TN Online Testசமச்சீர் கல்விப் பயிற்சி

டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2 பொது அறிவு: முந்தைய ஆண்டு கலப்புத் தேர்வு

அனைத்து 3 வினாத்தாள்களின் (2024–2026) வினாக்களும் ஒரே தேர்வில். ஒவ்வொரு வினாவிலும் அது இடம்பெற்ற வினாத்தாள் காட்டப்படுவதால், எந்த ஆண்டில் என்ன கேட்கப்பட்டது என்பதையும் அறியலாம்.

உங்கள் தேர்வை அமைக்கவும்

அனைத்து முந்தைய ஆண்டு வினாத்தாள்கள்
மீதமுள்ள நேரம்00:00
Q1 1 நவம்பர் 2026
கூற்று [A] : ஊசி மூலம் செலுத்தக்கூடிய ஒரு புதிய அதிமூலக்கூறு ஹைட்ரோ ஜெல் என்பதை மார்பக புற்றுநோய் செல்களை அழிக்கும் மருந்தாகவும், மிகவும் துல்லியமாகவும் இலக்கினை அடையும் மருந்தாகவும் பயன்படுகிறது.
காரணம் [R] : சாதாரண நிலைகளில் இது அரை திடமாக இருக்கும். அழுத்தம் கொடுக்கும் போது உருகுகிறது. ஊசிமுனையிலிருந்து வெளியே வந்தவுடன் மறுபடியும் கூழ்மமாக (gel) மாறுகிறது.
Q2 1 நவம்பர் 2026
IUBMB முறை நொதிகளின் வகைப்பாட்டில் எந்த வாக்கியம்/வாக்கியங்கள் உண்மையானது/உண்மையானவை?
(i) உயிரியல் மற்றும் தற்கால உயிரியலின் பன்னாட்டு ஒருங்கிணைப்பு
(ii) உயிர்வேதியியல் மற்றும் உயிரி மூலக்கூறுகளின் பன்னாட்டு ஒருங்கிணைப்பு
(iii) உயிரியல் மற்றும் உயிரிமூலக் கூறுகளின் பன்னாட்டு ஒருங்கிணைப்பு
(iv) உயிர்வேதியியல் மற்றும் தற்கால உயிரியலின் பன்னாட்டு ஒருங்கிணைப்பு
Q3 1 நவம்பர் 2026
பின்வருவனவற்றைப் பொருத்துக.
பழங்குடியினர் — பகுதி
(a) அங்கமிஸ் — 1. மேகாலயா
(b) தோடர்கள் — 2. தமிழ்நாடு
(c) மேப்லாஸ் — 3. கேரளா
(d) பிர்ஹார்ஸ் — 4. நாகாலாந்து
(e) காசிஸ் — 5. மத்திய பிரதேசம்
Q4 1 நவம்பர் 2026
பின்வருவனவற்றை பொருத்துக.
(a) தேசிய சுற்றுச்சூழல் கொள்கை — 1. 2014
(b) காலநிலை மாற்றத்திற்கான தேசிய செயல்திட்டம் — 2. 2006
(c) தூய்மை இந்தியா இயக்க வழிகாட்டுதல்கள் — 3. 2018
(d) சமக்ர சிக்ஷா வழிகாட்டுதல்கள் — 4. 2008
Q5 1 நவம்பர் 2026
கீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றுள் சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்.
வேளாண்மை அமைச்சகம் மற்றும் விவசாயிகள் நலவாரியம் பின்வருவனவற்றை உள்ளடக்கியது
(i) வேளாண்மை, கூட்டுறவு மற்றும் விவசாயிகள் துறை
(ii) கால்நடை வளர்ப்பு, பால்வளம் மற்றும் மீன்வளத்துறை
(iii) விவசாய ஆராய்ச்சி மற்றும் கல்வித்துறை
Q6 1 நவம்பர் 2026
காலவரிசைப்படுத்தவும்.
(1) அசோகர் இறப்பு
(2) அலெக்ஸாண்டர் படையெடுப்பு
(3) மூன்றாவது புத்த மாநாடு
(4) மௌரிய பேரரசு நிறுவப்படல்
Q7 1 நவம்பர் 2026
சரியான விடைகளைத் தேர்வு செய்க.
(1) மேடம் காமா – தல்வார் பத்திரிகை
(2) ஆ.ஆ. ஹியூம் – காமன்வீல்
(3) அன்னி பெசன்ட் – இந்தியப் புரட்சியாளரின் தாய்
(4) தோ.கே. கர்வே – இந்தியாவின் முதல் மகளிர் பல்கலைக்கழகம்
Q8 1 நவம்பர் 2026
காரணம் மற்றும் வலியுறுத்தல் வகை :
வலியுறுத்தல் [A] : டாக்டர். B.R. அம்பேத்கர் 1935ஆம் ஆண்டு அக்டோபர் 13 ஆம் நாள் நாசிக் மாவட்டத்தில் யோல என்ற இடத்தில் நடந்த பொதுக் கூட்டத்தில் சபதமிட்டார்.
காரணம் [R] : “நான் இந்துவாகப் பிறந்தேன் என்னால் உதவ முடியவில்லை. ஆனால் நான் இந்துவாகச் சாகமாட்டேன் என்று உறுதியளிக்கிறேன்”.
Q9 1 நவம்பர் 2026
முஸ்லீம் லீக் கட்சியின் அதிகாரப்பூர்வ பத்திரிகை
Q10 1 நவம்பர் 2026
கீழ்க்கண்டவற்றுள் சரியாகப் பொருந்தியுள்ளவற்றை தேர்வு செய்யவும்.
(1) ஓமந்தூர் பெ. இராமசாமி – ஆலய நுழைவு மற்றும் இழப்பீட்டுச் சட்டம் 1939
(2) ராஜாஜி – விவசாயிகள் கடன் தள்ளுபடிச் சட்டம்
(3) பெருந்தலைவர் காமராஜர் – சென்னை நிலச் சீர்திருத்தச் சட்டம்
(4) தி.சு. அவினாசிலிங்கம் – சுயமரியாதைத் திருமணங்கள் சட்டம்
Q11 1 நவம்பர் 2026
இந்திய அரசியலமைப்பின் அடிப்படை உரிமைகளின் நோக்கம் அரசியல் அல்லது சட்ட சமத்துவத்தை பாதுகாப்பதோடு மட்டுமல்லாமல், ________ உள்ளடக்கியதாகும்.
Q12 1 நவம்பர் 2026
கூற்று [A] மற்றும் காரணம் [R] வகை வினா :
கூற்று [A] : மாநில அளவில், ஓர் அமைச்சர், முதலமைச்சரின் நம்பிக்கையைப் பெற்றிருக்கும் வரை பதவியில் நீடிக்கிறார்.
காரணம் [R] : ஒரு வேளை, அமைச்சருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டால், முதலமைச்சர், அவரைப் பதவி விலகுமாறு கேட்கலாம் அல்லது அவரைப் பதவி நீக்கம் செய்யுமாறு ஆளுநருக்கு அறிவுறுத்தலாம்.
Q13 1 நவம்பர் 2026
பின்வருவனவற்றைப் பொருத்துக :
சரத்துகள் — குடியரசுத் தலைவரின் அதிகாரங்கள்
(a) சரத்து 123 — 1. அவசர நிலையை பிரகடனப்படுத்தும் அதிகாரம்
(b) சரத்து 72 — 2. மக்களவையை கலைத்தல்
(c) சரத்து 85 — 3. மன்னிப்பளிக்கும் அதிகாரம்
(d) சரத்து 352 — 4. அவசர சட்டங்களை இயற்றும் அதிகாரம்
Q14 1 நவம்பர் 2026
பின்வரும் அரசமைப்புப் பிரிவுகளில் எது இந்திய அரசின் மதச்சார்பற்ற தன்மையை வெளிப்படுத்தவில்லை.
(i) பிரிவு 25
(ii) பிரிவு 16
(iii) பிரிவு 28
(iv) பிரிவு 17
Q15 1 நவம்பர் 2026
கீழ்கண்டவற்றில் எந்த இணைகள் சரியாகப் பொருந்தியுள்ளன?
(1) ஆந்திர பிரதேச சட்டமேலவை சட்டம் – 2005
(2) தமிழ்நாடு சட்டமேலவை சட்டம் – 2010
(3) ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்புச் சட்டம் – 2021
(4) மத்திய பிரதேச சட்டமேலவை சட்டம் – 2024
Q16 1 நவம்பர் 2026
2025 FIDE சதுரங்க உலகக் கோப்பையை நடத்திய நாடு எது?
Q17 1 நவம்பர் 2026
தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் பிற தேர்தல் ஆணையர்கள் (நியமனம், பணி நிபந்தனைகள் மற்றும் பதவிக்காலம்) சட்டம் 2023 குறித்து சரியான கூற்றை தேர்வு செய்யவும்.
Q18 1 நவம்பர் 2026
பின்வருவனவற்றில் எது/எவை சரியானது?
தென்னிந்திய தாராளவாதக் கூட்டமைப்பு
(i) டாக்டர் சி. நடேசன் இதன் நிறுவனர் ஆவார்.
(ii) டாக்டர் டி.எம். நாயர் மற்றும் சர். பிட்டி தியாகராயர் ஆகியோர் இதன் இணை நிறுவனர்கள் ஆவர்.
(iii) ஸ்ரீ ராஜரத்தினம் இச்சங்கத்தின் முதல் தலைவர் ஆவார்.
(iv) ‘ஆந்திரா பிரகாசிகர் மற்றும் முக்ததாரா’ ஆகியவை இச்சங்கத்தின் இதழ்களாக இருந்தன.
Q19 1 நவம்பர் 2026
கூற்று [A] : மக்கள் தொகையின் வளர்ச்சியின் விளைவாக இந்தியாவின் முக்கிய பிரச்சினைகளில் ஒன்றாக வறுமை தொடர்கிறது.
காரணம் [R] : சமூக பொருளாதார காரணிகள் மற்றும் புவியியல் காரணிகள் வறுமையின் அளவிற்கு ஒரு பங்கைக் கொண்டுள்ளன.
Q20 1 நவம்பர் 2026
ஏழைகளுக்கான தமிழ்நாடு வீட்டுவசதித் திட்டத்தின் நோக்கம் ——— ஆகும்.
Q21 1 நவம்பர் 2026
சரியான பொருத்தத்தைத் தேர்வு செய்க.
தமிழ் நாட்டின் வேளாண் காலநிலை பகுதி — மண்ணின் வகைகள்
(a) காஞ்சிபுரம் — 1. சிகப்பு மண்
(b) நாமக்கல் — 2. உவர்ப்பு மண்
(c) திருச்சிராப்பள்ளி — 3. சிகப்பு களிமண்
(d) கன்னியாகுமரி — 4. கருப்பு சுண்ணாம்பு மண்
Q22 1 நவம்பர் 2026
தமிழ் நாட்டில் தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கான முதல் அரசியல் அமைப்பு கீழ்க்காண்பவர்களில் யாரால் தொடங்கப்பட்டது?
Q23 1 நவம்பர் 2026
டிஜிட்டல் ஸ்கை பிளாட்பார்ம் தொடர்பான பின்வரும் கூற்றுகளில் எது உண்மை?
(i) ஆளில்லா வான்வழி கண்காணிப்பு அமைப்பு செயல்பாடுகள்
(ii) டிஜிட்டல் இந்தியாவின் முன்முயற்சி
(iii) அனைத்து ட்ரோன்களும் DGCA உடன் பதிவு செய்யப்பட வேண்டும்
Q24 1 நவம்பர் 2026
இந்திய திட்டமிடலின் சாதனைகள் பின்வருவனவற்றில் எவை?
(i) தனிநபர் வருமானம் அதிகரிப்பு
(ii) வேலை வாய்ப்புகள் அதிகரிப்பு
(iii) தொழில்துறையில் முன்னேற்றம்
(iv) அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சி
Q25 1 நவம்பர் 2026
கூற்று [A] : நவீனக் கல்வி சீர்திருத்த இயக்கங்களின் தோற்றத்தில் முக்கியப் பங்கு வகித்தது.
காரணம் [R] : மேற்கத்தியக் கல்வி சுதந்திரம், சமத்துவம் மற்றும் தேசியவாதம் போன்ற கருத்துக்களை அறிமுகப்படுத்தியது.
Q26 1 நவம்பர் 2026
கிராமப்புற மேம்பாட்டுத் திட்டங்களையும் செயல்படுத்தப்பட்ட ஆண்டையும் சரியாகப் பொருத்தவும் :
(a) ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சித் திட்டம் — 1. 1983
(b) ஊரக நிலமற்றோர் வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் — 2. 1980
(c) ஏழைகளுக்கான உணவுத் திட்டம் — 3. 2014
(d) தீன் தயாள் உபாத்யாய கிராமின் கௌசல்யா யோஜனா திட்டம் — 4. 2000
Q27 1 நவம்பர் 2026
1998–1999 இல் பல்வேறு வறுமை ஒழிப்பு மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்கத் திட்டங்கள் இரண்டு பரந்த பிரிவுகளின் கீழ் தெரிவிக்கப்பட்டன அவை:
(i) சுய வேலைவாய்ப்புத் திட்டம்
(ii) ஊதிய வேலைவாய்ப்புத் திட்டம்
(iii) வேலைவாய்ப்பை உருவாக்கும் திட்டம்
Q28 1 நவம்பர் 2026
எல்லா உயிரும் கை கூப்பித் தொழ வாழ்பவர் என வள்ளுவர் யாரைக் குறிப்பிடுகிறார்?
(i) புலால் மறுப்பான்
(ii) புலால் உண்பான்
(iii) கொலை செய்பவன்
(iv) அன்புடையவர்
Q29 1 நவம்பர் 2026
அமைப்புகளை அவை தொடங்கப்பட்ட ஆண்டுகளுடன் பொருத்துக.
(a) மெட்ராஸ் இந்து கைம்பெண்கள் மறுமணச் சங்கம் — 1. 1852
(b) மெட்ராஸ் மஹாஜன சபா — 2. 1817
(c) மெட்ராஸ் இலக்கியச் சங்கம் — 3. 1891
(d) இந்து முற்போக்கு வளர்ச்சிக் கழகம் — 4. 1884
Q30 1 நவம்பர் 2026
கோவில் நுழைவுப் போராட்டத்தில் கீழே கொடுக்கப்பட்டுள்ள கூற்றுகளில் எது சரியானது?
(i) 1920களில் இந்தியாவில் தோன்றிய ஒரு சமூக சீர்திருத்த இயக்கமே கோவில் நுழைவு போராட்டம்.
(ii) கீழ்நிலை மக்களுக்கு கோவிலினுள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டதை எதிர்த்து நடத்தப்பட்ட போராட்டம்.
(iii) 1924-ல் வைக்கம் என்ற இடத்தில் நடத்தப்பட்ட சத்தியாகிரகப் போராட்டமே இதற்கு தொடக்கமாக அமைந்தது.
(iv) 1924 வைக்கம் சத்தியாகிரக போராட்டத்தை காந்தியடிகள் தலைமையேற்று நடத்தினார்.
Q31 1 நவம்பர் 2026
பின்வருவனவற்றுள் சரியானவற்றைத் தேர்ந்தெடுக்க.
(i) மன்னர்க்கு உறுபொருள், உல்கு பொருள், ஒன்னார்த் தெறுபொருள் என மூவகை வருவாய் உள்ளன என்று திருக்குறள் கூறுகிறது.
(ii) உறுபொருள் என்பது பகைவரிடமிருந்து பெற்ற திறைப்பொருள்.
(iii) உல்கு பொருள் என்பது சுங்க வரியால் வரும் பொருள்.
Q32 1 நவம்பர் 2026
கீழ்கண்டவற்றில் பேரறிஞர் அண்ணா பற்றிய தவறான கூற்று எது?
