TN Online Testசமச்சீர் கல்விப் பயிற்சி

12ஆம் வகுப்பு தமிழ் வினாத்தாள் Supplementary June 2024

வினாத்தாள் குறியீடு 7901 90 மதிப்பெண்கள் 180 நிமிடங்கள்

Supplementary June 2024 பொதுத் தேர்வின் முழு வினாத்தாள் அச்சிட்டபடியே: ஒவ்வொரு வினாவும் தமிழ், ஆங்கிலத்தில். PDF ஐப் பதிவிறக்குங்கள், அல்லது பகுதி I ஐ இலவச ஆன்லைன் தேர்வாக எழுதுங்கள்.

தமிழ் / தமிழ்Supplementary June 2024 · June 2024

பகுதி – I

அனைத்து வினாக்களுக்கும் விடை தருக. 14×1=14
1.
சங்க இலக்கியத்தில், அகத்திணை மாந்தர்களின் உள்ளத்து உணர்வுகளைக் குறிப்பாக உணர்த்தும் குறியீடுகள் :
(அ) உவமை
(ஆ) உவமேயம்
(இ) உத்தி
(ஈ) உள்ளுறை உவமை
(a)
(b)
(c)
(d)
விடையைக் காட்டு ▾ (ஈ) / (d) · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →
1 mark
2.
இலக்கியத்தையும் மொழியையும் ஒருசேரப் பேசுகின்ற இலக்கண நூல் :
(அ) யாப்பருங்கலக்காரிகை
(ஆ) தண்டியலங்காரம்
(இ) தொல்காப்பியம்
(ஈ) நன்னூல்
(a)
(b)
(c)
(d)
விடையைக் காட்டு ▾ (இ) / (c) · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →
1 mark
3.
கடையெழு வள்ளல்களின் வரிசையைச் சாராத மன்னர்கள் :
(அ) ஆய் அண்டிரனும் அதிகனும்
(ஆ) நல்லியக்கோடனும் குமணனும்
(இ) நள்ளியும் ஓரியும்
(ஈ) பாரியும் காரியும்
(a)
(b)
(c)
(d)
விடையைக் காட்டு ▾ (ஆ) / (b) · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →
1 mark
4.
திண்ணியர் என்பதன் பொருள் :
(அ) அறிவுடையவர்
(ஆ) மனஉறுதியுடையவர்
(இ) தீக்காய்வார்
(ஈ) அறிவினார்
(a)
(b)
(c)
(d)
விடையைக் காட்டு ▾ (ஆ) / (b) · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →
1 mark
5.
கூற்று 1 : காப்பியம் என்னும் சொல் காப்பு + இயம் எனப் பிரிந்து மரபைக் காப்பது, இயம்புவது, வெளிப்படுத்துவது, மொழியைச் சிதையாமல் காப்பது என்றெல்லாம் பொருள் தருகிறது.
கூற்று 2 : ஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்று நீலகேசி.
(அ) கூற்று (1) சரி, கூற்று (2) தவறு
(ஆ) கூற்று (2) சரி, கூற்று (1) தவறு
(இ) இரண்டும் சரி
(ஈ) இரண்டும் தவறு
(a)
(b)
(c)
(d)
விடையைக் காட்டு ▾ (அ) / (a) · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →
1 mark
6.
'உள்ளொன்று வைத்துப் புறம்பொன்று பேசுவார்' - இத்தொடர் உணர்த்தும் பண்பு :
(அ) நேர்மறைப் பண்பு
(ஆ) எதிர்மறைப் பண்பு
(இ) முரண் பண்பு
(ஈ) இவை அனைத்தும்
(a)
(b)
(c)
(d)
விடையைக் காட்டு ▾ (இ) / (c) · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →
1 mark
7.
அதிசய மலரின் புன்னகை உணர்த்துவது :
(அ) நம்பிக்கை
(ஆ) பெருமிதம்
(இ) புகழ்
(ஈ) அச்சம்
1 mark
8.
சுரதா நடத்திய கவிதை இதழ் :
(அ) இலக்கியம்
(ஆ) காவியம்
(இ) ஊர்வலம்
(ஈ) விண்மீன்
1 mark
9.
'குழிமாற்று' என்னும் சொல்லோடு தொடர்புடைய துறை :
(அ) இலக்கியம்
(ஆ) கணிதம்
(இ) புவியியல்
(ஈ) வேளாண்மை
(a)
(b)
(c)
(d)
விடையைக் காட்டு ▾ (ஆ) / (b) · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →
1 mark
10.
யார் ? எது ? ஆகிய வினாச்சொற்கள் பயனிலையாய் அமைந்து, உணர்த்தும் திணைகள் முறையே ______.
(அ) அஃறிணை, உயர்திணை
(ஆ) உயர்திணை, அஃறிணை
(இ) விரவுத்திணை, அஃறிணை
(ஈ) விரவுத்திணை, உயர்திணை
(a)
(b)
(c)
(d)
விடையைக் காட்டு ▾ (ஆ) / (b) · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →
1 mark
11.
வெள்ளச் சமவெளிகள் அழியக் காரணம் :
(அ) பருவநிலை மாற்றம்
(ஆ) மணல் அள்ளுதல்
(இ) பாறைகள் இல்லாமை
(ஈ) நிலத்தடிநீர் உறிஞ்சப்படுதல்
1 mark
12.
புதுப்பெயல் பொழிந்தென - அடிக்கோடிட்ட சொல்லின் இலக்கணக்குறிப்பு :
(அ) வினைத்தொகை
(ஆ) உரிச்சொல் தொடர்
(இ) பண்புத்தொகை
(ஈ) ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
(a)
(b)
(c)
(d)
விடையைக் காட்டு ▾ (இ) / (c) · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →
1 mark
13.
வேறுபட்டதைத் தேர்வு செய்க.
(அ) அண்மைக் காட்சித் துணிப்பு
(ஆ) சேய்மைக் காட்சித் துணிப்பு
(இ) நடுக் காட்சித் துணிப்பு
(ஈ) காட்சி மறைவு
(a)
(b)
(c)
(d)
விடையைக் காட்டு ▾ (ஈ) / (d) · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →
1 mark
14.
படிமம் என்பதன் பொருள் :
(அ) சொல்
(ஆ) செயல்
(இ) காட்சி
(ஈ) ஒலி
(a)
(b)
(c)
(d)
விடையைக் காட்டு ▾ (இ) / (c) · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →
1 mark

