பகுதி – I
அனைத்து வினாக்களுக்கும் விடை தருக. 14×1=14
1.
கருத்து 1 : இயல்பு வழக்கில், தொடரமைப்பு என்பது எழுவாய், பயனிலை என்று வருவதே மரபு.
கருத்து 2 : தொடரமைப்பு, சங்கப் பாடல்கள் பலவற்றில் பிறழ்ந்து வருகிறது.
கருத்து 2 : தொடரமைப்பு, சங்கப் பாடல்கள் பலவற்றில் பிறழ்ந்து வருகிறது.
(அ) கருத்து 1 மற்றும் 2 சரி
(ஆ) கருத்து 1 மட்டும் சரி
(இ) கருத்து 1 மற்றும் 2 தவறு
(ஈ) கருத்து 2 மட்டும் சரி
(a)
(b)
(c)
(d)
விடையைக் காட்டு ▾
(அ) / (a) · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →1 mark
2.
நரம்புகளுக்குள் வீணை மீட்டிக் கொண்டிருக்கிறது என்று அய்யப்ப மாதவன் குறிப்பிடுவது :
(அ) மழைத்துளிகள்
(ஆ) சூரிய ஒளிக்கதிர்
(இ) நீர்நிலைகள்
(ஈ) மழை மேகங்கள்
(a)
(b)
(c)
(d)
விடையைக் காட்டு ▾
(அ) / (a) · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →1 mark
3.
இவற்றை வாயிலுக்கே சென்று இன்முகத்துடன் வரவேற்பாயாக என்று ஜலாலுத்தீன் ரூமி குறிப்பிடுவது :
(அ) அவமானம்
(ஆ) வஞ்சனை
(இ) வக்கிரம்
(ஈ) இவை அனைத்தும்
(a)
(b)
(c)
(d)
விடையைக் காட்டு ▾
(ஈ) / (d) · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →1 mark
4.
சங்க இலக்கியத்தில் இல்லாத சொற்கள், சங்ககாலச் சமூகத்தில் நடைமுறையில் இருந்துள்ளன. அவை ______.
(அ) மன்றங்களும் அவைகளும்
(ஆ) திருமணமும் குடும்பமும்
(இ) நிதியமும் சுங்கமும்
(ஈ) அறவோர், துறவோர்
(a)
(b)
(c)
(d)
விடையைக் காட்டு ▾
(ஆ) / (b) · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →1 mark
5.
'பலர் துஞ்சவும் தாம் துஞ்சான்' – விழித்திருந்தவரும் அவரைப் பாடியவரும் :
(அ) கணைக்கால் இரும்பொறையை, கபிலர்
(ஆ) சோழன் நெடுங்கிள்ளியை, பாணர்
(இ) சோழன் நலங்கிள்ளியை, கோவூர்கிழார்
(ஈ) கரிகாலனை, உருத்திரங்கண்ணனார்
(a)
(b)
(c)
(d)
விடையைக் காட்டு ▾
(இ) / (c) · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →1 mark
6.
'குழிமாற்று' எந்தத் துறையோடு தொடர்புடைய சொல் ?
(அ) கணிதம்
(ஆ) இலக்கியம்
(இ) வேளாண்மை
(ஈ) புவியியல்
(a)
(b)
(c)
(d)
விடையைக் காட்டு ▾
(அ) / (a) · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →1 mark
7.
பொருத்துக.
