TN Online Testசமச்சீர் கல்விப் பயிற்சி

12ஆம் வகுப்பு சத்துணவியல் வினாத்தாள் மார்ச் 2025

வினாத்தாள் குறியீடு 8365 70 மதிப்பெண்கள் 180 நிமிடங்கள்

மார்ச் 2025 பொதுத் தேர்வின் முழு வினாத்தாள் அச்சிட்டபடியே: ஒவ்வொரு வினாவும் தமிழ், ஆங்கிலத்தில். PDF ஐப் பதிவிறக்குங்கள், அல்லது பகுதி I ஐ இலவச ஆன்லைன் தேர்வாக எழுதுங்கள்.

சத்துணவியல் / Nutrition and Dieteticsமார்ச் 2025 · March 2025

பகுதி – I / PART – I

குறிப்பு : (i) அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும். (ii) கொடுக்கப்பட்டுள்ள நான்கு மாற்று விடைகளில் மிகவும் ஏற்புடைய விடையைத் தேர்ந்தெடுத்துக் குறியீட்டுடன் விடையினையும் சேர்த்து எழுதவும்.
Note : (i) Answer all the questions. (ii) Choose the most appropriate answer from the given four alternatives and write the option code and the corresponding answer.
1.
ஒரு நாளைக்கு _____ பரிமாறல்கள் பழங்களும் காய்கறிகளும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
(அ) ஐந்து
(ஆ) ஏழு
(இ) மூன்று
(ஈ) இரண்டு
_____ servings of fruits and vegetables should be included in a day.
(a) Five
(b) Seven
(c) Three
(d) Two
விடையைக் காட்டு ▾ (அ) / (a) Five · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →
1 mark
2.
கருவுறாத சாதாரண பெண்ணின் மொத்த பிளாஸ்மா அளவு _____ மி.லி.
(அ) 2800
(ஆ) 2500
(இ) 3000
(ஈ) 2600
The total plasma volume in a non-pregnant women averages _____ ml.
(a) 2800
(b) 2500
(c) 3000
(d) 2600
விடையைக் காட்டு ▾ (ஈ) / (d) 2600 · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →
1 mark
3.
ஒரு முன்பள்ளிக் குழந்தைக்கு, 1 கிலோ கிராம் உடல் எடைக்கு பரிந்துரைக்கப்பட்ட புரதத்தின் அளவு _____ கிராம்.
(அ) 3 - 4
(ஆ) 2 - 3
(இ) 2 - 5
(ஈ) 1.5 - 2
Protein intake of a Pre-school child should be _____ g/kg body weight.
(a) 3 to 4
(b) 2 to 3
(c) 2 to 5
(d) 1.5 to 2
விடையைக் காட்டு ▾ (ஈ) / (d) 1.5 to 2 · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →
1 mark
4.
இந்திய பெரியவர்களின் ஒரு நாளைய சராசரி புரதத் தேவை _____ உடல் எடை.
(அ) 1 கி/கி.கி
(ஆ) 2 கி/கி.கி
(இ) 0.5 கி/கி.கி
(ஈ) 1.5 கி/கி.கி
Average daily protein requirement of an Indian adult is _____ of body weight.
(a) 1 g/kg
(b) 2 g/kg
(c) 0.5 g/kg
(d) 1.5 g/kg
விடையைக் காட்டு ▾ (அ) / (a) 1 g/kg · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →
1 mark
5.
மூக்கின் வழியாக இரைப்பை அல்லது சிறுகுடலுக்கு குழாயை செலுத்துதல் _____ எனப்படும்.
(அ) நேசோ டியோடினல்
(ஆ) நேசோ கேஸ்டிரிக்
(இ) நேசோ ஜெஜுனல்
(ஈ) நேசோ என்டிரிக்
Passing a tube into the stomach or duodenum through nose is called _____.
(a) naso duodenal
(b) naso gastric
(c) naso jejunal
(d) naso enteric
விடையைக் காட்டு ▾ (ஆ) / (b) naso gastric · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →
1 mark
6.
மலேரியா _____ கொசுக் கடிப்பதால் ஏற்படும்.
(அ) ப்ளாஸ்மோடியம்
(ஆ) ஏடிஸ்
(இ) கியூலெக்ஸ்
(ஈ) அனோபீல்சு
Malaria is spread through the bite of infected _____ mosquito.
(a) Plasmodium
(b) Aedes
(c) Culex
(d) Anopheles
விடையைக் காட்டு ▾ (ஈ) / (d) Anopheles · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →
1 mark
7.
