TN Online Testசமச்சீர் கல்விப் பயிற்சி

12ஆம் வகுப்பு தமிழ் வினாத்தாள் March 2023

வினாத்தாள் குறியீடு 6601 90 மதிப்பெண்கள் 180 நிமிடங்கள்

March 2023 பொதுத் தேர்வின் முழு வினாத்தாள் அச்சிட்டபடியே: ஒவ்வொரு வினாவும் தமிழ், ஆங்கிலத்தில். PDF ஐப் பதிவிறக்குங்கள், அல்லது பகுதி I ஐ இலவச ஆன்லைன் தேர்வாக எழுதுங்கள்.

தமிழ் / தமிழ்March 2023 · March 2023

பகுதி – I

அனைத்து வினாக்களுக்கும் விடை தருக. 14×1=14
1.
தண்டியலங்காரம், __________ என்னும் வடமொழி இலக்கண நூலைத் தழுவி எழுதப்பட்டது.
(அ) சூரிய நிழல்
(ஆ) வீரசோழியம்
(இ) காவியதர்சம்
(ஈ) முத்துவீரியம்
(a)
(b)
(c)
(d)
விடையைக் காட்டு ▾ (இ) / (c) · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →
1 mark
2.
சுரதா நடத்திய கவிதை இதழ் :
(அ) ஊர்வலம்
(ஆ) இலக்கியம்
(இ) விண்மீன்
(ஈ) காவியம்
1 mark
3.
இந்தியாவின் முதல் பொது நூலகம் :
(அ) கீழ்த்திசைச் சுவடிகள் நூலகம்
(ஆ) அண்ணா நூற்றாண்டு நூலகம்
(இ) மறைமலையடிகள் நூலகம்
(ஈ) கன்னிமாரா நூலகம்
(a)
(b)
(c)
(d)
விடையைக் காட்டு ▾ (ஈ) / (d) · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →
1 mark
4.
“மாந்தோப்பு வசந்தத்தின் பட்டாடை உடுத்தியிருக்கிறது”
– இதில் எவ்வகைப் படிமம் வெளிப்படுகிறது ?
(அ) மெய்ப்படிமம்
(ஆ) வினைப்படிமம்
(இ) உருப்படிமம்
(ஈ) பயன்படிமம்
1 mark
5.
சாப்ளினின் சாதனைப் படமான 'தி கிரேட் டிக்டேட்டர்' வெளியான ஆண்டு :
(அ) 1930
(ஆ) 1950
(இ) 1960
(ஈ) 1940
(a)
(b)
(c)
(d)
விடையைக் காட்டு ▾ (ஈ) / (d) · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →
1 mark
6.
'வெங்கதிர்' என்பதன் இலக்கணக் குறிப்பு :
(அ) பண்புத் தொகை
(ஆ) வினைத் தொகை
(இ) உவமைத் தொகை
(ஈ) உம்மைத் தொகை
(a)
(b)
(c)
(d)
விடையைக் காட்டு ▾ (அ) / (a) · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →
1 mark
7.
"எங்கள் தந்தையர் நாடென்ற பேச்சினிலே - ஒரு சக்தி
பிறக்குது மூச்சினிலே"
- என்னும் பாரதியின் பாடல் வெளிப்படுத்துவது :
(அ) தாய் வழிச் சமூகமுறை
(ஆ) தனிக்குடும்ப முறை
(இ) தந்தை வழிச் சமூகமுறை
(ஈ) விரிந்த குடும்ப முறை
(a)
(b)
(c)
(d)
விடையைக் காட்டு ▾ (இ) / (c) · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →
1 mark
8.
ஏட்டுச் சுவடியிலிருந்து திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு :
(அ) 1816
(ஆ) 1812
(இ) 1815
(ஈ) 1824
(a)
(b)
(c)
(d)
விடையைக் காட்டு ▾ (ஆ) / (b) · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →
1 mark
9.
மகரயாழ் எத்தனை நரம்புகளைக் கொண்டது ?
(அ) 16
(ஆ) 21
(இ) 7
(ஈ) 17
1 mark
10.
எளியது, அரியது என்பன :
(அ) சிறுமை பல செய்வது - பகைவர் தொடர்பு
(ஆ) தீயினத்தின் துணை - நல்லினத்தின் துணை
(இ) மெய்ப் பொருள் காண்பது - உருவு கண்டு எள்ளாதது
(ஈ) சொல்வது - சொல்லியபடி செய்வது
(a)
(b)
(c)
(d)
விடையைக் காட்டு ▾ (ஈ) / (d) · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →
1 mark
11.
'பிறனில் விழைவோர் கிளையொடுங் கெடுப' என்பது __________ பாவிகம்.
(அ) மணிமேகலையின்
(ஆ) கம்பராமாயணத்தின்
(இ) வளையாபதியின்
(ஈ) சிலப்பதிகாரத்தின்
(a)
(b)
(c)
(d)
விடையைக் காட்டு ▾ (ஆ) / (b) · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →
1 mark
12.
வெண்பாவின் ஓசை :
(அ) துள்ளல்
(ஆ) அகவல்
(இ) தூங்கல்
(ஈ) செப்பல்
(a)
(b)
(c)
(d)
விடையைக் காட்டு ▾ (ஈ) / (d) · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →
1 mark
13.
தமிழில் உயிர்மெய்யெழுத்துகள் 216. அவ்வாறெனில் உயிர்மெய் நெடில் எழுத்துகள் :
(அ) 136
(ஆ) 120
(இ) 126
(ஈ) 116
(a)
(b)
(c)
(d)
விடையைக் காட்டு ▾ (இ) / (c) · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →
1 mark
14.
'தம்மனை' என்பது __________ இல்லம்.
(அ) தந்தையின்
(ஆ) மனைவியின்
(இ) உடன்பிறந்தானின்
(ஈ) கணவனின்
(a)
(b)
(c)
(d)
விடையைக் காட்டு ▾ (ஆ) / (b) · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →
1 mark