(a) இவர் சுயமரியாதை திருமணத்திற்கு சட்ட அங்கீகாரம் வழங்கினார்.
(b) இவருடைய பொருளாதார கொள்கைக்கு “விஞ்ஞான சோஷியலிசம்” எனப் பெயரிட்டார்.
(c) இவர் சென்னை மாநகர மக்களின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்ய “வீராணம் குடிநீர்” திட்டத்தைக் கொண்டுவந்தார்.
(d) இவருக்கு “பேரறிஞர்” என்ற பட்டத்தைத் தந்தை பெரியார் அவர்கள் வழங்கினார்.
Q33 1 நவம்பர் 2026
பின்வருவனவற்றுள் கசலு லட்சுமணராசு தொடர்புடைய சரியான கூற்று எது?
(i) இவர் சென்னை வாசிகள் சங்கத்தை நிறுவினார்.
(ii) இவர் ‘நேட்டிவ் இன்டர்பிரட்டர்’ என்ற பத்திரிகையை விலைக்கு வாங்கினார்.
(iii) இவர் இந்து முன்னேற்ற மேம்பாட்டுச் சங்கம் என்ற அமைப்பை உருவாக்கினார்.
(iv) இவர் வித்யானுபவானயந்திர சாலை என்ற அச்சுக்கூடத்தை நிறுவினார்.
Q34 1 நவம்பர் 2026
கூற்று [A] : கருணாகர மேனன் ஜஸ்டிஸ் பத்திரிக்கையின் பதிப்பாசிரியராக இருப்பதற்கு மறுத்துவிட்டார்.
காரணம் [R] : கருணாகர மேனன் முடிவிற்கு அன்னிபெசன்ட் முக்கிய காரணமாவார்.
Q35 1 நவம்பர் 2026
கூற்று [A] : திராவிடர் என்ற சொல்லை இடைக்காலத்தில் பயன்படுத்தியவர் கால்டுவெல்.
காரணம் [R] : “திராவிடமொழிகளின் ஒப்பிலக்கணம் அல்லது தென்னிந்திய மொழிக் குடும்பங்கள்” என்ற நூலை இயற்றியுள்ளார்.
Q36 1 நவம்பர் 2026
விளக்கம் [A] : பொய்யாமையைக் காட்டிலும் கொல்லாமை சிறந்த அறமாகும்.
காரணம் [R] : பிற உயிரைக் கொல்வது பொய்யாமையைக் காட்டிலும் கொடுமையானது.
Q37 1 நவம்பர் 2026
பொருத்துக :
தொல்லியல் கோட்பாடுகள்
(a) பரவல் கோட்பாடு — 1. லூயி & சேலி R. பின்போர்ட்
(b) சூழ்நிலை அணுகுமுறைக் கோட்பாடு — 2. லூயி பின்போர்ட்
(c) புதிய தொல்லியல் கோட்பாடு — 3. ராபர்ட் ஜான் பிரெய்ட்வுட்
(d) அமைப்பு அணுகுமுறைக் கோட்பாடு — 4. எலியட் ஸ்மித்
Q38 1 நவம்பர் 2026
A என்பவர் B என்பவரைக் காட்டிலும் வேலை செய்வதில் 3 மடங்கு வேகமானவர். அவரால் அந்த வேலையை, B எடுத்துக் கொள்ளும் நாட்களை விட 24 நாட்கள் குறைவாக எடுத்து முடிக்க முடிகிறது. இருவரும் சேர்ந்து, அந்த வேலையை செய்தால், அதனை முடிக்க ஆகும் நேரத்தைக் காண்க.
Q39 1 நவம்பர் 2026
9 குழந்தைகள் ஒரு வேலையை 360 நாட்களில் செய்து முடிக்கின்றனர். 18 ஆண்கள், அதே வேலையை 72 நாட்களில் செய்து முடிக்கின்றனர். 12 பெண்கள் அந்த வேலையை 162 நாட்களில் செய்து முடிக்கின்றனர் எனில், 4 ஆண்கள், 12 பெண்கள் மற்றும் 10 குழந்தைகள் இணைந்து அந்த வேலையை எத்தனை நாட்களில் செய்து முடிப்பார்கள்?
Q40 1 நவம்பர் 2026
P = ரூ. 10,000, ஆண்டு வட்டி வீதம் 10%, n = 3 ஆண்டுகள் எனில் கூட்டுவட்டிக்கும் தனிவட்டிக்கும் உள்ள வித்தியாசத்தைக் காண்க.
Q41 1 நவம்பர் 2026
வருட கூட்டுவட்டி 20% ஆக இருக்கும்போது காலாண்டு வட்டி கணக்கிடப்படுகிறது எனில் ரூ. 16,000க்கு 9 மாதங்களுக்குக் கிடைக்கும் கூட்டுவட்டி எவ்வளவு?
Q42 1 நவம்பர் 2026
ரூ. 68,000 க்கு 16⅔% என்ற ஆண்டு வட்டியில் 9 மாதங்களுக்கான தனி வட்டி காண்க.
Q43 1 நவம்பர் 2026
கீழ்காணும் பின்னங்களை ஏறுவரிசையில் எழுதுக.
17/18, 31/36, 43/45, 59/60
Q44 1 நவம்பர் 2026
ஒரு எண்ணின் மதிப்பை 60% குறைத்தால் 200 கிடைக்கிறது. அந்த எண் என்ன?
Q45 1 நவம்பர் 2026
சுருக்குக : 24 + 2 × 8 ÷ 2 − 1
Q46 1 நவம்பர் 2026
AEBFCGDH.... என எழுதும் போது “J” என்ற எழுத்திற்கு அருகில் வரும் எழுத்துகளை எழுதுக.
Q47 1 நவம்பர் 2026
688, 426, 542, 287 என்ற எண்களில் கீழே கொடுக்கப்பட்ட தொடரில் எந்த எண் பொருந்தாது.
6 7 4 8 5 9 8 4 8 3 2 5 8 6 7 8 3 8
Q48 1 நவம்பர் 2026
திறந்த பகடையின் மூடிய உருவம் எது?
1, 2, 3, 4 ஒரு நெடுவரிசையில், 2-க்கு இடப்புறம் 6, 4-க்கு வலப்புறம் 5 உள்ள திறந்த பகடை; (i) முதல் (iv) வரை நான்கு மூடிய பகடைகள்
Q49 1 நவம்பர் 2026
A, B, C, X, Y மற்றும் Z ஆகிய ஆறு பேர் வெளியே பார்த்தபடி ஒரு வட்டமேசையைச் சுற்றி அமர்ந்திருக்கிறார்கள். அவர்கள் அனைவரும் வெவ்வேறு வயதுடையவர்கள். Y மூன்றாவது இளைய நபர். X மற்றும் Yக்கு இடையில் இரண்டு பேர் மட்டுமே அமர்ந்திருக்கிறார்கள். Z, 20 வயதுடைய Cக்கு இடதுபுறத்தில் இரண்டாவது இடத்தில் அமர்ந்திருக்கிறார். இரண்டாவது வயதான நபருக்கு 24 வயது. Z என்பவர் A மற்றும் Cஐ விட மூத்தவர். ஆனால் மிக மூத்தவர் அல்ல. C என்பவர் Xக்கு அருகில் வலது புறத்தில் அமர்ந்துள்ளார். B என்பவர் Aவை விட மூத்தவர். Zஐ விட மூத்தவர். A மற்றும் Z ஆகியோர் அருகிலுள்ள அண்டை வீட்டார் அல்ல. இவர்களில் இளையவரின் வயது 20க்கும் குறைவானது. A என்பவர் Yயை விட இளையவர் அல்ல எனில், Aஇன் சாத்தியமான வயது என்னவாக இருக்கும்?
Q50 1 நவம்பர் 2026
ஆங்கில எழுத்துக்களில் உள்ள ஒவ்வொரு எழுத்துக்கும் A = 1, B = 3 எனத் தொடங்கி ஒற்றைப்படை எண் மதிப்பு ஒதுக்கப்பட்டால், FILM HINDI என்ற வார்த்தையில் உள்ள எழுத்துக்களின் மொத்த மதிப்பு.
Q51 1 நவம்பர் 2026
இந்திய அரசால் நடைமுறைப்படுத்தப்பட்ட கொள்கைகளைக் காலவரிசைப்படி பட்டியலிடுக.
(1) அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கொள்கை
(2) அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் புதுமாதிரிக் கொள்கை
(3) அறிவியல் கொள்கை தீர்மானம்
(4) தொழில்நுட்பக் கொள்கை அறிக்கை
Q52 1 நவம்பர் 2026
பின்வருவனவற்றை பொருத்துக.
(a) கருப்பு கார்பன் - 1. பனி மற்றும் உறை நீரில் இருந்து உயிரிய துகள்களால் வெளியேற்றப்படும் கார்பன்
(b) சாம்பல் கார்பன் - 2. கரிம பொருட்களின் நிறைவுறா எரிதலினால் வெளியேற்றப்படும் கார்பன்
(c) பழுப்பு கார்பன் - 3. தொழிற்சாலை உமிழ்வின் மூலம் வெளியேற்றப்படும் கார்பன்
(d) சிவப்பு கார்பன் - 4. படிம எரிபொருள் மூலம் வெளியேற்றப்படும் கார்பன்
Q53 1 நவம்பர் 2026
பின்வருவனவற்றைப் பொருத்துக.
(a) காக்ஸ்சாக்கி வைரஸ் - 1. சின்னம்மை
(b) பார்வோவைரஸ் B19 - 2. ஜெர்மன் தட்டம்மை
(c) ருபெல்லா வைரஸ் - 3. எரித்மா இன்ஃபெக்டியோசம்
(d) வாரிசெல்லா–சோஸ்டர் வைரஸ் - 4. கை–கால் மற்றும் வாய் நோய்
Q54 1 நவம்பர் 2026
சென்னை வெள்ளம் தொடர்பாக தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் (NDMA) வழங்கிய பரிந்துரைகள் குறித்து பின்வரும் கூற்றுகளில் எவை சரியானவை?
(i) நீர் வெளியேற்றத்தை முடிவு செய்ய நிபுணர் குழு அமைத்தல்.
(ii) மழைபொழிவைக் கண்காணிக்க சென்னையில் தானியங்கி வானிலை நிலையங்கள் (AWS) வலையமைப்பு உருவாக்குதல்.
(iii) வெள்ள மேலாண்மை, சிறந்த நடைமுறைகளை ஆவணப்படுத்தி பகிர்தல்.
(iv) வெள்ள முன்னறிவிப்புக்கு செயற்கைக்கோள் தரவை மட்டும் பயன்படுத்துதல்.
Q55 1 நவம்பர் 2026
ஒமேகா பிளாக் தொடர்பாக பின்வரும் அறிக்கையைக் கவனியுங்கள்.
கூற்று [A] : இந்தியாவின் தாமதமான பருவமழைக்கான முதன்மைக் காரணமாக ஐரோப்பாவில் உள்ள ஒமேகா பிளாக் உறுதியாக நிறுவப்பட்டது.
காரணம் [R] : வளிமண்டல ஜெட் ஸ்ட்ரீம்களை ஒமேகா பிளாக் திசை திருப்புவது இந்திய பருவமழையை பாதித்ததா என்பதை விஞ்ஞானிகள் இன்னும் ஆராய்ந்து வருகின்றனர்.
Q56 1 நவம்பர் 2026
டாக்டர் எல்லப்பிரகதா சுப்பாராவ் தொடர்பான கீழ்க்கண்ட கூற்றுக்களுள் எவை சரியானவை?
(i) டாக்டர் எல்லப்பிரகதா சுப்பாராவ் ஏடிபி மற்றும் பாஸ்போக்ரியேடின் ஆற்றல் மூலத்தைக் கண்டறிந்து, மெத்தோட்ரெக்ஸேட் மருந்தை உருவாக்கினார்.
(ii) அருணாச்சலப் பிரதேசத்தில் பிறந்தவர்.
(iii) சென்னை மருத்துவ கல்லூரியில் வேட்டி அணிந்ததால் எம்பிபிஎஸ் பட்டம் மறுக்கப்பட்டது.
Q57 1 நவம்பர் 2026
காரணம் மற்றும் கூற்று வகை.
கூற்று [A] : தில்லியில் மராட்டிய ஆட்சியை நிறுவுவதே சிவாஜியின் நோக்கமாகும்.
காரணம் [R] : முகலாயர்களுக்கு எதிரான மராத்தியர்களுக்கு சிவாஜி தலைமை தாங்கினார்.
Q58 1 நவம்பர் 2026
பின்வருவனவற்றை பொருத்துக :
(a) கிழக்கிந்திய சங்கம் - 1. சிசிர்குமார் கோஷ்
(b) இந்தியன் லீக் - 2. தாதாபாய் நௌரோஜி
(c) பம்பாய் சங்கம் - 3. P. ஆனந்த சார்லு
(d) மெட்ராஸ் (சென்னை) மகாஜனா சபா - 4. பத்ருத்தீன் தயாப்ஜி
Q59 1 நவம்பர் 2026
சரியாக பொருந்தாத இணையை கண்டறிக.
(1) வைக்கம் சத்தியாக்கிரகம் - 1924
(2) சுயமரியாதை இயக்கம் - 1925
(3) முதல் சுயமரியாதை திருமணச் சட்டம் - 1935
(4) முதலாவது வகுப்புரிமை அரசு ஆணை - 1929
Q60 1 நவம்பர் 2026
கூற்று [A]: காந்தி இர்வின் ஒப்பந்தத்தின் விளைவாக சட்ட மறுப்பு இயக்கம் நிறுத்தப்பட்டது.
காரணம் [R] : காந்தி இரண்டாவது வட்ட மேசை மாநாட்டில் பங்கேற்றார்.
Q61 1 நவம்பர் 2026
இந்திய அரசியலமைப்பு குறித்துப் பின்வருவனவற்றினைப் பொருத்துக :
பகுதி - பொருள்
(a) XI - 1. அரசு நெறிமுறைக் கொள்கைகள்
(b) IX - 2. தேர்தல்கள்
(c) XV - 3. பஞ்சாயத்துகள்
(d) IV - 4. ஒன்றிய மாநில அரசுகளுக்கிடையேயான உறவுமுறை
Q62 1 நவம்பர் 2026
பின்வரும் அரசியல் கட்சிகளை அவை தோற்றுவிக்கப்பட்ட ஆண்டின் அடிப்படையில் கால வரிசைப்படுத்துக:
(1) டாக்டர். அசோம் கண ஃபரிஷத்
(2) பிஜு ஜனதா தளம்
(3) நேஷனல் பீப்பிள்ஸ் பார்ட்டி
(4) ஆம் ஆத்மி பார்ட்டி
Q63 1 நவம்பர் 2026
பின்வரும் தேசிய நுகர்வோர் குறைதீர் ஆணையம் குறித்த சரியான கருத்தைத் தெரிவு செய்க.
Q64 1 நவம்பர் 2026
பொதுக் கணக்கு குழுவைப் பற்றிய பின்வருவனவற்றுள் சரியானது எது/எவை?
(i) இந்தக் குழுவானது 1921ம் ஆண்டில் முதன் முறையாக இந்திய அரசு சட்டம் 1919ன் கீழான வாசகங்களால் அமைக்கப்பெற்றது.
(ii) இந்தக் குழுவானது 22 உறுப்பினர்களை உடையது. இவற்றுள் 15 உறுப்பினர்கள் மக்களவையையும், 7 உறுப்பினர்கள் மாநிலங்களவையையும் சார்ந்தவர்கள்.
(iii) அமைச்சரானவர் இந்தக் குழுவின் உறுப்பினராக இயலாது .
Q65 1 நவம்பர் 2026
பஞ்சாயத்து பற்றிய கூற்றுகளில் சரியானதானது
(i) பொருளாதார முன்னேற்றம் மற்றும் சமூக நீதிக்கான திட்டங்களை செயல்படுத்த பஞ்சாயத்து அதிகாரம் கொண்டுள்ளது.