_____ நிறைந்த உணவுகள் பெரியவர்களிடையே பெர்னீசியஸ் இரத்த சோகை ஏற்படாமல் தடுக்க உதவுகிறது.
(அ) ஃபோலேட்
(ஆ) கொழுப்பு
(இ) புரதம்
(ஈ) ஆஸ்கார்பிக் அமிலம்
Consumption of _____ rich foods can prevent pernicious Anaemia among adults.
(a) folate
(b) fat
(c) protein
(d) ascorbic acid
1 mark
8.
வயிற்றுப் போக்கிற்கான திட்ட உணவு சிகிச்சையின் முதன்மையான குறிக்கோள் _____ ல் மாற்றம் செய்வதே ஆகும்.
(அ) திரவம்
(ஆ) கலோரி
(இ) கால்சியம்
(ஈ) கொழுப்பு
_____ replacement is the Principal diet goal in diarrhoea.
(a) fluid
(b) calorie
(c) calcium
(d) fat
விடையைக் காட்டு ▾ (அ) / (a) fluid · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →
1 mark
9.
பெண்ணின் ஒரு நாளைய இரும்புச்சத்து ஆண்களை விட _____ அதிகம் தேவைப்படுகிறது.
(அ) 2 மி.கி
(ஆ) 4 மி.கி
(இ) 5 மி.கி
(ஈ) 3 மி.கி
Iron requirement for adult women per day is _____ higher than men.
(a) 2 mg
(b) 4 mg
(c) 5 mg
(d) 3 mg
விடையைக் காட்டு ▾ (ஆ) / (b) 4 mg · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →
1 mark
10.
நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்படும் அதிக தாகம் _____ என்றழைக்கப்படும்.
(அ) பாலிடிப்சியா
(ஆ) பாலியூரியா
(இ) கீடோனிமியா
(ஈ) பாலிபேஜியா
Excess thirst in diabetes is called as _____.
(a) Polydipsia
(b) Polyuria
(c) Ketonemia
(d) Polyphagia
விடையைக் காட்டு ▾ (அ) / (a) Polydipsia · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →
1 mark
11.
இரத்த அழுத்தம் இயல்பான அளவை விட அதிகளவு இருக்கும் போது _____ உட்கொள்வது கட்டுப்படுத்தப்பட வேண்டும்.
(அ) கார்போஹைடிரேட்
(ஆ) இரும்புச் சத்து
(இ) சோடியம்
(ஈ) தையமின்
Intake of _____ is restricted when the blood pressure is above normal.
(a) carbohydrate
(b) iron
(c) sodium
(d) thiamine
விடையைக் காட்டு ▾ (இ) / (c) sodium · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →
1 mark
12.
மூளைக்கு செல்லும் இரத்த ஓட்டப்பாதையில் அடைப்பு ஏற்பட்டால் _____ ஏற்படும்.
(அ) ஆத்திரோஸ் கிலிரோசிஸ்
(ஆ) பிளேக்
(இ) பக்கவாதம் (Stroke)
(ஈ) இஸ்சிமியா
When blood flow to the brain is blocked, it results in a _____.
(a) Atherosclerosis
(b) Plaque
(c) Stroke
(d) Ischemia
விடையைக் காட்டு ▾ (இ) / (c) Stroke · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →
1 mark
13.
ஆக்ஸலேட் நிறைந்த உணவு _____.
(அ) கல்லீரல்
(ஆ) பால்
(இ) மீன்
(ஈ) தக்காளி
This food is rich in oxalate.
(a) Liver
(b) Milk
(c) Fish
(d) Tomato
விடையைக் காட்டு ▾ (ஈ) / (d) Tomato · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →
1 mark
14.
உடலின் திசுக்களில் காணப்படும் நீர்த்தேக்க நிலை _____ எனப்படுகிறது.
(அ) அதிக வாந்தி
(ஆ) எடிமா
(இ) உயர் இரத்த அழுத்தம்
(ஈ) வீக்கம்
Retention of water in the tissues of the body is termed as _____.
(a) Hyperemesis
(b) Oedema
(c) Hypertension
(d) Inflammation
விடையைக் காட்டு ▾ (ஆ) / (b) Oedema · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →
1 mark
15.
_____ ஒரு புற்றுநோய்க் காரணி.
(அ) உயிர்ச்சத்து-C
(ஆ) மஞ்சள்
(இ) சிகரெட் புகை
(ஈ) உயிர்ச்சத்து-A
_____ is a Carcinogen.
(a) Vitamin C
(b) Turmeric
(c) Cigarette smoke
(d) Vitamin A
விடையைக் காட்டு ▾ (இ) / (c) Cigarette smoke · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →
1 mark

