TN Online Testசமச்சீர் கல்விப் பயிற்சி

12ஆம் வகுப்பு தமிழ் வினாத்தாள் March 2026

வினாத்தாள் குறியீடு 9001 90 மதிப்பெண்கள் 180 நிமிடங்கள்

March 2026 பொதுத் தேர்வின் முழு வினாத்தாள் அச்சிட்டபடியே: ஒவ்வொரு வினாவும் தமிழ், ஆங்கிலத்தில். PDF ஐப் பதிவிறக்குங்கள், அல்லது பகுதி I ஐ இலவச ஆன்லைன் தேர்வாக எழுதுங்கள்.

தமிழ் / தமிழ்March 2026 · March 2026

பகுதி – I

குறிப்பு : (i) அனைத்து வினாக்களுக்கும் விடை தருக. (ii) கொடுக்கப்பட்டுள்ள நான்கு மாற்று விடைகளில் மிகவும் ஏற்புடைய விடையைத் தேர்ந்தெடுத்துக் குறியீட்டுடன் விடையினையும் சேர்த்து எழுதவும். 14×1=14
1.
அணியிலக்கணத்தை மட்டும் கூறும் இலக்கண நூல் ______.
(அ) இலக்கண விளக்கம்
(ஆ) தண்டியலங்காரம்
(இ) தொல்காப்பியம்
(ஈ) முத்துவீரியம்
(a)
(b)
(c)
(d)
விடையைக் காட்டு ▾ (ஆ) / (b) · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →
1 mark
2.
பொருத்துக.
(1) சேரன் - (i) மீன்
(2) சோழன் - (ii) யானை
(3) பாண்டியன் - (iii) வில்
(4) சங்ககாலப் பசும்பூண் பாண்டியன் - (iv) புலி
(அ) (1)-(iii), (2)-(iv), (3)-(i), (4)-(ii)
(ஆ) (1)-(iv), (2)-(iii), (3)-(ii), (4)-(i)
(இ) (1)-(i), (2)-(iii), (3)-(iv), (4)-(ii)
(ஈ) (1)-(ii), (2)-(i), (3)-(iv), (4)-(iii)
(a)
(b)
(c)
(d)
விடையைக் காட்டு ▾ (அ) / (a) · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →
1 mark
3.
பிழையான தொடரைக் கண்டறிக.
(அ) காளையில் பூத்த மல்லிகை மனம் வீசியது.
(ஆ) காளைகளைப் பூட்டி வயலை உழுதனர்.
(இ) நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கின.
(ஈ) மலைமீது ஏறிக் கல்வெட்டுகளைக் கண்டறிந்தனர்.
(a)
(b)
(c)
(d)
விடையைக் காட்டு ▾ (அ) / (a) · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →
1 mark
4.
'பிறகொரு நாள் கோடை' கவிதையின் ஆசிரியர் :
(அ) நக்கீரர்
(ஆ) தண்டி
(இ) நகுலன்
(ஈ) அய்யப்ப மாதவன்
(a)
(b)
(c)
(d)
விடையைக் காட்டு ▾ (ஈ) / (d) · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →
1 mark
5.
"உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள்" என்று அழைக்கப்படுவது :
(அ) மணிமேகலை
(ஆ) கம்பராமாயணம்
(இ) புறநானூறு
(ஈ) சிலப்பதிகாரம்
(a)
(b)
(c)
(d)
விடையைக் காட்டு ▾ (ஈ) / (d) · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →
1 mark
6.
சுவடியோடு பொருந்தாத ஒன்றைத் தேர்வு செய்க.
(அ) கடுக்காய்
(ஆ) வசம்பு
(இ) மாவிலைக்கரி
(ஈ) மணத்தக்காளியிலைச் சாறு
(a)
(b)
(c)
(d)
விடையைக் காட்டு ▾ (அ) / (a) · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →
1 mark
7.
'சாபவிமோசனம்', 'அகலிகை' கதைகளில் தொன்மங்களைப் பயன்படுத்தியவர் :