(1) மாச்சீர் - (i) கருவிளம், கூவிளம்
(2) காய்ச்சீர் - (ii) நாள், மலர்
(3) விளச்சீர் - (iii) தேமாங்காய், புளிமாங்காய்
(4) ஓரசைச்சீர் - (iv) தேமா, புளிமா
(1) மாச்சீர் - (i) கருவிளம், கூவிளம்
(2) காய்ச்சீர் - (ii) நாள், மலர்
(3) விளச்சீர் - (iii) தேமாங்காய், புளிமாங்காய்
(4) ஓரசைச்சீர் - (iv) தேமா, புளிமா
(அ) (1)-(ii), (2)-(iii), (3)-(i), (4)-(iv)
(ஆ) (1)-(i), (2)-(ii), (3)-(iv), (4)-(iii)
(இ) (1)-(iii), (2)-(iv), (3)-(ii), (4)-(i)
(ஈ) (1)-(iv), (2)-(iii), (3)-(i), (4)-(ii)
(a)
(b)
(c)
(d)
விடையைக் காட்டு ▾
(ஈ) / (d) · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →1 mark
8.
தமிழில் திணைப் பாகுபாடு ______ அடிப்படையில் பகுக்கப்பட்டுள்ளது.
(அ) தொடர்க்குறிப்பு
(ஆ) பொருட்குறிப்பு
(இ) எழுத்துக்குறிப்பு
(ஈ) சொற்குறிப்பு
(a)
(b)
(c)
(d)
விடையைக் காட்டு ▾
(ஆ) / (b) · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →1 mark
9.
ஆராய்ந்து சொல்கிறவர் :
(அ) தூதுவர்
(ஆ) அரசர்
(இ) உறவினர்
(ஈ) சொல்லியபடி செய்பவர்
(a)
(b)
(c)
(d)
விடையைக் காட்டு ▾
(அ) / (a) · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →1 mark
10.
'வெங்கதிர்' – இலக்கணக்குறிப்புத் தருக.
(அ) பெயரெச்சம்
(ஆ) தொழிற்பெயர்
(இ) உரிச்சொல்
(ஈ) பண்புத்தொகை
(a)
(b)
(c)
(d)
விடையைக் காட்டு ▾
(ஈ) / (d) · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →1 mark
11.
'உரிமைத்தாகம்' எனும் சிறுகதையின் ஆசிரியர் :
(அ) பூமணி
(ஆ) உத்தமசோழன்
(இ) சாந்தாதத்
(ஈ) தோப்பில் முகமது மீரான்
(a)
(b)
(c)
(d)
விடையைக் காட்டு ▾
(அ) / (a) · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →1 mark
12.
முன்னெழுத்து அரசன் ; பின்னெழுத்து தமிழ் மாதம் கண்டறிக.
(அ) குழியாடி
(ஆ) அரசாணி
(இ) கோதை
(ஈ) கடையாணி
(a)
(b)
(c)
(d)
விடையைக் காட்டு ▾
(இ) / (c) · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →1 mark
13.
இரட்சணிய யாத்திரிகம் என்ற நூலின் ஆசிரியர் யார் ?
(அ) பாரதியார்
(ஆ) எச்.ஏ. கிருட்டிணனார்
(இ) நத்தத்தனார்
(ஈ) பெருந்தேவனார்
(a)
(b)
(c)
(d)
விடையைக் காட்டு ▾
(ஆ) / (b) · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →1 mark
14.
தலைக்கோல் – புணர்ச்சி விதியை தேர்ந்தெடுக்க.
(அ) இஈஐ வழி யவ்வும்.
(ஆ) இயல்பினும் விதியினும் நின்ற உயிர்முன் கசதப மிகும்.
(இ) உயிர்வரின் உக்குறள் மெய் விட்டோடும்.
(ஈ) உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே.
(a)
(b)
(c)
(d)
விடையைக் காட்டு ▾
(ஆ) / (b) · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →1 mark
பகுதி – II
பிரிவு – 1 (வினா 15 – 18) : எவையேனும் மூன்றனுக்கு விடை தருக. 3×2=6
பிரிவு – 2 (வினா 19 – 21) : எவையேனும் இரண்டனுக்கு விடை தருக. 2×2=4
பிரிவு – 3 (வினா 22 – 30) : எவையேனும் ஏழனுக்கு விடை தருக. 7×2=14
பிரிவு – 2 (வினா 19 – 21) : எவையேனும் இரண்டனுக்கு விடை தருக. 2×2=4
பிரிவு – 3 (வினா 22 – 30) : எவையேனும் ஏழனுக்கு விடை தருக. 7×2=14
15.