(ii) பொருளாதார முன்னேற்றம் மற்றும் சமூக நீதிக்கான திட்டங்களைத் திட்டமிட பஞ்சாயத்துகளுக்கு அதிகாரம் கிடையாது.
(iii) அரசு அமைப்புகளுக்கு எதிராக பஞ்சாயத்து வழக்கு தொடுக்க முடியும்.
Q66 1 நவம்பர் 2026
கீழ்வருபவனவற்றை பொருத்துக :
தலைவர் பெயர் - அரசியல் பார்வை
(a) ஜவஹர்லால் நேரு - 1. தாராளவாத மக்களாட்சிவாதி
(b) டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் - 2. தீவிர சமத்துவவாதி
(c) மகாத்மா காந்தி - 3. பழமைவாதி
(d) கே.டி. ஷா - 4. சமூக மக்களாட்சிவாதி
Q67 1 நவம்பர் 2026
சரியான இணைகளை கண்டுபிடி
(1) உறுப்பு 353 - அவசரகால பிரகடனத்தின் விளைவு
(2) உறுப்பு 355 - மாநிலங்களை வெளிநாட்டு ஆக்ரமிப்பிலிருந்தும் உள்நாட்டு குழப்பத்திலிருந்தும் மத்திய அரசு பாதுகாத்தல்
(3) உறுப்பு 357 - அவசரகால பிரகடனத்தின் போது உறுப்பு 21-ன் வகையங்களை நிறுத்தி வைத்தல்
(4) உறுப்பு 358 - அவசரகாலத்தில் பகுதி - 3ல் வழங்கப்பட்ட உரிமைகள் அமலபடுத்துவதை நிறுத்தி வைத்தல்
Q68 1 நவம்பர் 2026
சட்டப்பிரிவுகளை அதன் விதியுடன் சரியாக பொருத்தவும்.
(a) பிரிவு 330 - 1. மாநிலங்களின் சட்டமன்றத்தில் SC மற்றும் ST இட ஒதுக்கீடு
(b) பிரிவு 331 - 2. மக்களவையில் SC மற்றும் ST இட ஒதுக்கீடு
(c) பிரிவு 332 - 3. மாநிலங்களின் சட்டமன்றத்தில் ஆங்கிலேய இந்திய சமூகத்திற்கான பிரதிநிதித்துவம்
(d) பிரிவு 333 - 4. மக்களவையில் ஆங்கிலேய இந்திய சமூகத்திற்கான பிரதிநிதித்துவம்
Q69 1 நவம்பர் 2026
__________ என்பது இரண்டாம் நிலை பராமரிப்பு மற்றும் பல்வேறு விதிமுறைகளைப் பொருத்தமான அதிகாரத்துடன் செயல்படுத்துவதற்குப் பொறுப்பாகும்.
Q70 1 நவம்பர் 2026
கூற்று [A] : தமிழ்நாட்டின் மொத்த நிலப்பரப்பில் ஐந்தில் ஒரு பங்கு நிலப்பரப்பு காட்டுப் பகுதியாக உள்ளது.
காரணம் [R] : மொத்தக் காட்டுப் பகுதியில் ஏறத்தாழ 3 சதவிகிதம் அடர்ந்த காடாக உள்ளது.
Q71 1 நவம்பர் 2026
கூற்று [A] : விவசாயத்தில் உற்பத்தி அதிகரிக்கும் பொழுது வறுமை நிலை குறைகிறது.
காரணம் [R] : கால நிலை மாற்றங்களில் ஏற்பட்ட பரவலான ஏற்ற இறக்கங்கள் காரணமாக விவசாயத்தில் வருமானம் குறைந்துள்ளது.
Q72 1 நவம்பர் 2026
'பொருளாதார அரசுத் தந்திரம்' குறித்த பின்வரும் கூற்றுக்களில் சரியானவற்றைத் தேர்ந்தெடுக்கவும்.
(i) இது பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்க நிதியியல் மற்றும் பணவியல் கருவிகளைப் பயன்படுத்துகிறது
(ii) இது தேசியப் பாதுகாப்பு நோக்கங்களை அடையப் பொருளாதாரக் கருவிகளைப் பயன்படுத்துகிறது
(iii) இது வளர்ந்து வரும் புவிசார் அரசியல் போட்டியைப் பிரதிபலிக்கிறது
Q73 1 நவம்பர் 2026
பொருத்துக.
(a) பிரிவு 268 - 1. ஒன்றியத்தால் விதிக்கப்பட்டு வசூலிக்கப்படும் ஆனால் மாநிலங்களுக்கு ஒதுக்கப்படும் வரிகள்
(b) பிரிவு 269 - 2. உதவி மானியங்கள்
(c) பிரிவு 275 - 3. நிதி ஆணையம்
(d) பிரிவு 280 - 4. ஒன்றியத்தால் விதிக்கப்படும் ஆனால் மாநிலங்களால் வசூலிக்கப்பட்டு கையகப்படுத்தப்படும் கடமைகள்
Q74 1 நவம்பர் 2026
கூற்று [A] : வளரும் நாடுகளின் மையப் பிரச்சனை 'பெரும் வறுமை' இருப்பதாகும்.
காரணம் [R] : வளரும் நாடுகளில் மொத்த சொத்துக்களில் மிகச் சிறிய பகுதியை மட்டுமே வைத்திருக்கும் ஏழைகளுக்கு மிகக் குறைந்த வளங்களே உள்ளன.
Q75 1 நவம்பர் 2026
முதலமைச்சரின் சூரிய ஆற்றல் மூலம் இயங்கும் பசுமை இல்லத் திட்டம் குறித்த பின்வரும் அம்சங்களில் எவை உண்மையானவை?
(i) தனியார் வர்த்தகர்களின் சுரண்டல் நடவடிக்கைகளிலிருந்து விவசாயிகளைப் பாதுகாக்கின்றன.
(ii) கிராமப்புறங்களில் வறுமைக் கோட்டிற்குக் கீழே வாழும் மக்கள் அனைவரும் சூரிய ஆற்றலால் இயங்கும் பசுமை வீடுகளுக்குத் தகுதியுடையவர்கள்.
(iii) இத்திட்டத்தின் கீழ் நிலம் கையகப்படுத்துதல் எதுவும் திட்டமிடப்படவில்லை. இத்திட்டத்தின் கீழ், தங்கள் மனைகளுக்குப் பட்டா வைத்திருப்பவர்கள் மட்டுமே தகுதியுடையவர்கள்.
Q76 1 நவம்பர் 2026
ஜமீன்தாரி முறை (Zamindari System) பற்றி, பின்வரும் கூற்றுகளில் எது உண்மை?
(i) இந்த முறை 1973-இல் கார்ன்வாலிஸ் (Cornwallis) என்பவரால் அறிமுகப்படுத்தப்பட்டது
(ii) இந்த முறை மேற்கு வங்காளம், பீகார், ஒரிசா, உத்திர பிரதேசம், ஆந்திர பிரதேசம் மற்றும் மத்திய பிரதேசம் ஆகிய பகுதிகளில் நடைமுறையில் இருந்தது
(iii) வாடகையில் 9/11 பங்கு கோரிக்கைகாக நிர்ணயிக்கப்பட்டது, மீதமுள்ள 2/11 பங்கு ஜமீன்தாரின் ஊதியமாகும்
(iv) ஜமீன்தார் தீர்வு அவர்களை நிலத்தின் உரிமையாளர்களாக்கியது. அதன் மூலம் நிலத்தில் நிரந்தர உரிமையை உருவாக்கியது
Q77 1 நவம்பர் 2026
பொருத்துக :
(a) இந்தியப் பணச் சந்தை - 1. நியூயார்க்
(b) இங்கிலாந்து பணச் சந்தை - 2. மும்பை
(c) யு எஸ் ஏ பணச் சந்தை - 3. லண்டன்
(d) ஜப்பான் பணச் சந்தை - 4. டோக்கியோ
Q78 1 நவம்பர் 2026
தவறான இணைகளைக் கண்டறி :
(1) விரல்கவர் பேரியாழ் பாணர் - குறுந்தொகை
(2) மீன் சீவும் பாண்சேரி யோடு - மதுரைக் காஞ்சி
(3) முல்லை நல்யாழ்ப் பாணர் - ஐங்குறுநூறு
(4) பாணர் படுமலை பண்ணிய எழாலின் - பதிற்றுப்பத்து
Q79 1 நவம்பர் 2026
சரியான பொருத்தங்களைத் தேர்ந்தெடுக்கவும் :
(1) உலக வரலாற்றின் கண்ணோட்டம் - காந்திஜி
(2) இந்தியா சுதந்திரம் வென்றது - அபுல் கலாம் ஆசாத்
(3) இந்தியப் போராட்டம் - சுபாஷ் சந்திர போஸ்
(4) என் உண்மையான சத்திய சோதனையின் கதை - ஜவஹர்லால் நேரு
Q80 1 நவம்பர் 2026
'இல்லாரை எல்லாரும் எள்ளுவர்' என்பதில் இல்லாதார் என்பது யாரைக் குறிப்பதாக வள்ளுவம் சுட்டுகிறது
Q81 1 நவம்பர் 2026
பின்வரும் கூற்று மற்றும் காரணத்தைப் படித்துக் கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீட்டிலிருந்து சரியானப் பதிலைத் தேர்ந்தெடுக்கவும்.
கூற்று [A] : 1925ல் தந்தை பெரியார் காங்கிரஸ் கட்சியை விட்டு வெளியேறினார்.
காரணம் [R] : 1925ல் தந்தை பெரியார் சுயமரியாதை இயக்கத்தைத் தொடங்கினார்.
Q82 1 நவம்பர் 2026
எந்த சங்க இலக்கியத்தில் இன்றைய கொடுமணல், கொடுமணம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது?
Q83 1 நவம்பர் 2026
பின்வருவனவற்றுள் சரியான விடையைத் தேர்வு செய்க.
முதல் உலகப் போரின் போது 'எஸ் எஸ் மெட்ராஸ்' கப்பலில் மருத்துவச் சேவைக்காக "கெய்சர் ஐ ஹிந்த்" பதக்கத்தை ஆங்கிலேயரிடமிருந்து பெற்றவர்.
Q84 1 நவம்பர் 2026
சுயமரியாதை இயக்கத்தின் நோக்கங்கள் பற்றிய சரியான கூற்று/கூற்றுகளைத் தேர்வு செய்க.
(I) பகுத்தறிவுச் சிந்தனை, சுயமரியாதை, தன்னம்பிக்கை இவற்றை வளர்த்தல்.
(II) பிராமணர்களின் உரிமைகளைப் பாதுகாப்பது.
(III) பெண்களுக்கு எதிரான கொடுமைகள் மற்றும் சமுதாயத் தீமைகளை அகற்றுதல்.
(IV) மூடநம்பிக்கைகளை அழித்தல்
Q85 1 நவம்பர் 2026
பொருத்துக :
(a) சிறு கை அளாவிய கூழ் - 1. இனியவை கூறல்
(b) கனியிருப்பக் காய் கவர்ந்தற்று - 2. அடக்கமுடைமை
(c) நன்றி மறப்பது நன்றன்று - 3. செய் நன்றியறிதல்
(d) ஆறாதே நாவினால் சுட்டவடு - 4. மக்கட்பேறு
Q86 1 நவம்பர் 2026
"நீரொழியப் பாலுண் குருகின் தெரிந்து" என்பதன் மூலம் நாலடியார் அறிவுறுத்தும் உட்பொருள்.
Q87 1 நவம்பர் 2026
கீழ்க்காண்பனவற்றில் சரியானவற்றைத் தேர்வு செய்க
(1) தென்னிந்தியர் நல உரிமைக் கழகம் - 1950
(2) தொழிலாளர் சங்கம் - 1918
(3) இனவாரி ஒதுக்கீட்டுச் சட்டம் - 1921
(4) அறக்கட்டளைச் சட்டம் - 1930
Q88 1 நவம்பர் 2026
ஒரு சமபக்க முக்கோணத்தின் சுற்றளவு 180 செ.மீ எனில் அதன் பரப்பளவைக் காண்க.
Q89 1 நவம்பர் 2026
பக்க அளவு 84 அடி கொண்ட ஒரு சதுர வடிவ நிலத்தின் 4 முனைகளிலும், முனைக்கு ஒன்றாக ஒரு பசு கட்டப்பட்டிருந்தது. ஒரு பசு மற்றொன்றை அடைய முடியாத அளவு சரியாகக் கட்டப்பட்டிருந்தால் பசுக்கள் மேயாத நிலத்தின் அளவு என்ன?
Q90 1 நவம்பர் 2026
ஆதாம் என்பவர் குறிப்பிட்ட தொகையினை முதல் இரண்டு ஆண்டுகளுக்கு, ஆண்டிற்கு 6% வட்டியுடனும், பின்னர், அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு ஆண்டிற்கு 9% வட்டியுடனும், ஐந்து ஆண்டுகளுக்குப் பின்னர் ஆண்டிற்கு 14% வட்டியுடனும் கடனாகப் பெறுகிறார். அவர் 9 ஆண்டுகளின் முடிவில் மொத்தம் ரூ. 11,400 வட்டியாக செலுத்துகிறார் எனில் அவர் பெற்ற கடன் தொகை எவ்வளவு?
Q91 1 நவம்பர் 2026
72 லி பால் மற்றும் தண்ணீர் கலவையில் அவற்றின் விகிதம் 5 : 3 எனில் எவ்வளவு தண்ணீரைச் சேர்த்தால் அவற்றிற்கான விகிதம் 3 : 5 ஆக மாறும்?
Q92 1 நவம்பர் 2026
ரூ. 5,200, ஆனது A, B, C மற்றும் D ஆகியோருக்கு இடையில் கீழ்க்காணும் கூற்று உண்மையாக இருக்கும் வண்ணம் பகிர்ந்து கொள்ளப்படுகிறது.
A-ன் பங்கு/B-ன் பங்கு = B-ன் பங்கு/C-ன் பங்கு = C-ன் பங்கு/D-ன் பங்கு = 2/3 எனில் A-ன் பங்கு என்ன?
Q93 1 நவம்பர் 2026
336 ஆங்கிலப் புத்தகங்களும், 240 கணிதப் புத்தகங்களும், 96 அறிவியல் புத்தகங்களும் உள்ளன. இவற்றை ஒரே அளவு உயரமுள்ள தளங்களில் பாட வாரியாக அடுக்க, எத்தனை தளங்கள் தேவைப்படும்?
Q94 1 நவம்பர் 2026
ஓர் எண்ணின் 90% மற்றும் அதே எண்ணின் 72% ஆகியவற்றின் வித்தியாசம் 256 எனில் அதே எண்ணின் 54% என்பது ________.
Q95 1 நவம்பர் 2026
கீழே கொடுக்கப்பட்டுள்ள தொடரில் அடுத்த எண் காண்க.
1, 3, 11, 31, 69, ______.
Q96 1 நவம்பர் 2026
கீழ்க்காண்பவற்றுள் எது இயல் எண்ணின் வர்க்கமாக இருக்க முடியாது?
Q97 1 நவம்பர் 2026
கீழ்க்காணும் படங்களைப் பயன்படுத்தி, B ஆனது மேலே உள்ளது எனில், B க்கு எதிரில் உள்ள எழுத்தைக் கண்டறிக.
கனசதுரத்தின் மூன்று தோற்றங்கள்: மேலே F, பக்கங்களில் A, D; மேலே E, பக்கங்களில் C, F; மேலே D, பக்கங்களில் A, B
Q98 1 நவம்பர் 2026
மதி மற்றும் தீபிகா இருவரும் நண்பர்கள். "இன்று எனது பிறந்தநாள்" என மதி கூறினாள். தீபிகாவிடம் "உனது பிறந்த நாளை எப்போது நீ கொண்டாடினாய்" எனக் கேட்டாள். அதற்கு தீபிகா "இன்று திங்கள்கிழமை, நான் என்னுடைய பிறந்த நாளை 75 நாட்களுக்கு முன் கொண்டாடினேன்", என பதிலளித்தாள். எனில் தீபிகா தனது பிறந்த நாளைக் கொண்டாடிய நாளைக் கண்டறியவும்.