பகுதி – II

பிரிவு – 1 (வினா 15 – 18) : எவையேனும் மூன்றனுக்கு விடை தருக. 3×2=6
பிரிவு – 2 (வினா 19 – 21) : எவையேனும் இரண்டனுக்கு விடை தருக. 2×2=4
பிரிவு – 3 (வினா 22 – 30) : எவையேனும் ஏழனுக்கு விடை தருக. 7×2=14
15.
‘நகரம் பட்டை தீட்டிய வெள்ளை வைரமாகிறது’ – விளக்கம் தருக.
2 marks
16.
மறக்கக் கூடாதது, மறக்கக் கூடியது எவற்றை ?
2 marks
17.
தொன்மம் – விளக்கம் தருக.
2 marks
18.
‘எத்திசையிலும் சோறு தட்டாது கிட்டும்’ – யாருக்கு ?
2 marks
19.
இயல்பு வழக்குகளைக் கலையியல் வழக்குகளாக மாற்றுபவை எவை ?
2 marks
20.
எழுத்தாணியின் வகைகள் யாவை ?
2 marks
21.
பின்னணி இசை, படத்தின் காட்சியமைப்புக்கு எவ்வாறு உயிரூட்டும் ? சான்று தருக.
2 marks
22.
மயங்கொலிச் சொற்களை ஒரே தொடரில் அமைத்து எழுதுக.
தலை, தளை, தழை
2 marks
23.
ஏதேனும் ஒன்றனுக்குப் பகுபத உறுப்பிலக்கணம் தருக.
(அ) ஈந்த     (ஆ) பேசுவார்
2 marks
24.
ஏதேனும் ஒன்றனுக்குப் புணர்ச்சி விதி தருக.
(அ) தனியாழி     (ஆ) அருங்கானம்
2 marks
25.
கலைச் சொல்லாக்கம் தருக.
(அ) Passport     (ஆ) Folder

