TN Online Testசமச்சீர் கல்விப் பயிற்சி

12ஆம் வகுப்பு தமிழ் வினாத்தாள் Supplementary June 2026

வினாத்தாள் குறியீடு 9401 90 மதிப்பெண்கள் 180 நிமிடங்கள்

Supplementary June 2026 பொதுத் தேர்வின் முழு வினாத்தாள் அச்சிட்டபடியே: ஒவ்வொரு வினாவும் தமிழ், ஆங்கிலத்தில். PDF ஐப் பதிவிறக்குங்கள், அல்லது பகுதி I ஐ இலவச ஆன்லைன் தேர்வாக எழுதுங்கள்.

தமிழ் / தமிழ்Supplementary June 2026 · June 2026

பகுதி – I

குறிப்பு : (i) அனைத்து வினாக்களுக்கும் விடை தருக. (ii) கொடுக்கப்பட்டுள்ள நான்கு மாற்று விடைகளில் மிகவும் ஏற்புடைய விடையைத் தேர்ந்தெடுத்துக் குறியீட்டுடன் விடையினையும் சேர்த்து எழுதவும். 14×1=14
1.
"செம்பரிதி".... எனத் தொடங்கும் பாடல் இடம்பெற்றுள்ள கவிதைத் தொகுப்பு :
(அ) ஒளிப்பறவை
(ஆ) நிலவுப்பூ
(இ) சர்ப்பயாகம்
(ஈ) சூரியநிழல்
(a)
(b)
(c)
(d)
விடையைக் காட்டு ▾ (ஆ) / (b) · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →
1 mark
2.
ஆராய்ந்து சொல்கிறவர் ______.
(அ) அரசர்
(ஆ) சொல்லியபடி செய்பவர்
(இ) தூதுவர்
(ஈ) உறவினர்
(a)
(b)
(c)
(d)
விடையைக் காட்டு ▾ (இ) / (c) · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →
1 mark
3.
'குடும்பு' - என்னும் சொல் உணர்த்தும் பொருள் ______.
(அ) தனித்து வாழ்தல்
(ஆ) கூடி வாழுதல்
(இ) விரிந்த குடும்பம்
(ஈ) தனிக்குடும்பம்
(a)
(b)
(c)
(d)
விடையைக் காட்டு ▾ (ஆ) / (b) · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →
1 mark
4.
இந்தியாவின் முதல் பொதுநூலகம் ______ ஆகும்.
(அ) கீழ்த்திசைச் சுவடிகள் நூலகம்
(ஆ) கன்னிமாரா நூலகம்
(இ) சென்னை இலக்கியச் சங்கம்
(ஈ) அண்ணா நூற்றாண்டு நூலகம்
(a)
(b)
(c)
(d)
விடையைக் காட்டு ▾ (ஆ) / (b) · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →
1 mark
5.
'குழி மாற்று' என்னும் சொல்லோடு தொடர்புடைய துறை :
(அ) இலக்கியம்
(ஆ) கணிதம்
(இ) புவியியல்
(ஈ) வேளாண்மை
(a)
(b)
(c)
(d)
விடையைக் காட்டு ▾ (ஆ) / (b) · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →
1 mark
6.
'தமிழ்த்தாத்தா' என்று போற்றப்படும் பெருமைக்குரியவர் ______.
(அ) வ.உ.சி.
(ஆ) திரு.வி.க.
(இ) உ.வே.சா.
(ஈ) மு.வ.
(a)
(b)
(c)
(d)
விடையைக் காட்டு ▾ (இ) / (c) · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →
1 mark
7.
யார் ? எது ? ஆகிய வினாச்சொற்கள் பயனிலையாய் அமைந்து, உணர்த்தும் திணைகள் முறையே ______.
(அ) அஃறிணை, உயர்திணை
(ஆ) உயர்திணை, அஃறிணை