Q99 1 நவம்பர் 2026
கீழே கொடுக்கப்பட்ட எழுத்துக்களின் எண்களைப் பிரதியிட்டால், ஒரு முழுமையான பொருள் உள்ள வார்த்தை கிடைக்கும் அந்த எண் குறியீடு எது?
P O L I C M A N T
1 2 3 4 5 6 7 8 9
Q100 28 செப்டம்பர் 2025
கீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றை சரியாகப் பொருத்தி குறியீடுகள் மூலம் சரியான விடையினைத் தேர்வு செய்க :
(a) குளோரோபார்ம் – 1. CCl₃ NO₂
(b) பாஸ்ஜீன் – 2. ClC₂H₄–S–C₂H₄Cl
(c) கண்ணீர்ப் புகை – 3. CHCl₃
(d) கடுகு வாயு – 4. COCl₂
Q101 28 செப்டம்பர் 2025
கார்பன் மோனாக்ஸைடு உமிழ்வுகளைப் பற்றி கீழ்க்காணும் எந்தக் கூற்றுகள் சரி?
(1) சரிவர எரிக்காத எரிபொருளால் வரக்கூடியது.
(2) பெட்ரோல் எரிபொருள் வாகனங்களால் வருவது.
(3) நீண்ட நேர உமிழ்வினால் குமட்டல் ஏற்படுத்தும்.
Q102 28 செப்டம்பர் 2025
நார்டிக்ஸ் குறித்த பின்வரும் கூற்றுகளில் உண்மையான கூற்று எது?
(i) இந்தோ ஆரியர்கள் இந்தியாவில் கடைசியாக குடியேறியவர்கள்.
(ii) நெக்ரிட்டோகளுக்கு பிறகு இந்தியாவுக்கு வந்த குழு இந்தக் குழு.
(iii) இந்தக் குழு 2000 மற்றும் 1500 BC க்கு இடையில் இந்தியாவிற்கு வந்தனர்.
Q103 28 செப்டம்பர் 2025
மால்வா பீடபூமி பற்றிய சரியான கூற்றினை/கூற்றுகளைத் தேர்வு செய்க :
(1) சராசரியாக 600 மீட்டர் உயரத்துடன் கிழக்கு நோக்கி சரிந்துள்ளது.
(2) பீடபூமியின் பெரும்பாலான பகுதிகளில் சம்பல் மற்றும் அதன் துணை ஆறுகள் பாய்கின்றது.
(3) மால்வா பீடபூமி ராஜஸ்தான், குஜராத் மற்றும் மத்திய பிரதேசத்தில் அமைந்துள்ளது.
Q104 28 செப்டம்பர் 2025
கீழே கொடுக்கப்பட்ட கூற்று/கூற்றுகளில் எது/எவை சரியானவை?
(i) சதகர்ணி சாதவாகன மன்னர்களில் முதல் அரசர் மற்றும் முதல் சக்தி வாய்ந்த சாதவாகன ஆட்சியாளர் அல்ல.
(ii) அவருடைய சாதனைகள் மனாகாட் கல்வெட்டில் குறிப்பிடப்படவில்லை.
(iii) சாஞ்சி ஸ்தூபியின் நுழைவாயில்கள் ஒன்றில் அவரது பெயர் பொறிக்கப்பட்டுள்ளது மற்றும் "தட்சிணபாதத்தின் இறைவன்" என்று குறிப்பிடப்படுகிறது.
Q105 28 செப்டம்பர் 2025
காரணம் மற்றும் கூற்று :
கூற்று [A] : அரசியல் தலைவர் என்பதைத் தவிர, கோபால கிருஷ்ண கோகலே ஒரு சிறந்த சமூகச் சீர்திருத்தவாதி.
காரணம் [R] : இவர் 'இந்திய சமுதாயத்தின் சேவகர்கள்' என்னும் தனித்தன்மை வாய்ந்த அமைப்பை நிறுவியவர்.
Q106 28 செப்டம்பர் 2025
பின்வரும் நிகழ்வுகளை காலவரிசைப்படி அடுக்குக :
(1) வகுப்புவாதத் தீர்வு
(2) காந்தி – இர்வின் உடன்படிக்கை
(3) சிட்டகாங் வெடிப்பு
(4) பூனா ஒப்பந்தம்
Q107 28 செப்டம்பர் 2025
பின்வருவனவற்றுள் இந்திய தேசியக் காங்கிரஸ் பற்றிய சரியான கூற்று/கூற்றுகளைத் தேர்வு செய்க :
(i) இந்திய தேசியக் காங்கிரஸின் தந்தை A.O. ஹியூம் ஆவார்.
(ii) இந்திய தேசியக் காங்கிரஸின் முதல் தலைவர் S.N. பானர்ஜி ஆவார்.
(iii) S.N. பானர்ஜி இந்திய தேசிய விடுதலை அமைப்பை நிறுவினார்.
Q108 28 செப்டம்பர் 2025
கீழ்க்கண்டவற்றைச் சரியாகப் பொருத்துக :
புகழ்பெற்ற இடம் – பகுதி
(1) புத்தகயா – பகல்கண்ட்
(2) கஜுராகோ – பண்டல்கண்ட்
(3) ஷீர்டி – விதர்பா
(4) நாசிக் – மால்வா
(5) திருப்பதி – இராயலசீமா
கீழ்க்கண்டவற்றுள் எவை சரியாக பொருந்துகின்றன?
Q109 28 செப்டம்பர் 2025
இந்த சட்டத்திருத்தத்தின் மூலம் அடிப்படைக் கடமைகளானது இந்திய அரசமைப்பில் சேர்க்கப்பட்டது.
Q110 28 செப்டம்பர் 2025
இந்தியக் குடியரசுத் தலைவர் தொடர்பான பின்வரும் கூற்றுகளில் தவறான கூற்றை அடையாளம் காண்க.
Q111 28 செப்டம்பர் 2025
கீழ்க்கண்ட தமிழ்நாடு பஞ்சாயத்துகள் சட்டம், 1994 தொடர்பானவற்றுள் சரியானது எவை?
(i) இச்சட்டத்தின் இரண்டாம் அத்தியாயம் கிராம சபை தொடர்பானது ஆகும்.
(ii) இதன் ஏழாம் அத்தியாயம் வரி விதிப்பு மற்றும் நிதி தொடர்பானது ஆகும்.
(iii) இதன் பன்னிரண்டாவது அத்தியாயம் அபராதங்கள் தொடர்பானது ஆகும்.
Q112 28 செப்டம்பர் 2025
கீழேகொடுக்கப்பட்டுள்ள பட்டியல் I மற்றும் II -இல் உள்ளவற்றை சரியாகப் பொருத்துக :
பட்டியல் I (சரத்துகள்) – பட்டியல் II (குழுக்கள்)
(a) சட்டப்பிரிவு 280 – 1. மாநிலங்களுக்கிடையிலான குழு
(b) சட்டப்பிரிவு 263 – 2. மாநிலங்களுக்கிடையிலான நதிநீர் தகராறு தீர்ப்பாயம்
(c) சட்டப்பிரிவு 262 – 3. பொருட்கள் மற்றும் சேவை வரிக் குழு
(d) சட்டப்பிரிவு 279 A – 4. நிதிக்குழு
Q113 28 செப்டம்பர் 2025
தவறான இணையை கண்டுபிடி :
ஆணையம்/அமைப்பு – ஏற்படுத்தப்பட்ட ஆண்டு
(1) தேசிய மனித உரிமைகள் ஆணையம் – 1993
(2) மத்திய தகவல் ஆணையம் – 2005
(3) மத்தியக் கண்காணிப்பு ஆணையம் – 1963
(4) மத்தியப் புலனாய்வு அமைப்பு – 1969
Q114 28 செப்டம்பர் 2025
சரியான விடையை பொருத்துக :
சட்டங்கள் – ஆண்டு
(a) தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் – 1. 1969
(b) நுகர்வோர் இயக்கம் – 2. 1988
(c) தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு விதிகள் – 3. 1986
(d) ஏகபோக மற்றும் கட்டுப்பாட்டு வர்த்தக நடைமுறைகள் சட்டம் – 4. 1974
Q115 28 செப்டம்பர் 2025
தமிழக அரசு ஏப்ரல் 29 முதல் மே 5 ஆம் தேதி வரை இவருடைய பிறந்த நாளை கொண்டாடியது
Q116 28 செப்டம்பர் 2025
நிதி ஆயோக்கின் SDG இந்தியக் குறியீடு 2023-24 தரவரிசைப்படி பின்வரும் மாநிலங்களை வரிசைப்படுத்துக.
(1) தமிழ்நாடு
(2) உத்திரகண்ட்
(3) கேரளா
(4) கோவா
Q117 28 செப்டம்பர் 2025
செப்டம்பர் 20, 2023 அன்று மக்களவையில் நிறைவேற்றப்பட்ட மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவின் முக்கிய அம்சங்கள் எவை?
(i) இந்த மசோதா மக்களவை மற்றும் மாநில சட்டமன்றங்களில் உள்ள அனைத்து இடங்களிலும் பெண்களுக்கு 33% ஒதுக்குகிறது.
(ii) லோக் சபா மற்றும் மாநில சட்டமன்றங்களில் SC/ST க்கு ஒதுக்கப்பட்ட இடங்களுக்கு இது பொருந்தாது.
(iii) 25 ஆண்டுகளுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படும்.
(iv) தொகுதி மறுவரையறைப் பயிற்சிக்குப் பிறகு நடைமுறைக்கு வரும்.
Q118 28 செப்டம்பர் 2025
பெண்களின் நலனுக்காக தமிழக அரசு கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்டத்தை செயல்படுத்தியது. பின்வருவனவற்றில் எந்த காரணம் இந்தத் திட்டத்திற்கான நியாயமான விளக்கம்.
(i) உலகளாவிய பாலின இடைவெளி அறிக்கை 2023 இன் படி ஆண்டு வருமானத்தில் பாலின வேறுபாடு
(ii) பெண்களின் ஏழ்மையான சமூக நிலையை மாற்ற
(iii) கிராமப்புறப் பெண்களின் மேம்பாடு
(iv) பெண்களின் எண்ணற்ற மணிநேர அமைதியான உழைப்பை அங்கீகரித்தல்
Q119 28 செப்டம்பர் 2025
சரியான பொருத்தங்களைத் தேர்வு செய்யவும் :
(1) NHS – தேசிய சுகாதார சேவை
(2) CBHI – சுகாதாரக் காப்பீட்டுக்கான மத்தியப் பணியகம்
(3) PHC – ஆரம்ப சுகாதார நிலையம்
(4) NRHM – தேசிய சுகாதார சேவை மையம்
Q120 28 செப்டம்பர் 2025
தேசிய விவசாயச் சந்தை (e-NAM) இணைய முகப்பின் நோக்கம்.
(i) விவசாயப் பொருட்களுக்கு, ஒரு ஒருங்கிணைந்த தேசிய மெய்நிகர் சந்தையை உருவாக்குவது
(ii) சிறந்த விலையைப் பெறுவதற்கு விவசாயிகளுக்கு உதவுதல்
(iii) விவசாயிகளுக்கு சந்தைப்படுத்தல் வழிகளை வழங்குதல்
Q121 28 செப்டம்பர் 2025
கூற்று [A] : தமிழ்நாட்டின் கிராமப்புறங்களில் வாழும் மக்களின் வாழ்க்கைத் தரம் மேம்பட்டுள்ளது.
காரணம் [R] : தமிழ்நாடு அரசு தமிழ்நாடு கிராம வாழ்விட மேம்பாட்டுத் திட்டம் என்ற முதன்மைத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
Q122 28 செப்டம்பர் 2025
தேசிய திறன் மேம்பாட்டுக் கழகத்தின் குறிக்கோள் அல்லது குறிக்கோள்கள்
(i) பொருளாதாரச் சுதந்திரம் மூலமாக மகளிர் மேம்பாடு அடையச் செய்வது
(ii) நாடு முழுவதும் உள்ள இளைஞர்களைத் திறன் மேம்பாடு அடையப் பயிற்சித் திட்டங்களை அளிப்பது
(iii) திறன் மேம்பாட்டுச் சான்றிதழ் பெற்றவர்களுக்கு பண விருதுகள் வழங்கி வேலைவாய்ப்பை அதிகப்படுத்துதல்
(iv) நாட்டின் உழைப்பாளர்களின் உற்பத்தித் திறனை அதிகப்படுத்துதல்
Q123 28 செப்டம்பர் 2025
பின்வருவனவற்றை அவற்றின் திட்டங்களுடன் பொருத்தவும் :
(a) மதி பஜார் – 1. சுத்தமான எரிசக்தி
(b) பசுமை வீடுகள் திட்டம் – 2. திறன் மேம்பாடு
(c) நான் முதல்வன் – 3. வறுமை ஒழிப்பு
(d) அஜீவிகா – 4. சுய உதவிக்குழு
Q124 28 செப்டம்பர் 2025
நம்மைக் காக்கும்-48 திட்டத்தின் கீழ், விபத்து நடைபெற்ற முதல் 48 மணி நேரத்திற்குள் பணமில்லா சிகிச்சைக்கான உச்சவரம்பு ஒரு நபருக்கு ரூ. ____ ஆகும்.
Q125 28 செப்டம்பர் 2025
செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், 2022ஆம் வருடம் முதல் அதன் சொந்த புதிய பிரத்யேக வளாகத்தில் செயல்பட்டு வரும் இடம்
Q126 28 செப்டம்பர் 2025
தமிழ்நாட்டில் உள்ள குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் (MSME கள்) பற்றி பின்வரும் கூற்றுகளில் எது சரியானவை?
(i) உத்யம் பதிவுகளில் தமிழ்நாடு இந்தியாவில் மூன்றாவது இடத்தில் உள்ளது.
(ii) மாநிலத்தின் 30% தொழில்முனைவோர் பெண்கள்.
(iii) கோயம்புத்தூரில் தான் மாநிலத்திலேயே அதிக குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் உள்ளன.
Q127 28 செப்டம்பர் 2025
பொருத்துக :
(a) ஆதரவு தேடுதலின் சின்னம் – 1. குறுந்தொகை
(b) அன்பின் சின்னம் – 2. அசோக மரத்தின் இலை
(c) காகம் ஒரு நல்ல முன்னறிவிப்பான் – 3. நற்றிணை
(d) பண்டில் விளையாட்டு குறிப்பிடப்பட்டுள்ளது – 4. வெள்ளை அல்லி மலர்
Q128 28 செப்டம்பர் 2025
கில்ஜிகளின் கட்டிடம் பற்றிய பின்வரும் கூற்றுகளில் எது/எவை உண்மை?
(i) அலாவுதின் கில்ஜி அரியணை ஏறியபின் இந்து-முஸ்லிம் பாணி கட்டிடக் கலையில் ஒரு புதிய சகாப்தம் தொடங்கப்பட்டதாக கே.எஸ். லால் கூறுகிறார்.
(ii) ஹவுஸ்-இ-காஸ் இஸ்லாமிய கட்டிடக் கலையின் மிகவும் பொக்கிஷமான ரத்தினங்களில் ஒன்று என்று மார்ஷல் குறிப்பிடுகிறார்.
(iii) "அலாவுதின் கில்ஜியின் மசூதியின் நுழைவு வாயில் இந்தியாவில் இஸ்லாமிய கட்டிடக் கலையின் பரிணாம வளர்ச்சியில் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது என்று பெர்சி பிரவுன் கூறுகிறார்".