பகுதி – II

பிரிவு – 1 (வினா 15 – 18) : எவையேனும் மூன்றனுக்கு விடை தருக. 3×2=6
பிரிவு – 2 (வினா 19 – 21) : எவையேனும் இரண்டனுக்கு மட்டும் விடை தருக. 2×2=4
பிரிவு – 3 (வினா 22 – 30) : எவையேனும் ஏழனுக்கு விடை தருக. 7×2=14
15.
எதிர்பாராத நிகழ்வுகளை ஜலாலுத்தீன் ரூமி எவ்வாறு உருவகப்படுத்துகிறார் ?
2 marks
16.
ஒருமுக எழினி, பொருமுக எழினி – குறிப்பு எழுதுக.
2 marks
17.
அறிவுடை வேந்தனின் நெறி குறித்து, பிசிராந்தையார் கூறுவன யாவை ?
2 marks
18.
கவிஞர் சிற்பி எவற்றை வியந்து பாட, தமிழின் துணை வேண்டும் என்கிறார் ?
2 marks
19.
‘தமிழர் வளர்த்த அழகுக் கலைகள்’ நூல் பற்றிக் குறிப்பு வரைக.
2 marks
20.
‘ஆளுக்கொரு மரம் வளர்ப்போம்’ என்னும் முழக்கத்தொடர் வாயிலாக எவற்றை வலியுறுத்துவாய் ?
2 marks
21.
சங்க காலத்தில் தாய்வழிச் சமூக முறையில் பெண்கள் பெற்றிருந்த உரிமைகள் யாவை ?
2 marks
22.
வேறொரு பொருள் அமையுமாறு சொற்களைச் சேர்த்துத் தொடரமைக்க.
மாணவர்கள் வரிசையில் நின்று அறிவியல் கண்காட்சியைக் கண்டனர்.
2 marks
23.
மயங்கொலிச் சொற்களை ஒரே தொடரில் அமைத்து எழுதுக.
அலை, அளை, அழை
2 marks
24.
பொருத்தமான வேற்றுமை உருபுகளைச் சேர்த்துத் தொடரமைக்க.
காலை எழுந்து படித்து நமக்கு நன்மை ஏற்படும்.
2 marks
25.
தொடரில் உள்ள பிழைகளை நீக்கி எழுதுக.
நம் மானிலம் இந்த ஆண்டு வரட்சியால் பாதிக்கப்பட்டது.
2 marks
26.
சொல்லைப் பிரித்தும் சேர்த்தும் தொடரமைக்க.
(அ) பலகை     (ஆ) தலைமை
2 marks
27.
ஏதேனும் ஒன்றனுக்குப் பகுபத உறுப்பிலக்கணம் தருக.
(அ) சாற்றி     (ஆ) அமர்ந்தனன்
2 marks
28.
ஏதேனும் ஒன்றனுக்குப் புணர்ச்சி விதி தருக.
(அ) செந்தமிழே     (ஆ) தலைக்கோல்
2 marks
29.
தொடரில் இடம்பெற்றுள்ள மரபுப் பிழைகளை நீக்கி எழுதுக.
வன விலங்குக் காப்பகத்தில் சிங்கக்குட்டியும் யானைக் குட்டியும் கண்டேன்.
2 marks
30.
பத்தியைப் படித்துத் தேவையான இடங்களில் நிறுத்தக்குறிகளை இட்டு எழுதுக.
இளங்கோவடிகள் சாத்தனாரிடம் முன்செய்த வினை நிறைவேறும் காலம் என்றீர்களே அவர்களுடைய முந்தைய வினை யாது அதன் விளைவு என்ன நிகழ்ந்த காலம் யாது அதை நீங்கள் அறிந்திருந்தால் கூறுக எனக் கேட்டார்
2 marks