(இ) விரவுத்திணை, அஃறிணை
(ஈ) விரவுத்திணை, உயர்திணை
(a)
(b)
(c)
(d)
விடையைக் காட்டு ▾ (ஆ) / (b) · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →
1 mark
8.
கல்வியை நிலைக்களனாகக் கொண்ட மெய்ப்பாடு :
(அ) பெருமிதம்
(ஆ) உவகை
(இ) நகை
(ஈ) மருட்கை
(a)
(b)
(c)
(d)
விடையைக் காட்டு ▾ (அ) / (a) · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →
1 mark
9.
பொருள்கோள் எத்தனை வகைப்படும் ?
(அ) ஐந்து
(ஆ) நான்கு
(இ) ஆறு
(ஈ) எட்டு
(a)
(b)
(c)
(d)
விடையைக் காட்டு ▾ (ஈ) / (d) · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →
1 mark
10.
Museum - என்ற சொல்லின் கலைச்சொல் தருக.
(அ) அருங்காட்சியகம்
(ஆ) ஆவணக்காப்பகம்
(இ) வன்பொருள்
(ஈ) மென்பொருள்
(a)
(b)
(c)
(d)
விடையைக் காட்டு ▾ (அ) / (a) · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →
1 mark
11.
பொய்யா வானம் - இலக்கணக் குறிப்பைத் தேர்க.
(அ) வினைத்தொகை
(ஆ) உரிச்சொல் தொடர்
(இ) இடைச்சொல் தொடர்
(ஈ) ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
(a)
(b)
(c)
(d)
விடையைக் காட்டு ▾ (ஈ) / (d) · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →
1 mark
12.
பொருத்தி விடை தேர்க.
விதிமீறல் - தண்டத்தொகை
(1) கைப்பேசியில் பேசிக்கொண்டு வாகனம் இயக்குதல் - (i) 2,000 ரூபாய்
(2) பந்தயம் வைத்து வாகனம் ஓட்டுதல் - (ii) 25,000 ரூபாய்
(3) காப்பீடு இல்லாத வாகனம் ஓட்டுதல் - (iii) 5,000 ரூபாய்
(4) 18 வயது முழுமையடையாதவர் வாகனத்தை இயக்கினால், அவரின் பெற்றோருக்கு - (iv) 1,000 ரூபாய்
(அ) (1)-(iv), (2)-(iii), (3)-(i), (4)-(ii)
(ஆ) (1)-(iii), (2)-(iv), (3)-(ii), (4)-(i)
(இ) (1)-(ii), (2)-(i), (3)-(iii), (4)-(iv)
(ஈ) (1)-(i), (2)-(ii), (3)-(iv), (4)-(iii)
(a)
(b)
(c)
(d)
விடையைக் காட்டு ▾ (அ) / (a) · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →
1 mark
13.
"சுருக்கிய
குடையைப் போலத்
தோன்றும்
அசோகமரம்"
- இக்கவிதையில் பயின்று வருவது :
(அ) வினை உவமை
(ஆ) பயன் உவமை
(இ) உரு உவமை
(ஈ) மெய் உவமை
(a)
(b)
(c)
(d)
விடையைக் காட்டு ▾ (ஈ) / (d) · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →
1 mark
14.
"வாளால் அறுத்துச் சுடினும்...."
- இவ்வடியின் மூலம் குலசேகராழ்வார் வெளிப்படுத்துவது ______.
(அ) போர்
(ஆ) மருத்துவம்
(இ) விளையாட்டு
(ஈ) வேளாண்மை
(a)
(b)
(c)
(d)
விடையைக் காட்டு ▾ (ஆ) / (b) · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →
1 mark