Q129 28 செப்டம்பர் 2025
பின்வருவனவற்றுள் எது தவறாக இணைக்கப்பட்டுள்ளது?
(i) கோபால நாயக் – திண்டுக்கல்
(ii) தூண்டாஜி வாக் – மதுரை
(iii) மருதுபாண்டியர்கள் – எட்டயபுரம்
(iv) புலித்தேவன் – நெற்கட்டாஞ்செவல்
Q130 28 செப்டம்பர் 2025
பின்வரும் நிகழ்வுகளைக் கால வரிசைப்படி முறைப்படுத்துக.
(1) சட்ட மறுப்பு இயக்கம்
(2) சிப்பாய் கலகம்
(3) வேலூர் கலகம்
(4) தென்னிந்தியப் புரட்சி
Q131 28 செப்டம்பர் 2025
திருக்குறளில் யாருடைய கடமைகள் மறைமுகமாகக் கற்பிக்கப்படுகின்றன?
Q132 28 செப்டம்பர் 2025
புத்தகங்களையும் ஆசிரியரின் பெயரையும் சரியாகப் பொருத்தவும் :
(a) திருக்குறள் உரைவளம் – 1. வ.செ. குழந்தை சாமி
(b) திருக்குறள் நுண்பொருள் மாலை – 2. கி.வா. ஜெகந்நாதன்
(c) திருக்குறள் ஆராய்ச்சிப் பதிப்பு – 3. காரிரத்தினக் கவிராயர்
(d) வாழும் வள்ளுவம் – 4. தண்டபாணி தேசிகர்
Q133 28 செப்டம்பர் 2025
உடையவர்கள் என்போர் எதை உடையவர் என்று வள்ளுவர் கூறுகிறார்?
Q134 28 செப்டம்பர் 2025
காலவரிசைப்படி பல்லவ மன்னர்களை வரிசைப்படுத்து :
1. சிம்மவிஷ்ணு – 555 லிருந்து 590 CE
2. மகேந்திரவர்மன் I – 590 லிருந்து 630 CE
3. நரசிம்மவர்மன் I – 630 லிருந்து 668 CE
4. ராஜசிம்மா – 695 லிருந்து 728 CE
Q135 28 செப்டம்பர் 2025
பொருத்துக :
(a) தலைச் சங்கப் புலவனார் தம்முள் – 1. கம்பர்
(b) அகன் பொதியில் திருமுனிவன் தமிழ்ச் சங்கம் – 2. சேக்கிழார்
(c) கூடலினாய்ந்த ஒண்டீந் தமிழ் – 3. திருஞானசம்பந்தர்
(d) மதுரைத் தொகையாக்கினான் – 4. மாணிக்கவாசகர்
Q136 28 செப்டம்பர் 2025
சங்ககால தமிழ்ச் சமூகத்தில் 'தோன்றுவன் மாதோ போர்க்களத்தானே'- என வீரத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து பாடிய பெண்பால் புலவர் யார்?
Q137 28 செப்டம்பர் 2025
3 ஆண்கள் அல்லது 4 பெண்கள் அல்லது 12 சிறுவர்கள் ஒரு வேலையை ஒரு நாளில் முடிப்பார்கள் எனில் 1 ஆண், 1 பெண் மற்றும் 5 சிறுவர்கள் இணைந்து அவ்வேலையை எத்தனை நாட்களில் முடிப்பார்கள்?
Q138 28 செப்டம்பர் 2025
8 செ.மீ விட்டமுள்ள கோளமானது உருக்கப்பட்டு 3 மி.மீ விட்டமுள்ள கம்பியாக உருவாக்கப்பட்டால், அக்கம்பியின் நீளம் ____.
Q139 28 செப்டம்பர் 2025
ஒரு குறிப்பிட்ட தொகையானது கூட்டு வட்டி முறையில் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு ரூ. 13,380 ஆகவும், ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு ரூ. 20,070 ஆகவும் வளர்ச்சி அடைகிறது எனில் அந்தத் தொகை எவ்வளவு?
Q140 28 செப்டம்பர் 2025
ஒரு பள்ளியில் கணிதம், இயற்பியல் மற்றும் உயிரியல் ஆகிய பாடங்களுக்கான இடங்கள் 5 : 7 : 8 என்ற விகிதத்தில் அமைந்துள்ளது. இந்த இடங்களை முறையே 40%, 50% மற்றும் 75% உயர்த்துவதற்கான நெறிமுறை பெறப்பட்டுள்ளது எனில் உயர்த்தப்படும் இடங்களின் விகிதம் என்னவாக இருக்கும்?
Q141 28 செப்டம்பர் 2025
A, B மற்றும் C ஆகியோர் ஒரே திசையில் தொடங்கி ஒரு வட்ட வடிவமான அரங்கத்தை ஒரு முறை சுற்றி வர 'A' விற்கு 252 வினாடிகளும் 'B' விற்கு 308 வினாடிகளும் 'C' விற்கு 198 வினாடிகளும் ஆகின்றன எனில் இவர்கள் எந்த நேரத்தில் தொடங்கிய நிலையில் தொடங்கிய இடத்தில் சந்திப்பார்கள்?
Q142 28 செப்டம்பர் 2025
15 கி.கி சர்க்கரையின் விலை ரூ. 255, 17 கி.கி டீத்தூள் விலை ரூ. 1,615 மற்றும் 22 கி.கி அரிசியின் விலை ரூ. 572 எனில் 18 கி.கி சர்க்கரை, 21 கி.கி டீத்தூள் மற்றும் 27 கி.கி அரிசி ஆகியவற்றின் மொத்த விலை என்ன?
Q143 28 செப்டம்பர் 2025
ஒரு நபரின் வருமானம் 10% உயர்த்தப்பட்டு பிறகு 10% குறைக்கப்படுகிறது எனில் அவருடைய வருமானத்தில் ஏற்படும் மாற்ற விகிதத்தைக் காண்க.
Q144 28 செப்டம்பர் 2025
அடுத்த உறுப்பு காண்.
64, 32, 48, 120, 420, ____.
Q145 28 செப்டம்பர் 2025
குறிப்பு : கீழே கொடுக்கப்பட்டுள்ள இலக்கங்கள்-எழுத்துக்கள்–குறியீடுகள் தொடரிலிருந்து கீழ்க்காணும் வினாவிற்கு விடையளிக்கவும்.
@18HLI6K*&?UE
இத்தொடரில் எத்தனை எண்கள் உயிரெழுத்தை தொடர்ந்தும், உயிர்மெய் எழுத்துக்கு முன்னும் அமைந்துள்ளது?
Q146 28 செப்டம்பர் 2025
45 மாணவர்கள் உள்ள வகுப்பில் ரவி 9 வது தரம் பெற்றுள்ளார். இராஜ்க்கு கீழே 18 மாணவர்கள் தரம் பெற்றுள்ளனர். ரவி மற்றும் ராஜ்க்கு இடைப்பட்ட தரம் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை என்ன?
Q147 28 செப்டம்பர் 2025
ஒன்பது வண்ண பெட்டிகள் சிவப்பு, கருப்பு, வெள்ளை, பச்சை, மஞ்சள், நீலம், ஆரஞ்ச், ஊதா, இளஞ்சிவப்பு இருக்கின்றன. ஆனால் அதே வரிசையில் இருக்க வேண்டிய அவசியமில்லை. ஐந்து பெட்டிகள் சிவப்பு மற்றும் வெள்ளை பெட்டிகளுக்கு இடையில் வைக்கப்பட்டுள்ளன. மஞ்சள் பெட்டியை வெள்ளை பெட்டிக்கு உடன் மேலே வைக்கப்பட்டுள்ளது. மூன்று பெட்டிகள் மட்டுமே மஞ்சள் மற்றும் பச்சை பெட்டிகளுக்கு இடையே உள்ளது. சிவப்பு மற்றும் பச்சை பெட்டிகளுக்கு இடையே உள்ள பெட்டிகளின் எண்ணிக்கையிலேயே கருப்பு மற்றும் மஞ்சள் பெட்டிகளுக்கு இடையில் உள்ளது. நீலப்பெட்டி, கருப்பு பெட்டிக்கு கீழே வைக்கப்பட்டுள்ளது, ஆனால் அது அடியில் வைக்கப்படவில்லை. நான்கு பெட்டிகளுக்கு மேல் மஞ்சள் மற்றும் நீலப் பெட்டிகளுக்கு இடையில் வைக்கப்பட்டுள்ளது. ஒரு பெட்டி நீலப்பெட்டிக்கும் ஆரஞ்சு பெட்டிக்கும் இடையில் வைக்கப்பட்டுள்ளது. இளஞ்சிவப்பு பெட்டி ஊதா பெட்டிக்கு மேல் வைக்கப்பட்டுள்ளது. எந்த பெட்டி கருப்பு பெட்டிக்கு மேலும், கீழும் இருக்கும்?
Q148 28 செப்டம்பர் 2025
DANGER என்பது 10-7-20-13-11-24 என குறியிடப்பட்டிருந்தால், அதே குறியீட்டில் MACHINE என்னும் சொல்லின் குறியீடு
Q149 28 செப்டம்பர் 2025
→ என்பது கூட்டலையும்,
← என்பது கழித்தலையும்,
↑ என்பது வகுத்தலையும்,
↓ என்பது பெருக்கலையும்,
↗ என்பது சமம் என்பதையும் குறித்தால் கீழ்க்கண்டவற்றில் எது சரியானதாகும்?
Q150 28 செப்டம்பர் 2025
உயிரினங்களில் கார்பன் கீழ்கண்ட எந்த பணி/பணிகளைச் செய்கிறது?
(1) இது கரிம மூலக்கூறுகளின் கட்டமைப்பு கூறாக செயல்படுகிறது.
(2) இது மற்ற அணுக்களுடன் எளிதில் பிணைப்புகளை ஏற்படுத்துகிறது.
(3) இது உயிர் மூலக்கூறுகள் (DNA, RNA) எடுக்கக்கூடிய வடிவம் மற்றும் செயல்பாட்டிற்கு நெகிழ்வு தன்மையை அளிக்கிறது.
Q151 28 செப்டம்பர் 2025
இவற்றில் ஒன்று தவறாக பொருத்தப்பட்டுள்ளது :
(1) டவுனின் குறைபாட்டு நோய் – 21 வது குரோமோசோமில் ஏற்படும் ஆட்டோசோமல் டிரைசோமி
(2) ஹீமோபிலியா – பால் இணைந்த தலைமுறை
(3) கிளின்ஃபெல்டர் குறைபாட்டு நோய் – XO நிலை
(4) டர்னரின் குறைபாட்டு நோய் – வளர்ச்சி பின்னடைந்த மகளிர்
Q152 28 செப்டம்பர் 2025
சரியான கூற்றுகளைத் தேர்ந்தெடு :
மின்காந்தங்கள் தயாரிக்கப் பயன்படும் காந்தப் பொருட்கள் பெற்றிருக்க வேண்டிய பண்புகள்.
I. குறுகலான காந்தத்தயக்க கண்ணி
II. மிகு ஊடுருவுதிறன்
III. மிகு காந்த நீக்குத்திறன்
IV. குறை தக்கவைப்புத் திறன்
Q153 28 செப்டம்பர் 2025
கீழ்க்காணும் நிலையான வளர்ச்சி இலக்குகளைப் பட்டியல் I யை பட்டியல் II உடன் பொருத்துக :
(a) நிலையான வளர்ச்சி இலக்கு – 6 – 1. நிலத்தில் வாழும் உயிரிகள்
(b) நிலையான வளர்ச்சி இலக்கு – 11 – 2. தண்ணீருக்கு உள்ளே வாழும் உயிரிகள்
(c) நிலையான வளர்ச்சி இலக்கு – 14 – 3. சுத்தமான நீர் மற்றும் சுகாதாரம்
(d) நிலையான வளர்ச்சி இலக்கு – 15 – 4. நிலையான நகர்புறங்கள் மற்றும் சமூகங்கள்
Q154 28 செப்டம்பர் 2025
மண் பற்றிய கூற்றில் சரியானவற்றை தேர்ந்தெடு :
(1) வட இந்திய சமவெளியின் மண் பெரும்பாலும் இமயமலை ஆறுகளால் படியவைக்கப்படுகிறது.
(2) கருப்பு மண் என்று பிரபலமாக அறியப்படும் மண்ணில் இரும்பு ஆக்சைடு அதிகம் உள்ளது.
(3) தக்காணப் பீடபூமியிலிருந்து உருவாகும் மண் வளமான மற்றும் அதிக ஈரப்பதத்தை தாங்கும் திறனுடையது.
Q155 28 செப்டம்பர் 2025
கீழ்காண்பனவற்றுள் தீன்-இலாஹி பற்றிய உண்மையான கூற்று/கூற்றுகள் எவை?
Q156 28 செப்டம்பர் 2025
சோழ அரசி வாணமாதேவி சதி மேற்கொண்டார் என்பதை வெளிப்படுத்தும் பட்டயம் ________.
Q157 28 செப்டம்பர் 2025
சரியாகப் பொருந்தியுள்ளதைத் தேர்ந்திடுக :
(1) நிரந்தர நிலவரித் திட்டம் – கர்சன் பிரபு
(2) வங்கப் பிரிவினை – காரன்வாலிஸ்
(3) இரயத்துவாரி முறை – மன்றோ
(4) இருப்புப்பாதை இணைப்பு – டல்ஹௌசி
Q158 28 செப்டம்பர் 2025
பொருத்துக :
(a) பாரதியார் – 1. பாண்டியன் பரிசு
(b) கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை – 2. தமிழன் இதயம்
(c) பாரதிதாசன் – 3. கண்ணன் பாட்டு
(d) இராமலிங்கம் பிள்ளை – 4. ஆசிய ஜோதி
Q159 28 செப்டம்பர் 2025
சரியான காலவரிசையில் அமைத்திடுக :
(1) இந்திய தேசிய இராணுவம் மீதான விசாரணை
(2) இந்திய தேசிய இராணுவம் தோற்றுவிக்கப்படுதல்
(3) இராயல் இந்திய விமானப்படை தோற்றுவிக்கப்படுதல்
(4) சி. இராஜகோபால ஆச்சாரி திட்டம்
Q160 28 செப்டம்பர் 2025
கீழ்கண்ட வரிசை (A) உடன் வரிசை (B) யை பொருத்துக :
வரிசை (A) கருப்பொருள் – வரிசை (B) ஆண்டு
(a) நீதித்துறை செயற்பாடு – 1. 1976
(b) ஆளுமையில் அறநெறி (SARC) – 2. 1997
(c) நீதித்துறை வாழ்வின் மாண்புகளின் மறு அறிக்கை – 3. 1947
(d) நிர்வாகத் தீர்ப்பாயம் – 4. 2007
Q161 28 செப்டம்பர் 2025
அடிப்படைக் கடமைகள் பற்றிய சரியானக் கூற்றினை/கூற்றுகளைத் தேர்ந்தெடு :
(1) இந்தியாவின் இறையாண்மை, ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டைப் பாதுகாப்பது.
(2) இயற்கைச் சூழலை பாதுகாப்பது மற்றும் மேம்படுத்துவது.
(3) நம்முடைய பாரம்பரியங்களையும், பன்முகப் பண்பாட்டையும் பாதுகாப்பது.
(4) தனியார் உடைமைகளைப் பாதுகாப்பது.
Q162 28 செப்டம்பர் 2025
கீழ்வரும் கூற்று [A] மற்றும் காரணம் [R] ஆகியவற்றை பயன்படுத்தி சரியான விடையைத் தேர்ந்தெடுக்க :
கூற்று [A] : இந்திய அரசமைப்புச் சட்டம் மிகவும் குறிப்பாக நீதிப்புனராய்வு அதிகாரத்தைக் குறிப்பிடுகிறது.
காரணம் [R] : நீதித்துறையானது தனது நீதிப்புனராய்வு அதிகாரத்தை அடுத்தடுத்தாண்டுகளில் விரிவாக்கிக் கொண்டது.
