TN Online Testசமச்சீர் கல்விப் பயிற்சி

12ஆம் வகுப்பு வரலாறு மே 2022: ஆன்லைன் பயிற்சித் தேர்வு

மே 2022 வினாத்தாளின் 20 வினாக்களுக்கு நேர வரம்புடனோ இல்லாமலோ விடையளியுங்கள். சமர்ப்பித்ததும் மதிப்பெண், சரியான விடைகள் மற்றும் விளக்கங்கள் தெரியும்.

உங்கள் தேர்வை அமைக்கவும்

விடையுடன் வினாத்தாள்
மீதமுள்ள நேரம்00:00
Q1
1940 அக்டோபர் 17-ல் முதல் தனிநபர் சத்தியாகிரகத்தை தொடங்கியவர் __________.
Q2
1942 -ல் வெள்ளையனே வெளியேறு இயக்கம் தொடங்கப்பட்டபோது இந்தியாவின் அரசப்பிரதிநிதி யார் ?
Q3
இந்திய தேசிய காங்கிரஸின் முதல் தலைவர் :
Q4
இந்தியாவின் மூவர்ணக் கொடி எப்போது ஏற்றப்பட்டது ?
Q5
பேர்ல் துறைமுகத்தை ஜப்பான் தாக்குவதற்குத் திட்டம் வகுத்தவர் __________ ஆவார்.
Q6
'அரசின் தடையற்ற' (Laissez Faire) என்னும் பதத்தை உருவாக்கியவர் __________ ஆவார்.
Q7
பொருத்துக : (1) கான்பூர் சதி வழக்கு - (i) அடிப்படை உரிமைகள் (2) மீரட் சதி வழக்கு - (ii) சூரியா சென் (3) சிட்டகாங் ஆயுதக்கிடங்கு கொள்ளை - (iii) 1929 (4) இந்திய தேசிய காங்கிரசின் கராச்சி மாநாடு - (iv) 1924
Q8
பின்வருவோரில் கான்பூர் சதி வழக்கில் கைது செய்யப்பட்டவர் யார் ?
Q9
மொழிவாரி அடிப்படையில் அமைக்கப்பட்ட முதல் மாநிலம் __________.
Q10
"சுயராஜ்யம் எனது பிறப்புரிமை, அதை அடைந்தே தீருவேன்" - எனக் கூறியவர் :
Q11
பின்வருவனவற்றுள் எந்த ஒன்று சரியாகப் பொருந்தியுள்ளது ?
Q12
கூற்று : வ.உ. சிதம்பரம் சுதேசி கப்பல் நிறுவனத்தைத் தொடங்கினார். காரணம் : இந்தியக் கடற்கரைகளில் ஆங்கிலேயர்களின் முற்றுரிமையினை அவர் எதிர்த்தார்.
Q13
பதினாறாம் லூயியின் அதிகாரப்பூர்வமான வசிப்பிடமாக இருந்தது :
Q14
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புச் சட்டம் எந்த ஆண்டு நிறைவேற்றப்பட்டது ?
Q15
ஐக்கிய நாடுகள் சபை எந்த ஆண்டு தொடங்கப்பட்டது ?
Q16
முகலாயர் காலத்தில் அலுவலக மற்றும் நீதிமன்ற மொழியாக விளங்கியது எது ?
Q17
இந்திய தேசிய இராணுவம் எந்த நாட்டு உதவியுடன் நிறுவப்பட்டது ?
Q18
அமெரிக்க சுதந்திரப் போரில் ஆங்கிலப் படைகளுக்குத் தலைமை தாங்கியவர் :
Q19
தென்னிந்தியாவில் தன்னாட்சி இயக்கம் யாரால் துவங்கப்பட்டது ?
Q20
ஒத்துழையாமை இயக்கத்தின் பல்வேறு நிலைகளைக் கால வரிசைப்படுத்துக. (1) அமிர்தசரஸ் நகரில் பிரிட்டிஷ் படையால் ஆயுதம் ஏந்தாத மக்கள் மீது கொடிய தாக்குதல் நடத்தப்பட்டது. (2) நீதிமன்ற விசாரணை இன்றி எவரையும் சிறையில் அடைக்க ரௌலட் சட்டம் கொண்டு வரப்பட்டது. (3) சௌரி சௌரா வன்முறைச் சம்பவம் காந்தியடிகள் ஒத்துழையாமை இயக்கத்தை விலக்கிக் கொள்ள வழிவகுத்தது. (4) கல்கத்தாவில் நடைபெற்ற சிறப்புக் கூட்டத்தில் பிரிட்டிஷ் அரசாங்கத்துடன் ஒத்துழையாமை என்ற காந்தியடிகளின் முன்மொழிவை ஏற்றுக் கொண்டது.