TN Online Testசமச்சீர் கல்விப் பயிற்சி

12ஆம் வகுப்பு தமிழ் வினாத்தாள் Supplementary June 2023

90 மதிப்பெண்கள் 180 நிமிடங்கள்

Supplementary June 2023 பொதுத் தேர்வின் முழு வினாத்தாள் அச்சிட்டபடியே: ஒவ்வொரு வினாவும் தமிழ், ஆங்கிலத்தில். PDF ஐப் பதிவிறக்குங்கள், அல்லது பகுதி I ஐ இலவச ஆன்லைன் தேர்வாக எழுதுங்கள்.

தமிழ் / தமிழ்Supplementary June 2023 · June 2023

பகுதி – I

அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும். 14×1=14
1.
"மீண்டுமந்தப் பழமைநலம் புதுக்கு தற்கு" கவிஞர் குறிப்பிடும் பழமைநலம்
(a) பாண்டியரின் சங்கத்தில் கொலுவிருந்தது
(b) பொதிகையில் தோன்றியது
(c) வள்ளல்களைத் தந்தது
(அ) (a) மட்டும் சரி
(ஆ) (a), (b) இரண்டும் சரி
(இ) (c) மட்டும் சரி
(ஈ) (a), (c) இரண்டும் சரி
(a)
(b)
(c)
(d)
விடையைக் காட்டு ▾ (ஈ) / (d) · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →
1 mark
2.
பொய்யா வானம் புதுப்பெயல் பொழிந்தென - அடிக்கோடிட்ட சொல்லின் இலக்கணக் குறிப்பு
(அ) வினைத்தொகை
(ஆ) உரிச்சொல் தொடர்
(இ) இடைச்சொல் தொடர்
(ஈ) ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
(a)
(b)
(c)
(d)
விடையைக் காட்டு ▾ (ஈ) / (d) · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →
1 mark
3.
பொருத்துக
(a) உரிமைத்தாகம் - (i) பாரசீகக் கவிஞர்
(b) அஞ்ஞாடி - (ii) பூமணி
(c) ஜலாலுத்தீன் ரூமி - (iii) பக்தவத்சல பாரதி
(d) தமிழர் குடும்ப முறை - (iv) சாகித்திய அகாதெமி
(அ) (a)-(ii), (b)-(iv), (c)-(iii), (d)-(i)
(ஆ) (a)-(iii), (b)-(iv), (c)-(i), (d)-(ii)
(இ) (a)-(ii), (b)-(iv), (c)-(i), (d)-(iii)
(ஈ) (a)-(ii), (b)-(iii), (c)-(iv), (d)-(i)
(a)
(b)
(c)
(d)
விடையைக் காட்டு ▾ (இ) / (c) · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →
1 mark
4.
"காவினெம் கலனே; சுருக்கினெம் கலப்பை" - இத்தொடரில் 'கலன்' உணர்த்தும் பொருள்
(அ) போர்க்கருவி
(ஆ) தச்சுக்கருவி
(இ) இசைக்கருவி
(ஈ) வேளாண் கருவி
(a)
(b)
(c)
(d)
விடையைக் காட்டு ▾ (இ) / (c) · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →
1 mark
5.
படிமம் என்பதன் பொருள்
(அ) சொல்
(ஆ) செயல்
(இ) காட்சி
(ஈ) ஒலி
(a)
(b)
(c)
(d)
விடையைக் காட்டு ▾ (இ) / (c) · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →
1 mark
6.
பொருத்துக
(a) ஆமந்திரிகை - (i) பட்டத்து யானை
(b) அரசு உவா - (ii) மூங்கில்
(c) கழஞ்சு - (iii) இடக்கை வாத்தியம்