பகுதி – II

பிரிவு – 1 (வினா 15 – 18) : எவையேனும் மூன்றனுக்கு விடை தருக. 3×2=6
பிரிவு – 2 (வினா 19 – 21) : எவையேனும் இரண்டனுக்கு விடை தருக. 2×2=4
பிரிவு – 3 (வினா 22 – 30) : எவையேனும் ஏழனுக்கு விடை தருக. 7×2=14
15.
கவிஞர் சிற்பி எவற்றை வியந்து பாட, தமிழின் துணை வேண்டும் என்கிறார் ?
2 marks
16.
சினத்தை ஏன் காக்க வேண்டும் ?
2 marks
17.
மயிலைப் பதிகத்தில் காணப்பெறும் விழாக்களுள் இரண்டினைக் கூறுக.
2 marks
18.
காற்றின் தீராத பக்கங்களில் எதனை, எது எழுதிச் சென்றது ?
2 marks
19.
இந்தோ – சாரசனிக் கட்டடக்கலை – குறிப்பு வரைக.
2 marks
20.
“மையாடல் விழா” – விளக்கம் தருக.
2 marks
21.
பின்னணி இசை, படத்தின் காட்சியமைப்புக்கு உயிரூட்டும் என்பதற்கான சான்று தருக.
2 marks
22.
தமிழில் பிழையின்றி எழுதுவதற்கு மேற்கொள்ள வேண்டிய முயற்சிகள் யாவை ?
2 marks
23.
மயங்கொலிச் சொற்களை ஒரே தொடரில் அமைத்து எழுதுக.
அலை, அழை (அல்லது) கான், காண்
2 marks
24.
கீழ்க்காணும் சொல்லுருபைப் பிரித்தும் சேர்த்தும் இருவேறு தொடர்கள் அமைக்க.
‘கொண்டு’
2 marks
25.
பொருத்தமான வேற்றுமை உருபுகளைச் சேர்த்து முறையான தொடராக்குக.
(அ) குமரன் வீடு பார்த்தேன்.
(ஆ) மாறன் பேச்சுத்திறன் யார் வெல்ல முடியும்.
2 marks
26.
தொடரில் இடம்பெற்றுள்ள மரபுப் பிழைகளை நீக்கி எழுதுக.
ஆட்டுத் தொழுவத்தைச் சுற்றிலும் எலிகள் பொந்துகள் அமைத்திருந்தன.
2 marks
27.
ஏதேனும் ஒன்றனுக்குப் புணர்ச்சி விதி தருக.
(அ) தலைக்கோல்     (ஆ) புகழெனின்
2 marks
28.
கீழ்க்காணும் நான்கு சொற்களைக் கொண்டு தொடர் எழுதுக.
1. குதிரை வேகம் ஓடு தாவு
2. வானம் பற நிலவு தொடு
2 marks
29.
கலைச்சொல்லாக்கம் தருக.
(அ) Value Education
(ஆ) Business Management

குறிப்பு : செவி மாற்றுத்திறனாளர்களுக்கான மாற்று வினா.
தொடரில் உள்ள பிழைகளை நீக்கி எழுதுக.
அப்பசி அடைமழையில் ஊருணி நிறைந்தது
2 marks
30.
ஏதேனும் ஒன்றனுக்குப் பகுபத உறுப்பிலக்கணம் தருக.
(அ) பேசுவார்
(ஆ) வியந்து
2 marks

பகுதி – III

பிரிவு – 1 (வினா 31 – 34) : எவையேனும் இரண்டனுக்கு விடை தருக. 2×4=8
பிரிவு – 2 (வினா 35 – 38) : எவையேனும் இரண்டனுக்கு மட்டும் விடை தருக. 2×4=8
பிரிவு – 3 (வினா 39 – 43) : எவையேனும் மூன்றனுக்கு விடை தருக. 3×4=12
31.
“ஏங்கொலி நீர் ஞாலத்து இருளகற்றும்”
– இடஞ்சுட்டி பொருள் விளக்கம் தருக.
4 marks
32.
வாடைக் காலத்தில் கோவலர்கள் எவ்வாறு பாதுகாப்பைத் தேடினர் ?
4 marks
33.
இராமலிங்க அடிகள் கந்தவேளிடம் எத்தகையோர் உறவு வேண்டுமெனக் கேட்கிறார் ?
4 marks
34.
“உண்டால் அம்ம…” எனத் தொடங்கும் புறநானூற்றுப் பாடலின் கருத்திற்கு இணையான குறட்பாக்களைக் குறிப்பிடுக.
4 marks
35.
மயிலை சீனி. வேங்கடசாமியின் வரலாற்று ஆய்வுகள் பற்றி விளக்குக.
4 marks
36.
பண்டைய விரிந்த குடும்பத்தின் தொடர்ச்சியே இன்றைய கூட்டுக்குடும்பம். விளக்கம் தருக.
4 marks
37.
சென்னையில் உள்ள நூலகங்களில் இரண்டினைக் குறித்து எழுதுக.
4 marks
38.
மணலில் எழுதியது முதல் தற்காலம்வரை எழுதும் முறையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களைத் தொகுத்துரைக்க.
4 marks
39.
(அ)தொழில் உவமையணியைச் சான்றுடன் விளக்குக.
அல்லது / OR
(ஆ)துஞ்சினார் செத்தாரின் வேறுஅல்லர் எஞ்ஞான்றும்
நஞ்சுஉண்பார் கள்உண் பவர்.
– இக்குறட்பாவில் பயின்று வரும் அணியை விளக்குக.
4 marks
40.
இலக்கிய நயம் பாராட்டுக.
(பாடலின் மையக்கருத்தோடு எவையேனும் மூன்று நயங்களையும் எழுதுக)