பகுதி – III

பிரிவு – 1 (வினா 31 – 34) : எவையேனும் இரண்டு வினாக்களுக்கு விடை தருக. 2×4=8
பிரிவு – 2 (வினா 35 – 38) : எவையேனும் இரண்டு வினாக்களுக்கு விடை தருக. 2×4=8
பிரிவு – 3 (வினா 39 – 43) : எவையேனும் மூன்றனுக்கு மட்டும் விடை தருக. 3×4=12
31.
குகனோடு ஐவராகி, வீடணனோடு எழுவரான நிகழ்வுகளைச் சுட்டிக் காட்டுக.
4 marks
32.
எங்கிருந்தோ வருகிறது
வண்ணத்துப் பூச்சியொன்று
பறவைகளும் வரக் கூடும் நாளை
– இடஞ்சுட்டிப் பொருள் விளக்குக.
4 marks
33.
அறிவின் மேன்மை பற்றித் திருக்குறள் வழி நீவிர் கருதுவன யாவை ?
4 marks
34.
வாடைக் காலத்தில் கோவலர்கள் எவ்வாறு பாதுகாப்பைத் தேடினர் ?
4 marks
35.
நீங்கள் ஆசிரியரானால் மாணாக்கரை அன்பினால் எவ்வகையில் நெறிப்படுத்துவீர்கள் ?
4 marks
36.
மழைவெள்ளப் பாதிப்பிலிருந்து காத்துக்கொள்ளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைக் குறிப்பிடுக.
4 marks
37.
மயிலை சீனி. வேங்கடசாமி நினைவுச் சிறப்பிதழுக்குச் செய்திகள் உருவாக்கித் தருக.
4 marks
38.
திரைப்படத்தின் காட்சியின் ஆற்றலை எடுத்துக்காட்டுடன் புலப்படுத்துக.
4 marks
39.
(அ)பொருள் வேற்றுமை அணியைச் சான்று தந்து விளக்குக.
அல்லது / OR
(ஆ)அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது.
– இக்குறட்பாவில் பயின்று வரும் அணியை விளக்குக.
4 marks
40.
இலக்கிய நயம் பாராட்டுக.
(மையக் கருத்துடன் ஏற்புடைய மூன்று நயங்களை எழுதுக.)
பெற்றெடுத்த தமிழ்த்தாயைப் பின்னால் தள்ளி
பிறமொழிக்கு சிறப்பளித்த பிழையை நீக்க
ஊற்றெடுத்தே அன்புரையால் உலுங்க வைத்திவ்
உலகத்தில் தமிழ்மொழிக்கு நிகரும் உண்டோ ?
கற்றுணர்ந்தே அதன்இனிமை காண்பாய் என்று
கம்பனொடு வள்ளுவனைச் சுட்டிக் காட்டித்
தெற்றெனநம் அகக்கண்ணைத் திறந்து விட்ட
தெய்வக்கவி பாரதிஓர் ஆசான் திண்ணம்.
– நாமக்கல் கவிஞர்.
4 marks
41.
(அ)பாடாண் திணையைச் சான்று தந்து விளக்குக.
அல்லது / OR
(ஆ)பரிசில் துறையைச் சான்று தந்து விளக்குக.
4 marks
42.
(அ)பின்வரும் பழமொழியை வாழ்க்கை நிகழ்வில் அமைத்து எழுதுக.
எறும்பு ஊரக் கல்லும் தேயும்.
அல்லது / OR
(ஆ)பின்வரும் பழமொழியை வாழ்க்கை நிகழ்வில் அமைத்து எழுதுக.
யானைக்கும் அடிசறுக்கும்.
4 marks
43.
(அ)தமிழாக்கம் தருக.
Periyar was not only a great social revolutionary; he was something more than that. He is known as a great champion of the underprivileged; even in this sphere he was much more than that. His sphere of activity was very wide and when he took up any issue he went deep into it, understood all the aspects of it and did not rest until he had found a permanent solution to it. Communal differences in our society were deep-rooted and appeared to be permanent features of our society until Periyar came on the scene.
அல்லது / OR
(ஆ)செவி மாற்றுத் திறனாளர்களுக்கான மாற்று வினா.
கீழ்க்காணும் பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடை தருக.
மொழி என்பது மக்கள் படைத்துக் காக்கும் அரியதொரு கலை. மொழியே மக்கள் அறிவை வளர்த்து உயர்த்தும் அரிய கருவியாகவும் உள்ளது. பெற்ற தாயின் முதல் வேட்கை தன் குழந்தையுடன் பேசுதல். அவள் முதலில் அடையும் பெரிய மகிழ்ச்சி, குழந்தையின் பேச்சைக் கேட்பதே ஆகும். குழந்தையின் மனவளர்ச்சியோடு தொடர்பு உடையது மொழி வளர்ச்சியே ஆகும். மனம் என்பது பெரும்பாலும் மொழியால் வளர்ந்து அமைந்தது. மனத்தின் வளர்ச்சிக்கு ஏற்பவே பேசுவோரின் மொழியும் வளர்ச்சி பெற்று நிற்கும். மக்கள் அனைவரும் மொழிக்கு ஆசிரியராகவும் உள்ளனர்; மாணவராகவும் உள்ளனர். மொழியை வளர்ப்பவரும் மக்களே; மொழியால் வளர்பவரும் மக்களே.
வினாக்கள் :
1. மொழி என்பது யாது ?
2. பெற்ற தாயின் முதல் வேட்கை யாது ?
3. மொழி வளர்ச்சி எதனோடு தொடர்புடையது ?
4. இப்பத்திக்கு ஏற்ற தலைப்பு தருக.
4 marks