(d) கழை - (iv) எடை அளவு
(அ) (a)-(iii), (b)-(i), (c)-(iv), (d)-(ii)
(ஆ) (a)-(iv), (b)-(ii), (c)-(i), (d)-(iii)
(இ) (a)-(i), (b)-(ii), (c)-(iii), (d)-(iv)
(ஈ) (a)-(iv), (b)-(iii), (c)-(ii), (d)-(i)
(a)
(b)
(c)
(d)
விடையைக் காட்டு ▾ (அ) / (a) · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →
1 mark
7.
ஆராய்ந்து சொல்கிறவர் :
(அ) அரசர்
(ஆ) சொல்லியபடி செய்பவர்
(இ) தூதுவர்
(ஈ) உறவினர்
(a)
(b)
(c)
(d)
விடையைக் காட்டு ▾ (இ) / (c) · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →
1 mark
8.
ஐம்பெருங்காப்பியம் என்னும் சொற்றொடரைத் தம் உரையில் குறிப்பிட்டவர் :
(அ) சிவஞான முனிவர்
(ஆ) மயிலைநாதர்
(இ) ஆறுமுக நாவலர்
(ஈ) இளம்பூரணர்
(a)
(b)
(c)
(d)
விடையைக் காட்டு ▾ (ஆ) / (b) · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →
1 mark
9.
அதிசய மலரின் புன்னகையைப் பிடித்தவாறு தமிழ்நதி கடக்கச் செல்வது :
(அ) கடந்தகாலத் துயரங்களை
(ஆ) ஆட்களற்ற பொழுதை
(இ) பச்சையம் இழந்த நிலத்தை
(ஈ) அனைத்தையும்
1 mark
10.
'சாபவிமோசனம்' 'அகலிகை' கதைகளில் தொன்மங்களைப் பயன்படுத்தியவர்
(அ) கு. அழகிரிசாமி
(ஆ) புதுமைப்பித்தன்
(இ) ஜெயமோகன்
(ஈ) எஸ். இராமகிருஷ்ணன்
(a)
(b)
(c)
(d)
விடையைக் காட்டு ▾ (ஆ) / (b) · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →
1 mark
11.
கடலின் பெரியது :
(அ) உற்ற காலத்தில் செய்த உதவி
(ஆ) பயன் ஆராயாமல் ஒருவர் செய்த உதவி
(இ) தினையளவு செய்த உதவி
(ஈ) பயன் எதிர்பார்த்து ஒருவர் செய்த உதவி
(a)
(b)
(c)
(d)
விடையைக் காட்டு ▾ (ஆ) / (b) · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →
1 mark
12.
'விளியறி ஞமலி' - இதில் குறிப்பிடப்படும் விலங்கு எது?
(அ) எருது
(ஆ) குதிரை
(இ) நாய்
(ஈ) யாளி
(a)
(b)
(c)
(d)
விடையைக் காட்டு ▾ (இ) / (c) · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →
1 mark
13.
சிறுபாணாற்றுப்படை காட்டும் பாட்டுடைத் தலைவனின் இன்றைய நிலப்பகுதி :
(அ) உதகமண்டலம்
(ஆ) விழுப்புரம்
(இ) திண்டிவனம்
(ஈ) தருமபுரி
(a)
(b)
(c)
(d)
விடையைக் காட்டு ▾ (இ) / (c) · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →
1 mark
14.
"உவா உற வந்து கூடும்
உடுபதி, இரவி ஒத்தார்" - யார் யார்?
(அ) சடாயு, இராமன்
(ஆ) இராமன், குகன்
(இ) இராமன், சுக்ரீவன்
(ஈ) இராமன், சவரி
(a)
(b)
(c)
(d)
விடையைக் காட்டு ▾ (இ) / (c) · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →
1 mark