குறிப்பு : செவி மாற்றுத் திறனாளர்களுக்கான மாற்று வினா.
பின்வரும் மரபுச் சொல்லைத் தொடரில் அமைத்து எழுதுக.
ஆற அமர
2 marks
26.
படத்திற்குப் பொருத்தமான பின்வரும் திருக்குறளின் விடுபட்ட இடங்களைப் பூர்த்தி செய்க.
உருவுகண்டு ________ வேண்டும் உருள்பெருந்தேர்க்கு
________ அன்னார் உடைத்து.
2 marks
27.
வல்லின மெய்களை இட்டும், நீக்கியும் எழுதுக.
ஆசிரியருக்கு கீழ்படிதல் என்னும் குணம், உண்மையானவற்றை தெரிந்துக் கொண்டு, அறியாமையினை அகற்றி பல நல்லனவற்றை கற்று கொடுக்கும்.
2 marks
28.
பேச்சு வழக்கை எழுத்து வழக்காக மாற்றுக.
ரவைக்கு சித்தப்பன காவலுக்குப் போவ சொல்.
2 marks
29.
சொல்லைப் பிரித்தும் சேர்த்தும் தொடரமைக்க.
(அ) வெங்காயம்     (ஆ) தலைமை
2 marks
30.
தொடரில் இடம் பெற்றுள்ள மரபுப் பிழைகளை நீக்கி எழுதுக.
ஆட்டுத் தொழுவத்தைச் சுற்றிலும் எலிகள் பொந்துகள் அமைத்திருந்தன.
2 marks

பகுதி – III

பிரிவு – 1 (வினா 31 – 34) : எவையேனும் இரண்டனுக்கு விடை தருக. 2×4=8
பிரிவு – 2 (வினா 35 – 38) : எவையேனும் இரண்டனுக்கு மட்டும் விடை தருக. 2×4=8
பிரிவு – 3 (வினா 39 – 43) : எவையேனும் மூன்றனுக்கு விடை தருக. 3×4=12
31.
‘பாண்டியரின் சங்கத்தில் கொலுவிருந்தாய்’ என்று சிற்பி கூறுவதன் பொருள் யாது ?
4 marks
32.
இராமலிங்க அடிகள் கந்தவேளிடம் எத்தகையோர் உறவு வேண்டுமெனக் கேட்கிறார் ?
4 marks
33.
வாடைக்காலத்தில் கோவலர்கள் எவ்வாறு பாதுகாப்பைத் தேடினர் ?
4 marks
34.
அதிசய மலரின் பூச்செடி எவ்வாறு முளைத்ததாக தமிழ்நதி கூறுகிறார் ?
4 marks
35.
சங்கப் பாடல்களில் ஒலிக்கோலம் குறிப்பிடத்தக்க ஒரு பண்பாகும் – விளக்குக.
4 marks
36.
நீங்கள் ஆசிரியரானால் மாணாக்கரை அன்பினால் எவ்வகையில் நெறிப்படுத்துவீர்கள் ?
4 marks
37.
மயிலை சீனி. வேங்கடசாமி நினைவுச் சிறப்பிதழுக்குச் செய்திகள் உருவாக்கித் தருக.
4 marks
38.
தாய் வழிக் குடும்பம் குறித்து பக்தவத்சல பாரதி கூறும் கருத்துகளை விவரிக்கவும்.
4 marks
39.
(அ)ஏகதேச உருவக அணியைச் சான்றுடன் விளக்குக.
அல்லது / OR
(ஆ)உடம்பாடு இலாதவர் வாழ்க்கை குடங்கருள்
பாம்போடு உடன்உறைந் தற்று.
– இக்குறட்பாவில் பயின்று வரும் அணியை விளக்குக.
4 marks
40.
இலக்கிய நயம் பாராட்டுக.
(மையக்கருத்துடன் ஏற்புடைய மூன்று நயங்களை எழுதுக)
வெட்டி யடிக்குது மின்னல் – கடல்
    வீரத் திரைகொண்டு விண்ணை யிடிக்குது;
கொட்டி யிடிக்குது மேகம் – கூ
    கூவென்று விண்ணைக் குடையுது காற்று
சட்டச்சட சட்டச்சட டட்டா – என்று
    தாளங்கள் கொட்டிக் கனைக்குது வானம்
எட்டுத்திசையும் இடிய – மழை
    எங்ஙனம் வந்ததடா தம்பி வீரா !
– பாரதியார்
4 marks
41.
(அ)பின்வரும் பழமொழியை வாழ்க்கை நிகழ்வில் அமைத்து எழுதுக.
குன்றின் மேலிட்ட விளக்கு போல
அல்லது / OR
(ஆ)பின்வரும் பழமொழியை வாழ்க்கை நிகழ்வில் அமைத்து எழுதுக.
எறும்பு ஊரக் கல்லும் தேயும்
4 marks
42.
(அ)வெண்பாவிற்கான இலக்கணம் யாது ?
அல்லது / OR
(ஆ)பாடாண் திணையைச் சான்றுடன் விளக்குக.
4 marks
43.
தமிழாக்கம் தருக.
I make sure I have the basic good habits which include respecting my elders, greeting people when I meet them, wishing them well when departing etc., other than this, observing the law, serving the poor and downtrodden, helping the sick and needy, giving shelter to the homeless, assisting someone who is physically challenged etc., are also other good habits of mine. To lead on a peaceful life, I develop other good habits, writing, listening to music, dancing, singing etc., are other such habits which fulfill the needs of my soul.