பகுதி – II / PART – II

குறிப்பு : எவையேனும் ஆறு வினாக்களுக்கு விடையளிக்கவும். வினா எண் 24 -க்கு கட்டாயமாக விடையளிக்கவும்.
Note : Answer any six questions. Question No. 24 is compulsory.
16.
RDA – வரையறுக்கவும்.
Define RDA.
2 marks
17.
மால்ட் உணவில் உள்ளடங்கியுள்ள பொருட்கள் யாவை ?
What is the composition of Malt food ?
2 marks
18.
ஆஸ்டியோபோரோசிஸ் என்றால் என்ன ?
What is Osteoporosis ?
2 marks
19.
வயது வந்தவர்களில் எலும்புப்புரை அறிகுறிகளை பட்டியலிடுக.
List out the symptoms of Parkinson’s disease in the elderly.
2 marks
20.
தெளிந்த திரவ உணவு என்றால் என்ன ? உதாரணம் தருக.
What is a clear liquid diet ? Give example.
2 marks
21.
காய்ச்சல் – வரையறுக்கவும்.
Define the term “Fever”.
2 marks
22.
புரோகாவின் குறியீடு என்ன ?
What is Broka’s index ?
2 marks
23.
கல்லீரலின் பணிகளில் ஏதேனும் இரண்டு பணிகளை எழுதுக.
Write any two functions of Liver.
2 marks
24.
30 வயதுடைய அதிக வேலைப்பளு அற்ற பணக்கார இல்லத்தரசி ஒருவர் இனிப்பு, பொரித்த உணவுகள் மற்றும் பனிக்கூழ் போன்றவற்றை மிகவும் விரும்பி உண்பார். அவர் உடல் எடை அதிகரிப்பது இயற்கையானது என்று எண்ணுகிறார். அவரது எடை இழப்பதற்கான நான்கு வழிமுறைகளை எழுதுக.
A lady aged 30 is a rich housewife without much work. She is fond of eating sweets, fried foods, ice creams etc. She thinks putting on weight is a natural phenomenon. Write any four suggestions to lose weight.
2 marks