பகுதி – II

பிரிவு – 1 (வினா 15 – 18) : எவையேனும் மூன்றனுக்கு விடை தருக. 3×2=6
பிரிவு – 2 (வினா 19 – 21) : எவையேனும் இரண்டனுக்கு விடை தருக. 2×2=4
பிரிவு – 3 (வினா 22 – 30) : எவையேனும் ஏழனுக்கு விடை தருக. 7×2=14
15.
கவிஞர் சிற்பி எவற்றை வியந்து பாட, தமிழின் துணை வேண்டும் என்கிறார் ?
2 marks
16.
நிலையாமை குறித்து, சவரி உரைக்கும் கருத்து யாது ?
2 marks
17.
பகைவராலும் அழிக்க முடியாத அரண் எது ?
2 marks
18.
இறைமகனாரின் இன்னலைக் கண்டு மக்கள் எவ்விதம் புலம்பினர் ?
2 marks
19.
நடை அழகியல் பற்றித் தொல்காப்பியம் கூறும் கருத்தைக் குறிப்பிடுக.
2 marks
20.
எந்தவொரு பொருளைப் பயன்படுத்தும்போதும் அதற்குப் பின்னால் உள்ள மனிதர்களின் உழைப்பை நாம் சிந்திப்பதில்லை. ஒரு தேநீரைப் பருகும்போது, அதற்குப் பின்னால் உள்ள மனித உழைப்பைச் சிந்தித்து உங்கள் கருத்தை எழுதுக.
2 marks
21.
பின்னணி இசை, படத்தின் காட்சியமைப்புக்கு எவ்வாறு உயிரூட்டும் ? சான்று தருக.
2 marks
22.
முடிந்தால் தரலாம், முடித்தால் தரலாம் – இவ்விரு சொற்றொடர்கள் உணர்த்தும் பொருளை அறிந்து தொடர் அமைக்கவும்.
2 marks
23.
மயங்கொலிச் சொற்களை ஒரே தொடரில் அமைத்து எழுதுக.
விலை, விளை, விழை
2 marks
24.
திருவளர்ச்செல்வன், திருவளர் செல்வன் – இவற்றில் சரியான தொடர் எது ? அதற்கான இலக்கண விதி யாது ?
2 marks
25.
தொடரில் உள்ள பிழைகளை நீக்கி எழுதுக.
மானம் பார்த்த பூமியில் பயிறு வகைகள் பயிரிடப்படுகின்றன.
2 marks
26.
படத்திற்குப் பொருத்தமான பின்வரும் திருக்குறளின் விடுபட்ட இடங்களைப் பூர்த்தி செய்க.
சினம் என்னும் சேர்ந்தாரைக் கொல்லி ……………
ஏமப் ……………… சுடும்.
2 marks
27.
கீழ்க்காணும் தொடர்களில் அடைப்புக்குள் உள்ள பெயர்ச்சொல்லைத் தொடர்களுக்கு ஏற்றவாறு மாற்றி எழுதுக.
(அ) உங்களுக்கு ________ (யார்) நன்மை என நினைக்கிறீர்கள்.
(ஆ) நம்முடைய ________ (தேவை) அளவு குறைந்தால் மகிழ்ச்சி பெருகும்.
2 marks
28.
கலைச் சொல்லாக்கம் தருக.
(அ) Subscription     (ஆ) Rubber Stamp
2 marks
29.
ஏதேனும் ஒன்றனுக்குப் பகுபத உறுப்பிலக்கணம் தருக.
(அ) அறிந்து     (ஆ) கலங்கி
2 marks
30.
ஏதேனும் ஒன்றனுக்குப் புணர்ச்சி விதி தருக.
(அ) வானமெல்லாம்     (ஆ) பெருங்கடல்
2 marks

