் நொதிகள் என்பது :
Q26 மார்ச் 2024
அகில உலக ஓசோன் தினம் :
Q27 மார்ச் 2024
எத்திடியம் புரோமைடு எந்த தொழில்நுட்ப முறையில் பயன்படுத்தப்படுகிறது ?
Q28 மார்ச் 2024
20% மற்றும் 60% பசுமை இல்ல வாயுக்கள் புவி வெப்பமயமாதலுக்குக் காரணமானவை முறையே :
Q29 மார்ச் 2024
செயலாக்க மூல மருந்து டிரான்ஸ்-டெட்ரா ஹைட்ரோகென்னாபினால் எதிலுள்ளது ?
Q30 மார்ச் 2023
பொருத்துக : (1) எக்சோ நியூக்ளியேஸ் - (i) பாஸ்ஃபேட்டை சேர்த்தல் அல்லது நீக்குதல் (2) எண்டோ நியூக்ளியேஸ் - (ii) DNA துண்டுகளை இணைத்தல் (3) அல்கலைன் பாஸ்ஃபட்டேஸ் - (iii) நுனிப்பகுதியில் DNA -வை துண்டித்தல் (4) லைகேஸ் - (iv) DNA -வை நடுவில் துண்டித்தல்
Q31 மார்ச் 2023
நிரப்பு மரபணுக்களின் புறத்தோற்ற விகிதம் :
Q32 மார்ச் 2023
"இந்திய பசுமை புரட்சியின் தந்தை" :
Q33 மார்ச் 2023
பெண் கேமிட்டகத் தாவரத்தின் முதல் செல் எது ?
Q34 மார்ச் 2023
தோல் புற்றுநோயை அதிகரிக்கும் நிகழ்வு __________ வளிமண்டல வாயு குறைவு காரணமாக ஏற்படுகிறது.
Q35 மார்ச் 2023
கீழ்க்கண்ட எந்த மண்ணின் நீர் தாவரங்களுக்குப் பயன்படுகிறது ?
Q36 மார்ச் 2023
வேர்கடலையின் பிறப்பிடம் :
Q37 மார்ச் 2023
டாமெரிண்டஸ் இண்டிகாவின் பிறப்பிடம் :
Q38 மார்ச் 2023
தாவரதிசு வளர்ப்பில் திடப்படுத்தும் காரணியாகப் பயன்படுத்தப்படுவது :
Q39 மார்ச் 2023
தாவரங்கள் திறம்பட ஒளிச்சேர்க்கை செய்ய எந்த நிற ஒளிக்கதிர்களை ஈர்க்கின்றன ?
Q40 மார்ச் 2023
பின்வருவனவற்றுள் எது மரபிய செய்தியின் சரியான வரிசையைக் குறிக்கிறது ?
Q41 மார்ச் 2023
"கேமிட்டுகள் எப்பொழுதும் கலப்புயிரிகளாக இருப்பதில்லை" எனும் கூற்று :
Q42 மார்ச் 2023
தொடக்க குறியன் என்பது :
Q43 மார்ச் 2023
தொடர் விளிம்பற்ற கருவூண் திசு காணப்படுவது :
Q44 மார்ச் 2023
பெடோஜெனிசிஸ் என்பது :
Q45 மார்ச் 2020
தாவரங்களின் ஒளிச்சேர்க்கைக்கு மட்டுமே பயன்படுத்தப்படும் சூரிய ஒளியின் அளவு :
Q46 மார்ச் 2020
கூற்று : அராபிடாப்சிஸ் தாவரக் குரோமோசோமின் டெலோமியரில் TTTAGGG என்ற நியூக்ளியோடைட் தொடர் வரிசை டெலோமியரை அமைக்கிறது. காரணம் : இதன் உருவாக்கத்திற்கு ரெஸ்ட்ரிக்ஸன் எண்டோநியூக்ளியேஸ் எனும் நொதி உதவுகிறது. (டெலோமியர்)
Q47 மார்ச் 2020
சூரிய ஒளியிலிருந்து அல்லது வலிமையான கொதி கலன்களில் இருந்து மின்சாரம் தயாரிக்கப்படுதலின் குறிப்பிடத்தக்க திட்டம் எது ?
Q48 மார்ச் 2020
கீழ்க்கண்ட எந்த தேர்வு செய்தல் முறையானது விரும்பத்தக்க மாறுபாடுகளைக் கொண்ட தாவரத்தினைப் பெற அதிக காலம் ஆகும் ?
Q49 மார்ச் 2020
நோயை உருவாக்கும் அனோபிலிஸ் கொசுக்களின் இனப்பெருக்கம் செய்யும் உறைவிடமாக எந்த தாவரம் உள்ளது ?
Q50 மார்ச் 2020
உவர் தன்மை மற்றும் பூச்சி எதிர்ப்புத்தன்மை கொண்ட அரிசி இரகம் :
Q51 மார்ச் 2020
சரியான இணையைத் தேர்ந்தெடுக்கவும்.
Q52 மார்ச் 2020
ஒரே குரோமோசோமில் காணப்படும் அருகமைந்த மரபணுக்கள் ஒன்றாகவே பாரம்பரியமாதலை குறிப்பிடுவது :
Q53 மார்ச் 2020
மிளகாய்க்கு சிறந்த மூலப்பொருளாக இருப்பது :
Q54 மார்ச் 2020
கீழ்வருவனவற்றுள் எது ஒன்று இதயத்திற்கு மருந்தாக செயல்படும் இரண்டாம் நிலை வளர்சிதை மாற்றப் பொருள் ?
Q55 மார்ச் 2020
"கசப்புகளின் அரசன்" என அழைக்கப்படும் மூலிகைத் தாவரம் :
Q56 மார்ச் 2020
சிதைவடையக் கூடிய உயிரி பாலிமர்கள் எவை ?
Q57 மார்ச் 2020
கீழ்வருவனவற்றுள் எது மகரந்த மடல்களுக்கு இடையில் காணப்படும் வளமற்ற திசுப்பகுதி :
Q58 மார்ச் 2020
பொருத்துக : (1) ஓங்கு மறைத்தல் - (i) 9 : 7 (2) இரட்டிப்பு மரபணுக்கள் - (ii) 12 : 3 : 1 (3) ஒடுங்கு மறைத்தல் - (iii) 15 : 1 (4) நிரப்பு மரபணுக்கள் - (iv) 9 : 3 : 4