“நகரம் பட்டை தீட்டிய வெள்ளை வைரமாகிறது” – விளக்கம் தருக.
2 marks
16.
‘தருமமிகு சென்னையில் கந்த கோட்டத்துள் வளர் தலமோங்கு கந்தவேளே’ – தொடருக்குப் பதவுரை எழுதுக.
2 marks
17.
நிலையாமை குறித்து சவரி உரைக்கும் கருத்து யாது ?
2 marks
18.
இறைமகனாரின் இன்னலைக் கண்டு மக்கள் எவ்விதம் புலம்பினர் ?
2 marks
19.
நடை அழகியல் பற்றித் தொல்காப்பியம் கூறும் கருத்தைக் குறிப்பிடுக.
2 marks
20.
சங்க காலத்தில் தாய்வழிச் சமூகமுறையில் பெண்கள் பெற்றிருந்த உரிமைகள் யாவை ?
2 marks
21.
அக்காலத்துக் கல்வி முறை மனனப்பயிற்சிக்கு உதவிய நூல்கள் எவை ?
2 marks
22.
பொருள் வேறுபாடறிந்து தொடர் அமைக்க.
விலை, விளை
விலை, விளை
2 marks
23.
பொருத்தமான வேற்றுமை உருபுகளைச் சேர்த்து முறையான தொடர்களாக்குக :
(ஐ, ஆல், கு, இன், அது, கண்)
(அ) மாறன் பேச்சுத்திறன் யார் வெல்ல முடியும்
(ஆ) சான்றோர் மதிப்பு கொடுத்து வாழ்வு உயரலாம்
(ஐ, ஆல், கு, இன், அது, கண்)
(அ) மாறன் பேச்சுத்திறன் யார் வெல்ல முடியும்
(ஆ) சான்றோர் மதிப்பு கொடுத்து வாழ்வு உயரலாம்
2 marks
24.
கீழ்காண் சொற்றொடரில் பிழை நீக்கி எழுதுக.
(அ) பறவைகள் நெல்மணிகளை வேகமாக் கொத்தித் தின்றது.
(ஆ) அவன் வெண்மதியிடம் பேசினாய்.
(அ) பறவைகள் நெல்மணிகளை வேகமாக் கொத்தித் தின்றது.
(ஆ) அவன் வெண்மதியிடம் பேசினாய்.
2 marks
25.
சொற்களை ஏற்ற இடத்தில் நிரப்புக.
வேற்றுயிரால் ________ விளையா திருப்பதற்(கு)
ஏற்ற வண்ணம் ________ இயற்றாமல் – ஆற்றலுறும்
________ இனம்வருந்தப் பேரிடர்செய் கின்றாயே
நண்பா! ________ நவில் ?
(பெண்பால், சரியோ, காவல், தொல்லை)
வேற்றுயிரால் ________ விளையா திருப்பதற்(கு)
ஏற்ற வண்ணம் ________ இயற்றாமல் – ஆற்றலுறும்
________ இனம்வருந்தப் பேரிடர்செய் கின்றாயே
நண்பா! ________ நவில் ?
(பெண்பால், சரியோ, காவல், தொல்லை)
2 marks
26.
தொடரில் உள்ள பிழைகளை நீக்கி எழுதுக.
(அ) இன்னிக்கு சாயங்காலம் கபடி போட்டி நடைபெறும்.
(ஆ) ஐப்பசி அடைமழையில் ஊருணி நிறைந்தது
(அ) இன்னிக்கு சாயங்காலம் கபடி போட்டி நடைபெறும்.
(ஆ) ஐப்பசி அடைமழையில் ஊருணி நிறைந்தது
2 marks
27.
சொல்லைப் பிரித்தும் சேர்த்தும் தொடரமைக்க.