பகுதி – IV

அனைத்து வினாக்களுக்கும் விடை தருக. 3×6=18
44.
(அ)தமிழின் சீரிளமைத் திறம் வியந்து கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம் கூறுவனவற்றைத் தொகுத்து எழுதுக.
அல்லது / OR
(ஆ)சினத்தைக் காத்தல் வாழ்வை மேம்படுத்தும்
– இக்கூற்றை முப்பால் வழி விரித்துரைக்க.
6 marks
45.
(அ)‘நெகிழி தவிர்த்து நிலத்தை நிமிர்த்து’ என்னும் தலைப்பில் சுற்றுச்சூழல் ஆர்வலர் பசுமைதாசனாருடன் நீங்கள் நடத்திய கற்பனைக் கலந்துரையாடலைத் தொகுத்து எழுதுக.
அல்லது / OR
(ஆ)நிருவாக மேலாண்மை குறித்து வெ. இறையன்பு கூறும் கருத்துகளைத் தொகுத்து எழுதுக.
6 marks
46.
(அ)‘உரிமைத்தாகம்’ கதையில் சகோதரர்கள் இருவரும் ஒன்றிணையாமல் இருந்திருந்தால் ….. கதையைத் தொடர்ந்து எழுதி முடிக்க.
அல்லது / OR
(ஆ)“கிராமங்கள் தங்கள் முகவரியை இழந்து வருகின்றன”
– இது குறித்து உங்கள் கருத்தை விவரிக்க.
6 marks

பகுதி – V

அடிபிறழாமல் செய்யுள் வடிவில் விடை தருக. 4+2=6
47.
(அ) “இதில் வெற்றி பெற” என்னும் தலைப்பில் இடம்பெற்றுள்ள ‘விண்வேறு’ எனத் தொடங்கும் மனப்பாடப் பாடலை அடிபிறழாமல் எழுதுக.
(ஆ) ‘புகின்’ என முடியும் குறளை அடிபிறழாமல் எழுதுக.
6 marks
⬇️ PDF பதிவிறக்கம் அனைத்து தமிழ் வினாத்தாள்கள்