(அ) ஜெயமோகன்
(ஆ) புதுமைப்பித்தன்
(இ) எஸ். இராமகிருஷ்ணன்
(ஈ) கு. அழகிரிசாமி
(a)
(b)
(c)
(d)
விடையைக் காட்டு ▾ (ஆ) / (b) · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →
1 mark
8.
'குடும்பம்' என்னும் சொல் முதன் முதலில் இடம் பெற்றுள்ள நூல் ______.
(அ) குறுந்தொகை
(ஆ) தொல்காப்பியம்
(இ) புறநானூறு
(ஈ) திருக்குறள்
(a)
(b)
(c)
(d)
விடையைக் காட்டு ▾ (ஈ) / (d) · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →
1 mark
9.
படத்திற்குப் பொருத்தமான திருக்குறளைக் கண்டுபிடிக்க.
(அ) வினைத்திட்பம் என்பது ஒருவன் மனத்திட்பம்
மற்றைய எல்லாம் பிற.
(ஆ) எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார்
திண்ணியர் ஆகப் பெறின்.
(இ) எவ்வது உறைவது உலகம் உலகத்தோடு
அவ்வது உறைவது அறிவு.
(ஈ) உருவுகண்டு எள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்கு
அச்சாணி அன்னார் உடைத்து.
1 mark
10.
பொருத்துக.
(1) பாரதியார் - (i) மருமக்கள் வழி மான்மியம்
(2) பாரதிதாசன் - (ii) ஏசுகாவியம்
(3) கவிமணி - (iii) பாஞ்சாலி சபதம்
(4) கண்ணதாசன் - (iv) பாண்டியன் பரிசு
(அ) (1)-(iii), (2)-(ii), (3)-(i), (4)-(iv)
(ஆ) (1)-(iii), (2)-(iv), (3)-(i), (4)-(ii)
(இ) (1)-(ii), (2)-(iv), (3)-(iii), (4)-(i)
(ஈ) (1)-(iv), (2)-(iii), (3)-(ii), (4)-(i)
(a)
(b)
(c)
(d)
விடையைக் காட்டு ▾ (ஆ) / (b) · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →
1 mark
11.
ஈற்றடி எழுதித் துளிப்பாவை நிறைவு செய்க.
பூத்த
மலரொன்று
பறக்கிறது
______
(அ) வண்ணத்துப்பூச்சி
(ஆ) ஈசல்
(இ) விட்டில்பூச்சி
(ஈ) பொன்வண்டு
(a)
(b)
(c)
(d)
விடையைக் காட்டு ▾ (அ) / (a) · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →
1 mark
12.
குறிப்புகளில் மறைந்திருக்கும் தமிழ் அறிஞரைக் கண்டறிக.
சிறுகதை ஆசிரியர்; முதல் பாதி நவீனம்
(அ) புதுமைப்பித்தன்
(ஆ) அம்பை
(இ) சூடாமணி
(ஈ) அசோகமித்திரன்
(a)
(b)
(c)
(d)
விடையைக் காட்டு ▾ (அ) / (a) · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →
1 mark
13.
புதிருக்கு ஏற்ற விடை தருக.
அடைமழை பெய்த அடுத்த நாள்
படைபடையாய் வந்ததாம்
பரங்கி நாட்டு விமானம்
எதிரி சுடாமலேயே
இறகொடிந்து இறந்ததாம் - என்ன ?
(அ) மீன்
(ஆ) பறவை
(இ) நட்சத்திரம்
(ஈ) ஈசல்
(a)
(b)
(c)
(d)
விடையைக் காட்டு ▾ (ஈ) / (d) · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →
1 mark
14.
இலக்கணக் குறிப்பு தருக.
'வியர்வை வெள்ளம்'
(அ) உருவகம்
(ஆ) உவமை
(இ) பண்புத்தொகை
(ஈ) வினையெச்சம்
(a)
(b)
(c)
(d)
விடையைக் காட்டு ▾ (அ) / (a) · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →
1 mark