(அ) பலகை (ஆ) தலைமை
(அ) பலகை (ஆ) தலைமை
2 marks
28.
ஏதேனும் ஒன்றனுக்குப் பகுபத உறுப்பிலக்கணம் தருக.
(அ) அறுத்து (ஆ) களைந்து
(அ) அறுத்து (ஆ) களைந்து
2 marks
29.
ஏதேனும் ஒன்றனுக்குப் புணர்ச்சி விதி தருக.
(அ) செம்பரிதி (ஆ) ஏழையென
(அ) செம்பரிதி (ஆ) ஏழையென
2 marks
30.
திருவளர்ச்செல்வன், திருவளர் செல்வன் – இவற்றில் சரியான தொடர் எது ? அதற்கான இலக்கண விதி யாது ?
2 marks
பகுதி – III
பிரிவு – 1 (வினா 31 – 34) : எவையேனும் இரண்டனுக்கு விடை தருக. 2×4=8
பிரிவு – 2 (வினா 35 – 38) : எவையேனும் இரண்டனுக்கு மட்டும் விடை தருக. 2×4=8
பிரிவு – 3 (வினா 39 – 43) : எவையேனும் மூன்றனுக்கு விடை தருக. 3×4=12
பிரிவு – 2 (வினா 35 – 38) : எவையேனும் இரண்டனுக்கு மட்டும் விடை தருக. 2×4=8
பிரிவு – 3 (வினா 39 – 43) : எவையேனும் மூன்றனுக்கு விடை தருக. 3×4=12
31.
சடாயுவைத் தந்தையாக ஏற்று, இராமன் ஆற்றிய கடமையை எழுதுக.
4 marks
32.
மனத்திட்பம் அவசியமான பண்பு என்பதைக் குறள் நெறி நின்று விளக்குக.
4 marks
33.
‘ஏங்கொலிநீர் ஞாலத்(து) இருளகற்றும்’ – இடம்சுட்டிப் பொருள் விளக்கம் தருக.
4 marks
34.
யானை புக்க புலம்போலத் தானும் உண்ணான் உலகமும் கெடுமே – உவமையையும் பொருளையும் பொருத்தி விளக்குக.
4 marks
35.
வேளாண் மேலாண்மை குறித்து நீவிர் பரிந்துரைப்பனவற்றை எழுதுக.
4 marks
36.
மணலில் எழுதியது முதல் தற்காலம்வரை எழுதும் முறையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களைத் தொகுத்துரைக்க.
4 marks
37.
பண்டைய விரிந்த குடும்பத்தின் தொடர்ச்சியே இன்றைய கூட்டுக் குடும்பம் – விளக்கம் எழுதுக.
4 marks
38.
சங்கப் பாடல்களில் ஒலிக்கோலம் குறிப்பிடத்தக்க ஒரு பண்பாகும் – விளக்குக.
4 marks
39.
நிரல்நிறை அணி (அல்லது) சொற்பொருள் பின்வரும் நிலையணியைச் சான்றுடன் விளக்குக.
4 marks
40.
இலக்கிய நயம் பாராட்டுக.
(மையக்கருத்துடன் ஏற்புடைய மூன்று நயங்களை எழுதுக)
வெட்டி யடிக்குது மின்னல் - கடல்
வீரத் திரைகொண்டு விண்ணை யிடிக்குது;
கொட்டி யிடிக்குது மேகம் - கூ
கூவென்று விண்ணைக் குடையுது காற்று
சட்டச்சட சட்டச்சட டட்டா - என்று
தாளங்கள் கொட்டிக் கனைக்குது வானம்
எட்டுத்திசையும் இடிய - மழை
எங்ஙனம் வந்ததடா தம்பி வீரா!
– பாரதியார்

41.
(அ)பின்வரும் பழமொழியை வாழ்க்கை நிகழ்வில் அமைத்து எழுதுக.