காது கேளாதவர்களுக்கான மாற்று வினா.
கீழ்க்காணும் பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடை தருக.
நகரங்கள், சமூகத்தின் பண்பாட்டுக் கூறுகளுள் முதன்மையானவையாகும். சமூகத்தின் கடந்தகால வரலாற்றுக்கும், நிகழ்கால வாழ்விற்கும், எதிர்கால வளர்ச்சிக்கும் அவை துணை நிற்கின்றன. தென்னிந்தியாவின் நுழைவுவாயில் என்றழைக்கப்படும் ‘சென்னை’ இன்று தமிழகமெங்கும் பரவி வாழும் தமிழர்களின் பண்பாட்டு அடையாளம். அவ்வகையில் இந்தியாவின் முதன்மை நகரங்களுள் ஒன்றாகவும் தமிழகத்தின் தலைநகராகவும் திகழ்கின்ற சென்னையின் வரலாறும், வளர்ச்சியும் நாம் அறிந்துகொள்ள வேண்டிய ஒன்று.
வினாக்கள் :
(1) பண்பாட்டுக் கூறுகளுள் முதன்மையானது எது ?
(2) தென்னிந்தியாவின் நுழைவுவாயில் என அழைக்கப்படும் நகரம் எது ?
(3) நகரங்கள் சமூகத்தில் எவ்வாறு துணை நிற்கின்றன ?
(4) நாம் அறிய வேண்டிய சிறப்புகள் யாவை ?
4 marks

பகுதி – IV

குறிப்பு : அனைத்து வினாக்களுக்கும் விடை தருக. 3×6=18
44.
(அ)கவிதையின் நடையைக் கட்டமைக்கும் அழகியல் கூறுகளை எடுத்துக்காட்டி விளக்குக.
அல்லது / OR
(ஆ)திருக்குறள் ஒரு வாழ்வியல் இலக்கியம் – நிறுவுக.
6 marks
45.
(அ)‘நெகிழி தவிர்த்து நிலத்தை நிமிர்த்து’ என்னும் தலைப்பில் சுற்றுச்சூழல் ஆர்வலர் பசுமைதாசனாருடன் நீங்கள் நடத்திய கற்பனைக் கலந்துரையாடல் கருத்துகளைத் தொகுத்து எழுதுக.
அல்லது / OR
(ஆ)மயிலையார் ஓர் ‘ஆராய்ச்சிப் பேரறிஞர்’ என்னும் கூற்றினைச் சான்றுகளுடன் கட்டுரைக்க.
6 marks
46.
(அ)‘கோடை மழை’ கதை வாயிலாக விளக்கப்படும் மனிதநேயப் பண்புகளை விளக்குக.
அல்லது / OR
(ஆ)பாரதியின் கடிதம் வாயிலாக நீங்கள் அறிந்துகொண்ட மொழிப்பற்று, சமூகப்பற்று ஆகியவற்றை விவரிக்கவும்.
6 marks

பகுதி – V

4+2=6
47.
அடிபிறழாமல் செய்யுள் வடிவில் விடை தருக.
(அ) “தெய்வமணிமாலை” என்னும் தலைப்பில் இடம் பெற்றுள்ள ‘ஒருமையுடன்’ எனத் தொடங்கும் மனப்பாடப் பாடலை அடிபிறழாமல் எழுதுக.
(ஆ) ‘சினம்’ என முடியும் குறளை அடிபிறழாமல் எழுதுக.
6 marks
⬇️ PDF பதிவிறக்கம் அனைத்து தமிழ் வினாத்தாள்கள்