பகுதி – III

பிரிவு – 1 (வினா 31 – 34) : எவையேனும் இரண்டனுக்கு விடை தருக. 2×4=8
பிரிவு – 2 (வினா 35 – 38) : எவையேனும் இரண்டனுக்கு மட்டும் விடை தருக. 2×4=8
பிரிவு – 3 (வினா 39 – 43) : எவையேனும் மூன்றனுக்கு விடை தருக. 3×4=12
31.
வாடைக் காலத்தில் கோவலர்கள் எவ்வாறு பாதுகாப்பைத் தேடினர் ?
4 marks
32.
“மூன்றான காலம் போல் ஒன்று” – எவை ? ஏன் ? விளக்குக.
4 marks
33.
நாட்டிய அரங்கின் அமைப்பை இளங்கோவடிகள் காட்சிப்படுத்தும் பாங்கு குறித்து உங்கள் கருத்தை எழுதுக.
4 marks
34.
அறிவுடை வேந்தனின் நெறி குறித்து, பிசிராந்தையார் கூறுவன யாவை ?
4 marks
35.
‘செம்பரிதி மலைமேட்டில் தலையைச் சாய்ப்பான்
செந்நிறத்துப் பூக்காடாம் வான மெல்லாம்’
தொடர் வெளிப்படுத்தும் காட்சி நயத்தை விளக்குக.
4 marks
36.
தாயும் தந்தையும் பணிக்குச் செல்லும் இன்றைய சூழலில் குடும்ப உறுப்பினர் என்ற முறையில் நீங்கள் குடும்பத்துக்குச் செய்யும் உதவிகள் யாவை ?
4 marks
37.
சென்னையின் பண்பாட்டு அடையாளங்களில், இன்றும் நிலைத்து இருப்பனவற்றைக் குறிப்பிடுக.
4 marks
38.
வேளாண் மேலாண்மை குறித்து நீவிர் பரிந்துரைப்பனவற்றை எழுதுக.
4 marks
39.
(அ)நிரல்நிறை அணியைச் சான்றுடன் விளக்குக.
அல்லது / OR
(ஆ)“எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு” – இக்குறட்பாவில் பயின்று வரும் அணியை விளக்குக.
4 marks
40.
இலக்கிய நயம் பாராட்டுக. (மையக் கருத்துடன் ஏற்புடைய மூன்று நயங்களை எழுதுக.)
அந்தியிருளாற் கருகும் உலகு கண்டேன்
  அவ்வாறே வான்கண்டேன், திசைகள் கண்டேன்.
பிந்தியந்தக் காரிருள்தான் சிரித்த துண்டோ ?
  பெருஞ்சிரிப்பின் ஒளிமுத்தோ நிலவே நீதான்
சிந்தாமல் சிதறாமல் அழகை யெல்லாம்
  சேகரித்துக் குளிரேற்றி ஒளியும் ஊட்டி
இந்தாவென் றேஇயற்கை அன்னை வானில்
  எழில்வாழ்வைச் சித்தரித்த வண்ணந் தானோ ?
– பாரதிதாசன்
4 marks
41.
(அ)பாடாண் திணையைச் சான்றுடன் விளக்குக.
அல்லது / OR
(ஆ)பரிசில் துறையைச் சான்றுடன் விளக்குக.
4 marks
42.
(அ)பின்வரும் பழமொழியை வாழ்க்கை நிகழ்வில் அமைத்து எழுதுக.
யானைக்கும் அடி சறுக்கும்
அல்லது / OR
(ஆ)பின்வரும் பழமொழியை வாழ்க்கை நிகழ்வில் அமைத்து எழுதுக.
குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை
4 marks
43.
தமிழாக்கம் தருக.
1. Knowledge of languages is the doorway to wisdom.
2. A new language is a new life.
3. If you want people to understand you, speak their language.
4. The limits of my language are the limits of my world.
4 marks

பகுதி – IV

அனைத்து வினாக்களுக்கும் விடை தருக. 3×6=18
44.
(அ)கவிதை எழுத அறிய வேண்டுவனவாக சுரதா கூறுவனவற்றை விவரிக்கவும்.
அல்லது / OR
(ஆ)எளிய மக்களின் வலிகளை நாட்டுப்புற இலக்கிய வடிவங்களே முழுமையாகப் பிரதிபலிக்கின்றன – நிறுவுக.
6 marks
45.
(அ)குடும்பம் என்னும் சிறிய அமைப்பிலிருந்தே மனித சமூகம் என்னும் பரந்த அமைப்பு கட்டமைக்கப்படுகிறது – எவ்வாறு ? விளக்குக.
அல்லது / OR
(ஆ)“ஒவ்வொரு நகரத்துக்கும் வரலாறும் வடிவழகும் உண்டு” – நீங்கள் பார்த்த அல்லது வாழ்ந்த ஒரு நகரம் குறித்து இருபக்க அளவில் கட்டுரை எழுதுக.
6 marks
46.
(அ)பொறுப்புணர்ச்சியின்றி இருந்த ஊரைத் தன் பொறுப்புணர்வால் மாற்றிய மருதனின் பண்பு நலத்தை விவரிக்கவும்.
அல்லது / OR
(ஆ)மகாநடிகரைக் கண்ட பாலச்சந்திரனின் மனவோட்டத்தை நயத்துடன் எழுதுக.
6 marks

பகுதி – V

4+2=6
47.
அடிபிறழாமல் செய்யுள் வடிவில் விடை தருக.
(அ) “தன்னேர் இலாத தமிழ்” என்னும் தலைப்பில் இடம் பெற்றுள்ள ‘ஓங்கலிடை வந்து’ எனத் தொடங்கும் மனப்பாடப் பாடலை அடிபிறழாமல் எழுதுக.
(ஆ) “உடைத்து” என முடியும் குறளை அடிபிறழாமல் எழுதுக.
6 marks
⬇️ PDF பதிவிறக்கம் அனைத்து தமிழ் வினாத்தாள்கள்