தினை விதைத்தவன் தினை அறுப்பான்
தினை விதைத்தவன் தினை அறுப்பான்
அல்லது / OR
(ஆ)பின்வரும் பழமொழியை வாழ்க்கை நிகழ்வில் அமைத்து எழுதுக.
எறும்பு ஊரக் கல்லும் தேயும்
எறும்பு ஊரக் கல்லும் தேயும்
4 marks
42.
பாடாண்திணையைச் சான்றுடன் விளக்குக.
4 marks
43.
கீழ்க்காணும் பத்தியைப் படித்து வினாக்களுக்குரிய விடை தருக.
மொழி என்பது மக்கள் படைத்துக் காக்கும் அரியதொரு கலை. மொழியே மக்களின் அறிவை வளர்த்து உயர்த்தும் அரிய கருவியாகவும் உள்ளது. பெற்ற தாயின் முதல் வேட்கை தன் குழந்தையுடன் பேசுதல். அவள் முதலில் அடையும் பெரிய மகிழ்ச்சி, குழந்தையின் பேச்சைக் கேட்பதே ஆகும். குழந்தையின் மனவளர்ச்சியோடு தொடர்புடையது மொழிவளர்ச்சியே ஆகும். மனம் என்பது பெரும்பாலும் மொழியால் வளர்ந்து அமைந்தது. மனத்தின் வளர்ச்சிக்கு ஏற்பவே பேசுவோரின் மொழியும் வளர்ச்சி பெற்று நிற்கும்.
வினாக்கள் :–
(1) குழந்தையின் மனவளர்ச்சி எதனுடன் தொடர்புடையது ?
(2) மொழி என்பது மக்கள் படைத்துக் காக்கும் ________ ஆகும்.
(3) தாயின் முதல் வேட்கையாக இருப்பது என்ன ?
(4) மொழி எவ்வாறு வளர்ச்சி பெறும் ?

பகுதி – IV
அனைத்து வினாக்களுக்கும் விடை தருக. 3×6=18
44.
(அ)தமிழின் சீரிளமைத் திறம் வியந்து கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம் கூறுவனவற்றை தொகுத்து எழுதுக.
அல்லது / OR
(ஆ)அறிவுடைமை வாழ்வின் உயர்வுக்குத் துணைநிற்கும் என்பதை வள்ளுவம் வழிநின்று நிறுவுக.
6 marks
45.
(அ)குடும்பம் என்னும் சிறிய அமைப்பிலிருந்தே மனித சமூகம் என்னும் பரந்த அமைப்பு கட்டமைக்கப்படுகிறது – எவ்வாறு ? விளக்குக.
அல்லது / OR
(ஆ)நிருவாக மேலாண்மை குறித்து வெ. இறையன்பு கூறும் கருத்துகளைத் தொகுத்து எழுதுக.
6 marks
46.
(அ)“கிராமங்கள் தங்கள் முகவரியை இழந்து வருகின்றன” – இது குறித்து உங்கள் கருத்தை விவரிக்கவும்.
அல்லது / OR
(ஆ)பாரதியின் கடிதம் வாயிலாக நீங்கள் அறிந்து கொண்ட மொழிப்பற்று, சமூகப்பற்று ஆகியவற்றை விவரிக்கவும்.
6 marks
பகுதி – V
4+2=6
47.
அடிபிறழாமல் செய்யுள் வடிவில் விடை தருக.
(அ) “ஒருமையுடன்…” எனத் தொடங்கும் தெய்வமணிமாலை பாடலை அடிபிறழாமல் எழுதுக.
(ஆ) ‘படும்’ என முடியும் குறளை அடிபிறழாமல் எழுதுக.
(அ) “ஒருமையுடன்…” எனத் தொடங்கும் தெய்வமணிமாலை பாடலை அடிபிறழாமல் எழுதுக.
(ஆ) ‘படும்’ என முடியும் குறளை அடிபிறழாமல் எழுதுக.
6 marks