பகுதி – II

பிரிவு – 1 (வினா 15 – 18) : எவையேனும் மூன்றனுக்கு விடை தருக. 3×2=6
பிரிவு – 2 (வினா 19 – 21) : எவையேனும் இரண்டனுக்கு விடை தருக. 2×2=4
பிரிவு – 3 (வினா 22 – 30) : எவையேனும் ஏழனுக்கு விடை தருக. 7×2=14
15.
மறக்கக் கூடாதது, மறக்கக் கூடியது எவற்றை ?
2 marks
16.
“துன்பு உளது எனின் அன்றோ சுகம் உளது” என்ற இராமனின் கூற்று பின்வரும் இரு பழமொழிகளில் எதற்குப் பொருந்தும் ?
(அ) நிழலின் அருமை வெயிலில் தெரியும்.
(ஆ) சிறு துரும்பும் பல்குத்த உதவும்.
2 marks
17.
மருத்துவத்தில் மருந்துடன் அன்பும் நம்பிக்கையும் ஆற்றும் பாங்கினை எழுதுக.
2 marks
18.
சிற்பி பாலசுப்பிரமணியத்தின் கவிதை நூல்கள் யாவை ?
2 marks
19.
“விரிபெரு தமிழர் மேன்மை
ஓங்கிடச் செய்வ தொன்றே
உயிர்ப்பணியாக் கொண்டோன்”
– யார், யாரைப் பற்றி எதற்காகக் கூறுகிறார் ?
2 marks
20.
‘முறை வைப்பது’ என்றால் என்ன ?
2 marks
21.
படத்தொகுப்பில் ‘குலஷோவ் விளைவு’ என்றால் என்ன ?
2 marks
22.
உவமைத் தொடரைச் சொற்றொடரில் அமைத்து எழுதுக.
அச்சாணி இல்லாத தேர்போல
அல்லது
உள்ளங்கை நெல்லிக்கனி போல
2 marks
23.
மொழியின் சொற்றொடர் அமைப்பை விளங்கிக்கொள்வதற்கும் பயன்படுத்துவதற்கும் உதவுவன எவை ?
2 marks
24.
மயங்கொலிச் சொற்களை ஒரே தொடரில் அமைத்து எழுதுக.
விலை, விளை, விழை
அல்லது
கலை, களை, கழை
2 marks
25.
வேறு ஒரு பொருள் அமையுமாறு சொற்களைச் சேர்த்துத் தொடரமைக்க.
மாணவர்கள் வரிசையில் நின்று அறிவியல் கண்காட்சியைக் கண்டனர்.
2 marks
26.
வல்லின மெய்களை இட்டும் நீக்கியும் எழுதுக.
ஆசிரியருக்கு கீழ்படிதல் என்னும் குணம், உண்மையானவற்றை தெரிந்துக் கொண்டு, அறியாமையினை அகற்றி பல நல்லனவற்றை கற்று கொடுக்கும்.
2 marks
27.
தொடரில் இடம்பெற்றுள்ள மரபுப் பிழைகளை நீக்கி எழுதுக.
வாழைக்காட்டில் குயில்கள் அலறிக் கொண்டும் காகங்கள் கூவிக் கொண்டும் இருந்தன.
2 marks
28.
பேச்சு வழக்கை எழுத்து வழக்காக மாற்றுக.
அண்ணைக்கு அவனுக்கு பணம் குடுத்து ஒதவியிருக்க வேண்டியதான.
2 marks
29.
ஏதேனும் ஒன்றனுக்குப் புணர்ச்சி விதி தருக.
(அ) செம்பரிதி    அல்லது    (ஆ) முன்னுடை
2 marks
30.
ஏதேனும் ஒன்றனுக்குப் பகுபத உறுப்பிலக்கணம் தருக.
(அ) வந்து    அல்லது    (ஆ) நினைக்கின்ற
2 marks