Q163 28 செப்டம்பர் 2025
முன்னுரிமை அட்டவணை வரிசையின்படி சரியான வரிசை ஒழுங்கினைக் கண்டறிக
Q164 28 செப்டம்பர் 2025
கீழ்க்காண்பவற்றுள் பொருத்தமற்றது எது?
Q165 28 செப்டம்பர் 2025
பத்தி: பெண்களின் பங்களிப்பு இல்லாமல் ஒரு நாடோ அல்லது ஒரு சமூகமோ முன்னேற்றம் அடைய முடியாது. பாலின வேறுபாட்டினை நாம் களைந்தால் குடும்பம், நாடு மற்றும் இந்த உலகம் வளர்ச்சி அடைவதற்கான திறமை மற்றும் அறிவினை பெண்கள் வெளிப்படுத்துவர். ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் பொது செயலாளர் கோஃபி அன்னான் அவர்கள் பாலின சமத்துவம் என்பது குறிக்கோளை விடவும் மேலானது எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும் வறுமையைக் குறைக்க, நீடித்த சீரான வளர்ச்சி மற்றும் சிறந்த ஆளுமைக் கட்டமைப்பிற்கு இது முன் நிபந்தனை என கூறியுள்ளார்.
கீழ்க்கண்ட பத்தியினை வாசித்து, பின்வருவனவற்றிற்கு விடையளிக்கவும். உங்கள் விடை இப்பகுதியை அடிப்படையாகக் கொண்டே அமைய வேண்டும்.
Q166 28 செப்டம்பர் 2025
"நாட்டின் அடிப்படைச் சட்டத்தின்படியே அன்றி எந்த ஒரு மனிதனும் கைது செய்யப்படவோ, சிறைப்படுத்தப்படவோ, நாடுகடத்தப்படுவதோ, அவரின் சொத்துக்களைக் கைப்பற்றவோ" வேறு எந்த வகையிலோ அழிக்கப்பட முடியாது.
இந்த புகழ்பெற்ற வாசகம் அமைந்துள்ள ஆவணம்...
Q167 28 செப்டம்பர் 2025
தேசிய கூட்டுறவு மேம்பாட்டு கழகம் (NCDC) பற்றிய கூற்றுகளில் சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்
(1) இது ஓர் சட்டப்பூர்வ கழகம்
(2) இது ஓர் தன்னாட்சி நிறுவனமாகும்
(3) இன்று இதுவோர் பொது நிதி நிறுவனமாக இருக்கிறது
(4) இது வேளாண் மற்றும் விவசாயிகள் நல அமைச்சகத்தின் நிர்வாக கட்டுப்பாட்டின் கீழ் இயங்குகிறது
Q168 28 செப்டம்பர் 2025
கூற்று [A] : எச்.ஐ.வி தொற்று பெரும்பாலும் உணர்வுள்ள நடத்தை முறை காரணமாக பரவுகிறது.
காரணம் [R] : இரத்தமாற்ற நோயாளிகளுக்கு எய்ட்ஸ் தொற்று மோசமான கண்காணிப்பு காரணமாக ஏற்படலாம்.
Q169 28 செப்டம்பர் 2025
பின்வரும் திட்டங்கள் மற்றும் கருத்துகளை அது தொடர்புடைய பெயர்களுடன் சரியாக பொருத்துக :
(a) ரயத்வாரி திட்ட அறிக்கை – 1. தந்தை பெரியார்
(b) பஞ்சமர் பள்ளிகளை ஆதிதிராவிடர் பள்ளிகள் என அழைப்பது – 2. தாமஸ் மன்றோ மற்றும் ப்ரான்சிஸ் எலிஸ்
(c) ஆணாதிக்க பேரினவாதத்தை எதிர்த்த தலைவர் – 3. ஜான் ராவ்ஸ்
(d) நீதிக் கோட்பாடு – 4. அயோதிதாசர் மற்றும் சிங்காரவேலர்
Q170 28 செப்டம்பர் 2025
கூற்று [A] : பெண்களுக்கு அதிகாரமளித்தல் என்பது சமூக நீதியின் ஒரு மூலக்கல்லாகும். பணிபுரியும் பெண்கள் விடுதிகள், குழந்தைப் பராமரிப்பு மையங்கள் மற்றும் பெண்கள் தொடர்பான திறன் மேம்பாட்டுத் திட்டங்கள் போன்ற முயற்சிகள் பணித் தொகுதியில் பெண்களின் பங்களிப்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளன.
காரணம் [R] : பொருளாதாரத்தில் பெண்கள் பங்கேற்பதற்கான தடைகளை நீக்கி, அரசாங்கம் மிகவும் உள்ளடக்கிய மற்றும் துடிப்பான தொழிலாளர்களை வளர்த்து வருகிறது.
Q171 28 செப்டம்பர் 2025
இந்தியாவில் திறந்தவெளி மலம் கழிப்பதை ஒழிப்பதற்கும், 'ஸ்வச் பாரத் மிஷன்' மூலம் திடக்கழிவு மேலாண்மையை மேம்படுத்துவதற்கும் மேற்கொள்ளப்படும் முயற்சிகள்
Q172 28 செப்டம்பர் 2025
புதிதாகத் தொடங்கப்படும் நிறுவனங்களுக்கு வரிச்சலுகை மூன்று வருடங்களுக்கு வழங்குவது என்று தொடங்கப்பட்டது நிதி சட்டம்?
Q173 28 செப்டம்பர் 2025
பின்வருவனவற்றுள் கிராமத்திலிருந்து நகரத்திற்கு இடம் பெயர்வு குறித்த தவறான பொருத்தத்தைக் கண்டறிக.
(1) கிராமத்திலிருந்து கிராமத்திற்கு இடம் பெயர்வு – தலைகீழ் எதிர் நகர்வு
(2) கிராமத்திலிருந்து நகரத்திற்கு இடம் பெயர்வு – நெருக்குதல் வெளியேறுதல் செயல்பாடு
(3) நகரத்திலிருந்து நகரத்திற்கு இடம் பெயர்வு – நகர்புற மறுசுழற்சி
(4) நகரத்திலிருந்து கிராமத்திற்கு இடம்பெயர்வு – கிராமப்புற மறுசுழற்சி
Q174 28 செப்டம்பர் 2025
தமிழ்நாட்டில் உள்ள முக்கிய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரம்
Q175 28 செப்டம்பர் 2025
கூற்று [A] : இடப்பெயர்வு என்பது பிராந்தியங்கள் மற்றும் பிரதேசங்களுக்கு இடையே மக்கள் இடம்பெயர்தல் ஆகும்.
காரணம் [R] : இடப்பெயர்வு வெளிப்புறமாகவோ அல்லது சர்வதேசமாகவோ இருக்கலாம்.
Q176 28 செப்டம்பர் 2025
பின்வருவனவற்றில் எது தவறாக இணைக்கப்பட்டுள்ளது?
(1) கோயம்புத்தூர் – தென்னிந்தியாவின் மான்செஸ்டர்
(2) மதுரை – தமிழ்நாட்டின் பண்பாட்டுத் தலைநகரம்
(3) நாமக்கல் – தமிழகத்தின் நெற்களஞ்சியம்
(4) தஞ்சாவூர் – முட்டை நகரம்
Q177 28 செப்டம்பர் 2025
பின்வருவனவற்றுள் எவை சரியாகப் பொருந்தியுள்ளன?
(1) குறிஞ்சி – கிளி
(2) முல்லை – காட்டுக் கோழி
(3) மருதம் – வானம்பாடி
(4) நெய்தல் – ஆந்தை
(5) பாலை – புறா
Q178 28 செப்டம்பர் 2025
சரியான பொருத்தங்களை தேர்ந்தெடுக்கவும்.
(1) காவேரிப்பாக்கம் கல்வெட்டு – வரகுணா
(2) திருமுக்கூடல் கல்வெட்டு – வீரராஜேந்திரா
(3) திருவாலங்காடு செப்பேடு – முதலாம் ராஜேந்திரா
(4) உத்திரமேரூர் கல்வெட்டு – முதலாம் பராந்தகா
Q179 28 செப்டம்பர் 2025
பின்வரும் கூற்று மற்றும் காரணத்தைப் படித்து, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீட்டிலிருந்து சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்.
கூற்று [A] : 1801ம் ஆண்டில், ஆங்கிலேயர்கள் ஓர் சக்திவாய்ந்த படையுடன் சிவகங்கையைத் தாக்கினர்.
காரணம் [R] : 1801ம் ஆண்டில் மருது சகோதரர் சின்ன மருது ஊமைத்துரைக்கு அடைக்கலம் கொடுத்தார்.
Q180 28 செப்டம்பர் 2025
மதராஸ் மாகாணத்தில் ஒத்துழையாமை இயக்க எதிர்ப்பு சங்கத்தை தொடங்கிய கட்சியை அடையாளம் காண்க.
Q181 28 செப்டம்பர் 2025
'உன்னதமான, தூய்மையான மனிதச் சிந்தனையின் தொகுதியே திருக்குறள்' - என்னும் எம். ஏரியலின் கருத்தை அடியொற்றி திருக்குறளை 'தமிழர் வேதம்' எனக் குறிப்பிட்டவர்
Q182 28 செப்டம்பர் 2025
சரியான கூற்றினைக் கண்டறிக.
(1) திருக்குறளை இந்தியில் மொழிபெயர்த்தவர் - அப்பாதீட்சிதர்
(2) திருக்குறளை ஜெர்மனில் மொழிபெயர்த்தவர் - ஏரியல்
(3) திருக்குறள் 'அ'கரத்தில் தொடங்கி 'ன'கரத்தில் முடிகிறது
(4) நட்பியல் 13 அதிகாரங்களைக் கொண்டுள்ளது
Q183 28 செப்டம்பர் 2025
சான்றாண்மையின் இலக்கணம் குறித்து வள்ளுவர் கூறுவனவற்றை நிரல்படுத்துக.
(1) நாணம்
(2) வாய்மை
(3) அன்பு
(4) ஒப்புரவு
(5) கண்ணோட்டம்
Q184 28 செப்டம்பர் 2025
கூற்று [A] : "எல்லாப் பொருளும் இதன்பா லுள,
இதன்பால் இல்லாத எப்பொருளு மில்லை"
காரணம் [R] : திருவள்ளுவரின் கருத்துகளில் பல அவர் காலத்தில் நிலவிய கொள்கைகளோடு ஒப்பிடும் போது புதுமையானவை, புரட்சிகரமானவை.
Q185 28 செப்டம்பர் 2025
"இருப்பு முகம் செறித்த ஏந்தெழில் மருப்பின்" இப்பாடலில் பயின்று வந்துள்ள அணி
Q186 28 செப்டம்பர் 2025
சரியான இணையைத் தேர்ந்தெடுக்க.
தமிழகத்தில் சங்ககால காசுகள் கிடைத்த இடங்கள்.
(1) தர்மபுரி – தொப்பூர்
(2) சேலம் – கன்னியன் குட்டை
(3) ஈரோடு – முக்கொம்பு
(4) திருச்சி – வெம்பாவூர்
Q187 28 செப்டம்பர் 2025
A, B மற்றும் C ஆகியோர் தனித்தனியாக ஒரு வேலையை முறையே 12 நாட்கள், 15 நாட்கள் மற்றும் 20 நாட்களில் செய்கின்றனர். இப்போது மூன்று பேரும் அவ்வேலையை ஒன்றாக செய்யத் துவங்குகின்றனர். ஆனால் C இரண்டு நாட்களில் வேலையை விட்டுவிடுகிறார் எனில், A-ம், B-ம் மீதமுள்ள வேலையை _______ நாட்களில் முடிப்பர்.
Q188 28 செப்டம்பர் 2025
ஒரு சதுர வடிவிலான பூங்காவானது, அதன் அனைத்து பக்கங்களிலும் 2 மீ அகலமுள்ள ஒரே அளவிலான பாதையால் சூழப்பட்டுள்ளது. அந்தப் பாதையின் பரப்பளவு 288 ச.மீ எனில் அந்தப் பூங்காவின் சுற்றளவினைக் காண்க.
Q189 28 செப்டம்பர் 2025
தனி வட்டியில், A என்பவர் ரூ. 16,000 தொகையை 12% ஆண்டு வட்டிக்கு கடன் வாங்குகிறார். தனி வட்டியில், B என்பவர் ரூ. 12,000 தொகையை 18% ஆண்டு வட்டிக்கு கடன் வாங்குகிறார். எத்தனை ஆண்டுகளில் இவர்களின் கடன் தொகை சமமாக இருக்கும்?
Q190 28 செப்டம்பர் 2025
ஒரு மனிதர் ரூ. 500 க்கு, 12 மேசைகள் மற்றும் நாற்காலிகள் வாங்குகிறார். ஒரு மேசையின் விலை ரூ. 50ம், ஒரு நாற்காலியின் விலை ரூ. 40 க்கும் வாங்குகிறார் எனில் அவர் வாங்கிய நாற்காலி மற்றும் மேசையின் விலையின் விகிதத்தைக் காண்க.
Q191 28 செப்டம்பர் 2025
a மற்றும் a + 2 இவற்றின் மீ.பொ.மடங்கு 1300 எனில் a மற்றும் a + 1 இவற்றின் மீ.பொ.மடங்கு காண்க.
Q192 28 செப்டம்பர் 2025
இரு எண்கள் 15 : 11 என்ற விகிதத்தில் அமைந்துள்ளன. அவற்றின் மீ.பொ.வ 13 எனில் அந்த எண்களைக் காண்க.
Q193 28 செப்டம்பர் 2025
15 மீ 17 செ.மீ நீளமும் 9 மீ 2 செ.மீ அகலமும் கொண்ட ஒரு அறையின் தளத்தை அமைக்கத் தேவையான சதுர ஓடுகளின் குறைந்தபட்ச எண்ணிக்கை என்ன?
Q194 28 செப்டம்பர் 2025
a/b = 4/5 மற்றும் b/c = 15/16 எனில் (c² − a²)/(c² + a²) =
Q195 28 செப்டம்பர் 2025
311 311 311 311 311 311 311 என்ற எண் ஆனது _______.
Q196 28 செப்டம்பர் 2025
A → 1, B → 2, C → 3 ... Z → 26 எனக் கொண்டால்
AB + BC + CA என்பது _______க்கு சமமாக இருக்காது.
Q197 28 செப்டம்பர் 2025
ஒரு பகடையில் 1க்கு எதிரே 4 மற்றும் 2க்கு எதிரே 5 உள்ளது எனில்
Q198 28 செப்டம்பர் 2025
P என்பவர் Q ஐ விட பெரியவர். R என்பவர் Q-வை விட பெரியவர் ஆனால் Pஐ விட சிறியவர். S என்பவர் P ஐ விட பெரியவர் ஆனால் Tஐ விட சிறியவர். இதில் யார் மிகச்சிறியவர்?
Q199 14 செப்டம்பர் 2024
பின்வரும் இணைகளில் தவறானவற்றை கண்டுபிடி :
கிளர்ச்சி – பகுதி
(I) ராமோசிஸ் – பூனா
(II) குகா – பஞ்சாப்
(III) சந்தல்ஸ் – ஒரிசா
(IV) கிட்டூர் – மலபார்
Q200 14 செப்டம்பர் 2024
“ரூபாயின் பிரச்சனை” என்ற ஆய்வறிக்கையை __________ சமர்ப்பித்தார்.
Q201 14 செப்டம்பர் 2024
‘நியூ லாம்ப்ஸ் ஃபார் வோல்ட்’ என்னும் தலைப்பில் கட்டுரைத் தொடரினை எழுதியவர் யார்?