பகுதி – III / PART – III

குறிப்பு : எவையேனும் ஆறு வினாக்களுக்கு விடையளிக்கவும். வினா எண் 33 -க்கு கட்டாயமாக விடையளிக்கவும்.
Note : Answer any six questions. Question No. 33 is compulsory.
25.
தாய்பாலில் காணப்படும் நோய் எதிர்ப்பு காரணிகளை விவரிக்கவும்.
Write about the immunological benefits of Breast milk.
3 marks
26.
மென்மையான உணவுகளின் தனிச்சிறப்புகள் யாவை ?
What are the salient features of Soft Diet ?
3 marks
27.
உடல் பருமனால் ஏற்படும் சிக்கல்கள் யாவை ?
What are the complications of Obesity ?
3 marks
28.
மலச்சிக்கலின் வகைகள் யாவை ?
What are the types of Constipation ?
3 marks
29.
நீரிழிவு நோயை குணப்படுத்துவதற்கான வீட்டு மருத்துவக் குறிப்புகளை எழுதுக.
Write on the home remedies for diabetic.
3 marks
30.
உடலியல் செயல்பாடு உடல் எடையைக் குறைக்கிறது - விவரிக்கவும்.
Physical activity reduces body weight. Explain.
3 marks
31.
இதய சுற்றோட்ட நோய்கள் – வரையறுக்கவும்.
Define Cardiovascular disease.
3 marks
32.
எதிர் ஆக்ஸிஜனேற்றி என்றால் என்ன ? எதிர் ஆக்ஸிஜனேற்றி நிறைந்த உணவுப் பொருட்களை பட்டியலிடுக.
What are Antioxidants ? Give the food sources for the same.
3 marks
33.
கிளாமரூலோநெஃப்ரைட்டிஸ் நோயின் போது அனுமதிக்கப்பட்ட மற்றும் தவிர்க்கப்பட வேண்டிய உணவுகள் யாவை ?
What are the foods that are Permitted and to be avoided in glomerulonephritis ?
3 marks

பகுதி – IV / PART – IV

குறிப்பு : அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்.
Note : Answer all the questions.
34.
(அ)உணவுப் பரிமாற்றப் பட்டியல் என்றால் என்ன ? உணவைத் திட்டமிடும் போது உணவு பரிமாற்றப் பட்டியல் எவ்வாறு பயன்படுகிறது ?
(a)What are food exchange lists ? How are they used in planning diets ?
அல்லது / OR
(ஆ)எச்.ஐ.வி தொற்றின் நான்கு நிலைகளை விளக்குக.
(b)Explain the four stages of HIV infection.
5 marks
35.
(அ)நீரிழிவு நோயினால் ஏற்படும் நீண்டகால சிக்கல்களை எழுதுக.
(a)Write the chronic complications of Diabetes.
அல்லது / OR
(ஆ)புரதச்சக்தி குறைபாடு (PEM) விவரிக்கவும்.
(b)Explain Protein Energy Malnutrition (PEM).
5 marks
36.
(அ)மிதமான வேலை செய்யும் கர்ப்பிணி பெண்ணிற்கான ஒரு நாளைய உணவுத் திட்டம் தயார் செய்க.
(a)Plan a day’s menu for a pregnant woman doing moderate work.
அல்லது / OR
(ஆ)சிறுநீரக நோய்களின் வகைகளை எழுதுக.
(b)Write the types of kidney diseases.
5 marks
37.
(அ)உடல் பருமன் திட்ட உணவு கோட்பாடுகளை விளக்குக.
(a)Explain dietary Principles of Obesity.
அல்லது / OR
(ஆ)உயர் இரத்த அழுத்தத்தை உண்டாக்கும் ஆபத்தான காரணிகளைக் கூறுக.
(b)Spell out the risk factors for Hypertension.
5 marks
38.
(அ)இரத்தத்தில் காணப்படும் ஐந்து முக்கிய லிப்போபுரதங்களின் வகைகளை விளக்குக.
(a)Explain five major lipoproteins in the blood.
அல்லது / OR
(ஆ)திட்ட உணவு வல்லுநரின் பொறுப்புகளை விவரிக்கவும்.
(b)Explain the responsibilities of a Dietitian.
5 marks
⬇️ PDF பதிவிறக்கம் அனைத்து சத்துணவியல் வினாத்தாள்கள்