பகுதி – III

பிரிவு – 1 (வினா 31 – 34) : எவையேனும் இரண்டனுக்கு விடை தருக. 2×4=8
பிரிவு – 2 (வினா 35 – 38) : எவையேனும் இரண்டனுக்கு மட்டும் விடை தருக. 2×4=8
பிரிவு – 3 (வினா 39 – 43) : எவையேனும் மூன்றனுக்கு விடை தருக. 3×4=12
31.
“செம்பரிதி மலைமேட்டில் தலையைச் சாய்ப்பான்
செந்நிறத்துப் பூக்காடாம் வான மெல்லாம்!”
– தொடர் வெளிப்படுத்தும் காட்சி நயத்தை விளக்குக.
4 marks
32.
கவிதை என்பது கண்முன் நிகழ்வதையும் மனதில் நிகழ்வதையும் தொடர்புபடுத்திச் சொற்சிமிழில் அடைக்கும் முயற்சியே என்பதை நகுலன் கவிதையைக் கொண்டு நிறுவுக.
4 marks
33.
ஒருமுக எழினி, பொருமுக எழினி, கரந்துவரல் எழினி – விளக்குக.
4 marks
34.
பங்குனி உத்திரத் திருவிழா நடைபெற்ற முறையைத் திருஞானசம்பந்தர் எவ்வாறு பதிவு செய்கிறார் ?
4 marks
35.
‘மணந்தகம்’ – விளக்குக.
4 marks
36.
நீங்கள் ஆசிரியரானால் மாணாக்கரை அன்பினால் எவ்வகையில் நெறிப்படுத்துவீர்கள் ?
4 marks
37.
திரைப்படத்தின் காட்சி ஆற்றலை எடுத்துக்காட்டுடன் புலப்படுத்துக.
4 marks
38.
வேளாண் மேலாண்மை குறித்து நீவிர் பரிந்துரைப்பனவற்றை எழுதுக.
4 marks
39.
(அ)சொற்பொருள் பின்வரும் நிலையணியைச் சான்றுடன் விளக்குக.
அல்லது / OR
(ஆ)அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது.
– இக்குறட்பாவில் பயின்று வரும் அணியை விளக்குக.
4 marks
40.
(அ)வாகைத் திணையைச் சான்று தந்து விளக்குக.
அல்லது / OR
(ஆ)பொருண்மொழிக்காஞ்சித் துறையைச் சான்றுடன் விளக்குக.
4 marks
41.
இலக்கிய நயம் பாராட்டுக.
(பாடலின் மையக்கருத்தோடு எவையேனும் மூன்று நயங்களையும் எழுதுக).

பூமிச்சருகாம் பாலையை
    முத்துபூத்த கடல்களாக்குவேன்
புயலைக் கூறுபடுத்தியே – கோடிப்
    புதிய தென்றலாக்குவேன்
இரவில் விண்மீன் காசினை – செலுத்தி
    இரவலரோடு பேசுவேன்!
இரவெரிக்கும் பரிதியை – ஏழை
    விறகெரிக்க வீசுவேன்
– நா. காமராசன்
4 marks
42.
(அ)பின்வரும் பழமொழியை வாழ்க்கை நிகழ்வில் அமைத்து எழுதுக.
கூடி வாழ்ந்தால் கோடி நன்மை.
அல்லது / OR
(ஆ)பின்வரும் பழமொழியை வாழ்க்கை நிகழ்வில் அமைத்து எழுதுக.
ஆனைக்கும் அடிசறுக்கும்.
4 marks
43.
மாற்றுச்சான்றிதழ் (TRANSFER CERTIFICATE) வேண்டி விண்ணப்பம் எழுதுக.
4 marks

பகுதி – IV

குறிப்பு : அனைத்து வினாக்களுக்கும் விடை தருக. 3×6=18
44.
(அ)நெடுநல்வாடையில் நக்கீரர் காட்டும் மழைக்கால வருணனையைத் தொகுத்து எழுதுக.
அல்லது / OR
(ஆ)அறிவுடைமை வாழ்வின் உயர்வுக்குத் துணைநிற்கும் என்பதை வள்ளுவம் வழி நின்று நிறுவுக.
6 marks
45.
(அ)குடும்பம் என்னும் சிறிய அமைப்பிலிருந்தே மனித சமூகம் என்னும் பரந்த அமைப்பு கட்டமைக்கப்படுகிறது – எவ்வாறு ? விளக்குக.
அல்லது / OR
(ஆ)ஒரு திரைப்படத்தின் வெற்றிக்குக் காரணம், கதையும், கதை சொல்லும் முறையுமே – இக்கூற்றை ஆராய்க.
6 marks
46.
(அ)பாரதியின் கடிதம் வாயிலாக நீங்கள் அறிந்துகொண்ட மொழிப்பற்று, சமூகப்பற்று ஆகியவற்றை விவரிக்க.
அல்லது / OR
(ஆ)‘உரிமைத் தாகம்’ கதையில் வெளிப்படும் உறவின் மேன்மையைப் புலப்படுத்துக.
6 marks

பகுதி – V

4+2=6
47.
அடிபிறழாமல் செய்யுள் வடிவில் விடை தருக.
(அ) “ஒருமையுடன்” ….. எனத் தொடங்கும் தெய்வமணிமாலை பாடலை எழுதுக.
(ஆ) ‘மகற்கு’ என முடியும் குறளை எழுதுக.
6 marks
⬇️ PDF பதிவிறக்கம் அனைத்து தமிழ் வினாத்தாள்கள்