வெட்டி யடிக்குது மின்னல் – கடல்
    வீரத் திரைகொண்டு விண்ணை யிடிக்குது;
கொட்டி யிடிக்குது மேகம் – கூ
    கூவென்று விண்ணைக் குடையுது காற்று
சட்டச்சட சட்டச்சட டட்டா – என்று
    தாளங்கள் கொட்டிக் கனைக்குது வானம்
எட்டுத்திசையும் இடிய – மழை
    எங்ஙனம் வந்ததடா தம்பி வீரா!
– பாரதியார்
4 marks
41.
(அ)பொதுவியல் திணையைச் சான்று தந்து விளக்குக.
அல்லது / OR
(ஆ)ஏகதேச உருவக அணியைச் சான்றுடன் விளக்குக.
4 marks
42.
(அ)பின்வரும் பழமொழியை வாழ்க்கை நிகழ்வில் அமைத்து எழுதுக.
வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்.
அல்லது / OR
(ஆ)பின்வரும் பழமொழியை வாழ்க்கை நிகழ்வில் அமைத்து எழுதுக.
அகத்தின் அழகு முகத்தில் தெரியும்.
4 marks
43.
தட்டச்சர் பணி வேண்டி தன்விவரப்பட்டியல் ஒன்று தயார் செய்க.
4 marks

பகுதி – IV

குறிப்பு : அனைத்து வினாக்களுக்கும் விடை தருக. 3×6=18
44.
(அ)பண்பின் படிமமாகப் படைக்கப்பட்ட இராமன், பிற உயிர்களுடன் கொண்டிருந்த உறவுநிலையைப் பாடப்பகுதிவழி நிறுவுக.
அல்லது / OR
(ஆ)திருக்குறள் ஒரு வாழ்வியல் இலக்கியம் – நிறுவுக.
6 marks
45.
(அ)திரைப்படம் என்பது கலையா ? வணிகமா ? உங்கள் கருத்தைக் கட்டுரை வடிவில் எழுதுக.
அல்லது / OR
(ஆ)‘நமது மொழியின் அடையாளங்களை மீட்டவர் மயிலை சீனி. வேங்கடசாமி’ – என்பதனை உம் பாடப்பகுதிவழி நிறுவுக.
6 marks
46.
(அ)நடிகர் திலகத்தைக் கண்ட பாலசந்திரனின் நினைவலைகளை நயத்துடன் புலப்படுத்துக.
அல்லது / OR
(ஆ)பொறுப்புணர்ச்சியின்றி இருந்த ஊரைத் தன் பொறுப்புணர்வால் மாற்றிய மருதனின் பண்புநலத்தை விவரிக்க.
6 marks

பகுதி – V

4+2=6
47.
அடிபிறழாமல் செய்யுள் வடிவில் விடை தருக.
(அ) “குகனொடும் ஐவர் …” எனத் தொடங்கும் கம்பராமாயணப் பாடலை எழுதுக.
(ஆ) ‘… செயல்’ என முடியும் குறளை எழுதுக.
6 marks
⬇️ PDF பதிவிறக்கம் அனைத்து தமிழ் வினாத்தாள்கள்