Q202 14 செப்டம்பர் 2024
பின்வரும் நிறுவனங்களை அதன் சரியான இருப்பிடத்துடன் பொருத்தவும் :
(a) NIFPHATT – 1. பெங்களூரு
(b) CICEF – 2. கொச்சி
(c) NFDB – 3. சென்னை
(d) CAA – 4. ஹைதராபாத்
Q203 14 செப்டம்பர் 2024
கூற்று [A] : இந்தியாவில் பாரம்பரிய சிறுதொழில்கள் அதிக வேலைவாய்ப்பை நவீன சிறு தொழில்களைவிட வழங்குகின்றன.
காரணம் [R] : பாரம்பரிய சிறுதொழில்களில் தொழிலாளருக்கு தேவைப்படும் மூலதன மதிப்பு குறைவாகவும் நவீன சிறு தொழில்களில் தொழிலாளருக்கு தேவைப்படும் மூலதன மதிப்பு அதிகமாகவும் உள்ளது.
Q204 14 செப்டம்பர் 2024
பின்வருவனவற்றுள் எது சரியானவை?
(a) சமத்துவமான முன்னேற்றம் 11வது ஐந்தாண்டுத் திட்டத்தின் நோக்கமாகும்.
(b) அதிவேகமான, நிலையான மற்றும் அதிகப்படியான உள்ளடக்கிய வளர்ச்சி 11வது ஐந்தாண்டுத் திட்டத்தின் முக்கிய நோக்கங்களாகும்
Q205 14 செப்டம்பர் 2024
பின்வருவனவற்றுள் பத்தாண்டு காலத்தில் சரியான கல்வியறிவு தொடர்பான இலக்கு
Q206 14 செப்டம்பர் 2024
கீழ்காணும் கூற்றுகளை கருத்தில் கொண்டு, சரியான விடையைத் தேர்ந்தெடுக்க :
Q207 14 செப்டம்பர் 2024
சர்க்காரியா ஆணையம் பற்றிய தவறான கூற்றினை கண்டறிக :
(i) சர்க்காரியா ஆணையம் 1983-ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டது
(ii) இந்த ஆணையம் 247 பரிந்துரைகளை அளித்தது
(iii) கூறு 356-ஐ நீக்குவதற்கு இந்த ஆணையம் பரிந்துரைத்தது
(iv) வரிவிதிப்பில் உள்ள எஞ்சிய அதிகாரங்கள் மாநிலங்களிடம் இருக்க வேண்டும் என்று இந்த ஆணையம் பரிந்துரைத்தது.
Q208 14 செப்டம்பர் 2024
சரியான இணையை கண்டறிக :
குடியரசுத் தலைவர் பெயர் – தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு
(1) Dr. S. ராதா கிருஷ்ணன் – 1961
(2) Dr. சாகீர் உசேன் – 1966
(3) பக்ருதீன் அலி அகமத் – 1974
(4) N. சஞ்சீவ ரெட்டி – 1977
Q209 14 செப்டம்பர் 2024
கீழ்க்கண்டவற்றுள் தவறான இணையை கண்டறிக :
(i) சட்ட உறுப்பு 18 – பட்டங்களை ஒழித்தல்
(ii) சட்ட உறுப்பு 21 – உயிர்வாழ்தல் மற்றும் தனி மனித சுதந்திரத்திற்கான பாதுகாப்பு
(iii) சட்ட உறுப்பு 23 – கைது செய்யப்படுவதிலிருந்து பாதுகாப்பு
(iv) சட்ட உறுப்பு 20 – சுதந்திரமாக நடமாடுவதற்கான உரிமை
Q210 14 செப்டம்பர் 2024
‘நகரங்களை அழிப்பவர்’ என்று எந்த வேதக் கடவுள் அறியப்படுகிறார்?
Q211 14 செப்டம்பர் 2024
கீழ்கண்டவற்றுள் ஹரப்பா நாகரிகம் பற்றி தவறான கூற்று எது?
Q212 14 செப்டம்பர் 2024
இரண்டாம் சந்திர குப்தருக்கு முந்தைய குப்த மன்னர்கள் __________ நாணயங்களை மட்டுமே வெளியிட்டனர்.
Q213 14 செப்டம்பர் 2024
ஹாக்-இ-ஷார்ப் அல்லது ஹஸில்-இ-ஷார்ப் என்பதன் பொருள்
Q214 14 செப்டம்பர் 2024
பின்வருவனவற்றில் எவை சரியாக இணைக்கப்பட்டுள்ளன?
(i) ஹெமடைட் தாது – இரும்பின் ஆக்சைடு
(ii) மேக்னடைட் தாது – கருப்பு தாது
(iii) லிமோனைட் – டோலமைட்
(iv) சிட்ரைட் – இரும்பு கார்பனேட்
Q215 14 செப்டம்பர் 2024
அடர்த்தி மற்றும் சுருக்கம் என்பது போக்குவரத்துச் செலவுகளைக் குறைப்பதற்கும், சேமிப்பகத்தை எளிதாக்குவதற்கும், மீட்டெடுக்கப்பட்ட பொருட்களின் அடர்த்தியை அதிகரிக்கப் பயன்படும் அலகு செயல்பாடுகள் ஆகும். இந்த முறை பின்வரும் எந்த முறையில் பயன்படுத்தப்படுகிறது?
Q216 14 செப்டம்பர் 2024
அண்மையில், துபாயில் மேக விதைப்பு தொழில்நுட்பம் செயற்கை மழையை பெற பயன்படுத்தப்பட்டது.
பின்வருவனவற்றுள் எவை பொதுவாக விதைப்பு முகவர்களாக உபயோகிக்கப்படுத்தப்படுகின்றன?
(1) வெள்ளி அயோடைடு
(2) உலர் பனி
(3) சோடியம் குளோரைடு
(4) ஈய அயோடைடு
(5) அம்மோனியம் சல்பேட்
Q217 14 செப்டம்பர் 2024
‘தமிழ்நாடு தினம்’ ஒவ்வொரு வருடமும் இந்த தினத்தில் கொண்டாடப்படுகிறது
Q218 14 செப்டம்பர் 2024
கீழ்க்கண்டவற்றில் சரியாகப் பொருத்தப்பட்ட இணை எவை?
(1) 2014 – ஒலிம்பிக் மேடை இலக்குத் திட்டம்
(2) 2023 – எனது இளைய பாரதம் (MY பாரத்)
(3) 1982 – இந்திய விளையாட்டு ஆணையம் (SAI)
(4) 1984 – துரோணாச்சாரியார் விருது நிறுவப்பட்டது
Q219 14 செப்டம்பர் 2024
0.5 A மின்னோட்டம் ஒளிரும் விளக்கு வழியாக இரண்டு நிமிடங்கள் பாய்கிறது எனில், விளக்கு வழியே சென்ற எதிர்மின்னணுக்களின் எண்ணிக்கை
Q220 14 செப்டம்பர் 2024
இந்திய விண்வெளி ஆய்வு மையத்தால் 75வது சுதந்திரத்தின் போது ஏவப்படும் மனிதனைக் கொண்டு செல்லும் விண்கலத்தின் விண்வெளிப் பயணம் மேற்கொள்ளும் குழு உறுப்பினர் எவ்வாறு அழைக்கப்படுவார்?
Q221 14 செப்டம்பர் 2024
விஞ்ஞான முறைகளை நிறுவுவதில் வழிகாட்டி – மாணவர் சங்கிலியை காலவரிசைப்படி தேர்ந்தெடுக்கவும்
Q222 14 செப்டம்பர் 2024
10 கிலோ எடையுள்ள ஒரு பொருளில் 1N விசை செயல்படுகிறது. இதன் விளைவாக அந்த பொருள் 4 வினாடிகளில் 100 செ.மீ நேர்கோட்டில் நகரும் எனில் அதன் ஆரம்ப வேகத்தைக் கண்டறியவும்.
Q223 14 செப்டம்பர் 2024
ஒரு ரோஜா நிறப்பூவில் பச்சை ஒளி ஒளிர்விக்கிறது. அப்போது, அதன் இதழ்களின் நிறமாகத் தோன்றுவது
Q224 14 செப்டம்பர் 2024
நெய்வேலி லிக்னைட் கார்பரேஷன் நிறுவனம் இந்திய அரசால் எப்போது நிறுவப்பட்டது?
Q225 14 செப்டம்பர் 2024
பின்வரும் பல்கலைக்கழகங்களை அவை நிறுவப்பட்ட ஆண்டின் காலவரிசைப்படி ஒழுங்கமைக்கவும் :
(1) மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம்
(2) பாரதிதாசன் பல்கலைக்கழகம்
(3) திருவள்ளுவர் பல்கலைக்கழகம்
(4) பெரியார் பல்கலைக்கழகம்
Q226 14 செப்டம்பர் 2024
கூற்று [A] : சட்டப்பிரிவு 240ன் மூலம் தனக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தின்படி ஜனாதிபதி B.P. மண்டல் என்பவரை பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான ஆணையத் தலைவராக நியமித்தார்.
காரணம் [R] : இவ்வாணையம் பின்தங்கிய நிலையை தீர்மானிக்க பதினொரு குறிகாட்டிகளை உருவாக்கியுள்ளது.
Q227 14 செப்டம்பர் 2024
கீழ்க்கண்டவற்றைப் பொருத்துக :
(a) பிராமணரல்லாதோர் இயக்கம் – 1. ஜோதிராவ் பூலே
(b) சுயமரியாதை இயக்கம் – 2. ஈ.வெ. ராமசாமி
(c) ஸுத்தி இயக்கம் – 3. தயானந்த சரஸ்வதி
(d) சத்ய சோதாக் சமாஜ் இயக்கம் – 4. ஸ்ரீ சாகு மகராஜ்
Q228 14 செப்டம்பர் 2024
ஈ.வெ.ரா. பற்றி கால வரிசைப்படி பின்வரும் நிகழ்வுகளை ஒழுங்கமைக்கவும்.
(1) அவர் நீதிக் கட்சியின் தலைவர் ஆனார்
(2) அவர் காங்கிரஸில் சேர்ந்தார்
(3) அவர் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் ஆனார்
(4) வைக்கம் சத்தியாகிரகம் துவக்கினார்
Q229 14 செப்டம்பர் 2024
“வானாளும் செல்வமும் மண்ணரசும் யான்வேண்டேன்” – என்று பாடியவர்.
Q230 14 செப்டம்பர் 2024
தோற்றுவித்தவர்களுடன் தொடர்புடைய செய்தித்தாளை சரியாக பொருத்தவும் :
(a) ரிச்சர்டு ஜான்சன் – 1. மதராஸ் கூரியர்
(b) G.P. பிள்ளை – 2. மதராஸ் மெயில்
(c) சார்லஸ் லாசன் மற்றும் ஹென்றி கார்னிஷ் – 3. மதராஸ் ஸ்டான்டர்டு
(d) G. சுப்ரமணிய ஐயர் – 4. தி ஹிந்து
Q231 14 செப்டம்பர் 2024
“நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி” என்ற பழமொழியில் ‘இரண்டு’ எதனைக் குறிக்கின்றது?
Q232 14 செப்டம்பர் 2024
எதனை ‘பனையளவு நன்றியாகக் கொள்வர்’ என வள்ளுவர் குறிப்பிடுகிறார்?
Q233 14 செப்டம்பர் 2024
“கல்லாரைக் காணுங்கால் கல்வி நல்காக்
கசடர்க்குத் தூக்குமரம் அங்கே உண்டாம்” –
இக்கவிதை வரிகளுக்கு உரியவர் யார்?
Q234 14 செப்டம்பர் 2024
அகில இந்திய முஸ்லீம் லீக் பாகிஸ்தான் தீர்மானத்தை லாகூர் மாநாட்டில் எப்பொழுது நிறைவேற்றியது?
Q235 14 செப்டம்பர் 2024
ABCDE = P1Q2R3S4T5 என இருந்தால் பின்வருவனவற்றுள் Q2BFV7A என்பதற்கு சமமானது எது?
Q236 14 செப்டம்பர் 2024
கோபி ஒரு மடிக்கணினியை 12% இலாபத்திற்கு விற்றார். மேலும் அதை ரூ. 1,200-க்கு கூடுதலாக விற்றிருந்தால் இலாபம் 20% ஆக இருந்திருக்கும். மடிக்கணினியின் அடக்க விலையைக் காண்க.
Q237 14 செப்டம்பர் 2024
500 இன் 30% மதிப்பில் 20% என்ன?
Q238 14 செப்டம்பர் 2024
கொடுக்கப்பட்ட தொடரிலிருந்து விடுபட்ட எண்ணைக் காண்க.
4, 18, ?, 100, 180, 294, 448
Q239 14 செப்டம்பர் 2024
முதல் n இயல் எண்களின் கூடுதல் 253 எனில், n-இன் மதிப்பு காண்க.
Q240 14 செப்டம்பர் 2024
fox=cat எனில் xerox என்பது எதனை குறிக்கும்?
Q241 14 செப்டம்பர் 2024
மூன்று பகடைகள் ஒன்றாக உருட்டப்படும்போது அனைத்து பகடையிலும் ஒரே எண் கிடைக்க நிகழ்தகவு என்ன?
Q242 14 செப்டம்பர் 2024
66 ச.செ.மீ வளைபரப்புடைய ஒரு நேர்வட்ட உருளையின் உயரம் 7 செ.மீ எனில், உருளையின் விட்டம் காண்க.
Q243 14 செப்டம்பர் 2024
இரு சக்கர வாகனம் ஒன்றின் விலை இரண்டு ஆண்டுகளுக்கு முன் ரூ. 80,000. முதல் ஆண்டு ஆண்டிற்கு 4% குறைகிறது. இரண்டாம் ஆண்டு 4% அதிகரிக்கிறது எனில் அதன் தற்போதைய விலை என்ன?
Q244 14 செப்டம்பர் 2024
ஒரு வீட்டில் நான்கு அலைபேசிகள் உள்ளன. காலை 5 மணிக்கு, எல்லா அலைபேசிகளும் ஒன்றாக ஒலிக்கும். பின் முதல் அலைபேசியானது ஒவ்வொரு 20 நிமிடங்களிலும், இரண்டாவது அலைபேசி ஒவ்வொரு 30 நிமிடங்களிலும், மூன்றாவது அலைபேசி ஒவ்வொரு 40 நிமிடங்களிலும், நான்காவது அலைபேசி ஒவ்வொரு 50 நிமிடங்களிலும் ஒலிக்கின்றன எனில், அவை மீண்டும் எப்போது ஒன்றாக ஒலிக்கும்?
Q245 14 செப்டம்பர் 2024
x³ − 8y³ மற்றும் x² − k²y² ன் மீப்பெரு பொது வகுத்தி x + ky எனில் kன் மதிப்பு
Q246 14 செப்டம்பர் 2024
தனி வட்டி மூலம் அசல் ரூ. 2,000, 8% வட்டிவீதத்தில் இரட்டிப்பாக எவ்வளவு மாதம் ஆகும்?
Q247 14 செப்டம்பர் 2024
3, 2.7 மற்றும் 0.09 ன் மீ.சி.ம
Q248 14 செப்டம்பர் 2024
கீழ்க்காண்பவற்றில் எது ∛7 மற்றும் ∜5 இவற்றிற்கு இடையில் அமையும்?
Q249 14 செப்டம்பர் 2024
ஜவஹர்லால் நேருவின் நூல்களை அவை வெளியிடப்பட்ட ஆண்டின் அடிப்படையில் காலவரிசைப்படுத்துக :
(1) ஓர் சுயசரிதை : சுதந்திரம் நோக்கி
(2) உலக வரலாறு ஓர் பார்வை
(3) இந்தியாவின் கண்டுபிடிப்பு
(4) சுதந்திரத்திற்கு முன்
Q250 14 செப்டம்பர் 2024
பின்வருவனவற்றில் 'மித்ரா மேளா' சங்கத்தை தொடங்கியவர் யார்?
Q251 14 செப்டம்பர் 2024
அனைத்திந்திய முஸ்லீம் லீக் கட்சியை 1906-ல் நிறுவியது யார்?
Q252 14 செப்டம்பர் 2024
கூற்று [A] : சுவாமி விவேகானந்தர் தனது குருவின் போதனைகளை பரப்ப இராமகிருஷ்ணா மிஷனை நிறுவினார்.
காரணம் [R] : இராமகிருஷ்ணா மிஷன் ஒரு துறவற அமைப்பு மற்றும் அது மனிதனின் ஆன்மீக வளர்ச்சிக்கு தன்னை அர்ப்பணித்தது.
Q253 14 செப்டம்பர் 2024
இந்தியாவில் வறுமை பற்றிய பின்வரும் ஆய்வுகளை காலவரிசைபடி ஒழுங்கமைக்கவும் :
(1) ஓஜா ஆய்வு
(2) பர்தான் ஆய்வு
(3) மின்ஹாஸ் ஆய்வு
(4) தண்டேகர் மற்றும் ராத் ஆய்வு
Q254 14 செப்டம்பர் 2024
டிஜிட்டல் தொழில்நுட்பங்கள் மூலம் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க எடுக்க வேண்டிய நடவடிக்கை
(i) தொழில்நுட்ப உருவாக்கம் மற்றும் பரவல், கொள்கைகள் மற்றும் சீர்திருத்தங்கள் மற்றும் வளர்ச்சி ஊக்கிகள்
(ii) கொள்கைகளும், சீர்திருத்தங்களும்
(iii) சீர்திருத்தங்களும், முன்னேற்றமும்
(iv) செயற்கை நுண்ணறிவும்
Q255 14 செப்டம்பர் 2024
பின்வருவனவற்றை பொருத்துக :
(a) வரி வருவாய் - 1. வட்டி ரசீது
(b) வரி அல்லாத வருவாய் - 2. நிகர சந்தை கடன்கள்
(c) மூலதன ரசீதுகள் - 3. வருமான மற்றும் செலவு மீதான வரிகள்
Q256 14 செப்டம்பர் 2024
கீழ்க்கண்டவற்றைப் பொருத்துக :
இயற்றப்பட்ட ஆண்டு - சட்டத்தின் பெயர்
(a) 1963 - 1. நாட்டின் பெருமை அவமதிக்கப்படுவதைத் தடை செய்யும் சட்டம்
(b) 1991 - 2. மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம்
(c) 1971 - 3. இந்திய ஒன்றியப் பகுதிச் சட்டம்
(d) 1951 - 4. தேசியத் தலைநகர் டெல்லி ஒன்றியப் பகுதிச் சட்டம்
Q257 14 செப்டம்பர் 2024
கூற்று [A] : இந்திய கூட்டாட்சியில், ஆளுநர், அரசின் தலைவர் மற்றும் மத்திய அரசின் பிரதிநிதி என்னும் இரு விதமான பணிகளை செய்கிறார்.
காரணம் [R] : ஆளுநர் என்ற நிறுவனமே கூட்டாட்சிக்கு எதிரானது
Q258 14 செப்டம்பர் 2024
அரசியலமைப்பை உருவாக்கியவர்கள் அரசின் கடமைகளாக அரசியலமைப்பில் இந்த வடிவத்தில் சேர்த்தனர்.
Q259 14 செப்டம்பர் 2024
கீழ்கண்ட அமைப்புகளில் எவை/எவைகள் அரசியலமைப்புச் சட்டத்தில் காணப்படவில்லை?
(1) தேசிய வளர்ச்சிக் குழு
(2) நிதி ஆயோக்
(3) தேர்தல் ஆணையம்
(4) நிதி ஆணையம்
Q260 14 செப்டம்பர் 2024
பின்வருபவர்களுள் முகலாயர்களின் காலத்தில் நடந்த வரலாற்று நிகழ்வுகளை எழுதிய ஒரே பெண் வரலாற்று ஆசிரியர் யார்?
Q261 14 செப்டம்பர் 2024
அகமது ஷாவின் ஆட்சியில் கீழே குறிப்பிட்டவற்றில் எது தவறானது?
Q262 14 செப்டம்பர் 2024
இந்தியா ஒரு 'மனித குலத்தின் அருங்காட்சியகம்' என அழைத்தவர் யார்?
Q263 14 செப்டம்பர் 2024
கீழ்க்கண்டவற்றுள் எந்த ஹரப்பா நாகரீகத் தளங்கள் தற்பொழுது இந்தியாவில் இல்லை?
Q264 14 செப்டம்பர் 2024
கிழக்குக் கடற்கரையில் சுமார் 25 மாவட்டங்கள்; தமிழ்நாட்டில் 10, ஆந்திராவில் 7, ஒடிசாவில் 6, மற்றும் மேற்கு வங்கத்தில் 2 - சூறாவளி புயல்களால் பாதிக்கப்படக்கூடியவை. இவற்றில், எந்தப் பகுதியானது கடுமையான வகைப் புயல்களில் 70 சதவீத பாதிப்பை அடையும்?
Q265 14 செப்டம்பர் 2024
கீழ்க்காணும் கூற்றுகளுக்குரிய இந்தியாவின் ஒரு பழங்குடியினம் எது?
(1) மகாபாரத இதிகாச கதாப்பாத்திரம் ஏகலைவனுடன் தொடர்புடையவர்கள்
(2) ஆரவல்லி, விந்திய மற்றும் சத்புரா மலைத் தொடர்களில் வாழ்பவர்கள்
(3) சிறிய குன்றுகளில் குடிசை அமைத்தல்
(4) மக்காச் சோளமே பிரதான உணவு
Q266 14 செப்டம்பர் 2024
கர்நாடக பீடபூமியின் வடக்கு நிலப்பரப்பு ________ என அழைக்கப்படுகிறது.
Q267 14 செப்டம்பர் 2024
எந்த அமைச்சகம் சஞ்சார் சாத்தி போர்ட்டலில் டிஜிட்டல் நுண்ணறிவு தளம் மற்றும் 'சாக்ஷு' வசதியை தொடங்கியது?
Q268 14 செப்டம்பர் 2024
பின்வருவனவற்றை பொருத்துக :
பகுதி I - பகுதி II
(a) இந்தியா - 1. வழுக்கை கழுகு
(b) ஜப்பான் - 2. டால்பின்
(c) அமெரிக்கா - 3. பியோனி
(d) சீனா - 4. செர்ரி மலர்ச்சி
5. அரச வங்கப்புலி
Q269 14 செப்டம்பர் 2024
ஜவுளி மற்றும் தொழில்துறை அமைச்சகத்தால் சில்ப் விருதுகள் யாருக்கு வழங்கப்படுகிறது?
Q270 14 செப்டம்பர் 2024
நிலவின் சில பகுதிகள் எப்போதும் சூரிய ஒளியினைப் பார்த்ததேயில்லை. ஏன் என்றால் நிலவின் அச்சு சூரிய ஒளியின் திசைக்கு ________ ஆக இருப்பதால்.
Q271 14 செப்டம்பர் 2024
பின்வருவனவற்றைப் பொருத்துக :
(a) CO₂ - 1. நிலத்தடி நீர் மாசுபாடு மற்றும் காற்றில் உள்ள துகளுரு மாசு
(b) NOₓ - 2. புவி வெப்பமயமாதல்
(c) காரீயம் (Pb) - 3. அமில மழை
(d) ஹைட்ரோகார்பன் (HC) - 4. ஒளி வேதியியல் புகைபனி உருவாகுவதற்கான ஒரு மூலப்பொருள்
Q272 14 செப்டம்பர் 2024
கூற்று [A] : 2 - 4 - D களைக்கொல்லியாக செயல்படுகிறது
காரணம் [R] : 2 - 4 - D கருவுறாமல் கனி உருவாக காரணமாகிறது.
Q273 14 செப்டம்பர் 2024
புறவயப்பட்டதன்மை, முன்கணிப்புத்தன்மை மற்றும் பொதுமைத்தன்மை ஆகியவை ________ யின் அம்சங்களாக அமைகிறது.
Q274 14 செப்டம்பர் 2024
பின்வருவனவற்றில் "CEDAW" என்ற விரிவாக்கத்தின்/பொருளை சரியாகத் தேர்ந்தெடுக்கவும்.
Q275 14 செப்டம்பர் 2024
தமிழ்நாடு மாநிலத்திற்கான அனைத்து புவியியல் தரவுகளுக்கும் பின்வருவனவற்றில் எது ஒரே இடத்தில் உள்ளது?
Q276 14 செப்டம்பர் 2024
1987 – ஐ ________ ஆக ஐக்கிய நாட்டு சபை அறிவித்தது.
Q277 14 செப்டம்பர் 2024
எந்த ஆண்டு பிளிப்கார்ட், தமிழ்நாடு MSME வர்த்தகம் மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு புரிந்துணர்வு பணியகத்துடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது?
Q278 14 செப்டம்பர் 2024
பின்வரும் அடித்தளங்களை அது தொடர்புடைய பெயர்களோடு சரியாக பொருத்துக :
(a) தென்னிந்திய நல உரிமைச் சங்கம் - 1. A. சிங்காரவேலர்
(b) குடியரசு இதழ் - 2. C. ராஜகோபாலாசாரி
(c) தொழிலாளர் அமைப்புகளின் தோற்றம் - 3. தந்தை பெரியார்
(d) சுதந்திர கட்சி - 4. C. நடேசன்
Q279 14 செப்டம்பர் 2024
2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தமிழ்நாட்டின் மக்கள் தொகை அடர்த்தி
Q280 14 செப்டம்பர் 2024
இலக்கியம், இசை, நாடகம் ஆகியவற்றில் தேர்ச்சி பெற்ற தமிழ்ப் பெண்கள் ________ என்று அழைக்கப்பட்டனர்.
Q281 14 செப்டம்பர் 2024
பின்வரும் வகைக்கு இடையே சரியான பொருத்தங்களை தேர்வு செய்யவும்.
(1) திரு.வி.க - தேசபக்தன்
(2) சுப்ரமணிய பாரதியார் - இந்து
(3) அன்னிபெசன்ட் - நியூ இந்தியா
(4) கஸ்தூரி ரங்க அய்யங்கார் - இந்தியா
Q282 14 செப்டம்பர் 2024
________ ன் இயற்பெயர் குமாரசாமி நாயக்கர்.
Q283 14 செப்டம்பர் 2024
'பகைவரின் கர்வத்தை அடக்கும் ஆயுதம்' என்று வள்ளுவர் எதனைக் குறிப்பிடுகிறார்?
Q284 14 செப்டம்பர் 2024
"________ பிறனாக்கம்
பேணாது அழுக்கறுப் பான்".
என்று யாரை திருவள்ளுவர் குறிப்பிடுகிறார்?
Q285 14 செப்டம்பர் 2024
தாலாட்டுப் பாடலில் தாய்மாமன் கட்டி வரும் வேட்டி வகை எது?
Q286 14 செப்டம்பர் 2024
"உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும்" –
மேற்காணும் புறநானூற்றுப்பாடல் அடி எதன் சிறப்பை வலியுறுத்துகின்றது?
Q287 14 செப்டம்பர் 2024
கீழே கொடுக்கப்பட்டுள்ள காலத்தில் நக்கீரர் மிக முக்கிய புலவராக எந்தச் சங்க காலத்தைச் சேர்ந்தவராகக் கருதப்படுகிறார்?
(a) முதல் சங்கம்
(b) மூன்றாம் சங்கம்
(c) இரண்டாம் சங்கம்
(d) நான்காம் சங்கம்
Q288 14 செப்டம்பர் 2024
ஒரு செவ்வக வடிவ நிலத்தின் ஒரு பக்க அளவு 15 மீ மற்றும் அதன் ஒரு மூலைவிட்டம் 17 மீ எனில், நிலத்தின் பரப்பளவை காண்க.
Q289 14 செப்டம்பர் 2024
1, 2, 2, 3, 3, 3 முகமதிப்புகள் கொண்ட இரு பகடைகள் உருட்டப்படும் பொழுது, முதல் பகடையின் முக மதிப்பை விட இரண்டாவது பகடையின் முக மதிப்பு அதிகமாக இருக்க வாய்ப்புகள் எத்தனை?
Q290 14 செப்டம்பர் 2024
ரூ. 10,890 ஐ A மற்றும் B என்ற இரு குழுக்களுக்கு 4:5 என்ற விகிதத்தில் பிரித்துக் கொடுத்தால் B குழுவிற்கு கிடைக்கும் தொகை என்ன?
Q291 14 செப்டம்பர் 2024
cat = abc
dog = def என இருந்தால் tan/cot என்பது பின்வருவனவற்றுள் எதனால் குறிக்கப்படலாம்?
Q292 14 செப்டம்பர் 2024
E & G B D M 4 N K H 2 A C Z S V 3 F 1 J L O Q 5 P R
வினா குறியீட்டுக்குப் பதிலாக வரும் தொடர் எது?
GDR BMP D45 ?
Q293 14 செப்டம்பர் 2024
A என்பவர் ஒரு வேலையை 6 நாட்களிலும் B என்பவர் 12 நாட்களிலும் முடிப்பர் எனில், இருவரும் ஒன்றாகச் சேர்ந்து அந்த வேலையை எத்தனை நாட்களில் முடிப்பர்?
Q294 14 செப்டம்பர் 2024
ஒரு நீச்சல் குளம் 24 மீட்டர் நீளமும் 15 மீட்டர் அகலமும் கொண்டது. குறிப்பிட்ட எண்ணிக்கையிலான ஆண்கள் அந்தக் குளத்தில் குதிக்கும் போது, நீரின் உயரம் ஒரு செ.மீ உயர்கிறது. ஒரு ஆண் சராசரியாக வெளியேற்றும் நீரின் அளவு 0.1 மீ³ எனில் அந்த நீச்சல் குளத்தில் எத்தனை ஆண்கள் உள்ளனர்?
Q295 14 செப்டம்பர் 2024
ஆண்டு வட்டி விகிதம் 16⅔% எனில் ரூ. 68,000க்கு ஒன்பது மாதங்களுக்கு தனி வட்டி என்ன?
Q296 14 செப்டம்பர் 2024
A : B : C = 2 : 3 : 4 எனில் A/B : B/C : C/A ன் மதிப்பு
Q297 14 செப்டம்பர் 2024
கூட்டம் துவங்குவதற்கு 20 நிமிடம் முன்னமே சுனில் என்பவர் 8.50 மணிக்கு சென்றார். அங்கு கூட்டம் துவங்குவதற்கு 30 நிமிடம் முன்னரே வந்து விட்டதாக உணர்ந்தார். ஒரு மனிதர் கூட்டத்திற்கு 40 நிமிடம் காலதாமதமாக வந்தார் எனில் கூட்டம் துவங்க குறித்த நேரம் என்ன?
Q298 14 செப்டம்பர் 2024
'B' என்பவர் 'A' என்பவரை விட 20% அதிகமாக வேலை செய்கிறார். A ஒரு வேலையை 7½ மணி நேரத்தில் செய்து முடிக்கிறார் எனில், B மட்டும் அந்த வேலையை செய்து முடிக்க எத்தனை மணி நேரம் எடுத்துக் கொள்வார்?
பொறுப்புத் துறப்பு: TN Online Test ஒரு தனிப்பட்ட பயிற்சி இணையதளம். இது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்துடன் (TNPSC) தொடர்புடையதோ, அதன் அங்கீகாரம் பெற்றதோ அல்ல. இந்த வினாக்கள் முந்தைய TNPSC குரூப் 4 தேர்வுகளிலிருந்து பயிற்சிக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. விளக்கங்கள் எங்கள் குழுவால் எழுதப்பட்டவை. இங்குள்ள விடை TNPSC அதிகாரப்பூர்வ விடைக்குறிப்பிலிருந்து மாறுபட்டால், அதிகாரப்பூர்வ விடைக்குறிப்பே இறுதியானது.